1) பொழுதுன்னு ஒண்ணு இருக்கிறதுனால தானே, மறக்க வேண்டிய நினைவுகள் மறுபடியும் ஞாபகத்துக்கு வந்து தொந்தரவு பண்ணுது. அதான்... பொழுதை கரைக்க என்னென்ன பண்ண முடியுமோ அதெல்லாம் பண்ணிட்டு இருக்குறேன்.வாழ்க்கை வாழ்வதற்கே...பாஸிட்டிவ் மனுஷி விஜயலட்சுமி.
2) மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற பேராசிரியை, சித்திரலேகா மாலிக், தன் ஓய்வூதியத்தை, கல்வி மையங்களின் மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இதுவரை அவர், 97 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
3) ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக எதிர்மறையாக யோசிக்கக் கூடாது; நஷ்டம் வந்தாலும் அஞ்சக் கூடாது. உதவி என, தேடி வருவோருக்கு உதவ வேண்டும்; அதற்கான வளத்தை பெருக்க வேண்டும். அதற்கு, திருமணம் தடையாக இருக்கும் என்பதால், திருமணத்தையே வேண்டாம் என, முடிவு செய்து, இரவு, பகலாக உழைக்கிறேன்! ஆண்களே தைரிய மாக ஈடுபடத் தயங்கும், லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வரும் சத்யபிரியா.
4) இதைப் பார்த்த பலரும் சர்வ சாதாரணமாக கடந்து போன நிலையில் இதைப்பார்த்த சுசந்த் மாணவியை நிற்கச் சொன்னார். தொடர்ந்த் தன் தங்கச்சிக்கு போன் போட்ட சுசன் தன் வீட்டில் இருக்கும் ஸ்வெட்டரை எடுத்துவரச் சொல்லி இருக்கிறார்.....
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
குறள் வணக்கம்... வாழ்க நலம்.
நீக்குமனத்துக்கண் மாசிலன் ஆதல்....
நீக்கு-அவ்வளவு எளிதான விஷயமா இது? கடினத்திலும் கடினம் எனினும், மாசில்லா மனம் வேண்டுமென உண்மையில் விரும்புபவர் எத்தனை பேரோ இவ்வுலகில்?
அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜ் ஸார்... வாங்க....
நீக்குநாட்டில் ஆங்காங்கு மழை பெய்கின்றது என்றால் அதற்கு ஸ்ரீமதி சித்திரலேகா போன்றவர்களால் தான்...
பதிலளிநீக்குஉண்மை.
நீக்குசாலையில் கிழிந்த ஆடையுடன் சென்ற பெண்ணைத் தன் தங்கையாய் நினைத்து ஸ்வெட்டரைக் கொடுத்த சுசனின் பண்பினை இன்றைய இளைஞர்கள் கைக் கொள்வது அவசியம்...
பதிலளிநீக்குவீட்டுக்கும் நாட்டுக்கும் கௌரவம்...
எனக்கு அந்த செய்திதான் மிகவும் பிடித்தது. நெகிழ்ச்சியைக்கொடுத்தது.
நீக்குநேற்று தெலங்கானாவில் சுட்டுத் தள்ளப்பட்ட நால்வரையும் ஏழைக் குற்றவாளிகள்... பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்றால் இப்படி நடந்திருக்குமா என்று வியாக்கியானம் பேசிக் கொண்டு ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது...
நீக்குவறுமையில் செம்மை.. நல்லொழுக்கம்
.. என்பது பால பாடம்...
அது மனதில் பதியாததால் தான்
காவல் துறையினரின் துப்பாக்கிக்கு வேலை வந்தது...
இன்றைய தினமலரில்
நீக்குதெலுங்கானாவில் சுட்டுத் தள்ளப்பட்ட நான்கு கயவர்களைப் பற்றிய செய்தியில் சற்று முன் ஒரு கருத்து வெளியாகி யிருக்கிறது...
இன்றைக்குத் தொட்டா
நாளைக்குத் தோட்டா!...
இனி நடந்து முடிந்த விஷயங்கள் பற்றி பேசிப் பேசி மாய்வார்கள்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம் கமலா அக்கா... இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.. வாங்க...
நீக்குவெள்ளையர்கள் இந்நாட்டை விட்டுப் போகும் முன் வைத்து விட்டுப் போன இடையூறுகளில் இதுவும் ஒன்று என்கிறார்கள்..
பதிலளிநீக்குஅதனால் தான் இப்படி ஆகியிருக்கிறது...
கோர்ட்டில் வந்து சாட்சி சொல்லக் கூடாது.. வழியிலேயே போட்டுத் தள்ளி விடு.. என்பதாக பல திரைப்படங்களில் காட்சிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டன..
நிஜத்தில் ஒன்று இப்படி நடந்து விட்டது...
பாதிக்கப்பட்ட பெண் நீதி மன்றத்துக்கு செல்லும் முன்பே தீயிட்டுக் கொலை செய்யப்பட்டாள்...
இதற்குப் பின்னும் தெலுங்கானாவில் கயவர்கள் சுட்டுத் தள்ளப்பட்டதற்கு எதிராகப் பிலாக்கணம் பாடிக் கொண்டு திரிவோரை என்ன என்று சொல்வது!?...
அப்படிப் பிலாக்கணம் பாடுபவர்களை அறம் பாடிக் கொல்ல வேண்டும்.
நீக்குகாவல்துறையிடம் புகார்கொடுத்து நீதிமன்றம் வரை சென்றபெண்ணை ஜாமீனில் வெளியே வந்து குத்திக்கொன்ற பாதகர்கள் இருக்கையில் பெண்கள் இம்மாதிரியான நிவாரணங்களுக்கே ஆதரவளிக்க வேண்டி இருக்கும். இதுக்கும் மனித உரிமைக்காரர்கள் வந்துடுவாங்க! அந்தப் பெண்களை பலாத்காரமும் செய்து கொன்றபோது அவங்க மனித உரிமை எல்லாம் எங்கே போயிருந்தது? அதற்கு என்ன பரிகாரம் சொல்வாங்க! எப்போவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே நடந்து கொள்வது மனித உரிமை என்று ஆகி விட்டது. :((((((((
நீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
உண்மை நண்பரே....
நீக்குசுசந்த் வானளவு உயர்ந்து நிற்கிறார்.
பதிலளிநீக்குஆமாம் ஜி.
நீக்குஒவ்வொரு செய்தியும் சிறப்பு - லட்சங்கள் தந்த பேராசியர் ஒரு புறம் என்றால் ஸ்வெட்டர் கொடுத்து உதவிய சுஷாந்த் ஒரு பக்கம்! இருவரும் சிறப்பான செயல்புரிந்தவர்களே...
பதிலளிநீக்குதொடரும் பாசிட்டிவ் செய்திகள் தெம்பூட்டுகின்றன. தேர்ந்தெடுத்து பகிரும் உங்களுக்கும் பாராட்டுகள்.
நன்றி வெங்கட்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா...வாங்க...
நீக்கு//பொழுதை கரைக்க என்னென்ன பண்ண முடியுமோ அதெல்லாம் பண்ணிட்டு இருக்குறேன்.வாழ்க்கை வாழ்வதற்கே...பாஸிட்டிவ் மனுஷி விஜயலட்சுமி.//
பதிலளிநீக்குஎன் அம்மாவை நினைவு படுத்துகிறார். இத்தனை செய்தும் உங்கள் கவலையை மற்க்க முடிகிறதா என்று கேட்டால் புன்னகை,
நல்ல மனுஷி.
//சித்திரலேகா மாலிக், தன் ஓய்வூதியத்தை, கல்வி மையங்களின் மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இதுவரை அவர், 97 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.//
அன்றாட உணவுக்கு மட்டும் வைத்துக் கொண்டு உதவி வரும் சித்திரலேகா அவர்களை வணங்கி கொள்கிறேன்.
மற்ற இரு செய்திகளும் முகநூலில் படித்தேன்.
சத்யபிரியவின் தைரியம் வாழ்க!
ஸ்வெட்டர் கொடுத்து உதவிய சுஷாந்த் வாழ்க! வறுமையிலும் செம்மை. சகோதரிக்கு உதவியது போல் என்று சொன்னது மகிழ்ச்சி தரும் நம்பிக்கை ஒளி தரும் செய்தி.
அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி.
வாழ்த்துவோம்.
நீக்குஅந்த வடநாட்டு சிறுவனின் பெயர் ‘சுஷாந்த்’ என்றிருக்கவேண்டும். காவாலிகளும், பேமானிகளும் நிறைந்திருக்கும் நாட்டில், சுஷாந்த் ஒரு தேவதூதனைப்போல் காட்சி தருகிறான். ஏழையாய் இருந்தாலென்ன..இறையருள் பெற்றவன் அவன்.
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்... நன்றி.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதன் நேரத்தை உபயோகமாக செலவிடும் விஜயலக்ஷ்மி பாராட்டுக்குரியவர். ஆனால் அவருக்கு நேர்ந்த துயரம் என்ன?
பதிலளிநீக்குதனக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்பதை மாற்றி, தான தர்மத்திற்கு மிஞ்சியதை தனக்கு வைத்துக் கொள்ளும் ஒய்வு பெற்ற பேராசிரியரை வணங்குகிறேன். கிழிந்த ஆடையோடு சென்ற மாணவியை தன் சகோதரியாக பாவித்து உடை கொடுத்த பாணி பூரி வியாபாரி சுசந்த் தற்சமயத்தில் ஆண் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறையில் வெற்றி பெற்றிருக்கும் சத்யப்ரியா முன்னேற துடிப்பவர் எல்லோருக்கும் வழிகாட்டி. நல்ல செய்திகள்.
நன்றி பானு அக்கா.
நீக்கு//ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக எதிர்மறையாக யோசிக்கக் கூடாது;//
பதிலளிநீக்குநேர்மறை நடவடிக்கைகளுக்கு ஆணி வேரான அறிவுரை.
நன்றி ஜீவி ஸார்.
நீக்குஅனைத்து பிரிவுகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஜோஸப் ஸார்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பர் மலையப்பன்.
நீக்குஅனைவருக்கும் இனிய மாலை வணக்கம். பொழுதை இனிமையாகக் கழிக்கும் விஜய லட்சுமி மேடத்தைவிட
பதிலளிநீக்குதன் சொத்து அனத்தையும் கொடுத்து. மிச்சத்தில் வழும் ஆசிரியை எண்ணத்தில் உயருகிறர்
பெண்ணின் மானம் காத்த சுஷாந்த் போன்ற இளைஞர்கள் பெருக வேண்டும். நற் செய்துகளுக்கு மிகவும் நன்றி ஶ்ரீராம்.
நன்றி வல்லிம்மா.
நீக்குஅனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஅனைத்து நபர்களுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள். முதல் இரண்டும் இங்கே தான் பார்க்கிறேன். அடுத்த இரண்டும் தெரிந்தவையே! உண்மையான மனித நேயம் என்றால் என்ன என்பதைக் காட்டி உள்ளார்கள்.
பதிலளிநீக்குவசதி இல்லாவிட்டாலும் பிறருக்கு உதவும் குணம் போற்றத்தக்கது
பதிலளிநீக்குபாராட்டுக்குரியவர்கள்.
பதிலளிநீக்கு