திங்கள், 30 டிசம்பர், 2019

'திங்க'க்கிழமை : மைசூர்பா – நெல்லைத் தமிழன்

செப்டம்பர்ல வாட்சப்லதான் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல மைசூர்பா, ஏதோ ஒரு விழாவுக்காக, Buy 1 Get 1 என்று போட்டிருந்தார்கள். என் மனைவி இதில் ஆர்வம் காட்டலை. என்னிடம், நீங்க வாங்கினா நிறைய வாங்குவீங்க, அப்புறம் தேவையில்லாமல் நாம உட்கார்ந்து சாப்பிடணும். இது எதுக்கு வேண்டாத வேலை. என்ன விலையோ அதைக் கொடுத்து 2-3 பீஸ் மட்டும் வாங்கிச் சாப்பிட்டாப் போறாதா என்றாள். நாமதான் ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்பதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடும் வம்சமாச்சே. சாவகாசமா காலை 9 ½ க்கு பக்கத்தில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குப் போனால், தெருவில் பெரிய வரிசை. அதனால் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில், அதிக பட்சம் ஒருவருக்கு ½ கிலோ என்று ஆரம்பித்து (1/2 கிலோ வாங்கினால் ½ கிலோ இலவசம். ஆனா ½ கிலோ மைசூர்பா 340 ரூபாய்) பிறகு ஒருத்தருக்கு 300 கிராம் என்று குறைத்துவிட்டார்கள். ஸ்டாக் வரலையாம். இதனைக் கேட்ட எனக்கு, மைசூர்பாவுக்காக கியூவில் நிற்பதா என்று தன்மானம் அதிகமாக, பேசாமல் வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.

இந்த மைசூர்பா என்ன கம்ப சூத்திரமா? நாமே செய்துபார்க்கலாம் என்று தோன்றியது.  உடனே செய்தும்விட்டேன்.  அந்த சந்தோஷத்தில் ஸ்ரீராமிடம், தீபாவளிக்கு அருகில் வரும் திங்கக் கிழமையில் வெளியிடுவதானால் உடனே எழுதி அனுப்புகிறேன் என்று சொன்னேன். ஸ்ரீராமோ, 25 நவம்பர் ஸ்லாட்தான் இருக்கு என்றார்.எனக்கு  உடனே எழுதி அனுப்பும் ஆர்வம் போய்விட்டது.

இன்று இரவு பிரயாணம் செல்கிறேன்.   அடுத்து வரும் திங்கக் கிழமைக்காக இதனை எழுதி அனுப்புகிறேன்.

தேவையானவை

கடலை மாவு – 1 கப்
ஜீனி (வெள்ளைச் சர்க்கரை) – 1 ¼ கப்
நெய் – 1 ¼ கப் – இதனை பாதிப் பாதியாகப் பிரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நல்ல டிரேயில் பட்டர் பேப்பரை வைத்துக்கொள்ளுங்கள். மைசூர்பா பதம் வந்ததும் உடனே இந்த டிரேயில்தான் கொட்டவேண்டும்.  பட்டர் பேப்பர் இருந்தால் கட் செய்வது மிகச் சுலபம். இல்லாதவர்கள், டிரேயில் நன்கு நெய்யைத் தடவி வைத்துக்கொள்ளுங்கள். டிரே அளவு முக்கியம். எவ்வளவு செய்யப்போகிறோமோ அதற்கு ஏற்ற டிரே வேண்டும்.

செய்முறை

மைசூர்பாக்குக்கு எல்லா வேலையையும் குறைந்த தணலில் செய்யணும்.

முதல்ல கடாய்ல சிறிது நெய் விட்டுக்கொண்டு (2 ஸ்பூன்) கடலை மாவை வறுத்துக்கொள்ளவும். பச்சை வாசனை போகணும்.



நெய்யை உருக வைத்த பிறகு இரு பகுதியாகப் பிரித்துக்கொள்ளவும்.



ஒரு பகுதியை பாத்திரத்தில் கொட்டி அதில் வறுத்த கடலை மாவைச் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலந்துகொள்ளவும். இது கிட்டத்தட்ட தோசை மாவு பதத்தில் இருக்கும்.



கடாயில் ஜீனியைக் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். ஞாபகம் இருக்கட்டும், குறைந்த தணலில்தான் அடுப்பு இருக்கணும். ஒரு கம்பிப் பாகுப்பதம். இதுல ரொம்ப மெனெக்கிடவேண்டாம். அதிகமா பாகா ஜீனியைக் கிளறிடக்கூடாது. அவ்ளோதான். நான் கரண்டினால பாகை எடுத்துவிடும்போது கொஞ்சம் பிசுபிசுப்பு தெரிந்தாலே அது ஒரு கம்பிப் பாகு என்று தெரிந்துகொண்டுவிடுவேன்.



இப்போ நெய்யில் கலந்து தோசைமாவு பதத்தில் வைத்திருக்கும் கடலைமாவுக் கலவையை கடாயில் கொட்டிக் கிளறவும். குறைந்த தணலில்.

அவ்வப்போது நெய்ப் பாத்திரத்திலிருந்து ஓரிரண்டு ஸ்பூன் நெய்யை விடவும்.





கடாயில் ஒட்டாமல் கலவை வந்தால் சரியான பதம் வந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்.




அடுப்பை அணைத்துவிட்டு, மைசூர்பாக் கலவையை டிரேயில் கொட்டி, சிறிது நேரம் கழித்து துண்டாக வெட்டிக்கொள்ளலாம்.



ரொம்ப சுவையான ரெசிப்பி இது. நார்மல் மைசூர்பாக்கு மாதிரி கட்டியாக இருக்காது. பல்லைப் பதம் பார்க்காது.



எனக்கு ஸ்ரீகிருஷ்ணாவின் செய்முறை விகிதம் தெரியும். ஆனால், நான் செய்யும்போது வழியுமளவு நெய்யை உபயோகப்படுத்தலை. கொஞ்சம் குறைவாகவே உபயோகித்தேன். பலர் எண்ணெய், நெய் கலந்தும் செய்வார்கள். அதுக்கு முழு நெய்யை உபயோகித்தால் உடலுக்கு நல்லது என்பது என் எண்ணம்.

நல்லா வந்தது என்ற நம்பிக்கை வந்ததும், ஆர்வக் கோளாறில், ¾ பங்கு நெய்யும், ¼  பங்கு கடலை எண்ணையையும் உபயோகித்து மைசூர்பா  12 பீஸ் மட்டும் வரும்படி, என் அம்மாவைப் பார்க்கப்போகும் அன்று அவசர அவசரமாகச் செய்தேன். (நெய் ஸ்டாக் இல்லை. கடைக்குப் போய் வாங்கி வரும் அளவு நேரம் இல்லை. கிளம்ப 2 மணி நேரம் இருக்கும்போதுதான் இந்த எண்ணம் வந்தது. ஆர்வக்கோளாறுக்குக் காரணம், நானே செய்துகொண்டு போகணும், அம்மாவுக்கு, தன் பையன் செய்து கொடுத்தது என்ற சந்தோஷம் வரணும் என்பதுதான்). மிக அருமையாக வந்தது. அம்மாவுக்குக் கொண்டுபோய்க் கொடுத்தேன். இரவு என் பெண் ஆபீஸிலிருந்து வந்ததும் பெருமை அடித்துக்கொண்டு, இருந்த 2 துண்டுகளில் ஒன்று கொடுத்தேன். அவள், என்னப்பா ஒரே கடலை எண்ணெய் வாசனை அடிக்குது, நெய்யிலேயே பண்ணலையா.. யக் என்று இருக்கு என்றாள். நெய் போதுமான அளவு இல்லைனா, சூர்யகாந்தி எண்ணெயும் சேர்த்திருந்தால் அவ்வளவு தெரிந்திருக்காதே, கடலை எண்ணெய் ரொம்ப ஓவர் பவரிங்க் ஆக இருக்கு என்றாள். அப்போதுதான் என் வாசனை அறியும் திறன் தற்காலிகமாக மறைந்தது என்னைக் கவிழ்த்துவிட்டுவிட்டதே என்று தோன்றியது.  அம்மா என்ன நினைத்திருப்பாளோ…

என் மாமனார் இங்கு வந்திருந்தபோது அவருக்கு நெய்யில் செய்துகொடுத்தேன். நன்றாக இருந்தது என்றார்.  நீங்களும் இதனைச் செய்துபாருங்கள்.

குறிப்பு: இந்தச் செய்முறையைப் படித்து என்ன என்ன பின்னூட்டங்கள் வரும் என்று ஊகித்து, அதில் இரண்டு மூன்றை எழுதியிருக்கிறேன். யார் இந்த மாதிரி பின்னூட்டம் இடுவாங்க என்று கண்டுபிடிக்கவேண்டியது உங்க வேலை. ஹா ஹா.

அட… இந்தச் சுண்டைக்காய் செய்முறையை எல்லாம் தி.பதிவாக எழுதி அனுப்பலாமா? இதுவரை எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. அனைவருக்கும் காலை/மாலை/இரவு வணக்கம். இப்போ போயிட்டு காலைல, அதாவது உங்களுக்கு இரவு நேரத்துல வருகிறேன்.

காலை வணக்கம்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
வாழிய நலம்

சூப்பர்.


அன்புடன்

நெல்லைத்தமிழன்

84 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்னிக்கு யார் சமையல்? என்ன சாப்பாடு?

    பதிலளிநீக்கு
  2. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கத் திரியும் விருந்து...

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  3. "நச்" "நச்" "நச்" க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மைசூர்ப்பாகுன்னா பொரபொரவென ஓட்டை போட்டுக்கொண்டு இருக்க வேண்டாமோ? இதெல்லாம் ஒரு மைசூர்ப்பாகு! :P :P :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இது!..
      மைசூர் பாகுக்கு வந்த சோதனை?...

      நீக்கு
    2. என்ன துரை செல்வராஜு சார்... இதுகூட கண்டுபிடிக்க முடியாமல் திணர்றீங்களே. நேத்தைக்கு ஒருத்தர் மைசூர் பாக்கு பண்ணினார். கொஞ்சம் பதம் தப்பிவிட்டதைக் கண்டுபிடிக்க முடியலை. இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு துண்டு மைசூர்பாக்கு சாப்பிடலாம் என எடுத்தார். உடைக்க வரலையே. சுத்தியலை எடுத்து மூன்று முறை "நச்" "நச்" "நச்" என்று உடைத்துப் பார்த்தார். முடியலை. எத்தனை முறை செய்திருப்போம். எவ்வளவு தடவை தளத்தில் மைசூர்பாக்கு செய்முறை எழுதியிருப்போம். இப்படிக் கவிழ்த்துவிட்டதே. கோபம் தாளலை. உடனே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று பல்லைக் கடிக்கிறார் கீசா மேடம்.

      இப்படித்தான் நான் புரிந்துகொண்டேன்.

      இந்தப் புரிதல் தவறென்றால் கீசா மேடம் கோபப்படவேண்டியது என்னைப் பார்த்தல்ல. நான் அப்பாவி. கே ஜி கௌதமன் சாரிடம்தான் கோப்ப்படணும். அவர்தான் நாலு வரி எழுதிக்கொடுத்து அதை நாப்பது வரிக் கதையாக எழுத எனக்குப் பயிற்சி கொடுத்தவர். ஹா ஹா ஹா

      நீக்கு
    3. //மைசூர்ப்பாகுன்னா பொரபொரவென ஓட்டை போட்டுக்கொண்டு இருக்க வேண்டாமோ?//  அதற்கு சர்க்கரை 1:3 என்ற விகிதத்தில் போட வேண்டும். ஒன்றிற்கு 2 சர்க்கரை போட்டாலே மிருதுவாகத்தான் வரும், இவர் ஒன்றிற்கு ஒண்ணே கால்தான் சர்க்கரை போட்டிருக்கிறார். 

      நீக்கு
    4. நான் எந்த இனிப்புக்குமே ஒன்றுக்கு 3 என்ற விகிதத்தில் தான் சர்க்கரை போடுவேன் பாயசம் என்றால் கூட உள்நாக்குத் தித்திக்கணும். ஆகவே இந்த மைசூர்ப்பாகை நான் மைசூர்ப்பாகு என ஒத்துக்கொள்ளப் போவதில்லை. இதை எதிர்த்து வெளிநடப்புச் செய்கிறேன்.

      நீக்கு
    5. கீசா மேடம்.. நான் உங்கள் கட்சி. பாயசமோ அல்லது சர்க்கரைப்பொங்கலோ அல்லது அல்வாவோ... பொதுவா எவ்வளவு இனிப்பு போடுவோமோ அதைவிட அரை மடங்கு கூடுதல் போட்டால்தான் எனக்கும் சாப்பிட்ட திருப்தி வரும். சில சமயம் என் மனைவி. அளவா இனிப்பு இருக்கணும்னு வெல்லப் பாயசத்துக்கு அளவா வெல்லம் போட்டுடுவா. அதுவும் தவிர, இனிப்பு அதிகமா தித்திக்கணும்னு நான், வெல்லப் பாயசத்தில் மிக மிக குறைந்த அளவு பால் மட்டும் விட்டுக்கொண்டு சாப்பிடுவேன்.

      நீங்க என் கட்சி என்பதால், நான் உள்நடப்புச் செய்கிறேன்.

      நீக்கு
  4. பதிவிலே நீங்க எழுதி இருக்கிறாப்போல் இருக்கக் கூடாதுனு ரொம்பவே யோசிக்காமல் மனதில் பட்டதைச் சொல்லிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவு நேரம் என்பதால் இரண்டு வரிகளோடு கிளம்பிட்டீங்க. எங்கள் இரவில் உங்கள் வேரியேஷன்களுடன் வரவேண்டும். நன்றி கீசா மேடம்.

      நீக்கு
    2. இன்னொரு முறை 1:3 என்னும் விகிதத்தில் சர்க்கரை போட்டு நெய்யையும் நன்கு காய்ச்சி ஊற்றிக் கிளறிப் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கடலை எண்ணெய் சேர்க்கக் கூடாது) பொரபொரவென மைசூர்ப்பாகு (மேலே ஓட்டைகளாக வரணும்) கிளறிப் போடுங்க! அதுவரைக்கும் கருத்துக்கள் இல்லை. வெளிநடப்புச் செய்தாச்சு ஏற்கெனவே!

      நீக்கு
    3. ஐயையோ...கீசா மேடம்... வெளிநடப்பு செய்யலாமோ நீங்க? வேற வேரியேஷன்ஸ் எழுதுவீங்கன்னு ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

      இந்தத் தடவை திருவரங்கத்தில் அம்மா மண்டப காவேரியில்தான் குளித்தோம். (கொஞ்சம் அசவுகரியம்தான்). உங்க வீட்டு வழியாத்தான் நடந்தோம். படமும் எடுத்தேன். ஐயப்ப பக்தர்களால் அந்த இடமே நிரம்பி வழிந்தது, கோவிலும்தான்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கம்.  நன்றி.

      நீக்கு
    2. இந்த நாள் இனிமையான நாளாக, இன்னும் ஒன்றரை வருடங்களாவது இருக்க வேண்டும் எனக்கு, கமலா ஹரிஹரன் மேடம்...

      காலை வணக்கம் அனைவருக்கும்.

      நீக்கு
    3. @நெல்லைத்தமிழரே, எல்லாம் சரியாகப் போகணும்னு நம்புங்க! சரியாப் போச்சுனும் நினைங்க! நல்லபடியான சிந்தனைகள் மனோதைரியத்தைக் கொடுக்கும்.

      நீக்கு
    4. திருவரங்கத்துக்கு நான் வரும்போது, நீங்க இருக்கும்போது பேசிக்கறேன் கீசா மேடம்..... நல்ல நினைப்பு மனோதைரியத்தைக் கொடுக்கும் என்பது உண்மைதான்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    சகோதரர் நெல்லைத்தமிழரின் செய்முறையான மைசூர்பாகு படங்களுடன் செய்முறை விவரங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக அவர் அந்த நிகழ்வை கதை மாதிரி எழுதியிருப்பதையும் ரசித்தேன்.( அவர் எழுதிய கதைகள் வந்து ரொம்ப நாளாயிற்றே..!விரைவில் (நாளையே கூட) எதிர்பார்க்கிறேன்.)

    நான் இனிப்புக்கு ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் எடுத்துக் கொள்வேன்.( சிலர் மூன்றாக எடுப்பார்கள். அது ரொம்ப தித்திப்பை தந்து விடும். உடன் இணையும் பொருளின் சுவையை விட இனிப்பின் சுவை மட்டுமே நாக்கில் தெரியும்.) நீங்கள் எடுத்த அளவு போதுமா? சிலர் எண்ணெய் சேர்ப்பதாக நானும் அறிந்தேன்.கொஞ்ச நாள் வைத்திருந்து சாப்பிடும் போது சிக்கு வாடை வந்து விடுமோ என எண்ணுவேன்.

    அருமையான மைசூர் பாகை நானும் எடுத்துக் கொண்டேன். அளவான இனிப்புடன் மிருதுவாகவும் சுவையாகவும் இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. இந்தப் பின்னூட்டங்களையெல்லாம் பார்க்கும்போது சரியான ஜீனி அளவைத்தான் (நான் உபயோகித்த) போட்டிருக்கிறேனா என்ற சந்தேகம் வந்துவிட்டது. ஹா ஹா ஹா.

      ஒரு கதை டிராஃப்டில் இருக்கிறது. அப்புறம் தொடர்ச்சியாக துரை செல்வராஜு சார் எழுதிய கதைகளைப் படித்து, இது என்னடா ஒரேயடியாக பாஸிடிவ், நல்ல முடிவுக் கதைகளாகவே இருக்கே..வாழ்க்கை அப்படியா இருக்கு என்று கடுப்பாகி (து.செ. சார் தவறா நினைக்கக்கூடாது) ஒரு கதை எழுதி ஸ்ரீராமுக்கு உடனே அனுப்பிவிட்டேன். அவரானால், தமிழக அரசு கொடுக்கும் பொங்கல் பரிசை கோர்ட், இந்த இந்த மாவட்டங்களுக்கு இப்போது கொடுக்கக்கூடாது என்று தடை போடுவது போல, உங்க கதை அடுத்த வருடம்தான் வரும், அப்போதுதான் ஸ்லாட் இருக்குன்னு சொல்லிட்டார். அது வரும் ஜனவரில, அப்புறம் அதைக் கடுமையா விமர்சித்துப் பின்னூட்டங்களும் வரும். ஹா ஹா.

      எண்ணெய் உபயோகித்தால் நிச்சயம் சிக்கு வாடை வந்துவிடும். அதுவும் தவிர, நாம் காய்ச்சும் நெய்யும் நல்ல பதத்தில் இல்லை என்றால் அதுவும் கொஞ்ச நாளில் வாடை வந்துவிடும்.

      உங்கள் அன்புக்கு நன்றி

      நீக்கு
    2. வணக்கம் நெ. தமிழர் சகோதரரே

      உண்மை.. எண்ணெய் சேர்த்த மைசூர் பாகு வாயில் போட்டதுமே தெரிந்து விடும். காய்ச்சும் நெய்யும் முறுக்கி விட்டால் சுவை மாறுபடும். சமைக்கும் எதுவுமே கவனச்சிதறல் இருந்தால் சற்று மாறித்தான் போகும்.

      ஒரு செவ்வாயன்று நீங்கள் மாறுபட்ட பின்னூட்டம் அளித்திருந்தீர்கள். அதாவது வாழ்க்கையின் திருப்பு முனைகளில், போராட்டங்களில் எப்போதுமே சுபமாக நடந்து கொண்டிருக்குமா? (சரியாக வார்த்தைகள் நினைவில்லை..அதனால் நீங்கள் கூறியதை அப்படியே தர இயலவில்லை மன்னிக்கவும்..) என்பது மாதிரி சொல்லியிருந்ததாக நினைவு... அப்போதே உங்களிடமிருந்து புது மாதிரியாக ஒரு கதை பிறக்கப் போகிறது என அனுமானித்துக் கொண்டேன். வரும் வருடம் எ. பியில் வரும் அந்த கதையை படிக்க இந்த வருடத்திலிருந்தே நான் ஆவலோடு காத்திருக்கிறேன். ஹா. ஹா. ஹா.

      தங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் வரும் வருடமாகிய 2020 ம் ஆண்டு சிறப்பான நற்பலன்கள் அள்ளித்தர வேண்டுமென ஆண்டவனை வேண்டிக் கொண்டு வரும் புதுவருடப்பிறப்பிற்கு நல்வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம்..

      வாழ்க்கையில் சுகம் என்பது பாலைவனச் சோலை போன்றும் கஷ்டம் என்பது பாலைவனம் போன்றும் இருக்கும்.

      என்னுடைய கதை புதுமாதிரிலாம் கிடையாது. ஆனால் து.செல்வராஜு சார் கதைகளைப் படித்ததிலிருந்து இனி கதை எழுதும்போது சுகமான முடிவைக் கொடுக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். சுகமான முடிவுகள்லாம் டைரக்டர் விக்கிரமன் படங்களில்தான் சாத்தியம். ஹா ஹா

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இனிப்போடு வந்திருக்கும் நெல்லைத்தமிழரை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுபதி வெங்கடேச்வரன் மேடம்... பத்து நாட்கள் அலைச்சல், இன்றும் ரெஸ்ட் எடுக்க வேணும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

      திரும்ப, இரண்டு மூன்று நாட்கள் லட்டு ஊருக்குப் பயணம், பிறகு காவேரியூர், பொங்கலுக்கு எங்க எனத் தெரியலை, ஆனால் தை முடிவுக்குள் நிரந்தர பெங்களூர் வாசமோ எனச் செல்கிறது வாழ்க்கை.

      உங்கள் வரவேற்பிர்க்கு நன்றி

      நீக்கு
  8. மைசூர் பாகிற்க்கு இனிப்பு குறைவாகத் தோன்றுகிறது. 1:2 என்ற ரேஷ்யூ வேண்டாமா? மற்றபடி மிருதுவாக வந்திருக்கும் மைசூர் பாகை பார்க்கவே நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பா.வெ மேடம்.... அன்றைக்கு மைசூர்பா நன்றாக வந்தது. ரொம்ப நல்லா இருந்தது. ரொம்பவே எக்ஸைட் ஆகிட்டேன் (உடனேயே எப்போதும்போல் மனைவியிடம்... என்னை மாதிரி எக்ஸ்பர்ட் பண்ணும்போது நல்லா வந்ததில் ஆச்சர்யம் ஏது' என்று பீத்திக்கொண்டேன். ஹா ஹா)

      நீக்கு
  9. //ஞாபகம் இருக்கட்டும், குறைந்த தணலில்தான் அடுப்பு இருக்கணும்.// இது முக்கியமான ஒரு குறிப்பு. குறிப்பாக ப்ராண்டட் சர்க்கரையை பயன் படுத்தும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சட்டென்று பூத்து விடும். அதற்கு ரேஷன் சர்க்கரை பரவாயில்லை. கொஞ்சம் அழுக்காக இருக்கும்,அதை எடுத்து விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க பாயிண்ட் மிகவும் சரி. ரேஷன் சர்க்கரையோ அல்லது குறைந்த விலை சர்க்கரையோ நன்றாகவே இருக்கும். ரொம்பவும் ரிஃபைண்ட் சர்க்கரை என்பது வலிய விஷத்தை வாங்கிக்கொள்வது போன்றது. ஆனால் நமக்குத்தான் வெண்மையாக இருந்தால் அட்ராக்டிவ் ஆக இருக்குமே.. அந்த வீக்னஸை தயாரிப்பாளர்கள் உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள்.

      நான் துபாயில் 93ல் பணிபுரிந்தபோது, அங்குள்ள சீனி, தமிழகத்தைவிட விலை மலிவாக இருந்தது. நிச்சயம் தமிழகத்தைவிட குவாலிட்டியாகவும் இருந்திருக்கும். அனேகமாக அது பாகிஸ்தானிலிருந்து வந்ததாக இருக்கும்.

      நீக்கு
  10. படங்களே அழகாக சொல்லிச் செல்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி... ஆனா வாழ்க்கைலதான் ஒரு வெறுமை இருக்கு.

      நீக்கு
  11. //என் மாமனார் இங்கு வந்திருந்தபோது அவருக்கு நெய்யில் செய்துகொடுத்தேன். நன்றாக இருந்தது என்றார்.// மாப்பிள்ளை செய்து கொடுத்ததை வேறு எப்படி சொல்வாராம்? இந்த மட்டும் அல்வா கொடுக்கவில்லையே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பார். ஹா ஹா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு சமீபத்தில் பெங்களூரில் கேரட் அல்வா செய்துகொடுத்தேன். அதற்கு முன்பு தேங்காய் பர்பி என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட தேங்காய் அல்வாவாக வந்ததையும் கொடுத்தேன். சமீபத்தில் அருமையான வெண்பொங்கல் செய்தேன் (அதில் நான் எக்ஸ்பர்ட் என்று மீண்டும் பீத்திக்கொள்ள மனம் விழைகிறது. ஆனால் கீசா மேடம் எத்தனை தடவைதான் 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று எழுதுவார்கள் என எண்ணி ஒண்ணும் சொல்லாமல் இருக்கேன்) கடலைப் பருப்பு பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவையும் நான் அடிக்கடி செய்வேன்.

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோமதி அரசு மேடம்.

      5-6 நாட்கள் முன்பு நாங்கள் ஒண்டிமிட்டா (?) ஆனை மலை நரசிம்மரைச் சேவித்தோம். உங்கள் நினைவு வந்தது. கோவில் நடை சாத்திவிடப் போகிறார்களே என அவசர அவசரமாகச் சென்றோம். அங்கிருந்து ஸ்ரீராமிடம் சொன்னேன்... உங்கள் நினைவு வந்ததை.

      நீக்கு
    2. ஆனைமலை நரசிம்மரை தரிசனம் செய்த போது என்னை நினைத்துக் கொண்டது மகிழ்ச்சி.நானும் அப்போது அங்கு நரசிம்மரை சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது.

      நீக்கு
    3. அன்றைக்கு நீங்களும் சேவிக்கும் பாக்கியம் கிடைத்ததா அல்லது நான் நினைத்துக்கொண்டதால் அந்த பாக்கியம் கிடைத்ததா? நடை சாத்தப்படுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு அங்கு சென்றுவிட்டோம். மிக அருமையான கோவில் கோமதி அரசு மேடம்.

      நீக்கு
  13. மைசூர்பா பிறந்த கதை மிக அருமை.

    செய்முறை படங்களும், செய்முறை விளக்கமும் அருமை.
    அம்மாவிற்கும் இன்னொரு முறை நெய்யில் செய்து கொண்டு போய் கொடுங்கள்.
    அம்மா என்ன சொன்னார்கள் என்று சொல்லவில்லையே!( என்ன சொல்லி இருப்பார்கள் ! குழந்தை அன்போடு செய்து கொண்டு வந்ததை )
    நன்றாக இருப்பதாய் தான் சொல்லி இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அம்மாவிற்கும் இன்னொரு முறை நெய்யில் செய்து கொண்டு போய் கொடுங்கள்.// - அம்மாவுக்கு ஸ்வீட் சாப்பிட இஷ்டம். ஆனால் டாக்டர் ஸ்ட்ரிக்டா ஸ்வீட் கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறாராம். தம்பி சொன்னான், அம்மாவைப் பார்த்துக்கொள்வது கஷ்டம், அதனால் இனிப்பெல்லாம் செய்துகொண்டுவராதே என்று சொல்லிட்டான். பழங்கள் மட்டும் வாங்கிவந்தால் போதும் என்றான்.

      எங்க அப்பா இருந்தபோது அவருக்கு உணவு சமைத்துப்போடும் பாக்கியம் இல்லையே என்று நிறைய தடவை எண்ணியிருக்கிறேன் (தற்போதுதானே கொஞ்சம் சமையல் கைவர ஆரம்பித்திருக்கிறது) எங்க அப்பா ரொம்பவுமே சந்தோஷப்பட்டிருப்பார்.

      நீக்கு
    2. அப்பா, அம்மா இருவரும் குழந்தைகள் சமைத்து கொடுத்தால் அதில் உப்பு காரம் இல்லையென்றாலும் சுவைத்து சாப்பிட்டு மகிழ்ந்து போவார்கள்.

      நீக்கு
    3. அம்மா, அப்பா சுவைப்பது குழந்தைகள் சமைத்த பண்டத்தை அல்ல. அவர்கள் அளிக்கும் அன்பை. அதனால்தான் அது மிகச் சுவையாக இருக்கும்.

      நீக்கு
  14. அனைவருக்கும். காலை வணக்கம்.புத்தாண்டுக்கு மைசூர்பாகா. ஆஹா. லட்டூருக்கு முன்னால் மைசூர் வந்துட்டது! மைசூர் பாகு நெய்யில் 1:21/2 ரேஷியோ எனக்கு ஒத்து வரும். நெய்யும் அதே இரண்டரை. அருமையா.வந்திருக்கு. பார்ககவே அமர்க்களம் ! எண்ணெய் சேர்த்தால் அது மைசூர்பாகோட சேர்த்தியா என்ன. நீங்கள் மாவை நெய்யில் கலந்தது இன்னோரு அதிசயம். எனக்கும் வாயில் போட்டா கரையணும் கையில் எடுத்தால் கரகரன்னு இருக்கணும். இவிருக்கு. நீங்க செய்யும் விதம் தான் பிடிக்கும்.வாழத்துகள் மா. புத்தாண்டு அனைவருக்கும் நன்மை கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... உங்க ரேஷியோ சரிதான். ஆனால் கொஞ்சம் இனிப்பு அதிகமாக இருக்கும். கடைகளில், மைசூர்பாக் செய்தபிறகு அதன்மேல் ஜீனி தூவும் வழக்கமும் இருக்கிறது.

      புத்தாண்டு நண்பர்கள் அனைவருக்கும் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும். எ.பிக்கு நண்பர்கள் அனைவரும் ரெகுலராக வரவேண்டும் எனவும் வேண்டிக்கறேன். பறவைகள் சரணாலயத்தில் பல பறவைகளை மிஸ் செய்வது என்னவோபோல் இருக்கிறது.

      நீக்கு
  15. செய்த விதமும், அதை பகிர்ந்த விதமும் இனிப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தி.தனபாலன்.

      உங்களுக்கு இனிப்புகளைப் பார்த்து இப்பவும் ஆசை வருமா இல்லை... சாப்பிடுவதிலிருந்து ஒதுங்கிவிட்டதால், ஆசையே துளிர்க்காதா?

      நீக்கு
  16. ஆஆஆ இன்று நெ தமிழன் ரெசிபியா?.... ரெசிப்பி இங்கே.., நெ தமிழன் எங்கே?:)...
    வருகிறேன் சத்துப் பொறுங்கோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா..

      'சற்றுப் பொறுங்கள்' - அட .... இவ்வளவு நேரமாகியும் ஆளைக் காணலையே...

      நானும் பத்து நாட்களுக்குமேல் இணையம் பக்கமே வரவில்லை. இனி இருக்கும் இரண்டு மூன்று நாட்களில் விட்டதைப் படித்துக் கருத்திடவேண்டும் (முதலில் ஜிஎம்பி சாரின் ஒரு இடுகைக்கு..ஹா ஹா. எனக்கும் அவருக்கும் ரொம்பப் பொருத்தமாயிற்றே)

      நீக்கு
    2. ஆஆவ்வ் சதி விதி செய்துவிட்டதே:) சே..சே.. டங்கு ச்லிப்பாகுதே.. விதி சதி செய்து விட்டது இன்று:).. எங்களுக்கு ஹொலிடேதான், இன்று நன்கு கும்மி அடிக்கலாம் என நினைச்சிருந்தேன், ஆனா வீட்டில் நிற்கவே முடியாமல் போச்ச்ச்:).. மத்தியானம் கொஞ்சம் நேரம் கிடைச்சது, சரி கொமெண்ட்ஸ் போட்டிடுவோம் என கொம்பியூட்டரை றி-ஃபிரெஸ் பண்ணினால், டமிலைக் காணம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சட்டவுண் பண்ணிட்டு ஓடிட்டேன்:).

      அது எங்கட கொம்பியூட்டர் ஆன்ரி:)) தன் கடமையை ஒழுங்காச் செய்கிறாவாமாமாம்ம்ம்ம் எண்டு சொல்லிக்கொண்டே, இந்த என்எஹ்எம் றைட்டரை அடிக்கடி கிளீனிங் என்ற பெயரில தூக்கி எறிஞ்சுபோட்டுடிறா:)) அதனால றி-ஸ்ராட் பண்ணினால்தான் டமில் வருவார்..

      நீக்கு
    3. //எங்கட கொம்பியூட்டர் ஆன்ரி:)) தன் கடமையை ஒழுங்காச்// - நானும் எத்தனை தடவைதான் உங்களுக்கு கிளாஸ் எடுக்கறது. கொம்ப்யூட்டர் அங்கிள் என்றால் எல்லாம் ஒழுங்காக நடக்கும். ஆன்ரி (அதாவது பெண்கள்) எப்போது அவங்க கடமையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்? ஹா ஹா ஹா

      நீக்கு
  17. அய் மைசூர்ப்பா :) முதலில் இது மைசூர்ப்பா  ..னு  பெயர் எப்படி வந்தது ? அந்த பெயர்காரணத்தை சொல்லவும் ???/ஈசியாதான் இருக்கு இந்த பா :) நான்கூட ஒருதரம் செஞ்சேன் அது பாயசம் ஆனதால் அதோட விட்டுட்டேன் :)அம்மா நிச்சயம் சந்தோஷம்தான்பட்டிருப்பார் ...அன்புக்கும் பாசத்துக்கும்முன்னே சுவை வராது தெரியவும் தெரியாது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சலின்... நீங்களும் ரொம்பவே பிஸியாயிட்டீங்க. வருகையும் அபூர்வமாகிவிட்டது.

      எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்குன்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    2. யெஸ் :) எல்லாம் நல்லபடியா செல்கின்றது ..இரண்டுமாத ட்ரெயினிங் அப்புறம் ஜனவரி மீண்டும் பழைய வேலை ..

      நீக்கு
  18. ஏற்கனவே மைசூர் பாகு நன்றாக செய்ய தெரியும் என்பதால் நெல்லைதமிழன் குறிப்பை பார்த்து செய்து காராஜ்ஜில் மாமிக்கு தெரியாமல் ஒழித்து வைக்க வேண்டும் என்ற பிரச்சனை இல்லை......


    தனித்தனியாக் வாழ்த்துக்கள் சொல்ல நேரமில்லாததால் அனைவருக்கும் புத்தாண்டு நல்ழாத்துக்களை இங்கே சொல்லிக் கொள்கிறேன். எல்லோர் வாழ்விலும் வசந்தம் பொங்கி கொழிக்க வாழ்த்துகிறேன் வாழ்க் வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மதுரைத் தமிழன். சந்தடி சாக்குல நீங்க 'மைசூர்பாக்கு பண்ணுவதில் எக்ஸ்பர்ட்' என்று சொல்லிக்கறீங்களே... ஒரு இனிப்பு ரெசிப்பி எ.பிக்கு அனுப்புங்களேன். நாங்களும் கண்டு மகிழ்கிறோம்.

      நல்லாத் தெரியும்னு சொல்லிக்கிறீங்க. அந்த ஆர்வத்தில் அடுத்த முறை மைசூர்பாக் செய்யும்போது, அது உங்கள் மனைவிக்கு பூரிக்கட்டைக்குப் பதிலாக உபயோகமாகட்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன்.

      நீக்கு
    2. உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி. அனைவருக்கும் வரும் புதிய ஆண்டு மனமகிழ்ச்சியைக் கொடுக்கட்டும்.

      நீக்கு
  19. மைசூர் பாக் பார்க்க நல்லா இருக்கு நெல்லை... அம்மா அடிக்கடி செய்த இனிப்பு இது! சிறு வயதில் நிறைய சாப்பிட்ட ஒரே இனிப்பு. இப்போதெல்லாம் விதம் விதமாக சாப்பிடுவதால் மைசூர் பாக் பக்கமே போறதில்லை! ஹாஹா... கூடவே நானே செய்யும் அளவுக்கு பொறுமையும் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்...

      இங்க ஸ்ரீ மித்தாய் என்ற கடையில் கொல்கத்தா இனிப்புகள் சில சாப்பிட்டேன். பெங்காலி ரோல்னு நினைக்கிறேன். மிக மிக சுவையா இருந்தது.

      பொதுவா வட இந்திய அதிலும் பெங்காலி இனிப்புகளைச் சுவைக்க ஆரம்பித்துவிட்டால் நம்ம ஊரில செய்யும் ஜீனி நிரம்பிய இனிப்புவகைகள் அவ்வளவா நல்லா இருக்காது என்ற எண்ணம் வரும்.

      உங்க ஊர்ல பிகானிர்வாலா தாலி ப்ளேட்டின் ருசி இன்னும் என் நாக்கில் இருக்கு.

      நீக்கு
  20. ஒரு முறை என் மகன் கோவையிலிருந்து கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ம்ய்சூர் பாக் வாங்கி வந்தான் அது மைசூர்ப்சாக் என்படை என்நண்பன் கோவொயில் இருந்து வந்ததால் கோயம்பத்தூர் பாக் என்றான் என்க்கு ஒந்ய்ச பாகு செய்யும் முறை சரியாக வருவதில்லை கெட்டியாகி விடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா ரொம்ப நல்லாவே இருக்கும். ஆனா கொள்ளை விலைல விக்கிறாங்க. அவங்க அடக்கவிலை கிலோவுக்கு 200 ரூபாய் இருந்தாலே அதிகம்.

      நீக்கு
    2. ரொம்ப நாளைக்கு அப்புறம் இணையத்துக்கு வர்றேன் ஜி.எம்.பி சார். அதுனால் நிறைய இடுகைகளைப் படிக்கவே இல்லை.

      நீக்கு
  21. //நாமதான் ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்பதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடும் வம்சமாச்சே//

    ஹா ஹா ஹா இது பறவாயில்லை:)), ஆனா அண்ணி வந்து ஆசையாக வைரத் தோடு கேட்டால், அதையும் இப்பூடி மற்ரக்காதால பறக்க விட்டிடாதீங்கோ:), பின்பு காதும் பறந்திடுமாக்கும்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா... அதிரா... நான் பத்து வருடங்களுக்கு முன்பு, மிகவும் தேர்ந்தெடுத்த வைரக்கற்களால் ஆன பெரிய வைரைத்தோடு என் பெண்ணுக்கு வாங்கினேன். உயர்ந்த வைரம். அப்போது என் மனைவி தனக்கும் ஒன்று வாங்கலாமா என்று கேட்டாள். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இதுவரை காது பறக்கவில்லை. இனி எப்படியோ...

      நீக்கு
    2. ///அப்போது என் மனைவி தனக்கும் ஒன்று வாங்கலாமா என்று கேட்டாள். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.//

      யூ ஆஆஆஆர் எ பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் ஹஸ்பண்ட் இன் தெ வேல்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்:)).. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பாவம் அண்ணி நல்லவ என்பதனால, நீங்க இன்னும் சிரிச்சபடி ஊர் சுத்துறீங்க:)))

      நீக்கு
  22. //இதனைக் கேட்ட எனக்கு, மைசூர்பாவுக்காக கியூவில் நிற்பதா என்று தன்மானம் அதிகமாக, பேசாமல் வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.//

    ஹா ஹா ஹா இப்பூடித்தான் நேற்றிலிருந்து எனக்கும் ஒரு தன்மானம் அதிகமாகியிருக்கு:)).. இங்கு கிடைக்குதே இல்லையே, சாப்பிட்டே ஆகோணும் எனும் வெறி மேலோங்கியதால மில்க் வாங்கி வச்சிட்டேன்ன்.. பால்க்கோவா செய்ய. இதுவரை சுவைத்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பால்க்கோவா செய்ய. இதுவரை சுவைத்ததில்லை// நாங்க அதிலேயே முழுகிக் குளிச்சிருக்கோம். அதுவும் ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தப்போ! ஆஹா! விதம் விதமான பால் இனிப்புகள். அதிலும் கட்ச்சில் இருந்து வாங்கி வருவார் பாருங்க ஒரு திரட்டுப்பால் ஹிந்தியிலே "ரபடி" என்பார்கள். அந்த மாதிரி எங்கேயும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க!

      நீக்கு
    2. நான் சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருந்தேன். அது பால்கோவாவிற்கு மிகவும் ஃபேமஸ் ஆன இடம். கோவில் மண்டப கடைகளில் குறைந்தபட்சம் 20 பால்கோவா கடைகள் இருந்தன. அங்கிருந்த உள்ளூர்காரரிடம் மெதுவாகச் சென்று, எந்தக் கடையில் பால்கோவா நல்லா இருக்கும் என்று கேட்டேன். அவர், இங்குள்ள எல்லாக் கடைகளிலுமே எனக்கு வேண்டப்பட்ட நண்பர்கள்தாம். அதனால் நான் ஒரு கடையைக் குறிப்பிட்டால் அது சரியாக இருக்காது என்றார். நான், நீங்க சொன்ன உடனேயே அந்தக் கடைக்குச் செல்லமாட்டேன். அரை மணி நேரம் கழித்துத்தான் செல்வேன் என்றேன். பிறகு அவர், கோவிலின் இடது புறச் சுவர் பக்கத்தில் இருக்கும் வெங்கடேச்வரா கடையில் வாங்கச் சொன்னார். அங்கு வாங்கிய பால்கோவா நன்றாக இருந்தது.

      இந்த மெதட்டை விட்டுவிட்டு, கீசா மேடம் சொல்வதைக் கேட்டு, அடுப்பில் பாத்திரம் வைத்து பால்விட்டு பால்கோவா செய்ய ஆரம்பித்தீங்கன்னா...அப்புறம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு இணையத்துக்கு வர மாட்டீங்க.

      நீக்கு
    3. //நாங்க அதிலேயே முழுகிக் குளிச்சிருக்கோம். அதுவும் ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தப்போ! ஆஹா! விதம் விதமான பால் இனிப்புகள். //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீசாக்கா கேட்கவே ஆஐயா இருக்கு. எனக்கு இனிப்பே பிடிப்பதில்லை, ஆனா இப்போதான் கண்டுபிடிச்சேன், பாலில் செய்யும் இனிப்புக்கள் எனக்குப் பிடிக்குதே.. அதாவது ரசகுல்லா, ரசமலாய், இப்படி.. அதனாலதான் இம்முறை இந்த பால்க்கோவா முயற்சிக்கப் போறேன்ன், ஆரும் சாப்பிடாட்டிலும் மீ சாப்பிடுவேனென்னும் தெகிறியம்:)).

      நாங்கள் நெல்லைத்தமிழன், கபேஜ் ஐ, கோவா என்றுதானே அழைப்போம், அப்போ ஆரம்பம் இந்த நெட் உலகில்தான் “பால்கோவா” எனும் பெயரைப் பார்த்தேன், அபோ என்ன இது பாலில் செய்த கபேஜ் ஆ என நினைச்சு, இல்லை அது மில்க் இல் செயும் ஒரு இனிப்பு என அறிஞ்சு மிரண்டேன்:)).. இன்றுவரை சுவைத்ததில்லை, வாங்கிச் சாப்பிடோணும் என ஆசைப்பட்டுத் தேடியதுமில்லை, ஆனா இப்போ என்னமோ ஆசையாக இருக்குது.

      //இந்த மெதட்டை விட்டுவிட்டு, கீசா மேடம் சொல்வதைக் கேட்டு, அடுப்பில் பாத்திரம் வைத்து பால்விட்டு பால்கோவா செய்ய ஆரம்பித்தீங்கன்னா...அப்புறம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு இணையத்துக்கு வர மாட்டீங்க.//

      ஹா ஹா ஹா ஹையோ அப்போ நியூ இயர் முடிஞ்சபின்னர்தான் செய்வேனோ:))

      நீக்கு
  23. ///உடனே எழுதி அனுப்பும் ஆர்வம் போய்விட்டது.//

    ஹா ஹா ஹா, இதனாலதான் எங்களிடம் புளொக் இருப்பதால டக்குப்பக்கென புளொக்கில் போட்டுவிட்டு, ஸ்ரீராமைக் காணும் போதெல்லாம் பிளாக்க்க் சீலையால போர்த்து ஒளிச்சுத் திரிகிறோம் ஹா ஹா ஹா. போராட்டம் ஒன்று ஆரம்பிப்போமா?:) நாங்கள் அனுப்பும் குறிப்பு டக்கூஊஊ டக்கென வெளிவரோணும் என:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேற... ஒருவேளை நான் ஸ்ரீராமைக் கேட்டுக்கொண்டு, போன வாரமே இந்த இனிப்பை வெளியிடுங்கள் என்று சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? கீசா மேடம் பொங்கியிருக்க மாட்டாங்களா? இந்த வம்பே வேணாம் என்றுதான் ஸ்ரீராம், ஒவ்வொருத்தர் அனுப்பின உடனேயே ஸ்லாட் போட்டுடறார் போலிருக்கு.

      நீக்கு
    2. நீங்க டக்குப்பக்கென கட்சி மாறிடுறீங்க நெ.தமிழன் கர்ர்ர்:)) இனி உங்களை நம்பி ஆரோடும் ஜண்டைக்குப் போகமாட்டேன் ஜாமீஈஈஈ:)) ஹையோ நானும் இப்போ ஸ்ரீராம் கட்சியாக்கும்:)) ஹா ஹா ஹா:)

      நீக்கு
  24. மைசூர்பாகு சுவை பற்றி நீங்க சொல்லித்தான் தெரிகிறது ஆனால் பார்க்க சூப்பராக இருக்குது. நானும் ஒருதடவை செய்தேன், சீனிப்பாகு காச்சுவதில் தப்பாகி, இறுகவே இல்லை, கழிபோல வந்துது.. ஆரும் சாப்பிட மாட்டோம் என்றிட்டினம் வீட்டில் கர்:)) உங்களுக்கு நன்கு துண்டுதுண்டாக வந்திருக்குது.

    அப்படியே அம்மாவுக்கு ஒருக்கால் அதிராவின் ரெசிப்பிலயும் ஒன்று செய்து குடுங்கோ பிளீஸ்ஸ்:) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி இறுகாமல் போகும்? நீங்க இன்னும் கிளறிப்பார்த்திருக்கலாம். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். எனக்கும் இருமுறை தேங்காய் பர்பி செய்யும்போது, நீர் அதிகம் விட்டுவிட்டதால் ரொம்ப ரொம்ப நேரம் கிளறியும் கட்டி போடும் பக்குவம் வராமல், அப்படியே கொஞ்சம் அல்வா பதத்தில் விட்டுவிட்டேன்.

      நீங்க அப்பாவி அதிரா என்பதால் இப்படி வெளிப்படையாகச் சொல்லிட்டீங்க. ஒருவேளை கீதா ரங்கன் செய்யும்போது அப்படி வந்திருந்தால் அதனை, 'மைசூர் பாகு' என்று சொல்லி எ.பி.ல வெளியிட்டிருப்பாரோ இல்லை மைசூர் பாயசம் என்று சொல்லியிருப்பாரோ? அவர் வந்தால் கேட்கணும். ஹா ஹா.

      நீக்கு
    2. நீங்க எப்பூடி கீதாவை வம்புக்கு இழுத்தாலும் அவ வரவே மாட்டேன் என ஒளிச்சிருக்கிறா பாருங்கோ:)).. கடவுளே புது வருடத்திலயாவது கீதாவுக்கு நெட் கனெக்‌ஷன் நல்லபடி அமையோணும் வைரவா...

      நீக்கு
    3. அதிரா -- கீதா ரங்கனுக்கு நெட் கனெக்‌ஷன் சரியா இருந்தால், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் ஃபெயில் ஆயிடுது. கம்ப்யூட்டர் சரியா இருந்தால், தட்டச்சு செய்ய முடியாமல் தோள் வலி ரொம்ப வந்துடுது. எல்லாம் சரியாக இருந்தால், அங்க இங்கன்னு பிரயாணத்தில் நேரம் போய்விடுகிறது. அப்போ கீதா ரங்கன் என்னதான் செய்வாங்க சொல்லுங்க. அதனால, இது சரியா இருக்கணும், அது சரியா இருக்கணும் வைரவா என்று வேண்டுவதை விட்டுவிட்டு, கீதா ரங்கன் இணையத்துக்கு வரணும் என்று மட்டும் வேண்டிக்கோங்க. ஹா ஹா

      நீக்கு
    4. ஹா ஹா ஹா அப்போ என் தேம்ஸ்கரை ஆச்சிரமத்துள் இருக்கும் , உள் வைரவருக்கு கீரைவடையில மாலை போடுவேன் என வேண்டிக் கொள்கிறேன் ஹா ஹா ஹா:)

      நீக்கு
    5. //கீரைவடையில மாலை போடுவேன் என// - வேண்டிக்கொள்வதை நல்லா வேண்டிக்கோங்க. அதாவது 'கடையில் வாங்கிய கீரை வடையில் மாலை போடுவேன்' என்று. வைரவர் தவறுதலாக, 'அதிரா செய்த கீரை வடை' என்று புரிந்துகொண்டால், உங்கள் வேண்டுதலுக்கு ஆபத்து வந்துவிடப்போகிறது. ஹா ஹா

      நீக்கு
  25. ஆஹா அந்த இரு பின்னூட்டங்களும் ஒன்று கீசாக்கா, மற்றது துரை அண்ணந்தானே:)).. கீசாக்கா இப்போ அப்படி எல்லாம் சொல்லாமல் நல்ல நல்ல கொமெண்ட்ஸ் மட்டும்தான் போடுவா தெரியுமோ ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா.... கீசா மேடத்துக்கு ரொம்பவே சோப்பு போடறீங்களே... என்ன விஷயம்? பெண்ணுக்கு பெண்ணே எடிரி என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ பார்த்தால் ரொம்பவே கீசா மேடத்துக்கு ஜால்ரா போடறீங்க... ஹா ஹா

      நீக்கு
    2. அது நெ.தமிழன், நான் வந்து ஒரு “வருமுன் காப்போன்”:)

      நீக்கு
  26. மைசூர்பாகு சுவைக்கிறது.

    பிளாக் களை கட்டுகிறதே .:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி... இங்க ரெகுலரா வருபவர்களில் பலரை இப்போதெல்லாம் காணோம்.... பிளாக்குகளை மேயும் பழக்கம் குறைகிறதோ என்று நான் யோசித்தேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!