வெள்ளி, 27 டிசம்பர், 2019

வெள்ளி வீடியோ : பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா=======================================================================
எம் ஜி ஆர் தான் நடிப்பதற்காக தெரிவு செய்து வைத்திருந்த தலைப்பு விடிவெள்ளி.  மு. கருணாநிதியுடன் இணைந்து எடுக்கப்பட இருந்த படம் கருணாநிதியின் கல்லக்குடி போராட்ட கைதால் தடைப்பட, சிவாஜி கணேசன் தனது சிறிய கம்பெனியான பிரபுராம் பிக்சர்ஸ் சார்பில் (பெரிய கம்பெனி சிவாஜி பிலிம்ஸ்)  தயாரித்து நடிக்க,  ஸ்ரீதர் இயக்கத்தில் 1960 இல் வெளிவந்த ஒரு த்ரில்லர் வகைப் படம்.


படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள்.  

கு மா பா, மருதகாசி, கண்ணதாசன் பாடல்களுக்கு இசை ஏ எம் ராஜா.  வல்லிம்மா விருப்பமாக இடம்பெறும் இந்தப் பாடலைப் பாடி இருப்பவர்கள் பி பி ஸ்ரீனிவாஸ் - ஜிக்கி.   ஜிக்கியின் இயற்பெயர்  P G கிருஷ்ணவேணி.  கண்ணதாசன் எழுதிய பாடல்.

சிவாஜி கணேசன், சரோஜா தேவி, பாலாஜி, எம் என் ராஜம், எஸ் வி ஆர்  ஆகியோர் நடித்துள்ள திரைப்படம்.

பண்ணோடு பிறந்தது தாளம் 
பண்ணோடு பிறந்தது தாளம் 
குலப்பெண்ணோடு பிறந்தது நாணம் 
பண்ணோடு பிறந்தது தாளம் 

கண்ணோடு கலந்தது காட்சி அந்த 
கலையாவும் பெண்மையின் ஆட்சி 
மண்ணோடு மலர்ந்தது மானம் 
குலமகள் கொண்ட சீதனம் யாவும் 

செல்வோம் என்றே ஆசை எண்ணும் அங்கு 
செல்லாமலே கால்கள் பின்னும் 
சொல்வோமென்றே உள்ளம் ஓடும் 
வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும் 

ஒருநாளும் பாடாத உள்ளம் இந்த 
உறவாலேஇசையோடு துள்ளும் 
படிக்காத பாடங்கள் சொல்லி முன்பு 
பழகாத கல்விக்கு தான் இந்தப் பள்ளி 
காணாத கதை  இன்று காண்போம் அதை 
கண்டாலே பேரின்பம் தோன்றும் 

================================================================================================

இப்போது என் விருப்பம் :  

சிறிய பாடல்.  சரணங்களில் இரண்டு வரிகளைக்கொண்ட சிறிய பாடல் வகை.  பாடலாசிரியருக்கு வேலை மிச்சம்.ஏன், பாடுபவருக்கும், கேட்பவர்களுக்கும் கூடத்தான்! சுலக்ஷ்னா நாகரிக உடையில் சுரேஷுடனும் பாடும்போது கிராமத்து உடையில் ராஜேஷுடனும் ஆடுகிறார்.  என்ன கதையோ..   யாமறியோம்!  படம்பார்க்கும் வழக்கம்தான் இல்லையே....  பாடல்தானே யாம் ரசிப்பது!கே ஜே யேசுதாசும் ஜானகியம்மாவும் பாடும் பாடல்.  படம் ராஜாத்தி ரோஜாக்கிளி.   வெளியான ஆண்டு 1985.  தேவராஜ் இயக்கத்தில், கவிஞர் முத்துலிங்கம் பாடல்களுக்கு சந்திரபோஸ் இசை.  இந்தப் பாடலுக்கு மிக இனிமையாக இசை அமைத்திருக்கிறார்.  இடையே வரும் குழலோசையும், ஆரம்பம் முதல் தொடரும் தாளமும்...ஓடையின்னா நல்லோடைஒளிஞ்சிருக்கப் பூஞ்சோலை 
தங்கப்பசுங்கிளிக்கு சாந்துப் பொட்டு வைக்கவேணும்  
தன்னன்னா தானே தன்னன்னா 

ஏலம் மணக்கிற கூந்தல் வனத்துல வாசமல்லி வச்சிவிடவா 
பஞ்சும்  வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா 
 தன்னன்னா தானே தன்னன்னா  

கன்னி மனசையும் காதல் வயசையும் சேர்த்து வச்சு யாரு தச்சது 
சின்னக் கழுத்தையும் முத்துச்சரத்தையும் நீதானே சேர்த்து வச்சது 
  தன்னன்னா தானே தன்னன்னா   

ஓடையின்னா நல்லோடைஒளிஞ்சிருக்கப் பூஞ்சோலை 
தங்ககொழுந்தனுக்கு சாந்துப் பொட்டு வைக்கவேணும்  
தன்னன்னா தானே தன்னன்னா 

70 கருத்துகள்:

 1. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜு ஸார் வாங்க... இணையம் இல்லை. மொபைல் வழியாக..

   நீக்கு
 3. ஒளிந்து கொள்ளப் பூஞ்சோலையுடன் கூடிய அந்த நல்லோடை ...

  ( இல்லேன்னா முள்ளோடை..)

  எந்த ஊருல இருக்குன்னு தெரியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்பனையூர், சினிமா நகர், திரையுலகம்!

   நீக்கு
  2. ஆகா!..
   குறித்து வைத்துக் கொண்டால் அடுத்த பிறவிக்கு ஆகும்!...

   நீக்கு
  3. அன்பு துரை, இப்பவுமந்த ஓடையும் சோலையும் இருக்கா என்பது சந்தேகம்.இந்தப் படம்
   30 வருடங்களுக்கு முன் வந்தது.

   நீக்கு
  4. அப்பவே இந்த ஓடை இருந்ததா என்பதே சந்தேகம் அம்மா!

   நீக்கு
  5. தஞ்சை, திருநெல்வேலிப்பக்கம் சில ஊர்களில் ஓடைகள் இருக்கின்றன.

   நீக்கு
 4. எபியில் பழகியதில் இருந்து
  கைபேசி வழியே தான் கருத்துரைகள் எல்லாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது ஓகே. மற்ற தளங்கள் பார்ப்பது சிரமமாக உள்ளது.

   நீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
 6. இந்த நல்லோடைப் பாட்டு முன்பு ஒரு சமயம் பதிவில் இடம் பெற்றிருக்கிறது அல்லவா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சச்சோ... அப்படியா? செக் செய்யாமலேயே போட்டு விட்டேனே...

   நீக்கு
  2. அப்போதும் இந்தத் தனி ஆவர்த்தனம் பற்றிய கேள்வியும் இருந்தது...

   நீக்கு
  3. சாதாரணமாக இப்படிச் சந்தேகம் வரும்போது சோதித்து விட்டுப் போடுவேன். இம்முறை செய்யவில்லை. வெளியிட்டபின் ஒன்றும் செய்ய இயலாதென்பதால் பிடித்த பாடலொன்றை மறுபடி கேட்பதாய் சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

   நீக்கு
  4. குறை ஒன்றும் இல்லை கோவிந்தா!...

   கோயில் பிரசாதம் கேட்காமலேயே மறுபடியும் கை நிறையக் கிடைப்பதில்லையா!...

   எனக்கு இந்தப் பாட்டும்
   இதயக் கோயில் படத்தில் ஒரு காட்சியும் மிகவும் பிடித்தவை...

   அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் தனி ரகம்.... ஆகா!...

   நீக்கு
  5. ஆஹா... நன்றி. இதய கோவில் பாடல்கள் எல்லாமே இனிமை. காட்சி?

   நீக்கு
  6. இதயம் ஒரு கோயில்..- என்று
   SPB பாடும் பாடலில் வரும்...

   நாயகியின் கொலுசை நாயகன் வருடும் காட்சி...

   நீக்கு
  7. ஓ... "கொலுசே... கொலுசே... இசை பாடு கொலுசே..." என்று ஒரு பாடல் கேட்டிருக்கிறீர்களோ?

   நீக்கு
  8. இல்லையே...

   ஆனால் கைவசம் கொலுசு கதை ஒன்று உள்ளது...
   தை பிறக்கட்டும் பார்க்கலாம்...

   நீக்கு
  9. அனுப்புங்கள். காத்திருக்கிறேன்.

   நீக்கு
 7. இந்த வார நேயர் விருப்பம் அருமை....
  சென்ற வாரம் வல்லியம்மா அவர்கள் கேட்டதுமே நினைத்துக் கொண்டேன் நல்லதொரு இசை விருந்து என்று....

  பதிலளிநீக்கு
 8. குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்...
  மண்ணோடு மலர்ந்தது மானம்...

  இன்றைக்கு அவற்றையெல்லாம் காணோம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு துரை,

   மிக மிக நன்றி மா.ஆமாம் இந்த மாதிரிப் பாடல்களைக் கேட்டு வளர்ந்தோம்.
   அக்காலம் இனிமை.

   நீக்கு
 9. இந்த அடிநாதம் கவியரசரின் பல பாடல்களிலும் ஒலிக்கக் கேட்கலாம்...

  ஆணோ பெண்ணோ அவரிடத்தில் நாணம் மானம் இரண்டில் ஒன்று இருந்தாலே போதும்.. அவரால் தவறு செய்யவே முடியாது...

  பதிலளிநீக்கு
 10. இரண்டாவது பாடல் கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது...

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். காலம்பர வரேன். மணி எட்டரை ஆயிடுச்சு. :)))))

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் காலை வணக்கம். ஜெயா டி.வி.யில் நெய்வேலி சந்தானகோபாலனின் கச்சேரி  கேட்டுக்  கொண்டிருக்கிறேன். முடிந்ததும் வந்து பாடல்களை கேட்டு விட்டு சொல்கிறேன். வரிகளை மட்டும் பார்க்கும் பொழுது இரண்டுமே கேட்டது போல இல்லை. கேட்டால்தான் தெரியும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா... காலை வணக்கம். வந்து கேட்டுட்டு சொல்லுங்க..

   நீக்கு
 13. அன்பு ஶ்ரீராம், பாடல் இப்பவும் இனிமையாகத் தான் இருக்கிறது.மிக நளினமான பாடல். இதுபோலக் காடசிகளோ. அதற்கான. மென்மையோ இந்தக் காலத்துக்கு சேர்நது வராதோ. காப்பிக்குப் பிறகு மற்ற பாடல்கள்.மிக மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா. காது வழியே இதயத்துக்கு இனிமை சேர்த்த பாடல்கள்.

   நீக்கு
  2. அன்பு ஸ்ரீராமுக்கு, துரை,கீதாமா,,பானுமா
   எல்லொருக்கும் வணக்கம்.

   இங்கே குளிர் வலுப்பட்ட நிலையில் அதிகாலை
   நித்திரையைக் கலைப்பது சிரமமாகவே போய்விடுகிறது.

   ஜேசுதாஸ்,ஜானகி பாடல் கிராம இசை மேல் நாட்டு இசை என்று கொலுசுச் சத்தத்துடன்
   கேட்க நன்றாக இருக்கிறது. ஒரு ஜோடி சுலக்ஷ்ணா அண்ட் ராஜேஷ்.
   மற்றொரு ஜோடி சுரேஷ் அண்ட் நளினி.
   கேட்க சுகம் தான்.
   நானும் விடிவெள்ளி பார்த்ததில்லை.
   மீண்டும் நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. ஆம். சென்னையிலும் குளிர்.

   நீக்கு
 14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  முதல் பாடல் நிறைய தடவை கேட்டு இருக்கிறேன். பிடித்த பாடல்.
  விடிவெள்ளி படத்தில் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.

  இரண்டாவது பாடல் கேட்டு இருக்கிறேன். வெகு காலம் ஆச்சி இந்த் அபாடலை கேட்டு.
  //சுலக்ஷ்னா நாகரிக உடையில் சுரேஷுடனும் பாடும்போது கிராமத்து உடையில் ராஜேஷுடனும் ஆடுகிறார். என்ன கதையோ.. யாமறியோம்! படம்பார்க்கும் வழக்கம்தான் இல்லையே.... பாடல்தானே யாம் ரசிப்பது!//

  சுரேஷ்கூட ஆடுவது நளினி .

  பதிலளிநீக்கு
 15. ''கொடுத்து பார் பார் உந்தன் அன்பை" என்ற பாடல் மிக நன்றாக இருக்கும் எனக்கு பிடித்த பாடல்.
  அன்பு தரும் தெம்பை பற்றி இருக்கும் பாடல்.
  விள்ம்பரத்தில் வரும் நெக்லெஸ் அந்த நெக்லெஸ் படுத்தும் பாடு கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு கோமதி, விடிவெள்ளி இணையத்தில் பார்க்க ஆசைதான்.
   நீண்டு கொண்டே போனால் அயற்சி கூடும். இரண்டு தடவையாகப் பார்க்கணும்.

   நீக்கு
  2. பாதி பாதியாக அயற்சி இல்லாமல் பார்க்கலாம். அந்தக் காலபடங்களில் பாட்டுக்கள் அதிகம் பாட்டை ஓட்டி விட்டு பார்க்கலாம், பாடலை தனியாக ஒரு நாள் கேட்கலாம் அக்கா.

   நீக்கு
  3. பாதி பாதியாக அயற்சி இல்லாமல் பார்க்கலாம். அந்தக் காலபடங்களில் பாட்டுக்கள் அதிகம் பாட்டை ஓட்டி விட்டு பார்க்கலாம், பாடலை தனியாக ஒரு நாள் கேட்கலாம் அக்கா.

   நீக்கு
 16. ஆஆஆ எல்லோருக்கும் குட் மோனிங்...
  ஶ்ரீராமுக்கு மறதி அதிகமாச்சோ இல்ல எனக்குத்தான் குல்ட்க்குள் கண் தெரியவில்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
  ஆஆஆஆஆர்ர்ர்ர்ர்ர்ர் அந்த நிலவூஊஊஉ சே சே ஆர் அந்த நேயர்?:)... பழைய பாட்டை விரும்பிக் கேட்டவர் ஆரெனச் சொல்லவில்லையே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு அதிரா இனிய காலை வணக்கம். பழைய பாட்டை விரும்பிக் கேட்டது
   உங்கள் அன்பு நேயர் வல்லிம்மா.)

   நீக்கு
  2. ஆஆஆஆ வல்லிம்மா ரெண்டுதரம் படிச்சுப்பார்த்த பின்பே கொமெண்ட் போட்டேன்ன் என் கண்ணில தெரியவிடாமல் போய்விட்டதே உங்கள் பெயர்.... இப்போதுதான் கண்டுபிடிச்சேன்ன் ஹா ஹா ஹா

   நீக்கு
  3. வாங்க அதிரா... "விரும்பிக் கேட்ட நேயரி"ன் பெயரை பதிவுக்கு இடையில் கொடுத்திருந்தேன்!

   நீக்கு
  4. அது வசனத்தோடு சேர்த்து எழுதிவிட்டீங்க ஸ்ரீராம், அதனால மொபைலில் கண்டு பிடிக்க முடியாமல் போச்சு, வல்லிம்மா சொன்ன பின்னரும் கஸ்டப்பட்டே தேடிக் கண்டு பிடிச்சேன் கர்ர்ர்ர்ர்:)).. வழமையாக மேலே போடுவீங்களெல்லோ இந்னாருடைய விருப்பப் பாடல் என:))

   நீக்கு
 17. முதல்ப் பாட்டு பெரிதாக காதில் விழுந்த நினைவில்லை. ஆனா பாடலை விட வீடீயோவை ரசிக்கலாம்.

  இரண்டாவது பாட்டு அழகிய பாடல்... பலபலதடவைகள் கேட்டு ரசித்தது ஆனால் வீடியோவாக நல்லமில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாட்டு நல்லாயிருந்தது இல்லையா? ரசித்ததற்கு நன்றி அதிரா.

   நீக்கு
 18. இரண்டு பாடல்களையுமே முதல் முறையாக கேட்கிறேன். எளிமையான வரிகள், எளிமையான இசை, அதனாலேயே இனிமையாக இருக்கின்றன. 

  பதிலளிநீக்கு
 19. படத்தில் பாடல் காட்சியொடு ஒட்டி இருக்குமா பாடலையும் கேட்டதில்லை படமும் பார்த்ததில்லை

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  இன்றைய வெள்ளி பாடல்கள் அருமை. முதல் பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். இரண்டாவது பாடல் கேட்ட நினைவில்லை. ஆனாலும் இரு பாடல்களும் இப்போது ரசித்து கேட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 21. இரண்டு பாடல்களுமே இனிமை தானென்றாலும் முதல் பாடல் ஸ்ரீனிவாஸின் குரலில் மிக சுகமாக இருக்கும். ' என்னாளும் வாழ்விலே' என்ற சுசீலாவின் பாடலும் இந்த விடிவெள்ளி படத்தில் மிக இனிமையாக சுசீலாவின் குரலில் ஒலிக்கும்.

  பதிலளிநீக்கு
 22. இரண்டு பாடல்களும் இனிமை. முதல் பாடல் கேட்ட நினைவில்லை. இரண்டாம் பாடல் கேட்டிருக்கிறேன்.

  சுகமான பாடல் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!