வியாழன், 27 பிப்ரவரி, 2020

உறவில் விரிசல் - சுஜாதா மறைந்த தினம்

மனத்தாங்கல் ஏற்பட்ட நண்பனுடனேயே நான் பேசியதைச் சொன்னேன்.   உறவுகளுக்குள் எனக்கு பேசாமல் இருக்கும் அளவு - அதுவும் வருடக்கணக்கில் - சண்டை வந்தது இல்லை. 


 ஆனால் என் பாஸ் பக்க உறவுகளில் மூன்று பேர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள்.  அவர்கள் பிளாக் பக்கம் வரமாட்டார்கள் என்பதால் தைரியமாகவே சொல்லலாம்!!

எப்படி அப்படி பேசிக்கொள்ளாமல் விரோதம் பாராட்டுகிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும்.  ஒரு பொது விழாவில் ஒன்றாகச் சேரும் சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பார்கள்.  தப்பித் தவறி ஒரே இடத்தில இருக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் கூட கண்ணில் படாமல் ஒருவராவது முன்னால் ஓடி விடுவார்!



அப்படி என்ன சண்டை, அந்தச் சண்டை எதனால் ஏற்பட்டது என்று விசாரித்தேன்.  அல்ப காரணம்.

சுமார் இருபது வருஷங்களுக்கு முன்னால் தன் வாரிசின் கல்யாணப் பத்திரிகையைக் கொடுப்பதற்கு அந்த உறவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் ஒருவர்.  அங்கு இருந்த பெண் உறவினர், "அவர் இருக்கும்போது கொடுங்கள்...    அதுதான் மரியாதை" என்று பதிபக்தி காட்டி இருக்கிறார்.   இத்தனைக்கும் பத்திரிகை கொடுக்க வந்தவருக்கும் அவருக்கும் வெகு நெருங்கிய சொந்தம்.

சரி, அதுதானே முறை என்று அவர் எப்போது வருவார் என்று கேட்டால் சிலசமயம் சீக்கிரம் இரவு பதினோரு மணிக்கு வந்து விடுவார்...   சில சமயம் பனிரெண்டு மணி ஆகிவிடும் என்றிருக்கிறார் அந்தப் பெண்மணி.

அபப்டி எல்லாம் எப்படிக் காத்திருப்பது?  அதுவும் ஏகப்பட்ட கல்யாண வேலைகளை கையில் வைத்துக்கொண்டு?  'சரி, அவர் எப்போது லீவு?  எப்போது வீட்டிலிருப்பார்?  சனிக்கிழமை?  ஞாயிற்றுக்கிழமை?' என்று கேட்டதற்கு 'ஞாயிறு மட்டும் வீட்டில் இருப்பார்.   அதுவும் சில சமயங்களில் கூப்பிட்டு விட்டு விடுவார்கள்' என்று பதில் வந்ததாம்.

இரண்டு ஞாயிற்றுக்கிழமை முயற்சித்துப் பார்த்திருக்கிறார் இவர்.  ஒரு ஞாயிறில் வேலைக்கும், இன்னொரு ஞாயிறில் "முக்கியமான வேலையாக" வெளியிலும் சென்று விட்டார் அந்த மாப்பிள்ளை!

சரி, வேறு வழியில்லை என்று அவர் அலுவலகத்திலேயே சென்று சந்தித்திருக்கிறார் இவர்.  அங்கு பார்த்து கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்க, அவரை வெளியே அழைத்து வந்த அந்த மாப்பிள்ளை "உங்களுக்கு மரியாதையே தெரியவில்லையே...  ஆபீஸில் வைத்தா பத்திரிகை கொடுப்பார்கள்?" என்று கேட்டிருக்கிறார்.  இவர் சொன்ன விளக்கங்களைக் காதிலேயே வாங்காமல் அவர் பாட்டுக்குப் பேச, இவர் கிளம்பி விட்டாராம்.

அவ்ளோதான்...   அன்று முதல் இன்று வரை இருவருக்கும் பேச்சு வார்த்தை கிடையாது.  விரோதம்...  விரோதம்...   விரோதம்...!

கணவன் மனைவிக்குள் பேசாமலேயே பல வருடங்கள் இருக்கும் சம்பவங்கள் வெளியில் கேள்விப்பட்டிருக்கிறேன்.  அப்பா மகன் பேசாமலிருக்கும் சம்பவம் ஒன்று நட்பு வட்டாரத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆயிரம் உறவுகள் இருந்தென்ன...    நட்பைப்போல வருமா?  

என்னதான் நட்புகள் ஆயிரம் இருந்தாலும் ஒரு நல்லது கெட்டது என்றால் உறவுகள்தானே முக்கியம்?!!

=================================================================================================


இன்று சுஜாதா மறைந்த தினம்.  அவர் நினைவாக அவர் எழுத்து கீழே... 

'சின்னச்சின்ன கட்டுரைகள்' என்கிற புத்தகத்தில் 'எது சஸ்பென்ஸ்' என்கிற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதி....



"சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ப்ராங்க் ஸ்டாக்டன்  என்கிற சிறுகதை எழுத்தாளர் எழுதிய "லேடி ஆர் தி டைகர்?" என்கிற ஒரே ஒரு கதை இன்னும் பேசப்படுகிறது.

  ஸ்டாக்டன்  இந்தக் கதையை 1882 இல்  எழுதினார்.  அதன் பிரபலமும் அது தந்த ஏமாற்றமும் ஆயிரக்கணக்கான கடிதங்களைத் தூண்டின.  இன்றுவரை இந்தக்கதை  உலகிலேயே மிகப்பிரபலமான சஸ்பென்ஸ் கதையாகப் பேசப்படுகிறது.  நூறு வருஷம் கழித்துக்கூட இதன் முடிவை விவாதிப்பவர்கள் இருக்கிறார்கள். கதை என்ன என்று சொல்கிறேன்.



ரொம்ப நாள் முன்னாலொரு ராஜா இருந்தான். அவனுடைய தலைநகரில் ஒரு பெரிய ஸ்டேடியதில்தான் பொதுஜன கேளிக்கைகளும் தண்டனைகளும் நடக்கும்.  எல்லோரும் பார்த்து மகிழ்வார்கள்.

ராஜாவின் கவனத்தைக் கவரும் வகையில் ஒரு குற்றம் நிகழ்ந்துவிட்டால் குற்றவாளியை ஸ்டேடியம் அண்டாவில் கொண்டுவந்து விடுவார்கள்.  எல்லாருக்கும் தகவல் சொல்லி, ஜனங்கள் சூழ்ந்திருக்க, குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்படும்.  தண்டனை என்ன?  ராஜா சைகை காட்ட, குற்றவாளிக்கு எதிரே அருகருகே இரண்டு கதவுகள் இருக்கும்.  இரண்டும் ஒரே மாதிரித் தோற்றம் கொண்டது.  அதில் ஒன்றைக் குற்றவாளி தன் இச்சைப்படி தேர்ந்தெடுத்துத் திறக்கவேண்டும்.  ஒரு கதவைத் திறந்தால் அதனுள்ளிருக்கும் பசித்த புலி வெளிவந்து அவன்மேல் பாய்ந்து குத்திக் குதறித் தின்றுவிடும்.

மற்றொரு கதவைத் திறந்தால் அவன் வயசுக்கும் தகுதிக்கும் ஏற்ப ஒரு பெண் - ராஜாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகான பெண் - காத்திருப்பாள்.  அவளைக் குற்றவாளி உடனே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்.  ஒரு கதவு கல்யாணம், ஒரு கதவு புலி,  எந்தக் கதவை என்பது குற்றவாளியின் விதியைப் பொறுத்தது.  வேறு யாரும் குறுக்கிடுவதில்லை.  ராஜா காட்டும் நியாயம் இதுதான்.

ராஜாவுக்கு ஓர் அழகான பெண் இருந்தாள்.  அவள் (எப்போதும் போல) அழகான ஏழை இளைஞனைக் காதலித்தாள்.  இந்தக் காதல் ராஜாவுக்குத் தெரிய வந்தது.  உடனுக்குடன் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டான்.  தண்டனை?  வழக்கம்போலத்தான்!   இரண்டு கதவு -  புலி அல்லது பெண்!  இந்த ஸ்பெஷல் கேஸுக்காக ராஜா பிரத்யேகமாக தயார் செய்தார்.  கோபம் அதிகமான, பசி அதிகமான புலி!  அதேபோல பெண் விஷயத்திலும் பேட்டையிலேயே பெரிய அழகியாகத் தேர்ந்தெடுத்தான் ராஜா.  அதில் எல்லாம் பாரபட்சமில்லாதவன்.

தண்டனை நாள்  வந்தது.  காதலன் கொண்டு வரப்பட்டு நடுவே விடுவிக்கப் பட்டான்.  இரண்டு கதவில் ஒன்றைத் திறப்பதற்கு முன் ராஜாவுக்குத் தலைவணங்கிவிட்டு அருகில் உட்கார்ந்திருந்த ராஜகுமாரியைப் பரிதாபமாகப் பார்த்தான்.  ராஜகுமாரிக்கு மட்டும் எந்த கதவுக்குப் பின்னால் புலி , எதில் பெண் என்பது முன்பே தெரிந்திருந்தது.  (ஒரு பெண்ணின் வைராக்கியமும் காவலர்களின் பொன்னாசையும் அவளுக்கு அந்தத் தகவலைக் கொடுத்திருந்தன)

ராஜகுமாரியைப் பரிதாபமாகப் பார்த்த காதலன் கண்ணாலேயே "எந்தக் கதவு?" என்று கேட்டான்.  அதற்கு அவள் உடனே வலது கையைச் சற்றே உயர்த்தி வலது பக்கக் கதவைக் காட்டினாள்.   அது அவள் காதலனுக்கு மட்டும்தான் தெரிந்தது.

காதலன் உடனே விறுவிறுவென்று நடந்துபோய் எதிரே வலது பக்கக் கதவைத் தயக்கமே இல்லாமல் திறந்தான்.

வெளிவந்தது புலியா, பெண்ணா?   புலி என்றால் தான் உயிரையே வைத்திருந்த காதலன் துடிதுடித்துச் செத்துப்போவதை எப்படி ராஜகுமாரியால் தாங்கிக் கொள்ள முடியும்?   பெண் என்றால் மற்றொரு பெண்ணுடன் தன் காதலன் சுகித்து வாழ்வதை எப்படி அவளால் சகித்துக் கொள்ள முடியும்?

புலியா?  பெண்ணா?  எது?

நீங்கள்தான் சொல்லுங்களேன்." 


===========================================================================================================


இன்னொரு சுஜாதா!




தொடர்ந்து வரும் வரிகள் - அதே புத்தகத்திலிருந்து...  

"ராயப்பேட்டை பாலு என்று சுஜாதா குறித்திருப்பது இன்றைய பாலகுமாரனைத்தான். சுஜாதா பற்றி ஏதோ ஒரு சிறு பத்திரிகையில் கிண்டலடித்து அன்றைக்கு பாலகுமாரன் எழுதியிருந்ததற்கான பதில் இது"  



==============================================================================================================


-  பதிவின் நீளம் காரணமாக  இந்தப் பகுதி நீக்கப்படுகிறது.  பின்னொரு நாள் வேறொரு வியாழனில் இங்கிருந்த பகுதி இடம்பெறும்  -
===========================================================================================


பொக்கிஷம் :

இப்போ அப்படி எல்லாம் கண்டு பிடிக்க முடியாதுங்க...


சுவாரஸ்யமான துணுக்கு!


சேச்சே...    அந்த மாபாவத்தை மட்டும் செய்யாதீங்க ஸார்...!

106 கருத்துகள்:

  1. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள்வது..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. வாங்க துரை செல்வராஜூ ஸார்...   வணக்கம்.

    பதிலளிநீக்கு
  3. /// அவர்கள் பிளாக் பக்கமே வரமாட்டார்கள்..///

    ஆகா!...

    பதிலளிநீக்கு
  4. ### பேட்டையிலேயே பெரிய அழகியாகப் பார்த்து..###

    அடாடா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ### பேட்டையிலேயே பெரிய அழகியாகப் பார்த்து..###

      அடாடா!...

      தேனாம்பேட்டையா, வண்ணாரப்பேட்டையா தெரியவில்லை.  தப்பான கதவு திறந்து அவன் கண்ணம்மா பேட்டை போகாமலிருந்தால் சரி!!!!

      நீக்கு
  5. புலியா?.. பூவையா?...

    என்ன செய்வது?..
    அவன் தலையெழுத்து!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ...  இன்று DD ஒரு பதிவு போட்டிருக்கிறார்.  காதல் கொண்ட ஆண்கள் பற்றியும், மடலேறுவது பற்றியும்....  அது இங்கே பொருத்தகமாக வருகிறதோ!

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நாளாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. எனது தளத்தில் (draft-ல்) இருக்கும் பதிவின் சில வரிகள் :

    // உறவுகளிடம் நட்பாக இருந்தால், நட்புகளிடம் உறவாக இருக்கலாம்... நட்புகளிடம் உறவாக இருந்தால், உறவுகளிடம் நட்பாக இருக்கலாம்... உறவுகளிடம் நட்பாக இல்லையென்றால், நட்புகளிடம் கொண்ட உறவில் உண்மையில்லை... நட்புகளிடம் உறவாக இல்லையென்றால், உறவுகளிடம் கொண்ட நட்பில் உண்மையில்லை...

    சாதி மத இன - என எந்த வேற்றுமை காணாத குழந்தை வயதில் + மனதில், முதலில் முக்கியத்துவம் பிடிப்பது நட்பா...? உறவா...? (பகுதி 1) //

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...தயார் நிலையில் இருக்கிறதா?    வெளியிடுங்கள் DD 

      நீக்கு
  8. // மற்றொரு கதவைத் தீர்ந்தஅளவன் வயசுக்கும் தகுதிக்குமேற்ப ஒரு பெண் //

    புரியவில்லை... சரி பார்க்கவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மற்றொரு கதவைத் திறந்தால் அவன் வயசுக்கும் தகுதிக்குமேற்ப// என்று வரவேண்டும்.  திருத்தி விட்டேன்.  நன்றி 

      நீக்கு
    2. பெண்ணை சரிபார்க்கப் படைத்தவனாலும் முடியாது. பாவம் ஸ்ரீராம்! விட்டுவிடுங்கள்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    கலாட்டா கல்யாணம் மாதிரி, கல்யாண கலாட்டாவாக உறவின் விரிசல் நமக்கு சுவாரஷ்யம். இப்படியும் சில அல்ப காரணங்களுக்காக இறுதிவரை பேசாமல் மன திடத்துடன் இருக்கும் உறவுகள். ஆச்சரியம்தான்...! இவர்களுக்கு மறுபடியும் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்து பழசை நினைவுபடுத்தாதோ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலாட்டா கல்யாணங்கள்தான்.   சிலபேர் பேசிக்கொள்வார்கள் என்று பேர்தான். வீடுகள் அருகருகே இருந்தாலும் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.  எப்போதாவது நேரில் பார்த்தாலும் சிறு புன்னகையோடு கடப்பார்கள்!  அதுவும் ஒருவகை!

      நீக்கு
  10. புலியா? பெண்ணா? எது?

    உயிரா...? காதலா...?

    முறத்தால் புலியை விரட்டிய வீரத் தமிழ் மங்கையாக இருக்கும் பட்சத்தில், ராஜகுமாரி புலி இருக்கும் கதவை காண்பிப்பாள்... உண்மையான காதல், காதலுக்காக உயிரையும் பொருட்படுத்தாது போராடி ஜெயிக்கும்...!

    இன்றைய நிலவரம் :
    1) ராஜகுமாரி புலி இருக்கும் கதவைக் காண்பித்தால், காதல் உண்மையல்ல...
    2) 'பேட்ட' பெரிய அழகி கதவைக் காண்பித்தால், "எங்கிருந்தாலும் வாழ்க... உன் இதயம் அமைதியில் வாழ்க..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா...  ஹா...   ஒரு முடிவாய்ச் சொல்ல முடியாததே இதன் விசேஷம்!

      நீக்கு
  11. ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொல்லவந்தபோது கத்தரி போட்ட மகானுபாவர் யார்? அவருக்கு மட்டும் குற்றம் சிறியது என்பதால் இரண்டு தண்டனைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் கிடையாது. அதனால் அழகிய பெண் உள்ள கூண்டை வைக்கப் போவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு ரொம்ப நீளமாக இருந்தால் படிப்பவர்களுக்கு எதை மனதில் வைப்பது என்கிற குழப்பம் வருமே என்று கத்திரி போடப்பட்டிருக்கலாம்.  நல்லெண்ணம் என்பதால் பேட்டை பெரிய அழகியைப் பரிசளித்துவிடலாம்!

      நீக்கு
  12. நாம் ராஜகுமாரியாக இருந்து, இருவரும் மிக நேசமுடையவராக இருந்து இந்தமாதிரி சந்தர்ப்பம் வந்தால்,

    காதலன் நலமாக இருக்கட்டும், நாம் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துவிடுவோம் என நினைப்போமா?

    இல்லை அவன் நல்லா வாழட்டும் நாம் இறப்போம் என நினைப்போமா?

    அவனும் இறக்கட்டும் நாமும் இறப்போம் என எண்ணுவதா?

    இல்லை அவனே அவன் விதியைத் தேர்ந்தெடுக்கட்டும் அதுவே தன் விதியாக இருக்கட்டும் என நினைப்பதா (அதுவே சரியானதாக இருந்திருக்கும். ஆனால் விதியில் குறுக்கிட்டு அவள் தவறு செய்துவிட்டாள், அவன் வாழட்டும் நாம் இறப்போம் என்பது அவள் முடிவாக இல்லாத பட்சத்தில்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜகுமாரி வேண்டாம்...    ராஜாங்கத்தை விட்டு ஓடிப்போகிறேன் என்று ராஜாவுடன் டீல் பேசி இருக்கலாம்.  

      ஓடிப்போய் சந்தோஷமாக வெளி ராஜாங்கத்தில் வாழலாம்.  அல்லது அந்நாட்டு ராஜாவிடம் முறையிட்டு ஆட்களுடன் வந்து ராஜகுமாரியைக் கவர்ந்து செல்லலாம்.  

      கையில் மயக்க மருந்து வைத்திருந்து  புலி முகத்தில் அடித்திருக்கலாம்.  புலியுடன் ஓடிப்பிடித்து விளையாடி அதை மக்கள் மத்தியில் குதிக்க வைத்திருக்கலாம்.

      ராஜகுமாரியுடன் சேர்த்து அவள் தோழியுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டிருக்கலாம்...

      லாம்...  லாம்...  லாம்...!!!!!!

      நீக்கு
  13. அல்ப காரணம் என்பதை நம்ப முடியவில்லை. ஏற்கனவே மனதளவில் உரசல் இருந்திருக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   இது உறவில் விரிசல் பகுதிக்கான பதிலா?    இருந்திருக்கும்.   இல்லாவிட்டால் முதல் இரண்டு மூன்று முறை பெருந்தன்மை அல்லவா வெளிப்படும்!

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. //என்னதான் நட்புகள் ஆயிரம் இருந்தாலும் ஒரு நல்லது கெட்டது என்றால் உறவுகள்தானே முக்கியம்?!!//

    தெரியாத ஊரில் உறவுகள் இல்லாத ஊரில் நல்லது , கெட்டதில் முதலில் வருவது நண்பர்கள்தான். அப்புறம் தான் உறவுகள் .
    அது போல அக்கம் பக்கம் உள்ளவர்களைதான் ஆத்திரம் அவசரத்திற்கு முதலில் கூப்பிடுவோம், அப்புறம் தான் உறவினர்களை கூப்பிடுவோம். அதனால் தான் பக்கத்தில் இருப்பவனை பகைத்துக் கொள்ளதே ! என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

    உறவுகள் தனி மதிப்பு மரியாதை, மரியாதை முறைகள் எல்லாம் எதிர்ப்பார்ப்பார்கள், நட்புகள் எதிர்பார்க்காது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆயிரம் உறவுகள் இருந்தென்ன... நட்பைப்போல வருமா? //

      இதுவும் கேட்டிருக்கிறேனே கோமதி அக்கா...    அங்கிட்டுன்னா இங்கிட்டு...  இங்கிட்டுன்னா அங்கிட்டு!!  ஆனால் நீங்கள் சொல்லியிருப்பதும் முற்றிலும் சரி.

      நீக்கு
  16. அருமை அந்த நண்பர் இவ்வளவுக்குப் பின்னும் பேசினால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்..சஸ்பென்ஸ் கதை அருமை..அது புலி இருந்த கதவாக இருக்கவே அதிகச் சாத்தியம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரமணி ஸார்... 

      //அந்த நண்பர் இவ்வளவுக்குப் பின்னும் பேசினால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.//

      புரியவில்லை.   நண்பரா?  உறவினரா?  அவர் செய்தது சரி என்கிறீர்களா?

      கருத்துக்கு நன்றி ரமணி ஸார்.

      நீக்கு
  17. //"ராயப்பேட்டை பாலு என்று சுஜாதா குறித்திருப்பது இன்றைய பாலகுமாரனைத்தான்.// இன்றைய பாலகுமாரனா?  இது எப்போது எழுதப்பட்ட பதிவு? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதோ ஐந்து வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் பகிர்ந்தது.  புத்தகம் நண்பர் அமுதவன் எழுதிய என்றென்றும் சுஜாதா வில்வந்திருந்தது என்று நினைவு.  சொல்லியிருக்கிறேன் போலவே...

      நீக்கு
  18. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    சுஜாதா நினைவு நாள் பதிவு சுவாரஸ்யம்.
    கவிதை ரசிக்க முடியவில்லை. ஸாரி ரைட்டர் சார்.

    உறவில் விரிசல் ,சின்ன,பெரிய காரணங்களுக்காகவும் வரும்.
    பெரும்பாலும் இந்த நேரில போய் அழைப்பது
    25 வருடங்களுக்கு முன்பு மஹா பெரிய விஷயம்.
    ஒரு அத்தையை வண்டி வைத்து அழைத்து வந்தால் தான் வருவேன் என்று விட்டார்.
    நாங்க எல்லாம் ரிசீவிங்க் எண்ட்.
    தணிந்தே போய் விடுவோம்.:)

    சுஜாதா சாரின் கதையில் ஏகப்பட்ட பர்முடேஷன் காம்பினேஷன் போடலாம்.
    சாகாமல் தப்பிப் போகட்டும்.
    நட்புகள் பிரிவதற்கும் பல காரணங்கள் இருக்கும்.

    என்னுயிர் நீதானே என்று சொன்னவர்கள்
    நீயாரோ இன்று நானாரோ என்று கூட இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...     சுஜாதா கதைகள் சுவாரஸ்யம்தான்.    நீங்கள் சொல்லி இருப்பதுபோல சம்பவங்கள் எங்க உறவிலும் உண்டு.  ஆனால் பேசாமலெல்லாம் இல்லாமல் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்/ இருக்கிறோம்!

      நீக்கு
  19. உறவுகள் தனி மதிப்பு மரியாதை, மரியாதை முறைகள் எல்லாம் எதிர்ப்பார்ப்பார்கள், நட்புகள் எதிர்பார்க்காது .///////////அன்பு கோமதியின் வார்த்தைகள் மிக உண்மை. எனக்கு அக்கம்பக்கத்துக்காரர்கள் உதவிய தினம் பசுமையாக மனதில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை...  உண்மை...    என் அனுபவத்தில் எனக்கு நட்பை விட உறவுகளே அதிகம் கைகொடுத்தன.

      நீக்கு
  20. சுஜாதாவை கிண்டலடித்து அல்ல கொஞ்சம் சீப்பாக என்று கேள்வி. அதற்கு கணையாழியின் கடைசி பக்கங்கள் பகுதியில், சுஜாதா எழுதியதை நான் எழுதினால் ஸ்ரீராம் வைத்திருக்கும் சஸ்பென்ஸை உடைத்த பாவியாகிவிடுவேனோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமா சொல்வதுதான் உண்மை.
      இருவரும் நட்பு கொண்ட காலங்கள் வேறு.

      பிரிந்த காலங்கள் வேறு.
      பலவித சுவாரஸ்யங்கள் கொண்டது,அவலங்களையும் இணைத்தது
      அவர்கள் நட்பு.

      நீக்கு
    2. அடடா...   தாராளமாக எழுதுங்கள் பானு அக்கா...    எனக்கு நினைவிலிருந்து எழுத வராது; புத்தகம் இப்போது தேடமுடியாது!  

      நீக்கு
    3. அற்ப சங்கியைகளுக்காக ஒதுங்கும் இடத்தில் சுவற்றில் எழுதப்படும் வார்த்தைகளை உபயோகித்து ராயப்பேட்டை பாலு என்னும் பெயரில் எழுதியிருப்பது யார் என்று எனக்குத் தெரியும். எழுத வைத்தது யார் என்றும் தெரியும். சிரிப்பு வருகிறது. - கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா. 

      நீக்கு
    4. நினைவுக்கு வருகிறது. ஆனால் அந்த மூல எழுத்தைப் படிக்க, நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லையே...ரா பா என்ன, எதிலெழுதினார்?

      நீக்கு
    5. அதை சுஜாதா குறிப்பிடவில்லையே..:((

      நீக்கு
  21. சுஜாதாவின் நினைவு நாளில் அவரை நினைவுகூற  வேறு நல்ல விஷயங்களை பகிர்ந்திருக்கலாமோ? திருக்குறளுக்கு எளிமையாக சென்னை பேச்சு வழக்கில் பொருள் கூறியிருப்பார். ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகத்திலிருந்து எதையாவது பகிர்ந்திருக்கலாம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  இப்போது நினைக்கையில் எனக்கும் அப்படித் தோன்றுகிறது.   சும்மா ஜாலிக்காக பகிர்ந்தேன்.  புதிர்க்கதை ஓகே, இங்கு இரண்டாவதாகப் பகிர்ந்ததை தவிர்த்து, வாட்ஸாப்பில் பகிர்ந்ததை (பாரடாக்ஸ் - முரண்பாடு) இங்கு பகிர்ந்திருக்கலாம்!

      நீக்கு
  22. கல்யாணத்திற்கு ஆண், பெண் இருவரும் வந்து பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டும் என்பார்கள். கணவர் இருக்கும் போது வந்து கொடுக்க வேண்டும் என்பார்கள். மருமகன் இருந்தால் அவரை தனியாக அழைக்க வேண்டும் என்பார்கள். இப்படி நிறைய மரியாதை எதிர்ப்பார்க்கும் உறவுகள் உண்டு.
    ஒரு திருமணம் என்றால் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கும்,போக்கு வரத்துக்கள் எவ்வளவு தூரம் ஆகி விட்டது போன வீட்டுக்கே திரும்ப திரும்ப போக முடியுமா என்பதை எல்லாம் நினைத்துப் பார்ப்பது இல்லை சிலர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.    அந்தக் கஷ்டம் எல்லாம் அவர்கள் உணரவில்லை.   அவர்கள் கெத்தை அவர்கள் காண்பிக்கிறார்கள்!

      நீக்கு
  23. (ஒரு பெண்ணின் வைராக்கியமும் காவலர்களின் பொன்னாசையும் அவளுக்கு அந்தத் தகவலைக் கொடுத்திருந்தன)//

    பொன் கொடுத்து புலி இருக்கும் கதவை தெரிந்து கொண்டு நிஜ புலியை அப்புறபடுத்தி இருப்பாள், பொம்மைபுலியை வைத்து இருப்பாள்.
    வைராக்கியமான பெண் தன் காதலனை காப்பாற்றி இருப்பாள்.

    பதிலளிநீக்கு
  24. உறவுக்குள் பேசாமல் இருப்பது... உண்மைதான் சின்னச் சின்ன காரணங்கள், ஆனாலும் அந்தப் பத்திரிகை வைக்க வந்தவரை அப்படிப் பாடு படுத்தியிருக்க வேண்டாம், சில வீடுகளில், ஆண்களைச் சந்தித்து பத்திரிகை தரவில்லை எனில் கோபிப்பார்கள், ஆனா அந்தக் கணவரை சமாளிக்கும் மனோதைரியம் அப்பெண்ணுக்கு இருந்திருந்தாலோ, இல்லை நல்ல புத்தி சாதுர்யமாக, பத்திரிகை வைக்க வந்தவரையும் கோபிக்காமல் புரிஞ்சுணர்வோடு நடந்திருக்கலாம், பல வழிகள் இருக்கும்போது, தப்பான வழியைத் தெரிவு செய்து, கோபம் சாதிப்பதில் என்ன நன்மை இருக்கப் போகிறது.

    அதுசரி இப்பவும் இப்படிப் பத்திரிகை முறை அங்கு இருக்குதோ ஸ்ரீராம்.. நம் நாட்டில் இவ்ளோ கொடுமை இல்லை, ஊருக்குள் மட்டும் வீட்டுக்குப் போய் கொடுப்பார்கள் மற்றும்படி போஸ்ட்டில் அனுப்புவோம், இல்லை எனில் ஒரு ஃபோன் கோலில் சொல்லிட்டால் சரி வருவார்கள்... வீட்டில் ஆட்கள் இருக்கோணும் எனும் கட்டாயமெலாம் இல்லை, பெற்றோர் இல்லை எனில் பிள்ளைகளிடம் கொடுத்திட்டு வந்தாலே போதும்.. சந்தோசப்படுவார்கள், ஆஆஆஆ அந்நேரம் நான் இல்லாமல் போயிட்டேன் மன்னிச்சுக்கொள்ளுங்கோ எனச் சொல்வார்கள்... சொல்லவே இல்லை எனில் தான் கோபிப்பார்கள்..

    எங்கள் அக்காவின் திருமணத்துக்கு, பக்கத்து ஊர்களில் இருக்கும் நெருங்கிய உறவுக்கு சொல்லப்போனது நானும் அத்தானின்[அக்காவின் கணவர்] அண்ணாவும்... ஏனெனில் அவர்கள் மாமியின் பிள்ளைகள் என்பதால் சின்ன வயசிலிருந்தே ஒன்றாகப் பழகுவோம்... நாட்கள் போதாது அனைத்துக்கும் அப்பா அம்மா போய்ச் சொல்ல, மற்றும் பெண் வீடும் மாப்பிள்ளை வீடும் உறவுக்காரர் என்பதால்... இது இரு வீட்டார் அழைப்பாக ஏற்று அனைவரும் வந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...    எங்கள் வீட்டு விசேஷத்துக்கு வந்த ஒருவர், தன்னுடைய வீட்டு விசேஷத்துக்கு நண்பர்களுக்குப்பத்திரிகை கொடுத்து அழைத்தார்.  சிலபேர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள்.  ஒன்றிரண்டு பேர்கள் "இங்கு என்னைப் பார்த்திருக்கா விட்டால் தந்திருக்க மாட்டார்தானே?  சாய், பொது இடத்தில பத்திரிகை கொடுத்தார்...    அப்புறம் ஒரு போன் காலாவது  பண்ணிக் கூப்பிட்டிருக்கலாம் என்று சொல்லி அந்த விசேஷத்துக்குப் போகவில்லை! நான் அப்படியல்ல.   வாட்ஸாப்பில் வந்த கல்யாணப்  பத்திரிகையைக்கூட  ஏற்றுக்கொண்டு சென்று வந்திருக்கிறேன்.

      நீக்கு
    2. //நான் அப்படியல்ல. வாட்ஸாப்பில் வந்த கல்யாணப் பத்திரிகையைக்கூட ஏற்றுக்கொண்டு சென்று வந்திருக்கிறேன்.//

      அப்படித்தான் இருக்கோணும் ஸ்ரீராம், உங்களைப்பார்த்து பத்துப் பேராவது திருந்தினால் சந்தோசம்தானே...

      எங்கள் திருமணத்துக்கு, அழைக்காமல் வந்தோர் அதிகம்:))[கணவருக்காக, அவர் செய்த மருத்துவ உதவிக்கு நன்றிக்கடனாக..] அதனால ஹோலில் இருக்க இடம் போதவில்லை, பலர் நின்றுகொண்டிருந்தனர்:(..., ஆனா உணவு மட்டும் ஆட்களைப் பார்த்துப் பார்த்து சமைக்கப் பண்ணிக் கொடுத்தார்கள்..


      இதுகூடப் பறவாயில்லை.. ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன், ஒரு பிள்ளையின் அப்பா காலமாகியிருக்கிறார், அப்பிள்ளையின் மாமா மாமி.. அதே ஊரில் அடுத்த தெருவில் இருக்கினமாம் ஆனா தங்களுக்கு சம்பந்தி எனும் முறையில் தகவல் சொல்லவில்லை எனக் கோபித்துக் கொண்டு செத்தவீட்டுக்குப் போகவில்லையாம்.. என்ன மனிசர்கள் இவர்கள் எல்லாம்.

      நீக்கு
    3. திட்டமிடாமல், எவ்வளவுபேர் நம்விசேஷத்துக்கு வருவார்கள் என்று சரியாய்த் தெரியா விட்டால் சமையல் உட்பட பதில் மரியாதை செய்வதற்கும் நாம் திட்டமிடமுடியாமல் போகும்.

      நீக்கு
    4. /நான் அப்படியல்ல. வாட்ஸாப்பில் வந்த கல்யாணப் பத்திரிகையைக்கூட ஏற்றுக்கொண்டு சென்று வந்திருக்கிறேன்.// இங்கேயும் அப்படித்தான். எனக்கு ஒரு ராசி, ராமபுரத்தில் இருந்த பொழுதும் சரி, இப்போது பெங்களூரிலும் பத்திரிகைகள் வருவதில் ஏதோ பிரச்சனை. நானே எல்லோரிடமும், என்னுடைய மெயில் ஐ.டி.க்கு அல்லது வாட்ஸாப் நம்பருக்கு ஒன்று அனுப்பி விடுங்கள் என்று சொல்லி விடுவேன். இப்போது கூட இரண்டு இன்விட்டேஷன்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் தொலை பேசியில் அழைத்து விட்டார்கள். அதை விட வேறு என்ன?

      நீக்கு
  25. //புலியா? பெண்ணா? எது?

    நீங்கள்தான் சொல்லுங்களேன்." //

    என்னைக் கேட்டால் பெண்ணைத்தான் சொல்ல வேண்டும், ஏனெனில் எவ்ளோ தைரியசாலி எனினும், புலியுடன் வெல்லலாம், உயிரும்போகலாம், ஆனா பெண் எனில் உயிருக்கு ஆபத்து இல்லை, அந்த இன்னொரு பெண்ணுக்கும் தெரிஞ்சிருக்கும்தானே இவர் ராஜ குமாரியின் காதலன் என, ராஜாவுக்காக அப்போ அப்பெண்ணுடன் போவது போல சொல்லித் தப்பிட்டால் பின்பு ராஜ குமாரியுடன் சேரும் சந்தர்ப்பம் அதிகம் உண்டெல்லோ:))...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான்...    ஆனால் கதவைத் திறந்தால் வரப்போவது புலியா?  பெண்ணா/ என்பதுதான் கேள்வி, சஸ்பென்ஸ்!  காதலன் என்ன ஆவான் என்பதுதான் திக்திக்!

      நீக்கு
  26. பாச்சா என்றால் பாம்போ?

    // பதிவின் நீளம் காரணமாக இந்தப் பகுதி நீக்கப்படுகிறது. பின்னொரு நாள் வேறொரு வியாழனில் இங்கிருந்த பகுதி இடம்பெறும் ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கஸ்டப்பட்டு ஒரு படம் போட்டு இப்பூடி எழுதிய நேரம், ஒரு ஹைக்கூ போட்டிருக்கலாம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாச்சா என்றால் திட்டம்...   சதி, முயற்சி...    இப்படிச் சொல்லலாம்.  ஹைக்கூவா?  அப்படீன்னா?!!!  அப்படி ஆகிப்போச்சு நிலைமை!

      நீக்கு
    2. ஹா...   ஹா... ஹா...    ஆமாம்...  ஆமாம்!  அப்படியும் சொல்லலாம்!

      நீக்கு
  27. pஒக்கிஷம்..

    //இப்போ அப்படி எல்லாம் கண்டு பிடிக்க முடியாதுங்க...//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சிரிப்பு வருகுதே இல்லை:)).

    //சுவாரஸ்யமான துணுக்கு!//
    புத்திக்கூர்மை நன்றாக இருக்கிறது, சயோசிதமாக யோசித்து செயல்பட்டிருக்கினம்.

    //சேச்சே... அந்த மாபாவத்தை மட்டும் செய்யாதீங்க ஸார்...!//

    லைட்டா...:)) கா கா கா:))[சிரிக்கிறேன்]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ எல்லாம் இதற்கே 'பகபக'வென்று சிரித்திருக்கிறார்கள் அதிரா....

      நீக்கு
    2. அனைத்தும் இன்ரநெட் வளர்ச்சி... முன்பு ஒரு ஓவியத்தில் பெண்ணின் இடுப்பு தெரிஞ்சாலே அது ஏதோ பெரிய விஷயமாக ஒளிச்சு ஒளிச்சுப் பார்ப்பினமாம்.. ஆனா இப்போ அதெல்லாம் ஜூஜுபி என ஆகிவிட்டதே.. அப்படித்தான் இதுவும்..

      நீக்கு
  28. //என்னதான் நட்புகள் ஆயிரம் இருந்தாலும் ஒரு நல்லது கெட்டது என்றால் உறவுகள்தானே முக்கியம்//

    இதுதான் ஜி உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கில்லர்ஜி இப்பூடிக் கட்சி மாறிட்டார்ர்..:)) உறவுகள் வேண்டாம் நட்புத்தான் எனக்கு. என்றெல்லாம் போஸ்ட் போட்ட கில்லர்ஜி இப்படி டக்குப்பக்கெனக் கட்சி மாறியதை என்னால ஜீரணிக்க முடியால் நான் ஓடிப்போய் ஒரு இஞ்சி ரி குடிக்கப் போகிறேன்:)..

      நீக்கு
    2. மாற்றம் ஒன்றே மாறாதது...   சரிதானே அதிரா?

      நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
  29. சுஜாதாவை நினைத்து பதிவிட்டதில் திகில் கதை சுவாரஸ்யம். புலியிடம் சிக்கிக் காணாமற்போயிருப்பான், வேறென்ன! ஆண்களின் அதிர்ஷ்டம் தெரிந்ததுதானே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்...   எல்லா ஆண்களையும் ஒரே தராசில் நிறுத்த முடியுமா?

      நீக்கு
  30. கோபம் விரோதம் எல்லாம் அவரவர் மனநிலை சூழல் பொறுத்து அமைகிறது .ஒரு 5 நிமிஷம் அமர்ந்து சிந்திச்சா போதும் எல்லாம் சரியாகும். நான் யாரையுடனும் ஓவராக ஓட்டுவதுமில்லை ஒட்டிப்பழகி பின்பு வருந்துவதுமில்லை :) எல்லா பெருமையும் அருமையும் மேதகு பூஸானந்தாவின் பொன்மொழிகள் அறிவுரைகள் படித்து திருந்தி திருத்திக்கொண்டேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...    எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க...   இரண்டு விஷயங்கள் இன்று கற்றுக்கொண்டேன்.

      நீக்கு
  31. //அங்கு இருந்த பெண் உறவினர், "அவர் இருக்கும்போது கொடுங்கள்...    அதுதான் மரியாதை" என்று பதிபக்தி காட்டி இருக்கிறார்.  //

    ஹாஹாஆ இதெல்லாம் டூ மச் :) தாரங்களே  பல பிரச்சினைகளுக்கு ஆ .தாரம் :)அற்பத்தனமா இருக்கு இப்பவும் நடக்குதா இந்த வெட்டி பந்தா மாப்பிள்ளை முறுக்கு விஷயங்கள் :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம் அதே மாப்பிள்ளை பற்றி அதே தன்பக்கத்து உறவினர்களிடமும் புகார்க்காண்டமும் படிப்பார்!

      :)))

      நீக்கு
  32. புலியா பெண்ணா :) புலி இருப்பதை பொன் கொடுத்து அறிய முடிந்த இளவரசியால் அதை சமாளிக்கும் விதத்தையும் செய்திருப்பார் புலிக்கு பசிதீர உணவிட்டிருப்பர் .பசி தீர்ந்த புலி  தூங்கியிருக்கும் .பெண் இருக்கும் கதவை காட்டியிருக்க மாட்டார் :) 

    பதிலளிநீக்கு
  33. முந்திலாம் லைப்ரரி போய் சுஜாதா புக்ஸ் எடுத்து வருவேன் ..இப்போ டைம் :) தேடறேன் நேரத்தை ..துணுக்கைவிட அதற்க்கு வரையும் படங்கள் சிரிப்பூட்டுது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..   இப்போது புத்தகம் படிக்கும் நேரம் எனக்கும் குறைந்து கொண்டு வருகிறது.

      நீக்கு
  34. உண்மைதான். ஏஞ்சல் .சின்ன விஷயங்களை நான் பார்த்த்ப்பேன் பெரிய விஷயங்களை அவர் பார்ததுப்பார் கதை.:)

    பதிலளிநீக்கு
  35. சுஜாதா, கமல் படம். வறுமையின் நிறம் சிவப்போ?இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசியிருக்கலாம்.

      நீக்கு
  36. staistical analysis படி 50 ---50 சான்ஸ் புலியோபெண்ணோ

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அருமை. அதை விட நடுவில் இடம் பெற்ற கத்திரி படம் பதிவின் நீளத்தை சுருக்கவென சுருக்கமாக சொல்லிச் சென்றதும் அருமை. ரசித்தேன்.

    சுஜாதா நினைவுகள் நன்றாக உள்ளது. பொக்கிஷம் பகுதியும் ரசித்தேன். இரண்டு ஜோக்குகளும் ரசிக்கும்படி இருந்தது. அந்த காலத்தில் பேனாவுக்கும், எழுத்தாளர்களுக்கும் நிறைய உறவின் நெருக்கம் இருந்தது. இப்போது அந்த உறவில் விரிசல் விழுந்திருக்குமோ.? தெரியவில்லை..

    நண்பர்களை பிரிப்பது என்ற சிலேடை வார்த்தை விளையாட்டை ரசித்து படித்தேன்.

    புலி கதையில் ராஜ குமாரிக்கு புலி, பெண், இரண்டும் எந்தெந்த கதவுகளின் பின்னால், என்பதை அறிந்து கொள்ள சில மறைமுக சலுகைகள் கிடைத்த பட்சத்தில், அந்த பேட்டை அழகுப் பெண் இருந்த இடத்தில், தான் இருந்து கொண்டு, தன் இருப்பிடத்தில் தன்னையொத்த ஒரு பெண்ணை (அல்லது அந்த அழகுப் பெண்ணையோ) மாறு வேஷமிட்டு அமர்த்தியிருப்பாள். கதவை திறந்ததும் அரசரை எதிர்க்காமல் தன் காதலனுடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும் இல்லையா?

    அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   நடுவில் ஒரு பகுதி இருந்து நீக்கப்பட்டது என்று சொன்ன உத்தியை ரசித்ததற்கு நன்றி.

      இப்போதும் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் விலகி வந்துவிட்டோம்.  நம் நினைவில் பழைய எழுத்தாளர்கள்தான் இருக்கிறார்கள்.  புதிய எழுத்தாளர்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை!

      புலிக்கதையில் உங்கள் கற்பனை ரசிக்கத்தக்கதாய் இருந்தது.

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  38. சுஜாதாவை விட 'பெண்ணா, புலியா'க்குத் தான் அதிக பின்னூட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சஸ்பென்ஸ் நூறாண்டுகளைக்கடந்தும் இன்னும் இருக்கிறது என்று சுஜாதா சொல்லி இருப்பது நிஜம் என்று தெரிகிறது ஜீவி ஸார்...!

      நீக்கு
  39. தலைப்பை அப்படிப் போட்டிருக்கக் கூடாது.. உறவில் விரிசலையும் சுஜாதாவின் மறைவு தினத்தையும் சம்பந்தப்படுத்துகிற மாதிரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...   கொஞ்சம் யோசித்திருக்கலாம்.இப்போதெல்லாம் நேரம் அரிதாகி விட்டபடியால் யோசனை குறைந்து விட்டது.  புதுப்பித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  40. சுஜாதா பற்றிய குறிப்புகளைப் படித்ததும் 'அவ்வளவு தானா சுஜாதா?' என்று தோன்றியது.

    ஒருவர் என்றைக்குப் பிறந்தார், என்றைக்கு இறந்தார், மனைவி, மக்கள் -- அவ்வளவு தானா? அதுவும் சுஜாதா என்ற பேராண்மைக்கு?..

    அவர் பற்றி உங்கள் வரிகளில் உங்களுக்குத் தோன்றியதை எழுதியிருக்க்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லி இருபிப்பது சரி.  வியாழன் கதம்பதில் அது வாகாக அவர் நினைவு நாளில் வந்தது குறித்து கடைசி நிமிடத்தில் நினைவுக்கு வந்து சேர்க்கப்பட்ட பகுதி அது. இல்லாவிட்டால் முழு பதிவும் சுஜாதா பற்றியே எழுதி இருந்திருப்பேன்.

      நீக்கு
  41. லஸ்ஸிலிருந்து ராயபேட்டை ஹைரோடு ஆரம்பம் கொள்வதாயிருந்தாலும், பாலாவின் வசித்தது மைலாப்பூரில் அல்லவா?..

    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டால், அவிழ்க்க முடியாது தான். மாயச்சுழல் வேறையா?.. பாய்க்கும் வாய்க்கும் என்று எதுகை மயக்கத்தில் அமிழ வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்ப காலங்களில் அவர் அங்கு இருந்திருக்கலாம்.  சுஜாதாவை ரேக்கி விட்ட அந்த பாலாவின் அல்லது ராயப்பேட்டை பாலுவின் கவிதை என்ன என்று தேடவேண்டும்.


      ரா பாவின் அந்தக் கவிதை தரத்தை, வார்த்தைகளைத்தான்  சு கிண்டலடித்திருக்கிறார் - இதுமாதிரி வார்த்தைகளைப் போட்டு!  இங்கேயே பானு காவின் பிற்சேர்க்கைக் கமெண்ட்டைப் படித்திருப்பீர்கள்.

      நீக்கு
  42. ஸ்ரீராம், தமிழ் நாட்டில் எழுத்தாளன் என்பவன் பத்திரிகைகளுக்கு மட்டுமே எழுதிக் கொண்டிருந்தால் யாரும் சீந்துவதில்லை. அவனே சினிமாவுக்கு எழுதப் போய்விட்டால் அந்த ஃபீல்டில் அவர்களைப் பிரபலப்படுத்த இந்த மாதிரி என்னன்னவோ நடக்கின்றன - இரு சாராரும் பேசி வைத்துக் கொண்டு செய்கிற காரியங்க்ளும் இதில் அடக்கம். விட்டுத் தள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  43. உறவில் பெரும்பாலான விரிசல்கள் அற்பக் காரணங்களால் ஏற்படுவதே. ஆனால் பலநாள் மன அழுத்தத்தை வெளிப்படுத்தக் காத்திருந்து அப்படியான காரணங்களையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

    எழுத்தாளர் சுஜாதாவின் நினைவலைகளாகப் பகிர்ந்தவை நன்று.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  44. நல்ல தொகுப்பு.

    நண்பர்களை பிரிக்கக் கூடாது - பாவம்! நல்ல நகைச்சுவை.

    சுஜாதா - என்றும் எப்போதும் ரசிக்கக் கூடிய எழுத்து.

    நட்பில் விரிசல் - பலர் இப்படித்தான் சிறு விஷயத்திற்கும் சண்டை, மனஸ்தாபம் - பிறகேது நட்பு.

    தொடரட்டும் சிறப்பான பதிவுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!