சனி, 21 மார்ச், 2020

என் மூலம் கொரோனாவை பரப்ப விருப்பமில்லை - தும்கூர் இளைஞர்


1)  ஊராட்சி தலைவராக இருந்த, 20 ஆண்டு களிலும், பட்ஜெட்டில் பற்றாக்குறை வந்ததே இல்லை; உபரி பட்ஜெட் தான் போட்டேன்.
இதனால், தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் எங்கள் கிராமத்திற்கு பெருமை கிடைத்தது. வெளிநாட்டினரும் எங்களின் ஓடந்துறை ஊராட்சியை பற்றி அறிந்து வியந்தனர்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சண்முகம்.



2)  இப்படியும் ஒரு இந்திய இளைஞர்...   சீனாவில், 'கொரோனா' வைரஸ் பரவியதை அடுத்து, பல்கலைக்கழகத்தில் படிக்கும், 1,000க்கும் மேற்பட்டோர், சொந்த நாட்டிற்கு சென்று விட்டனர். சில மாணவர்கள், ஊழியர்கள் மட்டுமே, பல்கலைக்கழகத்தில் தங்கி உள்ளனர். இதில், தும்கூரை சேர்ந்த சாஹில் ஹுசேனும் ஒருவர். இவரது தந்தை, போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 

அதற்கு மகன், 'தற்போது நலமாக உள்ளேன். எனக்கு எந்த நோய் பாதிப்பும் இல்லை. சீனாவிலிருந்து கர்நாடகாவுக்கு நேரடியாக விமான சேவை இல்லை. மூன்று விமானம் மாற வேண்டும். 'இந்தியா வரும் போது வழியில், 'கொரோனா' வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. நான் அங்கு வந்தால், என் மூலம் கொரோனாவை பரப்ப விருப்பமில்லை,' என கூறி வர மறுத்து விட்டாராம்.



3)  'காயின் மொபைல் பூத்' மாதிரி, 'காயின் மொபைல் சார்ஜர்' கான்செப்டை கண்டுபிடித்துள்ளார் திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாப்பன்பாளையம்அரசு நடுநிலைப்பள்ளி மாணவி தர்ஷனா. எட்டாம் வகுப்பு படிக்கும் இவர், காயின் போட்டதும் சார்ஜ் ஏறும் மொபைல் சார்ஜர் சிஸ்டத்தை ஆய்வில் வடிவமைத்துள்ளார்.



4)  அனுபவமே சிறந்த ஆசான் என்பதை மகேஷ் கர்மாலி நிரூபித்து விட்டார். ஆரம்ப பள்ளி படிப்பை கூட தாண்டாத மகேஷ் கர்மாலியின் கண்டுபிடிப்பு தற்போது நாடு முழுக்க அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.....


5)  வியாபாரத்துக்கு வியாபாரமும் ஆச்சு, சேவைக்கு சேவையும் ஆச்சு...   முக கவஸ்துக்கு மக்கள் அதிக விலை கொடுத்ததெல்லாம் வாங்க அலையும் நிலையில் இவரின் இந்த சேவை பாராட்டத் தகுந்ததுதான்.





================================================================================================



கொரோனா வைரஸ்
ரமா ஸ்ரீநிவாசன் 

கோவிட்-19 என்பது ஒரு புதிய நோயாக உருவெடுத்து நம் யாவரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கின்றது. இது நம் நுரையீரலையும் காற்று பாதைகளையும் பாதிக்கும் வீரியம் உள்ளது. இந்த நோயின் வேர் கொரோனா வைரஸ் என்னும் ஒரு கொடிய வைரஸ்.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் :

1. ஒரு உயர்ந்த உடல் வெப்ப நிலை (சூடு)

2. புதிய தொடர் இருமல் – அதாவது, மறுபடியும் மறுபடியும் விடாது இருமல்

இந்த அறிகுறிகள் இருந்தால் 7 நாட்கள் வீட்டிலேயே தனித்து இருங்கள்.

கொரோனா வைரஸ் எப்படி பரவுகின்றது :

இது ஒரு புதிய நோயாக இருப்பதால், எப்படி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றுகின்றது என்பதை இன்னும் முற்றிலுமாக கண்டு பிடிக்க முடியவில்லை. இதைப் போன்ற மற்ற வைரஸ்கள் இருமல் நீர்த்துளிகள் மூலம் பரவுகின்றன. சாப்பாடு பொட்டலங்கள் வழியாக பரவுவது அவ்வளவு சாத்தியமில்லை.

இந்த வைரஸை நாம் எப்படி தவிர்ப்பது :

செய்ய வேண்டியவை :

1. ஒருமணி நேரத்துக்கு  ஒரு முறை, கைகளை நன்றாக சோப் போட்டு இருபது வினாடிகள் கைகளில் சோப்பு நுரை இருக்கும் வகையில் சுத்தம் செய்யவும்.

2. அலுவலகத்தை அடைந்த பின்னும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பின்னும் மறவாமல் கையை சுத்தம் செய்யுங்கள்.

3. சோப்பும் தண்ணீரும் இல்லாவிட்டால், சுத்திகரிப்பு ஜெல் உபயோகியுங்கள்.

4. இருமும்போதோ தும்பும்போதோ உங்கள் வாயையும் மூக்கையும் டிஷ்யு காகிதம் அல்லது உங்கள் ஸ்லீவை கொண்டு மூடிக் கொள்ளுங்கள். உங்கள் கைகளை உபயோகிக்காதீர்கள்.

5. உபயோகைத்த டிஷ்யு காகிதத்தை உடனே குப்பையில் போட்டு விட்டு கைகளை நன்றாக சுத்தம் செய்து விடுங்கள்.

6. உடல் நலமின்றி இருப்பவரிடம் மிகவும் நெருங்கி பழகுவதை தவிருங்கள்.

செய்யக் கூடாதவை :

அவசியமாக கண்களையோ, மூக்கையோ, வாயையோ உங்கள் கைகள்
சுத்தமில்லாத போது தொடாதீர்கள்.

கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை :

1. இன்றைய சூழலில் இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் கண்டு பிடிக்கப் படவில்லை.

2. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வைரஸுக்கு எதிராக வேலை செய்யா.

3. சிகிச்சை நம் உடலை வலுவாக்கி இந்நோயை போராடும் தெம்பை அதிகரிக்க உதவும்.

4. இந்நோய் இருந்தால், உடல் நலமடையும் வரை நீங்கள் மற்றவரிடமிருந்து தனித்திருங்கள்.

இவை யாவற்றிக்கும் பின்னர், பல கேள்விகள் நம் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

என்னால் முடிந்தவரை கேட்கப் படும் பல கேள்விகளையும் அதன் பதில்களையும் இங்கு தொகுத்தளித்திருக்கின்றேன்.

வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைஷேஷன் வழிகாட்டுதல்கள் படி நம் கைகளை அடிக்கடி ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசரால் சுத்தப் படுத்துவது அல்லது சோப்பையூம் தண்ணீரையும் சேர்த்து கைகளை சுத்தம் செய்வது கொரோனா வைரஸ் தாக்கத்தை வெகுவாக கட்டுப் படுத்தும் என்பதாகும்.

1. சோப்பால் சுத்தம் செய்வதால் எவ்வாறு வைரஸ் அழிக்கப் படுகின்றது?  நம் கைகளில் உள்ள அழுக்கில் கணக்கிலடங்கா வைரஸ்களும் பாக்டீரியாக்களும் அடங்கியுள்ளன. தண்ணீரால் மட்டும் கழுவினால், சில மட்டுமே அழிக்கப் படும். தண்ணீரும் சோப்பும் சேர்ந்து வேலை செய்யும்போது வேண்டாத பல நுண்ணுயிர்கள் அழிக்கப் படுகின்றன.

கொரோனா போன்ற வைரஸ்களை கட்டிக் காக்கும் கெமிகல் கலவையானது அதிக சக்தியற்றது. நாம் தண்ணீரும் சோப்பும் சேர்த்து கைகளை கழுவும்போது, அதன் வீரியத்தால், வைரஸ்ஸின் கட்டமைப்பையே தகர்த்து விடுகின்றது. இதன் பின்னர், நீரானது வைரஸ்ஸையே கரைத்து விடுகின்றது.

2. எல்லா வைரஸ்களுக்கும் லிபிட் லேயர் என்பது உண்டா?  சில வைரஸ்கள் “நான் என்வெலப்ட் வைரஸ்கள்” என்ற குழுவில் அமைக்கப் பட்டுள்ளன. கடுமையான சீத பேதியை உருவாக்கும் “ரோடா வைரஸ்” என்பது இந்த குழுவில் இருக்கின்றது.

நம் கைகளில் உள்ள அழுக்கும் ஒட்டிக் கொண்டிருக்கும் வைரஸ்களும் தண்ணீரும் சோப்பும் சேர்ந்து கழுவும்போது தானாக கரைந்து விடும்.

3. ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசரால் சுத்தப் படுத்துவது எவ்வாறு கொரோனா வைரஸ்களை அழிக்கின்றது?

சோப்பை போலவே, ஆல்கஹாலும் வைரஸ்ஸின் லிபிட் என்வெலப்பை கரைத்து அவ்வைரஸ்ஸை செயலிழக்க வைக்கின்றது.

ஆனால், மிக முக்கியமாக, சானிடைசர்களில் அவசியம் 60% ஆல்கஹால்
உள்ளடங்கி இருக்க வேண்டும்.

4. கோவிட் – 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காதவர்கள் மாஸ்க்குகள் அணிவது தேவையா ?

மருத்துவ மாஸ்க்குகள் கொரோனா போன்ற வைரஸ்கள் பரவுவதை தடுக்க மிகவும் உதவியாக இருக்கும். வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைஷேஷன் பரிந்துரைப் படி, மருத்துவ மாஸ்க்குகள் சரியாக அணியப் பட்டால், கொரோனா போன்ற வைரஸ்களை செவ்வனே தடுக்கப் படலாம் என்று தெரிய வருகின்றது.

இந்த கொரோனா வைரஸ் இருமலாலும் தும்மலாலும் பரவுவதால், மருத்துவ மாஸ்க் அணிந்திருப்பவர்களிடம் கண்டிப்பாக பரவுவதை தடுக்க முடியும் என்று கூறப் படுகின்றது.

மேலும், ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதின் அறிகுறிகள் தெரிவதற்கு முன்னமே அவரிடமிருந்து மற்றவருக்கு பரவி விடுவதால், மாஸ்க்குகள் அணிவது நல்லது.

நம் நாட்டில் ஒருவருக்கும் மற்றவருக்குமிடையே ஒரு மீட்டர் இடைவெளியை கடை பிடிப்பது கடினமானதால், மருத்துவ மாஸ்க் அணிவது ஒன்றே நல்லாரோக்கியத்திற்கு வழியாகும்.

5. மாஸ்க்குகள் அணியும்போது வேறு என்ன முன்னிச்செரிக்கைகள் கடைப் பிடிக்கப் பட வேண்டும் ?

மாஸ்க் மட்டும் அல்லாமல், அடிக்கடி கைகளை சோப் மற்றும் தண்ணீர் போட்டு கழுவுவது ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் என்று வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைஷேஷன் வலியுறுத்தியுள்ளது. அடிக்கடி முகத்தை தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.

மாஸ்க்கை தவறாக அணிந்தாலும் உதவாது. ஒருவருடைய மாஸ்க் ஈரமாகி விட்டாலோ, அழுக்காகி விட்டாலோ, உடனே ஜாக்கிரதையாக குப்பைக் கூடையில் அதை அவர் சேர்க்க வேண்டும். 
ஒரு மாஸ்க்கானது தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் உபயோகப் படுத்தப் படக்கூடாது.

இந்நேரத்தில், ஒரு மிக நேர்த்தியான ஒரு வீடியோ எனக்கு Whatsapp வழியாக வந்தது. மிகவும் பொருள் படைத்ததும் மிகவும் நமக்கு உதவியாகவும் இருக்குமென்று நான் நினைத்தேன். அதையும் இங்கு பகிர்கின்றேன். யாவரும் கேட்டு பயனடைவீர்களாக.




முடிவாக, கொரோனா வைரஸ் என்பது ஒரு சாதாரண சளிக்கான வைரஸ் என்றுதான் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. ஆயின், அது
அசாதரணமாக மனித உயிர்களை குடிக்கும் உயிர் கொல்லியாக இருப்பதால், யாவரும் பீதியில் இருக்கின்றோம். எது எப்படி இருந்தாலும், நம்மை விட மோசமான நிலையிலும், தாழ்ந்த நிலையிலும் இருப்பவர்களுக்கு இந்த மாஸ்க்குகளும் சானிடைசர்களும் கிடைக்காமல் போகும்படி எவரும் வாங்கி பதுக்காதீர்கள். மேலும் மருத்துவமனைகளில் வேலை செய்யும் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் உயிர்களை பணயம் வைத்து நம் உயிரை காப்பாற்ற பாடு படுகின்றார்கள். அவர்களுக்கு வேண்டிய மாஸ்க்குகளையும் சானிடைசர்களையும் நாம் பதுக்கினால், அவர்கள் எங்கே போவார்கள் என்று யோசித்து செயல் படுவோம்.

நண்பர்களே, “இதுவும் கடந்து போகும்”. அது துரிதமாகவும் அதிக சேதமில்லாமலும் கடந்து போக நாம் பொறுப்புள்ள தமிழ் நாட்டு பிரஜைகளாக செயல்படுவோமாக.

77 கருத்துகள்:

  1. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...   வாங்க...   நேற்றைய உங்கள் திருமண நாளுக்கு வாழ்த்துகள்.  நேற்று இணையத்துக்கு வரமுடியாமல் போனது. அப்புறம் வீட்டுக்குப் பேசி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  

      நீக்கு
    2. இல்லை... பேசவில்லை...
      இன்றைக்குத் தான் மறுபடியும் பேசணும்...

      நீக்கு
    3. அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி ஸ்ரீராம்...

      நீக்கு
    4. வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டுகள்.

      நீக்கு
    5. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. இன்றைய முத்திரைச் செய்திகள் அனைத்தும் அருமை...

    கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை ஆங்காங்கே வாசித்திருந்தாலும் ஒற்றைத் தொகுப்பில் தந்திருப்பது அபாரம்...

    ஆக்கபூர்வமான பதிவு...

    பதிலளிநீக்கு
  4. இருபது நிமிடத்துக்கு ஒரு முறை என்று எழுதுவதற்குப் பதில் இருபது நொடிகளுக்கு ஒரு முறை கையைக் கழுவணும் என்று சொல்லி எல்லோரையும் குழாய் பக்கத்திலேயே நிற்கச் சொல்வது நியாயமாரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்த வகையில் அதை சரியாக மாற்றியுள்ளேன். சரிதானா என்று உரியவர்கள் confirm செய்யவும்.

      நீக்கு
    2. நல்ல முறையில் மாற்றி இருக்கிறீர்கள் கேஜிஜி.

      நீக்கு
    3. இருபது நொடி...

      நானும் அப்போதே கவனித்தேன்...
      சொல்ல மறந்து விட்டேன்...

      அதனால் பிழையில்லை..
      நமக்கு ஓரளவுக்குப் புரியும் தானே!...

      நீக்கு
    4. துரை சார் (மற்றும் பலருக்கு).... கிடைத்த வாய்ப்பை விட்டுவிடாமல் கலாய்த்தேன். சும்மா சிரிப்பதற்குத்தானே.

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்ல செய்திகள் படித்தேன். ரமாவுக்கு அனபு வாழ்ததுகள். குளிர் அதிகம் காலை வருகிறேன் கடவுள கிருபையில்.

    பதிலளிநீக்கு
  6. சாஹில் ஹுசேன் விந்தை மனிதரே...

    கொரானோ பற்றிய விளக்கம் அருமை மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி அவர்களே, நமக்கு தெரிந்ததை பகிர்ந்து மற்றவரும் நலமாக இருக்க உதவுவோமாக.

      நீக்கு
  7. கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தகவல்களும், BBC News காணொளியும் அருமை...

    பதிலளிநீக்கு
  8. சிறந்த பதிவுக்கு பாராட்டுகள்....

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது என் மூலம் கொரோனாவை பரப்ப விருப்பமில்லை – தும்கூர் இளைஞர் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சிபா...     நாங்களும் எழுத முஅயற்சிக்கிறோம்.  ஆனால் உங்கள் தளம் மூலமாக புதிய தளங்களுக்கு அவ்வப்போது சென்று கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    2. //நன்றி சிபா... நாங்களும் எழுத // - ஸ்ரீராம்... இதனைப் படித்ததும் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்துவிட்டது. நாங்க சின்னவங்களாக இருந்தபோது (தம்பி ரெண்டாப்பு, நான் ஐந்தாப்பு....) எங்க அப்பா எங்களிடம், யாராவது வந்து பேசிக்கொண்டிருந்தால், அப்போது, 'எனக்குப் பசிக்குது' என்று சத்தம் போட்டுச் சொல்லக்கூடாது. அப்பா புரிந்துகொள்வது போல மறைமுகமாச் சொல்லணும் என்று சொல்லியிருந்தார். ஒரு நாள் நாங்க எல்லாரும் வெளியில் இருந்தபோது, எங்க அப்பா வந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார், நாங்கள் அவரைச் சுற்றி இருந்தோம். என் தம்பி அப்பாவிடம், 'அப்பா சிபா' என்றான். மீண்டும் 'அப்பா சிபா' என்றான். இதையே தொடர்ந்து இடைவெளி விட்டுச் சொல்லிக்கொண்டிருந்தான். எங்க அப்பா பிறகு அவனிடம், என்னடா புரியும்படிச் சொல்லுடா.. என்ன சொல்ல வர்ற என்றார். அவன் சொன்னான், நீங்கதானே பசிச்சா நேரடியாச் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க. அதுனால சிப (பசி என்பதை) என்று மாத்திச் சொன்னேன் என்றான். நாங்க எல்லாரும் சிரித்து மாளலை.

      நீக்கு
    3. ஹா....  ஹா...   ஹா...

      DD யை நான்தான் முதலில் DD என்று அழைத்தேன் என்று நினைக்கிறேன்.   அதுபோல இவரை சுருக்கமாக சிபா என்று அழைக்கிறேன்!

      நீக்கு
  9. தும்கூர் சாஹில் ஹுசேன் பாராட்டுக்குரிய இந்தியர். இத்தாலி, ஈரான், இங்கிலாந்து, மலேஷியா என்று வைரஸை ஆங்காங்கே மலிவாக சம்பாதித்துக்கொண்டு, வேகவேகமாக இந்தியா திரும்பி ஆனந்தமாக இங்கு உலவி, விஷத்தைப் பரப்பிவிட்டு, இந்திய அரசாங்கத்தை, இந்திய விழுமியங்களைக் குறைகூறும் ’வெளிநாடுவாழ் இந்தியர்’களுக்கிடையில், சாஹில் ஹுசேன் அபாரம். மதிக்கப்படவேண்டியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாக இருக்க மாட்டேன் என்று தப்பி ஓடுகிறார்கள் மறத்தமிழர்.  அதுவும் மதுரை மறத்தமிழர்கள்!  இதுபற்றி கிருஷ் ஸார் கூட பதிவிட்டிருக்கிறார்.

      நீக்கு
  10. பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சண்முகம் பற்றிய செய்தியை படித்திருக்கிறேன். சாஹில் ஹுசைனைப் போல பொறுப்போடு எல்லோரும் நடந்து கொண்டால் நல்லது. தர்ஷனாவின் திறமை வியக்க வைக்கிறது.படிப்பறிவு இல்லாவிட்டாலும், பட்டறிவின் மூலம் டிராக்டர் வடிவமைத்திருக்கும் மகேஷ் கர்மாலி படிப்பு வேறு, அறிவு வேறு என்று நிரூபித்திருக்கிறார். இலவச மாஸ்க் வழங்கும் ஆட்டோ டிரைவரின் சேவை போற்றுதலுக்கு உரியது. மொத்தத்தில் எல்லா செய்திகளும் அருமை. ரமா ஸ்ரீனிவாசனும் தன் பங்கிற்கு கொரோனா பற்றி நல்ல தகவல்களை அளித்துள்ளார். 

    பதிலளிநீக்கு
  11. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  12. தலைவர் சண்முகம், சாஹில் ஹுசைன் மற்றும் ஆட்டோ ட்ரைவரின் தன்னலமில்லா சேவை அனைத்தும் தல் வணங்க வேண்டியவை. இவர்கள் இன்னும் நல்லவர்கள் இவ்வுலகில் வாழ்கிரார்கள் என்பதை நிரூபிக்கின்றார்கள்.
    ரா

    பதிலளிநீக்கு
  13. துரை செல்வராஜ் சார், இனிய நேற்றைய திருமண நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் பாசத்துடனும் நேசத்துடனும், அன்புடனும் பண்புடனும் நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  14. காயின் மொபைல் சார்ஜர் - உபயோகமில்லாத கண்டுபிடிப்பு. ஊராட்சி ஒன்றியத் தலைவர் பாராட்டப்பட வேண்டியவர். மாஸ்க் இலவசம் - என்ன மாதிரியான மாஸ்க் என்பதைப் பொறுத்துதான் இவரைப் பாராட்டுவதா அல்லது இவர் ஆட்டோ பக்கமே போகாமலிருப்பதா என முடிவு செய்ய முடியும்.

    ரமா ஸ்ரீநிவாசன் - கொரோனா பற்றி முழுத் தொகுப்பாகத் தந்திருக்கிறார். உபயோகமான தகவல்.

    எனக்கு சந்தேகம் என்னவென்றால், இப்போ இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த வேண்டியதா இல்லை வேலையற்ற வெட்டிப் பயலுகள் கொரோனாவை வைத்து அனுப்பும் ஏகப்பட்ட வாட்சப் மெசேஜுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டியவையா என்பதுதான். அதிலும் 'இந்த நேரத்தில் நாம் எல்லோரும் இந்த சுலோகம் சொல்லுவோம், அனைவருக்கும் ஃபார்வர்ட் செய்யுங்கள்' என்றெல்லாம் உளரும் மனிதர்கள் என்னைப் பொறுத்தவரையில் நிர்பயா கொலையாளிகளைவிட மோசமானவர்களாகப் பார்க்கிறேன். இதனை புதன் கேள்வியாகவும் கேஜிஜி சார் எடுத்துக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காயின் மொபைல் சார்ஜர் - உபயோகமில்லாத கண்டுபிடிப்பு.//

      நெல்லை!  சும்மா ஸ்கூலுக்கு சென்று வந்தேன், மனப்பாடம் செய்து பாடம் படித்து பாஸ் செய்தேன் என்றில்லாமல் வித்தியாசமாய் சிந்தித்திருக்கும் அந்த மாணவியின் சிந்தனைதான் பாசிட்டிவ்.  மொபைல் சார்ஜர் அல்ல!

      நீக்கு
    2. உண்மைதான். அந்தச் சிந்தனை அவருக்கு மேலும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்த உத்வேகம் கொடுக்கும்.

      போன் வந்த புதிதில், வெளியூர் பஸ் ஸ்டான்ட் காபக் கடைகளில் போன் சார்ஜ் பண்ணித்தர பத்து ரூபாய் வசூலித்தார்கள் (நான் கீழ் திருப்பதி பஸ் ஸ்டாண்டில் அப்படி சார்ஜ் செய்திருக்கிறேன்). அப்புறம் ஏர்கோர்ட் எல்லாம் இலவச சார்ஜர்கள் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

      அந்தப் பெண் இதே கான்சப்ட் உபயோகித்து, 10 ரூபாய் பே பண்ணினால் 4 லிட்டர் வெந்நீர் கிடைக்கும்படி (குளிக்க) இலவச குளியலறைகள் இருக்கும் திருப்பதி போன்ற இடங்களில் உபயோகத்தில் வருமாறு செய்வது இருதரப்புக்கும் பயனளிக்கும்.

      நீக்கு
    3. // இதனை புதன் கேள்வியாகவும் கேஜிஜி சார் எடுத்துக்கொள்ளலாம்.// திரும்பத் திரும்பப் படிச்சுப்பார்த்தேன் ...... கேள்வி எங்கே இருக்கு என்று தெரியவில்லை.

      நீக்கு
    4. கேள்வி எங்கேயிருக்கிறது என்பதுதான் கேள்வியோ, என்னவோ..

      நீக்கு
  15. துரை செல்வராஜு சார் - வாழ்த்துகள். இன்னும் நிறைய திருமண நாட்களை நீங்கள் இருவரும் கொண்டாடவேண்டும். அதைவிட, அன்று, கோவில்களுக்கு இருவரும் சேர்ந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா இருந்தால் என்ன நகை சுவையிலேயே விரட்டி விடுவோமே முக கவசமிங்கு கிடைப்பதில்லை வெளியில்போவதை தவிர்த்துவிட்டேன் அதுதான் இஷ்டப்படி போக முடியாதே

      நீக்கு
    2. அன்பின் நெல்லை அவர்களுக்கு...

      நான் கோயிலுக்குச் செல்ல இயலாவிட்டாலும் என்ன்மனைவியும் மகனும் ஆலய தரிசனம் செய்து வந்திருக்கின்றனர்..

      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. பத்திரமாக இருங்கள் ஜி எம் பி ஸார்.

      நீக்கு
    4. ஸ்கைப்பில், வாட்ஸாப் வீடியோவில் வீட்டுடன் பேசி இருப்பீர்கள் என்று நம்புகிறேன் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    5. ஆமாம்... வாட்ஸாப்பில் பேசினேன்..
      அப்போதுதான் ஆலய தரிசனம் பற்றிச் சொன்னார்கள்..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  16. அனைத்து செய்திகளும் மிக மிகப் பயனுள்ளவை. அதுவும் டிராக்டர் செய்தவர் மிகவும்
    போற்றப்பட வேண்டியவர்.
    வைரஸ் முகமூடியைக் கொடுத்துடவும் ஆட்டோ ட்ரைவர்
    அவர்களுக்கு வாழ்த்துகள். இந்த உதவும் மனப்பான்மை நம்மிடம் நீடிக்கட்டும்.
    இங்கே எல்லாமே அரிதாகி வரும் நிலையில், இந்தியாவில் இன்னும் விழிப்புணர்வு
    வளர்ந்தால் நலமே.
    கொரோனாவைப் பரப்பாமல், தனித்திருக்கும் கடமையைச் செய்யும் இளைஞருக்கு வந்தனங்கள்.

    இங்கு யாரும் வீதியில் நடக்கக் கூடத்தடை.
    மருந்துக்கடை, க்ரோசரைய்ஸ் போக மட்டும்
    சலுகை.

    ஒரு நாள் பந்திற்கே ஆட்சேபம் தெரிவிப்பதாகப் படித்தேன்.
    எதைத்தான் அரசியல் ஆக்குவதோ தெரியவில்லை.

    அழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கும் ரமாஸ்ரீனிவாசனுக்கு
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு வீட்டில் இருங்கள் என்று சொல்வதை நிறைய மக்கள் பெரிதாகவே நினைக்கவில்லை.  அடுத்த கட்டமாக கைது என்று வந்தால்தான் மதிப்பார்கள் போல...   இதுபோன்ற மனிதர்களால் சமூகத்துக்கும் ஆபத்து..  தான் பாதிப்படைவதில்லாமல் யார் யாருக்கு பரப்புவார்களோ...

      நீக்கு
    2. ஸ்ரீராம் ரொம்ப சரி..நம்ம மக்களைமிரட்டினால்தான் வழிக்கு வருவார்கள் மயிலே மயிலே இறகு போடு என்றால் கேக்க மாட்டாங்க. டிக்ட்டேட்டர்ஷிப் மிக மிக அவசியம் இந்த நேரத்திலேனும் என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல...இந்தியாவில் பல பகுதிகளிலும்.

      கனிகா விஷயம், மேரிகோம் விஷயம் தெரிந்திருக்குமே. மோசமான உதாரணங்கள் இல்லையா? என் மனதிற்கு அப்படித்தான் படுகிறது. நம் குடியரசுத் தலைவரும் ஏன் பார்ட்டி வைத்தார் இச்சமயத்தில்? இப்போது அவருக்குமே டெஸ்ட் செய்யும் அவசியம் ஏற்பட்டுள்ளது இரு நிகழ்வுகளிலும் பல அரசியல் புள்ளிகள் மேலதட்டு மக்கள் படித்தவர்கள் என்று கலந்து கொண்டிருக்கிறார்கள். கனிகா கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேரிகோம் வெளிநாட்டிலிருந்து வந்து 14 நாள் க்வாரண்டைனை உடைத்தவர்..ப்ரெசிடென்ட் அந்தப் பார்ட்டியை கொடுத்ததாகச் செய்தி. அவரே இப்படிச் செய்யலாமா இந்த நேரத்தில்?.கனிகா நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மேரிகோம் விருந்திலும் கலந்து கொண்டதில் இப்போது காண்டாக்ட் ஆகியிருக்கலாம் என்பதால் இது தவறான உதாரணங்கள் தானே? அதில் கலந்து கொண்ட பணியாளர்கள்? இப்போது கலந்து கொண்ட பெரிய புள்ளிகள் 14 நாள் க்வாரண்டைனில். இவர்களே இப்படி என்றால் சாதாரண மக்கள்? இவர்களுக்கு எல்லாம் தண்டனை கிடையாதா? ஆக்ராவில் மருத்துவமனையிலிருந்து தப்பிய பெண் மற்றும் பொய் சொன்ன அவள் தந்தைக்கு தண்டனை அவர்கள் உடல்னிலை சரியானதும் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதாகச் செய்தி.

      ஏகாந்தன் அண்ணா இது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...

      கீதா



      நீக்கு
    3. சொல்கிறேன்!

      மேரி கோம் ஒலிம்பிக் தேர்வு போட்டிகளை முடித்துக்கொண்டு ஜோர்டானிலிருந்து இந்தியா வந்திருக்கிறார் மார்ச் 13. 13-லிருந்து க்வாரண்டைனில் இருக்கிறார் மற்றவர்களோடு சேர்ந்து. மார்ச் 18 காலை ஜனாதிபதியுடன் சந்திப்பு, காலை உணவு. இங்கே கவனிக்கவேண்டியது ஒன்று. மேரி கோம் தானாக, நான் மார்ச் 18 காலை உணவை ஜனாதிபதியோடு சேர்ந்துதான் சாப்பிடுவேன் என்று ராஷ்ட்ரபதி பவனுக்குள் ஓடிவரவில்லை. அழைப்பில்லாமல், அழைப்பு அப்ரூவ் ஆகாமல் அவரால் போயிருக்கமுடியாது. க்வாரண்டைனில் இருப்பதை கவனிக்காமல் ஜனாதிபதி அலுவலக செக்ரடரி அனுப்பியிருக்கவேண்டும் அழைப்பை. ’ராஷ்ட்ரபதி பவனிலிருந்து அழைப்பா! போய்ட்டு வாம்மா!’ என்று ஆசீர்வதித்து அனுப்பியிருக்கிறது இந்திய பாக்ஸிங் அசோஸியேஷன். இந்த இரண்டு பக்கத்து காரியங்களினால் அவர் போகும்படி, கலந்துகொள்ளும்படி நேரிட்டது. அவரால் மறுக்கமுடியாது. இங்கே, மேரியின் மண்டையை உருட்டுவது தவறு!

      கனிகா கபூர் லண்டனில் இருந்து வந்ததிலிருந்து என்னென்னவோ கதை சொல்லிவருகிறார். ஏர்ப்போர்ட் சோதனையைத் தவிர்க்க தான் பாத்ரூமில் ஒளியவில்லை என்பதும் அதில் ஒன்று. ஆனால் நோய் அவரை பீடித்ததோடு, மற்றவர்களுக்கும் அவர்மூலமாகப் பரவியது. அரசியல்வாதிகளோடு லக்னோவில் ஆட்டம் போட்டு, இடையிலே கொஞ்சம் பாடியும் இருக்கிறார். கொரோனா, சமயம்பார்த்து தன் பாட்டையும் அதில் சேர்த்துவிட்டது! உ.பி. போலீஸ் கனிகாவை ஐபிசி 188, 269, 270 என வகையாக வளைத்திருக்கிறது. இப்போது அவர் க்வாரண்டைனில். பாட்டெல்லாம் மறந்திருக்குமோ!

      நீக்கு
    4. அப்போது பாடிய பாட்டு
      இப்போது போதும் நிப்பாட்டு என்றானது!.

      நீக்கு
    5. நன்றி கீதா ரெங்கன்,  ஏகாந்தன் ஸார், துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  17. அத்தனை தகவல்களும் சிறப்பு. ஆட்டோ ஓட்டுனர் பற்றி என் பதிவிலும் இன்று எழுதி இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  18. அனைத்து பாஸிடிவ் செய்திகளும் சிறப்பு என்றாலும் ஆட்டோ டிரைவர் ராகவேந்திர பிரசாத் அவர்கள் உதவும் குணம் , விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது பாராட்டுக்கள்.
    சாஹில் ஹுசேன் சொன்னது சரி. அவரின் பெற்றோர்கள் தான் கவலை படுவார்கள் மகன் கஷ்டபடுவானோ என்று.

    பதிலளிநீக்கு
  19. ரமா ஸ்ரீநிவாசன் - கொரோனா பற்றி விழிப்புணர்வு தொகுப்பு கொடுத்து இருக்கிறார்.
    பயனுள்ள தகவலுக்கு அவருக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  20. ரமா கொடுத்த காணொளியும் பயனுள்ளது.
    மக்களுக்கு அச்சம் தருவது போலவும், பீதியை கிளப்புவது போலவும் செய்திகளை பரப்பாமல் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அவர்களே, இந்த் கட்டுரைக்கு பின் ஒரு கதை இருக்கின்றது. என் இரண்டாவது பெண் உடம்பு சரியில்லாமல் இருந்ததால், பூனாவிற்கு சென்று அவளை அழைத்து வர வேண்டியிருந்தது. அங்கு சென்ற பின்தான் அங்கு கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை கண்டு மிரண்டு போனேன். ஆனால், அங்கு மனிதர்கள் "protocols"ஐ மிக பய பக்தியுடன் பின் பற்றுகின்றார்கள். நாங்கள் பூனாவிலிருந்து கிளம்புப்போது ஒவ்வொருவரையும் 15 நிமிடங்கள் scan மற்ரும் பரிசோதனை செய்தார்கள். இதற்கு ஒருவரும் விதிவிலக்கில்லை. இங்கு சென்னை விமான நிலயத்திலோ ஒரு பரிசோதனையும் இல்லை. ஸ்ரீராம் கூறுவது போல் "ஜெயிலில் அடைப்பேன்" என்று மிரட்டினால்தான் வழிக்கு வருவார்கள் போலிருக்கின்றது. எல்லோரும் கோடை விடுமுறை போல வீதி உலா வந்து கொண்டிருக்கின்றார்கள். தனக்காவும் தெரியாது, சொன்னாலும் தெரியாது இந்த கூட்டத்திற்கு. இதில் பிரச்சனை என்னவென்றால், இவர்களால் மற்றவர்களும் அவதியுருவதுதான். ஆண்டவன்தான் நாம் யாவரையும் காக்க வேண்டும்.

      நீக்கு
    2. //இதில் பிரச்சனை என்னவென்றால், இவர்களால் மற்றவர்களும் அவதியுருவதுதான். ஆண்டவன்தான் நாம் யாவரையும் காக்க

      வேண்டும்.//

      உண்மை உண்மை.

      வீட்டில் இருந்து தெய்வத்தை வழிபடலாம். சுற்றுலா தலங்களை பார்வையிடலாம் இந்த காலகட்டத்தில்.

      நீக்கு
    3. சென்னை விமான நிலையத்தில் நேற்று நாங்கள் வந்து இறங்கியதும் சோதனைகளை முடித்துத் தான் திருச்சி செல்லும் வாயிலுக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு நாம் எங்கிருந்து வருகிறோம், எங்கே செல்கிறோம், பதினைந்து நாட்களில் எங்கெங்கு பயணம் செய்தோம் போன்ற விபரங்களையும் தருவதற்கான படிவம் ஒன்றையும் நம் விலாசம், தொலைபேசி எண், அலைபேசி எண்களோடு கொடுக்க வேண்டும். இரண்டு வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுச் சோதிக்கின்றனர்.

      நீக்கு
    4. ஆமாம், தமிழக அரசு நன்றாகவே கையாள்வதாகத்தான் பரவலான அபிப்ராயம்.

      நீக்கு
  21. //..தனக்காவும் தெரியாது, சொன்னாலும் தெரியாது இந்த கூட்டத்திற்கு.//

    தமிழ்நாட்டின் பிரச்னையை சுருங்கச் சொன்னதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  22. பத்திரமாக இருங்கள் ஜி எம் பி ஸார்.Iam moved by your caring words

    பதிலளிநீக்கு
  23. தும்கூர் சாஹில் ஹுசேன் சபாஷ்! இப்படி எல்லா வெளிநாட்டு இந்தியர்களும் கொஞ்சம் யோசித்து இருந்திருந்தால் (விசா முடிந்து அதற்கு மேல் அங்கு இருக்க விதிகள் அனுமதிக்காது என்று வருபவர்களைத் தவிர) இன்று இப்படிப் பரவியிருக்காது. நிறைய சொல்லல்லாம். இன்னும் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கலாம்..அந்த கேரளத்து மூன்று மாணவர்கள் வுஹானிலிருந்தே வரும் போதே கொரோனாவுடன் வந்தவுடனேயே....

    மற்ற எல்லா பசிட்டிவ் செய்திகளும் அருமை.

    ரமா அக்காவின் கட்டுரை மிக அருமை. தெளிவான கட்டுரை. (ரமா அக்கா நான் கீதா. இங்கு கோமதிக்கா பானுக்கா கீதாக்கா கமலாக்கா என்பது போல் உங்களையும் அக்கான்னே அழைக்கிறேன். ஓகேவா!!.)

    கீதா

    பதிலளிநீக்கு
  24. ஆட்டோ ஓட்டுநர் பற்றி வெங்கட்ஜி பதிவிலும் இப்பத்தான் பார்த்துவிட்டு வந்தேன் ஸ்ரீராம். சிறப்பான சேவை.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. முதல் செய்தியைத் தவிர்த்த மற்றவை புதியது. ஆட்டோ ஓட்டுநருக்கும் மற்றவர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  26. அமைச்சர் விஜயபாஸ்கர் ஓடி ஓடி கொரோனா தடுப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வதாக அனைவரும் சொல்கின்றனர். நாங்கள் பார்த்தவரை பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வுடனே இருக்கின்றனர். நேற்று நம்மவர் எதிரே உள்ள வங்கிக்குச் சென்றபோது கைகளைச் சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். இது அநேகமாக எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்கப் படுகின்றது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!