சனி, 28 மார்ச், 2020

பணம், புகழ், பெயர்... எதுவுமே நிரந்தரம் இல்லை.


1)  எத்தனையோ ஆண்டுகளாக தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். எனக்கு எந்த பாதிப்பும் வந்ததில்லை. பணம், புகழ், பெயர் என எதுவுமே நிரந்தரம் இல்லை.  

தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை, தன் வாழ்நாள் சேவையாக செய்து வரும் தோல் நோய் சிகிச்சை மருத்துவர், டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன்.   

அவரின் பேட்டியை இங்கே பார்க்கலாம்.



2)  கொரோனா சம்பந்தமாக சில பாஸிட்டிவ் செய்திகள்...  ஒரு மாத வாடகை வேண்டாம் என்று சொல்லும் வீட்டு உரிமையாளர்கள்30 பங்களாக்களை கொரோனா மருத்துவமனைக்காக தானம் செய்த தொழிலதிபர்...  கொரோனா சமூக பரவலைத் தடுக்க ஒரு செயலியை உருவாக்கிய இளைஞர்கள்...  









============================================================================================



மல்லை நீர்நிலைகளும் மக்களின் பங்கும்
ரமா ஸ்ரீநிவாசன் 


“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.” - திருவள்ளுவர்.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் என்பதே இக்குறளின் பொருளாகும்.

மாமல்லபுரம் நம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்திய நாட்டிலேயே மிக முக்கியமான காணக் கிடைக்காத சுற்றுலாத்தலமாகும். உலகின் எல்லா மூலை முடுக்குகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு படை எடுக்கின்றார்கள் என்றால் அது மிகை ஆகாது.

ஆயினும், இச் சுற்றுலா தலத்திற்கும் கண் பட்டது போல், நீர்ப் பற்றாக்குறை மணி ஒலித்து விட்டது. இதை அடுத்து அங்குள்ள மக்கள் நகராட்சி அலுவலகத்திற்கும், அரசு அலுவலகத்திற்கும் நடையாய் நடந்தும் மனு கொடுத்தும் ஒன்றும் நடப்பது போல் புலப்படவில்லை.

அப்பொழுதுதான், அங்குள்ள ஒரு 10-15 மனிதர்கள் சேர்ந்து “மல்லை வாட்டர் பாடீஸ் ப்ரொடெக்க்ஷன் அண்ட் ப்ரிசர்வேஷன் அசோசியேஷன்” என்ற குழுவை அமைத்து, அந்த கடலோர நகரத்தின் 11 ஏக்கர் நீளமுள்ள குடிநீர் நிலையான சோழிப்பொய்கையை புதுப்பிக்க முடிவெடுத்தனர்.

முடிவெடுத்தாகி விட்டது. காசுக்கெங்கே செல்வது ? சென்றார்கள்.

“திக்கற்றவருக்கு தெய்வமே துணை” என்பது பழமொழி. “பணம் வேண்டுபவருக்கு வங்கியே துணை” என்பது புதுமொழி. 

மாமல்லபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியை அணுகி, அங்குள்ள காசாளரிடம் தாங்கள் வந்ததின் நோக்கத்தை கூறினார்கள். சீதாலஷ்மி என்னும் அந்த காசாளர் அசந்து அதே நேரம் நிமிர்ந்து அமர்ந்தார். “அந்தக் குழுவின் ஆவணங்களை ஆராய்ந்தபோது, முறைப்படி நான் என்னால் முடிந்த உதவியை அக்குழுவுக்குச் செய்ய முடிவெடுத்தேன்” என்று கூறினார். தன்னால் அந்த திட்டத்திற்கு முடிந்த உழைப்பையும் தருவதாகக் கூறி தன் பங்கிற்கு ரூ.10,000/- நன்கொடையாக அளித்து அவ்வேலையை இனிதே ஆரம்பித்து வைத்தார். 

அவர் கூறுவதாவது “இந்த நீர்நிலையிலிருந்து நாங்கள் ஆண்டாண்டு காலமாக நீர் அருந்தி வருகிறோம். இப்போது நான் திரும்பி கொடுக்க வேண்டிய தருணம். 30 வருடங்களாக மாமல்லபுரத்திலேயே அலுவலராக இருந்ததால், இந்நீர்நிலை எப்படி சிறிது சிறிதாக மோசமடைந்தது என்பதை கண்ணால் கண்டவள் நான். இத்திட்டம் நம் வருங்கால சந்ததியினரின் நலனுக்காக ஆரம்பிக்கப் பட்டது. நாம் இதை ஆதரிப்பது மிக முக்கியமானது” என்றும் மறுசீரமைப்பிற்கு பின் பல நேர்மறை திருத்தங்களை கண்ட சீதாலஷ்மி “நீர்நிலை இப்பொழுது மிக சுத்தமாக இருக்கின்றது. இவ்வளவு உழைப்பின் முடிவில் நாங்கள் இந்நீர்நிலையில் நீரை கண்டுள்ளோம். நீர்நிலை ஆரோக்கியமாகவும் இருக்கின்றது” என்றும் கூறுகின்றார்.

சீதாலஷ்மியைப் போல் இன்னும் பல பேர் (மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர்கள்) முன் வந்து தங்கள் வசதிக்கேற்ப பங்களித்து இத்திட்டத்தின் ஆரம்ப வைப்பு நிதியான ரூ.23 லட்சத்தை சேர்த்திருக்கின்றார்கள் என்பதைக் கூறப் பெருமை படுகின்றேன்.

இம்முயற்சியின் முதல் கல்லை டி.கிருஷ்னராஜூ என்னும் ஹோட்டல் நிறுவனர் வீசினார். அவர்தான் முதல் முதலாக 2018இல் இந்நீர்நிலையின் மறுசீரமைப்பிற்கு ஆதரவு சேர்க்கத் தொடங்கினார். 2019 வருட ஆரம்ப காலத்திலேயே 20 உறுப்பினர் மற்றும் 3 நிர்வாகிகள் கொண்ட இந்த குழு தயாரானது. வி.கிட்டு, செயலாளர் எல்லோரையும் ஒன்றாக இணைக்கும் கருவியானார்.  இந்த சோழிப்பொய்கை 30 வருடங்களுக்கு முன்வரை 15,000 குடியிருப்புகளுக்கும் 60 ஏக்கர் விவசாய மண்ணிற்கும் நீர் வழங்கிக் கொண்டிருந்தது என்று கிருஷ்ணராஜ் கூறினார். 

மேலும் அவர் கூறியது : “மாமல்லபுரத்தில் பெரும்பாண்மையான விவசாய செயல்பாடுகள் 1990லேயே நின்று போயின. என் தந்தையும் ஒரு விவசாயிதான். நான் இந்நீர்நிலை என் கண் முன்னே சுருங்குவதைப் பார்த்தேன். 30 வருடங்களுக்கு மேல் இந்நீர்நிலையானது சுத்தம் செய்யப் படவும் இல்லை. அதிலிருந்து யாரும் நீரும் இரைக்கவில்லை”.

“அந்நீர்நிலை மெல்ல மெல்ல புதர்களும் கள்ளிச் செடிகளும் மண்டிய சதுப்பு நிலமாக மாறியது” என்று மாமல்லா பீச் ரிசார்ட்டின் உரிமையாளர் கூறினார்.





நேரத்திற்கேற்ற தலையீடு :

இத்திட்டமானது சென்னை மாநகரமே நீர்ப் பற்றாக்குறையால் அல்லாடிக் கொண்டிருக்கும்போது வந்ததுதான் இதன் சிறப்பு. பருவ மழையின்போது உபரியாக விழும் நீரானது சோழிப்பொய்கையுள் விழும்.

மாவட்டக் கலெக்டரின் அனுமதியை வாங்கிய பின்னர்தான், கடினமான
வேலையான காசு புரட்டுவது தொடங்கியது. “நாங்கள் பல தனியார் நிறுவனங்களை அணுகினோம். ஆயின் பயன் இல்லை. நாங்கள் யாவரும் (மாமல்லபுரம் குடிவாசிகள்) எங்கள் சுய சம்பாத்தியத்திலிருந்து கொடையளித்து ரூ.23 லட்சம் சேர்த்தோம். உடனே ஜூலை 2019லேயே வேலையையும் தொடங்கினோம்” என்று கூறுகிறார் கிருஷ்ணராஜ்.

சதுப்பு நிலங்களை சுத்தம் செய்வதிலிருந்து அவர்கள் வேலையைத்
துவங்கினார்கள். இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து, நீர்நிலையை தூர்வாரி, எட்டு அடிக்கு ஆழமாக்கினார்கள்.  ஜூலை முதல் நவம்பர் வரை கரைகளை வலுவாக்கி, 200க்கும் மேற்பட்ட நாவல் பழம், அத்தி, புளி மற்றும் வேப்ப மரங்களை நட்டார்கள்.

மறுசீரமைப்பின் நெடும்பார்வை இதோ :

1. உள் வரவு பாதைகள், வெளி செல்லும் பாதைகள் அமைத்தல்,
2. கால் சுவர் கட்டி கரையறித்தலை தடுத்தல்,
3. ஒரு சமமாக்கப் பட்ட நடைபாதை அமைத்தல்,
4. நடு நடுவே சிறிய செயற்கை தீவுகள் அமைத்தல்,
5. மீன்களை நீர்நிலையில் விட்டு நிரந்தர சுத்தத்தை பாதுகாத்தல்
போன்றவையாகும்.

“நாங்கள் ஒரு இயற்கையான சுற்று சூழலை அமைக்க பாடுபடுகின்றோம். இப்பொழுதே பல மாறுதல்கள் கண்களுக்கு தென்படுகின்றன. காணாமற் போன பறவைகள் திரும்பி வர தொடங்கி விட்டன.” என்கிறார் கிருஷ்ணராஜ்.


நிதி வேண்டுகோள் : இத்திட்டம் இனிதாக நிறைவேற, இன்னும் ரூ.2.70 கோடி தேவைப் படுகின்றது. முதல் கட்டப் பணிகள் முடிந்து விட்ட நிலையில், முழு திட்டமும் நிறைவு பெற்று இதுவும் ஒரு மாமல்லபுரத்து சுற்றுலா ஈர்ப்பாக மாற அரசாங்கம் மற்றும் மக்கள் அரவணைப்பு மிக மிக அவசியம்.

முதலில் நன்கொடை அளித்தவர்கள் இந்நீர் குடிநீர் என்றறியாமல் 
முகம் சுளித்தார்கள். ஆனால், இது குடிநீர் என்று அறிந்த பின்னர் அத்தியாவசியத்தை புரிந்து கொண்டுள்ளனர்.

சோழிபொய்கையைத் தவிர,  இங்கு மேலும் 8 அல்லது 9 நீர்நிலைகள் மறுசீரமைப்பு வேண்டி காத்துக் கிடக்கின்றன. இதே போல், வேலை நடந்ததென்றால், மாமல்லபுரம் நீர்வளத்தில் தன்னிறைவு பெற்ற நகரமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

நீரின்றி அமையாது உலகு ' என்னும் உண்மையை நினைவில் கொண்டு நம் அரசு அதற்கு வேண்டிய ஆவணங்களை பிறப்பித்து ஆவன செய்தால் யாவருக்கும் ஒரு ஏறுமுனையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
         

54 கருத்துகள்:

  1. சனிக்கிழமைக்கேற்ற பாசிடிவ் செய்திகள், பொய்கையை மீட்பது ஆகிய செய்திகள் நன்று.

    அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. நீரின்றி அமையாது உலகு யார்யார்க்கும்
    வானின்றி அமையாது ஒழுக்கு

    அனைவருக்கும் காலை வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். முதல் செய்திஏற்கனவே படித்த நுனைவு. இரண்டாவது செய்தி மிகப் பாராட்டத்தக்கது. கொரோனாவில் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள கொடுத்திரிக்கும் நல்ல மனிதருக்கு வாழ்ததுகள். மிகப் பெரிய மனம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ரேணுகா பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன்.
    கொரோனா நோயாளிகள் தங்க பங்களாக்களை அளித்திருக்கும் தொழிலதிபரை வணங்குகிறேன்.
    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ட்ரேஸ் செய்ய செயலியை கண்டுபிடித்திருக்கும் இளேஞர்களுக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும்.
    ரமா ஶ்ரீனிவாசனின் கட்டுரை பாஸிட்டிவ் செய்திகளின் தொடர்ச்சியாக மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. மாமல்லபுரத்தில் இத்தனை அழகான. ஏரி ஏற்படக் காரணமானவர்களுக்கு. மனம் நிறை வாழ்த்துகள். அழகாக எடுத்துரைத்த ரமாவுக்கு நல் வாழ்ததுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமி, என்றும் போல் இன்றும் நன்றியுடன் வணங்குகிறேன்.

      நீக்கு
    2. இன்றும் நன்றியுடன் வணக்கம்.

      நீக்கு
  7. இன்று காலை ஜெயா டி.வி.யில் நங்கநல்லூர் ஆஞ்சநேயரை காண்பித்தார்கள். ஶ்ரீராம் நீங்கள் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தீர்களே? இன்னும் தொடர்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை...    இங்கிருந்து ஆபீஸ் சென்று வருவதே பெரும்பாடாய் இருக்கிறது.  நங்கநல்லூர் சென்று ஆஞ்சநேயரை தரிசித்து வரவேண்டும் விரைவில் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது இப்போது இப்படி ஒரு தடங்கல்...

      நீக்கு
    2. @ பா.வெ மேடம்... 'காண்பித்தார்கள்... இன்றைய பிரசாதம் புளியோதரை என்பதையும் காண்பித்தார்கள்' என்று எழுதி ஸ்ரீராம் காதில் புகை வரவழைத்திருக்கலாமே.... ஹா ஹா.

      நீக்கு
    3. ஸ்ரீராம், சிறிது சிறிதாக பழகி விடும். ஆஞ்சநேயர் ஒருவர்தான் இன்றைய சூழலில் நமக்கு துணை.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இந்த வார பாஸிடிவ் செய்திகள் அருமை. தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதை தன் வாழ்நாள் சேவையாக கருதி வரும் டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன் அவர்களை மனதாற பாராட்டுவோம்.

    உலகை பயமுறுத்தும் வைரஸ் சம்பந்தபட்ட பாஸிடிவ் செய்திகளும் அருமை. அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் கட்டுரை நன்றாக உள்ளது. மாமல்லபுரம் சோழிப்பொய்கையை ஒரு குழுவாக படிப்படியாக மீட்டதும், அதில் அவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை தங்களது தளராத முயற்சிகளினால் களைந்துமாகிய கட்டுரை விளக்கமாக நன்றாக உள்ளது.

    நீரின்றி அமையாது இவ்வுலகு.நீரின் தேவை இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனுக்கும் அத்தியாவசியமானது. பொய்கையை செப்பனிட்டு காத்தவர்களுக்கும், அதை விளக்கமாக நாம் அறியும் வண்ணம் கட்டுரையாக்கி தந்த சகோதரிக்கும் பாராட்டுகளுடன் நன்றிகளும். அதை இன்று எங்களுக்கு பகிர்நதளித்த தங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா...   நேரம் கிடைக்கும்போது அந்த காணொளியும் பாருங்கள்.

      நீக்கு
    2. கமலா மேடம், இந்த அத்த்யாவசியம் புரிந்தால், நம் நாட்டிற்கு விடிந்து விடும். அங்கு அமேரிக்காவில் தண்ணீர் வெள்ளமென இருக்கின்றது. ஆயினும் மிக யோசித்து பயன்படுத்துகின்றார்கள். நாம் குறைந்த பண்டத்தை சிக்கனமாக செலவு செய்ய கற்றுக் கொண்டாலே போது.






      நீக்கு

  9. ரேணுகா ராமகிருஷ்ணன் அவர்களை வணங்க வேண்டும், வாழ்த்தவேண்டும்.

    தொழிலதிபர் ஹர்ஷ்வர்தன் நியோடியா வாழ்க வளமுடன். அவர் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.

    //தமிழக அரசு பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தால், செயலியை இலவசமாக வழங்கதயாராக உள்ளோம்.//
    அரசு ஆலோசனை செய்து நல்ல முடிவுக்கு வரட்டும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. //சோழிபொய்கையைத் தவிர, இங்கு மேலும் 8 அல்லது 9 நீர்நிலைகள் மறுசீரமைப்பு வேண்டி காத்துக் கிடக்கின்றன. இதே போல், வேலை நடந்ததென்றால், மாமல்லபுரம் நீர்வளத்தில் தன்னிறைவு பெற்ற நகரமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

    “நீரின்றி இயங்காது உலகம்” என்னும் உண்மையை நினைவில் கொண்டு நம் அரசு அதற்கு வேண்டிய ஆவணங்களை பிறப்பித்து ஆவன செய்தால் யாவருக்கும் ஒரு ஏறுமுனையாக இருக்கும் என்று நம்புகிறேன்.//

    அருமையான கட்டுரை பொய்கை மீட்பு செய்தவர்கள் வாழ்க!
    மாமல்லபுரம் நீர்வளத்தில் தன்னிறைவு பெறட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி மேடம், இது போல் போற்றப் படாதவரும் பாடப் படாதவரும் எண்ணிலடங்கா. நம்மால் முடிந்தது அவர்களை பற்றி எழுதுவதுதான் என்று என்னால் முடிந்த அளவு இந்த சமீகத்திற்கு திருப்பி கொடுக்க முயல்கின்றேன்.

      நீக்கு
  11. ஹர்ஷ்வர்தன் நியோடியா அவர்களை பாராட்டுவோம்.

    அரசு செய்யாத வேலைகளை மக்களே முன்னின்று செய்யும் காலமிது.

    பதிலளிநீக்கு
  12. டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன் அவர்களைப் பற்றி வாசித்ததுமே நினைத்தேன் -

    எங்கள் பிளாக்கில் வரும் என்று...

    பதிலளிநீக்கு
  13. திருக்குறளில் வாய்மையோடு ஒப்பிட்டுப் பேசப்படுவது நீர்...

    நீர் நிலையை மீட்டெடுத்தவர்களுக்கு
    எல்லா நலன்களையும் அருள்வானாக இறைவன்...

    பதிலளிநீக்கு
  14. அனைத்து செய்திகளும் சிறப்பு. மல்லை செய்திகள் - மிகவும் சிறப்பு. நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதை புரிந்து கொண்டுள்ள அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  15. போற்றத்தக்கவர்கள். அதுவும் இக்காலகட்டத்திற்கு மிகவும் தேவையானவர்கள்.
    நீர்நிலையின் முக்கியத்துவம் பற்றிய பதிவு அனைவரும் மனதில் கொள்ளவேண்டியது.

    பதிலளிநீக்கு
  16. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  17. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    தற்போது, தங்களது பணம், புகழ், பெயர்… எதுவுமே நிரந்தரம் இல்லை. பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    பதிலளிநீக்கு
  18. தமிழகத்தில் தொழுநோய் முழுசா ஒழிச்சுட்டதா சொல்வாங்களே! இன்னும் இருக்கா?! அருவருப்பு பாராமல் தொழுநோயாளிக்காக பாடுபடும் ரேணுகாவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. மனிதம் காக்கும் செயல்கள் அனைத்தும் சிறக்கட்டும்...

    மழையின் கட்டுரை சிறப்பு...

    இப்படிக்கு : DD ம்ஹிம் :-
    டேகிடோடேகிஜிடோட (TekitoTekijidota)
    டெரிகாடோகாடுகடகடோ (Terikatokatukatakato)

    உபயம் : ருகூட்டமேட்ச்சி (Rukutomekachi)

    பதிலளிநீக்கு
  20. மிக்க நன்றி தனபாலன் சார்.
    //இப்படிக்கு : DD ம்ஹிம் :-
    டேகிடோடேகிஜிடோட (TekitoTekijidota)
    டெரிகாடோகாடுகடகடோ (Terikatokatukatakato)

    உபயம் : ருகூட்டமேட்ச்சி (Rukutomekachi)//
    இப்படி என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
  21. மருத்துவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
  22. எது இல்லையோ கிடைக்காதோ அதைத் தேடி அலைவதுமனித இயல்பு சிலர் வெற்றி பெருகிறார்கள் வெற்றி பெறுபவரை பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
  23. இரு பாசிட்டிவ் செய்திகளுமே அருமை.

    மகாமகக் குளத்தில் பிணங்கள் எல்லாம் மிதந்திருக்கிறது என்ற செய்தி ஆச்சரியம் அதிர்ச்சி. 16 வயதிலேயே தொழுநோயாளி ஒருவரின் சடலத்தை எரியூட்டிய டாக்டர் ரேணுகா வாவ் போட வைக்கிறார். தெரு தெருவாகச் சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்.
    பணம், புகழ், பெயர் என எதுவுமே நிரந்தரம் இல்லை.// அட்சர சுத்தமான வார்த்தைகள் நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு பேரழிவும் காட்டுகின்றதுதான். இதோ இப்போது உட்பட…

    அவரது கணவரும் இவரது கண்டிஷனை ஏற்றுக் கொண்டது மிகச் சிறந்த விஷயம்.

    மனமார்ந்த வாழ்த்துகள் !

    கீதா

    பதிலளிநீக்கு
  24. கொரோனா பாசிட்டிவ் செய்திகள் மனதிற்கு இதம்.

    ரமாவின் கட்டுரை சிறப்பான கட்டுரை. மல்லை விஷயங்கள் எல்லாம் வியப்பூட்டுகின்றன வாவ் போடவும் வைக்கின்றன.

    // “மல்லை வாட்டர் பாடீஸ் ப்ரொடெக்க்ஷன் அண்ட் ப்ரிசர்வேஷன் அசோசியேஷன்” என்ற குழுவை அமைத்து, அந்த கடலோர நகரத்தின் 11 ஏக்கர் நீளமுள்ள குடிநீர் நிலையான சோழிப்பொய்கையை புதுப்பிக்க முடிவெடுத்தனர்.//

    சத்தமில்லாமல் பல விஷயங்கள் நடக்கின்றன அதை இங்கு எடுத்துக் காட்டிய ரமாவுக்கு வாழ்த்துகள்! இதுவும் மிக அழகான பாசிட்டிவ் செய்தி!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. மனித நேயம் குறையவில்லை என்பதை பார்க்கும்போது, மனதுக்கு இதமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  26. வளரட்டும் மனிதமும் அதன் புனிதமும் ....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!