ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஞாயிறு :  கண்ணில் தெரியும் காட்சிகளில் எல்லாம் கடவுள் இருக்கின்றார்....மரங்களால் மலைகளைக் கூட மறைக்க முடியும்!சிறுமேடும் படம் எடுக்க உதவும்!


அதிகாலையா?  அந்தி மாலையா?

சுனாமி வருகிறதோ?!


அந்தி மாலை இளவெயில் நேரம்...


கண்ணில் விழும் காட்சியெல்லாம் கண்களிலே உறுத்தும்...


அதிகாலை...   சுபவேளை...  


மரங்களின் பாதுகாப்பில் மாளிகை!

இயற்கையின் இணையற்ற அற்புதங்கள்...


கண்ணில் தெரியும் காட்சிகளில் எல்லாம் கடவுள் இருக்கின்றார்....

லென்ஸ் க்ளீனரால் துடைத்த மாதிரி தெளிவு!


இது துடைப்பதற்கு முன்னரோ?!!


கொஞ்சம் உயரத்தில் மாட்டினால் சிக்னல் நல்லா கிடைக்குமாம்!


தொலைவில் இருந்தாலும் தொலைக்காட்சி இல்லாமல் இருக்க முடியாது!


மலையில் வழிந்து வரும் மேகம்...

நிஜமா?  பொம்மையா?  

செல்லமே....

வால் குடை!
நீலத்திரையில் வெண் தீற்றல்கள்!பச்சை, வெள்ளை, நீலம், கருப்பு. சிகப்பு....


கம்பத்தில் இருக்கும் காலிங் பெல் அமுக்கினால் மேலே வீட்டிலிருந்து எட்டிப் பார்ப்பார்கள்!

கதவு திறந்திருந்தாலும் கலங்கல் சேறு தடுக்கிறதே...

39 கருத்துகள்:

 1. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. இயற்கை அழகு -அதன்
  வர்ணனையும் பேரழகு...

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆடிப்பெருக்கு நன்னாளிலிருந்து துன்பங்கள்
   ஓடிப்போகட்டும்; இன்பம் வந்து சேரட்டும்!

   நீக்கு
 4. அனைவருக்கும் ஆடி பதினெட்டாம் பெருக்கு
  நன்மைகளைப் பெருக்கட்டும்.
  இனிய காலை வணக்கம்.
  அன்பு ஸ்ரீராம், அன்பு துரை. மற்றும் வரப்போகும்
  தோழமைகளுக்கும்.

  காட்சிகள் மிக அழகு.
  அனைத்துத் தலைப்புகளும் மிக அருமை.
  பட்டாம்பூச்சி அழகோ அழகு.
  வால் குடை செல்லமும்,
  காலிங்க் பெல் வீடும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துகள், நல்வரவு, பிரார்த்தனைகள். இந்த வருஷம் எங்க தெருவில் கூட்டமே இல்லாமல் அமைதியான ஆடிப்பெருக்கு! இத்தனை நாழி தெருவின் இருபக்கங்களிலும் திடீர்க்கடைகள் முளைத்துக் கூட்டம் தாங்காது. வெளியே வர முடியாது. அரங்கன் அம்மாமண்டபத்துக்கு வருவார். காவிரிக்குச் சீர் கொடுப்பார். கோலாகலமாக இருக்கும். அவை எல்லாம் கனவாகிப் போய்விட்டன. அடுத்த வருஷமாவது வழக்கமான கோலாகலத்துடன் பண்டிகைகள், திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற அரங்கன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரங்கனருள் வேண்டுவோம்
   பள்ளிகொண்ட பெருமாள்
   எல்லா நலனும் இனிதே அருளவேண்டுவோம்.

   நீக்கு
 7. படங்கள் நிறையவே போட்டிருக்கிறீர்கள். இந்த வாரத் தலைப்புகள் ஸ்ரீராமால் எழுதப்பட்டவையாகத் தெரிகிறது. படங்களும் நன்றாக இருக்கின்றன. தலைப்புகளும்! பின்னர் வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசிக்கக் கூடிய வாசகங்களோடு படங்கள்! ரெபடீஷனை தவிர்த்திருக்கலாம். 

   நீக்கு
 8. நீலமும் பச்சையும் தரும்
  நெஞ்சுக்கு நிம்மதி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரங்களும் மலைகளும் தரும்
   மனதுக்கு மகிழ்ச்சி.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துகள். அனைவரது வாழ்வும் அன்னையின் அருளால் நலங்கள் பெருகி வளங்கள் பெற்றிருக்க அன்னையை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  இன்றைய படங்கள், அதற்குரிய வர்ணனைகள் அனைத்தையுமே காண இரு கண்கள் போதாது. ஒவ்வொரு படங்களும் அடுத்த படத்தை விட அழகாக, இருப்பதாகத் தோன்றுகிறது.

  நிஜ சுனாமியை தோற்கடிக்கும் மேகச் சுனாமி படம்,

  பசுமைமிகுந்த மரங்கள் அடங்கிய படம்,

  துடைத்தெடுத்த அழகில் பளிச்சென படம் எடுக்க பகலவன் உதவிய படம்,

  வெண்ணிற ஆடை அழகில் வெள்ளை வண்ணத்துப்பூச்சி,

  மேகங்கள் அழகு செய்து விட்ட பூரிப்பில். மலைகள் இறுமாப்புடன் காட்சி தரும் படங்கள்,

  செல்லங்கள் தன் வால் பற்றிய விமர்சனத்தில் அகமகிழ்ந்து இருக்கும் படங்கள் என அனைத்துமே அழகு.

  எதை விட எதை பாராட்ட என ச. ஸ் மாதிரி தெரியவில்லை என கண்கள் மகிழ்வு காரணமாக முணுமுணுப்பது மட்டும் என் காதுகளுக்கு மிக அருகில் கேட்கிறது.

  இன்னும் பலமுறைகள் பிறகு நிதானமாக பார்த்து ரசிக்கலாம் என கண்களுக்கு ஆறுதலாக ஆசுவாசபடுத்தியுள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. அழகிய காட்சிகள், அருமையான வாசகங்கள்.

  பதிலளிநீக்கு
 11. இன்றைய பல படங்கள் மனதிற்கு இதம். ஒரு சில தவிர. ரிப்பீட்டு கொஞ்சம். அது பரவாயில்லை. மேகம் சூழ் மலைகளைப் பார்க்க பார்க்கத் தெவிட்டாது!

  நம்ம செல்லம் ஆஹா ஆஹா...விசிறி போன்று வால் ஒரு படத்தில் மற்றொன்றின் குடை போன்று!!!!!! என்ன புஷ்ஷி புஷ்ஷி வால்!!

  படத்திற்கான தலைப்புகள் அருமை. ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 12. படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன அதற்கான வர்ணனை தலைப்புகளும்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 13. காலிங்க் பெல் அழுத்தினால் கேட்கும் என்ற வர்ணனை அசத்தல் நன்றாகப் பொருத்தி நல்ல கற்பனை!

  மரங்கள் சூழ் அந்த மாளிகை செம ஆஹா இப்படி இருந்தா எப்படி இருக்கும் என்று தோன்றியது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சரிதான். ஆனால் வீட்டுக்கு பால்காரர், அமேசான் ஆள் எல்லாம் வர சிரமப்படுவார்கள்!

   நீக்கு
 14. படங்கள் எல்லாம் அருமை
  அதற்கு கொடுக்கபட்ட வர்ணனைகள் நன்றாக இருக்கிறது.நீலவானமும், செல்லத்தின் வாலும் , பட்டாம்பூச்சியும் அழகு.
  அந்தியில் ஒரு அழகு, லென்ஸ் க்ளீனரால் துடைத்த மாதிரி தெளிவான படமும் மிக அழகு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!