ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

"அந்த"க் கோப்பையில் ஒரு கோப்பை ...

பயணம் இங்கே...   பாதை எங்கே?
பாதை தெரியுது பார்!

பயணக்களைப்பு தீர....

.... அதோ தெரியும் அந்தக் கோப்பையில் ஒரு கோப்பை தண்ணீர் கொடுங்களேன்...

வழியெல்லாம் மரங்கள்...   செல்லெல்லாம் படங்கள்...

மண்ணைக்கொண்டு மூடினாலும் மறைக்க முடிவதில்லை மரங்களை...


வெளுத்த வானின் வெறுமையைச் சொல்கிறது பட்ட மரம் ஒன்று...

மரங்கள் கூடி மறைக்க நினைப்பது எதை?

"என்னைப் படம் புடிச்சு என்ன பண்ணப்போறீங்க...  நான் என் பொழைப்பைப் பார்க்கப்போறேன்..."

அந்தப் பக்க முடிவில் பாதையுமிருக்கலாம், பள்ளமுமிருக்கலாம்!

கடை விரித்திருக்கிறேன்..    கொள்ள வருவாரில்லை!

ஆளில்லா இடங்களிலும் அசருவதில்லை விளம்பரதாரர்கள்...

மனக்கற்பனைக்கு வேலை கொடுக்கின்றன மரத்தில் படர்ந்த கொடிகள்...

பசுமையைத் தவிர வேறு பயனில்லாத செடிகள்...

தனிமை மரங்கள் தங்களுக்குள் ஒரு காட்சியை சிருஷ்டித்துக் கொள்கின்றன...

மண்ணில் வளருது செடி..   மரத்தில் படருது கொடி...!

அருகில் ஆள் இல்லாவிட்டால் அலுத்துப்போய்விடும் வாழ்க்கை!


ஆட்டோக்கள் அணிவகுப்பு!

45 கருத்துகள்:

 1. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து...

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. படங்கள் ஓகே..

  கேப்ஷன்ஸ் நல்லாருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் கௌ அண்ணா மற்ரும் எல்லோருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. எல்லோருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்க்கட்டும்.   இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க கீதா அக்கா..   வணக்கம்.

   நீக்கு
 5. படங்களும் அதற்கேற்ற தலைப்புக்களும் நல்ல ரசனையுடன் அமைந்திருக்கின்றன. இன்னும் தலைக்காவிரியை விட்டு வெளியே வரலையா? மடிக்கெரே எல்லாம் நல்ல மழை என நேற்றுத் தொலைக்காட்சிச் செய்தி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!

   நீக்கு
  2. இந்த ஶ்ரீராமும் கீசா மேடமும் 7 மணி கட் ஆஃப் நேரம் வைத்துக்கொண்டு காணாம்ப் போயிடறாங்க. அப்புறம் , "எப்போ வருவாரோ எந்தன் கலி" என்று காத்திருக்க வேண்டியதுதான். ஹா ஹா

   நீக்கு
  3. இன்று இதோ இருக்கிறேன்...!

   நீக்கு
 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  பசுமைப் படங்களூம்
  அவைகளுக்குக் கொடுக்கப் பட்ட தலைப்புகளும்
  அருமை.

  பதிலளிநீக்கு
 7. படங்களுக்கு வர்ணனைகள் அருமை ஜி

  பதிலளிநீக்கு
 8. படங்கள் அழகு. பசுமையான காட்சிகள் கண்ணுக்குக் குளுமை!

  பதிலளிநீக்கு
 9. முதலிரண்டு தலைப்பைப் பார்த்தால், கேஜிஜி சாருக்கு நேரம் கிடைத்தமையால் பார்த்த படங்கள்னு தோன்றியது.

  கற்பனைகளைப் படர விடும் கொடி - இதைப் படித்தால் சட் என்று பதின்ம வயசுக்குப் போயிட்டாரோன்னு தோணுது.

  மண்ணில் வளருது செடி... - படித்தால், என்ன இப்போல்லாம் ஆன்லைன்ல எல் கே ஜி மாணவர்களுக்கு தமிழ் எடுக்கிறாரான்னு சந்தேகம்.

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பான பிரார்த்தனைகளை அனைவரும் இணைந்தே செய்வோம்...  வாங்க கமலா அக்கா...  வணக்கம்.

   நீக்கு
 12. படங்களும் அதற்கு கொடுத்து இருக்கும் வர்ணனைகள் அருமை.
  படங்களில் வானத்தின் வண்ணமும், மரம் செடி கொடிகளின் பசுமையும் கண்ணை நிறைக்கிறது.


  அதோ தெரியும் அந்தக் கோப்பையில் ஒரு கோப்பை தண்ணீர் கொடுங்களேன்...

  அங்கு விடாது மழை பெய்து கொண்டு இருக்கிறதே! அந்த கோப்பை நிறைந்து வழியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா...  

   இவர்கள் சென்றபோது தாகம் போல...!   அப்போ மழை இல்லையோ என்னவோ!

   நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இன்றைய படங்கள் அருமை. படத்திற்கேற்ற வாசகங்களும் அதற்கு ப(பா)லமாக அமைந்துள்ளது. பசுமைகள் மனதிற்கு இதமாக இருக்கிறது.

  தலைப்பிற்கேற்ற படம் நன்றாக உள்ளது. அந்தக் கோப்பை நிறைய தண்ணீர் பயணம் முழுவதற்கும் உபயோகித்து கொள்ளலாம் போலிருக்கிறதே..!

  "வெளுத்த வானின் வெறுமை" என்று பட்ட மரங்கள் தலைப்பெடுத்து தந்த தங்களுக்கு நன்றி கூறியபடியே வெகு சீக்கிரம் கவிதை ஒன்று படைத்து விடும்.

  இறுதியில் உள்ள படமும் மனதை கவர்கிறது. நீல வானமும், அதில் தவழும் படகாய் வெண் மேகங்களும்.சுற்றிலும் பசுமை சூழ்ந்த சூழ்நிலைகளும், இதை விட்டால் இதைப் போன்ற நேரம் எப்போது வாய்க்குமோ என்ற மகிழ்வில், அந்த அழகை நின்று நிதானித்து ரசிக்கவோ இந்த ஆட்டோக்களின் அணிவகுப்பு...! எனத் தோன்றுகிறது.

  அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. மண்ணில் வளருது செடி...!
  மரத்தில் படருது கொடி...!

  அடடே... அருமை...

  பதிலளிநீக்கு
 15. படங்கள் ஒரே விதமாக பச்சை பசுமையை வெள்ளை காட்டுவதாக இருந்தாலும் விதவிதமாக அதற்கேற்ப வாக்கியங்கள் அமைத்து அவைகளின் அழகுக்கு அழகு செய்த அட்மினுக்கு சலாம். இனிய நாயிறு பொழுது புரட்டும்.

  பதிலளிநீக்கு
 16. படங்களும் படக்கருத்துக்களும் அருமை

  பதிலளிநீக்கு
 17. மண்ணில் வளருது செடி..
  மரத்தில் படருது கொடி..
  கையில் எடுத்தால் தடி..
  தலையில் போட்டால் அடி!..

  அழகான படங்கள்...

  பதிலளிநீக்கு
 18. மண்ணில் வளருது செடி..
  மரத்தில் படருது கொடி..
  அழகாய்த் தமிழைப் படி..
  புகழாய் பறந்திடும் கொடி..

  மறுபடியும் ஒன்னாங் கிளாஸுக்கு வந்தாச்சா!.

  பதிலளிநீக்கு
 19. எங்கும் பசுமை! உண்மை!! பத்து நாளில் அலுத்து விடும் என்பதும் உண்மை.
  ஆயினும் நகர வாழ்க்கையில் உள்ள பரபரப்பும் சுறுசுறுப்பும் மிஸ்ஸிங்.

  பதிலளிநீக்கு
 20. அனைத்து படங்களும் அவற்றிற்கான வாசகங்களும் அருமை

  பதிலளிநீக்கு
 21. பசுமையான படங்கள்!

  படத்திற்கான வரிகள் அருமை. ரசித்தேன்

  துளசிதரன்  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!