சனி, 29 ஆகஸ்ட், 2020

++ செய்திகள் ++ நன்றி : தினமலர்

இந்த வார பாசிடிவ் செய்திகள் அனைத்தும் தினமலர் - telegram  app  மூலம் காணப்பட்டு - இங்கே தொகுத்து அளித்திருக்கின்றேன். 

லண்டன் : லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஸ்வாமிநாராயண் கோவிலின் வெள்ளி விழாவை முன்னிட்டு, பிரிட்டன் இளவரசர் சார்லஸ், சிறப்பு, 'வீடியோ' செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில், பி.ஏ.பி.எஸ்., எனப்படும், 'போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்த்' அமைப்பால் நிர்வகிக்கப்படும், ஸ்வாமி நாராயண் கோவில் உள்ளது. பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த கோவிலுக்கு,1995 ஆகஸ்ட், 20ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலுக்கு, பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வந்து சிறப்பு பூஜைகள் நடத்தியுள்ளனர்.

பி.ஏ.பி.எஸ்., தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஹிந்து சமூகத்தினர், ஆதரவற்ற மக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்குதல், முதியோருக்கு தேவையான உதவிகளை செய்தல் போன்ற பல அளப்பறியபணிகளை செய்து வருகின்றனர். அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார். இந்த கோவிலுக்கு, இளவரசர் சார்லஸ், நான்கு முறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

===


அமெரிக்காவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த மருந்துகளை உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு பரிசோதனை செய்துவருகிறது. தற்போது, அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்றின் ஆயின்மென்டை உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அங்கீகரித்துள்ளது.


latest tamil news

'இந்த ஆயின்மென்ட் கொரோனா உட்பட பல வைரஸ் காய்ச்சல்களை உடலுக்குள் செல்லாமல் போக்கவல்லது' என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'இந்த ஆயின்மென்டின் லேப் பரிசோதனையின் போது, டி3-எக்ஸ் சோதனை முடிவுற்று, 30 வினாடிகள் ஆனபிறகு, எந்த வைரசும் கண்டுபிடிக்கப்படவில்லை' என, இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

latest tamil news

அமெரிக்காவின் இந்தியானா மற்றும் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்த மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் பிரயான் ஹூப்பர் கூறுகையில், ''கொரோனா வைரஸ் மூக்கு துவாரங்கள் வழியாகவே அதிக அளவில் உடலுக்குள் செல்கின்றது. எங்கள் மருந்து நிறுவனத்தின் ஆயின்மென்டை தடவிக்கொண்டால் கொரோனா வைரஸ் உடலுக்குள் செல்வதைத் தவிர்க்கலாம்.
தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு ஒருபக்கம் ஆராய்ச்சி நிலையில் இருந்தாலும் வருமுன் காப்பதே சிறந்தது. இந்த ஆயின்மென்டை தினசரி தடவிக்கொண்டு தாராளமாக வெளியே செல்லலாம். இதன்மூலம் பயமின்றி நாம் எதிர்வரும் மனிதர்களை எதிர்கொண்டு பேசலாம். விரைவில் இந்த ஆயின்மென்ட் விற்பனைக்குவரும்,'' எனக் கூறியுள்ளார்.

====

புதுடில்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள ‛கோவிஷீல்ட்' தடுப்பூசி, 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும் என பிசினஸ் டுடே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் (NIP) கீழ் இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

====


====

மனிதநேயம்,மாயசங்கிலி , கொரோனா, மனங்கள்,தமிழரசன்

திருநெல்வேலி : விளிம்பு மனிதர்களுக்கு உதவ துாரம் ஒரு பொருட்டல்ல..ஏழ்மை ஒரு காரணமல்ல என நிரூபித்திருக்கிறார் சைக்கிளில் டீ விற்று பிழைப்பு நடத்தும் இளைஞர் தமிழரசன். சென்னையில், கணவன் இல்லாமல் இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் வாடிய பெண் ஒருவருக்கு சொந்த செலவில் தையல் மெஷின் வாங்கி கொடுத்து, பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

link : 

===

டேராடூன்: காயமடைந்த பெண் ஒருவரை, ஸ்ட்ரெக்சரில் வைத்து 40 கி.மீ., தூரத்தை, 15 மணி நேரம் நடைபயணமாக இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கடந்துள்ளனர்.

உத்தரகாண்டின் தொலை தூர கிராமமான லாப்சாவுக்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை. அங்கு பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்த இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஜவான்கள், 40 கி.மீ., தூரத்திற்கு அப்பெண்ணை ஸ்ரெக்சரில் தூக்கிய படி பயணித்துள்ளனர்.

15 மணி நேரம் நடைபயணமாக பித்தோராகரில் உள்ள முன்சாரிக்கு அப்பெண்ணை தூக்கி கொண்டு வந்தனர். வழியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நல்லா பகுதியையும், நிலச்சரிவு பகுதிகளையும் அவர்கள் கடந்து வந்தனர். அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளதாக, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.