திங்கள், 3 ஆகஸ்ட், 2020

"திங்க"க்கிழமை :  பகாரா பைங்கன் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 


பகாரா பைங்கன் 
தேவையான பொருள்கள்:

குட்டி கத்தரிக்காய்  --  12
வெங்காயம்              -- 3 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பூண்டு                         -- 7 பல் 
இஞ்சி                          -- ஒரு சிறு 
புளி                              -- சிறு எலுமிச்சம் பழம் அளவு(வெந்நீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும் 
சாம்பார் பொடி அல்லது 
காரப்பொடி                        - ஒன்றரை  டீ ஸ்பூன் 
உப்பு                                    - 1 1/2 டி ஸ்பூன்
வெல்லம்                          -  ஒரு சிறு கட்டி  

கத்தரிக்காயின் உள்ளே ஸ்டஃப் செய்ய:


கொத்துமல்லி விரை     -- 2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல்            -- 4 அல்லது 5
எள்ளு                                -- 2 டீ ஸ்பூன் 
கடலை                              -- 2 டீ ஸ்பூன் 
தேங்காய் துருவல்         -- 4 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

முதலில் கத்தரிக்காய்களை நன்கு அலம்பி விட்டு அதன் காம்பை சீவி விட்டு, கத்தரிக்காயை நான்காக பிளந்து வைத்துக் கொள்ளவும். முழுமையாக நறுக்கி விடக்  கூடாது. 

ஒரு வாணலியில் கடலை, எள்ளு, கொத்தமல்லி விரை, சிவப்பு மிளகாய், தேங்காய்த் துருவல் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து, அதை மிக்சியில் தண்ணீர் விடாமல்   பொடித்துக்  கொள்ளவும். இந்த பொடியோடு சிறிதளவு உப்பு சேர்த்து, பிளந்து வைத்திருக்கும் கத்தரிக்காய்க்குள் அடைக்கவும் (stuff செய்யவும்).  பின்னர் மசாலா பொடி அடைக்கப்பட்ட கத்தரிக்காய்களை ஒரு வாணலியில் கொஞ்சமாக எண்ணை வைத்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.  
பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில், அல்லது வேறு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணை ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு வகையறாக்களை வதக்கிக் கொள்ளவும், பிறகு அதில் புளிக் கரைசலை ஊற்றி,  காரப்பொடி அல்லது சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு  இவைகளை  சேர்த்து, கொதிக்க விடவும், புளி வாசனை போனதும், வதக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்களையும், மிச்சமிருக்கும் அரைத்த மசாலா பொடி, ஒரு சிறிய கட்டி வெல்லம் இவைகளையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி, கடுடு தாளித்து, கொத்துமல்லி, கறிவேப்பிலை நறுக்கிச் சேர்க்கவும். ரொம்பவும் கெட்டியாக இருப்பது போல் தோன்றினால் கொஞ்சம் சுடு நீர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஹைதராபாத் ஸ்பெஷல் உணவான  பகாரா பைங்கனை ஜீரா ரைஸ், ரொட்டி, பூரி இவைகளோடு சாப்பிடலாம். 


==========


=============


42 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் கௌதமன் அஜி. ஶ்ரீராம், துரை. எல்லோரும் பாதுகாப்பாக இருக்கப் பிராரத்தனைகள். உபாகர்மா வாழ்த்துகள.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா...   வாங்க...

   நீக்கு
  2. எனக்கு பிடித்த சைடிஸ் பகாரா பைங்கன்

   நீக்கு
  3. பிடிச்சிருந்தா சாப்பிட வேண்டியதுதானே ட்ரூத் ? என்ன தயக்கம்? :))

   நீக்கு
 2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்று உபாகர்மா செய்யும் அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அவரவர் வீட்டிலேயே இருந்து கவனமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் கொண்டு செய்யவும் பிரார்த்தனைகள். இன்றைய நிலவரப்படி இறப்பு விகிதமும், பரவல் விகிதமும் அதிகரித்திருப்பதாகத் தெரிய வருகிறது. இனியாவது குறைந்து முற்றிலும் விலகவேண்டும் என எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திப்போம். கவலை தரும் நிலைமை.

  பதிலளிநீக்கு
 3. கத்தரிக்காய் ஸ்டஃப் நிறையச் சாப்பிட்டிருக்கேன், விதம் விதமாக. ஆனால் இது மராட்டிக்காரர்களின் செய்முறை என்று நினைத்தேன். ஹைதராபாத் என பானுமதி சொல்லி இருக்கார். வேர்க்கடலை, எள் எல்லாம் மராட்டிக்காரர்கள் அதிகம் சேர்ப்பார்கள். அவங்க வீடுகளிலே சாப்பிட்டும் இருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹைதராபாத்தில் இருக்கும் என் மாமா மகன் வீட்டில்தான் முதல் முறையாக சாப்பிட்டேன். ஆந்திரா ஸ்பெஷல் என்றார்கள். பிறகு சாப்பிட்ட வட இந்தியர் வீட்டிலும் ஹைதராபாத் ஸ்பெஷல் என்றார்கள். ஆந்திராக்காரர்களும் கடலை, எள் எல்லாம் அதிகம் சேர்ப்பார்களே.நன்றி.

   நீக்கு
  2. ஆந்திரா சமையல் அதிகம் சாப்பிட்டதில்லை. அந்தக் காரத்துக்கு பயம். அதோடு அப்போ நம்ம வீட்டிலேயே சமைக்க முடிந்ததால் வெளியே சாப்பிட்டதில்லை. ஆனால் இட்லி எல்லாம் சுமாராக இருக்கும் என மாமா சொல்லுவார். நாங்க திருப்பதியிலே பீம விலாஸிலே சாப்பிட்டோம். சாப்பாடு நன்றாக இருந்தது. ஆனால் அவங்க பாலக்காட்டுக்காரங்களாம். 2,3 தலைமுறைகளாக ஓட்டல் நடத்திட்டு இருக்காங்களாம்.

   நீக்கு
 4. முழுசாகத் தயார் ஆன கத்திரிக்காய்களைக் காணோமேனு தேடினால் முதல் படமாக உட்கார்ந்திருக்கு. நல்லதொரு செய்முறையை அறிமுகம் செய்த பானுமதிக்கு நன்றி. எனக்கெல்லாம் கத்திரிக்காயை எப்படிச் சமைத்தாலும் பிடிக்கும். சப்பாத்திக்கு அதுவும் ஃபுல்காவுக்கு இது நன்றாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். இங்கே அதிகமாக குஜராத்தி முறையில் ஸ்டஃப் செய்வது தான் பிடிக்கும். எப்போவானும் இப்படிச் செய்வேன். பூண்டு போடுவதே இல்லை.

  பதிலளிநீக்கு
 5. மிக. அருமையான சமையல் குறிப்பு. பானுமதியின் படங்களும்,செய்முறையும் உண்ண அழைக்கின்றன.கீதா சொல்லி இருப்பது போல மராத்தி ரெசிப்பி மாதிரி இருக்கிறது. கத்திரிக்காய் எந்த ரூபத்தில் வந்தால் என்ன!அனைத்து சகோதரரகளுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. முன்பெல்லாம் அதிகமாக கத்தரிக்காய் சேர்த்துக் கொண்டிருந்த நான் - தற்போது குறைத்துக் கொண்டேன்...

  இருப்பினும் இதை நினைவில் கொள்வேன்...

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் செய்முறையில் பகாரா பைங்கன் அருமையாக உள்ளது.புதுவிதமாக கத்திரிக்காயை கொண்டு ரெசிபி செய்திருக்கும் சகோதரிக்கு வாழ்த்துகள் (முழு கத்திரிக்காய் கொத்ஸு என்றும் இதற்கு மற்றொரு மறுபெயர் சூட்டலாம் போலிருக்கிறது.) பெயர் வித்தியாசமாக இருந்தாலும் கத்திரிக்காயின் ருசியே தனிதான். சகோதரியின் செய்முறைகளை குறித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //முழு கத்திரிக்காய் கொத்ஸு என்றும் இதற்கு மற்றொரு மறுபெயர் சூட்டலாம் போலிருக்கிறது.)// ஆஹா! கிட்டத்தட்ட அப்படித்தான். ஹாஹா! நன்றி.

   நீக்கு
  2. நான் காம்புப் பக்கம் நறுக்காமல் காம்பை விட்டு விட்டு எதிர்ப்பக்கம் நாலாகப் பிளந்து கொள்வேன், காம்பு, பாவாடையோடு வதக்கி, வேக விட்டால் அந்த ருசி தனி!

   நீக்கு
 9. பெயரே புதுமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெலுங்கு தெரிந்தவர்கள் யாராவது பொரூல் சொல்லக் கூடும். சொல்லக்கூடும். நன்றி ஜி.

   நீக்கு
 10. வாவ்! பானுக்க சூப்பர் பகாரா பைங்கன்!

  பாக்கவே யும்மி. நல்லா வந்திருக்கு பானுக்கா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா. கலைஞர் டி.வி.யில் சேரனின்,"ராமன் தேடிய சீதை" படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படம் உங்கள் ஊரில் படமாக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களை நினைத்துக் கொண்ட உங்களை நினைத்துக்கொண்டேதான் படம் பார்க்கிறேன்.

   நீக்கு
 11. ரெசிப்பி நன்ற். சாப்பிட்டதில்லை. சாப்பிடுவதும் சந்தேகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா! சரியான உண்மை விளம்பியாக இருக்கிறீர்களே!!

   நீக்கு
 12. அனைவருக்கும் காலை வணக்கம். எ.பி.சகோதரர்களுக்கு ரக்ஷா பந்தன் மற்றும் உபாகர்மா வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. புது டிஶ் எனக்கு Bhanumathy அம்மையாரே.
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 14. சிறு கட்டி வெல்லத்தில் சூட்சும சுவை உள்ளது என்று நினைக்கிறேன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம். கடலையும், எள்ளும் கூட காரணம் என்றும் தோன்றும். நன்றி டி.டி.

   நீக்கு
 15. Stuffed Baingan subji சுவையாகவே இருக்கும். இங்கே (வடக்கில்) செய்யும் விதம் சற்றே மாறுபடும். Bharwan Baingan என்று இங்கே சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! வெங்கட், இந்தப் பெயர் பிடிபடாமல் யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்க நினைவூட்டி விட்டீர்கள்.

   நீக்கு
 16. அனைவருக்கும் மதிய வணக்கங்கள். எங்கள் வீட்டில் ஆவணி அவிட்டம் சமையல் முடிந்து, விஷேஷமும் முடிந்து இப்போதுதான் ஆஜாராக முடிந்தது.
  பானு, ஸூப்பர் ரெசிப்பி. அழகான படங்கள் மற்றும் செய்முறை விளக்கம். இதே போல் நான் பைங்கன் பர்த்தா என்ற ஒரு ஸப்ஜீயும் சுவைத்திருக்கின்றேன். கத்தரிக்காய் in any form வயிற்றுக்குள் லபக்.

  பதிலளிநீக்கு
 17. நன்றி ரமா. பைங்கன் பர்தா சமையல் குறிப்பு ஏற்கனவே நான் ஒருமுறை எ.பி.யில் நான் போட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. கத்திரி ரெசிப்பி நல்லா இருக்கு பானுக்கா .ஆனா இங்கே கிடைப்பது சூடான்லருந்து வரும் வெரைட்டி நீளமா அப்புறம் ஸ்பானிஷ் வெரைட்டி தான் அதிகம் நமக்கு கிட்ட ஆகாது கண்ணால் பார்த்து ரசித்து செல்கின்றேன் உங்கள் ரெசிபியை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக வருக. நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். நன்றி.  எங்கே உங்கள் தோழி? ஞானம் தேடி இமாயமலைக்குச் சென்று விட்டாரா? 

   நீக்கு
 19. பகாரா பைங்கன் செய்முறை விளக்கம் படங்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
 20. பகாரா பைங்கன் -...நன்றாக இருக்கிறது ...

  மின்நிலா முழுவதும் ஒரு முறை பார்த்தேன் ...நல்ல கோப்புகள் , கோர்ப்புகள் ...இந்த வாரம் இங்கே தவற விட்டதை அங்கே பிடிக்கலாம் ...

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!