வியாழன், 20 ஆகஸ்ட், 2020

வினோத் - வினோதினி

அந்த மாலை 2/4
ஸ்ரீராம் 
[ 2 ]


"அவன் பேர் வினோத்.  என் பேர் வினோதினி.  இந்த விஷயமே எங்களை ஒருவரை ஒருவர் பார்க்க வச்சுது அங்கிள்..."

"......................."

"என்ன அங்கிள்...   நல்லா பேசுவீங்கன்னு வினோத் சொன்னான்.  சும்மாவே இருக்கீங்க...  எங்களுக்குள்ள முதல்ல சண்டைதான்  வந்து கொண்டிருந்தது.  ஒரே மாதிரி பேர்ங்கறதால பிரெண்ட்ஸ் கிண்டல் அடிச்சாலும் இவன் ஒதுங்கி ஒதுங்கிப் போனான்.  போகப்போக அண்டர்ஸ்டேண்டிங் வந்துடுச்சு..."

அண்டர்ஸ்டேண்டிங்கா?  அப்படீன்னா?

அவளையே பார்த்தார் மூர்த்தி.  "வினோத் ஒண்ணும் சொன்னதே இல்லையே...  கல்யாணமே வேண்டாம்னுதான் சொல்றான்...நீ யாரையாவது பார்த்திருந்தா சொல்லுன்னு கூட கேட்டுப் பார்த்தும் இல்லைன்னுதானே சொன்னான்?"

"பொய் அங்கிள்...   நாங்க ஒரு வருஷமா பழகறோம்.."

"ஏன்  பொய் சொல்லணும்?  நாங்க அவனுக்கு கல்யாணம் பண்ணணும்னுதான துடிச்சுக்கிட்டிருக்கோம்...  வேற ஏதாவது சொல்லக் கூடாத பிரச்னை இருக்கா?"

"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை அங்கிள்...   நீங்களும் லவ் மேரேஜ்னு வினோத் சொல்லி இருக்கான்.  நீங்க உங்க மேட்டரை உங்க அப்பாம்மா கிட்ட ரொம்ப வித்தியாசமா ப்ரசண்ட் பண்ணினீங்களாம்...  இவனுக்கு நீங்க கேட்டும் கூட உங்களிடம் சொல்ல என்னவோ தயக்கம்...   என்ன இருந்தாலும் இதற்கு எல்லாம் பேரன்ட்ஸ் கிட்ட சொல்ல ஒரு தயக்கம் நேச்சுரலாவே இருக்கும்தானே?  அவனே பார்த்தா கூட உங்க ஜாதியிலேயே பாருன்னு சொன்னீங்களாமே...   சொன்னான்.   என்ன அங்கிள் அப்படிப் பார்க்கறீங்க...   நான் வேற ஜாதி இல்லை..  கவலைப்படாதீங்க..  ஓ..   அவன் இவன்னு சொல்றேனேன்னு பார்க்கறீங்களா...   அவர் இவர்னுல்லாம் உங்களுக்காக சொல்லலாம், இம்ப்ரஸ் பண்ணலாம்..   ஆனா நாங்க அப்படி பேசிக்கறதில்ல அங்கிள்...   எதுக்கு போலித்தனமா...  எனக்கு அதெல்லாம் பிடிக்காது...  இப்போ கூட படபடன்னு பேசிகிட்டீங்களாமே...  கல்யாணமே வேண்டாம்னு சொன்னானாமே...  ரொம்பக் கவலை ஆயிட்டீங்க போல..."

திடீரென வந்து எதிரே உட்கார்ந்து படபடவென பேசும் அந்தப்  பெண்ணை நிதானமாகப் பார்த்தார் மூர்த்தி.  

என்ன பெண் இவள்...   நிஜம் பேசுகிறாளா?  பொய்யா?  இப்படிக் கூட வந்து பேசுவார்களா? சற்றுமுன் நடந்ததைக் கூடச் சொல்கிறாளே...

"என்ன அங்கிள்..  இப்படியெல்லாம் பேசறாளேன்னு பார்க்கறீங்களா...   வினோத்திடம் விஷயத்தை விட்டா இழுத்தடிச்சுடுவான் அங்கிள்...  அவன் எப்பவுமே அப்படிதான்...   உங்களுக்குத் தெரியாதா?   வயசாவுது இல்ல...  சட்டுபுட்டுனு விஷயத்தை ஓபன் பண்ணுடான்னா கேட்க மாட்டேங்கறான்...  ஸாரி அங்கிள்... நான் அவன் இவன்னு சொல்றது பழக உங்களுக்கு கொஞ்ச நாளாகும்..."

"உன்னைப்பற்றி சொல்லு"

"நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு...  நோ சிஸ்டர்ஸ்... நோ பிரதர்ஸ்... எங்கப்பா போன மாசம்தான் ரிடையர் ஆனார்.  அவர் என்னிடம் ரொம்பப் பிரியமா இருப்பார்.  என்ன பார்க்கறீங்க...   அவருக்குத் தெரியுமான்னு கேட்க நினைக்கறீங்க...   கரெக்ட்டா?  தெரியும் அங்கிள்...   வினோத் மாதிரி இழுத்தடிக்க விரும்பலை நான்.  முன்னாடியே சொல்லிட்டேன்.  ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா அங்கிள்... எனக்கும் வினோத்துக்கு மூணு மாசம்தான் வயசு வித்தியாசம்...   பயப்படாதீங்க...   நான் மூணு மாசம் சின்னவள்!"  சிரித்தாள் வினோதினி.

"உன் நட்சத்திரம்?"  

"உத்திரம் அங்கிள்...  உங்க பையன் புனர்பூசம் இல்லையா...  பொருந்தும்.  கவலைப்படாதீங்க..   வேற கோத்ரம்தான்.  அதுவும் பிரச்னை இல்லை. ஜாதகத்துல பத்துக்கு ஏழு பொருத்தம் இருக்கு..  நானே பார்த்துட்டேன்."

"உனக்கு ஜாதகம் பார்க்கத் தெரியுமா? "

"தெரியும் அங்கிள்...  கத்துக்கிட்டேன்"

"உங்கப்பாவுக்கு இதில் முழு சம்மதமா?  அவருக்கு ஒண்ணும் வருத்தமில்லையா?"

"வருத்தம் ஆரம்பத்துல இல்லாம இருக்குமா?  இருந்தது.  அப்புறம் சமாதானமாயிட்டார்...  யு நோ அங்கிள்..   அம்மா இல்லைங்கறதால நான் அவருக்கு ரொம்ப செல்லம்.  இருந்தாலும், இருங்க...  அவரையே கேட்டுடலாமே..." போனை எடுத்தவள் அப்பாவின் பெயரைத் தெரிவு செய்து கால் செய்தாள்.

"வேண்டாம்.. வேண்டாம்..   அவர் கூட நான் இப்போ பேச விரும்பலை"

போனைக் கீழே வைத்து விட்டாள் வினோதினி.  மூர்த்தி விட்ட பெருமூச்சு முடியும் முன் அந்த அறைக்குள் நுழைந்தவரைப் புன்னகையுடன் வரவேற்றாள் வினோதினி.

"அப்பா..." என்று மூர்த்தியைப் பார்த்தவள், அப்பாவிடம்  "அங்கிள்" என்றாள்.

"தெரியுமே...  போட்டோ காமிச்சுருக்கியே.." என்று புன்னகைத்தார் அவர்.  "ஐயம் பாலாஜி" என்றார் இவருக்காய் கைநீட்டி.

அவர் விரல்களைத் தொட்டு கையை இழுத்துக் கொண்டவர்  "ஃபோட்டோவா?" என்றார்.

"அப்பா... "  என்று அவரைப் பார்த்தவள், 'ஓ...  கமான் அங்கிள்...   நாங்க ஒரு வருஷமா பழகறோம்...   உங்க ஃபோட்டோ என்கிட்டே இருக்காதா?"

மூர்த்தி புன்னகைக்கவில்லை.

பாலாஜியைப் பார்த்தார்.  "உங்களுக்கு இதில் சம்மதமா?  வருத்தம் ஒன்றும் இல்லையா?  என் பையன் பற்றி உங்களுக்குத் தெரியுமா?"

"ஓ...   நல்லாத் தெரியும்...   சில ஜோசியர்கள் உங்க பையன் ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்வாங்கன்னு கூட தெரியும்.  ஆனால் அதெல்லாம் இல்லை.  எங்களுக்கு பிரச்னையும் இல்லை.  என்ன பிரச்னை இருந்தால்தான் இனிமேல் என்ன செய்ய முடியும்?  ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டாங்க..."

"செவ்வாய் தோஷமா?  என் பையனுக்கா?"

"அப்பா..  கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா?  கிரேஸி மோகன் டிராமால வர்ற கேரக்டர் மாதிரி வார்த்தைக்கு வார்த்தை ஏதாவது போட்டுக் கொடுத்துகிட்டே இருப்பீங்களா?   அதெல்லாம் ஒண்ணும் இல்லை அங்கிள்..."

"அம்மா..   நீ ரொம்ப வேகமா இருக்கே...   இது விளையாட்டில்லம்மா...   என் பையன் கொஞ்சம் முன்கோபி.."

"ஐயோ...   கொஞ்சமா...?   வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம் பண்ணுவான்...எதையும் லேசுல ஒத்துக்க மாட்டான்..."

மூர்த்தி ஆச்சர்யமானாலும் அவள் குறிக்கிட்டதைத் தடை செய்து தொடர்ந்தார்.

"கொஞ்ச நாள் கழிச்சு எங்களுக்குள்ள ஒத்துவரல்ல...  நாங்க பிரியறோம்னுல்லாம் சொல்லக் கூடாது..   நல்லா யோசிச்சு முடிவெடுக்கணும்..  என்னைப்பொறுத்தவரை இந்தக் காலத்துப் பொண்ணுங்க, பையனுங்க எல்லாம் கல்யாண விஷயத்துல பொறுப்பு இல்லைன்னுதான் தோணுது...."

"அங்கிள்...  அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வேணாம்...  இன்னிக்கு எல்லாம் முடிவு செய்துடலாம்.  நீங்க பேசறதைப் பார்க்கும்போது உங்களுக்கு சம்மதம்னு தெரியுது...கரெக்ட்டா?"

வினோத்தும் வார்த்தைக்கு வார்த்தை "கரெக்ட்டா?" என்று கேட்பது நினைவுக்கு வந்தது.  

இவளாகவே முடிவு செய்து கொள்கிறாளே...   அவர் மௌனம் தொடர, 

வினோதினி ஃபோனை எடுத்து விட்டு வைத்தாள்.

வினோத் உள்ளே நுழைந்தான்.  "அதுக்குள்ற என்னைக் கூப்பிட்டுட்டே.." என்றான் விநோதினியைப் பார்த்து.  "அப்பா" என்று புன்னகைத்தான்.

மூர்த்தி செயலற்று அமர்ந்திருந்தார்.  'சற்றுமுன்தான் என்னுடன் வார்த்தையாடினான்....'

சர்வர் இந்தப் பக்கமே நீண்ட நேரமாய் வரவில்லை.  தூரமாய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.  மூர்த்திக்கு சந்தேகமாய் இருந்தது.

[ அடுத்த வாரம் ]

=================================================================================================

பேஸ்புக்கில் பகிர்ந்த ஒரு பழைய பொக்கிஷம்...


கீழ்க்கண்ட சம்பவத்திலிருந்து தெரிந்து கொள்ளும் விவரங்கள் 

- காந்திஜிக்கு ரத்தக்கொதிப்பு நோய் இருந்தது.

-காந்திஜி கூட பொறுமை இழந்து உணர்ச்சி வசப்பட்டு படபடவென பேசுவார்.

- அப்போது அதாவது 1927 இல் மைசூரில் இரவு ஒன்பது மணிக்கு  'அப்படி' ஒரு வழக்கம் இருந்தது!

இனி சம்பவத்துக்குப் போவோம்.

1927 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தென்னகத்துக்கு வந்திருந்தார்.  மைசூர் மகாராஜாவின் விருந்தாளியாக 'குமார பார்க்'கில் தங்கி இருந்தார்.  ராஜாஜியும் காந்தியுடன் சென்றிருந்தார்.

காந்திஜி ரத்தக்கொதிப்பு நோயால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.   அவருக்கு அதிர்ச்சியான பேச்சு, சம்பவம் எதுவும் ஏற்படக்கூடாது என்பது டாக்டர்களின் உத்தரவு.

ஒருநாள் இரவு 8.30லிருந்து 9 மணி வரை ஒரு பெரியவருக்குக் காந்திஜியுடன் பேட்டிக்கு நேரம் குறிக்கப்பட்டிருந்தது.   அவரும் அந்த நேரத்தில் தயாராகக் காத்திருந்தார்.  ராஜாஜி அவரை 8.30 மணிக்கு காந்திஜி அறைக்குள் கொண்டுபோய் விட்டு விட்டு வந்தார்.  

பத்து நிமிஷங்கள் ஆகியிருக்கும்.  உள்ளே பேச்சுக் குரல்கள் பலமாக ஆயிற்று.  விவாதம் சூடாக இருந்ததை வெளியிலிருப்பவர்கள் உணரலானார்கள்.  இன்னும் 20 நிமிஷங்கள் இதே ரீதியில் போகுமானால் என்ன ஆகுமோ என்று காந்தி அன்பர்கள் தவிக்கலானார்கள்.  தவித்தவர்களில் ராஜாஜியும் இருந்தார்.

திடீரென்று 'குமார பார்க்'கில் விளக்குகள் எல்லாம் அணைந்தன.  ஒரு வினாடிதான்.  சட்டென்று மறுபடியும் எரியத் தொடங்கின.  எல்லோரும் தங்கள் கைக்கடிகாரங்களைப் பார்த்துக்கொண்டார்கள்.  எல்லாவற்றிலும் மணி 8;45 தான்.   ராஜாஜியும் கூடத் தன் பாக்கெட் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்.  பிறகு பரபரப்புடன் காந்திஜியின் அறைக்குள் புகுந்தார்.

மின்சார விளக்குகள் ஒரு வினாடி அணைந்து மறுபடி எரிந்தால் அப்போது மணி ஒன்பது என்பதை மைசூரிலுள்ள அனைவரும் அறிவர். (சில ஊர்களில் நேரத்தை அறிவிக்க சங்குகளும், ஆலய மணிகளும், பீரங்கி முழக்கமும் இருப்பதைப்போல் மைசூரில் மணி ஒன்பது என்பதை அறிவிக்க விளக்குகள் ஒரு வினாடி அணைந்து எரியும் ஏற்பாட்டைச் செய்திருந்தனர்)

உள்ளே சென்ற ராஜாஜி காந்திஜியுடன் பெரியவருக்கான சந்திப்பு நேரம் முடிந்து விட்டது என்று கூறி அவரை வெளியே அழைத்து வந்து, ரொம்ப மரியாதையுடன் அவரை அனுப்பியும் வைத்தார்.

அந்தப் பெரியவர் சென்ற கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வழக்கப்படியான விளக்கணைப்பு மறுபடி நடந்தது.  அப்போதுதான் மைசூர் நகரில் உண்மையான மணி ஒன்பது!

காந்திஜியின் அறைக்குள் வாக்குவாதங்களைக் கேட்டதும் ராஜாஜியின் வலக்கை அந்த மாளிகையின் மின்சார மெயினை இயக்கி மணி ஒன்பதாகச் செய்து விட்டது!

- கௌசிகன் எழுதிய 'ராஜாஜி' நூலிலிருந்து எடுத்து குமுதத்தில் வெளியானது!-======================================================================================================

கடவுள் மாதிரி ஒரு புத்தகம் கிடைத்தது.  வீடும் வண்டியும்.  ஆரம்பப் பக்கங்கள் கடைசிப் பக்கங்கள் காணோம்! எழுத்தாளர் பெயர் தெரியவில்லை.   
என்னடா இது நம் இலக்கிய அறிவுக்கு வந்த சோதனை என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ஒருவழியாய் எழுத்தாளர் யார் என்றும் தெரிந்தது!  இப்போது யாரென்று சொல்லவில்லை.  யாராவது பழைய ஆட்கள் கண்டு பிடிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அந்தப் படத்தை இணைக்கிறேன்.

===================================================================================================

ஒரு மாதிரி வசனம் இல்லாமல் தானாய் புரிந்து கொள்ள வேண்டிய ஜோக்.  ஸ்ரீதர் ஜோக்...
===================================================================================================

இன்னொரு புதிர்...   இந்த ஓவியம் எந்த கதைக்கானது என்று சொல்ல முடிகிறதா?


188 கருத்துகள்:

 1. ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. அன்பு ஶ்ரீராம்,அன்பு துரை இன்னும் வரப்போகிறவர்களுக்கு இனிய காலை வணக்கமும் , இறை அருளோடு இருக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
 3. கதை சுறு சுறுப்பாகச் செல்கிறது. அடேங்கப்பா இத்தனை விவரமா ஒரு ஏற்பாடா! ஸ்பேஸ் கேஸ் போலிருக்கிறதே.

  பட்டன் தட்டினாற் போல் கதா பாத்திரங்கள் ஆஜர். மாமனாராகப் போகிறவர்ககுக் கொஞ்சம் தயக்கமாகத் தான் இருக்கும்:) மகனைத் அதன் புரிந்து கொண்டதை விட் இந்தப் பெண் நன்றாகப் பழகி இருக்கிறாள் என்று அதிர்சசியாகவும் இருக்கும் உற்சாகமாகப் போகிறது. அன்்பு வாழ்ததுகள் ஶ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வல்லிம்மா - உற்சாகமான வார்த்தைகளுக்கு.

   நீக்கு
  2. //பட்டன் தட்டினாற் போல் கதா பாத்திரங்கள் ஆஜர். மாமனாராகப் போகிறவர்ககுக் கொஞ்சம் தயக்கமாகத் தான் இருக்கும்:) மகனைத் அதன் புரிந்து கொண்டதை விட் இந்தப் பெண் நன்றாகப் பழகி இருக்கிறாள் என்று அதிர்சசியாகவும் இருக்கும்//

   மாமனார் அந்தக் கால ஆண்.  இவள் இந்தக் காலப் பெண்!  அவரால் சட்டென ஜீரணிக்க முடியவில்லை!  அப்பா பையன் உறவுக்கும் காதலன் காதலி உறவுக்கும் வித்தியாசம் இருக்கும்தானே!

   நீக்கு
  3. மிதிலா விலாஸ் நினைவு இருக்கா, வல்லிமா? அது போல இது ஒரு கனக விலாஸ்.

   நீக்கு
 4. காந்திஜியின் இரத்த அழுத்தம, ராஜாஜியின் சமயோசித சமாளிப்பும் இப்போதுதான் ஏதோ வாட்ஸ் அப்பில் வந்தது. அருமையான நிகழ்வு. இதைப் போல் இன்னும் எத்தனை நிகழ்சசிகளோ் முன்பு கஸ்தூரிபாய் காந்தி பற்றி தொடர் வந்தபோது நினைக்க நினைக்க மனம் நெகிழும்.. மிக நன்றி ஶ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? வாட்ஸாப்பில் வந்ததா? நான் பார்க்கவில்லைம்மா.. இது நம்ம பைண்டிங் கலெக்‌ஷன்.

   நீக்கு
  2. ஸ்ரீராம் ஹா ஹா எல்லாமே இப்ப வாட்சப்பில் வந்துரும் கூடவே அனுப்பறவங்க கற்பனையும் சேர்ந்து வந்துரும்!!!

   கீதா

   நீக்கு
  3. அது சரிதான்.  ஆனால் நான் புத்தகத்தில் இப்போது பார்த்து எடுத்து வைத்திருப்பது வாட்ஸாப்பில் இந்த சமயம் பார்த்து வருவது என்பது, வேறு யாரோ ஒருவரும் சரியாய் இதே சமயத்தில் இதைப் பார்த்திருக்கிறார் என்பது ஆச்சர்யம்தானே!

   நீக்கு
  4. ராஜாஜி வக்கீல் தொழிலில் இருந்த பொழுது அவரது வாலிப வயதில் தசரதனுக்கு காட்டில் வேட்டையாட சென்ற பொழுது நிகழ்த்த சம்பவம் மாதிரி ஒன்று நடந்தது.

   நீக்கு
 5. ஶ்ரீதர் ஜோக் சூப்பர் . அப்பாக்கு ஒரு முகம் அம்மாவுக்கு ஒரு முகம் தம்பி தங்கைகளுக்கு ஒரு முகம். மனைவியுன் மடங்கு விட்டாரே. ஹாஹா.

  பதிலளிநீக்கு
 6. வீடும் வண்டியும் கதை, எஸ்விவி டச் இருக்கிறதா. அவர் போலத் தெரிகிறது.:)

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோருக்காகவும் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 8. கொடுத்திருக்கும் படம் குமுதத்தில் வந்ததோ!அப்படியானால். எஸ் ஏ.பியாக இருக்க சான்ஸ் இருக்கிறது. உங்கள் பதில் வந்தால் தான் தெரியும்.:)

  பதிலளிநீக்கு
 9. ஸ்ரீராமின் தொடர்கதையில் ஏதோ நெருடலாக இருக்கிறது? சொல்லி வைத்தாற்போல் கதாபாத்திரங்கள் தயாராய்க் காத்திருக்கிறார்கள். அதிலும் விநோதினியின் அப்பாவைக் கூப்பிடுகையில் மூர்த்தி இப்போது பார்க்க விரும்பலைனு சொல்லிய அடுத்த நிமிடமே ஓட்டலுக்குள் விநோதினியின் அப்பா நுழைகிறார். ஏதோ முரணாக இருக்கிறது. சாம்பார் இட்லி கேட்ட மூர்த்திக்கு அது வந்துடுத்துனு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு கீதா மா, கதாநாயகன் விநோத். நாயகி விநோதினி. கதையும் புத்தம் புதிதாக நகர்கிறது.

   நீக்கு
  2. அவனவன், என்னடா ஸ்விட்ச் போட்ட மாதிரி மூர்த்தியைச் சுற்றி எல்லாம் நடக்கிறதே... இவ்வளவு ஓபனாக பெண் பேசுகிறாளே... திருமண வாழ்க்கை ஒழுங்கா போகுமா என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கும்போது, கீசா மேடத்தின் கவலை அந்த சாம்பார் இட்லியில் இருக்கிறதே. இன்னும் காலை 7 மணி ஆகலையே

   நீக்கு
  3. கீதாக்கா.. இதில் நெருடலுக்கு என்ன இருக்கிறது? மூர்த்திக்கே ஆச்சர்யம்தானே? மூர்த்திக்கு இட்லி வந்து, வடையும் வேணாம்னு சொல்லிட்டாரே.. சாப்பிட்டுகிட்டிருக்கார்!

   நீக்கு
  4. ஆதரவுக்கு நன்றி வல்லிம்மா!!

   நீக்கு
  5. ஹா.. ஹா.. ஹா.. நெல்லை... வினோதினியின் துடுக்குக் கவலையே இல்லை பாருங்க...!

   நீக்கு
  6. கீதாக்கா அடுத்த பகுதியில் தெரியப் போகுது! இது இளசுகளின் காலம். இப்ப அவர்கள் என்ட்ரி. மூர்த்தியே பாவம் இங்க என்னயா நடக்குதுன்னு டெரர் ஆகியிருக்கிறார்!!! ஹா ஹா ஹா ஹா

   வினோதினி செம ஜாலியா இருக்கா அப்ப வினோதின் முன் கோபத்துக்கு ஈடுகொடுப்பான்னு மூர்த்திக்கும் கொஞ்சம் சமாதானமும் பிறந்திருக்கும்!!! ஆனால் என்ன்வோ இருக்கு

   சுவாரசியம் கூடுது

   கீதா

   பாருங்க அடுத்த பகுதில மூர்த்தி சிரிக்கப் போகிறார்!

   நீக்கு
  7. வினோத்தின் முன் கோபம் விநோதினியை பாதிக்காதோ....

   நீக்கு
  8. //வினோத்தின் முன் கோபம் விநோதினியை பாதிக்காதோ// - பாதிக்கத்தான் செய்யும். கள்ளிப்பழம் சாப்பிடணும்னு பறிக்க நினைத்தால் மெல்லிய ஊசி போன்ற முற்கள் குத்தத்தான் செய்யும். ரோஜாவும் அதேபோலத்தான். ஆனால் அதுக்கு விநோதினி, வினோத்தின் ஒர்த், அவனின் முன்கோபத்தைவிட மிக அதிகம் என்று நம்பணும். நம்புவாளா?

   நீக்கு
 10. ராஜாஜி-காந்திஜி பற்றிய செய்தியைப் படிச்சிருக்கேன். நீங்கள் கொடுத்திருக்கும் வீடும் வண்டியும் "தேவன்" "எஸ்.வி.வி." இருவரையும் நினைவூட்டுகிறது. அநேகமாய் தேவனாய் இருக்குமோ? வேறே யார் சொல்லப் போகிறார்கள் எனக் காத்திருக்கேன். அநேகமாய் பானுமதி சரியாய்ச் சொல்லக் கூடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த "ஜாபிதா" "ஜாகை" எல்லாம் தேவன் கதைகளில் அடிக்கடி வரும்.

   நீக்கு
  2. //பழைய ஆட்கள் கண்டுபிடிக்கிறார்களா பார்ப்போம் // இதில் ஏதோ உள்குத்து இருக்கோ என்று நானே யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்தக் குழந்தை வலுவில் ஆஜராகிறதே

   நீக்கு
  3. தேவன் , எஸ் வி இருவருமே இல்லை!

   நீக்கு
  4. // இந்தக் குழந்தை வலுவில் ஆஜராகிறதே //

   ஹா...ஹா.. ஹா... சிரிக்க வைத்து விட்டீர்கள் நெல்லை..

   நீக்கு
  5. தேவன், எஸ்.வி.வி. இல்லைனா "கர்நாடகம்" என்னும் பெயரில் கல்கியோ?

   நீக்கு
  6. இதில் ஏதோ உள்குத்து இருக்கோ என்று நானே யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்தக் குழந்தை வலுவில் ஆஜராகிறதே//

   ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ நெல்லை நெல்லை!!!!

   உங்களுக்கு என்ன பொற்ற்றாமை!!! ஹா ஹா ஹா

   குழந்தை கண்டுக்காம போயிடுச்சே!!!

   கீதா

   நீக்கு
  7. இல்லை, காலம்பரயே பார்த்துட்டேன் நெல்லையின் வம்பை. அவசரமாப் போக வேண்டி இருந்ததால் ஒண்ணும் சொல்லாமல் போயிட்டேன். மத்தியானமா வந்து தி.ஜ.ர.வாக இருக்கலாமோ எனச் சொல்ல நினைத்தால் தி.கீதா கூகிளில் தேடிச் சொல்லிவிட்டார். எனக்கு "ஜாகை" "ஜாபிதா" இரண்டினால் கொஞ்சம் குழப்பம். இதை தேவன், கல்கி, எஸ்விவி ஆகியோரும் அடிக்கடி பயன்படுத்துவார்கள். தி.ஜானகிராமனும் அவ்வப்போது பயன்படுத்துவார்.

   நீக்கு
  8. ஆட்கள் என்று அழைத்ததால் அவர்கள் அப்பாலே போய்விட்டார்களோ, நெல்லை?..

   நீக்கு
 11. ஸ்ரீதரின் நகைச்சுவைக்கு வசனங்களே வேண்டாம். மாமனாரிடம் "கெத்து"க் காட்டும் மாப்பிள்ளை மாமியாரிடம் வழிவதும், மைத்துனர்களை விரட்டும் மாப்பிள்ளை, மனைவியிடம் அடங்கி இருப்பதும் வழி வழியாக நகைச்சுவைக்கான கருவாயிற்றே. மாருதியின் ஓவியம் "லக்ஷ்மி" எழுதிய "அத்தை" நாவலுக்கானது என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.. ஸ்ரீதரின் ஜோக்ஸ் இந்தவகையில் பிரபலம்.

   அத்தை.. சர்ர்ர்ரியான விடை கீதா அக்கா.

   நீக்கு
  2. ஓ அப்ப அத்தையா அது!! கீதாக்கா எனக்குக் கதை தெரியாது ஆனால் அம்மா அல்லது நெருங்கிய உறவாக இருக்க வேண்டும் நு சொல்லியிருக்கிறென் கீழே அத்தையாகவும் இருக்கலாம் நு நினைச்சேன் ஆனா சொல்லலை. ஏன்னா எனக்கும் என் அத்தைகளுக்கும் அத்தனை நெருக்கமான பாசம். நான் அத்தையை இப்படித்தான் கட்டிக் கொள்வேன்.

   கீதா

   நீக்கு
  3. என் பாஸுக்கும் அவர் அத்தை மேல் ஏக பாசம்.  பாஸின் இரண்டு பிரசவங்களுக்கும் அத்தை வந்து தங்கி இருந்து உதவி செய்திருக்கிறார்.  இத்ததனைக்கும் அவர் பயங்கர சுகர் பேஷண்ட்.    சொல்லப்போனால் பாஸ் அவர் அத்தை ஜாடை!

   நீக்கு
  4. ஆமாம், ஆப்ரிக்காவில் இருந்து வெகு காலம் கழித்துத் தாய்நாடு திரும்பி வரும் அத்தை! அவருக்கான வரவேற்பு, அதை ஒட்டிய குடும்பப் பூசல்கள், எதிர்பார்ப்புகள், மன வேறுபாடுகள், அத்தை திரும்பி இருக்கலாமோ அல்லது வந்திருக்கவே வேண்டாமோ என நினைப்பதுனு கதை லக்ஷ்மியின் பாணியில் குடும்பக் கதை தான். அவர் தென் ஆப்ரிக்காவில் இருந்து தாய்நாடு திரும்பியதும் எழுதிய முதல் கதை! குமுதத்தில் வந்தது. அப்போ எனக்கு ஒரே வருத்தம்/கோபம்! லக்ஷ்மி போன்ற எழுத்தாளர்கள் எல்லாம் குமுதத்தில் எழுதலாமா என்பதே! ஆனால் இது தொடராக வந்தப்போவே படிக்கக் கிடைத்தது. ஆனால் லக்ஷ்மி திரும்ப விகடனில் எழுதவில்லை என நினைக்கிறேன். ஏதோ ராயல்டி விஷயத்தில் பிரச்னை அல்லது வெளியீடு விஷயத்தில் பிரச்னை! விகடனோடு ராஜம் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்டது!

   நீக்கு
  5. அப்போது குமுதத்தில் வந்த லக்ஷ்மியின் இந்தக் கதையெல்லாம் நான் அப்போதே சுடச்சுடப் படித்திருக்கிறேன்.

   நீக்கு
  6. ஓ பாஸ் அவர் அத்தை ஜாடையா...பாருங்க பாஸுக்கும் எனக்கும் நிறைய பொருத்தம்!!! நானும் என் அத்தை ஜாடை!! ஹா ஹா

   கீதா

   நீக்கு
 12. தொடர்கதை அருமையாகச் செல்கிறது. இந்தப் பெண் வித்தியாசமாக இருக்கிறார்.

  ஆனால் சம்பவங்கள் சட் சட் என நடக்கின்றதே.. இது நல்லதுக்கா?

  அப்பாவிப் பையனுக்கு அகடவிகட சாமர்த்தியமான பெண் அமைந்தால் வாழ்க்கைக்கு நல்லது. ஆனால் இங்கு பையனும் முன்கோபி..

  ரொம்ப நல்லா கதை எழுதறீங்க. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நெல்லை... சம்பவங்கள் சட்சட்டுனு நடந்துமே நாலு வாரத்துக்கு வருகிறது!!! பாராட்டுக்கு நன்றி.

   நீக்கு
  2. அட நாலு வாரமா? அதுக்குத்தான் 2/4-லா?
   சென்ற பகுதியில் 1/4 என்பதை கால் என்று படித்துக என்னடா இது என்று புரியாமல் குழம்பிப் போனேன்.

   இந்தப் பகுதியிலும் இன்னொரு குழப்பம். ஸ்ரீராம் பெயருக்கு கீழே (2) ன்னு போட்டிருக்கே? அது என்ன?

   நீக்கு
  3. இன்னிக்குக் கதையின் 2 ஆவது பகுதி வெளியிடப்பட்டுள்ளது.

   நீக்கு
  4. புரிகிறது. சும்மாக்காச்சும்.
   மின்நிலா இதழ் ஆரம்பிச்சவங்களுக்கு இன்னும் பத்திரிகை வழக்கங்கள் அத்துப்படி ஆகவில்லையே எனபதை தெரியப்படுத்துவதற்காக.

   நீக்கு
 13. கடைசியில் உள்ள ஓவியம், திருமணம் முடிந்து வெகு நாட்கள் கழித்து அம்மாவைப் பார்க்கும் பெண் உணர்ச்சிப் பெருக்கில் கட்டிக்கொள்வது போல இருக்கு. இந்தப் படமே பல சம்பவங்களை மனதில் உருவாக்குது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட.. கதை எழுதி அனுப்பிடுவீங்க போலேருக்கே...! அது லஷ்மி எழுதிய அத்தை கதைக்கு துரை செல்வராஜு இவரின் அபிமான ஓவியர் வரைந்த படம்!

   நீக்கு
  2. ஹை நானும் சொல்லியிருக்கிறேன் புகுந்த வீட்டுக்குப் போன பெண் முதன் முதலாக அம்மாவைக் காண வரும் போதாக இருக்குமோ என்றும்.

   கீதாக்கா அது அத்தை ந்ற கதைன்னு சொல்லிட்டாங்க. இருந்தாலும் படத்துக்கான கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நெல்லை எழுதுங்க இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துகள். உங்க கதை வந்து ரொம்ப நாட்களாகிவிட்டதே.

   எனக்கும் இப்ப்டத்தைப் பார்த்ததும் கதை தோன்றுகிறது. ஆனால் பாதியிலிருக்கும் பல கதைகளில் மூன்றையேனும் முடிக்கமுடியுமான்னு பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது இன்னும் வேலைகள் கூடுகிறது.

   கீதா

   நீக்கு
  3. //துரை செல்வராஜு இவரின் அபிமான ஓவியர் வரைந்த படம்!//

   துரை செல்வராஜூ ஸாரின் அபிமான ஓவியர் என்று இருக்க வேண்டும்.

   நீக்கு
  4. கீதா...   இது ஒரு பொதுவான ஓவியம் என்பதால் அனைத்து திசைகளிலும் இதற்குக் கதை எழுதலாம் இல்லை?

   நீக்கு
  5. நெல்லை, அது அத்தையை அவரின் மருமகள்/அண்ணா பெண் கட்டிக்கொள்ளும் காட்சி!

   நீக்கு
  6. என்னிடம் பேப்பர் பேப்பராக இந்தத் தொடர்கதை இருந்தது. எங்கேயோ அத்தை பறந்து விட்டாள். இதைத் தொடர்ந்து மீண்டும் வசந்தம், இன்னும் இரு நாவல்கள் குமுதத்தில் லக்ஷ்மியால் எழுதப்பட்டு வந்தன. ஒரு பைன்டிங் என்னிடம் இருக்குனு நினைக்கிறேன். மீண்டும் வசந்தம் பிடிஎஃபாக இருக்கு/இருக்கணும்.

   நீக்கு
  7. எப்பவோ செய்த பைண்டிங் என்பதனால் கொஞ்சம் பிரித்தால் இற்றுப்போன நூல் உடைந்துபோன இங்கும் பக்கம் தனியாக வந்தாலும், அத்தை முழுசாக இருக்கிறாள்.  மீண்டும் வசந்தம் கடவுள் மாதிரி.  முடிவு இல்லை!

   நீக்கு
 14. நான் ரொம்ப ஓபன் டைப், வெளிப்படையானவன் என்றெல்லாம் யாருமே சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் நாம் வெவ்வேறு முகமூடிகளை அணிகிறோம் என்பதை நகைச்சுவை சொல்கிறது.

  அது சரி.. நான் நானாகவே யாரிடம்தான் இருக்கேன்? (என்னைப் பற்றிய கேள்வி இல்லை இது. எந்த ஒருவரைப் பற்றிய கேள்வி. புதனுக்கானது)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் எல்லோருமே ஒவ்வொரு உறவிடம் ஒவ்வொரு மாதிரிதானே இருக்கிறோம்?

   நீக்கு
  2. கரெக்ட் நெல்லை. முகமூடின்னு சொல்ல முடியாது. நடித்தல்னும் சொல்ல முடியாது. இவை இரண்டும் ஏமாற்றலில் சேரும்.

   ஆனால் உறவுகளை மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்றால் ஓபனாக வெளிப்படைன்னு சொன்னால் கண்டிப்பாகப் பிரச்சனைகள் வரும். எந்த உறவையும் மெயின்டெய்ன் செய்ய முடியாது. நாம் எப்படிச் சொன்னால் கரெக்ட்டாகச் செய்ய முடியும் பேச முடியும் என்பது கை வந்த சிறப்பான கலை. கஷ்டமான கலை என்பேன்.

   ஏமாற்றும் எண்ணத்துடன் நடிக்காமல், முகமூடி அணியாமல் அப்படி அணிவதை, நடிப்பதை நல்ல விதமாகப் பயன்படுத்தி நாசுக்காக மருந்தில் தேன் தடவிக் கொடுப்பது போல நல்லதைச் செய்யத்தான் வேண்டியிருக்கும். இல்லை என்றால் நம் குழந்தைகளே கூட நம்மைப் புரிந்து கொள்வது கடினம் தான்.

   பெண் மாமியாரிடம் சண்டை போட முடியுமோ?!!! ஹா ஹா ஹா ஹா போடலாம் நியாயமாகச் செய்தாலும் அதை சுற்றம் ஏற்காது. அவங்க பெண்களே கூட. அதைக் கண்டுக்காத பெண் என்றால் அப்படிச் செய்யலாம் ஆனால் உறவில் விரிசல் வரும். கணவன் மனைவுக்குள்ளேயே கூட. ஆனால் மாப்பிள்ளை மாமனாரிடம் சண்டை போட்டால் (ரேர் கேஸ்!) அவன் நேர்மை, வெளிப்படையா பேசுறார். மனதில் எதுவும் கிடையாது என்பார்கள்!!!

   எப்போதேனும் வரும் கோபத்தைப் பற்றிச் சொல்லலை.

   நிறைய சொல்ல முடியலை...

   கீதா

   நீக்கு
  3. கீதா...   இன்னும் நிறைய யோசிக்கலாம்.  சொல்லலாம்.  இடம் போறாது.

   நீக்கு
  4. மாமியார் ஒரு தவறு செய்து மாட்டுப்பெண் அதைத் திருத்தினால் கூடத் தப்பு என்பார்கள். கர்வம் என்பார்கள். பணிவாகச் சொன்னாலும் எடுபடாது! அதே மாப்பிள்ளை மாமனாரிடம் சொல்லலாம். ஆனால் யாரிடம் பேசினாலும் முகமூடி தேவை என்பது என்னமோ உண்மை!

   நீக்கு
  5. ஒரு குறிப்பிட்ட வயசுக்குப்பின் ஒரு அப்பா தன் மகனுக்கு சுதந்திரமா அட்வைஸ் செய்ய முடியுமா சொல்லுங்க....     ஆனால் பிள்ளை எப்பவுமே அப்பாவிடம் சுதந்திரமா பேசலாம்!

   நீக்கு
  6. நிச்சயம் முடியாது. பையர்கள் கேட்கவும் மாட்டாங்க. சிரிப்பாங்க! ஆனால் அதுவே அவங்க நமக்கு வண்டி வண்டியா புத்திமதி சொல்லுவாங்க! இன்னும் சொல்லப் போனால் எங்க பையர் எங்களை நீங்க ரெண்டு பேரும் ஏமாந்துடறீங்க வேலை செய்யும் ஆட்களிடம் எல்லாம் என்று சொல்கிறார்கள். என்னத்தைச் சொல்றது! :)))))))

   நீக்கு
 15. காந்தி ராஜாஜி சம்பவம் பார்த்தால் ஒவ்வொரு பிரபலத்துக்கும் ஒரு அமித்ஷா தேவையா இருக்குன்னு புரியுது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது காந்திஜியின் எளிமை பற்றி கீதா அக்கா சிற்றுரை ஆற்றுவார்!

   நீக்கு
  2. @ஶ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சிற்றுரை என்ன பேருரையே ஆற்றலாம்! அவ்வளவு பண்ணி இருக்கார் அந்த மனுஷர். அதிலும் அந்தக் கேரள "மாப்ளா" கலவரம் இருக்கே! அம்பேத்கரே அவரைக் குறை சொல்லி இருக்கார்னா பார்த்துக்குங்க! :(

   நீக்கு
  3. தெரியும்.  அதனால்தான் முடிந்த வரை சுருக்கமாக என்று சொன்னேன்! 

   நீக்கு
 16. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. மாருதியின் fantasy, ஓவியமாகக் காகிதத்தில் வந்து இறங்கியிருக்கிறது!
  ‘ஸ்ரீதரில்’ மாமியாருக்கு முன் மருமகனின் தோற்றம் கொள்ளை அழகு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா.. ஹா.. ரசனை. நன்றி ஏகாந்தன் ஸார்

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா...

   ச்சே பாவம் மருமகன். மாமியாரைப் பார்த்துப் பேசக் கூச்சப்பட்டுக் கொண்டு நிற்கிறார். நீங்க வேற!!!ஹா ஹா

   கீதா

   நீக்கு
 18. வணக்கம் சகோதரரே

  கதம்பத்தில் சிறுகதை விநோதினியால் சரளமாக உரையாடியபடி விறுவிறுப்பாக செல்கிறது. இன்னமும் இரண்டு வாரங்கள் இந்த உணவகத்திலேயே பேசி முடிவாகி விடும் என நினைக்கிறேன். அனேகமாக இரண்டாவது வார ஆரம்பத்தில் திருமணம்..விநோதினி அவரது சந்தேகங்களை ஒவ்வொன்றாக களையும் போது திருமணம் அடுத்த வாரம் கூடி வந்து விடுமென்றுதான் தோன்றுகிறது. இல்லை, தலைப்புக்கேற்றபடி எல்லாமே வினோதங்களா? பார்க்கலாம்.. கதையை நன்றாக நகர்த்திச் செல்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ஒவ்வொருவராக அந்த உணவகத்திற்குள் சொல்லி வைத்தாற் போல நுழைந்தால், மூர்த்திக்கு மட்டுமில்லை... நமக்கும் ஆச்சரியமாக உள்ளது.

  /சர்வர் இந்தப் பக்கமே நீண்ட நேரமாய் வரவில்லை. தூரமாய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார். மூர்த்திக்கு சந்தேகமாய் இருந்தது./

  அட... ஒருவேளை அவரும் இதில் உடந்தையாக இருப்பாரோ என்ற எண்ணம் எனக்கும் வருகிறது. அதற்கு அடுத்த வாரம் இதே நாள் பதில் கிடைக்குமென இந்த வியாழன் புன்னகை மட்டும் பூக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கற்பனை கன்னாபின்னா என்று திக்கெட்டும் பறக்கிறது கமலாக்கா... ஏகப்பட்ட யூகங்கள். சூப்பர். உங்கள் கற்பனையைத் தூண்டி விட்டு விட்டேன் போல...!

   நீக்கு
 19. கதை நல்ல சுவாரஸ்யமாக போகிறது.

  இன்று பெரியவர்கள் வெறும் பார்வையாளர்களை சிறியவர்களே அதிகம் பேசுகிறார்கள் தொடர்கிறேன் ஜி...

  ஆணை அவன், இவன் என்று சொல்லும் இந்த இளைய தலைமுறையின் போக்கு எனக்கு பிடிபடவில்லை.

  அதேபோல் ஆண் பெண்ணை வாங்க, போங்க என்று அழைக்கிறான்.

  தொலைக்காட்சி நிகழ்வுகளில் பாருங்கள். ஆண்களும், பெண்களும் சோபாக்களில் உட்கார்ந்து இருப்பதை...

  ஆண் மரியாதையாக உட்கார்ந்து இருப்பான், பெண் கண்ணியக்குறைவாக உட்கார்ந்து இருப்பாள்.

  இனி பெண்ணாதிக்கமே ஓங்கி நிற்கும்.
  எலிக்கொரு காலம் வந்தால், கிளிக்கொரு காலம் வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி ஜி.

   ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் இரண்டுமே சரியில்லைதானே? உங்கள் கருத்துகளுக்கு நண்பர்களும் தங்கள் கருத்தைச் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.

   நீக்கு
  2. // எலிக்கொரு காலம் வந்தால், கிளிக்கொரு காலம் வரும். //

   ஹா... ஹா... ஹா...

   நீக்கு
  3. கிளியின் காலமும் கிலியைத்தான் தூண்டி கலக்கமுற வைக்கிறது.. நான் அவர் கருத்தை பார்த்தவுடன் அப்போதே சொல்ல வந்தேன். அதற்குள் கிளிகள் காப்பிக்கு வந்து விட்டதால், கலக்க நானும் எழுந்து போய் விட்டேன். ஹா.ஹா.ஹா.

   நீக்கு
  4. செல்லக் கிளிகளுக்கு காபி கொடுத்தாச்சு என்றால் இந்தக்கிளியின் கிலிக்கு பதில் சொல்லலாமே!  எலி எப்போது வரும்?!!

   நீக்கு
  5. ஆமாம்.. இதில் கிளி யாரு.. எலி யாரு.. இந்த குழப்பம் எனக்கு அப்போதிலிருந்தே தீரவில்லை. சகோ கில்லர்ஜி அவர்களே வந்து புதிரின் முடிச்சை அவிழ்த்தால்தான் எலி யார்? என்பது தீர்க்க தரிசனமாக விளங்கும். 🤔🤔.

   நீக்கு
  6. எலி ஆண்பால், கிளி பெண்பால்...
   இருப்பினும் எலி கிளியை கிலியாக்கி கிழித்து விடும். என்பதுதான் இன்றைய பெண்ணாதிக்கத்திலும்...

   //ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் இரண்டுமே சரியில்லைதானே ?//
   நிச்சயமாக இரண்டுமே சரியில்லை.

   என்னில் பாதி நீ என்பதே உண்மை.

   நீக்கு
  7. புரிந்து கொண்டேன் சகோ.. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் ஆதிக்கங்கள் செய்வதை விடுத்து விட்டுத்தரும் பண்பில்தான் நம் கலாச்சாரமே இருக்கிறது. சின்ன குழந்தைகளை கூட மரியாதை தந்து பேச அன்று கற்றுக் கொடுத்தார்கள். இன்று கட்டிய கணவனை அனைவர் முன்னிலையிலும், வா, போ என்று பேசும் கலாச்சாரம் எப்படியோ உள்ளே நுழைந்து விட்டது. இதை நானும் வெறுக்கிறேன். என்ன செய்வது? நம் வெறுப்புக்கு மதிப்பென்பதே இல்லையே...! நன்றி.

   நீக்கு
 20. கதை பாரதியார் எழுதியது?
  எதிர்பார்த்த விதம் தான் செல்கிறது தொடர் கதை
   இந்த பழைய பைண்டிங்குகளை இன்னமும் காப்பாற்றி வைத்திருக்கிறீர்களே! ஆச்சர்யம் தான். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜெயக்குமார் சந்திர சேகர் ஸார்...   கதை பாரதியார் எழுதியது இல்லை.  அவர் நடை இன்னும் வித்தியாசமாக அந்தக் காலத்துக்குத் தக்கவாறிருக்கும்.

   பழைய பைண்டிங் எல்லாம் அப்பாவின் பொக்கிஷம்.  அதை விடாமல் கைப்பற்றிக் கொண்டேன்.

   நீக்கு
  2. பாரதியாரின் உரைநடையே வேறு விதமாக இருக்கும். கொஞ்சம் மணிப்ரவாளம் கலந்து வரும்! ஷ, ஸ, ஹ எல்லாம் போட்டிருப்பார். ஜாகை, ஜாபிதாவெல்லாம் வராது.

   நீக்கு
 21. வணக்கம் வணக்கம்!

  கதை சூப்பராகப் போகிறதே! ஸ்ரீராம். ஏன் வினோத் மூர்த்தியிடமே சொல்லலாமே. மூர்த்தியும் லவ் மேரேஜ். அப்ப என்னவாக இருக்கும்?!!

  பசங்க சும்மா ஒரு ட்ராமா போல மூர்த்திகிட்ட விளையாடறாங்கலோ. மூர்த்தி செமையா மிரண்டுவிட்டார்!! ஹா ஹா ஹா ஹாஹா

  கீதா

  கதைல ஏதோ கொண்டு வரப் போகிறார் ஸ்ரீராம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா...    அந்த எதிர்பார்ப்புதான் மூலதனம்!

   நீக்கு
  2. மூர்த்தியும் காதல் கல்யாணம் என்பதே இந்த வாரம் தான் ஶ்ரீராம் சொல்லி இருக்கார் இல்லையோ!

   நீக்கு
  3. ஆமாம்.  இந்த வாரம்தான் அந்த விஷயம் வந்திருக்கு!

   நீக்கு
 22. கடைசில அந்த வெயிட்டர் பார்க்கறது கூட மூர்த்திக்குச் சந்தேகம் வருதே!!!

  மண்டை குடையுது. நல்ல காலம் ..போன பதிவில் சொல்லியிருந்தேனே ...நான் எழுதும் கதை வேறு மாதிரி!!!

  எப்படியிருந்தாலும் சுபமாக முடிய வேண்டும். எனக்கென்னவோ இப்பெண் தூது போலத் தோன்றியது சென்ற பதிவில். இப்போது வேறு போல போகுது..ம்ம்ம்ம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எப்படியிருந்தாலும் சுபமாக முடிய வேண்டும். //

   பாவம் மூர்த்தி...   அவர் மனசில என்ன இருக்கோ!

   நீக்கு
 23. ஆரம்பப் பக்கங்கள் கடைசிப் பக்கங்கள் காணோம்! எழுத்தாளர் பெயர் தெரியவில்லை. எனக்கு என்நாடகப் போட்டி கதை நினைவுக்கு வந்தது எபி வசகர்கள் அநேகமாக 60 ஐ தாண்டியவர்களாக இருப்பார்கள் எனும்ஸ்ரீராமி அனுமானம் சரியாகத்தான் இருக்க வேண்டும் அவர்களும் மறதி நோய் உள்ளவர்களல்ல என்றும்ஸ்ரீராம் நினைக்கிறார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எம் பி ஸார்...   எனக்கும் உங்கள் நாடகத்தலைப்பு ஞாபகம் வந்தது.

   //60 ஐ தாண்டியவர்களாக இருப்பார்கள் எனும்ஸ்ரீராமி அனுமானம் சரியாகத்தான் இருக்க வேண்டும் அவர்களும் மறதி நோய் உள்ளவர்களல்ல என்றும்ஸ்ரீராம் நினைக்கிறார்//

   நினைக்கிறேன் என்று சொல்வதை விட விரும்புகிறேன் என்று சொல்லலாமா?

   நீக்கு
  2. பழைய கதைகளுக்கும் படங்களீலும் கேள்வி கேட்டதால்அவற்றுக்கு பதில் சொல்ல அவர்கமறதி நோய் இல்லாதவர்களாக இருக்க விரும்புகிறேன்

   நீக்கு
 24. காந்தி பற்றியது சுவாரசியமான தகவல். இது வரை அறியாதது. இப்படி யாரேனும் எழுதுவதை வைத்துத்தான் அறிய முடிகிறது இல்லையா. ராஜாஜி நல்ல தெக்கினிக்கி பயன்படுத்தியிருக்கிறார்!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னே?  ராஜாஜி ராஜதந்திரி அல்லவா...   சமாளித்திருக்கிறார்!

   நீக்கு
 25. ஜோக்!! ஹா ஹா ஹா ஹா

  இது இயல்பான ஜோக். யதார்த்தம். இது பெண்ணுக்கும் பொருந்தும்தான். இப்படித்தானே. கிட்டத்தட்ட எல்லோருமே. எல்லோரிடமும் ஒரே போல் இருக்க முடியுமா?

  கீதா

  பதிலளிநீக்கு
 26. மாப்பிள்ளை மாமனாரிடம் கத்தினால், சண்டை போட்டால், அதுவும் அநாகரீகம். ஆனால் அதைக் கூட நம் சமுதாயம் ஏற்கும். மருமகள் மாமியாரிடம் சண்டை போட்டால்? அல்லது தனது எதிர்க்கருத்தைச் சொன்னால்? ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் அப்பாவுக்கும் அவர் மாமனாருக்கும் சரி, என் அப்பாவுக்கும் அவர் மாப்பிள்ளைக்கும் சரி...    அடிக்கடி அடிதடி சண்டை போல விவாதம் மிகச்சூடாய்ப் பறக்கும்!  பார்ப்பவர்களுக்கு பயமாய் இருக்கும்.  என்னாகுமோ ஏதாகுமோ என்றிருக்கும்.  ஆனால் கொஞ்ச நேரம் கழித்து சுமுகமாய் பேசிக்கொள்வார்கள்.

   நீக்கு
 27. அந்தக் கதை தி ஜ ரங்கநாதன்!!!! நம்ம ஃப்ரென்ட் கூகுள் தேவைதை உதவினார்!

  நான் ஓல்ட் இல்லையாக்கும்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கப்பா இந்தக் குதிருக்குள்ள இல்லை மொமென்ட் ஹாஹா

   நீக்கு
  2. இது போங்கு. நாங்களெல்லாம் மண்டையை குடைந்து கொண்டிருக்கும் பொழுது, பிட் அடித்து பாஸ் பண்ணுவது என்ன நியாயம்?

   நீக்கு
  3. அட....!..    கூகுள் செய்து சரியாய் விடை சொல்லி விட்டீர்கள்!

   நீக்கு
  4. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா நெல்லை அண்ட் பானுக்கா சிரித்துவிட்டேன்!!!!

   கீதா

   நீக்கு
  5. அட....!.. கூகுள் செய்து சரியாய் விடை சொல்லி விட்டீர்கள்!//

   ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம்....

   ஏன் கூகுள் சில சமயம் தப்பா சொல்லும்னா!!?? ஆமாம்ல !! ஹை பாருங்க பானுக்கா பிட் அடிச்சாலும் கரெக்ட்டா அடிச்சுருக்கேன்

   கீதா

   நீக்கு
  6. அக்கா நமக்கு விடை தெரியலைனா அறிந்தவர்களிடம் கேட்பது சரிதானே!!! ஹிஹிஹிஹிஹி...

   (நான் ரொம்ப குட்டிப் பொண்ணு எனக்கு எப்படி அந்தக்காலம் எல்லாம் தெரியும். இந்தக்கால்மே தெரியலை!!! ஹிஹிஹி)

   கீதா

   நீக்கு
 28. அந்த ஓவியம் சூப்பர்...(மாருதி?) . முக பாவனைகள் என்னென்னவோ எண்ணங்களை விரிய வைக்குதே. பெண் அண்ட் அம்மா? அதைப் பெரிதாக்கி வாசிக்க முயன்றேன் அல்லது நெருங்கிய மனதிற்குகந்த உறவாக. ஆனால் அப்போதெல்லாம் எல்லோரையும் அணைக்கும் பழக்கம் இல்லையே. முக பாவனைகள் என்னென்னவோ கற்பனைகளை மனதில் விதைக்கின்றன.
  இப்போதெல்லாம் ஊரிலிருந்து வரும் போதே அடிக்கடி வந்தாலும் கூட எங்கள் வீட்டுக் குழந்தைகள் என்னை அணைத்துக் கொள்வதுண்டு. மகன் உட்பட. மகன் தினமுமே. இந்தத் தொற்றுக் காலத்தைச் சொல்லவில்லை அதற்கு முன்னான காலம்.

  ஏதோ மனக்க்ஷ்டத்திலோ என்று நினைத்தால் தலையில் கொண்டை ரோஸ் எல்லாம் இருக்கிறது....கல்யாணம் ஆகி புகுந்த வீடு போய் அடுத்து முதன் முறையாகப் பிறந்த வீடு வருகிறாளோ!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக்காலத்தில் யார் இப்படி உறவுகளை அணைத்துக் கொள்கிறார்கள்!  கொரோனா காலம் என்பதால் சொல்லவில்லை...     பொதுவாகவே இந்த நெருக்கம் இப்போது மிஸ்ஸிங் என்றுதான் தோன்றும்.  எல்லா உறவிலும் ஏதோ ஒரு போலி,  விலக்கம் இருபிப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?!!

   நீக்கு
  2. அத்தை தான் பல காலம் கழிச்சு முதல் முறையாகப் பிறந்தகம் வருகிறார். மருமகள் வரவேற்கிறாள்.

   நீக்கு
  3. உண்மைதான் ஸ்ரீராம் நம் காலத்தில் இருந்த நெருக்க்ம் இப்போது இல்லைதான். நான் ரொம்பவே என் அத்தை பாட்டி, மாமா எல்லாரையும் மிஸ் செய்கிறேன்.

   ஓ கீதாக்கா அத்தை பிறந்தகம் வருகிறாரா. அத்தை மருமகளா! அட! அப்ப இன்னும் என்னென்னவோ வருதே பார்ப்போம் எழுத முடிகிறதா என்று.

   என் அத்தையின் நினைவு வந்துவிட்டது. என்னை அவரது சிறு வயதில் டார்லிங்க் என்றுதான் கூப்பிடுவார். அவருக்கு நான் தான் மூத்த மகள் போல.

   கீதா

   நீக்கு
  4. அண்ணன் பெண்ணைத் தனக்கு வந்த போட்டியாக நினைக்கும் "அத்தைகள்" உண்டு. தன் அண்ணன்/சகோதரன் சம்பாதனையில் அவன் பெண்ணுக்கும் பங்கு போகிறதே என நினைப்பவர்கள் உண்டு. அண்ணா கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தை பெற்றதால் அதிலும் பெண் குழந்தை! தனக்குச் செய்ய வேண்டியவற்றில் குறைவு ஏற்பட்டது என நினைப்பவர்கள் உண்டு.

   நீக்கு
  5. இது ரொம்பக் காமன் இல்லை என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  6. இல்லைதான். இன்னும் சொல்லப் போனால் இந்த அத்தைகளின் "அத்தைகள்" எல்லாம் மிகப் பெருந்தன்மையுடன் இருந்திருக்காங்க. அதைப் பார்த்தும், அனுபவித்தும் இவங்களுக்கு நாமும் அப்படி இருப்போம்னு தோணுவதே இல்லை. :(

   நீக்கு
 29. ஸ்ரீராம் கதை நிஜம்மாவே சூப்பரா எழுதறீங்க. இன்று காலை ஆ இன்று வியாழன், அந்தப் பொண்ணு வினோதினி, மூர்த்திக்கு இன்னும் என்னென்ன ஆச்சரியம் கொடுத்து மூர்த்திய மிரள வைக்கப் போகுதோன்னு மொதல்ல கதைய வாசித்துவிட்டேன். இப்ப ஒரே சஸ்பென்ஸா போகுது.

  நெல்லை கூட இந்த சஸ்பென்சை தாங்கிக்கிறார்னா பாருங்க!!! ஹா ஹா ஹா ஹா (தொடர்கதைனா ஒரேயடியாத்தான் படிப்பேன்னு சொல்ற ஆளு!!)

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா...     

   நெல்லை தொடர்கதை என்றால் சேர்த்து வைத்து மொத்தமாக வாசிப்பேன் என்று சொல்லி இருக்கிறாரே என்று நானும் யோசித்தேன்.  நல்லவேளை...   உடனே உடனே படித்து விடுவது எனக்கும் சந்தோஷம்.

   நீக்கு
 30. ராஜாஜி ராஜாஜிதான்!
  நகைச்சுவை தேவனுடையது என்று நினைத்தேன். இல்லையா? அடுத்த சாய்ஸ் சாவி.
  கூகுள் உதவியோடு ரங்கநாதன் என்று கீதா ரங்கன் சொல்கிறார். சுஜாதாவை நிறைய பேர்கள் காபி அடித்ததைப் போல, தேவனையும் காபி அடித்திருக்கிறார்கள் போல.
  அந்தப்படம் அத்தைக்கானது என்று பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா...   ராஜாஜி ராஜாஜிதான்...   ஆம்!

   கூகுள் செய்து கண்டுபிடித்தது சரியான விடையே...   உங்களுக்குத் தெரிந்திருக்கும்...  தி ஜ ர யாரையும் காபி அடிக்கக் கூடியவரல்ல.  மஞ்சரி ஆசிரியராய் இருந்தவர்.

   நீக்கு
 31. இந்தக்கால பெண்களை படம் பிடித்திருக்கிறார் ஶ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பானு அக்கா! உறவில், நட்பில் எவ்வளவு பேரைப் பார்க்கிறோம்!

   நீக்கு
 32. ஶ்ரீராமின் கதையை படித்ததும் ஒரு உண்மை சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒரு நண்பரின் மகனின் காதலிதான் இந்த வினோதினி போல அவரிடம் நேரிடையாக வந்து பேசினாளாம். இந்த மூர்த்தியைப் போல அவரும் வாயடைத்துப் போனாராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா...     இப்படி உண்மையாகவே நடந்திருக்கிறதா?   சத்தியமாய் எனக்கு அது தெரியாது.   இது என் கற்பனையில் உதித்ததாக்கும்!

   நீக்கு
 33. நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது கதை..

  இப்படிப்பட்ட விநோதினி எல்லாம் நம்ம கதைக் களத்துக்குள் வரமாட்டேன் என்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இப்படிப்பட்ட விநோதினி எல்லாம் நம்ம கதைக் களத்துக்குள் வரமாட்டேன் என்கிறார்கள்...//

   ஆஹா...   உங்கள் மாந்தர்கள் வெள்ளந்தி மனிதர்கள்.  அவர்களுக்கு நல்லது தவிர வேறு எதுவும் தெரியாது!

   நீக்கு
 34. ராஜாஜி பற்றிய தகவலை ஏற்கனவே படித்திருக்கிறேன்...

  இந்த மாதிரியான சாதுர்யம் எல்லாம் இப்போது ஏது!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது அப்படிச் செய்தால் மீடியா பிரச்னை செய்துவிடும்.  ஏகப்பட்ட கதைகள் உலாவத் தொடங்கி விடும்.  ஒவ்வொரு சேனலிலும்  நான்கைந்து வேலையற்றவர்கள் அமர்ந்து நிகழ்ச்சியை நடத்தும் அறிவாளியுடன் சேர்ந்து காச்மூச்சென்று கத்துவார்கள்!

   நீக்கு
 35. என்னது அடுத்து வினோதின் அம்மா வந்தார்களா...? ஹோட்டலுக்கு பின்புறம் ஹோட்டல் ஓனரின், கல்யாண மண்டபம் உள்ளதா...? இங்கிட்டு 10 பேர், அங்கிட்டு 10 பேர் வந்து கொண்டு இருக்கிறார்களா...? அன்பாக அட்சதை மட்டும் போட்டால் போதுமா...? மூர்த்தி சர்வரை அழைத்து, இரண்டாவதாக காஃபி கேட்டார்...

  பதிலளிநீக்கு
 36. கதைக்கும் ஸ்ரீதர் 'ஜோக்'கிற்கும் சம்பந்தம் இல்லையே...?...!

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் சகோதரரே

  அற்புதமான தகவல். ராஜாஜியின் சமயோஜித அறிவால் அன்று காந்தியடிகளின் உடல்நிலைக்கு ஆபத்தின்றி காத்திருக்கிறது. நண்பர்கள் என்றால், இப்படித்தான் இருக்க வேண்டுமென இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது.

  கதையின் ஆசிரியர் யார் என்பது சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் கூறி விட்டார்.

  அந்த ஓவியமும் அழகு. அதன் விடையையும் சகோதரிகள் கை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.

  ஸ்ரீதர் காமெடிகள் நன்றாக உள்ளது. "இதைப் பார்த்தாவது யார் எலி, யார் கிளி என்பது புரிய வேண்டாம்.. என்று சகோதரர் கில்லர்ஜி முணுமுணுப்பது கேட்கிறது." இருப்பினும் அவரே வந்து சொன்னால் நன்றாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் வந்து மற்றவற்றையும் படித்து ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 38. ஸ்ரீராம்ஜி கதை வெகு சிறப்பாக நகர்கிறதே அதுவும் வேகத்துடன். ஒரு வேளை அடுத்த பகுதியிலேயே கல்யாணமும் நடந்துவிடுமோ! ஆனால் முந்தைய பகுதியில் தொடத்தைப் பார்க்கும் போது அடுத்த என்னவாக இருக்கும் என்றும் ஏன் வினோத் தயங்கினான் என்பதெல்லாம் யோசிக்க வைக்கிறது.

  இப்போதைய யுவ யுவதிகள். அவர்கள் சிந்திப்பதும் செயல்படுத்துவதும் மிக வித்தியாசமாக இருந்தாலும் சில ரசிக்கும்படியாகவும் இருக்கிறதுதான். இங்கு வினோதினி கதாபாத்திரம் போல.

  ஜிஎம்பி சார் கூட நடுவில் சில பக்கங்களைக் காணோம் என்பது போல உங்கள் தொகுப்பில் கடைசியில் பக்கங்களைக் காணவில்லையோ.

  காந்தி பற்றிய தகவல் புதிது. சுவாரசியம். ராஜாஜியின் செய்கை சமயோஜிதம்.

  ஜோக் ரசித்தேன். ஒரு வேளை திருமணமான புதிதோ.

  அனைத்தும் ரசித்தேன்

  துளசிதரன்

  ஓவியம் அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துளஸிஜி. ஜி எம் பி ஸார் கூட அதேபோல நினைவு கூர்ந்திருக்கிறார். கதை பற்றிய உங்கள் கருத்துரை / பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. என்நாடக்த்தில்கடைசியில்தான் சில பக்கங்களைக் காணோம் என்று எழுதி இருக்கிறேன் நடுவில் அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

   நீக்கு
 39. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே!! நேற்று செக் வந்தார்...இன்று.________________வருகிறார்..

  ஆ நான் "யானை" என்று சொல்லிவிட்டேனே..ஓடிப் போகிறேன் ஓடிப் போகிறேன்...இனி இன்றைக்கு இந்தப் பக்கம் வர மாட்டேனே!!! ஹா ஹா ஹா ஹா ஹ

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆஆஆஆ அதாரது ஆனையைக் கூப்பிட்டது இங்கின கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... எனக்கு கும்மியடிக்க முடியவில்லை... இன்று ஸ்கூல்ல்ல்ல்ல்... இருந்தாலும் கீதாவை விடமாட்டேன்ன்ன்ன்ன்ன் இது மதம் கொண்ட ஆனையாக்கும்:)... ஹா ஹா ஹா

   நீக்கு
  2. ஸ்ரீராம்.....மிய்யாஆஆஆஆஆவ்!!! சத்தம் வ்ந்திருச்சு பாருங்க!

   கீதா

   நீக்கு
  3. ஹா ஹா ஹா நினைச்சேன் அதான் இங்கன வர மாட்டேன்னு சொல்லி ஓடினேன்..!!!!!

   கீதா

   நீக்கு
  4. ஆனைக்கும் பூனைக்கும் வித்தியாசம் இருக்கே கீதா... மியாவ்...

   நீக்கு
 40. //என்ன பிரச்னை இருந்தால்தான் இனிமேல் என்ன செய்ய முடியும்? ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டாங்க..."//

  //அங்கிள்... அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வேணாம்... இன்னிக்கு எல்லாம் முடிவு செய்துடலாம். நீங்க பேசறதைப் பார்க்கும்போது உங்களுக்கு சம்மதம்னு தெரியுது...கரெக்ட்டா?//

  ஆமாம், அப்புறம் என்ன கொட்டுமேளம் கொட்ட வேண்டியதுதானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொட்டிடலாம்தான்... ஆனாலும்...்்

   வாங்க கோமதி அக்கா...

   நீக்கு
 41. பழைய பொக்கிஷபகிர்வு அருமை.
  கடவுள் மாதிரி கிடைத்த புத்தகம், ஸ்ரீதர் ஜோக், மற்றும் புதிர் ஓவியம் என்று வியாழன் பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
 42. நெல்லை பாவம்.
  பழைய இதழ், பழைய ஓவியம், பழைய எழுத்தாளர், பழைய கதை, இதில் எல்லாம் யாருக்கும் ஆர்வம் இல்லை என்று அவரும் தான் எத்தனை தடவை சொல்வார்? அவரைப் போய் இப்படி படாத பாடு படுத்தலாமா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைக்கு ஆர்வம் இல்லைனா என்ன? மத்தவங்கல்லாம் இருக்கோமே!

   நீக்கு
  2. விளக்கை மட்டுமா அணைத்தார்?
   இன்னும் விடியவே இல்லை என்று அவர் செய்ததை வைத்து கவிதையே எழுதலாம்

   நீக்கு
  3. பழைய இதழ், பழைய ஓவியம், பழைய எழுத்தாளர், பழைய கதை, இதில் எல்லாம் யாருக்கும் ஆர்வம் இல்லை என்று அவரும் தான் எத்தனை தடவை சொல்வார்?//

   ஜீவி அண்ணா அவர் சொன்னது பொதுவாக. இங்குள்ளவர்களில் நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கிறதே. அவரவர்க்குத் தெரிந்தததையும் சொல்லியிருக்கிறார்களே. வலையில் அதிகம் எதிர்பார்க்க இயலாது. எல்லோருக்கும் நேரம் இருக்க வேண்டுமே. அது கொஞ்சம் கஷ்டம்தான்.

   கீதா

   நீக்கு
  4. இப்போதான் ஜீவி சாரின் இந்தப் பின்னூட்டம் பார்க்கிறேன்.

   //பழைய எழுத்தாளர், பழைய கதை// - இதை மட்டும்தான் நான் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன். எனக்கு பழைய இதழ்கள் (பாஸிடிவ் ஆ நினைங்க.. magazines ஹாஹா) பிடிக்கும், அதிலும் அதில் நிறைய டிட்.பிட்ஸ் இருக்கும், விளம்பரங்கள் இருக்கும்..இதெல்லாம் அந்தக் காலத்தை நமக்கு நினைவுபடுத்தும். நானே நிறைய தடவை சொல்லியிருக்கேன். யாராவது எனக்கு 70-85 வரையுள்ள குமுதம் இதழ்கள் கொடுத்தாங்கன்னா, கும்பிடு போட்டுவிட்டு அவைகளைப் படித்துவிட்டுக் கொடுப்பேன். (சாவி, விகடன் இவைகளும்தான். To some extent கல்கி). பழைய ஓவியங்கள் - நான் அவற்றின் ரசிகன். ஓவியங்கள் மீது எனக்கு தணியாத ஆர்வம் உண்டு.

   எழுத்தாளர்கள் என்று சொன்னீங்கன்னா, அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். எனக்கு கடுகு சார் கதைகள், தேவனின் து.சா, கல்கி வரலாற்று நவீனங்கள், சாண்டில்யன் சில நாவல்கள்-அதிலயும் அந்தக் காலத்தில் படிக்கும்போது, இரண்டுபேர் காதல் வயப்பட்டு பேசற எல்லாத்தையும் ஸ்கிப் பண்ணிவிடுவேன், நிஜமா, மர்மக்கதைகள், பயணக்கட்டுரைகள், தன் வரலாறு, அனுபவங்கள் போன்றவை இப்போவும் ரசிக்கும்படி இருக்கும். அதுக்காக, ஒரு பக்கக் கதைகள், பல எழுத்தாளர்களின் கதைகள் - இவைகளையெல்லாம் படிக்க விருப்பமில்லை-நேரமும் இல்லை. திஜா லாம் படித்ததே இல்லை. அப்புறம் நிறையபேர் சொல்லி, சமீபத்துலதான் மோகமுள் பாதி படித்திருக்கிறேன்.

   நான் எழுத்தாளர் சாரு எழுதிய பழுப்பு நிறப் பக்கங்கள் புத்தகங்களை, அவரது பொதுவான எழுத்துபோல இருக்கும் என்று நினைத்து வாங்கிவிட்டேன். அதில் பழைய எழுத்தாளர்களைப் பற்றி அறிமுகம் செய்திருப்பார். எனக்கு அதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. அதனால் அந்த எழுத்தாள ஜாம்பவான்களுக்கு ஒரு குறையும் கிடையாது. எனக்கு ஆர்வம் இல்லை. அவ்ளோதான்.

   கதைகள் - காலத்தை மீறி நிற்கும் கதைகள்தாம் இப்போதும் யாரும் படிக்கும்படியாக இருக்கும். அந்தச் சமயத்தில் புதுமையாக இருந்து மற்றவர்கள் ரசித்தது, இப்போது பழம்பஞ்சாங்கமாக இருக்கும்.

   நீக்கு
  5. ஹையோ ஆண்டவா நெல்லைத்தமிழன் கொமெண்ட் போடுகிறாரா இல்லைக் கதை எழுதுகிறாரோ?:)) வரவர அதிரா மாதிரி நிறையக் கதைக்கப் பழகிட்டார் ஹா ஹா ஹா:))

   நீக்கு
  6. இல்லை அதிரா...இதை சுருக்கமாச் சொன்னா தவறான பொருள் கொள்ள வாய்ப்பு இருக்கு.

   நீக்கு
  7. ஆமாம்.   சில சமயம் விளக்கம் தேவைதான்!

   நீக்கு
 43. ஆஹா வேகமாகப் போகிறது கதை... இப்படி அனைத்தையும் ஒரேயடியாகச் சொல்லிட்டால் எப்படித் தொடரப்போறீங்களோ என மீ திங்கிங்:)... ஆ கதை எழுதுவதென்பது ஶ்ரீராமுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப்போலாம் என கெள அண்ணன் சொல்லிட்டார்:)...
  தொடருங்கோ... நானும் தொடர்வேன் என்றுதான் நம்புகிறேன்:)....
  இதுவும் ஸ்கூலிலிருந்துதான் கொமெண்ட் போடுகிறேன்.

  எனக்கு கெட்ட கோபமாக வரும் விசயம்.. வாடா போடா என்பது... தமக்குள் சொன்னால் ஓகே, அடுத்தவர் முன் சொல்லும்போது, அப் பெண் மீதிருக்கும் மதிப்புக் குறைந்து விடுகிறது எனக்கு...:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா... இது தொடர்கதையாச்சே... போனவாரம் படிச்சீங்களோ...

   //கதை எழுதுவதென்பது ஶ்ரீராமுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப்போலாம் என கெள அண்ணன் சொல்லிட்டார்:)//

   இது எப்போ?!!

   வாடா போடா அவன் இவன்லாம் சர்வசாதாரணமாயிடுச்சு அதிரா...

   School reopen பண்ணிட்டாங்களா? பயமில்லையா? என்ன தைரியம்!

   நீக்கு
  2. //வாடா போடா அவன் இவன்லாம் சர்வசாதாரணமாயிடுச்சு அதிரா...// - இதுக்கே தனியா பின்னூட்டம் போடலாம் போலிருக்கே... சரி சரி.. ரொம்ப நேரமாயிடுச்சு. வேற சந்தர்ப்பத்துல வச்சுக்கலாம்.

   நீக்கு
  3. ஹா ஹா ஹா ஸ்ரீராம், மொபைலில் படிச்சமையால.. இங்க பாருங்கோ...

   //முதல் பகுதி :

   "அவன் பேர் வினோத். என் பேர் வினோதினி. இந்த விஷயமே எங்களை ஒருவரை ஒருவர் பார்க்க வச்சுது அங்கிள்..."
   ///

   இதை மட்டுமே பார்த்து, இன்றுதான் ஆரம்பம் ஆஹா கரெக்ட்டான ரைமுக்கு வந்திட்டேன் என நினைச்சேன்.. இப்போதான் பார்த்தால் இலக்கத்தில் 2 என மேலே சொல்லியிருக்கிறீங்கள்... இப்பூடி எதுவும் சொல்லாமல் .. முதல்பாகம் எனச் சொல்லிக் கொண்டே.. கதையை ஆரம்பிச்சால் என்ன பண்ணுவேன் யான்?:))..

   //இது எப்போ?!!//
   வருங்காலத்தில் சொல்லலாம் என நினைச்சுச் சொன்னேன் அது டப்பா:))..

   நீக்கு
  4. என்ன இருந்தாலும், காதலிக்கும்போது ஓகே, ஆனா திருமணமானபின் கணவனை வாடா போடா எனச் சொல்லும்போது.. அக் கணவரைப் பார்த்தாலும்..., ஏதும் கேணயனாக இருப்பாரோ எனும் எண்ணமே எனக்குள் உதிக்கும்.. இந்த எண்ணத்தை உருவாக்குவது அப் பெண் தானே... மரியாதை இல்லை எனச் சொல்வதைக் காட்டிலும்... அது அழகல்ல.. கணவனின் மதிப்பையும் குறைக்கிறது மக்கள் மத்தியில்..

   யூரியூப் ஷனலினும் ஒரு பெண், எனக்குப் பழகிடுச்சு.. எனச் சொல்லிக் கொண்டே... வாடா.. என்னடா செய்கிறாய் என்கிறா கணவரை... அதனாலேயே அச் ஷனல் பார்க்க எனக்குப் பிடிப்பதில்லை.

   முன்பு ஒரு ட்ராமா ஆரம்பம் பார்த்தோம் நானும் அம்மாவும்.. அதிலும் ஒரு பெண் வாடா போடா என்கிறா, உடனே அம்மா சொன்னா.. இதைப் பார்க்கவே கேவலமாக இருக்குது, இனி நான் இந்த நாடகம் பார்க்க மாட்டேன் என ஹா ஹா ஹா..

   நெ தமிழன் சொன்னதைபோல, இது பேச வெளிக்கிட்டால் தொடர் கதையாகும்.

   நீக்கு
  5. ஸ்கூல் ஆரம்பமாகி விட்டது, அதுவும் பழைமை மாதிரியே அனைத்தும் நடக்கிறது...

   மாஸ்க் கட்டத் தேவையில்லை... என்ன ஒன்று.. பிள்ளைகளை ஒரு நாளைக்கு 8-10 தடவையாவது சோப் போட்டுக் கை கழுவ வைக்கிறோம்.. அடிக்கடி சனிட்டைசர் போடுகிறோம்... இதுதான் வித்தியாசம்.

   ஆரம்பம் நானும் போக யோசித்தேன், ஆனா எல்லோரும் போகிறார்கள் வேலைக்கு, வயதானோரே போகும்போது பயந்து என்ன செய்வது ஊரோடொத்தது என ஆரம்பித்து விட்டேன்.. இங்கிலாந்துப் பக்கம் தான் மோசம், ஸ்கொட்லாந்து ஓகேதான்.

   நீக்கு
  6. உங்களுக்கு இது புதுமையா இருக்கு அதிரா...   இங்கு திருமணத்துக்குப்பின்னும் அப்படியே அழைப்பதும் நாம் அவர்கள் வீட்டுக்குப் போகும்போது 'வான் ஆபீஸ் போயிருக்கான்...' என்று சொல்வதும் பழகி விட்டது!

   மாஸ்க் போடாமலேயே பள்ளியா?  என்னதான் கை கழுவினாலும் ரிஸ்க் இல்லையோ?

   நீக்கு
 44. பழைய பொக்கிசம் அருமை... ஆனா எனக்கொரு டவுட்டூஊஊ... பிபி இருந்தால், கட்டாயம் கோபம் வர வேண்டுமோ?:)... அல்லது கோபத்தைச் சமாளிக்க இப்படி யுக்தியைப் பாவிக்கின்றனரோ எனும் டவுட்டும் வரும்:)
  நான் அறிஞ்சு, பிபி இருக்கும் சிலரைப் பார்த்திருக்கிறேன் அவர்களுக்கு கோபமே வராது.
  எங்கள் அப்பாவும் சத்தம் போடுவார்... பின்னர் கொஞ்சம் லேட்டானதும் சொல்வார், எனக்கு பிபி இருக்குது அதனால கோபம் வருது, அதை நீங்கதான் உணர்ந்து கொள்ளோனும் எண்டு... :)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபக்கார்ரா இருக்கறவங்களுக்கு நிச்சயம் பிபி வரும். அதை (பிபி) கட்டுக்குள் வைக்கலைனா இன்னும் கோபம் அதிகம் வரும்.

   ஆனா கோபக்காரங்களுக்கு நல்ல குணம் இருக்கும்

   நீக்கு
  2. ஆமாம், ஒன்றையொன்று சார்ந்ததே இவையிரண்டும்!

   நீக்கு
  3. //ஆனா கோபக்காரங்களுக்கு நல்ல குணம் இருக்கும்// காந்தி கோபக்காரர் அல்ல!

   நீக்கு
  4. இந்த வார்த்தையே எப்பவோ யாரோ யாரையோ சாமாதானப்படுத்த சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்!  கோபமே கெட்ட குணம். 

   நீக்கு
  5. //காந்தி கோபக்காரர் அல்ல!// - இறைவா... தூங்கப் போற சமயத்துல கீசா மேடத்துட்ட வம்பு வளர்க்க வைக்கறயே...

   கீசா மேடம்... கோபத்துல இரண்டு வகை உண்டு. ஒன்று சள்ளுனு சத்தம் போடுவாங்க - கொஞ்சம் கேட்க நாராசமா இருக்கும், ஆனா அப்படி கத்தின பிறகு, அவங்க அதை மறந்துடுவாங்க. கேட்கும்போதுதான், ஏண்டா உயிரை வச்சிக்கிட்டிருக்கோம்னு தோணும். அப்புறம் அதை மறந்து அவங்க ரொம்ப நல்லா பேசுவாங்க.

   இரண்டாவது வகை, அமுக்குப்போல பொல்லாதது. அவங்க சள்ளுனு எரிஞ்சு விழ மாட்டாங்க. அமைதியா இருந்து நம்ம கழுத்தை அறுப்பாங்க. இதுல யார் பாதிக்கப்படறாங்களோ அவங்களுக்கு இதைத் தாங்குவதற்கு கஷ்டமா இருக்கும். இதுலயே இன்னும் ஒரு வகை உண்டு. தன் கோபத்தை பிறரிடம் காட்டாமல், தன்னையே வருத்திப்பாங்க. இதுக்கு இந்தச் சனியன் ரெண்டு திட்டு திட்டினாலும் கேட்டுக்கிடலாம், நம்ம உயிரை வாங்குறாரே என்று பாதிக்கப்படுகிறவர் நினைத்துக்கொள்வார் (மனதில்தான்)

   இப்போ காந்தி இந்த இரண்டு வகைல எந்த வகைன்னு நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. அப்படித்தான் கஸ்தூர்பா, மற்ற அரசியல் தலைவர்களை காந்தி தன் வழிக்குக் கொண்டுவந்தார். இதை அஹிம்சைனு நாம சொல்லிக்கிடலாம், ஆனா அப்படிக் கிடையாது. மறைமுக ஹிம்சை.

   எதை எடுத்தாலும் உண்ணாவிரதம், தன்னையே வருத்திக்கறேன் என்று பிறரை மறைமுகமாக வருத்தி (காரணம், அனேகமா எல்லோரும் காந்தி மீது அதீத பற்றும் மரியாதையும் வச்சிருந்தாங்க. அப்படி இல்லைனா, சரி சரி.. நீ உண்ணாவிரதம் இருந்தா உனக்குக் கேடு, எனக்கென்ன என்று அவங்க அவங்க வேலையைப் பார்த்துக்கிட்டிருந்திருப்பாங்க) தான் சொல்வதை ஏற்றுக்கொள்ள வைத்தார்.

   உடனே காந்தி சப்போர்ட்டர்ஸ்லாம் கம்பைத் தூக்கிட்டு வராதீங்க. எனக்கும் காந்தி, நேதாஜி போன்ற எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களையும் பிடிக்கும். அவங்க பொது நலனுக்காகப் பாடுபடறேன்னு சொல்லிக்கிட்டு சொத்து சேர்க்கலை, ஊழல் செய்யலை, ஊரை அடித்து உலையில் போடலை. அவங்க செய்ததெல்லாம் தியாகம் கணக்குலதான் வரும்.

   என்னடா இது..இடுகையை விட பின்னூட்டம் நீநீநீளளளமாப் போயிடுச்சு..

   நீக்கு
  6. ///என்னடா இது..இடுகையை விட பின்னூட்டம் நீநீநீளளளமாப் போயிடுச்சு..///

   ஹா ஹா ஹா இந்தப் பின்னூட்டம் மட்டுமோ?:))

   நீக்கு
  7. நெல்லை..   நல்ல விளக்கம்.    நீங்கள் சொல்லச்சொல்ல 'அட ஆமாம்ல' என்று சில விஷயங்கள் மண்டையில் தோன்றியது.  நான் எந்த வகை என்றும் யோசித்தேன்!!

   நீக்கு
  8. Gandhi, emotional blackmailer. He never treate Kasthuriba with due respect. He refused treatment to her during her last days. She sufferred a lot. Haridas Gandhi questioned his father about these matters.

   நீக்கு
  9. ஆமாம். அதுதான் அவருடைய இறப்புக்கும் காரணமாக அமைந்தது

   நீக்கு
 45. மிகுதி கொமெண்ட்ஸ் நைட்தான் போடுவேன்:).. பெல் அடிக்கப் போகுதூஊஊஊ:)

  பதிலளிநீக்கு
 46. ///யாராவது பழைய ஆட்கள் கண்டு பிடிக்கிறார்களா ///

  யூ மீன் ஓல்ட் பீப்பிள்?:)) ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..

  ஸ்ரீதர் ஜோக்... மொத்தத்தில ஆண்களுக்கு முன்னாலதான் ஆண்களது வீரமெல்லாம் போலும்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய ஆட்கள் என்றால் பழைய புத்தகங்களை படித்த ஆட்கள்!  

   நீக்கு
 47. வரிசையாக வரும் கதாபாத்திரங்கள்! ஸ்வாரஸ்யமாகவே செல்கிறது தொடர் கதை. பாராட்டுகள்.

  மற்றவையும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 48. வரக்கூடிய சம்பந்தி பாலாஜிக்கு பெண்ணின் காதலைப் பற்றி, வரக்கூடிய மாப்பிள்ளை பற்றி எல்லாம் தெரிந்திருக்கிறது. அந்த அந்தளவுக்கு தன் பிள்ளை அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறான். ஆனால் பெற்ற அப்பாவிடம் அத்தனையையும் மறைத்திருக்கிறான். எந்த அப்பனின் ஈகோ தான் இவர்களை ஒன்று சேர வைக்க ஒத்துழைக்கும்? இது தான் வரப்போகிற அந்த மாலை கதைப் பகுதிக்கு முடிச்சாக இருந்தாலும் பையனின் விருப்பத்திற்கு குறுக்ககாக இருக்க வேண்டாம் என்று எந்த தந்தைக்கும் இருக்கும் நல்லெண்ணத்தில் ஈசியாக விழுந்த முடிச்சை அவிழ்த்து விடலாம். இல்லையா, ஸ்ரீராம்?

  பதிலளிநீக்கு
 49. சாணக்கியன் மாதிரி ராஜாஜி. தான் நினைக்கிறதை சாதிக்கணும். அவ்வளவு தான். தனிப்பட்ட முறையில் அப்பழுக்கற்றவர் என்றாலும் அவரின் அந்த குணம் தான் அவரை வெகுஜன தலைவர் ஆக முடியாமல் தடுத்து விட்டது.
  இக்கால தலைமுறைக்கு இவரைப் பற்றி அதிகம் தெரிந்திராது. காந்தி மகான், நேரு போன்றவர்களைக்கூட
  விமர்சனத்திற்கு உட்படுத்தியவர்கள் இவரை அவ்வளவாக விமர்சிக்காமல் ஒருவகை நன்றிக் கடனுக்கு ஆட்பட்டவர்களாய் ஆகிப் போனார்கள்.

  பதிலளிநீக்கு
 50. அந்த மாலை.. அருமை! முந்தைய அத்தியாயத்தையும் வாசித்து விட்டேன். தொடரக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!