1) டில்லியில் உள்ள அரசு பள்ளியில், ரியாஸ் என்ற சிறுவன், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், டில்லிக்கு அருகே உள்ள காசியாபாதில், வாடகை வீடு ஒன்றில் தங்கியுள்ளார். இவரின் பெற்றோர், பீஹாரில் வசித்து வருகின்றனர். பெற்றோருக்கு உதவும் வகையில், உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையை, ரியாஸ் செய்து வருகிறார்.
2) துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். பிச்சை எடுத்த பணத்தில், மூன்று மாதங்களில், 70 ஆயிரம் ரூபாயை, மே முதல் பிச்சை எடுத்து சேமித்த பணம் தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு முறை, மதுரை கலெக்டரிடம், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். நேற்று ஏழாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கினார். இவ்வளவு ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய இவரை அனைவரும் பாராட்டி இருக்கின்றனர்.
3) "........... இப்போது, மாதம், சில லட்சம் ரூபாய்களில் வருமானம் வருகிறது; முழு நேரமும், பிசியாக இருக்கிறேன். ஐ.டி., துறையில் இருந்திருந்தால் கூட, இவ்வளவு நிம்மதியாக இருந்திருக்க முடியாது......"
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் படித்து விட்டு, ஆட்டுப் பண்ணை வைத்துள்ள, ஈரோடு மாவட்டம், தோப்புக்காடு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார்.
4) அவரால் முடிந்த உதவி... துணை நடிகை தீபா...
======================================================================================================
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇந்த நாள் எல்லோருக்கும் நல்ல செய்திகள் கொடுக்க வேண்டும்.
நல்லதொரு வேண்டுதலுக்கு நன்றி வல்லிம்மா... வாங்க... வணக்கம்.
நீக்குஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
நலமே விளைக...
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குசிறுவன் ரியாஸ் மேன்மேலும் வளர வாழ்த்துகள். இந்திய
பதிலளிநீக்குஜனாதிபதியின் கண்களில் அவரைப் பற்றிய செய்திகள் வந்தது மிக நன்மை.
இதைப் போல இன்னும் நிறைய சிறுவர்கள்
நலம் பெற வேண்டும்.
படித்துக் கொண்டே பெற்றோருக்கும் உதவி
செய்யும் இதைப் போல குழந்தைகள்
கவனிக்கப் படவேண்டும்.
உண்மை. நம் விருப்பமும் அதுவே.. திறமைகள் மதிக்கப்படவேண்டும். நன்றி வல்லிம்மா...
நீக்குஅதிசய மனிதர் பூல் பாண்டியன்.
பதிலளிநீக்குகேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த ஈகைக் குணம் எல்லோருக்கும் வந்துவிடுமா தெரியவில்லை.
பெரிய உதவிகளைச் செய்திருக்கிறார்,
குடும்பத்தினர் இவரைச் சேர்த்துக் கொண்டிருந்தால்
இத்தனை பணம் சேர்த்திருப்பாரா தெரியவில்லை.
நல்ல மனிதர் ஈட்டிய தொகை நன்மைப் பணிகளுக்குச் செல்ல வேண்டும்.
எனக்கும் ஆச்சர்யம். நான் ஒரு வியாழனில் பகிர்ந்திருந்தேனே... கொரோனா தொடங்கிய காலமாக ஒரு பேருந்து நிறுத்தத்தில் தங்கி இருக்கும் பெரியவர் ஒருவர் பற்றி... அவரும் நினைவுக்கு வந்தார் எனக்கு!
நீக்குஆமாம் ஸ்ரீராம் நினைவிருக்கிறது.
நீக்குஇங்கே ஹோம்லெஸ் பீப்பிள் என்று அவர்களுக்கெல்லாம் உணவு கொடுக்க ஏற்பாடு செய்வார்கள்.
மகள் மாக்டி கடையில் 10 .$ கூப்பன் வாங்கி வாரம் ஒரு
தடவை வழியில் உட்கார்ந்து இருப்பவர்களுக்குக்
கொடுப்பாள்.
மனசு ரொம்ப சங்கடப்படும். ஏன் இப்படி வந்துவிடுவார்களொ
என்று தோன்றும்.
பராசக்தி படத்தில் பிச்சைக்காரர்கள் மானாட்டுக்குப் போய் வந்ததாக
S S Rajendran சொல்வார்.
பெரும்பாலும் பிச்சை எடுக்க வருபவர்கள் குடும்பத்தால் கைவிடப் பட்டவர்கள் அல்லது தங்கள் காலத்துக்குச் சேர்த்து வைக்காதவர்கள் அல்லது அதீத பாசத்தில் அவசரப்பட்டு சொத்தை எழுதிக்கொடுத்தவர்கள்
நீக்குசமீபத்தில்கூட தாசில்தார் மாற்றப்பட்ட சொத்துப் பத்திரத்தை கேன்சல் செய்து ஒரு பெற்றோருக்கு நீதி வழங்கினாராம்
அவர்களுக்கெல்லாம் ஒரு எலலவற்றையும் துறந்த, எல்லாவற்றையும் வெறுத்த மனநிலை இருக்கும் போலும்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோரும் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இயல்பான வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குதீபா பற்றிய செய்தி மட்டும் புதிது. மற்றவை படித்திருக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள். பணி ஓய்வு பெற்ற பின்னர் ரமா ஸ்ரீநிவாசன் எழுதுவதை நிறுத்திவிட்டாரா? பணி ஓய்வை அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்கிறார் போலும்.
பதிலளிநீக்குகீதா, தாங்கள் முடியாத முதுகு மற்றும் இடுப்பு வலி. உட்காரக் கூட முடியாத நிலை. எனவே இவ்வாரம் ஓய்வெடுத்துக் கொண்டேன். நின்று சமையல் ல் செய்வதே திண்டாட்டமாக இருக்கிறது.
நீக்குsciatica? எனக்கும் இந்த வலி அடிக்கடி வரும். அதுவும் நின்று கொண்டு வேலை செய்தால் கட்டாயமாய் வரும். சமைக்கும்போது அங்கேயே ஒரு நாற்காலியைப் போட்டுக் கொள்வேன். இப்போதெல்லாம் கொஞ்சம் விட்டு விட்டு வேலை செய்கிறேன். அதனாலேயே அதிகம் கணினியில் உட்கார முடிவதில்லை. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். வலி நிவாரணி இல்லாமல் தைலம், ஆயின்ட்மென்ட் எனத் தடவிக் கொண்டு வலியைச் சகித்துக்கொள்ளப் பழகுங்கள். வலி நிவாரணிகள் தாற்காலிக நிவாரணமே தவிர்த்து உடல் நலத்தைக் கெடுத்து விடும்.
நீக்குரமா... உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
நீக்குமுதல் இரண்டு செய்திகளும் மனதைக் கவர்ந்தன. அரசு பீடத்தில் இருப்பவர்களுக்கு, அது மாநில நல்ல அமைச்சர் லெவலானாலும் சரி, யாரேனும் கவனத்துக்குக் கொண்டுவந்தால், அதிலும் பத்திரிகைகள், கட்சி அரசியலில் பெரும்பாலும் இல்லாத பிரமுகர்கள் சொன்னால் நிச்சயம் நல்லது நடக்கும். உதவும் குணம் இல்லாத, அதிகார பீடத்தில் இருப்பவர்களைப் பார்ப்பது மிக அரிது.
பதிலளிநீக்குஏன் கட்சி அரசியல்னு சொன்னேன்னா அங்கு கட்சி சார்பு, அரசியல் மைல்ஸ்டோன் என்ற எண்ணங்கள் வரும்
கட்சி சார்பு என்றால் சுயநலமும், வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் பாகுபாடும் வரும்.
நீக்குபிச்சை எடுத்த காசில் மிச்சம் வைத்து அதனைத் தானம் செய்யும் எண்ணம் வருவது மிக மிக அரது. பாராட்டணும்.
பதிலளிநீக்குஒரு ஆன்மீக பீடத்துக்கு மக்கள் நல்வாழ்வு சம்பந்தமான ப்ராஜக்ட் ஒன்றிர்க்கு ஒரு ஏழைப் பெண்மணி தன்னால் இரண்டு மாதங்கள் சேர்த்துக் கொடுக்க முடிந்தது இந்த இருபது ரூபாய்தான் என்றாராம். அதற்கு அந்த ஆன்மீகத் தலைவர், பணக்காரங்க இங்க வந்து கொடுக்கும் லட்ச ரூபாய்க்கும் உசத்தியான காசும்மா .இது என்றாராம்.
உண்மைதான். தானே ஒன்றும் இல்லாமல் இருக்கும்போது, தன் தேவையை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணம் வந்திருக்கும்.
நீக்குமக்களுக்கு பணம் கொடுக்கும் ஆர்வம் இருக்கு. எப்படி என்று தெரியாது. நானும் வாட்சப் குழுமங்கள் பார்த்திருக்கிறேன். அங்கு ஏதாவது சொல்லித்தர மாதம் 100 ரூபாய் வாங்குவார்கள். பலவிதமான வாட்சப் குரூப்கள். அதில் இலக்கியம், பாடல்கள், ஸ்லோகம், சமஸ்கிருதம் எனப் பலப்பல. 100 ரூபாயை கூகிள்பே மூலம் ஒரு தலைப்புக்கு அனுப்புவது சுலபம். இந்தப் பணம் ஊரடங்கினால் பண வரவே இல்லாது தவிக்கும் ஆசிரியருக்கு (front end பண்ணுபவர்களுக்கு அல்ல) மாத சம்பளமாக (தட்சணை போன்று) செல்லும். இரண்டு குரூப்களில் சேர்ந்து மாதம் 200 அனுப்பினால் நாமும் ஏதாவது கற்றுக்கொள்ளலாம், பணமும் இன்னொருவருக்குப் பயன்படும்.
பதிலளிநீக்குஇது நான் கேள்விப்பட்டிராதது.
நீக்கு//பிச்சை எடுத்த பணத்தில் ரூ.70 ஆயிரம் கொரோனா நிதி//
பதிலளிநீக்குஇதற்கு மிகப்பெரிய மனது வேண்டும்.
அரசியல்வாதிகளும், திரைப்படக் கூத்தாடிகளும் இவரிடம் அறிவுப்பிச்சை எடுக்க வேண்டும்.
கில்லர்ஜி.... கொடுக்க மனம் வேண்டும் உண்மைதான். ஆனால் dependents இருக்கறவங்களும், தன் எதிர்காலத்துக்குச் சேர்க்கணும் என நினைப்பவர்களும் நிறைந்தது திரைப்பட உலகம். (பொதுவா நடிக நடிகையர் அவ்வளவு சம்பாத்தியத்தை அனுபவிப்பதில்லை. )
நீக்குநான் சிலரிடம் கேட்டேன். ஏன் புதன் கேள்வியாக இதனைக் கேட்கிறேன்.
நம்மிடம் 1கோடி இருந்தால் (சொத்து மற்றும் பணம்) வாழ்க்கையை நன்றாக கழித்துவிட முடியாதா? சரி... பெரிய அரசியல்வாதிகளுக்கு 10 கோடி இருந்தால் பத்தாதா? எது அவங்களை, 5000 கோடி, 10000 கோடி, 40,000 கோடி என சொத்து சேர்க்கத் தூண்டுகிறது? அதன் பலன் என்ன?
சொத்து சேர்ந்தவர்களால் தான் இதற்கு கருத்து சொல்ல முடியும் என்பது அடிப்படை உண்மை.
நீக்குஎதைத் தான் புதன் கேள்வியாக்குவது என்பதற்கு அர்த்தமே இல்லாது போய் விட்டது. 😄
அரசியல்வாதிகளுக்குச் செலவு அதிகமே! ஓட்டு வாங்கப் பணம் கொடுக்கணும், கட்சிச் செலவுக்குப் பணம் வேண்டும். தொண்டர்களுக்குப் பணம் கொடுக்கணும். இப்படி எத்தனையோ! அதனால் அவங்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் இருந்தால் தான் சரியா இருக்கும்.
நீக்குஇதற்கு உளவியல் ரீதியாக வேறு காரணங்கள் இருக்கலாம்.
நீக்குஇல்லை ஜீவி சார். நம்மாலும் ஊகித்து பதில் சொல்ல இயலும். உதாரணமாக வெறும் ஜி.எம் பதவிக்காக ஏன் வேலுச்சாமி, அரசுச் சொத்தான கேபிளை மாறன் வீடுவரை இழுத்து அரசுக்கு ஆயிரம் கோடிகளை நஷ்டம் ஏற்படுத்தினார், என்று வேலுச்சாமியிடமோ இல்லை மாறனிடமோ கேட்கமுடியாது. ஆனால் என்ன காரணமாயிருக்கும் என்று பதில் சொல்பவர்கள் ஊகித்துச் சொல்ல முடியும் இல்லை மனோதத்துவ ரீதியாக பதிலளிக்க முடியும்.
நீக்குநமக்கு யூகிப்பது முக்கியமில்லை. இதென்ன நம் திருப்திக்காகவா? இதற்காச இதை செய்கிறேன் என்று சம்மந்தப் பட்டவர்கனின் நியாயம் தானே முக்கியம்?
நீக்குஅதெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.
நீக்குஸ்ரீமான் பொதுஜனமான நம்மைப் பற்றி பேசலாம். நம் அநியாய வரவிற்கும் அநியாய செலவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
அநியாய வரவு, அநியாய செலவு - ஒவ்வொருவர் பார்வைப்படி வித்தியாசப்படும். சிலர் முதலைக் கண்ணீர் வடிப்பாங்க... பாரு விவசாயி மாசம் 10,000 கூட சம்பாதிக்கறதில்லை, அதுவும் நிச்சயமில்லை. அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறாங்க என்று. அரசு ஊழியர்கள் நினைப்பாங்க, இந்த கணிணி பசங்க டிப்ளமா முடிச்சுட்டு எடுத்த உடனே 20,000 சம்பாதிக்கறான்றான், இன்னோத்தன் ஏசில உட்காந்துக்கிட்டு லட்ச ரூபாய் சம்பளம்ன்றான் என்பாங்க.
நீக்குஅநியாய செலவும் அதுமாதிரித்தான். ஏன் மாருதி 800 வாங்கணும்? நேனோல போனா இடத்துக்கு கொண்டுவிடாதா? ஏன் பைக் வாங்கணும், டிவிஎஸ்50 போதாதா, ஏன் 32 இஞ்ச் டிவில தொலைக்காட்சி பார்க்க முடியாதா...
இதற்கெல்லாம் அளவும் இல்லை.
உங்களுக்கே தெரிஞ்சிருக்கிலே.. அப்போ ஏன் இதே கேள்வியை புதன்
நீக்குகிழமைக்கு எடுத்த்துக்கிட்டுப் போகணும்?
புதன் கேள்வி பதில் பெரும்பாலும் இப்படித் தான்.
தனக்குத் தெரிஞ்சதையே கேள்வியாக்கி கிடைக்கற பதிலை கலாய்க்கிறதிலே ஒரு சந்தோஷம்.
பத்திரிக்கை பாணியும் இதே தான். வாசகர் ரசிக்கிற மாதிரி கேள்வி - பதில் இரண்டையுமே தயாரிப்பதில் கில்லாடிகள் அவர்கள்.
நடிகர்களுக்கோ பணம் படைத்தவர்களுக்கோ அவர்கள் வசதிக்கேற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர். அதாவது அகலக்கால் வைத்து நிற்கத் தொடங்குகிறார்கள். அதை மெயின்டெயின் செய்ய அவர்களுக்கு மேலும் மேலும் பணம் தேவை. கையிருப்பு, கையில் எதுவுமே இல்லை என்பவர்களுக்கு அந்தக் கவலை கிடையாது.
நீக்குநெல்லைத்தமிழன் கேள்விக்கு வரும் புதன் கிழமை பதில் அளிக்கிறோம்!
நீக்குநெல்லைத் தமிழரிடம் நான் கேட்ட கேள்விக்கு புதன் கிழமைக்கு முன்னாலேயே (தனிப்பட்ட முறையில்) பதிலளிக்க முயற்சி செய்கிறேன். நன்றி நெல்லை!!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பான பிரார்த்தனைகள் பலிக்கட்டும். வணக்கம், நன்றி கமலா அக்கா.
நீக்குஎல்லாமே இதுவரையிலும் படிக்காத செய்திகள். நன்றி!
பதிலளிநீக்குமுகநூலில் ஶ்ரீராமே போட்டிருந்த நினைவு.
நீக்குஒன்று மட்டும் பேஸ்புக்கில் போட்டிருந்தேன்... லிங்க் கொடுக்கவேண்டி...
நீக்கு// பூல்பாண்டியன் கூறுகையில், "இதுபோன்று சேரும் நிதியை, சரியான நபர்களுக்கு அரசு கொண்டு போய் சேர்க்க வேண்டும்..." என்றார் //
பதிலளிநீக்கு'சேர்த்து' விடுவார்கள்... நம்புவோம்...
நம்பிக்கைதான்... பார்ப்போம்!
நீக்குபிச்சை எடுத்த பணத்தை இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் இவரே நேரில் கொடுத்து உதவலாம்... கடலில் பெருங்காயத்திக் கரைக்கிறார்... என்றாலும்
பதிலளிநீக்குமக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் மத்தியில் இவர் பாராட்டத் தக்கவர்...
நேரில் கொடுத்து உதவ நினைத்தால் அடித்து மொத்தத்தையும் பிடுங்கி விடுவார்கள். எனவே தகுந்த வழி மூலமாகச் சென்றிருக்கலாம். மேலும் இவரது இந்த குணம் பார்த்து மேலும் சிலருக்கு இந்த எண்ணம் வரலாம்!
நீக்குநல்ல மனம் வாழ்க!
பதிலளிநீக்குமாணவன் ரியாஸ்-க்கு தந்த உதவி சிறப்பு. அதை விடச் சிறப்பு பெரியவர் வழங்கிய 70000/- ரூபாய். மற்ற செய்திகளும் நன்று.
நன்றி வெங்கட்.
நீக்குரியாஸ், பூல் பாண்டியன், அருண் குமார் போன்றவர்களின் நல்லெண்ண செயல்களை நாம் செய்திகளாகப் படிக்காமல் அது போல் நாம் நம் தகுதிக்குள் என்ன செய்யலாம் என்று யோசித்தால் அவர்களின் நற்செயல்கள் முழுமையாக பூர்த்தியடையும் என்பதே என் கருத்து.
பதிலளிநீக்குநம் ஒவ்வொருவருக்கும் அள்ளி கொடுக்கும் இந்நாட்டு மக்களுக்கு நம்மாலான உதவியைச் செய்வோம்.
செய்வோம்.. நன்றி ரமா ஸ்ரீநிவாசன்.
நீக்குஉதவிக் கரங்கள் அனைத்தையும் வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குநல்ல மனம்வாழ்க நாடு போற்ற வாழ்க
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்.
நீக்குசாதிக்க துடிக்கும் ஒரு ஏழை மாணவனுக்கு ஊதவியிருக்கும் ஜனாதிபதியின் செயலை போற்றுகிறோம்.
பதிலளிநீக்குபிச்சைக்காரர் வியக்க வைக்கிறார். சாதாரணமாக வாங்கியே பழகியவர்களுக்கு கொடுக்க மனம் வராது. இவர் வித்தியாசமாக இருக்கிறார்.
அருண்குமாரையும், தீபாவையும் பாராட்டலாம்.
பாராட்டப்பட்ட வேண்டியவர்கள். நன்றி பானு அக்கா.
நீக்குநீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் ஒவொவொருவரும் தனக்கேற்ற முறையில் மற்றவர்களுக்கு உதவி வருகின்றனர் வாழ்த்துகிறேன் அவர்களை
பதிலளிநீக்குஅனைத்து செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குமுதல் செய்தி சிறுவனை வாழ்த்துவோம்.
ரியாஸ் பெற்றோருக்கு உதவி கொண்டு இருப்பது மகிழ்ச்சி. சைக்கிள் ஓட்டி சாதனை படைக்கட்டும்.ஜனாதிபதி அவர்கள் சிறுவனுக்கு உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது.
பூல்பாண்டியன் அவர்கள், தீபா இருவரின் உதவும் குணத்திற்கு வாழ்த்துக்கள்.
அருண்குமார் போல் எல்லோரும் சொந்த தொழில்தான் செய்ய வேண்டும் போல காலம் அப்படித்தான் இருக்கிறது.
ரமா ஸ்ரீநிவாசன் அவர்கள் உடல்நிலை விரைவில் சரியாக பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
சிறுவன் ரியாஸின் கனவுகள் மெய்ப்படட்டும்.
பதிலளிநீக்குபாராட்டுக்குரியவர்களைப் பற்றிய நல்ல பகிர்வு.
அனைத்துச் செய்திகளுமே அருமை. ரியாஸ் மற்றும் யாசிக்கும் அந்தப் பெரியவர் 70 ஆயிரம் ரூபாய் கொடுத்திருப்பது வியப்பு மற்றும் நல்ல மனம் வாழ்க.
பதிலளிநீக்குஇன்று கட்டுரைப்பகுதி இல்லையே
துளசிதரன்
சாதிக்கத் துடிக்கும் ரியாஸிற்கு ஜனாதிபதி உதவியது சிறப்பு. வேலை செய்து கொன்டே படித்துவரும் மாணவனின் சாதனைத் துடிப்பு அவனை உற்சாகப்படுத்தி சாதனைகள் செய்ய உந்துசக்தியாக இருந்திட வாழ்த்துகள்
பதிலளிநீக்குபூல்பாண்டி அசத்துகிறார். அவர் மனதையும் வாழ்த்துவோம். என்னதான் எந்த உறவும் இல்லாமல் தெருவில் இப்படி யாசித்தாலும் சேமித்துக் கொடுக்க வேண்டும் என்ற மனம் வேண்டும். அந்த நல்ல மனதிற்கு வாழ்த்துகள்.
துணை நடிகை தீபாவுக்கும் வாழ்த்துகள்.
கீதா
ஏன் ரமாவின் கட்டுரை இல்லை என்பதை மேலே பார்த்தால் கருத்தில் தெரிந்தது காரணம்.
பதிலளிநீக்குரமா டேக் கேர்
கீதா