அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
1) அவர்களுடன் வந்த மற்ற வாலிபர்கள், சத்தம் போட்டதை கேட்டு, அப்பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த, ஆதனுார் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி செந்தமிழ் செல்வி, 38, சுந்தரபாலன் மனைவி முத்தம்மாள், 34, அண்ணாமலை மனைவி ஆனந்தவல்லி, 34, ஆகியோர், சிறிதும் தாமதிக்காமல் தண்ணீரில் குதித்து நீந்தி சென்றனர்.உயிரை பணயம் வைத்த பெண்கள், தாங்கள் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து, ஒன்றாக சேர்த்து கட்டி, நீரில் தத்தளித்த வாலிபர்களை நோக்கி வீசினர். சேலையை பிடித்து கொண்ட பவின்குமார், கார்த்திக் ஆகியோரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்....
2) அந்த பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்துக் கொடுப்பதால், எனக்கு சம்பளம் கிடைக்கிறது. பள்ளி திறக்கப்படாமலேயே எனக்கு சம்பளம் வருகிறது; ஆனால், அந்த குழந்தைகளுக்கு உணவு கிடைக்கவில்லை.இதனால், அந்த குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவு அளிக்க முடிவு செய்து, வீட்டில் சமைத்து எடுத்துச் சென்று, என் வகுப்பில் படிக்கும், 30 குழந்தைகளுக்கும் முதலில் வழங்கினேன்.....
தான் பணியாற்றும் பள்ளி, கொரோனா ஊரடங்கால் மூடியிருக்க, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, தினமும் மதிய உணவளித்து வருவது பற்றி, ஆசிரியை ஜெயமேரி.
பேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்தச்செய்தி இதுவரை 3750 க்கும் மேற்பட்ட நண்பர்களால் 'விரும்ப'ப் பட்டு, 1700 க்குப் பக்கமாக பகிரப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்தச்செய்தி இதுவரை 3750 க்கும் மேற்பட்ட நண்பர்களால் 'விரும்ப'ப் பட்டு, 1700 க்குப் பக்கமாக பகிரப்பட்டுள்ளது.
3) ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தோர் வாழநினைத்தால் வாழலாம் என்பதற்கு நானும் ஒரு உதாரணம், என்றார் மதுரை சூர்யா நகர் சரவணன்......
4) முகமது ஹபீப். ஆட்டோவுக்கான தினசரி வாடகையைக் கூட கட்ட முடியாமல் தவிக்கும் இவர், தன் ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.1.4 லட்சத்தை நேர்மையாக அவரிடமே ஒப்படைத்துள்ளார்.
==============================================================================================
அதிர்ச்சி
ஆனால் உண்மை
ரமா ஸ்ரீநிவாசன்
நாங்கள்
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த அறுபது வருடங்களாக
வாழ்ந்து
வருவதால் எனக்கும் என் கணவருக்கும் பெரும்பான்மையாக
இங்கு வாழும்
அனைவரையும் தெரிந்திருக்கும் வசதியுள்ளது.
அப்படித்தான் அவரையும் அவரது மனைவியையும் எங்கள்
இருவருக்கும் குடும்ப நண்பர்களாகத் தெரிய
வந்தது. மேலும் அவர் நாங்கள்
பணி புரியும் மத்திய கலால் துறையில்
என் கணவருடன் பணி புரிந்தவர். எனவே இன்னும் நன்றாக
பழகி பேசி நெருக்கமான
உறவு. அவரது மனைவி மத்திய அரசில் மேலதிகாரியாகப் பணி புரிபவர். அவர்களுக்கு
ஒரே மகன். அவரைப் பற்றி ஒரு வரியில்
எழுத வேண்டும் என்றால் “HE IS A NOBLE SOUL” என்று எழுதலாம்.
வாழ்க்கை
மிக ஸ்வாரஸ்யமாகத்தான் இருவருக்கும் சென்று
கொண்டிருந்தது.
இருவரும் மிகவும் சாஸ்த்திரோத்தமான வைஷ்ணவக்
குடும்பத்தை
சேர்ந்தவர்கள்.
இருவரும்
அலுவலகத்திற்கு சென்று வந்து கொண்டிருந்தனர்.
இருவருமே ஒரே இடத்தில் பணி புரிபவர்கள். போன
மாதம் ஒரு
நாள் மனைவி காய்ச்சலுக்கும் வாசமின்மைக்கும்
ஆளானாள். உடனே
தன்னை பரிசோதனைக்கு ஆளாக்கி கொண்டதன் பேரில்
அவள் “கொரோனா பாசிடிவ்”
என்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில்
அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று
வந்தார். அதே வீட்டில்
இருந்த அப்பாவும் பையனும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டனர். கணவருக்கு நீரிழிவு நோயும் இருந்ததால் மிகவும் ஜாக்கிரதையாக
தன் உடல்நிலையை எப்பொழுதுமே பார்த்துக் கொள்வார்.
பதினான்கு
நாட்கள் கழித்து மனைவி இல்லத்திற்கு
திரும்பினார்.
இருவரும்
உடம்பு தேறிய பின் தங்கள்
அலுவலகங்களுக்கு செல்ல
ஆரம்பித்தனர்.
தன் மனைவி கொரோனாவில் பாதிக்கப்
பட்டதிலிருந்தே
அவர் மிகவும் கவலையுடனும் குழப்பத்துடனும் காணப்பட்டார்.
அவருடைய
ட்ரேட் மார்க் கலகலப்பு மொத்தமாக
காணாமல் போய் விட்டது.
வீட்டில் மூவருமே குழப்பத்திலும் பயத்திலும் இருந்ததால் ஒருவர் மற்றவரை
கண்காணிக்க முடியவில்லை, எத்தனிக்கவும் இல்லை.
தன் சொந்த வீட்டை வாடகைக்கு
விட்டு விட்டு நான்கு மாதங்கள் முன்தான்
அருகிலேயே உள்ள ஒரு பெரிய
மூன்று பெட் ரூம்கள் கொண்ட வீட்டிற்கு
குடி பெயர்ந்தார்கள். எனினும் சொந்த வீட்டில்
சில கட்டுமான வேலைகள்
நடப்பதால் அடிக்கடி சென்று கண்காணித்து விட்டு
திரும்புவார் கணவர்.
ஆடி வெள்ளியான அன்று (ஜுலை 7ஆம்
தேதி) அவ்வாறு சொந்த
வீட்டைப்
பார்க்க போகிறேன் என்று கூறி விட்டு
போனவர் இரண்டு
மணி நேரம் ஆகியும் திரும்பி
வராததால் கவலையுற்ற அவர் தாய் தன்
பேரனை உஷார்ப் படுத்தி, போய்
சொந்த வீட்டில் பார்த்து, தந்தையை
அழைத்து
வரப் பணித்தார்.
சொந்த வீட்டிற்குள் நுழைந்து சுற்று முற்றும் தேடி,
தந்தையைக்
காணாத மகன் ஒரு படுக்கையறைக்குள்
எட்டிப் பார்த்து, அங்கு கண்ட
காட்சியைப்
பார்த்து உறைந்து போனான். மின்
விசிறியிலிருந்து அவனது
அப்பா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
சுதாரித்துக்
கொண்டு, தன் வீட்டிற்கு ஓடி
தன் தாயாரிடம் கண்ட
காட்சியை
கூறி காவல் நிலயத்திற்கு தகவல்
சொன்னான்.
காவலர்கள்
வந்து அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அதி
வேகமாகச்
கூட்டிச் சென்றும் அவர் ஆவி பிரிந்து இரண்டு
மணி நேரமாகி
விட்டது
என்று மருத்துவர்கள் கூற, தற்கொலை என்ற
காரணத்தால் அவர் உடலைப்
போஸ்ட் மார்ட்டம் செய்து உறுதி செய்து
வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
சனிக்கிழமை
காலை அவரது
இறுதி யாத்திரை நடந்தது.
எங்கள்
வீட்டில் வயது முதிர்ந்த மாமியார்
இருப்பதாலும் கொரோனா
நோயின்
பயத்தாலும் நாங்கள் இருவரும் சென்று
கடைசியாக அவரைப்
பார்க்கக்
கூட முடியவில்லை.
நண்பர்களே,
இந்த நிகழ்ச்சி மனத்தை அழுத்தினாலும் வருத்தத்தை
தருவதாக
இருந்தாலும் உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு மிக முக்கிய
காரணம் இருக்கின்றது.
கொரோனா
நோய் கொடியதாக இருக்கலாம். பல மனிதரின் உயிரைக்
குடித்திருக்கலாம்.
ஆனால், அது அவ்வளவு பயப்படும்படியான
ஒன்று
இல்லை என்பதே என் கூற்று.
அதை நினைத்து அரைகுறை புரிதலுடன்
நாமாக ஏதோ முடிவிற்கு வரக்
கூடாது.
இந்நோயிற்கு
மிகவும் அவசியமான ஒரு குணம் தைரியம்.
இது ஒரு
சாதாரண
இருமல், சளி, ஜுரம் போல்
வந்து நன்றாக வைத்தியம்
செய்தவுடன்
போயே போய் விடும். இந்நோயின்
முதல் எதிரி பயம்தான்.
மேலும்
ஒரு மிக முக்கியமான என்
மனத்தில் பட்ட ஆலோசனை.
நண்பர்களே,
யாருக்கு, எப்போது, என்ன நடக்கும் என்பது
நாம் அறியாத
ஒன்று.
அப்படி இருக்கையில் நமக்கு தெரிந்த ஒரு நபரோ பக்கத்து
வீட்டுக்காரரோ
கொரோனா பாதிப்பில் விழுந்து சிகிச்சைப் பெற்று குணமாகி வீடு திரும்பும்போது அவருக்கு நாம் முதன்மையாக காண்பிப்பது மனித நேயமாகத்தான்
இருக்க வேண்டும்.
நம் மனதிற்குள் பயம் இருப்பது இயல்பு.
நீங்கள் எட்ட நின்று அவரை
நலன் விசாரிக்கலாம். அல்லது எல்லா கட்டுப்பாடுகளையும்
கடைப்பிடித்து உங்கள்
வசதிக்கேற்ப அவர்கள் வீட்டிற்கு காபியோ
உணவோ கூட தயார் செய்து
அனுப்பலாம். இவை யாவையும் வீட
முக்கியம் நீங்கள் அவரை உங்கள்
வட்டத்திற்குள் இன்றும் வைத்திருக்கின்றீர்கள் என்பதை ஐயமின்றி தெளிவாக
அவரிடம் வெளிப்படுத்துவதுதான்.
தயவு கூர்ந்து எந்த மனிதனையும் கொரோனா
பாதிக்கப் பட்டதால் மட்டும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்காதீர்கள். ஏனெனில் அவருக்கு
கொரோனா நோய் வந்ததற்கு அவர்
காரணமில்லை. அதே போல் கொரோனா
பாதிக்கப் பட்டு வெளி வந்த
பின் தான் சமுதாயத்தால் ஏற்கப் படுகின்றோம்
என்ற புரிதலே அவருக்கு யானை
பலத்தைக் கொடுக்கும்.
ஆகவே, நண்பர்களே, மனதைப் போட்டுக் குழப்பிக்
கொள்ளாதீர்கள்.
நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்
: “இதுவும் கடந்து போகும்”. ஆனால்,
அது கடந்து போகும் வரையில்
நாம் தைரியமாக உயிருடன் இருந்து
ஜெயிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மறைந்த நண்பருக்கு வாழ்க்கை முடியும்போது வயது 54. அவரது ஒரே மகன் இப்போதுதான் சி.ஏ. படித்துக்
கொண்டிருக்கின்றான். அவர் மட்டும்
தன் நண்பர்களிடன் தன் பயத்தை பகிர்ந்து
கொண்டிருந்தாலோ அல்லது தன் குடும்பத்தாருடன்
அளவளாவியிருந்தாலோ இந்த வருந்தத்தக்க
முடிவை நிறுத்தியிருக்கலாம்.
ஒரு தாய் தன் மகனை
இழந்து பரிதவிக்கின்றாள். ஒரு மனைவி தன்
கணவனை இழந்து நொறுங்கி போயிருக்கின்றாள். ஒரு மகனோ தன்
வாழ்க்கையில்
எந்த நல்லது கெட்டதையும் காணாது
குடும்ப பொறுப்பு
என்னும்
மிகப் பெரிய பாரத்தை மிகச்
சிறிய வயதில் ஏற்று தன்
பாட்டியையும்
அன்னையையும் வழி நடத்தும் பிரயாணத்தை
மன
வருத்தத்துடன்
தொடங்குகின்றான்.
நானும்
என் கணவரும் இன்று வரை
அந்த பேரிடியிலிருந்து மீளவில்லை.
அந்த வெள்ளியன்று இருவரும் இரவு தூக்கத்தை இழந்து வருத்தத்தில்
பரிதவித்தோம்.
நண்பர்களே,
நம் எதிரிகளுக்கு கூட இந்த கதி
வரக் கூடாது என்பதுதான்
என் கருத்து.
இந்த உண்மைக் கதையை உங்களுக்கு
தெரிந்த யாவருடனும் பகிர்ந்து
மற்றுமொரு இழப்பைத் தவிருங்கள். நன்றி.
===
===
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
நலமே விளைக..
நீக்குநாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நீக்குநாட வளந்தரும் நாடு
(அதிகாரம்:நாடு குறள் எண்:739)
பொழிப்பு (மு வரதராசன்): முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்; தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் அல்ல.
அனைவருக்கும்
பதிலளிநீக்குசுதந்திர நாள் நல்வாழ்த்துகள்..
நன்றி. வாழ்த்துகள்.
நீக்குஅன்பின் வணக்கங்களுடன்
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ...
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குவாழ்க பாரதம்.. வளர்க தமிழகம்..
பதிலளிநீக்குவந்தேமாதரம்.. வந்தேமாதரம்..
வந்தே மாதரம்.
நீக்குதாய்த் திரு நாடுதனைப்
பதிலளிநீக்குபெற்ற தாயென்று கும்பிடுவோம்.
அன்னை இந்தியா என்னாளும் வளம் பெற்று என்றும் சுதந்திரத்துடன்
இருக்கவேண்டும்.
அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.
வாங்க வல்லிம்மா.. நன்றி. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்
நீக்குஎல்லா நற்கருத்துகளுக்கும்
பதிலளிநீக்குஇன்பம் தரும் பாசிட்டிவ் செய்திகளுக்கும்
நன்றி.
திருமதிகள் செந்தமிழ்ச் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி
நீக்குஆகிய தாய்களுக்கு மனம் நிறை நன்றி. இரண்டு தாய்களின் பிள்ளைகளைக் காத்துக் கொடுத்திருக்கிறார்கள்/எத்தனை வீரம்.
நன்மை தரும் செய்கைகள் நாட்டுக்கு இன்னும் வளம் சேர்க்கும்.
உண்மை. அனைவரும் நலம் பெறட்டும். நன்றி அம்மா.
நீக்குஅன்னபூரணியான ஜெய மேரி இன்னோரு தாயாகக் குழந்தைகளைக் கவனித்து வருகிறார்.
நீக்குஅவருக்கு என்றென்றும் வளம் பொங்கும் வாழ்வு கிடைக்க வேண்டும்.
அமெரிக்காவிலிருந்து சென்று மதுரையில் கரும்பு ஜூஸ் விற்கும்
சரவணனின் தைரியம் மென்மேலும் பெருகட்டும்.
அவருக்குத் தேவையான மனவளத்தையும் இறைவன் அருளுவார்.
ஆட்டோவுக்குத் தின வாடகை கட்ட முடியாத நிலைமையில்
பிறர் சொத்துக்கு ஆசைப்படாத அன்பர்
,தன் சங்கடங்கள் தீர்ந்து நற்பயன் பெற வேண்டும்.
இத்தனை நற்செய்திகளும் மனதுக்கு ஊக்கம் கொடுக்கின்றன
மா ஸ்ரீராம். நம் உலகில் தொற்று ஒழிந்து நன்மை
ஒளிரட்டும்.
நன்மைகள் நிகழட்டும்.
நீக்குஅன்பு ரமாஸ்ரீயின் துன்ப அனுபவம் அதிர வைக்கிறது.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டு உதவியாளர் ராணி, மகளுடன் ம்கணவருடனும் காலை நாலு மணியிலிருந்து 6 வரை 160 வீடுகளுக்கு ஆவின் பால் வினியோகித்து வருகிறார்.
அந்த மனதைரியத்தைப் பாராட்டுகிறேன்.
மாஸ்க் இல்லாமல் அந்த மூவரையும் பார்க்கவே
முடியாது.
தினம் இதுதான் வேலை. அவரது மகனுக்கும் உடல் நலம் பாதிக்கப்
பட்டு மீண்டுவிட்டார்.
எங்கள் காலனி கடைசியில் ஒரு வீட்டுக்கு தொற்று விஜயம் இருந்தது.
விடாமல் அந்த வீட்டுக்கும் வாயிலில்
பால் பாக்கெட் வைப்பதைப்
பார்த்தேன்.
மனதைரியம் இல்லாமல் இந்த நடு வயதுக்காரர் இப்படி செய்திருக்கவே கூடாது.
பின்னால் வேறு காரணம் இல்லாமல் இருக்கவேண்டும்.
இறைவனே துணை.
இதை எல்லாம் ஆராயவே முடிவதில்லை வல்லிம்மா... அந்த கண நேரத்து தடுமாற்றம் என்பார்கள். ஏன் அப்படிச் செய்தாரோ... சென்றவருக்குப் பிரச்னை தீர்ந்தது. கூட இருந்தவர்களுக்கு? இன்னும் கொஞ்சம் மனக்கஷ்டம்தான் கூடும்.
நீக்குஆமாம்மா.மனசுக்கு அவர்களை நினைத்தால் மிக மிக வருத்தம். அந்தக் குழந்தையை நினைத்தால் பதற்றமாக இருக்கிறது,. பாவம்.
நீக்குநீங்கள் அவரை அறிவீர்களா அம்மா?
நீக்குயாவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
நீக்குவல்வில் மாமி, இவர் ஒரு மாமனிதர். யாரையும் நோகடிக்காதவர். எல்லோருக்கும் கேட்டு கேட்டு நல்லது செய்பவர்.
அவரின் வாழ்க்கை முடிவு சக மனிதர்களால் என்று எண்ணும்போது "சீ" என்றாகி விட்டது.
அன்பு ஸ்ரீராம், எனக்குத் தெரியவில்லையே ராஜா.
நீக்குஎன் தம்பி இந்த அலுவலகத்தில் இருக்கும் போது சிலரைத் தெரியும்
அதில் ரமா கணவரும் ஒன்று.
அவனுக்கப்புறம் எனக்கு யாரும் பழக்கம் இல்லை.
அதுவுமிந்த வயதில்.
எனக்குத் தெரிய வேண்டாம் என்றே பயப்படுகிறேன்.
அறியவே அச்சமாக இருக்கிறது.
அவர் மனைவி,பிள்ளை,அம்மா அனைவருக்கும்
இறைவன் பாதுகாப்பு கொடுக்கட்டும்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இனிய ப்ரார்தனைகளால் உலகம் நலம் பெறட்டும்.
நீக்குஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள் ஏகாந்தன் ஸார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
தங்கள் உயிரை பணயம் வைத்து இரண்டு வாலிபர்களை காப்பாற்றிய அந்த வீரப் பெண்களுக்கு வந்தனம்.
ஆசிரியை ஜெயமேரி அவர்களின் மனிதாபிமான செயல் போற்றுதலுக்குரியது. தினமும் இந்த நற்செயலை செய்து வரும் அவரை பாராட்டுவோம்.
இந்த கொரானா காலத்தில் இழந்து போன பழைய வேலையை நினைத்து கலங்காது, தைரியமாக தன் உழைப்பால் ஜூஸ் கடை வைத்து வாழ்ந்து காட்டும் மதுரை சரவணன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
ஏழ்மை நிலையிலும், நேர்மை தவறாது நடந்து கொண்ட ஆட்டோ ஓட்டுனரின் செய்கை பாராட்டத்தக்கது. இவரைப் போன்ற பலரால்தான் இயற்கை அன்னை இன்னமும் அத்தனை வளங்களையும் மக்களுக்கு தந்து வருகிறாள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் குடும்ப நண்பரால், சகோதரியின் குடும்பத்திற்கு ஏற்பட்ட துன்பமான அனுபவங்கள் மனதை வருத்துகிறது. அவர்கள் குடும்ப நண்பர் ஏன் இந்த முடிவுக்கு வர வேண்டும? இதில் அவர் பிரச்சனைகள் குறையலாம். அவர் குடும்பத்தினரின் துக்கங்களை பன்மடங்காக பெருகி இருக்குமே..! அதை குறித்து அவர் அந்த முடிவு எடுக்கும் முன் ஒரு கணமேனும் யோசித்து இருக்கக் கூடாதா?
இந்த சம்பவம் படிக்கும் போது நெல்லை அல்வா கடை உரிமையாளர் இப்படி ஒரு முடிவு எடுத்ததும் நினைவுக்கு வருகிறது. இன்னமும் நமக்கு தெரியாமல் எத்தனை பேரோ? இறைவன் தந்த உயிரை இயற்கையாக அவனிடம் ஒப்படைப்பதே சிறந்தது என்பதை இந்த மாதிரி பிரச்சனைகளுக்காக தற்கொலை செய்து கொள்பவர்கள் என்றுதான் உணர்வார்களோ...! வருந்த வைக்கும் நிகழ்வு...
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குகண்ணீர் மல்குகிறது கமலா.
நீக்குநிகழ்வை சிறப்பாக விவரித்து இருக்கிறீர்கள். அவரது குடும்பத்தினருக்கு எமது இரங்கல்கள்.
பதிலளிநீக்குபயம்தான் இதற்கு மூலதனம். சிலர் நினைக்கிறார்கள் நமக்கு கொரோனா வந்து விட்டால் அவமானம் வந்து விட்டது என்று. உலகம் முழுவதுமே இது நடக்கிறது.
நாம் தவறான பாதையில் சென்று எயிட்ஸை வாங்கி வரவில்லை. வந்தால் எதிர்த்து வாழ்வோம் வராதவரை நம்மதியே....
இன்று உலகத்து விதியை எழுதிக் கொண்டு இருப்பது கொரோனா.
இதற்கு தீர்வு காண்பது இறைவன் மட்டுமே.... பிராத்திப்போம்.
கட்டுரைக்கு வாழ்த்துகள் ரமாஸ்ரீ மேடம்.
நன்றி ஜி.
நீக்குநன்றி கில்லர்ஜீ. இது ஒரு படிப்பினையாகட்டும் என்பதுதான் என் விருப்பம்.
நீக்குஅனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்! வந்தே மாதரம்!
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... வணக்கம், வாழ்த்துகள்.
நீக்குசெந்தமிழிச் செல்வி, முத்தம்மாள்ள், ஆனந்தவல்லி என்னும் வீர மங்கைகளை வணங்குகிறேன். தன் வகுப்பில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வியோடு, உணவையும் அளிக்கும் ஆசிரியை ஜெயமேரி நிஜமாகவே அன்னபூரணிதான். வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்.வேலை இழந்தாலும் மன உறுதியை இழக்காத சரவணன் பிரமிப்பூட்டுகிறார். அவர் சிறப்பாக வளரவும், அவர் விருப்பங்கள் நிறைவேறவும் இறை அருள் உதவ வேண்டுகிறேன். ஆட்டோ ஓட்டுனர் முகமது ஹபீப் நேர்மை அவர் தொழிலில் மேம்பட உதவும். வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபாசிட்டிவ் செய்திகள் தந்த சந்தோஷத்தை ரமாவின் கட்டுரை சிதற அடித்து விட்டது. சரவண குமாருக்கு இருந்த மன உறுதியும், நம்பிக்கையும் ஏன் அந்த உயர் பதவியில் இருந்தவர்களுக்கு இல்லை? இதுவரை வாழ்க்கையில் அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சந்தித்ததே இல்லையோ? மிகவும் வருத்தம் தந்த செய்தி.
பதிலளிநீக்குபானு, அவர் ஒரே பிள்ளை மற்றும் செல்லப் பிள்ளை. ஒரு அன்பை பொழியும் சகோதரி. எனவே, அதிகம் அனுபவமில்லாதவர். தன் உணர்ச்சிகளை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள தெரியாதவர்.
நீக்குதீநுண்மி நிகழ்வு பேரதிர்ச்சி... இங்கு சிலருக்கு நடக்கும் கொடுமைகளிடமிருந்தும் மீள முடியவில்லை...
பதிலளிநீக்குமனித நேயம் என்றால் திருமிகு ஜெயமேரி போல் அல்லவா இருக்க வேண்டும்... திருமிகு முகமது ஹபீப் அவர்களின் நேர்மை... சிறப்பு...!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபாஸிடிவ் செய்திகள் அருமை.வாலிபர்களை காப்பாற்றிய மூன்று பெண்களையும் பாராட்ட வேண்டும் மனித நேயம் வாழ்க!
பதிலளிநீக்குமாணவர்களுக்கு, தினமும் மதிய உணவளித்து வரும் ஆசிரியை ஜெயமேரி அவர்களின் தாய்மை உணர்வுக்கு வாழ்த்துக்கள். தினமலரிலும் உங்கள் முகநூல் பகிர்விலும் படித்தேன்.
மதுரை சூர்யா நகர் சரவணன் அவர்களைப்பற்றி தொலைக்காட்சியில் பார்த்தேன். வாழ்ந்து காட்ட வேண்டும் இப்படித்தான்.
முகமது ஹபீப் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
வியாழன் அன்று ரமா ஸ்ரீநினிவாசன் அவர்கள் கவிதைக்கு இப்போது அர்த்தம் புரிந்தது.
பதிலளிநீக்குகுடும்ப நண்பர் இப்படி முடிவு எடுத்து இருக்க வேண்டாம்.
மனதை கனக்க வைக்கிறது. இறந்தவரின் குடும்பத்திற்கு எவ்வளவு மன வருத்தம்
இறைவன் தான் அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தர வேண்டும்.
மிகவும் வலிக்கின்றது கோமதி. ஏனெனில் கூடவே அளவளாவி கூடவே உயர்ந்தவர்.
நீக்குநான்கு பாசிட்டிவ் செய்திகளும் சிறப்பு. இரண்டாவது செய்தி முன்னரே பார்த்தது. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
பதிலளிநீக்குதிருமதி ரமா ஸ்ரீனிவாசன் எழுதிய பகுதி - வருத்தத்தினை வர வழைத்தது - மெத்தப் படித்தவராக, அலுவலகத்தில் நல்ல பதவியில் இருந்தும் இப்படியான ஒரு முடிவினை தேடிக் கொண்டது மனதை சங்கடப் படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கு இந்தச் சூழலை எதிர்கொள்ள மனோ தைரியத்தினை அந்த ஆண்டவன் தான் வழங்க வேண்டும்.
எல்லோருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குரமா ஸ்ரீ எழுதிய கட்டுரையை படித்தபின் நிஜ வாழ்க்கையில் எத்தனை மனிதர்கள் அச்சத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள் என்று தெரிகிறது. நம்மை சுற்றி உள்ளவர்கள் இயல்பாக இருப்பது போல நடக்கிறார்கள். அதுவும் ஒரு நடிப்பு தானோ என்று தோன்றுகிறது. இன்று சுதந்திர தினம் தான் ஆனால் நாம் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம். சுதந்திரமாக நடமாட முடியாமல் நம்மை சுற்றியுள்ள உலகம் கோவிட் வசமாக இருக்கிறது.
நம் உள் உணர்வு பயப்பட வேண்டாம் என்று சொன்னாலும் வெளி உலகம் பயத்தை கிளப்பி விட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
மகா ரவி
எல்லோருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குரமா ஸ்ரீ எழுதிய கட்டுரையை படித்தபின் நிஜ வாழ்க்கையில் எத்தனை மனிதர்கள் அச்சத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள் என்று தெரிகிறது. நம்மை சுற்றி உள்ளவர்கள் இயல்பாக இருப்பது போல நடக்கிறார்கள். அதுவும் ஒரு நடிப்பு தானோ என்று தோன்றுகிறது. இன்று சுதந்திர தினம் தான் ஆனால் நாம் என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம். சுதந்திரமாக நடமாட முடியாமல் நம்மை சுற்றியுள்ள உலகம் கோவிட் வசமாக இருக்கிறது.
நம் உள் உணர்வு பயப்பட வேண்டாம் என்று சொன்னாலும் வெளி உலகம் பயத்தை கிளப்பி விட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
மகா ரவி
ஒன்றும் பயப்படாதே மஹா. "இதுவும் கடந்து போகும்" என்ற ஆழ்ந்த நம்பிக்கையுசன் இருப்போம்.
பதிலளிநீக்கு,
பதிலளிநீக்குசெந்தமிழிச் செல்வி, முத்தம்மாள்ள், ஆனந்தவல்லி மூவருக்கும் ஒரு சபாஷ்.
ஆசிரியை ஜெயமேரி ஒரு ஆசிரியை மட்டுமல்ல ஒரு நல்ல மனிதநேயம் கொண்ட பெண்மணி என்றும் நிரூபித்துள்ளார். இது சோதனை காலம் என்றாலும் பல சாதனையாளர்களையும் வெளியே கொண்டு வருகின்றது.
மதுரை சரவணன் மட்டுமில்லாமல் பல இளைஞர்களும் இதே மாதிரி மாற்றி வருகிறார்கள். இவர்களின் புது முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியது.
பணத்தை தொலைத்தவர் மிகவும் அதிர்ஷ்டசாலி தான். அவர் அதிர்ஷ்டவசமாக ஒரு நல்ல ஆட்டோக்காரரின் வண்டியில் தனது பணத்தை தவறவிட்டார.
.
.
முதல் மூன்று பெண்களும் இன்று தமிழக அரசால் கௌரவிக்கப்பட்ட செய்தியைச் சற்று முன்னர் தொலைக்காட்சியில் பார்த்தேன். மற்றச் செய்திகளும் அறிந்தவையே! அனைவரும் மனம் தளராமல் தங்கள் வாழ்க்கையை வாழும்போது எல்லா நலன்களும் பெற்றவர் சுற்றி உள்ள மனிதர்களால் இத்தகைய முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்பதை அறியும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. குடும்பத்தினருக்கு மாபெரும் இழப்பு. அவரைத் தனியாக விட்டிருக்கக் கூடாது. ஆனால் இவ்வளவு மனோதைரியம் இல்லாமல் இருப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாரே? வீட்டில் வாடகைக்குக் குடி இருந்தவர்கள் கூடப் பார்க்கவில்லையா? பார்த்தால் குறைந்த பக்ஷம் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்க முடியும். நினைக்க நினைக்க மனது வேதனையில் ஆழ்கிறது.
பதிலளிநீக்குவீடு வாடகைக்கு விடுவதற்காக ரிப்பேர்,white washing போன்றவை நடந்து கொண்டிருந்தன. அவர் யாரிடமும் மனம் திறந்து பேசாமல் தனக்குள்ளேயே வைத்து அதனால் தப்பான முடிவைத் தேடிக்கொண்டார்.
பதிலளிநீக்குபாசிட்டிவ் செய்திகள் கொடுத்த தெம்பை கடைசியில் வந்த செய்தி மனதை என்னமோ பண்ணிவிட்டது
பதிலளிநீக்குநான் முன்னமேயே சொன்னா மாதிரி "அதிர்ச்சி ஆனால் உண்மை"
பதிலளிநீக்குகடைசி செய்தி வருத்தம் அளிக்கிறது. மக்களிடம் இருக்கும் பய உணர்ச்சியை போக்குவதே அரசின் முதல் கடமை என நினைக்கிறேன். அதுவும், மருந்துகள் கிடைக்க ஆரம்பித்துள்ள இந்த சமயத்தில் போய்.......சே சே. அந்த நோய் சிறிது சிறிதாக தீவிரம் இழந்து வருவதை கூட அறியாது இப்படி செய்து விட்டது மனது கனக்கிறது.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸார்.
நீக்குமனித நேயமிக்க வீர பெண்மணிகள் விருதுக்கும் மேல் பாராட்டத்தக்கவர்கள்.
பதிலளிநீக்குஆசிரியை ஜெயமேரி அவர்களின் ஈகை குணம் பாராட்டத்தக்கது. ஆட்டோ ஓட்டுனரின் நேர்மை அதுவும் இந்த காலத்தில்…. சல்யூட்.
அம்மையார் ராமா ஸ்ரீனிவாசன் அவர்களின் அனுபவ பதிவு மிகுந்த வேதனை அளிக்கின்றது. வீட்டு ரிப்பேர் வேலை செய்தவர்கள் யாருமே பார்க்காமல் போனது துரதிர்ஷ்டம்.
கொரோனா என்பது ஒரு உயிர்கொல்லி நோய் என்பதில் சந்தேகமில்லை. அலட்சியப்படுத்தவேண்டாம் , இது பயத்தினால் வருவதில்லை என்பது சமீபத்தில் நிகழ்ந்த- சம்பவம்: இளவயதுக்காரனும் அஞ்சா நெஞ்சனுமான , பலசாலியுமான என் இனிய நண்பன் கடந்த மாதம் இதே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பஹரைன் நாட்டில் காலமானது வெறும் பயத்தினால் அல்ல என்பது என் அனுபவ கருத்து.
"அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்."
அனைவருமே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய தருணம்.,
இன்றைய பதிவில் வந்த அனைத்து செய்திகளும் கவன ஈர்ப்பு செய்திகள்.
வாழ்த்துக்கள் திரு ஸ்ரீராம்.
நன்றி கோ.
நீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
பாசிட்டிவ் செய்திகள் அருமை. இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசகோதரி ரமா அவர்களின் பதிவு மனதை வேதனை அடைய வைத்தது
துளசிதரன்
தாமதமான சுதந்திர தின வாழ்த்துகள். ஒரே வருத்தமான செய்திகளாகவே இருந்தது பார்த்தால் இங்கு ரமாவும் அப்படியான ஒரு செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.
பதிலளிநீக்குசுதந்திர தினம்! இப்போது தொற்று அல்லவா பலரையும் கட்டிப் போட்டுள்ளது. இதனிடமிருந்து எப்போது சுதந்திரம் கிடைக்கும்? கிடைக்கும் நாளை எதிர்காலத்தில் கொண்டாடும் தினமாகவும் அறிவிப்பார்களோ? உலகமே!!! கோவிட் 19 சுதந்திர தினம் என்று!
கீதா
செந்தமிழ் செல்வி, 38, சுந்தரபாலன் மனைவி முத்தம்மாள், 34, அண்ணாமலை மனைவி ஆனந்தவல்லி, 34, ஆகியோர் மெய்யாலுமே வீரப் பெண்கள். அவர்கள் கண்டிப்பாகக் கௌரவிக்கப்பட வேண்டும்.
பதிலளிநீக்குதான் பணியாற்றும் பள்ளி, கொரோனா ஊரடங்கால் மூடியிருக்க, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, தினமும் மதிய உணவளித்து வருவது பற்றி, ஆசிரியை ஜெயமேரி.//
அன்னபூரணியேதான்! ஜெயமேரிக்கு இதயம்கனிந்த வாழ்த்துகள். எத்தனை வயிறுகள் வாழ்த்தும் அவரை!!!
முகமது ஹபீப் ற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
சரவணனின் உழைப்பு அசத்தல். நல்ல முன்னுதாரணம்.
கீதா
பெண்மணிகளின் தீரச் செயலும் ஜெயமேரியின் நற்பணியும் சரவணனின் போராட்டக் குணமும் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையும் பாராட்டுக்குரியவை.
பதிலளிநீக்குஉண்மைக் கதை மனதை வருந்த வைத்தது.