வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

வெள்ளி வீடியோ  :  மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தெனை அள்ளுமே

முதலில் நேயர் விருப்பம்.   எப்போதோ கேட்கப்பட்டிருந்த நேயர் விருப்பங்களை ஒவ்வொன்றாக முடித்து வருகிறேன்!

இது துரை செல்வராஜூ ஸார் விருப்பம்.  பஞ்சவர்ணக்கிளி பாடல்கள் பகிர்ந்தபோது அதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை நேயர் விருப்பமாகக் கேட்டிருந்தார்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை.  வாலி பாடல்.  சுசீலாம்மாவின் இனிய குரலில்...

சத்தியம் சிவம் சுந்தரம்...
​சரவணன் திருப்புகழ் மந்திரம் 
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்..

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் 
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் 
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் 
அவன் அருளை பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ​

பனி பெய்யும் மாலையிலே பழமுதிர் சோலையிலே 
கனிகொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்துவிட்டான் 
பன்னிரண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை 
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழவைத்தான் 
பெண்மையை வாழ வைத்தான் 

மலைமேல் இருப்பவனோ மயில்மேல் வருபவனோ 
மெய்யுருக பாட வந்தால் தன்னைதான் தருபவனோ
அலைமேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் 
அய்யன் கை தொட்ட உடன் அழகுக்கு அழகானேன் 
அழகுக்கு அழகானேன்  ============================================================================================


இனி என் விருப்பம்!

அரு. ராமநாதன் கதையை ஜூபிடர் பிக்சர்ஸ் ஏ எஸ் ஏ சாமி இயக்கத்தில்  'தங்கப்பதுமை' என்கிற பெயரில் படமாக்கி, 1959 இல் வெளியிட்டார்கள். 

சற்றே தாமதமான வெற்றியைப் பெற்ற படமாம்.  முதலில் வாங்கியவர் சரியாக வெளியிடாமல் அடுத்து வாங்கியவர் (25000 ரூபாய்) சிறப்பாக வெளியிட்டு வெற்றி பெற்றதோடு, அந்த வருடத்துக்கான தேசிய விருதும் பெற்றது.இந்தப் படத்தில்தான் அந்தப் புகழ்பெற்ற வசனம்!  "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..."

படத்தில் பதினாறு (பதினாறே!!) பாடல்கள்.  இதில் நமக்கு நன்கு அறிமுகமான பாடல்கள் என்றால் பி சுசீலா பாடிய 'என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்' பாடலையும், டி எம் எஸ் -  பி லீலா  பாடிய 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலையும் சொல்லலாம்.கண்ணதாசன், மருதகாசி, பட்டுக்கோட்டையார், உடுமலை நாராயணகவி பாடல்களுக்கு, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்துள்ளார்கள்.

இன்றைய பாடலான "இன்று நமதுள்ளமே" பாடலை டி எம் சௌந்தர்ராஜனும், ஜிக்கியும் பாடி உள்ளனர்.  பட்டுக்கோட்டையார் பாடல். பி ஜி கிருஷ்ணவேணி என்பதே ஜிக்கியின் இயற்பெயர்.ஒருவர் சாமா ராகம் என்று சொல்லி இருக்கிறார்.  அதை மறுத்து இன்னொருவர் இந்தப் பாடல் சுத்தசாவேரி ராகத்தில் அமைந்திருக்கிறது என்று பதில் அளித்திருக்கிறார்.   இனிய பாடல்.

இன்று நமதுள்ளமே பொங்கும் புதுவெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே 
இன்று நமதுள்ளமே பொங்கும் புதுவெள்ளமே 

மங்கையர் குலமணியே மஞ்சள் முகந்தனிலே 
மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தெனை அள்ளுமே 

இன்று நமதுள்ளமே 

நேற்று நம்மைக்கண்ட நிலா 
நெஞ்சுருகிச் சென்ற நிலா 
வாழ்த்துகள் சொல்லுமே 
மனந்தனைக் கிள்ளுமே
வாழ்த்துகள் சொல்லுமே 
மனந்தனைக் கிள்ளுமே  

வள்ளுவன் வழியினிலே இனி 
வாழ்க்கை ரதம் செல்லுமே - திரு 
வள்ளுவன் வழியினிலே 
வாழ்க்கை ரதம் செல்லுமே 

கண்களில் ஊறும் நீரும் இனி 
நம் நிலைகாண நாணும் - சுகம் 
கவிதை பாடிவரும் சுகம் 
கவிதை பாடிவரும்.

கவலைகள் மறையவே கொண்ட 
கடனும் தீரவே 
அன்னை அருளும் கூர்ந்தே 
காலமெனும் பந்தலில் 
அன்புக் கைகள் ஒன்று சேர்ந்ததே 
காலமெனும் பந்தலில் 
அன்புக் கைகள் ஒன்று சேர்ந்ததே 

இன்று நமதுள்ளமே 

59 கருத்துகள்:

 1. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்..
  அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்...

  காலத்தை வென்று நிற்கும் இனிய பாடல்...

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் .அனைவரின் நலத்துக்கும் மனம் நிறை பிரார்ததனைகள்

  பதிலளிநீக்கு
 4. இரண்டுமே மனதுக்கு உகந்த மிக இனிய பாடல்கள்.
  அழகன் முருகன். எப்பொழுதும் மனதுக்கு உகந்தவன். அந்தப் படமும் அருமையான படம். அலுக்காத கதை, இசை, நடிப்பு, சுசீலாம்மாவின். குரல் ஒலிக்கும் பாடல்கள் நெஞ்சத்தை நிறைக்கும்.

  தங்கப் பதுமை படம் தொலைக்காட்சியில் கொஞ்ச நேரமே காண. முடிந்தது. சீரியஸான உணர்சசிக் காவியங்களை மனம் இப்போது ரசிப்பதில்லை. இங்கே பதிவிட்டிருக்கும் பாடல் என்றும் இளமையோடு இருக்கும். மிக நன்றி ஶ்ரீராம்..

  பதிலளிநீக்கு
 5. அனைத்துமே இனிமையான பாடல்கள் ஜி.

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வணக்கம் கமலா அக்கா.   இனிய பிரார்த்தனைகள் பலன் தரட்டும்.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல்கள் இரண்டுமே நன்றாக உள்ளது. அழகு முருகனின் பாடல் எப்போதும் அலுப்பே இல்லாமல் கேட்டு ரசிப்பது.எத்தனை முறை கேட்டிருப்பேன் என்ற கணக்கே கிடையாது. பி. சுசிலா அவர்களின் குரலில் இனிமையான பாடல்.

  அடுத்துப் பகிர்ந்த பாடலும் இனிமையானவை. இந்த மாதிரி பழைய படங்களில், பாடல்கள் 20க்கு மேல் இருப்பினும் அனைத்தும் வெற்றி பெற்றால், பாடலுக்காகவே அந்த படங்கள் ஓடும்.

  அதற்கு முன் வந்த படங்களில், பாடல்கள் சில நொடிகளுக்கு ஒரு முறை வரும் போது படம் பார்க்கும் மக்கள் திரையரங்கத்தை விட்டு வெளியேறுவதும், பின் "நடுவில் வரும் கதை என்னவாயிற்றோ?" என உள்ளே வருவதுமாக அந்தப்படங்களை பார்த்து முடிப்பார்கள்.

  ஆனால். அவர்களை ஒரளவு திரையரங்கை விட்டு அடிக்கடி வெளியேறாமல் உள்ளேயே இருத்தி வைத்த பெருமை இந்த தங்கப்பதுமை மாதிரி பழைய படங்களுக்குதான் உண்டென நினைக்கிறேன்.

  இந்தப்படத்தில், அனைவருக்கும் அறிமுகமான பாடல்கள் என நீங்கள் குறிப்பிட்டவையும் அழகான பலமுறை கேட்ட பாடல்கள். இரண்டுமே கேட்டு ரசித்தப் பாடல்கள்.

  இன்றைய அழகான இரு பாடல்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பி யு சின்னப்பாப்பாவின் படங்கள், எம் கே டியின் படங்களிலெல்லாம் நிமிடத்துக்கொரு பாடல் வரும்.  அந்த வகையில் பார்த்தால் இது கம்மிதான் இல்லையா?  ஆனாலும் அந்தக் காலப் பாடல்களின் இனிமைக்கு ஈடு சொல்லவே முடியாது.  நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 8. முதல் பாடல் முருகனைப் போலவே அழகு... இரண்டாவது பாடலில் சில வரிகளை மட்டும் cut செய்து வைத்துள்ளேன் ஒரு பதிவிற்காக...! அதே போல் :-

  படியில் இறங்கி வரும் இருவரை பார்த்தவுடன், பத்மினி அவர்களின் கதறல், இதோ இப்போதும் கேட்கிறது...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ''உங்கள் கண்கள் எங்கே அத்தான்!!!!''
   சம்சாரம் ஏதுக்கடி.
   கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி மானே
   வளர்த்தவனே எடுத்துக் கொண்டாண்டி.

   நீக்கு
  2. நன்றி DD.

   நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 9. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
  என்ற பாடலை யூடியூப்பில் பலமுறை கேட்டிருக்கிறேன்...

  எனினும் இங்கு கேட்பதில் ஒரு மகிழ்ச்சி..

  எத்தனை முறை கேட்டாலும் இனிமை குன்றாத பாடல் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.  தனியாகச் சாப்பிடுவதையும் சேர்ந்து சாப்பிடுவதையும் போன்றது இது.

   நீக்கு
 10. கண்ணகி வரலாற்றின் ஒரு சாயலாக
  தங்கப் பதுமை ...

  நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி,
  புன்னகை அரசி - என மக்களின் மனதில் இடம் பிடித்தவர்களின் அருமையான நடிப்பில் உருவான சிறப்பான படம்...

  பதிலளிநீக்கு
 11. எங்கிருந்தோ ஏவி விட்டான் கிளியை - அது
  என் தலையில் போட்டதடி பழியை...

  ஜன ரஞ்சகமான வரிகள்...

  பதிலளிநீக்கு
 12. காலையில் இருந்து இங்கே இணையம் சரியில்லை... தமிழ் தட்டச்சு பாடாகப் படுத்துகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டில் வைஃபை இருப்பதால் ஓடுகிறது.  என் மொபைலில் 4G நெட் வொர்க் வேலை செய்வதே இல்லை.

   நீக்கு
 13. அழகான பாடல்கள். பாடலுக்காகவே பலமுறை பார்க்கக்கூடிய படம். கண்ணதாசன், மருதகாசி, பட்டுக்கோட்டை, உடுமலை - ஆஹா.. ஒரு திரைப்படத்துக்கான கவிஞர்கள் தேர்வு! இசைக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி . தேவகானம் இங்கு வந்திறங்காமல் வேறெங்கு போகும் ? அந்தக்காலத்தில் அழகிருந்தது, கலை இருந்தது, ரசனைத் திறனும் கூடவே வந்தது.

  இப்போதும் இருக்கிறதுகளே.. சுட்டுப்போட்டாலும் தமிழ் நுழையாத வாய்கள், பேனாக்கள், கலை பிரவேசிக்காத மனங்கள்..

  பதிலளிநீக்கு
 14. தங்கப் பதுமை படத்தின்
  சிங்காரம் கெட்டு.. என்ற மக்கள் கவிஞரின் பாடலை ஆழ்ந்து சிந்தித்தால் பல விஷயங்கள் புரியும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக உண்மை அன்பு துரை. சி எஸ் ஜயராமனின் குரலில்
   என்ன உருக்கம்.

   நீக்கு
 15. மெய்யுருக பாட வந்தால் என்று இருக்கணும்

  அய்யன் கை தொட்ட உடன் என வந்திருக்கணும்

  பதிலளிநீக்கு
 16. பாடல் எழுதியவர் வாலி என நினைக்கிறேன் (அழகன் முருகனிடம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அந்த சம்சயம் இருந்தது.   சில சமயம் சரியான விவரங்களை விக்கி தருவதில்லை.  யு டியூபிலும் பதிவேற்றுபவர்கள் எதையாவது எழுதி வைத்து விடுகிறார்கள்.  

   நீக்கு
 17. ஒருவர் சாமா ராகம்... இன்னொருவர் சுத்தசாவேரி. - இன்னொருவர் சாமா ராகத்தில் ஆரம்பித்து இடையில் சுத்த சாவேரில பயணிக்கிறது என்று சொல்லியிருப்பாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை...    அப்படிச் சொல்லவில்லை!

   நீக்கு
  2. நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   கீதா

   நீக்கு
  3. நெல்லை, என்னை சொல்லலைனா உங்களுக்குத் தூக்கம் வராதே!!! ஹா ஹா ஹா ஹா

   சினிமாப்பாடல்களில் மெட்டு அமைத்து ராகத்தில் இசை அமைக்கும் போது ட்வின்ஸ் போல இருக்கும் ராகங்களின் சுவரங்கள் பின்னிப் பிணைந்து வரலாம். அதனால் இரு ராகங்களின் சாயல் இருப்பது போல் படத்தான் செய்யும். இங்கும் அதேதான், ஸ்ரீராம் இருவர் சொன்னதாகச் சொல்லியிருப்பது.

   கர்நாடக சங்கீதம் பாடுபவர்களே கூட இப்படியான ராகங்களைப் பாடும் போது மற்றதன் ஸ்வரம் இடையில் வந்துவிடாமல் பாட மிகுந்த கவனம் எடுப்பார்கள். அப்படியும் சிலர் அதை ஒட்டிய மற்ற ராகத்தைத் தொட்டுச் சென்று மீண்டும் தான் பாடும் ராகத்தில் வந்து லேன்ட் ஆகிடுவாங்க.

   திரை இசையில் ராகங்கள் 16ம் மிக்ஸ் ஆகி உருவாகும் வரலாறு மிகப் பெரியது!!!!!

   கீதா

   நீக்கு
 18. இன்று நமதுள்ளமே மற்றும் முகத்தில் முகம் பார்க்கலாம் - பாடல்கள் கேட்ட நினைவு இருக்கிறது. எனக்கு முந்தைய ஜெனரேஷன் பாடலை எப்படித்தான் தேர்ந்தெடுக்கிறீர்களோ? ஆனால் பாடல் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் அப்பா, தாத்தா கேட்பதை வைத்து தேர்ந்தெடுக்கிறேன் நெல்லை...

   நீக்கு
 19. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  அழகன் முருகனிடம் கேட்டேன். பிடித்த பாடல்.

  தங்கப்பதுமை' பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும். "கண்ணில் விழுந்த மலர் எடுத்து" என்ற பி.லீலா அவர்களின் பாடலும் , பாடலில் வரும் மணியின் ஒலியும் மெய் சிலிர்க்க வைக்கும்.

  சி,எஸ் ஜெயராமன் அவர்கள் பாடலும் இடையில் பத்மினியின் பேச்சும் கேட்கவே மனது கஷ்டமாய் இருக்கும்.
  முன்பு அடிக்கடி வைக்கும் பாடல் வானொலியில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா...   வணக்கம்.  ரசனைக்கு நன்றி.

   நீக்கு
 20. //இன்று நமதுள்ளமே பொங்கும் புதுவெள்ளமே//

  இனிமையான பாடல்.

  பாடல் கேட்டேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. இரு பாடல்களுமே மிக மிக அருமையான பாடல்கள் ஸ்ரீராம். மிக மிக ரசித்தேன்.

  இரண்டாவது பாடல் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் போலவே இருக்கிறது

  கீதா

  பதிலளிநீக்கு
 22. இரு பாடல்களையும் ரசித்தேன்.

  அழகன் முருகனிடம் பாடல் மிகவும் பிடித்த பாடல். அதை இங்கு பகிரக் கேட்ட துரைசெல்வராஜு சாருக்கு மிக்க நன்றி.

  எங்கள் பக்கத்தில் மழை வலுத்துப் பெய்கிறது. ஆறுகள் வெள்ளமெடுத்து ஓடுகின்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. செவ்வாய் வரை மழை தொடரும் என்றும் சொல்லப்படுகிறது. கல்லூரிக்குச் சென்று ஆன்லைன் வகுப்புகள் இப்போது என்பதால் கல்லூரி விடுமுறை விட்டிருக்கிறார்கள். வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்க வேண்டும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டக்குனு படிக்கும்போது பெரிய மழை இல்லை, அவங்க இடத்துல என்ன ஆறு ஓடுதுன்னு கன்ஃப்யூஸ் ஆயிட்டேன். வெள்ளத்தை நினைத்தால் மும்கை கேரள நினைவு வருவது தவிர்க்க இயலாது

   நீக்கு
 23. தங்கப்பதுமை வசனங்கள் அரு. ராமநாதனின் கைவண்ணம்.

  பதிலளிநீக்கு
 24. இன்று வந்த எல்லாப் பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல். முன்னெல்லாம் வானொலிப் பெட்டியில் "சிங்காரம் கெட்டு" பாடல் அடிக்கடி ஒலிக்கும். பஞ்சவர்ணக்கிளி, தங்கப்பதுமை இரு படங்களும் பார்க்கவில்லையே தவிரப் பாடல்கள் அடிக்கடி கேட்டவை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று இரண்டே பாடல்கள்தான் கீதா அக்கா.   அதில் ஒன்று ஓடவில்லை!

   நீக்கு
 25. அனைவருக்கும் மதிய வணக்கம். இரண்டுமே அருமையான பாடல்கள். ஆனால், முதல் பாடலின் நடை எனக்கு மிகவும் பிடித்தது. //அழகுக்கு அழகானேன்; அழகுக்கு அழகானேன்// என்ற இடத்தில் மிக அழகாக இழுத்து பாடுவார். Beautiful rendition.

  பதிலளிநீக்கு
 26. பாடல்கள் இரண்டும் கேட்டு ரசித்தவை ஆனால் இங்கு ஏனோ திறக்க வில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி எம் பி ஸார்...   முதல் பாடல் என்ன லிங்க் கொடுத்தாலும் திறக்கவில்லை.  அங்கு சென்றுதான் கேட்கவேண்டும் போல!  ஆனால் ரிஅண்டாவது பாடல் ஒலிக்கிறது.

   நீக்கு
 27. அனைத்து பாடல்களும் கேட்டிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
  'அழகன் முருகனிடம்..' பிடித்தமான பாடல்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!