வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

வெள்ளி வீடியோ : கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

நடிகர்களையும் இசை அமைப்பளாரையும் கோவைத்தம்பிதான் பார்த்துப் பார்த்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
  பூர்ணிமாவின் சந்திப்பை மலையாளப்படமான மஞ்சில் விரிஞ்சு பூக்கள் படத்திலும், மோகனின் நடிப்பை நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலும் பார்த்து விட்டு அவர்களை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.  அவர் முதலில் வேறு சில அப்போதைய பிரபல நடிகர்களை மனதில் நினைத்து முயற்சி செய்திருந்தாலும், இவரின் அரசியல் பின்னணி காரணமாக அவர்கள் சம்மதம் சொல்லவில்லை என்று தெரிகிறது.அப்போதைய முதல்வர் எம் ஜி ஆருக்கு இந்தப் படத்தைப் ப்ரத்தியேகமாகப் போட்டுக்காட்டியபோது கோவைத்தம்பி பெரிய தயாரிப்பாளராய் வெற்றிக்கொடி நாட்டுவார் என்று ஆசீர்வாதம்/ஆரூடம் சொன்னாராம் எம் ஜி ஆர்.

அப்போதைய பத்திரிகைகளில் அடிக்கடி வந்த செய்தி மோகன் நிருபர்களை அழைத்து பயணங்கள் முடிவதில்லையில் தன் நடிப்பு எப்படி என்று கேட்டுக்கொண்டே இருந்ததாகப் படித்திருக்கிறேன்.  இன்னொரு விஷயம் என்ன என்றால் இந்தப் படம் வெளியாவதற்கு சுமார் ஒரு மாதம் முன்னால் வெளியான கமலஹாசன் நடித்த வாழ்வே மாயம் படத்திலும் இதே கதை அமைப்புதான்.  இளையராஜாவின் சாயலில் இசை அமைத்திருந்தார் கங்கை அமரன்.  இந்தப் படமும் அப்போது வெள்ளி விழா கண்டது.

அந்த நேரங்களில் கமலஹாசன் நடிக்க தேதி கிடைக்காதவர்கள் மோகனைத் தேடி ஓடுவார்கள்.  ஏழைகளின் கமலஹாசன் என்று ஒரு பத்திரிகையில் போட்டிருந்தாலும், மோகன் மைக் மோகன் ஆகி பின்னர் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.


முத்துலிங்கம் பாடலை எஸ் பி பியும் எஸ் ஜானகியும் பாடி இருக்கிறார்கள்.  ராகதீபம் பாடல் பகிரலாமே என்று பார்த்துவிட்டு, இதைப் பகிர்கிறேன்.  இடையில் இருமல் வந்தால் இசை அமைப்பாளர்கள் அதையும் சேர்த்து ரெகார்ட் செய்வார்களா என்றெல்லாம் கேட்காமல் நாயகனின் சோகத்தில் பங்குகொளல்வேண்டும்!  சங்கராபரணம் படத்திலும் எஸ் பி பி இருமுவார்.  ஆனால் ஒரே ஒருமுறைதான்.  அப்புறம் வாணி ஜெயராம் தொடர்ந்து விடுவார்.  இங்கு இருமி இருமி பாடி முடிக்கிறார்.  ஆனாலும் பாடலின் மெல்லிய சோகம், குரல் எல்லாம் ஓகே ரகம்.

மணி ஓசை கேட்டு எழுந்து  நெஞ்சில்  ஆசை கோடி சுமந்து 
திருத்தேரில் நானும் அமர்ந்து  ஒரு கோவில் சேர்ந்த பொழுது 
அந்த கோவிலின் மணி வாசலை  இன்று மூடுதல் முறையோ   

கண்ணன் பாடும் பாடல் கேட்க.... ராதை வந்தால் ஆகாதோ...... 
ராதையோடு ஆசை கண்ணன் …பேச கூடாதோ
கண்ணன் பாடும் பாடல் கேட்க  ராதை வந்தால் ஆகாதோ 
ராதையோடு ஆசை கண்ணன் பேசக்கூடாதோ  
 ராதை மனம் ஏங்கலாமோ கண்ணன் மனம் வாடலாமோ 
வார்த்தை மாறுமோ  நெஞ்சம் தாங்குமோ...... 

மணி ஓகேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து.....  

பாதை மாறி போகும்போது.ஊரும்வந்தே சேராது 
தாளம் மாறி போடும் போது  ராகம் தொட்ட்
பாதை மாறி போகும்போது ஊரும்வந்தே சேராது  
தாளம் மாறி போடும் போது ராகம் தோன்றாது  
பாடும் புது வீணை இங்கே   
ராகம் அதில் மாறும் அங்கே 
காலம் மாறுமோ தாளம் சேருமோ..... இதுவும் வைரமுத்துவின் வரிகளில் வரும் பாடல்.  எஸ் பி பியின் குரலில் மிக அருமையான பாடல்.  பல படங்களிலும் வருவது போல எழுதி வைத்திருக்கும் வரிகள் ரெக்கார்டிங்கில் முக்கியமான கணத்தில் பறந்து விடுகின்றன.  திகைத்துப் போனாலும் அவனே ஒரு பாடலைப் பாடி விடுகிறான்!  எங்கே இப்படி எல்லாம் சான்ஸ் தருகிறார்களோ...    காலம் காலமாக மொழி பேதமில்லாமல் அணைத்து மொழித் திரைப் படங்களிலும் இப்படி காட்சி வந்து விடும்! -நாயகன் திரையில் பாடுபவனாக வந்தால்.

தோகை இளமயில் ஆடி வருகுது 
வானில் மழை வருமோ 
கோதை இவள் விழி நூறு கவிதைகள் 
நாளும் எழுதிடுமோ 
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம் 
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ  

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம் 
இதழ்களிலே பௌர்ணமி வெளிச்சம் 
கண்ணில் தோன்றும் ஜாலங்கள் கார்கால மேகம் 
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும் 
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா 
அன்னமும் இவளிடம் நடை பழகும் 
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்  

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும் 
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும் 
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும் 
அந்த மழையில் மலர்களும் குளிக்கும் 
அருவிகளோ ராகம் தரும் 
அதில் நனைந்தால் தாகம் வரும் 
தேவதை விழியிலே அமுத அலை 
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை  
தோகை இளமயில் ஆடி வருகுது 


===========

51 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம்.

  இரு காணொளிகளும் வரவில்லை. முதலாவது Private எனவும் இரண்டாவது Unavailable என்றும் வருகிறது. பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம். அனைவருக்கும்.நல் வாழ்வு மேலும் வளம் பெற அன்னை அருள் செய்வாள்.

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. ஆமாம் வெங்கட் அந்தப் பாடல் நான் கேட்க மாட்டேன்.அதுதான் இங்கே பதிவாகவில்லை!

   நீக்கு
  2. நானும் ரெண்டாவது பாடல் பார்த்து விட்டேன் ஜி.
   அனைத்து வளங்களும் பெருகட்டும்.

   நீக்கு
 4. இரண்டும் ஸூப்பர் பாடல்கள். ஆனால் காணொளி காண முடியவில்லை.

  ஸ்ரீராம்ஜி அவர்கள் எங்கே ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி சரிசெய்யப்பட்டது. ஸ்ரீராம் விரைவில் வருவார். கணினி பிரச்சனை.

   நீக்கு
  2. ஸ்ரீராமோட ஸ்லாட் அடுத்தது வியாழக்கிழமைதான் வருது. அதுக்குள்ள கணிணிப் பிரச்சனை சரியாயிடும். (வியாழன் கதையின் முடிவுப் பகுதியும் அல்லவா). நம்ம feedbackலாம் பார்த்து கிளைமேக்ஸ் மாற வாய்ப்பு இருக்கா?

   நீக்கு
  3. அவர் ஏற்கெனவே எல்லாவற்றையும் முன்பே எழுதி, எங்கள் பிளாக் draft பகுதியில் சேர்த்து, அதை வியாழக்கிழமை வெளியிடவும் command கொடுத்துவிட்டார்.

   நீக்கு
 5. பாடல் பகிரலாமே என்று பார்த்துவிட்டு, இதைப் பகிர்கிறேன். இடையில் இருமல் வந்தால் இசை அமைப்பாளர்கள் அதையும் சேர்த்து ரெகார்ட் செய்வார்களா என்றெல்லாம் கேட்காமல் நாயகனின் சோகத்தில் பங்குகொளல்வேண்டும்!/////// அன்பு ஸ்ரீராம், நாயகன் சோகம் நமக்கெதற்கு.
  அவன் சோகம் பணத்திற்காக.
  நம்மை அது அடையக் கூடாதுமா.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடர்ந்து ஏறும் தொற்றுக் குறைந்து வரவும் பிரார்த்தனைகள். தொடர்ந்து விடாமல் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 7. இரண்டு பாடல்களும் அருமை. காலையில் சோகப்பாடல் கேட்கவில்லை.

  ஏழைகளின் கமலஹாசன், ஏழைகளின் ரஜினி..ஏழைகளின் விஜயகாந்த். பிறகு ஏழைகளின் விஜய் என்றெல்லாம் திரையுலகில் உலா வருவது சகஜம்தான்.

  பதிலளிநீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல்கள் இரண்டும் அருமை. இன்னமும் சென்ற வார பயணங்கள் முடியவில்லையா? ஆனாலும் இனிதான பாடல்களை கொண்ட பயணங்கள் நன்றாகத்தான் இருக்கிறது. இரு பாடல்களுமே அருமை.

  முதல் பாடலில் எந்த கதாநாயனுக்காக மோகன் இப்படி இருமி இருமி பாடுகிறார் எனத் தோன்றும். ஆனால் அவரே உடல் நிலை சரியில்லாததால் அப்படி பாடுவதை அப்படியே பதிவு செய்ய எப்படி ஒப்புக் கொண்டார்களோ? பல குழப்பங்கள்.. ரிஷி மூலம் நதிமூலம் பார்க்க கூடாது என்பது போல்...
  நல்ல பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் காலை வணக்கம். 
  பயணங்கள் முடிவதில்லை, வாழ்வே மாயம் இரண்டும் ஒரே கதையோடு ஒரே சமயத்தில் வெளியானாலும் பயணங்கள் முடிவதில்லை ட்ரீட்மெண்ட்டினால் இன்னும் சிறப்பாக இருந்தது. பாடல்கள் மிகப்பெரிய ப்ளஸ். அந்த சமயத்தில் பூர்ணிமா, சுஹாசினி இவர்களெல்லாம் girl next door தோற்றத்தினால் ஜெயித்தவர்கள். 
  அப்போது அரசு கேள்வி பதில்களில் "வாழ்வே மாயம்'  ..... என்ற தெலுங்கு படத்தின் ரீ மேக்காமே?" என்ற கேள்விக்கு அரசு,"அப்படி நினைத்துச் சென்றுதான் ஏமாந்தேன்" என்று பதிலளித்திருந்தார். 

  பதிலளிநீக்கு
 11. பகிரப்பட்டிருக்கும் இரண்டு பாடல்களில் 'தோகை இளமயில் ஆடி வருகுது..' பாடல் மிகவும் பிடிக்கும். இந்த பாடல் காட்சியை பார்க்கும் பொழுது பூர்ணிமாவுக்காக வேறு யாரோ ஆடியிருக்கிறார்களோ என்று தோன்றும். 

  பதிலளிநீக்கு
 12. தோகை இளமயில்.. அருமையான பாடல்.
  வைரமுத்து நன்றாக வரைந்திருக்கிறார். எஸ்பிபி தன் வாய்வரிசையைக் காட்டியிருக்கிறார்!

  பதிலளிநீக்கு
 13. இரண்டு பாடல்களும் முன்பு அடிக்கடி வானொலியில் வைக்கும் பாடல்கள்
  அருமையான பாடல்கள் தான்.
  இன்று காணொளியுடன் பாடல் கேட்டாச்சு.

  பதிலளிநீக்கு
 14. ராக தீபம் ஏற்றும்.. என்று ஆர்கெஸ்ட்ரா எல்லாம் மழையில் நனைந்து ஒரே பிரச்னை..

  மணியோசை கேட்டு எழுந்தால் - இருமல் இளைப்பு நெஞ்செரிச்சல் என பெருஞ்சத்தம்..

  தோகை இளமயில் ஆடி வருகையில்! ...

  தோகை (உடைய) இள (ஆண்) மயில் - எனில் என்றல்லவா அர்த்தம்...

  ஆண் மயில் அல்லவா தோகை விரித்து ஆடி பேடையைக் கவர்கின்றது...

  இங்கே இவன் தன் காதலியைப் பார்த்து தோகை இளமயில் என்கிறானே.. என்று நண்பர்களிடம் கேட்டபோது என்னைப் பைத்தியம் என்றார்கள்...

  கதாநாயகன் மயில் டான்ஸ் ஆடியிருந்தால் என்ன ஆகியிருக்கும்!?..

  ஏரிக்கரையின் மேலே
  போறவளே பெண் மயிலே!.. என்று முன்பே பாட்டு இருந்தாலும் தோகை மயில் என்று சொல்லப்படவில்லை...

  பின்னாளில் ஒரு பிரசித்தம்..

  மாதவிப் பொன் மயிலாள்
  தோகை விரித்தாள்!...

  பெண் மயிலுக்குத் தோகை இல்லாதபோது
  பொன் மயிலாள் எப்படித் தோகை விரிப்பாள்!.

  ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..
  ஒரு கோலமயில் என் துணையிருப்பு!..
  - என்றார் கவியரசர் அவரது பங்கிற்கு..

  நண்பர்கள் அன்றைக்குச் சொன்னார்களே
  அது மாதிரி தானோ நான்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவியரசர் கண்ணதாசன், இதுபோல சுட்டிக்காட்டிய தவறுகளை, தவறு என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதனைப்பற்றி வாலி எழுதி படித்த நினைவு இருக்கிறது. வார்த்தை ஜாலத்திற்காக வார்த்தைகளைப் போடும்போது சில இடங்களில் அர்த்தம் பிசகிவிடும். பெரும்பாலும் திரையுலகில், அல்லக்கைகள்தாம் அதிகம். அவங்க 'ஆஹா ஓஹோ' என்று சொல்வதிலும், உண்மையைச் சொன்னால் கோபம் வரப்போகிறதே என்று பம்மிக்கொண்டும் இருப்பாங்க. அதுனாலதான், 'தெருக்கோயிலே ஓடிவா', 'பருவாயில்லை' என்றெல்லாம் பாடகர்கள் பாடிவிட நேரிடுகிறது. இது பாடகர்களின் தவறல்ல. ரெக்கார்டிங் தியேட்டரில் இருக்கும் அல்லக்கைகளின் தவறு.

   நீக்கு
 15. இரண்டுமே ரசிக்கக்கூடிய அழகான பாடல்கள்.

  பதிலளிநீக்கு
 16. அதென்ன இமைப் பறவை?...

  விழிப் பறவை..என்றிருந்தால் கூட சரி..

  விழிப் பறவை - தேன் சிட்டு போல அவள் விழிகள் படபடத்தன - என்று கொள்ளலாம்...

  இழுக்குடை பாடலுக்கு இசை நன்று!.. என்பது ஔவையார் அருள் வாக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை சார்... இந்த பிரியா வாரியார் என்ற நடிகை புருவத்தை அசைத்து டான்ஸ் காட்டியதை நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கு. இரண்டு புருவத்தையும் அசைத்தால், பெரிய பருந்தின் சிறகுகள் போலத் தெரியும். இப்படீல்லாம் அர்த்தம் நாமே கொடுத்துக்கணும்.

   நீக்கு
  2. ஓ!... அது ஒன்னு இருக்கே!...
   அதை மறந்து விட்டேன்...

   நீக்கு
  3. தேன் சிட்டு போல விழிகளை படபடவென்று மூடித் திறப்பது எல்லாம் சரோஜாதேவி யால் மட்டுமே முடியும்!

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!