வியாழன், 17 டிசம்பர், 2020

கைரேகை ஜோசியம் பார்க்கலியோ... ஜோசியம்...

 சின்ன வயசில் (!) கையைப் பார்த்தோ, ஜாதகம் பார்த்தோ சில ஆரூடங்கள் சொல்வார்கள்.  இந்த மாதிரி விஷயங்கள் எனக்குத் தெரியும் என்று வீட்டுக்கு வருபவர்கள் யாராவது சொல்லி விட்டால் போதும்...   உதாரணமாக கைரேகை..   

உடனே வீட்டில் உள்ளவர்கள் கைகள் யாவும் அவர் முன் நீளும்! 


ஜோசியம் பார்ப்பவர்கள் சிலர் கண்களில் எப்பவும் நன்மை இல்லாத விஷயங்களே படும்.  சிலர் கண்களில் நல்ல விஷயங்கள் மட்டுமே படும்.  அல்லது நல்லதை மட்டுமே சொல்வோர் என்றும் கூட சொல்லலாம்.  அவர்களுக்கெல்லாம் 'வாக்கு காலம்' என்று ஒன்று உண்டு என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  அந்தக் காலம் வரை அவர்கள் சொல்வது பலிக்கும்.  அப்புறம் பலிக்காமல் போகும்.  முதலில் வாங்கிய பெயரை வைத்தே அப்புறமும் கொஞ்ச நாட்கள் அவர்கள் வண்டி ஓடும்!

என்ன செய்ய...   உப்புசப்பில்லாமல் ஆரூடம் சொன்னால் அவர்களுக்கும் வருமானம் இருக்காதே...   சுகுமார் சொல்வார்...  இதற்கெல்லாம் காசு வாங்கினாலே போச்சு..   வாங்கக்கூடாது என்பார்.  யாரால் முடியும்?  அட்லீஸ்ட் வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவாவது காசு கேட்டால்தான் ஆச்சு என்பது இன்னொருவர் வாதம்.

நாடி ஜோசியம் பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆசை உண்டு.  இன்னும் சந்தர்ப்பம் அமையவில்லை!  ஆனால் என்ன நடக்கும் என்று அறியும் ஆவல் இல்லை.  எப்படி சொல்கிறார்கள் என்று அறியும் ஆவல்!

ரோட்டோரத்தில் பார்க்கப்படும் கைரேகையும், கிளி ஜோசியமும் இதுவரை பார்த்ததில்லை; நம்பிக்கையும் இல்லை!

ஜாதகம் பார்த்துச் சொல்பவர்கள் நிறைய கட்டங்கள், நட்சத்திரங்கள் பற்றி பேசி பலன் சொல்வார்கள்.  சில சரியாய் இருக்கும்.  பல சரியாய் இருக்காது!

நங்கநல்லூரில் ஒரு சாமியார் இருந்தார்.  இப்போதும் ஜோசியம் பார்க்கிறாரா என்று தெரியாது.  அவரிடம் சென்றால், நாம் எதுவுமே சொல்ல வேண்டாம்.  நம் பிரச்னை என்ன என்று அவரே சொல்வார்.  ஒரு காகிதத்தில் விறுவிறுவென கிறுக்கிக் கையில் கொடுத்து விடுவார்.  பொதுவாகவே இவர்கள் சொல்வது எல்லாம் நடந்தவை பற்றிச் சொல்வது சரியாகவே இருக்கும்.  அப்புறம் நடக்க இருப்பது குறித்துச் சொல்வதுதான் நூற்றுக்கு தொண்ணுற்றொன்பது சதவிகிதம் நடப்பதில்லை.

குறி சொல்வோர் மீது பயம் உண்டு.  ரொம்பக் கோபக்காரர்களாய் இருப்பார்கள் என்று தோன்றும்.  பயமுறுத்தும் செய்கைகள், வார்த்தைப் பிரயோகங்கள்..  என் மாமாவே ஒருவர் குறி சொன்னது பற்றி முன்னரே எழுதி இருக்கிறேன்.  நகைச்சுவையாய் இருக்கும்!  அவர் சொல்லும் பரிகாரங்கள் கேட்க எளிதாகவும், அவற்றை நிறைவேற்றும்போது கடினமாகவும் இருக்கும்!  ஒரு சின்ன டபரா அளவு எலுமிச்சம் பழ சாதம் செய்து 'கோவிலில் நின்று கன்னியாப் பொண்ணுக்குக் கொடு' என்பார்.  இதில் என்ன சிரமம் என்று சொல்லத் தேவை இல்லை.  கோவிலுக்கு வருபவர்களில் கன்னிப்பெண்ணுக்கு மட்டும் இதைக் கொடுத்தால் மற்றவர்கள் எச்சரிக்கை அடைவார்கள்.  வாங்கிய பெண்ணிடமும் 'அதைக் கீழே கொட்டிவிடு...  ஏதோ செய்வினை' என்பார்கள்.  யாரும் பக்கத்திலேயே வரமாட்டார்கள்!  இந்த மாமாவிடம் நாங்கள் விரும்பிக் கேட்ட குறி அல்ல இவை.  தானாய் வந்தவை!  

அதே என் மாமா (அதாவது அப்பாவின் தங்கை கணவர்) என் கையைப் பார்த்து நான் ரொம்ப சுயநலமாயிருப்பேன் என்றும், அப்பா அம்மாவுக்கு எந்த உதவியும் பிற்காலத்தில் செய்யமாட்டேன் என்றும் சொல்லி இருந்தார்.   எனக்கே அது ஏற்புடையதாய் இல்லாமல் இருந்தது!  அதே சமயம் என் ஒவ்வொரு செயலிலும் இந்த ஆரூடம் நினைவுக்கு வந்து அதைப் பொய்யாக்கவே விழைந்தது மனம்!

எனக்குத்தெரிந்த ஒருவர் அப்படி ஒருமுறை ஜோசியம் (அதுவும் அவர் உறவினரிடமே) பார்த்தபோது அவருக்கு முப்பத்தெட்டு வயதில் மாபெரும் கண்டம் இருக்கிறது என்று முதலில் சொல்லப்பட்டது.  அப்புறம் இன்னொருவரிடம் இவர் ஆயுசே அவ்வளவுதான் என்று சொல்லி இருக்கிறார் பார்த்தவர்.  அதுவும் இவர் காதுக்கு வந்துவிட்டது.

எவ்வளவு மறந்தாலும் அவ்வப்போது அது நினைவுக்கு வந்து அவரை வாட்டிக்கொண்டே இருந்தது.  இன்னொருவரோ, இந்த கண்டத்தில் ஒருவேளை தப்பித்தாலும் 54 வயதில் ஒரு கண்டம் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

அவருக்கு 37 வயது வந்தபோதும், முப்பத்தெட்டை அடைந்தபோதும் அவர் இருந்த நிலை பற்றிச் சொல்வது சிரமம்.  ஆனால்...

அந்த வயதை எல்லாம் தாண்டி வந்தார்.  அப்புறம் என்ன உடல் சிரமம் வந்தாலும் பயப்பட ஆரம்பித்து விட்டார்.  இப்போது 52 வயது ஆகி இருக்கிறது.  அடுத்த கட்ட பயப்படுதலுக்கு தயாராய் இருக்கிறார்.  சுண்டு விரல் வலித்தால் கூட ஸ்கேன் எடுக்கத் தயாராய் இருக்கிறார்!

என் தூரத்து உறவினர் ஒருவர் தன் வயதை தானே கணித்து வைத்திருக்கிறார்.  என்னிடமும் சொல்லி இருக்கிறார்.  'அதற்குள் இதை முடிக்கவேண்டும், அதை முடிக்கவேண்டும்' என்று செயல்பட்டு வருகிறார்.   ஒன்றும் சொல்ல முடியவில்லை.

====================================================================================================

இரவுக் கவிதைகள் ​எழுதி அதில் ஒன்றிரண்டை முன்பே வெளியிட்டிருந்தேன்.  மிச்சம் உள்ளவற்றை  அப்புறம் ஒன்றிரண்டாய் வெளியிடலாம் என்றிருந்தேன்.  பார்த்தால் அதற்கு சந்தர்ப்பமே வராமல் போக, கையிருப்பை  செலவு  செய்து விட்டேன்!!!




இன்றைய ஆசைகள்

இமைகளில் காத்திருப்பு

திரை போட்டதும்

கனவுப்படம் ஆரம்பம்.

 


இமைக்கதவுகளைச் 

சாத்தி

மனத்துக்கும் உடலுக்கும்

ஓய்வு கொடுக்கின்ற

கண்கள்.

தழுவட்டும் உறக்கம்.

 


இன்றைக்கும் 

நாளைக்கும் இடையே

ஓய்வுப்பாலமாய் இரவு.

 


பகல் முழுதும் 

பிரிந்திருந்த இமைகள்

இரவில் தழுவுகின்றன

ஒன்றையொன்று.

 


கண்களின் கதவடைப்பில்

காலைவரை

கட்டாய ஓய்வு.

 


புவிஈர்ப்பு விசையை 

மறக்கின்றது உடல்

கண்களில் நிறைகிறது

உறக்கக்கடல்.

 


இணைய வெளியில் அலைந்தது போதும்

இமைகளைத் தழுவட்டும் உறக்கம்

 

 

 

====================================================================================================

பழைய புத்தகம் ஒன்றிலிருந்து...   சத்யசாயி பாபா...



===================================================================================================

சுப்பு என்றொரு ஓவியர் இருந்தார் தெரியுமோ...  இந்தப் படம் காட்டும் காட்சி என்னென்ன சொல்கிறது?





=================================================================================================




==================================================================================================

இன்றைய பழைய  நினைவுகளில் 'வாஷிங் பவுடர் நிர்மா!'  தமிழ் விளம்பரம் சட்டென கிடைக்கவில்லை.  எனவே இது!  

தொலைக்காட்சியில் 'வாஷிங் பௌடர் நிர்மா' என்றதும் என் நண்பன் பாடுவான் "அய்யர் வீட்டுக் குருமா!"

172 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. நான் தான் முதல் போணியா? என்ன ஆச்சு எல்லோருக்கும்? எங்கே போனீங்க எல்லோரும்? தனியாய் இருக்க பயமாய் இருக்காதோ! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலக மகா அதிசயமா கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டு, யாரையுமே காணோமே என்று சொல்றது இந்த கீசா மேடத்தின் வேலையாப் போச்சு. 5:28 வரை நான் freeயா இருந்தேன். அப்புறம் ஜிம்முக்கு கிளம்பிட்டேன். இப்போதான் நேரம் வந்தது.

      நம் இணைய நண்பர்கள் நலமுடன் இருக்கணும் என்று ப்ரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம்.  இன்று நீங்கள்தான் முதல் போணி!  அதுவும் என்னால் உடனே பதில் சொல்ல முடியாத நேரம்!

      நீக்கு
  3. துணுக்குகள் படிச்ச நினைவு வருது. அந்த "சுப்பு!" பெயர் கேட்ட நினைவு. படமும் பார்த்த மாதிரி. ஆனால் எந்தப்பத்திரிகை அவர் உண்மையான பெயர் எல்லாம் தெரியலை/நினைவிலும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணன், கலைமகள் இரண்டு பத்திரிக்கைகளிலும் அந்தக் காலத்தில் சுப்பு வரைந்த படங்கள் பார்த்துள்ளேன்.

      நீக்கு
    2. ஆம், கலைமகள் தொகுப்பிலிருந்துதான் எடுக்கப் பட்டது இந்தப் படம்.

      நீக்கு
    3. ஓ, கண்ணனில்"சுப்பு" பார்த்த மாதிரி நினைவு. கலைமகளில் பார்த்த நினைவு இல்லை.

      நீக்கு
    4. எங்களிடம் கண்ணன் புத்தக கலெக்ஷனே கிடையாது.  நான் அந்தப் புத்தகம் பார்த்ததும் இல்லை.

      நீக்கு
  4. "நிர்மா" விளம்பரத்தில் ஆரம்பத்தில் ஆடும் சின்னப் பெண் அந்தக் கம்பெனிக்காரர்களுடைய சொந்தப் பெண். குஜராத்தைச் சேர்ந்த ஜெயின் குடும்பமான அவர்களின் அந்தப் பெண் திடீரென இறந்து விட்டார் சின்ன வயதிலேயே! ஆனாலும் அந்தப் பெண் நினைவாக அறக்கட்டளை ஏற்படுத்தித் தொண்டு செய்து வந்தார்கள் பெற்றோர்கள் இருவரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது குறித்து இணையத்தில் பலவிதமான வித்தியாச தகவல்கள் உலவி வருகின்றன.

      நீக்கு
    2. ஓ...   இது எனக்குப் புதிய தகவல்.

      நீக்கு
    3. @கௌதமன், அப்படியா?

      @ஶ்ரீராம், குஜராத்தில் இருந்தப்போக் கேள்விப் பட்ட தகவல். ஒரு சில பத்திரிகைகளிலும் செய்தியாகப் பார்த்த நினைவு.

      நீக்கு
  5. லண்டன் விமான நிலையம் இடம் பெற்றதின் காரணம் சொல்லவே இல்லை. இரவுக்கவிதைகள் என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிடுங்கள். எல்லாமும் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழங்காலத்தில் ல வி நி என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. காணாமல் போன "அன்புள்ள" நினைவுக்கு வந்திருக்கும் ஶ்ரீராமுக்கு

      நீக்கு
    3. கண்ணில் சிக்கிய படத்தை வெளியிட்டு இடத்தை ரொப்பினேன்!!!  நோ  ஸ்பெஷல் ரீசன்ஸ்.  ஆனாலும் 'அன்புள்ள'வும் நினைவுக்கு வ்ந்தார்தான்!

      என்னுடைய கவிதைகளுக்கு நான் சேமிப்பே வைத்துக் கொள்ளவில்லை.  சமீபத்தில் கீதா ரெங்கனிடமும் இது பற்றி பேசினேன்.  என்ன காரணம் என்று பொங்கல் மலர் வந்தால் தெரியும்.  இதுவரை எழுதிய கவிதைகளை எப்படிச் சேமிப்பது என்று யோசித்து வருகிறேன்!  நன்றி பாராட்டுதல்களுக்கு.

      நீக்கு
  6. ஜோசியம், கைரேகை பற்றி எழுதப் போனால் பதில் பெரிதாகப் போகும். ஆனால் இவற்றில் உண்மை உள்ளது. நன்கு விஷயம் தெரிந்தவர்களால் சொல்லப்படும் எதிர்கால பலன் பெரும்பாலும் சரியாகவே இருக்கும். எனக்குக் கைரேகை பார்த்துச் சொன்ன நண்பன் சிவாவின் எதிர்காலப் பலன், சிநேகிதி லக்ஷ்மி ஆகியோரின் கருத்து எல்லாமும் சரியாகவே இருந்து வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விஷயத்தில் கீசா மேடம் மட்டுமல்ல மத்தவங்கள்டயும் ஆதங்கம் உண்டு.

      சரி... அந்த ஜோசியர், கைரேகை நிபுணர் கான்டாக்ட் நம்பர் சொல்லுங்க என்று கேட்டுவிட்டால், நான் ஜோசியம் பார்த்தது 1989ல, அப்போவே அவருக்கு 103 வயசு இருக்கும்னு சொல்லிடுவாங்க.

      நல்ல ஜோசியர், கைரேகை நிபுணர்லாம் காண்பதற்கு அரிது போலிருக்கு, மார்கழில கோவில்ல தயிர்சாதம் பிரசாதமா கிடைப்பதுபோல

      நீக்கு
    2. எதிர்கால பலன் என்பது பொதுப்பலனாய் சொல்லப் பட்டால் சரியாய் இருக்குமோ என்னவோ...    குறிப்பாய் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

      நீக்கு
    3. // சரி... அந்த ஜோசியர், கைரேகை நிபுணர் கான்டாக்ட் நம்பர் சொல்லுங்க என்று கேட்டுவிட்டால்,... //

      ஆனால் நெல்லை, ஒருவருக்கு பொருந்துவது போல, அல்லது அடைப்பது போல எல்லோருக்கும் நடக்குமா...   தெரியவில்லை! ஏற்கெனவே ஒருமுறை சொல்லி இருக்கிறேன்.  மாம்பழம் மலையாள ஜோசியர் ஒருவர் ரொம்பப் பிரபலம்.  அவர் என் நண்பர் மகனுக்குச் நடக்கும் என்று சொன்னவை சொன்னது மாதப்படி சரியாய் அடைந்தது.

      நீக்கு
    4. *அல்லது அடைப்பது

      அல்லது நடப்பது

      நீக்கு
    5. //இந்த விஷயத்தில் கீசா மேடம் மட்டுமல்ல மத்தவங்கள்டயும் ஆதங்கம் உண்டு.//

      கொஞ்சம் இல்லை, நிறையவே அநியாயமா இல்லையோ? நல்லா யோசிச்சுப் பார்த்துட்டுக் குற்றம் சாட்டணும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    6. //மாம்பழம் மலையாள ஜோசியர் // இஃகி,இஃகி,இஃகி!

      //சரியாய் அடைந்தது.// ஹாஹாஹாஹா!

      நீக்கு
    7. //நிறையவே அநியாயமா இல்லையோ?// - பாத்தீங்களா...நீங்களே ஒத்துக்கிட்டீங்க. ஹிஹிஹி

      நீக்கு
    8. நான் நீங்க சொன்னதை "அநியாயம்" என்று சொல்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நல்லா யோசிச்சு, மண்டையைக் குடைந்து பார்த்தால் தெரியும்.

      நீக்கு
    9. என்ன செய்ய?  வேகமாய் பதில் சொல்லிட்டு வேறு கொஞ்சம் வேலை பார்த்துட்டு மறுபடி ஆபீஸ் ஓடணும்!  அதுதான்..   ஹிஹிஹி...   மாம்பலம் மலையாள ஜோசியர்...   நடந்தது!  சரியா?

      நீக்கு
    10. //மண்டையைக் குடைந்து பார்த்தால் // - இதுக்கு பதில் உங்களுக்கு வாட்சப்பில் அனுப்புகிறேன். ஹாஹா

      நீக்கு
    11. நெல்லை, ஶ்ரீராம், மெயில் அனுப்பினேன். பாருங்க!

      நீக்கு
    12. பார்த்து விட்டேன்.  நன்றி.  முயற்சி எடுத்து தேடி அனுப்பியதற்கு நன்றி.

      நீக்கு
  7. நாடி பார்ப்பது எனில் வைத்தீஸ்வரன் கோயில் போகாதீர்கள். சென்னையிலேயே தாம்பரத்தில் "முருகேசன்(?)" என்று ஒருவர் சரியாகக் கணிப்பதாகக் கேள்விப் பட்டிருக்கேன். தென்காசியில் ஒருத்தர் அகத்திய நாடி சொல்கிறார். இன்னும் சிலரும் இருக்கின்றனர். இவர்களிடம் நீங்கள் போகும் காரணம் சொல்ல வேண்டாம். அவர்களே அதையும் சொல்லிவிட்டுப் பரிகாரப் பலன்களும் சொல்வார்கள். பணமெல்லாம் அதிகம் வாங்க மாட்டார்கள். விரும்பிக் கொடுப்பது தான். பரிகாரங்களும் எளிமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடி நாளுக்குநாள் கவர்ச்சி காட்டுகிறது. ஒரு நாள் போய் நின்றுவிடவேண்டியதுதான்!

      நீக்கு
    2. அங்க நின்னு பிரயோசனமில்லை ஏகாந்தன் சார்... ஏகலைவன் மாதிரி நம்ம கட்டை விரலைக் கொடுக்க (பயப்படாதீங்க...ரேகை மட்டும்தான்) வேண்டும், அப்புறம் காத்திருக்கணும்.

      நீக்கு
    3. டிமாண்ட்டி காலனி  பார்த்திருக்கிறீர்களா நெல்லை?  சமீபத்தில் சில காட்சிகள் பார்த்தேன்.  எம் எஸ் பாஸ்கர் நாடி ஜோசியராய் வருவார். 

      நீக்கு
    4. தாம்பரத்தில் ஒரு வைத்தீஸ்வரன் கோவில்!

      நீக்கு
    5. டிமான்டி காலனி? நெடுந்தொடரா?

      நீக்கு
    6. அது ஒரு ஜினிமா கீசா மேடம். நல்லாவே இருந்தது, ஆனால் நான் பல வருடங்களுக்கு முன்பு, பாண்டிச்சேரில வாங்கின டி.வி.டில பஹ்ரைன்ல பார்த்தது.

      நீக்கு
    7. கருணாநிதியின் பேரன் நடித்தது!   அதேபோல இன்னொரு படம் மரகத நாணயம் சில காட்சிகள் பார்க்க நேர்ந்தது.  எப்போதோ பார்த்தது.  கதை நினைவில்லை.  மறுபடி பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்!

      நீக்கு
    8. மரகத நாணயம் - அட்டஹாசமான படம். நான் பல தடவை பார்த்தேன். சுனைனாவுடம் கருணாநிதியின் பேரன் நடித்த ஒரு படமும் (கஞ்சா கருப்பும் உண்டு) எனக்குப் பிடித்திருந்தது.

      நீக்கு
    9. மரகத நாணயம் - மறுபடி பார்க்க வேண்டியதுதான்.

      நீக்கு
  8. இன்னுமா யாரும் எழுந்துக்கலை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் கோவிச்சுண்டு போறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்தரை மணிக்கு வெளியான பதிவுக்கு, முதல் முக்கால் மணிநேரத்திற்குள் எழுதப்படுகின்ற கருத்துரைகளுக்கு மட்டுமே ஸ்ரீராம் பதில் அளிப்பார். பிறகு அலுவலகம் சென்றுவிடுவார். நான் காலையில் நான்கு மணிக்கு எழுந்தாலும் எல்லா காலை வேலைகள் , குளியல், பூஜை முடித்து, நடைப்பயிற்சி முடித்து கணினிக்கு வருவதற்கு ஏழு மணி ஆகிவிடும்.

      நீக்கு
    2. கேஜிஜி சொல்லி இருப்பதே...   முன்பே சொல்லி இருக்கிறேன் நானும்!

      நீக்கு
    3. வல்லி, அந்த சிவா பின்னாட்களில் வேலை தேடிக் கல்கத்தா சென்றார். நான் கல்யாணம் ஆகி வந்துட்டேன். பின்னர் தொடர்பே இல்லை. லக்ஷ்மி என்னுடன் வேலை பார்த்தார். அப்போவே சொல்லிட்டார், ஒரு வருஷத்திற்குள்ளாக நீ வேலையை விட்டு நின்னுடுவே என்று! அது போல் எனக்கு முதலில் பெண் தான் பிறக்கும் என்றும் சொன்னார்.

      நீக்கு
    4. //கேஜிஜி சொல்லி இருப்பதே... முன்பே சொல்லி இருக்கிறேன் நானும்!//ஹிஹிஹி, தனியா இருந்துண்டு எனக்கும் பொழுது எப்படிப் போகும்? அதான் கோவிச்சுண்டு போயிட்டேன். :)

      நீக்கு
    5. எனக்குதான் யாரும் பலிக்கிற மாதிரி ஜோசியமே சொல்ல மாட்டேன் என்கிறார்கள்!

      நீக்கு
    6. சொல்லுவாங்க, சொல்லுவாங்க!

      நீக்கு
    7. எப்போ சொல்லுங்கன்னு யார் கிட்ட ஜோசியம் கேட்கலாம்?!!

      நீக்கு
  9. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். எல்லோரும் நலமாக இருக்க இறைவனிடம் மீண்டும் பிரார்த்தனைகள்,

    பதிலளிநீக்கு
  10. முதலில் உங்கள் கவிதைகளைச் சொல்லிவிடுகிறேன். அனைத்து வரிகளும்
    அற்புதம். கவி மழை பெய்வதில் நல்ல
    திறன் தெரிகிறது. கொத்து கொத்தாக மலர்களைப்
    போல கண்ணுறக்கம் காண வைக்கும் கவிதைகள்.
    மிக மிக இனிமை. நன்றி ஸ்ரீராம்.
    எழுதின கவிதைகளைப் பத்திரப் படுத்துங்கள்.
    மின்னூல் படைக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...   நன்றி வல்லிம்மா.   பாஸ் நிறைய பேர்களுக்கு நான் தந்த இந்த கவிதைகளை அனுப்பினார்.  ஒருவரும் கண்டு கொள்ள்வில்லை!

      நீக்கு
    2. கவிதைகள் - பெரும்பாலும் யார் எழுதியது என்பதைப் பொருத்துதான் படிக்கப்படும். நமக்குத் தெரிந்தவர் எழுதியது என்றால், படிப்போம். forward செய்யப்படும் கவிதைகளும் அப்படியே. எழுதியவர் பெயருடன் இருந்தால் படித்து ரசிக்கப்படும். எனவே, இனிமேல் பாஸ் கிட்ட சொல்லி, கவிதைகளை, பெயருடன் சேர்த்து அனுப்ப சொல்லவும்.

      நீக்கு
    3. முயற்சித்துப் பார்த்து விட்டேன்.

      நீக்கு
  11. கைரேகை எனக்குப் பிடித்த விஷயம்.
    நாடியும் எனக்குப் பலித்திருக்கு.

    நல்ல ஜோதிடராக இருந்தால் சரியாகப் பலிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஜோதிடரை எப்படிக் கண்டு பிடிபபது என்பதுதான் கேள்வி!!!

      நீக்கு
    2. ஒரு ஜோதிடரை சாரு நிவேதிதா அவரது இடுகையில் (முருகேசன் என்று நினைவு) ஆஹா ஓஹோ என்று எழுதியிருந்தார். நானும் காண்டாக்ட் பண்ணி அந்த ஜோசியரைப் பார்த்தேன். நான் சென்றது சில பிரச்சனைகளுக்குத் தீர்வு உண்டான்னு தெரிஞ்சுக்க. ஆனால் அவர், எடுத்த உடனேயே ஏதோ கணக்குகளெல்லாம் போட்டுவிட்டு (என்னிடம் எதையும் கேட்காமல்), இந்த வருஷம் வரை உயிரோடு இருப்பீர்கள் என்றார். எங்க போய் இந்தக் கொடுமையைச் சொல்ல?

      நீக்கு
    3. நோகடிக்கிறார்கள் போல...   வாழறதுக்கு வழி சொல்லுடா என்றால்....  அதுதான் சில ஜோசியர்களுக்கு நல்லது மட்டுமே கண்ணில் படுமாம்.  சிலருக்கு இப்படி!

      நீக்கு
    4. சாருவிடம், நீ சாகமாட்டாய் என்று சொல்லியிருப்பாரோ?

      நீக்கு
    5. சாருவின் இந்த இடுகை எப்போது வந்தது!

      நீக்கு
    6. மே 2018 வாக்கில் வந்திருக்கலாம். நான் ஜூன்/ஜூலையில் சென்றேன். (மனைவியை கூட்டிச் செல்லவில்லை. அவளைக் கூட்டிச் செல்லாமல் ஒரு ஜோசியரைப் பார்க்கப்போனதும் அதுதான் முதல் முறை. அவள்தான் எனக்கு கேட்க வேண்டியதை நினைவுபடுத்துவாள், அவங்க சொல்றதை நினைவிலும் வைத்திருப்பாள்).

      நீக்கு
    7. // நல்ல ஜோதிடரை எப்படிக் கண்டு பிடிபபது என்பதுதான் கேள்வி!!!// அதையும் யாராவது ஒரு ஜோதிடரிடம் - (உங்களைத் தவிர) நல்ல ஜோதிடர் ஒருவர் யார் என்று கேட்கலாமோ?

      நீக்கு
    8. அது சரி...   கைரேகை பற்றி யாருமே பேசவில்லையே, ஏன்?

      நீக்கு
  12. நிர்மா '' பாட்டு இன்னும் காதில் ஒலிக்கிறது.

    கீதா சொன்ன விஷயம் வருத்தம் தான். பாவம்
    பெற்றோர்.
    அந்தப் பெரிய மாடல் சங்கீதா பிஜ்லானி தானே.
    அந்த மந்தோங்கர் பெண்ணும் இருக்கு.
    அழகான விளம்பரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரப்படத்தில் அந்தப் பெண் சுழன்று நின்றதும் அபப்டியே ப்ரீஸ் ஆகி கவரில் இருக்கும் விளம்பரப்படம் ஆகி விடும்!

      நீக்கு
    2. ஆமாம்.அப்போது வெகுவாக ரசிக்கப் பட்ட காட்சி.

      நீக்கு
  13. ரொம்பப் பழைய லண்டன் விமான நிலையம்.
    பின்னாடி நியூஸ் ரீலில் ஒரு குரல் ஒலிக்கிறது.

    இன்று பிரதமர் நேரு லண்டன் வந்து இறங்கினார்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா...   ஹா...   நியூஸ் ரீல் காலங்கள்!

      நீக்கு
    2. அட! அது காணொளியா! சரியாக் கவனிக்கலை. கேட்கலை நான்.

      நீக்கு
    3. ம்ஹூம், இப்போக் கூடப் படத்தை பெரிது பண்ணிப் பார்த்தால் எந்தக் குரலும் காதில் விழலை. திருப்பாவைப் பாடல்கள் தான் நம்ம ரங்க்ஸ் போட்டிருப்பது காதில் விழுந்துண்டு இருக்கு.

      நீக்கு
    4. அது காணொளி இல்லை கீதாக்கா.

      நீக்கு
  14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க என்றென்றும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...  வாங்க...  நலமே விளைக 

      நீக்கு
  15. நகைச்சுவை அனைத்தும் சிரிக்க வைத்தன.

    பனைமரம் கீழே என்ன பேசுவார்கள்?
    சித்திரங்கள் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா.... இது தென்னைமரம், நானும் உனக்காகத்தான் இளனி வெட்டினேன். நீ என்னடான்னா நான் ஏதோ கள் பதனி இறக்கப் போகிறேனோ என்று கடவுளிடம் காலங்கார்த்தால முறையிடுகிறாய்...

      என்று சொல்வானோ?

      நீக்கு
    2. "ஏம்ப்பா...   இங்க  புதரை எல்லாம் வெட்டி சீர் செய்யச் சொன்னேனே...  இன்னுமா செய்யலை?"

      :))))))))))))

      நீக்கு
    3. ஒரு படத்தைப் பார்த்து அவரவர் கருத்துக்களை தனியா வாட்சப்பில் பகிர்ந்துகொள்ளச் சொன்னால், அதை வைத்தும் அவருடைய குணாதிசியத்தை ஜோசியம் சொல்லலாம். என்ன சொல்றீங்க?

      நீக்கு
    4. முன் காலத்தில் Competition Success Review புத்தகத்தில், ஐஏஎஸ் பரீட்சைக்குத் தயார் செய்பவர்களுக்கு ஒரு படம் கொடுத்து, அதற்கேற்ப ஒரு கதை எழுதச் சொல்லும் பயிற்சிகளை பார்த்து, படித்திருக்கிறேன். எழுதுபவரின் attitude பாசிட்டிவ் ஆக உள்ளதா அல்லது நெகட்டிவ் ஆ என்று அவர்கள் எழுதும் தீம் கொண்டு மதிப்பிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    5. இப்போ என்னை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?!!!

      நீக்கு
  16. பதில்கள்
    1. "பனைமரம்...  தென்னை மரம்... வாழைமரம்...." 
       
      பி சுசீலா குரலில் பாடல் வரிகள் நினைவுக்கு வரவில்லை?

      நீக்கு
  17. கீதாக்கா சொல்வது போல -
    இவற்றைப் பற்றி பேசப் புகுந்தால் பல நூறு பதிவு போடலாம்...

    1985 ல் வைத்தீஸ்வரன் கோயிலில் நாடி பார்த்த போது சொல்லப்பட்டவை சரியாகத் தான் இருக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அங்கு சென்றதே இல்லை துரை செல்வராஜூ ஸார்...  நாடிக்காக அல்ல, கோவிலை நாடி ஒருமுறையாவது செல்லவேண்டும்.

      நீக்கு
  18. கண்டம் எல்லாம் சொல்லிப் பயமுறுத்தவர்களைக் கண்டால் எரிச்சல்
    வரும்.
    ஏகப்பட்ட கதைகள் வேற இதைப் பற்றி வந்திருக்கின்றன. பாவம் அந்த
    நபர்.
    நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்லி இருக்கக் கூடாதோ.

    பதிலளிநீக்கு
  19. சுவாரஸ்யமான வியாழன் பதிவுக்கு மனம் நிறை வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து பதிவை சுவாரஸ்யமாக்கியதற்கு நன்றி ம்மா.

      நீக்கு
  20. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. உங்கள் இரவுக் கவிதைகளைப் படித்துவிட்டு பின்னூட்டமழை பொழியும் இன்று. அதாவது கனமழை!

    பதிலளிநீக்கு
  22. எங்கள் ஆத்தா வீட்டில் மாறுபட்ட நிகழ்வு ஏதாவது நடந்தாலோ, வருவது போல யாராவது கூறினாலோ ஜோசியரிடம் கருத்து கேட்க சென்றுவிடுவார்கள். எங்களுக்கென்று கும்பகோணத்தில் குடும்ப ஜோசியர் இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பகோணம் கோவில்கள் போலவே ஜோசியத்துக்கும் புகழ் பெற்றது, இல்லை முனைவர் ஸார்?

      நீக்கு
  23. சர்ஃப், டெட் (det), வீல் என்றெல்லாம் சில மல்டிநேஷனல் கம்பெனிகள் ஓவர்-ஆட்டம்போட்ட வேளையில், எங்கிருந்தோ வந்த நிர்மா இடையில் புகுந்து டி-20 ஆடியது அப்போது! எண்பதுகளில் டிவியை, அதாவது தூர்தர்ஷனைத் திறந்தாலே ’வாஷிங் பௌடர் நிர்மா..நிர்மா..’ பாட்டுதான். பெரிசுகள் மூக்குக்கண்ணாடியைத் துடைத்து மாட்டிக்கொண்டு சீரியசாக சீரியல் பார்க்க, சில்வண்டுகள் நிர்மா பாட்டில் லயித்து சின்னச் சின்ன டிராயிங் ரூம்களில் -டெல்லியின் கவர்ன்மெண்ட் குவார்ட்டர்களில்- ஆடும்!

    விளம்பர ஆரம்பத்தில், பின் இறுதியில் கடற்கரையில், கோவிலில் வருவது அப்போதைய டாப் மாடல் சங்கீதா பிஜ்லானி. அஜருத்தீன் பிஜ்லானியிடம் போல்ட் ஆனதற்கு, கிரிக்கெட்டை சரியாகக் கவனிக்காமல் இந்தமாதிரி விளம்பரப் படங்களில் கவனத்தை ஓட்டியதுதான் காரணம்!

    அதே விளம்பரத்தில் அப்போது பாலிவுட் புகழேணியில் வேகமாக ஏறிய, அகாலமாக மறைந்த (யாரோ தள்ளிவிட்டுவிட்டார்கள்) திவ்யபாரதியும் வருகிறார் சில நொடிகளுக்காக. இன்னும் சில டிவி நட்சத்திரங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திவ்யபாரதி நடித்த ஒரு பப்படம் தமிழில் பார்த்தேன்.  ஏண்டா போனோம் என்று நினைக்க வைத்த படம்.  காதல் காவியம் என்று நினைத்து அபத்தமாய் எடுத்திருந்தார்கள்.  அவர் நடித்த தீவானா ஹிந்திப் படத்தின் பாடல்களை ரசித்திருக்கிறேன்.

      நீக்கு
  24. கவிதைகள் யாவும் அருமை. "கனவுப்படம்  துவங்கட்டும்" என்ற ஆரம்பமும் கடைசியில் "தழுவட்டுமே உறக்கம்" என்ற முடிவும் அருமையான முத்தாய்ப்பு. 
    சத்ய சாய் பாபா 85 வயசிலேயே போய் விட்டார். தற்போது சாய் பஜனைகள் குறைந்து விட்டன. அதற்கு பதில் ஷீர்டி சாய் பாபா கோயில்கள் நிறைய எழும்புகின்றன.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...  சத்யசாயியை மறந்து ஷீர்டி பக்கம் ஒதுங்கி விட்டார்கள் அனைவரும்.  கவிதைகளை ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

      நீக்கு
  25. /சுப்பு என்றொரு ஓவியர் இருந்தார் தெரியுமோ?//
    ரமணி என்று கலைமகளில் வரைந்த ஓவியர் ஒருவர் இருந்தார் தெரியுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்பு என்கிற பெயரில்தான் ஓவியம் கண்ணில் பட்டது.  இனி பார்க்கும்போது ரமணி என்று கண்ணில் பட்டால் அதையும் எடுத்துக் போடுகிறேன் ஜீவி ஸார்...   உங்கள் மீள்வரவு நல்வரவாகுக...

      நீக்கு
  26. //சத்யா சாயிபாபா //
    வேறு அர்த்தம் கொடுக்காமல் இருக்க சத்ய சாயிபாபா என்று திருத்தி விடுவது உத்தமம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜீவி அண்ணா..
      தங்களுக்கு நல்வரவு... நலம் தானே!..

      நீக்கு
    2. மாற்றிவிட்டேன் ஜீவி ஸார்...  மாற்றிவிட்டுதான் பதில் சொல்லவே ஆரம்பித்திருக்கிறேன்.  அதனுடன் கூட இன்னும் இருந்த சில எழுத்துப் பிழைகளையும் திருத்தி இருக்கிறேன் - கண்ணில் பட்ட வரை!

      நீக்கு
  27. // அய்யர் வீட்டு குருமா //

    அய்யங்கார் ஆத்து?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாட்கள் கழித்து வந்திருக்கின்றீர்கள்.. மகிழ்ச்சி...

      நீக்கு
    2. புளியோதரைதான்..... இதில் சந்தேகமா ஜீவி சார்?

      நீக்கு
    3. 'அய்யங்கார் வீட்டு அழகே' என்று திரைப்பாடல் ஒன்று உண்டோ?

      நீக்கு
    4. ஆமாம்..  அந்நியன் படப்பாடல் என்று நினைக்கிறேன்.   அய்யங்கார் வீட்டில் அக்காரவடிசிலும் நன்றாய் இருக்கும்!

      நீக்கு
    5. அய்யருக்கும் குருமாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அப்படியிருக்க..

      நீக்கு
    6. சும்மா ரைமிங்காக சொல்லப்பட்டது ஜீவி ஸார்....  அவ்வளவுதான்!  ஒரு சம்பவம் நினைவுக்குவ வருகிறது.  விகடனிலோ குமுதத்திலோ ஒரு ஜோக் வந்தது.  உங்கள் பளிச் வாஷிங் பௌடர் போட்டுத் துவைத்ததில் என் துணிகள் எல்லாம் கிழிச் ...   அடுத்த வாரம் அதற்கு கண்டனம் வந்தது.  பளிச் என்றொரு வாஷிங் பௌடர் நிஜமாகவே இருந்தது போல...

      நீக்கு
  28. நலம் தான் தம்பி. பின்னூட்டங்கள் போடுவதில்லை என்றாலும் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். தங்கள் விசாரிப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டங்கள் தானே -
      கலைக்கும் கலைஞனுக்கும் உற்சாகம் தரும் முன்னூட்டங்கள்!..

      நீக்கு
    2. தொடந்து வாசிப்பதற்கு நன்றி ஜீவி  ஸார்.  துரை செல்வராஜூ ஸார் சொல்லி இருப்பதையும் வழிமொழிகிறேன்.  

      நீக்கு
  29. ரிஷிகள் வழித் தோன்றல்கள் நாம் என்பதில் நம்பிக்கை இல்லை ஆனால் நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை எனக்குண்டு என்று எவரேனும் சொன்னால் அது முரண்பாடாக அமைந்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடி ஜோதிடம் நம்ப முடியாத விஷயம்தான் எனக்கும்!

      நீக்கு
    2. நாடி ஜோதிடத்தின் அடிப்படை அம்சங்கள் வியக்கத்தக்கது. இந்திரா செளந்தர்ராஜன் கதைகள் வாசித்ததில்லையா நீங்கள்?

      நீக்கு
    3. உண்மையைச் சொல்லவே வேண்டுமென்றால் இல்லை..   அல்லது இன்னும் இல்லை!

      நீக்கு
  30. இன்று சோசியத்தில் நம்பிக்கை விட்டுப்போய் செய்வினை செய்வது, அதற்கு பரிகாரம் செய்வது என்ற இரண்டாம் நிலைக்கு மக்கள் சென்று விட்பார்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //செய்வினை செய்வது,// - பாவத்தில் மிகப் பெரிய பாவம் இது. யாரும் பதில் செய்வினை செய்யாமலேயே இது அவர்களைத் திருப்பித் தாக்கும் வல்லமை உடையது.

      நீக்கு
    2. செய்வினை செய்வதை வைத்தும் பிழைப்பு ஒன்று அடைந்து கொண்டிருக்கிறது ஜி!

      நீக்கு
    3. //பிழைப்பு ஒன்று அடைந்து//

      * நடந்து

      நீக்கு
  31. //குறி சொல்வோர் மீது பயம் உண்டு. // - திருவிடந்தையில் ஒரு குறத்திப் பெண் (வயதானவர், குறி சொல்லுபவர்) குறி சொல்ல ஒவ்வொருவரிடமும் இறைஞ்சுவதைப் பார்த்து போனால் போகிறது என்று என் கையை நீட்டினேன்... பிறகு அவர் ரொம்ப பேராசைப் படவும், இவங்களுக்கெல்லாம் உதவி செய்தேனே என்று மனதில் தோன்றிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசை ஒரு பக்கம் நெல்லை...   நாக்கைத் துருத்தி, விழிகள் சிவக்க...  அவர்கள் காட்டும் அபிநயங்கள்.. அதற்கென்று ஒரு உடல்மொழி...  மீசை, தாடி முடி ஸ்டைல்கள்...  ஆண்கள் போதையில் வேறு இருப்பார்கள்!

      நீக்கு
    2. பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் (தங்களைக் கட்டபொம்மன் வம்சம்னு சொல்லிப்பாங்க) சொல்லும் குறி வார்த்தைக்கு வார்த்தை பலிக்கும். ஆனால் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் சொல்லிவிட மாட்டார்கள். அவங்களுக்குத் தோன்றியது எனில் நம்மைக் கூப்பிட்டு நிறுத்திச் சொல்லுவார்கள். காசு கொடுத்தால் எல்லோரும் வாங்குவதில்லை. "ஜக்கம்மா வாக்குப் பலிக்கட்டும்! வீடு தேடி வருவேன்!" என்பார்கள். அப்படிச் சிலர் வந்தும் இருக்காங்க! அதான் பிரமிப்பா இருக்கும்.

      நீக்கு
    3. நான் பார்த்ததில்லை.  ஆனால் அப்போதே எதையாவது கொடுத்தால் ஐம்பது நூறோடு போகும்!  அப்புறம் வீடு தேடி வந்தால்....?

      நீக்கு
    4. பயப்படாதீர்கள். வீட்டையே கேட்கமாட்டார்கள்! கொடுத்ததை வாங்கிக்கொள்ளும் கண்ணியம் உள்ளவர்கள் பலர்.

      நீக்கு
    5. உண்மையைச் சொல்பவர்கள் அதிகம் பணம்பிடுங்க மாட்டார்கள் ஶ்ரீராம். இது என் அனுபவம்.

      நீக்கு
    6. சரிதான்...   எனக்கு அனுபவமில்லை.

      நீக்கு
  32. //ஒரு சின்ன டபரா அளவு எலுமிச்சம் பழ சாதம் செய்து 'கோவிலில் நின்று கன்னியாப்பொண்ணுக்குக் கொடு' என்பார். // - ஆண்களுக்கே இந்த மாதிரி கொடுத்தால் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். நான் ஒரு தடவை அந்தி சாயும் நேரத்தில் திருவல்லிக்கேணி கோவிலுக்குச் சென்றிருந்தபோது பிராகாரத்தில் பிரசாதம் விநியோகம் நடந்துகொண்டிருந்தது. ஒருவர் எல்லோரையும் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். நான் இது கோவில் பிரசாதமா இல்லை யாரேனும் வேண்டிக்கொண்டு எல்லோருக்கும் பிரசாதம் தருகிறார்களா என்று விசாரித்த பிறகுதான் வாங்கிக்கொண்டேன்.

    எதையும் யாரிடமும் பெற்றுக்கொண்டால், அதனைத் திருப்பித் தராதவரை அவருக்கு நாம் கடன் பட்டவர்கள் ஆகிவிடுவோம் (சொல்லாமல் கொள்ளாமல் 50 ரூபாயை ஒரு காலத்தில் கேஜிஜி எனக்கு டாப் அப் பண்ணிவிட்டார். அதுவே இன்னும் மனசில் உறுத்திக்கொண்டே இருக்கிறது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாம் கடன் பட்டவர்கள் ஆகிவிடுவோம் //

      "கலங்கினான் இலங்கை வேந்தன்..." என்று உலக்கை நாயகன் மைமகாரா ல் ஒரு இழுப்பு இழுப்பார்.

      நான் கோவில்களில் தனியார் கொடுக்கும் பிரசாதங்களை வாங்குவதே இல்லை.  என் அனுபவம்தான் காரணம்!

      நீக்கு
  33. ஜோசியம் - பார்ப்பதே இல்லை.

    மற்ற தகவல்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோசியம் பார்பபதே இல்லை.  -  நல்ல பழக்கம்.  

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  34. கும்பகோணத்து ஜோசியர் - பொன்னியின் செல்வனில் அவரும் ஒரு கதாபாத்திரம்...

    குந்தவையும் வந்தியத்தேவனும் முதல் முறையாக சந்திப்பது நினைவுக்கு வருகிறதா!......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே?  அதை மறந்து விட்டேனே!

      நீக்கு
    2. குடந்தை ஜோதிடராக்கும் அவர்!!

      நீக்கு
    3. அன்பின் ஜுவி அண்ணா..

      சென்ற மாதம் எபியில் வெளியான எனது சிறுகதை குறிமேடையைப் படித்து விட்டு தங்களது மேலான அபிப்பிராயத்தை இங்கே கூறலாமே!!...

      நீக்கு
    4. எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் பரம்பரையாக ஜோதிடம் சொல்பவர்கள். கும்பகோணத்தை சேர்ந்தவர்கள். தாங்கள்  பொன்னியின் செல்வனில் வரும் குடந்தை ஜோதிடர் பரம்பரை   என்பார். அது கற்பனை பாத்திரம் அல்லவோ என்று நினைத்துக் கொள்வேன்.

      நீக்கு
    5. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த ஊர் பித்தலாட்டம் என்ற ஒன்று இருந்ததாம்.. அந்த வார்த்தை ஆங்கில அகராதி வரைக்கும் போய் பின்னாளில் நீக்கப் பட்டதாம்.. விவரம் தெரிந்த மூத்தவர்கள் விளக்கம் கூறவும்...

      நீக்கு
    6. ஆமாம், எனக்கும் தெரியும்! ஆனாலும் பொதுவெளியில் சொல்ல யோசனை! :(

      நீக்கு
  35. நாடி ஜோதிடம் பார்க்க ஆசைப்பட்டதுண்டு. இப்போது இல்லை. உங்களைப் போல் எனக்கும் குறி சொல்பவர்களைக் கண்டால் பயம்தான். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே தெலுங்கைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள் பார்க்கும் ஜோசியமும், தமிழில் வள்ளுவ குலத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லும் ஜோசியமும் வார்த்தைக்கு வார்த்தை பலிக்கும். நம்ம எங்கள் ப்ளாக் குழுவில் நம்ம பானுமதியே ஜோசியம், கைரேகை இரண்டிலும் விற்பன்னர். அதை எப்படி மறந்தேன்? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    2. அடடே...   சொல்லவே இல்லையே...   அடுத்த தரம் பார்க்கும்போது கையை நீட்டி விட வேண்டியதுதான்!   அட... கைரேகை பார்க்கத்தான்!  கடன் கேட்க அல்ல.

      நீக்கு
    3. ஹாஹாஹா, அவங்க அக்காவுக்கும் தெரியும்னு சொன்ன நினைவு. அண்ணாவுக்குத் தெரியும். அவரைப் பார்க்கக் கூடப் போவதாக இருந்தோம். அவர் ஏதோ வெளி ஊர் போவதாகச் சொல்லி இருந்தார். அப்புறமாத் தம்பி வரலை. நாங்களும் அம்பேரிக்கா போனோம்.கொரோனா வந்தது. மறந்தும் போயாச்சு.

      நீக்கு
  36. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்செந்தூர் கோயிலின் சுற்றுப் புரத்தில் குறி செல்பவர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள்... வெளித் தாழ்வார மண்டபம் இடிந்து விழுந்ததும் பிரச்னையாகி விட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடிந்து விழும் என்று அவர்களுக்கு குறிப்பில் தெரியாதது(ம்) ஆச்சர்யம்தான்!

      நீக்கு
    2. குல தெய்வ வழிபாட்டில் முறையாக இருப்பவர்களுக்கு வாக்கு பலிதம் உண்டு...காசி கயிலாயம் தரிசனம் செய்தவர்கள் குறி கேட்கவோ ஜோதிடம் பார்க்கவோ தேவையில்லை..

      நீக்கு
    3. எல்லாம் நம்பிக்கைகள்தான்.

      நீக்கு
    4. //காசி கயிலாயம் தரிசனம் செய்தவர்கள் குறி கேட்கவோ ஜோதிடம் பார்க்கவோ தேவையில்லை..// haahaaaahaahaa நம்மவரிடம் சொல்லணும்.

      நீக்கு
  37. அப்போதைய பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு வேண்டினால் ஸ்ரீ சடாட்சர சக்கரம் வரைந்து சண்முகார்ச்சனை செய்வது நல்லது... அதே போல் நாகாபரணப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து பட்டு அணிவித்து வழிபாடு செய்தால் வந்த கஷ்டம் பட்டெனத் தீர்ந்து விடும்...

    பிறத்தியாருக்கு சொல்ல வேண்டும் என்றால் அதற்கு எளியதொரு உபாசனை இருக்கிறது.. ஆனால் அதைப் பொது வெளியில் சொல்லலாமா.. என்று தெரிய வில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்ஸாப்பில் சொல்லுங்கள்.  பாஸிடம் சொல்கிறேன்.

      நீக்கு
  38. வணக்கம் சகோதரரே

    கதம்பம் நன்றாக உள்ளது. வாழ்வில் நடக்கப்போவதை உணர்ந்து சொல்வது சோதிடம். அதில் சிலது அப்படியே பலிக்கலாம். பலதும் நடக்காமல் போகலாம்.முன்கூட்டியே அதை தெரிந்து கொண்டு, அதை நினைத்தவாறு வாழ்வது மிகப் பெரிய கொடுமை. என்றுமே விதியின் எழுத்தை மாற்ற முடியாது. அழிக்கவும் முடியாது.

    குறி சொல்பவர்கள், கைரேகை பார்த்து சொல்பவர்களின் கண்களில் ஒரு தீர்க்கமான பார்வை இருக்கும். அதை சந்திக்கவே எனக்கு ஒரு தயக்கம் வரும். எதற்கு வம்பு என்று எண்ண வைக்கும். நல்லதை நினைப்போம். எதையுமே நடத்தி வைப்பது நம் விதியின் செயல்.

    தங்களின் இரவு கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொன்றையும் படித்து ரசித்தேன்.
    /இன்றைய ஆசைகள்
    இமைகளில் காத்திருப்பு
    திரை போட்டதும்
    கனவுப்படம் ஆரம்பம்./

    /கண்களின் கதவடைப்பில்
    காலைவரை
    கட்டாய ஓய்வு./போன்ற கவிதை வரிகளை மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

    / இணைய வெளியில் அலைந்தது போதும்
    இமைகளைத் தழுவட்டும் உறக்கம்./ இது பதிவர்களுக்கான கவிதை.:)

    சுப்பு அவர்கள் வரைந்திருக்கும் ஓவியங்கள் நன்றாக உள்ளது. கலைமகள் என்ற போது அப்போது பார்த்திருக்கலாம். நினைவில்லை. ஆனால், ஓவியங்களின் திறமை கண்களை கவர்கிறது.

    ஜோக்ஸ் இரண்டும் நன்றாக உள்ளது.மாலை ஊருக்குப் போய் விட்டால் சண்டை போட முடியாது என்பதால் மொத்தமாக காலையிலேயே அந்த கணக்கை முடித்து விடும் இல்லத்தரசியின் எண்ணம்... ஹா.ஹா. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீர்க்கமான பார்வையா?   அது நம் மனப்பிரமையோ...

      நன்றி கமலா அக்கா.

      கவிதைகளைக் குறிப்பிட்டு ரசித்ததற்கும் நன்றி.

      நீக்கு
  39. ஜோசியத்தில் அதீத நம்பிக்கை வைத்து மீள முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பார்கள் பலர்.

    குறுங்கவிதைகள் அருமை.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!