செவ்வாய், 29 டிசம்பர், 2020

சிறுகதை :  மயக்கமா? கலக்கமா? - கீதா சாம்பசிவம் 

 "இப்போக் கொடுக்கப் போறியா இல்லையா? என்ன பிடிவாதம்?" 


"கொடுக்க முடியாது! அது என்னோட நகை! என் அப்பா எனக்குப் போட்டது? நான் ஏன் கொடுக்கணும்?"

"அதுக்கு? நீயே தான் எல்லாத்தையும்  சாத்திக்கணுமா? என்ன பேராசைடி உனக்கு? இந்த மாதிரிக் குணமுள்ள உன்னைக் கல்யாணம் செய்து கொண்டு இனிமேலே நான் என்ன செய்யப் போறேனோ? தெரியலை! ஒருத்தருக்கு ஒண்ணு கொடுக்க மனசு வரலையே!"

"அவங்க எனக்கு என்ன உறவு? பக்கத்து வீடு தானே! அதுவும் போன மாசத்திலே இருந்து தான் பழக்கம். அதுக்குள்ளே நகையைக் கொடுனு கேட்டா?அதெல்லாம் என்னால் கொடுக்க முடியாது! நான் கொடுக்க மாட்டேன்." 


உமா பிடிவாதமாக மறுக்க மறுக்க அவள் கணவன் அவளைத் திட்ட, கூடவே வந்திருந்த பக்கத்து வீட்டு மாமியும், மாதவன் கூடச் சேர்ந்து கொண்டு, "ரெண்டு வைங்கோ மாமா கன்னத்திலே! இந்த மாதிரி ஜன்மங்களெல்லாம் அப்போத் தான் சொன்னதைக் கேட்கும்." என்றாள். 

உமா திகைத்துப் போய்ப் பார்க்க, அவள் கணவனுக்கு இன்னமும் ஆக்ரோஷம் அதிகம் ஆகி, பக்கத்து வீட்டு மாமி முன்னால் தன் வலிமையையும் உறுதியையும் மனைவிக்கு மயங்காத கணவன் தான் என்பதையும் நிரூபிக்க முயல்பவன் போல் சரேலென்று உமா பெட்டிச் சாவி வைத்திருக்கும் இடத்திலிருந்து சாவியை எடுத்துப் பெட்டியைத் திறந்து உள்ளே அவள் நகைப்பெட்டியில் இருந்த இரட்டை வடம் சங்கிலியையும் வளையல்களையும் கையில் எடுத்தான். 

                     

பக்கத்து வீட்டு மாமியைப் பார்த்து, "உங்களுக்கு என்ன புடைவை வேண்டுமோ அதை எடுத்துக்கோங்க!" என்றும் தாராளமாக உபசரித்தான். அதை வாங்கிக் கொண்ட வனிதா மாமி, "இப்போத் தெரிஞ்சுதா உனக்கு! இருக்கு உனக்கு இனிமேலே!" என்று உமாவைப் பார்த்துக் கைவிரலை ஆட்டிவிட்டு நகையையும் புடைவையையும் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக உமாவைத் திட்டிக் கொண்டே சென்றாள்.

விஷயம் இது தான். மாதவனுக்கும் உமாவுக்கும் திருமணம் ஆகி இரண்டே மாதங்கள். இது மூன்றாவது மாதம் ஆரம்பித்திருந்தது. அவர்கள் இருவரும் முதலில் குடித்தனம் வைத்த வீட்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை என்பதால் இந்த வீட்டுக்குப் போன மாதம் குடி வந்திருந்தார்கள்.

உமாவுக்கு அவள் வீட்டில் நிறையச் சீர் செய்திருந்தனர். புடைவைகளே ஏராளம். விதவிதமாய்ப் புடைவைகள். அவர்கள் தற்சமயம் குடி இருந்த வீடு தனித்தனிச் சின்ன வீடுகளாக இருந்தன. அதில்   பக்கத்துப் போர்ஷன் வனிதா மாமிக்குக் கல்யாணம் ஆகிப் பத்து வருஷங்கள் ஆகி இருக்கலாம். இரண்டு குழந்தைகள். அவள் கணவர் ஏதோ தொழிற்சாலையில் அம்பத்தூர்த் தொழிற்பேட்டையில் வேலை பார்க்கிறார்.  அவருக்கு மூன்று ஷிஃப்ட்கள். ஷிஃப்ட் மாறி மாறி வரும். நடுத்தரக் குடும்பம் தான். இல்லைனு சொல்ல முடியாட்டியும் உமாவைப்போல் செய்யும் பெற்றோர்களோ, அண்ணன், தம்பியரோ இல்லை. 

இங்கே வந்ததில் இருந்து வனிதா உமாவைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள். தினம் ஒரு புடைவை கட்டும் உமா மாலையானால் வேறு நல்ல புடைவை உடுத்திக் கொண்டு கணவனுடன் வெளியே செல்வதையும் கழுத்தில் உள்ள இரட்டை வடம் சங்கிலியும், கைகளில் உள்ள வளையல்களும் அவள் மனதில் பொறாமையை உண்டாக்கியது. மூன்று பெண்களைப் பெற்றிருந்த அவள் பெற்றோர் பத்துப் பவுன் நகையை அவளுக்குப் போட்டுக் கல்யாணம் பண்ணி வைத்ததே பெரிய விஷயம். கணவனோ எனில் வருஷா வருஷம் வரும் போனஸ் பணத்தில் தான் அவளுக்கு நல்ல துணியே எடுத்துத் தர முடியும். இப்படிப் பட்டவள் அருகேயே உமா வந்தது தான் அவள் செய்த அதிர்ஷ்டம் என வனிதா நினைத்துக் கொண்டாள்.

உமாவின் கணவனுக்குத் தம்பி, தங்கைகள் உண்டு. அவர்களுக்குச் செய்ய வேண்டிய பொறுப்பும் அவனுக்கு மட்டும் உண்டு. ஆகையால் அவன் தன் அம்மாவின் பேச்சை மீற மாட்டான். கல்யாணம் ஆனதுமே தன் அம்மாவுக்குச் சத்தியம் வேறே செய்து கொடுத்திருந்தான், மனைவி பேச்சை ஒரு நாளும் கேட்க மாட்டேன் என்பதாகவும்   அவளுக்கு மயங்க மாட்டேன் எனவும் அவள் பக்கம் நியாயமே இருந்தாலும் அவள் சார்பாகப் பேசுவதில்லை எனவும் உறுதி மொழி கொடுத்திருந்தான். இளம் வயது என்பதால் தான் மனைவிக்கு எளிதில் மயங்கிடுவோமோனு பயம் அவனுக்குள் எப்போதும் இருந்தது. தன் தாய்க்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நினைத்துக் கொள்வான். மனைவியைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்னும் நினைப்பு. குடும்பப் பொறுப்புத் தலைக்கு மேல் என்னும் சுமை. எல்லாம் சேர்ந்து உமாவை அவள்  என்ன சொன்னாலும், செய்தாலும் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டிருந்தான்.

அதென்னமோ உமாவுக்குப் பக்கத்து வீட்டு வனிதா மாமியைப் பிடிக்கவில்லை. அவளுக்குத் தன் மேல் பொறாமை இருப்பதையும் அவள் உள்ளுணர்வு கண்டு பிடித்துச் சொல்லி விட்டது. எப்படியோ பேச்சில் கணவன் தன்னைப் பற்றியும் தான் குடும்பத் தலைவனாக இருப்பதையும் மனைவிக்கு மயங்க மாட்டான் என்பதையும் மிகவும் பெருமையாக அந்த மாமி, மாமாவிடம் பேசிக் கொண்டிருந்ததையும் கேட்டாள். இது தப்பு என அவள் மனம் அவளை எச்சரித்தது. கணவனிடம் ஜாடையாகச் சொல்லிப் பார்த்தாள். ஆனால் அந்த மாமியின் பேச்சில் மயங்கி இருந்த அவள் கணவனோ, அவளைத் தான் கடுமையாகப் பேசினான். "நீ உன்னை விடப் பெரியவங்களை இப்படி எல்லாம் பேசக் கூடாது. இவங்களையே இப்படிச் சொன்னால் அப்புறமா நீ என் அம்மா, அப்பா மற்றவங்களை எப்படி மதிப்பே? முதலில் அந்த மாமி சமைப்பதைப் பார். சாம்பார் எப்படி வைச்சிருக்காங்கனு பார்! அது மாதிரி உனக்குத் தெரிகிறதா? அதைப் போய்த் தெரிஞ்சுண்டு வந்து அப்படிச் சமை! அப்புறமாப் பேசலாம்!" என்று கடுமையாகச் சொன்னான்.

வாயை மூடிக் கொண்ட உமா அதன் பிறகு எதுவும் பேசுவதில்லை.  அன்று மதியம் மாவு அரைக்க மிஷினுக்குப் போகும் வழியில் அவளுடன் குடியிருக்கும் பக்கத்து வீட்டு வனிதா மாமியின் நாத்தனார் வீட்டைத் தாண்டிச் சென்றாள். வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த  வனிதா மாமியின் நாத்தனார் உமாவைக் கண்டதும் அவளை அழைத்தாள். உமா முதலில் தயங்கினாள். மாவு அரைத்துக் கொண்டு உடனே வீட்டுக்குப் போகணும், அவர் வந்துடுவார் எனத் தயக்கம் அதிகமாக இருந்தது. யோசித்தவளை வனிதாவின் நாத்தனார், "உன் நன்மைக்குத் தான் கூப்பிடுகிறேன். ஒரு நிமிஷம் வந்து கேட்டுவிட்டுப் போ!" என்றாள். சரினு உமாவும் போனாள். "இதோ பார் உமா! சொல்கிறேன் என்று தப்பாய் நினைக்காதே! உன் ஆத்துக்காரர் வனிதாவிடம் ஏகமாக மயங்கி இருக்கார். அவளை ஏதோ பெரிசாக நினைத்துக் கொண்டிருக்கார். இதைத் தப்பாய் எடுத்துக்காதே! நான் தப்பாக எந்த அர்த்தத்திலும் சொல்லலை. ஆனால் உன் விருப்பத்தையும் மீறி அவளையும், உன்னையும் ஒத்துப் பார்க்கிறார் இல்லையா?அம்மாதிரி விஷயங்களில் தான் சொல்றேன். ஆனால் இப்போ அதை விடப் பெரிய விஷயம் ஒண்ணு நடக்கப் போறது. இன்னும் 2,3 நாட்களில் எங்க வீட்டில் கல்யாணம் ஒண்ணு வரது தெரியும் இல்லையா? அதுக்குப் போட்டுக்க நகை, புடைவை எல்லாம் உன்னோடதைத் தான் வனிதா வாங்கிக்கப் போறாளாம். கொடுக்காதே! நான் ஏற்கெனவே சொந்தத் தம்பியாச்சேனு பரிதாபப் பட்டு என் பிள்ளையோட சங்கிலியைக் கொடுத்தேன். திரும்பி வரவே இல்லை. உன்னோடதை அப்படி விற்கலைன்னாலும் அடகானும் வைச்சுடுவாங்க! அவங்களோட உண்மையான வரவு செலவு நிலைமை எனக்குத் தான் தெரியும். வெளியே ஆடம்பரமா இருக்கிறதை உண்மைனு நினைச்சு நீ நகையைக் கொடுத்துடாதே. புடைவையும் உன் கல்யாணப் புடைவை ! அதை நீ தான் கட்டிக்கணும். அவளுக்குக் கொடுக்காதே!" என்றார்.

உண்மையிலேயே இதை எதிர்பார்க்காத உமா திகைப்புடன் வீட்டுக்கு வந்தாள்,  மாலை அலுவலகத்திலிருந்து வந்த கணவனிடம் சமயம் பார்த்து இதைப் பகிர்ந்து கொண்டாள். கொஞ்சம் கவலையுடன் இருந்த அவளைப் பார்த்து மையமாகச் சிரித்தான் அவன். அப்போதும் அவளுக்கு ஏதும் புரியவில்லை என்பது தான் கொடுமை. சற்று நேரத்தில் வெளியே சென்று விட்டுத் திரும்பிய கணவனுடன் வனிதா மாமி வரவும் விஷயம் புரிந்தாலும் கணவனிடம் சொல்லியாச்சு இனிமேல் அவன் பார்த்துக் கொள்வான் என்று நினைத்துத் தெம்பாகவே வனிதா மாமியை எதிர்கொண்டாள். ஆனால்?

இதை நிச்சயம் அவள் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் புதுக்கல்யாணம் ஆன மனைவிக்கு அரைப் பவுனிலாவது நகை வாங்கித்தருவார்கள். அல்லது புடைவையானும் வாங்கித் தருவார்கள். இங்கே ஏதும் இல்லை என்றாலும் அவளுடையதைப் பிடுங்கி இன்னொருத்தருக்கு அதுவும் ஒரு மூன்றாவது மனுஷிக்குக் கொடுக்க அவள் கணவனுக்கு எப்படி மனம் துணிந்தது? நினைக்க நினைக்க ஆறவே இல்லை அவளுக்கு. என்ன செய்யலாம் என யோசித்தவள், பக்கத்திலேயே இருந்த மாதவனின்  அலுவலக நண்பர் வீட்டிற்குச் சென்று கதறிவிட்டாள். 

அவங்களுக்கும் இதைக் கேட்டு ஆச்சரியம், திகைப்பு! அந்தப் பெண்மணி ஏதேனும் வசியம், மருந்து மாயம் எனப்  பண்ணிட்டாளோ என்றும் பயப்பட்டனர். இதைக் கேட்ட உமாவுக்கும் உள்ளூர பயம் வந்தாலும் இனி இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் தோன்றியது. அதோடு இல்லாமல் அவள் வீட்டிலோ அல்லது உள்ளூரிலேயே இருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கோ இது தெரிந்தால் அவர்கள் அவள் கணவன் மேல் வைத்திருக்கும் மதிப்புக் குறைந்து விடும். தன் புக்ககத்து விஷயங்களை உமா யாரிடமும் பகிர்வது இல்லை என்பதால் அவங்க எல்லோருமே மாப்பிள்ளை தங்கமான மனிதர் என்றே நினைத்திருந்தார்கள்.

அன்றிரவு மாதவன் சமாதானாமாக அவளிடம் பேசி அவளைத் தொட முயன்றபோது அவள் தீர்க்கமாகவும் நிச்சயமாகவும் அவனைத் தள்ளி விட்டாள்.வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை. நகர்ந்து சென்று படுத்து விட்டாள்.  தன் பிறந்த  வீட்டில் இதைச் சொல்லவோ அல்லது இதற்காகக்கோபித்துக் கொண்டு பிறந்தகம் போவதோ அவளுக்குச் சரியாகப் படவில்லை. என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களும் ஆகிவிட்டன. பக்கத்து வீட்டு மாமி கல்யாணத்துக்குப் போய்விட்டுத் திரும்பியும் விட்டாள். ஆனால் அவள் நகையோ, புடைவையோ இன்னமும் வந்தபாடில்லை. மௌனமாகவே இருந்தாள். உமாவும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. மாதவன் மட்டும் அவளிடம் பேசும் விதமாகக் கேட்டான், நகையும் புடைவையும் வந்து விட்டதா என. 

உமா அதற்கும் பதிலே பேசவில்லை.  

அவன் அலுவலகம் கிளம்ப வேண்டித் தயாராகிச் சாப்பிட அமர்ந்தான். அப்போது வனிதா மாமி கடுகடுத்த முகத்துடன் அங்கே வந்தாள். அவள் கையில் ஒரு ரசீது! உமாவைப் பார்த்து, "இந்தா! இந்த வட்டிக்கடையில் உன் நகையை வைத்துப் பணம் வாங்கி இருக்கோம்.உனக்கு எப்போ முடியுமோ அப்போப் பணத்தைக் கொடுத்துட்டு நகையைத் திருப்பிக்கோ! எங்களால் இப்போ ஏதும் கொடுக்க முடியாது. இந்தப் பணம் கடன் அடைக்கவே சரியாயிடும். மாமாவுக்கு போனஸ் வந்தால் கொஞ்சம் கொடுப்போம். அதுக்கப்புறமா அடுத்த போனஸில் தான்! " என்று கறாராகச் சொல்லிவிட்டு அவள் புடைவையைத் தூக்கி எறிந்தாள். அங்கிருந்து விரைவாகச் சென்று விட்டாள். "மாமா! மாமா" என்று மூச்சுக்கு முந்நூறு தரம் அவள் கணவனை அழைத்துப் பேசுபவள் இப்போது திரும்பியே பார்க்கவில்லை.

மாதவன் தட்டில் சாதம் வைத்தபடியே இருந்தது. மாதவன் உண்மையிலேயே இதை நினைக்கவும் இல்லை; எதிர்பார்க்கவும் இல்லை. உமாவின் கையில் இருந்த அடகு ரசீதை வாங்கிப் பார்த்த மாதவனுக்கு மயக்கமே வந்து விட்டது! உமாவின் பெற்றோர் திடீரென வந்து விட்டால்? நகை எங்கே என்று கேட்பார்களே! அதற்குள்ளாக உமா கீழே வீசி எறியப் பட்ட புடைவையை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். ஆங்காங்கே கறை, ஒரு இடத்தில் மாட்டிக் கிழிந்திருந்தது!இனி என்ன செய்வது? புடைவையை வெயிலில் போட வெளியில் சென்றாள்.  

மாதவனோ சாப்பிடாமல் எழுந்து விட்டான். தலையில் கையை வைத்துக் கொண்டு திகைத்துப் போயிருந்த அவனுக்குத் தன்னை விடச் சின்னப் பெண், தன் மனைவி, ஏழெட்டு வயது சின்னவள் சொன்ன எச்சரிக்கையைத் தான் பொருட்படுத்தவில்லையே என்பதை எண்ண எண்ண மனம் வேதனையில் ஆழ்ந்தது. இனிமேல் அவளை எப்படி நிமிர்ந்து பார்த்துப் பேசுவது? அழுதாளே! கொடுக்க மாட்டேன்  என்றாளே! அவள் சம்மதம் இல்லாமல் வற்புறுத்தித் தூக்கிக் கொடுத்து விட்டேனே! அது நான் போட்ட நகையும் இல்லை. அவள் பிறந்தகத்துச் சீராயிற்றே. அது எத்தனை பொக்கிஷம் என்பதே எனக்கு இப்போத் தான் தெரிகிறது. இனி என்ன செய்வேன்? என்று கலங்கினான்.

வெளியே புடைவையை உலர்த்திய உமா ஒரு முடிவுக்கு வந்தாள். தன் கணவனின் அலுவலகத்தில் உள்ள சொசைட்டி மூலம் தற்சமயம் கடன் வாங்கி நகையை மீட்டு விடலாம். சம்பளத்தில் துண்டு விழும். தான் ஏதானும் வேலைக்குப் போக முயற்சிக்க வேண்டும். படித்த படிப்புக்கு வேலை கிடைக்கும். யாரானும் கேட்டால் வேலை கிடைத்தது : போகிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம். 

இந்த விஷயத்துக்காகக் கணவனைக் காட்டிக் கொடுத்துத் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ள வேண்டாம்.  இப்போது தான் வாழவே ஆரம்பித்திருக்கோம். மாதவன் நன்கு பட்டுவிட்டான். "அவர் இனித் திருந்தி விடுவார். இனித் தப்பே பண்ண மாட்டார். என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்தவள் சுமார் 3 நாட்களாகத் தொடாத கணவனைத் தொட்டு அவன் தலையைத் திருப்பித் தன் மடியில் சாய்த்துக் கொண்டாள். அவன் கைகளைத் தன் கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டாள். மாதவன் வெடித்து அழ ஆரம்பித்தான்.

159 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க கில்லர் ஜி..  படிச்சாச்சா?

      நீக்கு
    2. மனைவியை புரிந்து கொள்ள வனிதா நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டாள்.

      "அம்பத்தூர்" இடிக்கிறதே.... நிகழ்ந்த உண்மையோ ?

      நீக்கு
    3. ஹாஹா, கில்லர்ஜி. ஒரு வசதிக்காக அம்பத்தூரை எடுத்துக் கொண்டேன். புதுசாக ஒரு இடத்தைச் சொல்லுவது என்பது என்னளவில் கொஞ்சம் அசௌகரியம். அம்புடுதேன். :)))))

      நீக்கு
    4. கணவனுக்குத் தெரியாமல் பக்கத்து வீட்டு சிநேகிதிக்காக நகையை அடகு வைத்துப் பணம் வாங்கிக் கொடுத்துவிட்டுப் பின்னர் மீட்க முடியாமல் தவித்த மனைவியை எனக்குத் தெரியும் கில்லர்ஜி. இங்கே கொஞ்சம் மாற்றம். பொதுவாகப் பெண்களே ஏமாறுவதாகக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இங்கே ஓர் ஆண் ஏமாறுவதாய்க் காட்டி உள்ளேன். :)))))))

      நீக்கு
  2. மிக மிக இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் எக்காலமும் நன்றாக இருக்கவேண்டும்.

    ஆஹா கீதாமா கதை எழுதியாச்சா,. ஆனந்தம் பரமானந்தம் . இதோ
    படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  ஆம்.  கீதா அக்கா கதை எழுதி அனுப்பி விட்டார்கள்.  நல்லாயிருக்கு இல்லே?

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தடுப்பு ஊசி விரைவில் புழக்கத்துக்கு வந்து அனைவர் கவலையையும் தீர்க்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. எத்தனை யதார்த்தம். எத்தனை இனிமை. மிக அழகான கதை.
    மனம் நிறை வாழ்த்துகள் கீதாமா.

    பதிலளிநீக்கு
  5. நான் தான் போணியா? இஃகி,இஃகி,இஃகி. கதையை விடப் படங்களைச் சேர்த்திருப்பது மிகவும் மனதைக் கவர்கிறது. கௌதமன் சாருக்கு நன்றியோ நன்றி. இன்னும் யாருமே வரலையே! நெல்லை எந்தக் கோயில் கோஷ்டியில் பிரசாதம் வாங்கக் காத்திருக்காரோ?

    பதிலளிநீக்கு
  6. வாக்குவாதம் செய்யும் மனைவி கணவன் படம் தத்ரூபம்.
    புடவை ,நகையைப் பார்த்தால் ஆசையாகத்தான் இருக்கிறது:)

    பதிலளிநீக்கு
  7. அட? கில்லர்ஜி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இந்த ப்ளாகர் என்னை ஏமாத்தி விட்டதே! நான் தான் முதல்னு நினைச்சுட்டு இருந்தால் கில்லர்ஜி 5 நிமிடங்கள் முன்னாடியே வந்துட்டதாச் சொல்லுது! :P :P :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதாசிரியர் எதற்கு முதலில் வரணும் ? வாசகர்தான் வரணும்.

      நீக்கு
    2. கில்லர்ஜி... இது என்ன லாஜிக்? ஹோட்டல்ல உணவு தயார் செய்து வைத்துவிட்டு கஸ்டமர்கள் வருகிறார்களா என்று பார்ப்பதில்லையா?

      நீக்கு
  8. வனிதா மாதிரி பெண்களைப் பார்த்திருக்கிறேன்.
    இந்த மாதிரிப் பெண்கள் அருகில் வாழ்ந்தால் எந்த தாம்பத்தியமும் ஆடித்தான் போகும்.

    வயது ஆனாலும் முதிர்ச்சி இல்லாத வனிதாக்களும்,
    மிக முதிர்ச்சியோடு செயல் பட்ட புது மனைவிகளும் இன்னும்
    இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது!!!!!

    திருமணமான புதிதில் மற்றவர் யாருமே கண்ணில் பட மாட்டார்களே.
    இந்த மாதவனுக்கு என்ன வந்தது. கொடுமைடா சாமி.!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான காட்சி விவரிப்புகள். புது மனைவியின் தயக்கம் நன்றாகப்
      பதிவாகி இருக்கிறது.
      இப்படி ஒரு கடுமையான கணவனும் இருப்பானா.

      கடவுளே இளம் பெண்களைக் காப்பாற்று.
      அம்மா அப்பா போதனை செய்தால் இது போல
      extreme level caution எடுத்துக் கொள்வார்களோ!!!!!

      நீக்கு
    2. சில கணவன்மார் மனைவிக்குப் பரிந்து பேசக் கூடத் தயங்குவார்கள் வல்லி. ஆகவே இப்படியும் ஓர் கணவன் இருப்பதோ/இருந்ததோ ஆச்சரியமெல்லாம் இல்லை.

      நீக்கு
  9. "உமா மாஉ அரைக்கப் போனாள்"
    ஹி.. ஹி.. ஹி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போவும் இங்கே மிஷினில் மாவு அரைக்கப் போகும் பெண்கள் உண்டு கில்லர்ஜி! எல்லோருமே திடீர்த் தயாரிப்பு மாவுகளை வாங்குவதில்லை. இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      சகோதரர் கில்லர்ஜி அவர்கள் கதை நாயகி மாவு அரைக்கப் போவதை பற்றி சொல்லவில்லை. உமா என்ற பெயரை எழுத்து மாற்றி நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ஹா.. ஹா.. சரியான க(வ)ணிப்பு நன்றி சகோ.

      நீக்கு
    4. நன்றி கமலா, கில்லர்ஜி! காலையில் கணினியை மூடும் அவசரத்தில் சரியாய்ப் புரியவே இல்லை. :)

      நீக்கு
  10. அவங்களுக்கும் இதைக் கேட்டு ஆச்சரியம், திகைப்பு! அந்தப் பெண்மணி ஏதேனும் வசியம், மருந்து மாயம் எனப் பண்ணிட்டாளோ என்றும் பயப்பட்டனர்./////////உண்மையில் இது ஒரு அதிசயம் தான்.
    பெண்கள் இப்படி இருக்கிறார்களே என்ற ஆதங்கம் வருகிறது.🙄😶😶😶😶😶😶

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிப் பெண்கள் உண்டு வல்லி. அடுத்தவர் வாழ்க்கையில் நுழைந்து மௌனமாகவே தம்பதிகளுக்குள் சண்டையை உண்டாக்குவார்கள்.

      நீக்கு
  11. வனிதா மாமியின் நாத்தனார் உமாவைக் கண்டதும் அவளை அழைத்தாள். உமா முதலில் தயங்கினாள். மாவு அரைத்துக் கொண்டு உடனே வீட்டுக்குப் போகணும், அவர் வந்துடுவார் எனத் தயக்கம் அதிகமாக////////அச்சோ பாவம் இந்தப் பெண் உமா. கீதா!!! மிக மிக அருமையாக விவரித்திருக்கிறீர்கள். இனிமேல் நிறைய கதைகள் நீங்கே எழுத வேண்டும்.

    சிறப்பாக அமைந்திருக்கிறது கதைக் களனும் போக்கும்.

    பதிலளிநீக்கு
  12. இவ்வளவு பெரிய அதிர்ச்சியிலிருந்து எப்படி இத்தனை சாமர்த்தியமாக வெளியே வந்துவிட்டாள்
    உமா.!!!
    பொறுமை என்னும் நகை அணிந்து
    கணவனை மீட்டு விட்டாள்.
    மாதவனும் இயல்பில் நல்ல மனிதனாக இருந்ததால்.
    அவனும் திருந்தினான்.
    ஒரே அடியாக பக்கத்துவீட்டு வலையில் விழாமல் இருந்தானே.
    அற்புதமான கதை அமைப்பு கீதாமா.
    மனம் நிறைவாக இருக்கிறது.
    ஏதோ பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது.

    தி.ஜானகிராமன் கடையில் சில பெண்கள்
    வருவார்கள். அவர்களைப் போலவே ஒரு நிகழ்வை
    நான் மதுரையில் கேட்டிருக்கிறேன்.
    அந்தப் பையன் நல்ல வேளை வேறு ஊருக்கு மாற்றிப்
    போனானோ அந்தக் குடும்பம் பிழைத்ததோ !!!!

    இந்தக் கதையில் மாதவனை நினைத்தால்
    பாவமாக இருக்கிறது. இது நீடித்திருந்தால்
    திருமண வாழ்வே கெட்டிருக்கும்.
    உமா சமயோசிதமாக நடந்து கணவனையும் வாழ்வையும் காப்பாற்றிவிட்டாள்.
    மீண்டும் மீண்டும் வாழ்த்துகள் ...
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் பாடல்தான் நினைவுக்கு
    வருகிறது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் வல்லி. திருமண வாழ்வே கெட்டிருக்கும் தான். நல்லவேளையாக இருவரும் சுதாரித்துக் கொண்டனர்.

      நீக்கு
  13. மிக அதிசயமாக கீதா சாம்பசிவம் அவர்களின் கதை. இவங்க கதைனா குடும்பப் பிரச்சனைகளைத்தான் கருவா எடுத்திருப்பாங்க என்று எண்ணிக்கொண்டே படித்தேன்.

    கதை நல்லா இருந்தது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லையாரே, பின்னே என்ன அரசியல் கதையா எழுதறது? இதுவே ஏதோ கொஞ்சம் சுமாரா இருக்காப்போல் எனக்கே தோன்றியதால் அனுப்பினேன். அரசியல் கதை எல்லாம் எழுதிட்டு யார் படிப்பாங்க? :)))))

      நீக்கு
  14. அதென்னமோ உமாவுக்குப் பக்கத்து வீட்டு வனிதா மாமியைப் பிடிக்கவில்லை. அவளுக்குத் தன் மேல் பொறாமை இருப்பதையும் அவள் உள்ளுணர்வு கண்டு பிடித்துச் சொல்லி விட்டது////////// இது தான் நிஜம். பெண்களுக்கான உள்ளுணர்வு.
    அழகாகச் சொல்லிவிட்டீர்கள் கீதா.

    பதிலளிநீக்கு
  15. மனைவியின் நகையை அவன்தான் கழுத்தில் போட்டுக்கப் போறானோ என்று நினைத்தேன் (அதுவே கொஞ்சம் வித்தியாசமாத் தோணித்து). அடுத்த வீட்டுப் பெண்ணுக்கு கடனாகவா? அதிசயம்தான்.

    இந்த மாதிரி டகால்டி பெண்கள், முதலில் சிறியதாக ஏதேனும் இரவல் வாங்கி உடனே அதனைத் திருப்பிக் கொடுத்து, நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டு பிறகு பெரிதாக கடன் வாங்கி காணாமல் போவாங்க.

    முதல் தடவை வாங்கியதையே அடகு வைத்தாளாமா? கணவனும் உடனே நகையை கொடுத்துட்டானாமா? கொஞ்சம் நம்பும்படியான கதைக் கரு எடுத்திருக்கலாமோ?

    படங்கள் கவர்ந்தன. சுலபமா அறைய வலது கை இருக்கும்போது கஷ்டப்பட்டு இடது கையைத் தூக்குகிறான். லெஃப்டியா இருப்பான் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ' மாதவன் மட்டும் அவளிடம் பேசும் விதமாகக் கேட்டான், நகையும் புடைவையும் வந்து விட்டதா என' இந்த இடத்திற்கான படம் அது. 'இடது பக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து வாங்கிச் சென்ற நகையும் புடவையும் வந்துவிட்டதா ?' என கேட்கிறான் மாதவன். உமா மௌனம். பிறகு காலை உணவு சாப்பிட அமர்கிறான்.

      நீக்கு
    2. வாங்க நெல்லை. நம்பும்படியா இருக்காது தான். ஏனெனில் உண்மை அல்லவா! ஆனால் நான் இந்தக் கதையை எழுதியது "ராமனை சீதை மன்னித்த கதை"க்காக. அப்போது எழுதிட்டு அனுப்பவே இல்லை. ஒரு நாள் பழைய மடல்களை உள் பெட்டியிலிருந்து பார்த்து வேண்டாதனவற்றை நீக்கியப்போ கண்களில் படவே அப்படியே காப்பி, பேஸ்ட் செய்து அனுப்பிட்டேன். திரும்பப் படிச்சுப் பார்க்கவோ, திருத்தவோ தோணலை! ( பள்ளி நாட்களிலேயே அதான் வழக்கம்.) பார்த்திருந்தால் ஒரு வேளை கதையையே மாத்தி இருப்பேன். உமாவின் அப்பா வரை விஷயம் போய் அவர் வந்து நகையைத் திருப்புவதாக எழுதி இருப்பேனோ என்னமோ! சில உண்மைகளை வெளியே சொல்லும்போது நம்பும்படியாய்த் தான் இருக்கிறதில்லை.

      நீக்கு
    3. ஒரு சின்னஞ்சிறு பெண் நன்றாகவும் படித்துக் கொண்டு வீட்டு வேலைகளிலும் உதவிக் கொண்டு பார்க்கவும் நன்றாக இருந்துவிட்டால் அந்தப் பெண்ணுக்கு உறவினர்களே எதிரிகள் ஆகிவிடுவார்கள். நீங்க ஒருவேளை இதை எல்லாம் பார்க்கவோ, கேட்கவோ, அனுபவிக்கவோ சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. அதுவும் நன்மைக்கே! எனக்குத் தெரிந்து ஒரு பெண்ணின் திருமணத்தின் போது முதல் நாள் நிச்சயதார்த்தம் அன்று அந்தப் பெண்ணின் பெரியம்மா(அம்மாவின் அக்கா) இந்தக் கல்யாணம் நிலைக்காது. ஆறு மாசத்துக்கெல்லாம் இவள் எவனோடாவது ஓடிப் போயிடுவாள்!" என்று ஆசீர்வாதம் செய்தார். இதனால் பெரிய சச்சரவே ஏற்பட்டது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் நெல்லை. நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு! நாம் தான் பிரித்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்துப் பழக வேண்டி இருக்கு!

      நீக்கு
  16. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    என்றென்றும் நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  17. இன்றைய கதை சிறப்பு...
    கதைக்கு மெருகு சேர்த்திருக்கும் சித்திரங்களும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  18. இரவல் நகை வாங்கி அதை உடனே அடகு வைத்த விதம் சற்றே நெருடினாலும்..

    இந்த மாதிரி ஜில்பான்ஸுகள் தான் அங்குமிங்குமாக இருக்கின்றார்களே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படித் தோன்றியது. ஆனால் - சிறுகதைக்குள் சொல்லவேண்டும் என்பதால் அப்படி அமைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. வாங்க துரை, அந்த நெருடலை நீங்க/நெல்லை/இப்போ கௌதமன் ஆகியோர் சுட்டிக் காட்டின பின்னர் எனக்கும் தெரிகிறது. திருத்தி அனுப்பி இருக்கலாம் என்றும் நினைக்கிறேன். ஆனால் எழுதும்போது அப்படியே எழுதிட்டேன். தவறோனு இப்போத் தோன்றுகிறது. அவங்க நோக்கமே நகையை வாங்கி அடகு வைத்துப் பணம் பெறுவது தான்! அதற்கு சாமர்த்தியமாக உள்ளடி வேலைகள் எல்லாம் செய்தார்கள். விவரித்தால் பெரிசாக ஆகி இருக்குமோ?

      நீக்கு
  19. பெண்களுக்கான உள்ளுணர்வை உமாவின் மூலமாக வெளிப்படுத்தியுள்ள விதம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை. இன்னமும் மெருகேற்றி இருக்கலாம். தோன்றவில்லை. சுருக்கமாய்ச் சொல்ல நினைச்சேன்.:))))

      நீக்கு
  20. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரி

    தாங்கள் எழுதிய கதை நன்றாக உள்ளது. இந்த மாதிரி அடாவடி பெண்களும் இந்த உலகத்தில் இப்போதும் ஆங்காங்கே இருக்கின்றனர். இப்போதுள்ள பெண்கள் சற்று சுதாரிப்புடன் இவர்களைப் போன்ற பெண்களிடம் ஏமாறாமல் இருக்கிறார்கள். ஆனால், அந்த காலத்தில் இந்த ஏமாற்று வேலைகள் நிறைய இருந்திருக்கிறது என்பதை நானும் அறிவேன்.

    புதிதாக வந்த தன் மனைவியின் மேல் நம்பிக்கை கொள்ளாமல் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்ணை சிலாகித்து, "உனக்கு ஒன்றும் தெரியவில்லை. சமைக்கத் தெரியவில்லை அவர்களிடம் நீ அதை கற்றுக் கொள் இதை கற்று கொள் " என்று மனைவியை அவர்கள் எதிரிலேயே அவமானப்படுத்தும் ஆண்களையும் நான் பார்த்துள்ளேன்.

    உங்கள் கதையை படித்தவுடன் சில நிகழ்வுகள் உண்மை சம்பவமாகவே இருக்கிறது. "நல்லவேளை இன்னமும் அந்த வனிதாவிடம் ஏமாறாமல் திருந்தினானே" என்ற மகிழ்ச்சி நமக்கு தெரிந்த குடும்பத்தில் நடக்கும் ஒரு நிகழ்வாகவே நினைத்து படித்ததினால் உண்டானது. நீங்களும் கடைசியில் அந்த கணவன் உணர்ந்து திருந்துவதாக காட்டியிருப்பது சந்தோஷமாக உள்ளது. தன் அம்மா, தங்கை, தம்பி என கூட்டு குடும்பத்தில் உள்ளவன், அதிலும் அவர்கள்மீது பாசம் வைத்திருப்பவன் அவர்களையும், தன்னுடனே வைத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது எனவும் தோன்றியது. கதையை நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா, கிட்டத்தட்ட உங்களுக்கும் என் அனுபவங்கள் போல் ஏற்பட்டிருப்பதால் உங்களால் அந்தக் கணவனைப் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையில் சில கணவன்மார் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். தன் மனைவிக்கு ஒன்றும் தெரியாது, அசடு என்னும் எண்ணம் வேறே நிறைய இருக்கும். மனைவி கொடுக்கும்/சொல்லும் ஆலோசனைகளை ஏற்க மாட்டார்கள். அலட்சியமாக நடந்து கொள்வார்கள். அதிலும் இந்தக் கதாநாயகன் பொறுப்பு நிறைய உள்ளவன். ஆகவே இன்னும் கவனமாக இருந்திருக்கணும். மனைவி சொல்வதைக் கேட்கக் கூடாது என்றும் அவள் நகை மேல் ஆசை கொண்டு மறுக்கிறாள் என்றும் நினைத்துக் கொண்டு எடுத்துக் கொடுத்துவிட்டான். அதுவே அவன் அம்மா நகையோ, அக்கா, தங்கைகள் நகையாகவோ இருந்திருந்தால் கொடுத்திருப்பானா? மாட்டான் அல்லவா? மனைவி என்றால் உரிமை இருக்கிறது/என்ன வேண்டுமானாலும் செய்யலாம்/சொல்லலாம் என்னும் எண்ணம். தவறு புரிந்த பின்னராவது திருந்தினானே என எடுத்துக்கொள்ளவேண்டும். தன் பெற்றோர், உடன் பிறந்தவர்களைக் கூடவே வைத்துக் கொண்டிருந்தால் வேறே மாதிரிப் போயிருக்குமோ? இன்னொரு கதைக்கான கருவைக் கொடுத்திருக்கீங்க. பார்க்கலாம்.

      நீக்கு
  22. ஏதோ ஒரு நம்பிக்கை வரும்படி அந்த பெண் நடந்து கொண்டிருப்பாள் இல்லாவிட்டால் அப்படி ஒரு மாதத்தில் அவள் புகழ் பாட மாட்டான் இருந்தாலும் சில சமயம் ஆண்கள் இப்படி பிறர் விட்டு பெண்களே நம்பி விடுவது உண்டு சரியான சம்மட்டி அடியாக இல்லாமல் விட்டுக்கொடுத்து பிறகு கட்டம் வந்தாலும் சமாளித்த உமா ஒரு நல்ல கெட்டிக்காரி ஆன பெண்ணாக சித்தரித்து இருக்கிறீர்கள் உங்கள் முதல் கதையானாலும் பெண்களின் குண விசேஷத்தை நன்றாக தெரியப்படுத்தி இருக்கிறீர்கள் 2 பெண்களின் குணாதிசய விசேஷங்கள் அருமை நல்ல கதை அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. அவளும் மாதவன் புகழைப்பாடிக் கொஞ்சம் அவன் மனைவியை மட்டம் தட்டும்படியே நடந்து கொள்வாள் என்று கேள்வி. ஆகவே மாதவனுக்குத் தன் சாமர்த்தியம், திறமை மேல் அபார நம்பிக்கை. மனைவியை அலட்சியம் செய்துவிட்டான். முன்னரும் சில கதைகள்/தொடர்கள் எழுதி இருக்கேன். ஹிஹிஹி, எ.பி.யில் ஒன்றிரண்டு தான் வந்திருக்கு. ஆனால் என்னோட வலைப்பக்கம் தொடர்கள் 2 உண்டு. உங்களுக்குத் தான் அங்கே கருத்துச் சொன்னால் போவதில்லை என்றீர்கள். என்னனு புரியலை.

      நீக்கு
    2. நான் படித்த உங்களையும் முதல் கதை நினைத்துவிட்டேன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அன்புடன்

      நீக்கு
    3. அதனால் என்ன அம்மா? நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை. பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  23. கீதாம்மா , கதை அருமை ! பெண்களுக்கு உள்ளுணர்வு சொல்வது எப்பொழுதும் சரியாகவே இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வானம்பாடி. எனக்கு உங்க பெயர் "வானம்பாடி கானம் கேட்டு வசந்த காலத் தென்றல் காற்றில் தேன் மலர்கள் சிரிக்கும் காட்சி" பாடல் தான் நினைவில் வருது. எனக்குப் பிடித்த பாடலும் கூட. பழைய படம்னு நினைக்கிறேன். ஆனால் பாடல் மனதிலே தங்கி உள்ளது.

      நீக்கு
    2. மங்கையர் திலகம்-1955 - பாடல் அ மருதகாசி. ஆரம்பம் : " நீலவண்ணக் கண்ணா வாடா "

      நீக்கு
    3. ஓ, அப்படியா? நன்றி கௌதமன் சார்.

      நீக்கு
  24. @ நெல்லைத்தமிழன்.... கதையில் அம்பத்தூர் :))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, எனக்குச் சென்னையில் அதிகம் தெரிந்த இடங்கள் தி.நகர், ஆழ்வார்ப்பேட்டை, அம்பத்தூர் தான்.அம்பத்தூரை விட்டுட்டு மற்றதில் எதையானும் சொல்லி இருக்கலாமோ? :))))))

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நோஓஓஓஓஓஓஓஓஒ மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊ அஞ்சுவை வேர்க்குக்குப் போகச் சொல்லுங்கோ கீசாக்கா.. மீ தான் ஹொலிடேயில நிற்கிறேனாக்கும்.. ஹொலிடேயை என்சோய் பண்ணிக்கொண்டு..:))

      நீக்கு
    3. வாங்க மோதி அங்கிள் செக்! சம்பளமில்லாமல் வேலையா! ஜமாய்!

      நீக்கு
  25. //கொஞ்சம் கவலையுடன் இருந்த அவளைப் பார்த்து மையமாகச் சிரித்தான் அவன்//
    இந்த வரியில் உலகநாயகரும் என்ட்ரி குடுத்திட்டாரா :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, ஏஞ்சல், இந்த மையம் அந்த "மய்யத்துக்கு"ப் பல/சில ஆண்டுகள் முன்னாடியே வந்துடுத்து. சீதை ராமனை மன்னித்ததுக்கு எழுதினது. 3 ஆண்டுகளாவது இருக்குமோ?

      நீக்கு
    2. அதாரது கமல் அங்கிளைப்பற்றிப் பேசுவது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    3. உல(க்)கை நாயகன் பத்திப் பேசுறது தப்போ? அதாவது டப்போ?

      நீக்கு
    4. இருங்க  கீதாக்கா இப்போ பூனையை வம்பில் கோர்த்து   விடறேன் :)
      ஹலோ modi அங்கிள் செக் உங்களுக்கு உண்மையிலேயே பூனை மீசையிருந்தா புஸுஸு வால் இருந்தா கழுத்தில் மணி கட்டாத பூனைன்னா ரஜினி அங்கிள் பத்தி பேசுங்க பார்க்கலாம் :))))))))))))))))))))

      நீக்கு
  26. பட்டுபுடவைல்லாம் jagajagannu ஜொலிக்குது வண்ணமயமா :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இல்ல? இன்னிக்கு எனக்குப் புடைவை வந்திருக்கு! பரிசாக! பதிவும் போட்டாச்சு! :)))))

      நீக்கு
  27. இப்படியெல்லாம் அண்டை அயலார் பேச்சு கேட்டு ஒரு  ஆண் நடக்ககூடுமான்னு சிலர் யோசிக்கலாம் .ஆனால் உண்மை இதுதான்.பல குடும்பங்கள் பிரிய கலைய வனிதா மாமி போன்றோர் மூன்றாமவர்தான்  தான் காரணம்  பல ஆண்கள் மனம் தடுமாற காரணம் அவங்க வீட்டு பெண்களே ..மனைவி பேச்சை கேட்க மாட்டேன்னு அம்மாக்கு சத்தியம் செய்து கொடுத்தபோதே விளங்கியது .ஆனால் இப்படிப்பட்ட chavunist  கதையின் நாயகன் திருந்த சில பல செலவுகள் அவசியம்தான் .இங்கே புடவை நகைகள் விரயம் .ஆனாலும் திருமண புடவை இன்னொருவருக்கு கொடுக்கும் அளவுக்கு இவ்ளோ மயக்கமா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிதலுக்கு நன்றி ஏஞ்சல். இளவயது. மனைவியோ கணவனை விட மிகச் சின்னவள். வீட்டுக்கு ஒரே பெண். ஆகையால் அவளுக்குப் பழக்க,வழக்கம் போதாது, ஆசைகள் அதிகம் என நினைக்கும் கணவன். எளிதில் பக்கத்து வீட்டு மனிதர்கள் ஈர்த்துவிட்டார்கள். சமமாகப் பேசவும் ஒரு வாய்ப்பு என்னும் எண்ணம் இருக்கலாம். அம்மா வேறே சத்தியம் வாங்கிக் கொண்டு விட்டாள். மனைவியுடன் ஒரு இடைவெளி விட்டே பழகினான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாறி இருப்பான்.

      நீக்கு
  28. இங்கே இன்றைக்கு வந்துள்ள கருத்துகளைப் படித்து விட்டு இன்னும் பத்து கதைகள் எழுதலாம் போல் இருக்கிறது...

    இதுபோல் இன்னும் பல கதைகளை அக்கா அவர்களின் வக்ஷ்ச்ங்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அக்கா அவர்கள் வழங்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்..//

      நீக்கு
    2. ஹாஹா, துரை, ஆமாம், கமலாவின் கருத்து, ஏஞ்சலின் கருத்து ஆகியவற்றிலிருந்து சில கதைக்கரு கிடைத்திருப்பது உண்மைதான்.

      தி/கீதா இருந்திருந்தால் அவங்க பங்குக்கு ஒரு கதைக்கரு கொடுத்திருப்பாங்க. பானுமதி இன்னிக்கு ஏனோ இன்னும் வரலை. படிச்சுட்டுப் பேசாமல் இருக்காங்களோ என்னமோ! தி/கீதா வாட்சப்பில் கருத்துச் சொல்லிப் பாராட்டி இருந்தாங்க.

      நீக்கு
    3. கோமதி படித்திருந்தாலும் புரிந்து கொள்வார்கள். அவங்களுக்கும் இம்மாதிரி எல்லாம் கணவன்மார் உண்டு என்பது தெரிந்திருக்கும். அவங்க பதிவுகள் இல்லாதது மனதில் வேதனையாவும் இருக்கு! அவங்களிடம் பேசவும் மனசில் தைரியம் இல்லை. :( நினைத்து நினைத்துப் பார்ப்பதோடு சரி! :((((((

      நீக்கு
  29. //"அவங்க எனக்கு என்ன உறவு? பக்கத்து வீடு தானே! அதுவும் போன மாசத்திலே இருந்து தான் பழக்கம். அதுக்குள்ளே நகையைக் கொடுனு கேட்டா?அதெல்லாம் என்னால் கொடுக்க முடியாது! நான் கொடுக்க மாட்டேன்." //

    அதானே.. ஒருமாதப் பழக்கத்திலேயே நகையைக் கொடு என்கிறார் எனில்.. இவருக்கு ஏதும் ரகசியக் கனெக்‌ஷன் இருக்குமோ முன்பே:)) ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்.. மீ தொடர்ந்து படிக்கிறேன்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மாதம் என்றாலும் சிலர் ரொம்பவே நெருங்கிக் கொண்டு ஈஷிக்கொண்டு பழகுவார்கள் அதிரடி! உரிமையாய் உள்ளே வந்து காயோ, பழமோ, பருப்போ எடுத்துச் செல்லுவதும் உண்டு. இதெல்லாம் அந்தக் கால கட்டத்தில் நடந்தவை/ இப்போல்லாம் தெரியலை. ஒவ்வொருவரும் தனித்தனித் தீவாய் இருக்கோமே!

      நீக்கு
    2. அதில் தபில்லை கீசாக்கா, ஆனா இப்போ வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மனைவியைத் தாழ்வாகப் பார்ப்பதுதான் தப்பு அண்ட் மடைத்தனமான செயல்..

      நீக்கு
  30. //இளம் வயது என்பதால் தான் மனைவிக்கு எளிதில் மயங்கிடுவோமோனு பயம் அவனுக்குள் எப்போதும் இருந்தது.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மனைவியிடம் மயங்குவதில் என்ன தப்பாம்ம்ம்?:).. அடுத்தவர்களிடம் மயங்கினால்தான் டப்பூஊஊஉ.. எந்தக் காலத்தில இருக்கிறார் இந்த மிஸ்டர் வில்லன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "மனைவி சொல்லே மந்திரம்"னு ஆயிடுமோனு பயம் தான்!

      நீக்கு
    2. மனைவி சொல்லே மந்திரமென ஆனால்தான் குடும்பம் நன்றாக ஹப்பியாக இருக்கும் என இப்புது மாப்பிள்ளைக்குத் தெரியேல்லைப்போலும்:)).. மனைவி ஒரு மந்திரியாக இருக்கும் குடும்பங்கள்தானே நன்றாக இருக்கின்றன என சரித்திரம் ஜொள்ளுது:)).. அது எந்தச் சரித்திரம் எனக் கேய்க்கப்பிடாது:))..

      நீக்கு
  31. //தன் தாய்க்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நினைத்துக் கொள்வான். மனைவியைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்னும் நினைப்பு. //

    ஆவ்வ்வ்வ்வ் அதானே பார்த்தேன், மாமியார் வில்லியை இன்னும் காணல்லியே என.. முளைக்க முன்பே விசத்தைத்தடவி அனுப்பிட்டா மகனை ஹையோ ஹையோ:)) மீ பொயிங்கஆத் தொடங்கிட்டேனாக்கும்... எங்கே என் செக்க்க் நேக்கு சூடா ஒரு மோர் பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. குளிர் ஆகாது இங்கு ஃபிறீசிங்காக இருக்குது வெளியே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமியார்களுக்கே முதல் மகன் திருமணம் செய்து கொள்வது அவ்வளவாய்ப் பிடிப்பதில்லை. அடுத்தடுத்த மகன்கள் பற்றி அலட்டிக்க மாட்டாங்க. முதல் மகன் எப்போதும் அவங்க முந்தானையிலேயே இருக்கணும்.

      நீக்கு
    2. நிறையப் படங்களில் பார்த்திருக்கிறோம் தான்... ஏன் இப்படியோ தெரியாது, ஆனால் இப்படியான முன்னோடிகளைப் பார்த்துத்தான் நான் நிறைய விசயங்களில் என்னைத் திருத்திக் கொள்வதுண்டு.. நான் இப்படி இருந்திடக்கூடாது என நினைப்பேன்... அதுபோல நான் வளரும் காலத்தில் எனக்கு அப்பா அம்மா வின் செயலோ இல்லை அயலவர்களின் செயலோ எது பிடிக்காமல் இருந்ததோ.. அதை எல்லாம் நான் செய்திடக்கூடாது என் பிள்ளைகளுக்கு.. கணவருக்கு என நினைப்பேன்..

      நீக்கு
    3. // அதுபோல நான் வளரும் காலத்தில் எனக்கு அப்பா அம்மா வின் செயலோ இல்லை அயலவர்களின் செயலோ எது பிடிக்காமல் இருந்ததோ.. அதை எல்லாம் நான் செய்திடக்கூடாது என் பிள்ளைகளுக்கு.. கணவருக்கு என நினைப்பேன்..// very good attitude.

      நீக்கு
  32. //அவளுக்குத் தன் மேல் பொறாமை இருப்பதையும் அவள் உள்ளுணர்வு கண்டு பிடித்துச் சொல்லி விட்டது.//

    ஹா ஹா ஹா பெண்களுக்குப் பொதுவா உள்ளுணர்வு அதிகம்:))).. எனக்கு கொஞ்சம் இன்னும் அதிகம்:)) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளுணர்வு தப்பாய்ச் சொல்லவே சொல்லாது.

      நீக்கு
    2. ///உள்ளுணர்வு தப்பாய்ச் சொல்லவே சொல்லாது.//

      ஆஆஆஆஆஆஆஅ அப்பூடியோ கீசாக்கா... இப்போ கொஞ்ச நாளாகவே என் உள்ளுணர்வு ஜொள்ளுது .., அஞ்சு தன் பாங் எக்கவுண்டை அதிரா பெயருக்கு மாத்திவிடப்போறா என:)).. அதே நேரம் என் சாத்திரப்பலன் சொல்லுது.. ஓவர் நைட்டிலேயே மில்லியனெயாராகும் பலனாம் என.. அப்போ அது நடக்கத்தான் போகுதூஊஊஊஊஊஉ:))

      நீக்கு
    3. ஆமா ஆமா .ஒரு புது பாங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணி அதில் ஒரே ஒரு பவுண்ட் போட்டு உங்க பேருக்கு மாத்தி விடறேன் நீங்க அதில் வார வாரம் 1000 பவுண்டபோட்டு விடுங்க :)

      நீக்கு
  33. ////Modi Uncle's செக்:) அதிரா:)/// 
    ஆத்தீ !!!! இது எப்படி என் கண்ணில் படாம போச்சு !!!!!! ஹ்ஹஹ்ஹா அவரையும் விட்டு வைக்கலையா இந்த குண்டு பூனை 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, இது எப்போவோ நடந்தாச்சே!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இது தெரியாதா:)) டறம்ப அங்கிள் உவைட்:)) அவுஸ்:) ஐக் காலி பண்ண்றார் எல்லோ அதால என் கிட்னியை:) மோடி அங்கிள் கடன் வாங்கிட்டார்ர்:))

      நீக்கு
  34. ///முதலில் அந்த மாமி சமைப்பதைப் பார். சாம்பார் எப்படி வைச்சிருக்காங்கனு பார்! அது மாதிரி உனக்குத் தெரிகிறதா? அதைப் போய்த் தெரிஞ்சுண்டு வந்து அப்படிச் சமை! அப்புறமாப் பேசலாம்!" என்று கடுமையாகச் சொன்னான்.//

    ஹையோ என்னால முடியல்ல.. அஞ்சூஊ ஜெல்ப்ப் மீ பிளீஸ்ஸ்ஸ் இந்த புதுமாப்பிள்ளையை இப்பவே நான் தேம்ஸ்ல வீசோணும் இல்லை எனில் உமாவுக்கு ஒரு நல்ல லோயர் தேடிக் குடுக்கப் போறேன்ன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே எப்படி கம்பேர் பண்ணலாம் :)))))))))) அம்மா சமையலை கம்பேர் பின்னாலே சாமியாடிருவோம்ல :) இதுல பக்கத்து வீட்டு மாமி செஞ்சதை சொன்ன்னா அவ்ளோதான் 

      நீக்கு
    2. இல்லை அதிரடி, ஏஞ்சல், இப்படி ஒத்துப் பார்ப்பவர்கள் உண்டு. இன்னும் சிலர் அவங்களுக்குக் கால்படி அரிசிக்கு 20 இட்லி வருதாமே! ஏன் உனக்கு அப்படி வரலைனு கேட்கவும் கேட்பாங்க. மனைவி ஒரு கிலோ பருப்புக் கேட்டால் அரைக்கிலோ வாங்கிக் கொடுப்பாங்க! இதெல்லாம் ஆணாதிக்கம் அதிகமா இருந்த கால கட்டம். இப்போப் பெண்ணாதிக்கம் தான் தலை விரித்து ஆடுதே! :))))

      நீக்கு
    3. ஒத்துப்பார்ப்பதே தப்பு.. அதைவிட, இவர் என்னடா எண்டால், மனைவி வந்ததே சமைக்கத்தான் என்பதைபோலவெல்லோ.. அனைத்தையும் விட்டுப்போட்டு சமையலைக் கேட்டுப் பழகு என்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சாப்பாட்டு ராமனாக இருப்பாரோ:))..

      உண்மை கீசாக்கா.. இப்போதைய ஆண்கள் வெரி வெரி பாவம்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா.. முந்தி எனக்கு தெரிஞ்ச ஒரு அம்மப்பா.. கல்யாணம் கட்டிய புதிசில பருப்பு வாங்கி, பரணில கட்டி வைப்பாராம் டெய்லி கறிக்கு அளந்து குடுப்பாராம்ம்.. இத்தனைக்கும் அவர் பெரிய பணக்காரர் என்பதால ஒரு வறிய குடும்பத்துப் பிள்ளையைக் கட்டி வச்சவையாம்...

      நீக்கு
    4. //மனைவி வந்ததே சமைக்கத்தான் என்பதைபோலவெல்லோ..// - அதிரா சொல்வதைப் பார்த்தால் அவங்க பசங்களுக்கு நல்லா சமைக்கக் கத்துக்கொடுத்திருப்பாங்களோ?

      நீக்கு
    5. நீங்க நம்ப மாட்டீங்க நெ தமிழன்.. இப்போதைய பிள்ளைகள் நல்ல தெளிவாகவே இருக்கிறார்கள்.. பெண் ஆண் வித்தியாசம் தெரியாது, எந்த வேலையாயினும் இருவருமே செய்யோணும் என்பதைப்போல நினைக்கின்றனர், அதனால அப்படி நினைப்பில நாம் எப்பவும் கெட்ட எண்ணத்தை வளர்ப்பதில்லை.. நான் எதுவெனினும் சொல்லிக் கொடுப்பது, நீங்கள் இப்போ நல்ல பழக்கம் பழகினால்தான் வருங்காலத்தில உங்கள் ஃபமிலிக்கும் பிடிக்கும் அதனால அம்மா சொல்லித்தாறதைக் கேளுங்கோ என்பேன்.

      நம் பிள்ளைகள் இருவருக்குமே சமையல் ஆர்வம் உண்டு, மூத்தவர் யூ ரியூப் பார்த்து சமைப்பார்.. அடிக்கடி என் குழைஜாதம்:)) போல நிறைய வெஜிட்டபிள் போட்டு ரைஸ் செய்வார், சிக்கின் கறி சமைப்பார்.. ஓரளவு சமைப்பார்.. சின்னவரும் குட்டிக் குட்டிச் சமையல்கள் செய்வார்.

      எங்கள் உறவில் ஒருவருக்கு திருமணம் நிட்சயமானது, காதல்தான்.. பெற்றோர் சம்மதத்துடன்... அந்த ஆண் கொஞ்சம் குண்டு, பெண் மெல்லிசு... அப்போ படம் பார்த்த மூத்தவர் சொல்கிறார்.. அவர் ஜிம் போய் ஸ்லிம் ஆகோணும் , அப்படி இல்லாமல் இப்படிக் குண்டாகவே இருந்தால், கேள் விட்டிட்டுப் போய்விடுவா என்கிறார்:)).. அப்போ பாருங்கோ எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்..

      ஆனாலும் பாருங்கோ நான் மருமகளுக்கு தலை இழுத்துவிட்டு, நல்லா மேக்கப் பண்ணி, எல்லாம் செய்து விடுவனாக்கும்[ஆனா அதுக்கு மருமகள் சம்மதிக்கோணுமே ஹா ஹா ஹா:)]

      நீக்கு
  35. ///ஹா ஹா ஹா பெண்களுக்குப் பொதுவா உள்ளுணர்வு அதிகம்:))).. எனக்கு கொஞ்சம் இன்னும் அதிகம்:)) ஹா ஹா ஹா//

    ஆமா ஆமாவே ஆமா நீங்க பெண் பூனை :)) நாலு கால் ஒரு வாலுடன் இருக்கறதால உள்ளுணர்வு அதிகமாத்தான் இருக்கும் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா இப்பூடி நீங்க ஜொள்ளுவீங்களென என் உள்ளுணர்வு சொல்லிச்சுது எனக்கு:))

      நீக்கு
  36. //அது எத்தனை பொக்கிஷம் என்பதே எனக்கு இப்போத் தான் தெரிகிறது. இனி என்ன செய்வேன்? என்று கலங்கினான்.///

    ம்ஹூம்ம்ம்ம்... தேம்ஸ்ல போய்க் குதிக்கச் சொல்லுங்கோ:), நான் அதைப் பண்ணினால் கொலை என்றாகிடும்:)) ஹையோ ஹையோ.. இருப்பினும் இவ்ளோ குயிக்காக அறிவுக்கண் திறக்கப்பட்டு விட்டதே.. நம்பலாமோ இல்லை பழையபடி வே..முருங்கியில ஏறிடுமோ என என் நெஞ்சு டக்கூ டக்க்கூ என அடிக்குதூ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி சரி விடுங்க அவர் என்னை மாதிரி வந்த பின் காப்போன் ஆக்கும் அதான் அறிவுக்கண் உடனே ஒப்பன்ட் :)

      நீக்கு
    2. கடவுள் இருக்கார் குமாரூஊஊஊஉ:)).. ஹா ஹா ஹா நான் அர்ச்சனாவைச் சொல்லல்லே:))

      நீக்கு
    3. இல்லை, நம்பலாம். ஏனெனில் வந்தது ஒரே அடியாகப் பேயடியாக வந்துடுச்சே. இதுக்கப்புறமும் புரிஞ்சுக்கலைனா! அவன் மனுஷனே இல்லை.

      நீக்கு
    4. கீசாக்க்காவின் பதிலைப் பார்த்தால்.. இது உண்மைச் சம்பவம்போல தெரியுதே:))... செவிவழிக் கதையாக இருக்கும்போல....

      நீக்கு
  37. ///உள்ளே வந்தவள் சுமார் 3 நாட்களாகத் தொடாத கணவனைத் தொட்டு அவன் தலையைத் திருப்பித் தன் மடியில் சாய்த்துக் கொண்டாள். அவன் கைகளைத் தன் கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டாள். மாதவன் வெடித்து அழ ஆரம்பித்தான்.//

    ச்ச்சே இந்தப் பெண்களே இப்பூடித்தான்:)) பொசுக்கென அடங்கிப்போயிடுகின்றனர்:)).. இந்த வீக்னெஸ் தெரிஞ்சுதானாக்கும் ஆண்களும் ஓவரா டான்ஸ் ஆடுகின்றனர்:))).. சே..சே... இப்போ என் லோயரை முதலில் கான்சல் பண்ணிட்டு வாறேன்ன்ன்:)).. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, மன்னிப்பது தெய்வத் தன்மை இல்லையோ? அதிரடிக்கு அது கூடத் தெரியலை.

      நீக்கு
    2. அதுக்காக அஞ்சுவை எல்லாம் என்னால மன்னிக்க முடியாதாக்கும் கீசாக்கா:)).. இருப்பினும் மீ ஞானியேதேன்ன்ன்ன்ன்:))

      நீக்கு
    3. //அவன் கைகளைத் தன் கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டாள். மாதவன் வெடித்து அழ ஆரம்பித்தான்// - ஏதோ நாடகத் தன்மையாத் தெரியலை? அவ்வளவு புத்தி சொல்லியும் கடுப்படித்தவன், பிறகு குழந்தைபோல அழுதானாம். நம்புற மாதிரியா இருக்கு?

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கீசாக்கா அப்போ கதை எழுதவில்லை நாடகம் எழுதிட்டா எனச் சொல்லிட்டார் நெ தமிழன்:)) கரீட்டூஊஊஊஊ... :))

      அது நெல்லைத்தமிழன் சில ஆண்கள் இப்பூடித்தான், தம்மில் பிழை எண்டதும் லபக்கெனக் கால்ல விழுந்திடுவினம் ஹா ஹா ஹா:) பெண்களும் போனாப்போகுதென விட்டுக் குடுத்திடுவினம்:))

      நீக்கு
  38. கீசாக்கா அழகாக எழுதிட்டீங்க கதை, இதுக்கு மாமாவும் ஏதும் ஜெல்ப் பண்ணினவரோ?:))...

    நேரமில்லை நேரமில்லை, அதிரா.. இல்ல இல்ல வெரி சோரி.. மோடி அங்கிளின் செக் அதிரா போடும் கொமெண்ட்ஸ் ஐக்கூட பப்ளிஸ் பண்ண நேரமில்லை என நோஸ்:)) ஆல அழுதாலும் நேரம் ஒதுக்கிக் கதை எழுதிட்டீங்கள் வாழ்த்துக்கள்.. இதோ உங்களுக்கு உமாவின் பட்டுப்புடவையில ஒண்ணெடுத்து:) கிஃப்ட் ஆத் தாறேன் கீசாக்கா.. பொங்கலுக்குக் கட்டுங்கோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, அதிரடி, மாமாவுக்கு இந்தக் கதை வந்ததே தெரியாது. அவர் ஜெல்பு, ஹெல்பு எதுவும் பண்ணுவதில்லை. ஜல்பு தான் அடிக்கடி பிடிக்கும். பனிக்காலம் ஆச்சே. எனக்குப் பட்டுப் புடைவை எல்லாம் வேண்டாமே. புதுப் புடைவையே வந்துடுச்சு. படம் போட்டிருக்கேன் வந்து பாருங்க. :)

      நீக்கு
    2. இனித்தான் எல்லா இடமும் விசிட் பண்ணப்போகிறேன்ன்ன்.. இன்று சமையல் ஓடர் அஞ்சு வீட்டில குடுத்திருக்கிறேனாக்கும் அதனால கொம்பியூட்டரை விட்டு எழும்ப மாட்டேன்ன்:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. ஹலோ மியாவ் ரஜினி அங்கிள் பத்தி நாலு வரியில் நாப்பது வார்த்தையில் சொல்லிட்டு எங்கெனாலும் போங்க :)))))))))

      நீக்கு
    4. ம்ஹூம் அஞ்சூஊஊ.. நான் இப்போ கமல் அங்கிள் கட்சிக்கு மாறிட்டேனாக்கும்:)).. அதால மொட்டை அங்கிள் பற்றிப் பேசமாட்டேன்ன்ன்.. ஹையோ ஆராவது என்னைத்துரத்தித் துரத்தி அடிக்கப்போகினமே:)) என் வாய்தேன் நேக்கு எடிரி:))

      நீக்கு
    5. //  மொட்டை அங்கிள் // அம்மாடி இப்போதான் மனசுக்கு திருப்தி :) இது ஒண்ணு போதும்  :))) ஹையோ ஹையோ .

      நீக்கு
    6. //ஹையோ ஆராவது என்னைத்துரத்தித் துரத்தி அடிக்கப்போகினமே:)) என் வாய்தேன் நேக்கு எடிரி:))//

      https://www.youtube.com/watch?v=3x79T3gesAk


      plase watch / listen to this song miyaawwwwwwwwwww :))))))))))))

      situation song for modi uncles Secretary!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    7. ///situation song for modi uncles Secretary!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      ஆஆஆஆஆஆஆஆஆஆஆ என் ஃபேவரிட் சோங் ஆச்சே இது:)).. கண்ணை மூடிக்கொண்டு பாடுவேன் தெரியுமோ:)).. என் நோட் புக் களில்கூட இந்தப் பாடல் வரிகள் எழுதுவேன்.. நேக்கு சிவாஜி அங்கிளைப்பிடிக்குமெல்லோ:))..

      இது எனக்கானது அல்ல:)) என்னைச் செக்:) ஆகப் போட்டமையால.. இப்போ மோடி அங்கிள் இதைப் பாடிக்கொண்டு திரிகிறாராமே:)).. எதுக்கும் உண்மையோ எனக் கீசாக்காவைக் கேட்டுப் பார்ப்போம்:))

      நீக்கு
  39. அந்த படம் வரைந்தவர் நம்ம கௌதமன் சார் என்பதை இப்போதான் கவனிச்சேன் :))))))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்க உத்து உத்துப் பார்த்ததால மீயும் பார்த்தேன்:)).. அது கெள அண்ணன் மாமியைப் பார்த்துக் கை ஓங்குவதாக கற்பனைபண்ணி[ஏனெண்டால் அவரால கற்பனை மட்டும்தான் பண்ண முடியுமாக்கும்:)) ஹா ஹா ஹா] கீறிய படமாக இருக்குமோ:)).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

      நெல்லைத்தமிழனை காணமே.. வந்தாரே எண்டால் சண்டைபோடலாம் எனப் பார்த்தேன் இக்கதையை வச்சே:))..

      நீக்கு
  40. கௌதமன் சார் படம் நல்லா இருக்கு 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ஹூம்ம்.. உப்பூடிச் சொல்லிட்டால் அவர் ஓடிவந்து நியூ இயர் கிஃப்ட் தருவார் எனும் நினைப்போ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நோஓஓஓஓ கெள அண்ணன் அஞ்சுவை நம்ப வேண்டாம்ம்ம் மீ தான் ஜொள்ளுவேன்ன்.. படம் ரொம்ப நல்லா த்த்ரூபமாக வந்திருக்குது:))

      நீக்கு
    2. எனக்கு நேட்டிவ் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் ஏற்கனவே 5 கிலோ பார்சல் அனுப்பிட்டார் கௌதமன் சார் .உங்களுக்கு வரலியா மியாவ் :))))))

      நீக்கு
    3. நோஓஓஓஓஓஓஓஓஓஒ இது அநியாயம் அநீதி... நான் இப்பவே போகிறேன் பிரித்தானியா காண்ட் கோர்ட்டுக்கு:)).. நேக்கு நீடி வேணும்... பொங்கல் மின்னூல் க்கு அனுப்ப இருந்த தங்கம் பதிச்ச என் கைவண்ணம் கான்சல்ட்ட்ட்ட்:)))) எனக்குத் தேவை நீதி நியாயம் நேர்மை கடமை எருமை ஆக்கும்:)))..

      சே..சே... கெள அண்ணன் எனக்கு இனிப்பு வாணாம்.. நல்ல உறைப்பு முறுக்கு, பக்கோடா .. அப்பூடி அனுப்புங்கோ:))

      நீக்கு
    4. பாராட்டுகளுக்கு நன்றி. வேண்டிய முறுக்கு சீடை பட்சணங்கள் எல்லாம் ஆன் லைன் ல ஆர்டர் பண்ணி வாங்கி சாப்பிடுங்கோ. பில் தொகையில் பாதி மட்டும் நான் அனுப்புகிறேன்.

      நீக்கு
    5. அதுசரி, ஏன் கெள அண்ணன் படத்தில கண் மூக்கு வாய் வைக்காமல் விட்டிட்டீங்க????

      நீக்கு
    6. //பில் தொகையில் பாதி மட்டும் நான் அனுப்புகிறேன்.// - இதைப் பார்த்த உடனே ஆர்டர் பண்ணிடாதீங்கோ..... பில் தொகை 120.00 பவுண்டு என்று வந்தால், கேஜிஜி சார், 0.00வைத் தன் பங்காகவும் 120ஐ உங்க பங்காகவும் நினைத்துடுவார்.

      நீக்கு
    7. அது மியாவ் willow ட்ரீ  dolls / figurines  பார்த்திருக்கிங்கல்ல அந்த பொம்மைசுக்கு கண் காது மூக்கு இல்லை ஆனாலும் பிரபலம் அது மாதிரி கௌதமன் சார்  வரைஞ்சிருக்கார் 

      நீக்கு
    8. ஆஆஆஆ நெல்லைத்தமிழன் அரைவ்ட் ..இந்த குண்டு பூனை இந்நேரம் பார்த்து குறட்டை போட்டு தூங்கிங் :) நான் சண்டை பாக்கணும் ஓடியாங்க மியாவ் 

      நீக்கு
    9. ///நான் சண்டை பாக்கணும் ஓடியாங்க மியாவ் //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பகல் முழுவதும் கண்ணில விளக்கெண்ணெய்யோடு இருந்தேன் நெ தமிழன் வருவார் சண்டைப்பிடிக்கலாம் என:)) ஆனா கொஞ்சம் ரயேட் ஆ இருக்கே ஒரு நப் எடுப்பமே கண்ணயர்ந்த நேரம் பார்த்து.. வேகமா வந்து புயல்போல ஓடிட்டார்:))..

      நீங்க கூக்குரல் பண்ணாமல் கொஞ்ச நேரம் பிடிச்சு வச்சிருக்கலாமெல்லோ அஞ்சு கர்ர்ர்ர்ர்:)))

      நீக்கு
    10. // அதுசரி, ஏன் கெள அண்ணன் படத்தில கண் மூக்கு வாய் வைக்காமல் விட்டிட்டீங்க????// நம் கற்பனைக்குத் தகுந்தவாறு அங்கே பொருத்திக் கொள்ளலாம்!

      நீக்கு
  41. எங்கே கீசாக்காவைக் காணம்:)).. எல்லோரையும்போல அதிராவுக்கும் ஒரு வரிப் பதில் போட்டிட்டுக் கொம்பியூட்டரை ஓவ் பண்ணிடலாம் என நினைச்சிட்டா போலும்:)) ம்ஹூம்ம் அதுதான் நடக்காது மீ ஹொலிடேயில இருக்கிறேன்ன் அடங்க மாட்டேன்ன்ன்:)).. நாம ஆரூஊஊஊஊஊ “கெட்ட கிருமிகள்” ஆக்கும்.. ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊ ஸ்பீட்டா ஓடுங்கோ:))

    பதிலளிநீக்கு
  42. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
    @அஞ்சு அண்ட் அதிரா. தூள் கிளப்பிட்டீங்க:)
    கீதா சொல்வது போல கணவன்மார்கள்
    உண்டுதான்.
    எல்லோரையும் நம்புவார்கள் பெண்டாட்டியை விட்டுக் கொடுத்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ வல்லிம்மா... தூள் எங்கின கிளம்பிச்சுது வல்லிம்மா.. சே..சே.. நான் ஆரம்பிக்க முன்பே கீசாக்கா ஓடிட்டா:)) ஏனையோர் எல்லோரும் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருந்து பேர்ட் வோச்சிங் பண்ணத் தொடங்கிட்டினம்:)) அதனால மீ ஆரம்பத்தோடயே முடிச்சிட்டேன் ஹா ஹா ஹா.. இல்லை எனில் ஒரு கை பார்த்திருக்கலாம்:)).. அது என்னமோ தெரியேல்லை அதிராட பெயர் பார்த்தாலே ஆரும் பேச வருகினம் இல்லை:)) ஸ்ரீராமும் ஒளிச்சிட்டார் பாருங்கோ ஹா ஹா ஹா... ஹையோ இப்போ நான் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிடுறேன் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

      நன்றி வல்லிம்மா.

      நீக்கு
    2. ரொம்ப வேலைகள்..   வீடு முழுக்க  புழுதி...   இன்னும் ஒருவாரம் வேலைகள்   .நடுவில் இந்த ஜனவரியில் ஏகப்பட்ட இல்ல விசேஷங்கள், செலவுகள் வேறு....

      நீக்கு
    3. ஸ்ரீராம், இப்போ கொரோனா வந்து நிகழ்ச்சிகள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே நிகழ்வதால வெளிநாட்டினருக்கு உண்மையில் பணம் மிச்சம்:))... மாதம் மாதம் பேர்த்டே பார்ட்டிக்கே பணம் அதிகம் செலவாகிடும்:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
  43. எல்லோருக்கும் தனித்தனியாய் பதில் சொன்னால் காணாமல் போய்விடும். தேடணும். ஆதலால் பொதுவாக நன்றி சொல்லிக்கிறேன். அதிரடி, ஏஞ்சல், கரந்தை ஜெயகுமார், ஆகியோருக்கும் இன்னும் விட்டுப் போன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  44. உஙகள் கதையும் நன்றாக இருக்கிறது நம்பமுடியவில்லை என்றாலும்

    பதிலளிநீக்கு
  45. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    கதை நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!