வியாழன், 3 டிசம்பர், 2020

கரப்பான் பூச்சியின் கடைசி நாட்கள்

 புதிய வீட்டுக்கு வந்ததில் கரப்பன் பூச்சிகள் கண்ணில் படாதது  சந்தோஷமாக இருந்தது.  அந்த சந்தோஷம் கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடித்தது!  ஓரிரு மாதங்களிலேயே ஒன்றிரண்டாக கண்ணில் பட ஆரம்பித்தது.  அதுவும் அங்கிருந்து (பிரிக்காமலேயே வைத்திருந்த) கொண்டு வந்த புததகப் பெட்டிகளை பிரித்ததும் அதிலிருந்து வெளிவந்து, அடிப்பதற்குள் (ஏஞ்சல் மன்னிப்பாராக) குடுகுடுவென்று ஓடி கிடைத்த இடுக்குகளில் மறைந்தன சில கரப்பான் பூச்சிகள்.





அப்புறமென்ன?  கொஞ்ச நாட்களில் சமையலறைப் பாத்திரங்களில் கருப்பு நிறமும், கரப்பான்களின் தடங்களும் மணமும் (!) தெரிய ஆரம்பித்தன.  அவ்வப்போது அவற்றை அடித்து நசுக்கி (மறுபடியும் ஏஞ்சல் மன்னிப்பாராக!) வெளியில் எறிந்தாலும் அவை பெருகிக் கொண்டே இருந்தன.

கரப்பானுக்கு அடிக்க என்று ஒரு ஹிட் (கருப்பு ஹிட்!) வாங்கி சும்மாவே வைத்திருந்தேன்.  கொஞ்ச நாட்கள் கழித்து அடித்தபோது அது போதுமான பலனைத் தரவில்லை.  எங்கள் வீட்டுக்கு இப்போது பழக்கமாகி இருக்கும் ஒரு பல்துறை வித்தகரிடம் (எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக், ப்ளம்பிங் என்று எல்லா வேலைகளும் செய்வார் - 33 வயது இளைஞர்.  இப்போது அவர்தான் என் ஆஸ்தான ஆட்டோ ஓட்டுநர்.  அவர் இதைத்தவிர ஹூண்டாய் நிறுவனத்திலும் பணிபுரிகிறார். ) கேட்டபோது "பெஸ்ட் கண்ட்ரோல்தான் ஸார் ஒரே வழி..." என்றார்.  கேள்விப்பட்ட மாதிரி இருந்தது.  ஆனால் முயற்சித்தது இல்லை.


இதற்கும் பிறகு ஒரு மாதம் கழித்து எனக்கு முன்னரே வந்திருந்த இது சம்பந்தமான எஸ் எம் எஸ் செய்தி ஒன்றை வைத்து அவர்களுக்கு அலைபேசினேன்.  என்ன விவரம், என்ன காசு என்று கேட்பதற்குள் "சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் ஸார்...  சாப்பிட்டு விட்டு வந்து நானே தொடர்பு கொள்கிறேன்" என்று சொன்ன ஜெனிஃபர் (அதுதான் அவர் பெயராம்) மறுபடி பேசியபோது முகவரி, லொகேஷன் எல்லாம் கேட்டுக்கொண்டார்.  ஒரு படுக்கை அறையா, இரண்டா, மூன்றா, என்று கேட்டுக்கொண்டார்.  சமையலறை மட்டும் சரிசெய்ய 1200 ரூபாய் என்றும், வீடு முழுவதும் என்றால் 1600 ரூபாய் என்றும் ரேட் சொன்னார்.  நானூறு ரூபாய்தான் வித்தியாசம் என்று வீடு முழுவதுமே செய்துவிடலாம் என்று சொல்லி, வரும் தேதியை முடிவு செய்யும் முன் என்னிடம் சொல்லுங்கள்.  நான் வீட்டில் இருக்கும் நேரமாக இருக்கவேண்டும் என்று சொல்லி இருந்தேன். 


மறுநாளே போன் வந்தது.  பேசியவர் தன் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டுக்கு வருவதற்கு வழி கேட்க, "என்னப்பா...   முன்னாலேயே சொல்லி விட்டு வரசொன்னேனே" என்று கேட்டதும் அவர் சொன்னார்.."துதான்(அ டெலிபோன் சிக்னல் குறைபாடால் கேட்கவில்லை!)  ஸார் கேட்கிறேன்.  "கவலை வேண்டாம்.  சாப்பிட்டு விட்டுதான் வருவேன்.  இன்னும் ஒன்றரை மணி நேரம் ஆகும்" என்றார்.    அடப்பாவிகளா...  முன்னாலேயே சொல்லணும் என்றால் இப்படி அர்த்தப்படுத்திக் கொள்வதா என்று நினைத்துக்கொண்டு வீட்டில் சொன்னேன்.




அவர் வருவதற்குள் வீட்டை எப்படி தயார் செய்வது என்கிற கவலை.  ஏற்கெனவே சொன்னபடி  இதில் இதுதான் என் முதல் அனுபவம்.  என் பாஸும்  கவலைப்பட்டார்.  "அதற்குள் வீட்டை எப்படி தயார் செய்வது?"


"நான் ரூம் கதவைச் சாத்திக்கொள்கிறேன்" என்றார் மாமியார்.  இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது.  பெஸ்டகண்ட்ரோல் நிறுவனத்திலிருந்து ஓரிரு ஆட்கள் வந்து பாத்திரங்களை நகர்த்தி, துடைப்பத்துடன் துரத்தித் துரத்தி கரப்பான்களை அடிக்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களிடம் அப்படி இல்லை என்று சொன்னாலும் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எனக்கும் இருந்தது.  ஏதோ பேஸ்ட் பேக் செய்வேன் என்றார்கள்.  அதிகபட்சம் இருபது நிமிடம் அல்லது அரைமணிநேரம்தான் ஆகும் என்று சொல்லி இருந்தார்கள்.

ரூபாய் கையில் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி இருந்தேன்.  'கூகுள் பே' யில் தரலாம் என்று சொல்லி இருந்தார்கள்.


ஒருவழியாய் அவர் வந்தார்.  அறிமுகம் செய்துகொண்டார்.  என்ன செய்யப்போகிறார் என்று பார்த்தேன்.  எங்கெங்கு கரப்பின் வாசம் (மணம் அல்ல!), என்று விவரம் கேட்டுக்கொண்டபின் டூத்பேஸ்ட் போல ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டார். அதில் பெயர் விவரம் ஒன்றும் இல்லை.  கேட்டாலும் தெரியாதது என்பது போலச் சொன்னார்.  தொழில் ரகசியம் போலும்!

கரப்பின் சைஸைப் பார்த்தவர் (சிறிய வெரைட்டி!)  'இதுதான் ரொம்பக் கஷ்டம் கொடுக்கும்'  என்றார். எக்ஸ்பர்ட் ஒபினியன்!




சமையலறை அலமாரிகளைத் திறந்து ஆங்காங்கே ஸ்க்ரூ இருக்கும் இடங்களில் சிறிய பொட்டு போல இட்டார்.  


பொட்டு தெரிகிறதா?!


அது போதுமா என்று கேட்டேன்.  கேட்பரிஸ் டேஸ்ட்டில் அல்லது வாசனையில் இருக்கும், அதனால் கவரப்பட்டு வந்து அதைச் சுவைக்கும் கரப்புகள் ஓடிவிடும், அல்லது வெளியே வந்து செத்து விடும் என்று சொன்னார்.   ஃபிரிஜ் உட்பட பல இடங்களில் {"ஐயையே...  அங்க வச்சா நமக்கு ஆபத்திலையோ.."  "இல்ல ஸார்...  பாருங்க வெளியில பீடிங்கில் மட்டும் வைக்கிறேன்") என்று கரப்பு நடமாடக்கூடிய இடங்களில் பேஸ்ட் பொட்டு வைத்தார்.  ஒவ்வொரு பாத்ரூமிலும் வாஷ்பேஸினில் அதன் கீழ் எல்லாம் வைத்தார்.

இருபது நிமிடங்களுக்குள் வேலை முடிந்துவிட, 'பேமெண்ட் எப்படி' என்றதும் திரும்பி முதுகைக் காண்பித்தார்.  அதில் இருக்கும் நம்பருக்கு கூகுள் பே!  

கூகுள் பே முக்கியமான நேரங்களில் சுற்றிச்சுற்றி டென்ஷன் ஆக்கி  பெப்பே என்றுவிடும்.  

இப்பவும்!  





கூகுள் பே பக்கத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக்கொண்டு அவர் புறப்பட்டாலும், அடுத்த இரண்டு நாட்கள் படுத்திவிட்டார்கள், அவர்களும், கூகுள் பே யும்!

இது நடந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகிறது.  மருந்து வைத்த மறுநாளே ஒரு கரப்பு மட்டும் வெளியில் வந்து சவமாகி, வேலை தொடங்கி விட்டது என்று காட்டியது. 

அப்புறம் எதுவும் கண்ணில் படவில்லை.  ஆனால் இப்போது அத்தனை கரப்பும் எங்கே போனது என்றும் தெரியவில்லை!

இதைச்சொன்னபோது என் நண்பர்களில் பலர் ஆறு மாதம், அல்லது வருடத்துக்கொருமுறை இதைச் செய்து வருகிறார்கள் என்று தெரிந்தது!  நான்தான் அறியாமல் இருந்திருக்கிறேன்!


====================================================================================================

"யாரோ ரகுமானாம்..."





குமுதம் ரோஜா பட விமர்சனத்தில் இசை அமைப்பாளர் பற்றி வந்திருக்கும் வரியைக் கவனியுங்கள்.  இப்போதைய அவரின் உயரத்தை நினையுங்கள்!!




==================================================================================================

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இப்போது கிரிக்கெட் மேட்ச் நடந்து வருகிறது..  ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நடக்கும் ஆஷஸ் சீரிஸ் ரொம்பப் பிரபலம்.  இதுபற்றி அறுபதுகளில் வந்த 'தெரிந்த பெயர்- தெரியாத விவரம்' பகுதி...

படத்தைக் க்ளிக்கினால் தனியாகத் திறக்கும் படத்தில் எழுத்துகளைப் படிக்கலாம்.

====================================================================================================

ஹிஹிஹி....



=========================================================================================================

சும்மா தெரிஞ்சிக்கலாம்னு....




=======================================================================================================


அது தெரியுது...    இதை என்ன செய்ய...!




===============================================================================================

இந்நாட்களில் கிரிக்கெட்டர்கள் எத்தனையோ விளம்பரங்களில் நடித்து நிறைய பணம் பார்க்கிறார்கள்.  அந்நாளில் கிரிக்கெட்டர்கள் விளம்பரங்களில் தோன்றியது மிகக்குறைவு என்று நினைக்கிறேன்.  தமிழகத்தின் வெங்கட்டராகவன் நெஸ்கபே விளம்பரத்தில் தோன்றுவார்.  அது சினிமா தியேட்டர்களில் பார்த்த நினைவு.  யு டியூபில் கிடைக்கவில்லை.  அதன் பின்னர் கவாஸ்கர் தினேஷ் சூட்டிங் விளம்பரங்களுக்கு தோன்றியதை பார்த்த நினைவு இருக்கிறது!



72 கருத்துகள்:

  1. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மென்பொருள் காண்ப தறிவு...

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்...  வணக்கம்.

      நீக்கு
    2. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

      எல்லோரையும் இறைவன் என்னாளும்
      காக்கப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
  3. கரப்பான் மத்திரமா. பல்லி இல்லையா. நாங்களும்
    பெஸ்ட் கன்றோல் செய்து பல்லிகள்,கரப்புகளை
    எலிகளை விரட்டினோம்.

    கடவுளே அது ஒரு பெரிய அத்தியாயம். இப்போது வீடு
    எப்படி இருக்கோ.
    உண்மைதான் வருடத்துக்கொரு முறையாவது செய்யணும்.
    இங்கே இருந்து மதில் தாவி பக்கத்து வீட்டுக்குப் போய்,
    மீண்டும் நம் வீட்டிற்கு வர சான்ஸ் உண்டு
    என்றி சொல்லிக் கொள்கிறேன்:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இங்கே இருந்து மதில் தாவி பக்கத்து வீட்டுக்குப் போய்,
      மீண்டும் நம் வீட்டிற்கு வர சான்ஸ் உண்டு
      என்றி சொல்லிக் கொள்கிறேன்// விடாது கரப்பு!

      நீக்கு
    2. பல்லி பிரச்னை இப்போதைக்கு இல்லை.  எனவே அதை முயற்சிக்க வில்லை!

      நீக்கு
  4. ஆஷஸ்,
    தொலைக்காட்சியில் ஒரு தொடராக வந்த நினைவு.
    பாடிலைன்!!!!!!!!

    பதிலளிநீக்கு
  5. அனுஷ்கா வும் கவிதையும் மிகப் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிரந்தர 'வைப்பு' நிதி என்று படித்தேன்.

      நீக்கு
    2. நன்றி அம்மா.  கேஜிஜி...   அந்த வார்த்தை நல்லாயில்லை என்பதால் உபயோகிக்கவில்லை!

      நீக்கு
  6. அம்மா பெண் டயலாக் பயங்கர சிரிப்பு!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..  ஹா...   நன்றி அம்மா.  எஸ் எம் எஸ் காலத்து ஜோக்.

      நீக்கு
  7. சென்னையைப் பற்றி நல்ல செய்தி. வாக்கங்களும் ,பாக்கங்களும் இப்போதுதான் புரிகிறது.
    மிக நன்றி ஸ்ரீராம்.

    ரோஜா படத்தைப் பற்றி இந்த விமர்சனம் வந்ததா. ரகுமானைப் பற்றி அப்போது இப்படி எழுதியவர் யாரோ. சக்கை போடு போட்ட இசையாச்சே .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே அவர் முதல் படம்?  எனவே அப்படி விமரிசனம்.

      நீக்கு
  8. தினேஷ் சூட்டிங்க்ஸ் விளம்பரம்
    மனதைக் கவர்ந்தது.
    சூப்பர்.மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் அமைதியும் ஆரோக்கியமும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. எல்லாருக்கும் இனிய காலை வணக்கம்.

    ஸ்ரீராம் கரப்பான் பூச்சியை நான் கொல்லவே மாட்டேன். பாவம். கொல்லாமல் அதை விரட்ட ஒரு பேஸ்ட் கடையில் கிடைக்கிறது. ஹெர்பல் பேஸ்ட். அதை ஓரங்களில் ஓட்டைகளில் தடவி விட்டால் கரப்பு அந்த மணத்திற்கு வருவதில்லை. அதுவும் நாங்கள் க்ரவுன்ட் ஃப்ளோர் தானே வீடு தற்போது இங்கு பங்களூரில்.

    வாட்சப்பில் உங்களுக்குப் போட்டோ எடுத்து அனுப்புறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. take photo of that herbal paste's name and its cover or tube. then share it with all of us.

      நீக்கு
    2. போட்டோ வந்தது கீதா.   நன்றி.  கடைகளில் தேடிப்பார்க்கிறேன்.

      நீக்கு
  11. பெஸ்ட் கன்ட்ரோல் பற்றித் தெரியும். ஆனால் நமக்குக் குழம்புக்குத் தாளித்தாலே அரை மணி நேரம் ஆகும் சுவாசம் சரியாக. இதெல்லாம் அடிச்சுட்டு எங்கே போய் இருக்கிறது. ஆனால் வீட்டில் அவ்வப்போது ஹிட் மற்றும் எறும்பு, கரப்புக்கான கோடுகள் போட்டுக் கொண்டே இருப்பதால் கொஞ்சம் குறைவாக எப்போவானும் கரப்பார் கண்களில் படுவார். அன்று அவருக்குப் பரலோகப் பிராப்தி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீராம் விவரித்திருக்கும் பெஸ்ட் கண்ட்ரோல் முறையில் வாடை எதுவும் இருக்காது கீதா அக்கா.

      நீக்கு
    2. ஆமாம் கீதா அக்கா...   இதில் பெரிய சுவாசப் பிரச்னை எதுவும் கிடையாது.  நமக்கு அது தெரியவே தெரியாது.

      நீக்கு
  12. அனுஷ்காவுக்கு 40 வயசுனும் இன்னும் கல்யாணம் ஏன் பண்ணிக்கலைனும் தினமலரில் ஓர்சுவையான கருத்தரங்கம் படிச்சேன். இஃகி,இஃகி,இஃகி! அம்மா, பெண் வார்த்தையாடலில் பெண் இத்தனை சுறுசுறுப்புனு பார்த்து ஆச்சரியம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க ஏதோ சந்தோஷமா இருக்காங்க, இருந்துட்டு போகட்டுமே.

      நீக்கு
    2. என்னது...   அனுஷ்காவுக்கு நாப்பது வயசாயிடுச்சா?  நேத்து கூட யாரோ 39 ன்னுதானே சொன்னாங்க!

      நீக்கு
  13. அனுஷ் படம் பழைய ஃபோட்டோவையே போட்டு போட்டு ஸ்ரீராம், அனுஷ் ரொம்ப இளமையா இருக்காப்ல காட்டுகிறார்..தமன்னாவுக்குப் போட்டியாக என்று நெல்லை குரல் எழுப்ப போகிறார் பாருங்க..ஹிஹி நான் ஜூட். நான் சொல்லலையாக்கும் நல்லா கேட்டுக்கோங்க!!! இனி அப்புறம் தான் வர இயலும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஶ்ரீராமும், அவருக்கு ஏத்த மாதிரி கேஜிஜி சாரும் சேர்ந்து செய்த சதிதான். நல்லா இல்லாத படங்களா செலெக்ட் செய்து இங்க போட்டு என்னை வெறுக்க வைத்துவிட்டார்கள். ஹாஹா

      நீக்கு
    2. ஹா! இது நியாயமா !! உங்க வாட்ஸ் அப் மெசஞ்சர் பார்த்து சொல்லுங்க நெ த!!

      நீக்கு
    3. எனக்குப் பதில் யாருக்கோ அனுப்பிட்டீங்களோ?

      நீக்கு
    4. அனுஷ் யோகா எல்லாம் செய்வாராம்.  எனவே இளமையாதான் இருக்கார்.

      நீக்கு
    5. யோகா செய்யும் அந்த அனுஷ் கோஹ்லி மனைவி என்று படித்தேன்.

      நீக்கு
    6. முதலில் அனுஷ்  நாகார்ஜுனாவுக்கு யோகாவோ எதுவோ கற்றுக்கொடுக்கதான் வந்திருக்கிறார்.  பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் வந்திருக்கின்றன.  அது யோகாவா, அழகுக்கலையா நினைவில்லை.

      நீக்கு
    7. ஹை! ஸ்ரீராம் அப்ப அனுஷை உங்களுக்கு/நமக்கு யோகா சொல்லிக்கொடுக்க வரவசைச்சுரலாமோ!? "மே" !?

      நெல்லை நோட் த பாயின்ட் தமன்னா யோகா செய்யலைனு....யாரோ சொல்லாத மாதிரி சொல்லுறாங்க! ..கீதா ஓடிக்கோ...

      கீதா

      நீக்கு
  14. விளம்பரங்களை அப்போதெல்லாம் திரைப்படங்கள் திரையரங்கில் பார்க்கும் முன்னர், பத்திரிகைகளில் தான் பார்க்கலாம். சென்னைத் தொலைக்காட்சியில் முதலில் கொண்டு வந்த விளம்பரம் நிர்மா என நினைக்கிறேன். திரைப்படத்தின் நடுவே கொஞ்ச நேரம் இந்த விளம்பரம் வந்து போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா அக்கா..   திரையரங்குகளில் பார்த்த விளம்பரங்களை வீட்டுத் தொலைக்காட்சியில் பார்த்தபோது த்ரில்லாக இருந்தது!  

      நீக்கு
  15. கரப்பான் பூச்சியால் நான் அவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. பஹ்ரைன்ல வீட்டில் மூட்டைப்பூச்சி வந்துவிட்டது. பல்கிப் பெருகி, இரவில் ஒருநாள் தூங்கவிடாமல் செய்துவிட்டது. லைட்டைப் போட்டால் வேகமாக மேல்சுவற்றில் ஏறியது கண்ணில் பட்டது.

    ஆபீசில் நண்பர்களிடம் சொன்னேன். மறுநாளே பெஸ்ட் கன்ட்ரோல் ஆள் வந்து, உள்ள மருந்து அடித்தபின் 8 மணி நேரத்துக்கு வீட்டுக்குள்ள வரக்கூடாது, நாங்க வந்து சரி செய்து தரோம்னாங்க. அந்த ஊர்லதான் சௌகரியம் மிக அதிகம். காலைல குளித்து ரெடியாகி அவங்கள்ட சாவியைக் கொடுத்துட்டு காரை எடுத்துக்கொண்டு மால்கள், ஹோட்டல் என்று சுற்றிவிட்டு இரவு திரும்பினோம். அதற்கப்புறம் மூட்டைப்பூச்சி தொல்லையே இல்லை.

    இந்த அனுபவத்தை விவரித்தால் நீண்டுவிடும்.

    கரப்பானுக்கு 5 தினாருக்கு ஒரு பேஸ்ட் (ரஷ்யன் தயாரிப்பு) வாங்கி அங்க அங்க துளி வைத்துவிடுவோம் (நீங்க காண்பித்த மாதிரி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளையாக மூட்டைப்பூச்சி தொல்லை நான் சமீபத்தில் அனுபவிக்கவில்லை!  கரப்பான் தொல்லை எப்போதும் உண்டு.

      நீக்கு
  16. ரோஜா படம்.... அப்போ near perfectionல் எடுத்திருந்த தேவர் மகனை, படத்தின் தீம் காரணமாக தேசிய விருதில் தோற்கடித்த படம். ஒன்று அகில இந்திய தீம், இன்னொன்று தென் தமிழக தீம். இரண்டும் நல்லா இருந்தாலும் உண்மைத்தன்மை, நடிப்பு ஆகியவற்றில் தேவர் மகன் அருமை, ஒரே ஒரு தவறு தவிர.

    அப்போதான் துபாய் வேலையில் சேர்ந்திருந்தேன். வடநாட்டைச் சேர்ந்த பலர், என்ன மாதிரியான மியூசிக் இது, எங்களை எங்கோ இழுத்துக்கொண்டு செல்கிறது, இது, ரங்கீலா.. இவற்றைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம், கொஞ்சம்கூட அலுக்கலை என்று ரொம்பவே சிலாகித்தனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரங்கீலா இசை அப்போது சூப்பர் ஹிட்.  அது ஒலிக்காத இடங்களே அப்போது இல்லை.

      நீக்கு
  17. அந்தப் பெண் அம்மாவைப் போல் சுறுசுறுப்போ? அப்புறம் ஏன் பாடியை என்ன செய்வதுன்னு சந்தேகம் வந்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்கும் எக்ஸ்பர்ட் அம்மாவைக் கலந்துக்கலாம்னு நினைச்சிருக்கலாம்.

      நீக்கு
  18. அனைவருக்கும் காலை வணக்கம். சென்ற வாரம் விட்டதை இந்த வாரம் பிடித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சென்ற வாரம் விட்டதை இந்த வாரம் //

      ஹா..  ஹா..  ஹா...  நன்றி!

      நீக்கு
  19. நாங்கள் மஸ்கட்டில் இருந்த ஒரு வீட்டில் கரப்புத் தொல்லையால் மிகவும் அவதிப் பட்டோம். நான் எத்தனைதான் ஹிட்டால் தாக்கினாலும் கிச்சன் சிங்க் வழியே வந்து கொண்டேயிருந்தது. எங்கள் பக்கத்து வீட்டில் இருந்தவரகள் காலி செய்து வேறு ஒரு குடித்தனம் வந்ததும்,அவர்களும் ஹிட் அடித்து சுத்தமாக வைத்துக் கொள்ள ஆரம்பித்ததும் எங்கள் வீட்டு,கரப்புத் தொல்லை குறைந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நம் அண்டை வீட்டாரின் ஒத்துழைப்பும் அவசியம்தான்.  கரப்பான் இல்லாத ஊரே இல்லையா?  அணுகுண்டால் கூட அந்த இனத்தை அழிக்க முடியாதாமே...

      நீக்கு
  20. கவாஸ்கர் தினேஷ் சூட்டிங் விளம்பரத்திலா? எனக்கு அவரை பாமாலிவ் ஷேவிங் க்ரீம் விளம்பரத்தில் பார்த்த நினைவு. கபில் தேவ் ரெபிடெக்ஸ் ஆங்கிலம் கற்கும் நூல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், பாமாலிவ் விளம்பரத்திலும் பார்த்த நினைவு இருக்கிறியாது. கபில்தேவ் பேமஸ் விளம்பரம் பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி தான்!

      நீக்கு
  21. நிரந்தர நினைப்பு நிதி... ஆஹா!!! கிரிஸில் ரேட்டிங் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். Diminishing rate of interest ஆக இருக்கும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  22. கரப்பான் பூச்சி அழிப்பு விவரம் அறிந்தேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  23. கரப்பான் பூச்சி இருந்தால் பல்லியும் இருக்குமே லக்ஷ்மன் ரேகா ஓரளவு பலன் தரும் கரப்பான்பூச்சி பற்றி மோஹன் குருமூர்த்தி ஒரு பதிவு எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லக்ஷ்மன் ரேகா எறும்புகளுக்குப் போட்டிருக்கிறோம்.  பல்லி இவற்றைபப்ற்றிக் கவலைப்படாமல் சுற்றி வந்திருக்கிறது பழைய வீட்டில்!  இங்கு பல்லி தொல்லை இதுவரை இல்லை.  நன்றி ஜி எம் பி ஸார்.

      நீக்கு
  24. நிரந்தர நினைப்பு நிதியில் ஶ்ரீராம் போன்றவர்கள் அனுஷ்காவை டெபாசிட் செய்ததால்தால், வட்டி அதிகமாகி, அனுஷ்காவினால் பழைய ஸ்லிம் நிலைமைக்கு வர முடியலையோ?

    பதிலளிநீக்கு
  25. நிரந்தர நினைப்பு நிதி! :)

    பெஸ்ட் கண்ட்ரோல் - ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது அவசியம்! முதல் சில மாதங்கள் பிரச்சனை இருக்காது. பிறகு தொடங்கிவிடும்.

    மற்ற விவரங்களும் நன்று.

    பதிலளிநீக்கு

  26. நன்றி வெங்கட்.

    //பிறகு தொடங்கிவிடும்.//

    இனி வரவிடுவதில்லை!

    பதிலளிநீக்கு
  27. அனுஷ் கவிதை அருமை ஸ்ரீராம்!! ரசித்தேன். வித்தியாசமா சிந்திச்சுருக்கீங்க

    அது சரி மாசா மாசம் வட்டி வருதா!!?? குறைந்த அட்சம் ஆறு மாசத்துக்கு? வருடத்துக்கு!!!? ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா...   தினம் தினம் வட்டி!

      நீக்கு
    2. ஆ ஆ ஸ்ரீராம் அப்ப அரம வுக்கும் கொஞ்சம் வெட்டணுமாக்கும்!!!!!

      கீதா

      நீக்கு
  28. பாக்கம், வாக்கம் நல்ல ஆய்வு.

    அம்மாவும் பெண்ணும் உரையாடல் ஆ அடப் பாவி என்று சொல்ல வைத்தது.

    இப்பல்லாம் கிரிக்கெட்டர்ஸ் ஆட் லியே நிறைய சம்பாதிச்சுருவாங்க போல. கவாஸ்கர் தினேஷ் ஷூட்டிங்க், அப்புறம் கபில் மற்றும் டெண்டுல்கர் பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் அவர் எனர்ஜி ந்னு சொல்லுவாங்களே அதுவும் நினைவுக்கு வந்தது ஸ்ரீராம்.

    எல்லாமே ரசித்தேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  29. ஷேவிங்க் க்ரீமுக்குக் கூட கபில் வருவாரோ??? பார்த்த நினைவு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. ரஹ்மானை இளையராஜாவுக்கு ஒரு இசைச் சக்காளத்தி என்கிறாரே அந்த விமர்சகர்!

    தினேஷ் சூட்டிங்கிற்கு கவாஸ்கர் மாடல். அந்த கம்பெனி காணாமற்போன மர்மம் துலங்கிவிட்டது!

    கரப்பான்பூச்சி இல்லாத நாடில்லை. சுத்தத்துக்குப் பேர்போன ஜப்பானையும் ஆட்டிப்படைக்கிறது. என்ன, நம்மவர்களைப்போல் அவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தண்டோராப் போட்டுச் சொல்வதில்லை. கமுக்கமாகத் தீர்க்கப்பார்ப்பார்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!