வெள்ளி, 4 டிசம்பர், 2020

வெள்ளி வீடியோ : ராதை போல் ஆனேன் கிருஷ்ண தேவா

 இந்தப் பழி வாங்கும் கதை எல்லாம் இருக்கிறதல்லவா?  அது எப்போது ஆரம்பித்தது என்று பார்த்தால் ராமாயணம், மகாபாரதம் போன்ற நம் புராணங்களிலும் இருந்திருக்கிறது.  ரோம, கிரேக்க புராணங்களிலும் இருந்திருக்கிறது.

நியாயத்துக்காக போராடுவது அதன் பேரில் பழி வாங்குவது என்கிற குணம் மனிதனின் ரத்தத்தில் ஊறி இருக்கிறது.  ஆனால் இது சட்டத்தை, தர்ம நியாயங்களை அலலது விதிமுறைகளுக்காகக் காத்திராமல் தானே சட்டத்தைக் கையிலெடுப்பது போன்ற பழிவாங்கல்கள் எப்போதுதான் தொடங்கின என்று பார்த்தல் கிமு 62 லேயே இதற்கான முன்னோடி கிடைக்கிறது.  

ஆனால் அதில் பழிவாங்கல் இருப்பதாகத் தெரியவில்லை.  நீரோ மன்னன் தனது மந்திரிகளின் ஒருவரான செனெகா என்பவர் தன்னைக் கொல்ல சதி செய்தார் என்று சொல்லி அவரை தன் வாழ்வைத் தானே முடித்துக் கொள்ளச் சொல்கிறார்.  கைநரம்புகளை அறுத்துக்கொண்டும் உயிர் போகாததால், விஷம் எடுத்துக் கொள்கிறார் செனெகா.  அப்படியும் விஷம் வேலை செய்யாததால் மெதுவாகவே இறந்திருக்கிறார்.


இந்த செனெகா எழுதிய  Thyestes என்கிற கதைதான் பழிவாங்கல் கதைகளின் ஆரம்பம்.    ஆனால் செனெகா மரணத்துக்கு யாரும் பழி வாங்கியதாய்த் தெரியவில்லை.  நடந்த அந்தக் கொலை முயற்சியில் இவர் சம்பந்தப்பட்டிருப்பதாய்க் குற்றம் சாட்டப்பட்டாலும் இவர் நிரபராதி என்பதற்கே சாட்சியங்கள் இருந்ததாம்.  அவர் மனைவி பவ்லினாவும் அவருடன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும், ஆனால் நீரோ தன் அவரைக் காப்பாற்றி விடுவதாகவும் சொல்கிறார்கள்.  அவர்,  அதாவது அந்த மனைவி  கூட பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை போலும்.

1582 லிருந்து 1592 வரை புகழ்பெற்ற, தாமஸ் கிட் எழுதிய,   The Spanish Tragedy எனும் டிராமா இந்தவகைப் பழிவாங்கல்களின் மட்டுமல்ல, கதைக்குள் கதைக்குள் கதை என்கிற வகையிலும் முன்னோடி.  


அதன்பின்னர் 1600 களில்தான் ஷேக்ஸ்பியர் தனது  Titus Andronicus (கொடூரமான கொலை, கொலையுண்டவரை வெட்டிக் கூறுபோட்டு சமைத்து அவர் உறவினருக்கே தருவது)  ஹாம்லெட் போன்ற பழிவாங்கல் கதைகளுடன் வந்திருக்கிறார்.

ஆமாம், ஏன் இந்த ஆராய்ச்சி?  இன்றைய பாடல் இடம்பெற்ற படத்தின் கதை எவ்வளவு பழசு என்று சொல்லத்தான்!  தமிழ் என்று இல்லை, எந்த மொழி திரைப்படங்களுக்கும் அழியாத, அள்ள அள்ள குறையாத கதைச் செல்வத்தை வாரி வழங்கும் பிளாட்!

பகடை பன்னிரண்டு. 

1982 நவம்பரில் வெளியான படம்.  அபர்ணா நாயுடு கதை.  தாமோதரன் இயக்கத்தில் சக்கரவர்த்தி இசையில் கமலஹாசன் ஸ்ரீப்ரியா நடிப்பில் உருவான படம்.


கமலஹாசன் ஆக்க்ஷன் செய்ய முயன்றிருக்கும் படம்.  உருப்படாத கதை, உருப்படாத படம்.  ஆனால் சக்கரவர்த்தி இசையில் எஸ் பி பி சுசீலா குரலில் ஒரு இனிமையான பாடல் ஒன்று உண்டு.  


காதலிக்க நேரமில்லை காஞ்சனா கமலின் அம்மாவாக நடித்திருக்கிறார்!


வர வேண்டும் மகராஜன்
தர வேண்டும் சுபராகம்
வர வேண்டும் மகராஜன்
தர வேண்டும் சுபராகம்

இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டி
இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டி
மகராணி நெஞ்சில் ஊஞ்சலாடு

வர வேண்டும் மகராணி
தர வேண்டும் சுகராகம்
வர வேண்டும் மகராணி
தர வேண்டும் சுகராகம்

இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு
இளங்காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டு
மகராஜன் நெஞ்சில் ஊஞ்சலாடு

கையோடு கை சேர்த்த
கல்யாணக் கோலம்
கண்ணாடி முன்னாலே
ஆனந்த ஜாலம்

கையோடு கை சேர்த்த
கல்யாணக்கோலம்
கண்ணாடி முன்னாலே
ஆனந்த ஜாலம்

இதழில் சொல்லும் மந்திரம் ஒன்று
இனிக்க வைத்தது பூவையை இன்று
கண்ணா எந்தன் கன்னங்கள் கண்டு
கதை படித்திடு காதலுக்கென்று

காணாதன கண்டேன்
இன்ப கண்ணா

வர வேண்டும் மகராணி
தர வேண்டும் சுகராகம்

பூப்போட்ட மஞ்சங்கள்
பல்லாண்டு பாட
பொழுதோடு சுகம் கண்டு
நெஞ்சங்கள் கூட

பூப்போட்ட மஞ்சங்கள்
பல்லாண்டு பாட
பொழுதோடு சுகம் கண்டு
நெஞ்சங்கள் கூட

இரவு என்பது இன்பங்கள் துள்ள
உறவு என்பது ஊடலுக்கல்ல
நிலவு என்பது சாட்சியம் சொல்ல
நெருக்கிக் கொள்ளுங்கள்
தென்றலை வெல்ல

ராதை போல் ஆனேன்
கிருஷ்ண தேவா


43 கருத்துகள்:

  1. புதைபொருள் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டீர்களே.

    பாடலை பிறகு கேட்கிறேன். படம் வந்த வேகமும் போன வேகமும் யாருக்கும் தெரிந்திருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...    இதைவிடப் பழைய பாடல்கள் எல்லாம் நினைவில் நிற்கிறதே...   இந்தப் பாடல் அடிக்கடி மனதில் ஒலிக்கும் பாடல்தான்.  லிஸ்ட்டில் இருக்கும் பாடல்.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும்.
    இறைவன் அருளில் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. எனக்குப் பழைய பாடல். எல்.ஆர் ஈஸ்வரியின்
    வரவேண்டும் ஒரு பொழுது........காதில் ஒலித்தது.

    பகடை பனிரண்டு படம் நினைவில் இருக்கிறது.
    இந்தப் பாடலும் கேட்க நன்றாக இருக்கிறது.

    எஸ்பிபி சாரின் குரலும் ,சுசீலாம்மாவின்
    குரலும் இழைந்து ஒலிக்கின்றன.

    பாடல் வரிகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதிலிருந்தே எஸ் பி பி குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இந்தப் பாடல்.

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் அமைதியும், முன்னேற்றமும் காணப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. இப்போதெல்லாம் யாரும் வருவதில்லை. அதோடு கமலா ஹரிஹரனைக் கடந்த நான்கு நாட்களாய்ப்பார்க்கவே இல்லை. நலமாய் இருக்கார் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கமலா அக்காவை எங்கே காணோம்? 

      நீக்கு
    2. தெரிந்திருந்தால் உங்களுக்குத் தான் தெரிந்திருக்கணும் ஶ்ரீராம், அவர் தொலைப்பெசி எண்ணோ, மெயில் ஐடியோ!

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      தாங்கள் இன்று காலை வந்ததும் என்னைப் பற்றி விசாரித்திருப்பது அறிந்து கொண்டேன். நான் நலமாக உள்ளேன். என் பேத்திக்கு சென்ற வியாழனன்று உடல் நிலை சரியில்லாமல் போனதும்,மனம் கலங்கி விட்டேன். ஜீரம், அதோடு காணாக்கடியாக உடல் முழுதும் தடிப்பும் கை, கால்கள் வீக்கமுமாக மிக சிரமப்பட்டு விட்டாள். தற்சமயம் பூரண குணமாகி. ஓடியாடி விளையாடுகிறாள். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். நான் இன்று காலை வந்து, ஒரு வாரமாக நான் எந்தப் பதிவுக்கும் வர முடியாமல் போனதற்கு காரணம் சொல்ல வேண்டுமென நினைத்தேன். ஆனால், வழக்கம் போல தாமதமாகி விட்டது. அதற்குள் இன்று பதிவுலகில்,என்னைக் காணாது தேடிய உங்களுக்கும் ஸ்ரீராம் சகோவிற்கும், பானுமதி, கீதாரெங்கன் சகோதரிகளின் அன்பிற்கும், பதிலாக நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை. உங்கள் அன்பான,அக்கறையான விசாரிப்புக்கள் கண்டு என் மனம் மிகவும் நன்றியுடன் மகிழ்வடைகிறது. அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  6. தாமதமாய் வெளி வருகின்றன பின்னூட்டங்கள். இந்தப் படமும் தெரியாது. பாடலும் கேட்டதில்லை. ஸ்ரீராம் ஆர்கைவில் (archives) தோண்டி எடுத்து வருகிறார் ஒவ்வொன்றையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..   புயல், மழை, கொரோனா,  ஆண்டிறுதி என்று அனைவருக்கும் ஏதேதோ வேலைகள்...  இந்தப் பாடல் அப்போது ரொம்ப ஃபேமஸாய் இருந்தா பாடல்களில் ஒன்றுதான்.  படம்தான் டப்பா.

      நீக்கு
  7. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
    என்றென்றும் நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
  8. இப்படியான பாடலும் படமும் நினைவில் இல்லை... நேரம் கிடைக்கும் போது பாடலைக் கேட்கிறேன்...

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். பாடல் கேட்ட ஞாபகம் இல்லை. பாடல் எப்படியோ, பழிவாங்கும் கதைகள் பற்றிய உங்கள் தகவல்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானு அக்கா... வாங்க.. பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  10. கமலா ஹரிஹரன் ஒரு வாரமாகவே வரவில்லையேஎன்று நானும் யோசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலைபேசி எண் வைத்திருப்போர் கேட்டுச் சொல்லலாமே...

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      நான் நலமுடன் உள்ளேன். என்னை காணவில்லையே என நீங்கள் அன்புடன் விசாரித்தமைக்கு மிகவும் நன்றி சகோதரி. இனி தவறாமல் வந்து விடுவேன். உங்கள் அன்புக்கு மீண்டும் என நன்றிகள்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  11. இது அடிக்கடி கேட்ட இனிமையான பாடல்.

    சத்யராஜ் இதில் நடித்துள்ளார் என்பதை குறிப்பிட மறந்து விட்டீர்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தத் தகவலை பெரிய விஷயமாக யாரும் நினைக்க மாட்டார்கள் என்றுதான் விட்டேன். நன்றி ஜி.

      நீக்கு
    2. அவர் நடித்ததை பெரிதாக சொல்லவில்லை அவர் எவ்வளவு பழைய ஆள் என்பதை குறிப்பிடுவதற்காக...

      நீக்கு
  12. பாடல் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். இனிய பாடல்.

    எஸ்ப்பி யின் அவருடைய கிமிக்ஸ் கொஞ்சம் குறைவுதான் இந்தப் பாட்டில். குரல் என்ன ஒரு இளமை ததும்பும் குரல்!

    இந்தப் படம் எல்லாம் கேட்டதில்லை. பாட்டு மட்டும் தான் கேட்டிருக்கிறேன். வேற என்ன பாடல் இப்படத்திலு இருக்குன்னு பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.். அதிகம் அலட்டலில்லாத இனிமையான பாடல்.

      நீக்கு
  13. பழிவாங்கல் கதைகள் வரலாறு என்று செம தகவல்கள். நான் முதல்ல சரிதான் வெள்ளிக்கிழமைதானே இன்று என்று உறுதி செய்து கொண்டேன்!! ஹா ஹாஅ ஹா ஹா அப்புறம் ஏதோ பழைய வரலாற்றுப் பாடல் போல என்று நினைச்சா கமல் படம். அதுவும் 1982 நான் கல்லூரி ஆனாலும் தெரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா..் ஹா..். வெறும் பாடலாய் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாய் முயற்சி..

      நீக்கு
  14. கமலாக்கா என்னாச்சு காணலியே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களிடம் அவர் 📞 எண் இருக்கா?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      வந்து விட்டேன் சகோதரி. விபரங்கள் பதிவில் கூறியுள்ளேன். உங்கள் அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  15. இப்படி ஒரு படமோ பாடலோ வந்ததாகவே தெரியவில்லை! பாடலை பிறகு தான்/மாலையில் தான் கேட்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படிச் சொல்லிப்புட்டீங்க...!

      :-)

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    மாலை வணக்கம் அனைவருக்கும். அனைவரும் நலமே வாழ இனிதான பிரார்த்தனைகள்.

    முதலில் இன்று என்னைத் தேடிய அன்பு சகோதரிகளுக்கும், உங்களுக்கும் என் அன்பான நன்றி. நான் நலமாக உள்ளேன்.என் பேத்திக்குத்தான் (மகள் வயிற்று மகள்) கடந்த வியாழனிலிருந்து உடல் நலம் சரியில்லை. அந்த கவலையில், நான்கு நாட்கள் மனம், உடல் தளர்ச்சியில், வேறு எதுவுமே தோன்றவில்லை. வீட்டு வேலை நேரம் போக, மிகுந்த நேரங்கள் அவளுடனே சரியாகப் போய் விட்டது. எந்தப் பதிவுகளுக்கும் உடனுக்குடன் படித்து கருத்துக்கள் இட வர இயலவில்லை. அனைவரும் என்னை அன்புடன் மன்னிக்கவும். இப்போது இரண்டு நாட்களாக அவளும் நலம் பெற்று விட்டாள். ஓடியாடி விளையாடுகிறாள். இனி வழக்கப்படி நான் தினமும் வந்து விடுவேன். என்னை காணாது இன்று அன்புடன் தேடிய சகோதரிகளுக்கு மீண்டும் என் பணிவான நன்றியும்.. அன்பும். உங்கள் அனைவரின் அன்பான நட்பை என்னால் மறக்கவே முடியாது. நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல் முன்பு அடிக்கடி கேட்டது போல் இருக்கிறது. இப்போதும் கேட்டு ரசித்தேன். நன்றாக உள்ளது. படம் கேள்விபட்டுள்ளேன். ஆனால் எதிலும் (தொலைக்காட்சி உட்பட) பார்த்ததில்லை. நீங்கள் முதலில் தந்திருக்கும் செய்திகளும் சுவாரஸ்யமாக உள்ளன. படித்து தெரிந்து கொண்டேன். "பகடை" என்றதும் சூழ்ச்சிகளும்,பழி வாங்குதல் கதை நினைவுகளும், நினைவுக்கு வந்து இன்று பகிர்ந்தது அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.. நீங்கள் நலமாயிருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  18. அடுத்து திண்டுக்கல் தனபாலன் கமெண்ட்ஸ் பார்த்தும் சில நாட்களாகின்றன. வேறு பதிவுகளிலும் பார்த்த ஞாபகம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரும் நலமுடன் இருப்பார். வேறு ஏதேனும் இக்கட்டான சமயங்கள் உருவாகி பதிவுகளுக்கு வர முடியாமல் போயிருக்கும். இந்த ஆண்டின் தொடர் வருத்தங்கள் நீங்கி, அனைவரும் நலமே வாழ பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. அப்படியே ஆகட்டும் கமலா அக்கா. பிரார்த்திப்போம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!