சனி, 10 ஏப்ரல், 2021

மீதமாகும் உணவு மின்சாரமாகிறது!

 

100 வயதுக்கு பின்னும் ஓட்டு போடும் ஆர்வம்! 

மேட்டூர் : மேட்டூர் தொகுதியில், 100 வயதைக் கடந்த முதியோர், ஓட்டு போட ஆர்வம் காட்டுகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியில், 80 வயதுக்கு மேற்பட்ட, 6,562 முதியோர், 2,291 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அதில், 1,072 பேர் தபால் ஓட்டுக்கு விருப்பம் தெரிவித்தனர். முதியோரில், 10க்கும் மேற்பட்டோர், 100 வயதை கடந்தவர்கள்; அவர்கள், ஓட்டு போடுவதில் ஆர்வம் காட்டினர்.

கொளத்துார், கத்திரிப்பட்டியைச் சேர்ந்தவர், 108 வயது காளியம்மாள். அவர், இந்த வயதிலும் எழுந்து நடக்கிறார். நேற்று முன்தினம், தேர்தல் பணி அலுவலர்கள், அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு, காளியம்மாள் தபால் ஓட்டை பதிவு செய்து, பெட்டியில் போட்டார்.

கோனுார் அடுத்த, பொறையூரைச் சேர்ந்த, 105 வயதுடையவர் மாரிமுத்து. அவரிடம், சமீபத்தில், தேர்தல் பணி அலுவலர்கள், தபால் ஓட்டு போட விருப்பம் உள்ளதா என கேட்டனர். அவர், அரை கி.மீ., துாரத்துக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிக்கு நடந்தே சென்று, ஓட்டு போடுவதாக கூறிவிட்டார்.

கொளத்துார், வெடிக்காரனுார், புதுப்பட்டியைச் சேர்ந்த, 98 வயதுடையவர் முத்து. நேற்று முன் தினம், அவர் உடல் நலக்குறைவால் இறந்தார். அதற்கு முதல் நாளில், தன் தபால் ஓட்டை பதிவு செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.ஜனநாயக கடமையை நிறைவேற்றி, தகுதியான தலைமையை தேர்வு செய்ய, 100 வயதை கடந்த முதியவர்கள் கூட ஆர்வம் காட்டுகின்றனர்.இதை உதாரணமாக வைத்து, இளம் வாக்காளர்கள் ஓட்டு போட்டு, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.

= = = =

கோவையில் ரூ.1-க்கு இட்லி வழங்கும் கமலாத்தாள் பாட்டியை பாராட்டி, மஹிந்திரா குழுமம் அவருக்கு வீடு கட்டி தருவதற்கான ஆவணங்களை வழங்கியது. 

கோவையில் 1 ரூபாய்க்கு ஒரு இட்லி என விற்பனை செய்து வருபவர் பாட்டி கமலாத்தாள். இவரது சேவையை அறிந்த மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இது மட்டுமல்லாமல் விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பையும்  வழங்கியிருநதார். 

இந்த நிலையில், தற்போது மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைப்ச்பேசஸ் நிறுவனம் கமலாத்தாளுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, அதைப் பதிவு செய்த ஆவணத்தை அவரிடம் வழங்கியுள்ளது. அந்த நிலத்தில் கமலாத்தாளுக்குக்கான வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமானத்தையும் அந்த நிறுவனம் தற்போது தொடங்கியிருக்கிறது. அதேபோல கோவையில் உள்ள பார்த் கேஸ் நிறுவனம் ஏற்கெனவே கமலாத்தாளுக்கு இலவசமாக எரிவாயு அடுப்பு வழங்கிய நிலையில், அதற்கான எரிவாயு உருளையும் இனிமேல் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.


இந்த செய்தியின் காணொளி : 


= = = = 


இவர்கள் எல்லாம் தெய்வத்தால் பூமிக்கு அனுப்பப் படுபவர்கள் என்று நினைக்கிறேன்.  





========================= 

மீதமாகும் உணவு மின்சாரமாகிறது!


ஆஸ்திரேலியாவிலுள்ள காக்பர்ன் நகரத்தின் உணவுக் கழிவுகளை, பசுமை ஆற்றலாக மாற்றுகிறது ஒரு தொழில்நுட்பம். இது மனித வயிறு இயங்கும்முறையை பின்பற்றி, இயங்கக்கூடியது என்பதுதான் ஆச்சரியம்.

காக்பர்னிலுள்ள உணவகங்கள் மற்றும் அங்காடிகளில் சேகரிக்கப்படும் உணவு மற்றும் காய்கறி கழிவுகளை செயற்கை செறிமான ஆலை வாங்கிக்கொள்கிறது.வந்து சேரும் கழிவுகளை கூழ் போல ஆக்கி, செறிமானத் தொட்டிகளில் போட்டால், அதிலுள்ள நுண்ணுயிரிகள் அவற்றை சிதைத்துவிடும்.

இதிலிருந்து, மீத்தேன் வாயு கிடைக்கும். மீத்தேன் மூலம் இயங்கும் இரு பெரிய, 'ஜெனரேட்டர்'கள், உற்பத்தி செய்யும் 2.4 'மெகா வாட்' மின்சாரம் ஆலைக்கும், அருகாமையிலுள்ள மூவாயிரம் வீடுகளுக்கும் கிடைக்கிறது.

இதுவரை இந்த பரிசோதனை ஆலை 43 டன் உணவுக் கழிவுகளை கையாண்டுள்ளது. மாறாக, இந்த கழிவுகள் குப்பை மேட்டில் தேங்கியிருந்தால், சுற்றுச்சூழலில் 81 ஆயிரம் கிலோ 'கார்பன்டையாக்சைடு' கலந்திருக்கும். தவிர செறிமான தொட்டிகளிலிருந்து கிடைக்கும் கூழ் போன்ற திரவத்தை, 'ரிச் க்ரோ' நிறுவனம் விவசாயிகளுக்கு உரமாக விற்கிறது. குப்பைகளை ஆற்றலாக மாற்றும் நுட்பங்களுக்கு தற்போது மவுசு கூடி வருகிறது.
= = = = 

கதிரொளியை 'கடத்த' முடியுமா? 



சூரிய ஒளியை 'கம்பி' வழியே சிறிது தொலைவு அனுப்ப முடியுமா? முடியும் என, சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

இதற்கென அவர்கள் உருவாக்கியுள்ள கருவியில், சூரிய ஒளியை உள்வாங்கிக் குவிக்க கண்ணாடி பந்து உள்ளது. இது குவிக்கும் சூரிய ஒளியை உள்வாங்கி அனுப்ப, கண்ணாடி இழைக் கம்பி அமைப்பு உள்ளது. சூரியனின் போக்கில் கருவியை திருப்ப இரு மோட்டார்களும், ஒரு ஜி.பி.எஸ், கடிகாரம் கொண்ட ஒரு சில்லு ஆகியவையும் கருவியில் உள்ளன.

கண்ணாடி இழைக் கம்பிகள் ஒளியை கடத்தக்கூடியவை. எனவே, சூரிய ஒளியையும் அவை கடத்திச் செல்கின்றன. கும்மிருட்டு அறையில், இக் கருவி தரும் வெளிச்சம், ஒரு எல்.இ.டி., விளக்கைவிட பிரகாசமானதாக இருந்தது என்கிறார், இதன் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான, டாக்டர் சாரு கோயல். சூரிய ஒளியை கம்பி மூலம் கடத்தும் இந்தக் கருவி, நிலத்திற்கு அடியே உள்ள அறைகளுக்கு பகல் நேரத்தில் , ஒளியை அறுவடை செய்து தர பயன்படும்.

= = = = 
கட்டடமாகும் கார் டயர்கள். 

பழைய டயர்களை என்ன செய்வது? போக்குவரத்து துறைக்கு பயன்பட்ட பின், அவை, கட்டுமானத் துறைக்கும் பயன்படும் காலம் வந்துவிட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பழைய டயர்களை மறு சுழற்சி செய்து, 'கிராபீன்' எனப்படும் மிக வலுவான பொருளாக மாற்றியுள்ளனர்.

டயரிலிருந்து விளைந்த கிராபீனை கட்டிடங்களுக்கான கான்கிரீட் கலவையில் சேர்க்கலாம். அப்படி சேர்த்தால் அது சாதாரண கட்டுமான கலவையைவிட, கூடுதல் பலமுடன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த தொழில்நுட்பம் பரவினால், சுற்றுச்சூழலுக்கு இரட்டை நன்மைகள் என ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, குப்பை மேடுகளில் குவிந்து, பல ஆண்டுகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவை ரப்பர் டயர்கள், அவை இத்தொழில் நுட்பத்தால் கட்டடங்கள் கட்ட பயன்படும். அடுத்து, 9 சதவீத உலக கரியமில உமிழ்விற்கு காரணமாக இருப்பது சிமென்ட் கான்கிரீட்தான்.இதன் பயன்பாடு, டயரிலிருந்து தயாராகும் கிராபீனால் வெகுவாக குறையும். டயர்கள் கட்டடங்களாக மாறினால் நல்லதுதானே?

= = = = 

32 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்னாளும் ஆரோக்கியத்துடன்
    இருக்க இறைவன் அருளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. நம்ம ஊர்ல மதுரைல பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு (டயரும் உண்டு) அதை தார் ரோடு போட உபயோகித்து போட்டுக் காட்டியிருக்கிறார். அதில் காசு அடிக்க முடியாது என்பதால் அரசு அதனை ஆதரிக்கவில்லை போலிருக்கு. அல்லது, யார் செய்தது என்று சாதி பார்த்திருப்பார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை ஐஐடியில் பல வருடங்களுக்கு செய்யப் பட்ட ஆய்வு என்று நினைவு.

      கூடுதல் தகவல்களுக்கு:

      https://plasticpollutionfreetn.home.blog/



      நீக்கு
    2. ** பல வருடங்களுக்கு முன்

      நீக்கு
  3. ஓட்டு போட்டு விட்டு உயிர் துறந்த பெரியவருக்கு வந்தனங்கள்.
    அனைத்து முதியோரும் இத்தனை நலம்,
    அதுவும் எதையும் எதிர்பாராமல் செய்யும் செய்தி மிக மிக நெகிழ்ச்சி.
    நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  4. பசித்தோருக்கு உணவு கொடுத்து,
    மரித்தோரை அடக்கம் செய்யும் ரோஜா
    அபூர்வப்பிறவி.
    ஆண்டவன் வந்து ஒருவருக்கு ஈமச் சடங்குகள் செய்த
    கதை ,கும்பகோணத்தில் சொல்வார்கள்.
    இந்த இளம் பெண் இத்தனை
    சிரத்தையோடு செய்வதைப் பார்க்க
    மிக மிக அதிசயமாக இருக்கிறது.
    நன்றி, நெஞ்சுரம் மிகத் தேவை. என்றும் வளத்தோடு இருக்க இறைவன் அருளட்டும்

    பதிலளிநீக்கு
  5. ஒரு ரூபாய்க்கு இட்லி பிரமிப்பான மாமனிதர்கள் இவரைப் போன்றவர்களுக்கு பல நிறுவனங்கள் உதவ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம்.
    100 வயதிலும் ஓட்டு போட்ட முதியவர்கள், 36 வயதில் ஆயிரக்கணக்கில் ஆதரவற்று இறந்தவரகளை அடக்கம் செய்யும் ரோஜா! வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு ரூபாய்க்கு இட்லி தரும் கமலாத்தாளை போற்றுவதா? அவருக்கு கடை நடத்த இடம் வழங்கியிருக்கும் மஹேந்திரா குழுமத்தையும்,இலவசமாக எரிவாயு சிலிண்டர் வழங்கும் பாரத் கேஸ் நிறுவனத்தையும் பாராட்டுவதா?

    பதிலளிநீக்கு
  8. இந்த முறை மனநலம் பாதிக்கப்பட்டவர்களே வாக்கு செலுத்திய போது, சில இடங்களில் வாக்கு சதவீதம் குறைவு... முக்கியமாக சென்னை... (!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் உள்ளவர்கள் பலரும் கிட்டத்தட்ட ஒரு floating population என்று வைத்துக்கொள்ளலாம். பலரும் இருப்பிடம் மாறி இருப்பார்கள் - அருகில் வாக்கு சாவடி இல்லாததால் வாக்கு அளித்திருக்கமாட்டார்கள் - இல்லையேல் இரட்டை voter id - சென்னையில் ஒன்று - ஊரில் ஒன்று என்று வைத்திருப்பார்கள். ஊரில் வோட் போட்டிருப்பார்கள்.

      நீக்கு
  9. வாக்கு செலுத்துவதில் உள்ள ஆர்வம் நன்று. பலரும் வாக்களிப்பதில்லை என்பது வேதனை.

    இன்றைக்குப் பகிர்ந்த செய்திகள் அனைத்தும் நன்று. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்துமே அருமை. அனைத்தும் ரசிக்கும்படி இருந்தன. அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு உங்களுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. அனைத்தும் அருமையான செய்திகள். முதிய வயதிலும் ஓட்டு அளித்தவர்கள் கோவை முதியவர் இவர்களை வணங்க வேண்டும். கோவை கமலாத்தாள் அவர்களுக்கு
    வீடு கட்டி கொடுப்பது மகிழ்ச்சி, அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நிறைய இவர்களைப்பற்றி படித்து விட்டோம் இட்லி தினத்தில் இவர்களைப் பற்றி செய்தி பகிர்வு நிறைய வந்தன.

    அன்பு மணம் வீசும் ரோஜா வாழ்க வளமுடன்.


    //இது மனித வயிறு இயங்கும்முறையை பின்பற்றி, இயங்கக்கூடியது என்பதுதான் ஆச்சரியம்.//
    ஆச்சிரியமான செய்திதான். நல்ல விஷயம். வீணாபோன கழிவுகள் மின்சாரமாக 3000 வீட்டுக்கு பயன் படுகிறதே

    //டாக்டர் சாரு கோயல். சூரிய ஒளியை கம்பி மூலம் கடத்தும் இந்தக் கருவி, நிலத்திற்கு அடியே உள்ள அறைகளுக்கு பகல் நேரத்தில் , ஒளியை அறுவடை செய்து தர பயன்படும்.//
    டாகடர் சாரு கோயலுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. பாராட்டத்தக்கோர். வியக்கத்தக்க செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. எல்லாமே அருமையான செய்திகள். ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் பாட்டியைப் பற்றி அடிக்கடி படிக்கிறேன். அவருக்கு உதவிசெய்யும் மஹிந்திரா கம்பெனிக்கும் பாரத் கேஸ் கம்பெனிக்கும் வாழ்த்துகள். டயர்கள் மறு சுழற்சியில் பயன்படுத்தப்படுவதும் மகிழ்ச்சியே. ஓட்டளித்த பெரியோர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். ஆதரவற்றோரை அடக்கம் செய்யப் பாடுபடும் ஜோதிக்கும், துணை நிற்கும் கணவருக்கும் மிக்க நன்றியும், வாழ்த்துகளும். குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்துப் படித்திருக்கோம்/கேட்டிருக்கோம். இங்கே உணவுக் கழிவு. எதுவும் வீணாகாமல் பயனாவது நல்லதே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!