திங்கள், 10 மே, 2021

'திங்க'க்கிழமை : கத்தரிக்காய் மிளகுஷ்யம்/மிளகூட்டல்/மிளகூட்டான் - கீதா ரெங்கன் ரெஸிப்பி

 

 

கத்தரிக்காய் மிளகுஷ்யம்/மிளகூட்டல்/மிளகூட்டான்


எல்லோருக்கும் வணக்கம், வந்தனம், ஸுஸ்வாகதம், நமஸ்கார்! 

இது எங்கள் வீட்டில் செய்யப்படும் ஒரு செய்முறை. இது பொதுவாகப் பத்தியச் சமையல்தான் என்றாலும் என் பாட்டி விருந்தினர் வரும் போது பெட்டியில் கொடுத்திருக்கும் செய்முறையில் முதலில் கொடுத்திருப்பதுபடிச் செய்வார். பத்திய முறையும் பெட்டியில் கடைசியில் கொடுத்திருக்கிறேன்.  

கத்தரிக்காய்க்கு மட்டுமே புளி சேர்த்துச் செய்வாங்க. மற்ற காய்களைச் செய்யும் போது புளி சேர்க்காமல் செய்வாங்க. பத்தியம் என்றால் கத்தரிக்காய்க்கும் புளி சேர்க்காமல் செய்வாங்க

எங்கள் வீட்டில் புடலங்காயுடன் உருளைக் கிழங்கு சேர்த்தும் இந்தச் செய்முறையில் செய்வாங்க. பத்தியம் என்றால் உருளை இல்லாமல்.

சௌசௌ, புடலை, அவரை எதுவாக இருந்தாலும் பத்தியம் என்றால் தேங்காய் சேர்க்காமல்தான். 

துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு சேர்த்துச் செய்தாலும், பத்தியம் என்றால் கண்டிப்பாகத் துவரம்பருப்பு சேர்ப்பதில்லை. பாசிப்பருப்புதான் சேர்ப்பது.

இப்படி கொலாஜ் செய்வது இப்போது மகனுக்கும் இதையே அனுப்ப எளிதாக இருக்கிறது. அவன் செய்முறைகள் எல்லாம் தொகுத்துத் தரச் சொல்லிக் கொண்டே இருப்பதால், இதுவரை வெறும் குறிப்புகள் மட்டுமே தொகுத்து வைத்துள்ளேன்.  இங்கு இப்படிப் போடத் தொடங்கியதும் தான் எனக்கு ஐடியா வந்தது படங்களோடு அனுப்பினால் அவனுக்கு இன்னும் வசதியாயிற்றே என்று. 

சரி செய்முறை இதோ. ரொம்ப சிம்பிள் தான்..



சரி அடுத்து வரும் சில செய்முறைகள் பல வருடங்களுக்கு முன் கற்றவை அதை ஒவ்வொரு பதிவிலும் சொல்கிறேன். படங்கள் இருக்கின்றன. எழுத வேண்டுமே!

எபி ஆசிரியர்கள் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி கூறி அடுத்த செய்முறையுடன் எபி கிச்சனில் சந்திக்கிறோம்! அதுவரை பை ஃப்ரென்ட்ஸ்...

71 கருத்துகள்:

  1. அனைவருக்குமினிய திங்கள் காலை வணக்கம்.

    தொற்றே இல்லாத வாழ்வும், முகக் கவசம் அணியும்
    மக்களும் இருக்கும் ஊரும் இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா..  வணக்கம்...  தொற்று சென்று விட்டது என்று மக்கள் அனைவரும் இந்த வருடம் ஆரம்பம் முதலே பாதுகாப்பு நடவடிக்கையில் அலட்சியம் காட்டியது இப்போதைய பெரும் பாதிப்புக்கு முக்கிய காரணம்.  இந்நிலை சீக்கிரம் மாற அனைவரும் இணைந்து இறைவனைப் பிரார்த்திப்போம்.  பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்வோம்.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் அதே மக்களின் அலட்சியப் போக்குதான்...

      இப்ப மட்டும் என்னவாம் ஸ்ரீராம்...கூட்டம் நேற்று ஞாயிறு ஸோ கறிவெட்டும் கடையில் மக்கள் முண்டியடித்து வாங்குவதற்கு நின்றார்கள். அது போல கள்ளுக்கடையில் சாதாரணமும் சரி உயர்தரமும் சரி..

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் நானும் உங்களைப் போல மாஸ்க் அணிந்து ஃபேஸ் ஷீல்ட் போட்டுக் கொண்டுதான் பக்கத்துக் கடைக்கே போகிறேன்!!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. எல்லாவற்றையும் கோட்டை விட்டுவிட்டுச்
      சாதாரணமாக அரசின் மீடு பழி சொல்கிறார்கள்.
      தொற்று இல்லை என்று சாதிப்பவர்கள் வேறு.
      மிக வருத்தமான சூழ்னிலை.
      நாம் சொன்னால் யாருக்கும் பிடிப்பதும் இல்லை.

      நீக்கு
    5. //கள்ளுக்கடையில் சாதாரண உயர்தர//- குடிகாரப் பயலுவளுக்குள்ள என்ன தராதரம்?

      நீக்கு
    6. //மாஸ்க். Face shield/ - இப்போல்லாம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஏதானும் விட்டுவிடலாம்னு நினைக்கிறேன். லிஃப்ட் விட்டேன். இட்லி மி பொடி விட்டுட்டேன். ஐஸ்க்ரீம் விட்டுட்டேன்.

      மாஸ்க், face shield போட்டுண்டு படில ஏறினா, நாலாம் மாடிக்கு மாஸ்க் விலக்கி மூச்சு இழுக்க வேண்டியதாருக்கு.

      நீக்கு
    7. நெல்லை நானும் மிளகாய்ப்பொடி விட்டுவிட்டேன். நானும் லிஃப்ட் பயன்படுத்த மாட்டேன்

      படில ஏறும் போது யாரும் இல்லை என்றால் மாஸ்க்கை தழைத்துக் கொள்ளலாமே. மருத்துவர்கள் அப்படித்தானே சொல்றாங்க...வாக்கிங்க் போகும் போதும் கூட யாரும் இல்லாத இடம் என்றால் மாஸ்கை தழைத்துக்கொள்ளணும்...ஒரே அடியாக மாஸ்கைப் போட்டுக்கொண்டிருப்பது நல்லதில்லைன்னு.

      கீதா

      நீக்கு
    8. அதிகாலை நல்ல காற்று வருகிறது. 200 அடிக்கு முன்னால் எவனோ மாஸ்க் அணியாமல் தும்மியிருந்தால் அந்தக் கிருமி நம்மைத் தாக்காதா (நாம் அறியாமலேயே). இந்த பயமெல்லாம் இருக்கு. அதிலும் மாடிப்படிகள் ...closed area என்றெல்லாம் நினைக்கத்தூண்டுகிறது.

      கீர - நான் தயிரை விட்டுவிட்டேன். அடுத்தது ஜீனி உபயோகிக்கும் பாயச வகைகளை விடலாம் என்று யோசிக்கிறேன்.

      நீக்கு
    9. தோசை மிளகாய்ப் பொடியெல்லாம் நான் எப்போவோ நிறுத்திட்டேன். என்றாலும் சில சமயங்கள் வேறே எதுவும் இல்லைனா தவிர்க்க முடியறதில்லை.

      நீக்கு
  2. வெகு நாட்களாக இந்த மிளகூட்டான், மிளகுஷ்யம்
    வேறு வேறு என்று நினைத்திருந்தேன்:)
    நம்ம பாலக்காட்டு லக்ஷ்மி தினசரி இதைத்தான் வேறு
    காய்களில் நிறையத் தேங்காய் அரைத்து விட்டு

    அப்பளம் பொரித்து விடுவாள். எல்லாத்தான் களையும் தொட்டுக் கொள்ளவும் அந்த க்ரேவியைப்
    பிசைந்து கொள்ளவும் செய்வார்கள். சமயத்தில் சப்பாத்தியும் செய்து விடுவாள்.
    இங்கே நம் சின்ன கீதா சொல்லி இருக்கும் குறிப்பு நம் ஊர்
    மணத்துடன் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா தேங்காய் அரைத்துவிட்டுச் செய்யும் போது மிளகூட்டான்/மிளகூட்டல் என்று நம் வீட்டில் சொல்வாங்க.

      தேங்காய் இல்லாமல் பத்தியமாய் செய்வதை மிளகுஷ்யம் என்று சொல்வாங்க வித்தியாசப்படுத்துவதற்கு. இங்கு இரண்டும் கொடுத்திருப்பதால் எல்லாப் பெயர்களையும் சொல்லியிருக்கிறேன்...

      பதிவில் சொல்ல விட்டுவிட்டேனோ?

      மிக்க ந்னறி அம்மா

      கீதா

      நீக்கு
    2. மாலை வணக்கம் அம்மா

      கீதா

      நீக்கு
    3. அந்தப் பத்திய நினைவோடுதான் உங்கள் பதிவைப் படித்தேன் அன்பு கீதாமா.

      அம்மா பாட்டி இந்தக் காலத்தில்
      நம்மைக் கவனித்து செய்த உதவியை மறக்க முடியுமா.
      நன்றி மா.

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. அம்மா வெரி வெரி வெரி சாரி....வி ந்னு வந்துருச்சு வெரி வெரி ஸாரி....மன்னிச்சுக்கோங்கம்மா...நான் கவனிக்கவெ இல்லை...டக் டக்குனு அடிச்சுட்டு போய்ட்டே இருக்கெனா....

      ஸாரி ஸாரி அகேய்ன் அம்மா

      கீதா

      நீக்கு
    6. ஆமாம் அம்மா பத்தியம் என்றால் நம் அம்மா பாட்டி நினைவுக்கு வராமல் இருக்கவே மாட்டாங்களெ..
      மறக்கவே முடியாது அவங்க செய்ததெல்லாம்

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
    7. ஸ்ரீராம் மிக்க மிக்க நன்றி சுட்டிக் காட்டியமைக்கு...இல்லேனா கவனிச்சிருக்கவே மாட்டேன்...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    8. அடடா. நான் பார்க்காமல் போயிட்டேனே:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))🤣😂😂😂0

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    தலைப்பைப் படித்ததும் இது கீதா ரங்கன்(க்கா) ரெசிப்பி என்று புரிந்துவிட்டது.

    கொரோனா காலத்துக்கேற்ற நல்ல ரெசிப்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை..  வாங்க...   தலைப்பிலேயே தனித்தன்மை தெரிகிறதா?!

      நீக்கு
    2. ஸ்ரீராம் ஹிஹிஹிஹி...அம்புட்டு பெரிய ஆளா நானு!!??

      நெல்லை மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  4. நான் செய்கின்ற மிளகூட்டில், நீங்க தனியா தாளிக்கவும் கொஞ்சம் கரகர மிளகையும் சேர்க்கச் சொல்லியிருக்கீங்க. உடம்புக்கு நல்லது. ஏற்கனவே பசங்க சாப்பிடணுமே என்று மிளகூட்டிலேயே மிளகைக் குறைவாகச் சேர்க்கிறேன்.

    புடலை அவரை காலம்தான். செய்துபார்த்துவிடுகிறேன்.

    இங்க கிடைக்கும் நீளமான பச்சை கத்தரி இதுக்குச் சரிப்படுமா?

    நல்லா கொலாஜ் செய்திருக்கீங்க. பாராட்டுகள்.

    திரௌபதி வஸ்திராபரணம் மாதிரி நீல டிசைன்லாம் படிக்க கஷ்டமா இருக்காதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீளப் பச்சைக் கத்தரிக்காயிலும் செய்திருக்கிறேன் இங்கு. வித்தியாசம் ஒன்றுமில்லை.

      மிக்க நன்றி நெல்லை

      //திரௌபதி வஸ்திராபரணம் மாதிரி நீல டிசைன்லாம் படிக்க கஷ்டமா இருக்காதோ?//

      ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...சிரித்துவிட்டேன் முதல் பாதி வாசித்து!!!

      ஓ வாசிக்க கஷ்டமா இருக்கிறதோ? இனி பார்த்துக் கொள்கிறேன் நெல்லை...வாசிக்கும்படியான கலர். இதற்கு அப்புறம் அனுப்பியவை வேறு கலர் என்றுதான் நினைக்கிறேன்..

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  5. பத்திய சமையல் சொல்லி இருப்பது அழகு. முழுவதும்
    நெய்யில் செய்து விட்டால்
    சொர்க்கம் தான்.

    பயத்தம்பருப்பு வாயுத் தொல்லை கொடுக்காது.
    மிளகின் காரம் நன்மை செய்யும்.

    அம்மா செய்யும் கூட்டில் மிளகு+உளுத்தம்பருப்பு+பெருங்காயம்+தேங்காய்
    வறுத்துக் கொண்டு அரைத்து
    வெந்த ப.பருப்பு+ காய்கறியுடன் சேர்த்து விடுவார்.

    உங்கள் முறை சற்றே வித்யாசமாக இருக்கிறது.
    இன்னும் வாசனை கூடும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா முழுவதும் நெய்யில் தான் செஞ்சாங்க என் அம்மாவும் பாட்டியும் என் பிரசவத்தின் போது.

      பலருக்கும் அது ஒத்துவராததால் தேங்காய் எண்ணையும் சொன்னேன்..

      //அம்மா செய்யும் கூட்டில் மிளகு+உளுத்தம்பருப்பு+பெருங்காயம்+தேங்காய்
      வறுத்துக் கொண்டு அரைத்து
      வெந்த ப.பருப்பு+ காய்கறியுடன் சேர்த்து விடுவார்.//

      ஆமாம் இதுவும் மிளகுக் கூட்டு என்று செய்வதுண்டு. முன்பே ஒரு மிளகுஷ்யம் போட்டப்ப சொல்லியிருந்த நினைவு

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
    2. இதில் வேரியேஷன்ஸ் எல்லாம் அந்தப் பதிவில் சொல்லியிருந்தேன்

      நம் வீட்டில் மிளகு + மிளகாய் வற்றல் + உளுத்தம்பருப்பு வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்தும் கூட்டு செய்வதுண்டு

      கீதா

      நீக்கு
    3. நான் டைஃபாயிடில் படுத்து எழுந்தப்போ இந்த மாதிரிப் பத்திய சமையல் தான். சுமார் 3 மாத காலங்கள் சாப்பிட்டிருக்கேன். பிரசவம் ஆனதும் போட்ட பத்தியத்தில் நெய் அதிகம். இந்தச் சமயம் நெய்யெல்லாம் சும்ம்ம்மாக் கண்ணிலே காட்டுவாங்க! இதான் நெய்! பார்த்துக்கோ! என!

      நீக்கு
    4. ஆமாம் கீதாக்கா எனக்கும் பிரசவத்திற்குப் பின்னும், ஆமா டைஃபாய்ட் பிறகு பத்தியம் நோ நெய், எண்ணை எதுவும் இல்லாமல்தானே தருவாங்க.

      பிரசவத்திற்குப் பிறகு நெய் சேர்த்துதான்...எல்லாமே...இல்லேனா நல்லெண்ணை.

      கீதா

      நீக்கு
  6. அருமையாகப் புகைப்படங்களுடன் , கொலாஜ் முறையில் பதிவு இருப்பது
    மிகச் சிறப்பு.
    எனக்கு இது போல செய்வதற்கு
    இன்னும் முயற்சி செய்ய வேண்டும். அன்பு வாழ்த்துகள்

    கீதாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா மிக்க நன்றி

      அம்மா இது கொஞ்சம் வேலை வாங்கும் வேலைம்மா...அதாவது கொலாஜ் செய்வது கூட பெரிய விஷயம் இல்லை அந்தப் பெட்டிக்குள் எழுதுவது. எழுதும் போதே ஏதேனும் கீ ப்ரெஸ் ஆகிவிட்டால் முழுவதும் அழிந்துவிடும். மீண்டும் தொடங்க வேண்டும். நேரம் வாங்கும். ஆனால் இங்கு இப்படி அனுப்புவது இந்த டெக்னிக் தெரிந்தனும் மகனுக்கும் இது படங்களோடு அனுப்பினால் வ்கசதியாயிற்றே என்று இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்..

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
    2. கத்துக்கணும். கொலாஜ் செய்யக் கத்துக்கணும். பார்ப்போம்.

      நீக்கு
    3. வல்லிம்மா, கீதாக்கா

      இதுதான் நான் பயன்படுத்தும் தளம் https://www.photocollage.com/

      இதில் நான் ஆட்டோ கொலாஜ் செய்வதில்லை. படங்களை அப்லோட் செய்துவிட்டு எத்தனை படங்கள் உள்ளதோ அதற்கு ஏற்றாற்போல் சிறிதாக்கிக் கொண்டு அரேஞ்ச் செய்வது வழக்கம். அட்டோ கொலாஜ் அது தன் இஷ்டத்திற்கு வரிசையாக இல்லாமல் கொலாஜ் செய்யும்... எனக்கு அவ்வளவாக ஒத்துவரவில்லை.

      அத்ன பின் அதில் T எனும் சிம்பல் இருக்கும் அதைக் க்ளிக்செய்து அந்தப் பெட்டியை எங்கு நாம் டைப் செய்ய வேண்டுமோ அங்கு கொண்டு நிறுத்திவிட்டு டைப் செய்வது.

      அதனுள் சென்று ஒவ்வொன்றாகச் செக் செய்து செய்து பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்

      கீதா

      நீக்கு
    4. கீதா ரங்கன் - நீங்க MS WORD உபயோகியுங்கள். பிறகு ஒவ்வொரு செய்முறையையும் PDF ஆக மாற்றுங்கள். அல்லது, செய்முறைகளை word doc. ஆக எழுதிக்கொள்ளுங்கள். எப்போ எப்போ செய்கிறீர்களோ அப்போ அப்போ படங்களை அதன் கீழே சேர்த்துவிடுங்கள்.

      சமையலில் கொஞ்சம் விவரம் வந்துவிட்டால், பல படங்களுக்கு வேலையே இருக்காது. அப்புறம் youtubeல் பார்க்கத் தெரிந்துவிட்டால், திருவமாறுவது, அரைப்பது போன்ற பலவற்றிர்க்கு படங்களே தேவையில்லை. முக்கியமானது நம் செய்முறை. அதனால் நேரம் கடத்தாமல் கட கடவென உங்கள் செய்முறைகளை ஆவணப்படுத்துங்கள்.

      நீக்கு
  7. எல்லாருக்கும் காலை வணக்கம்

    ஓஹோ இன்று இந்த ரெசிப்பியா....

    மிக்க நன்றி எபிக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா வணக்கம்.  சமையல் பதிவுக்கு இம்முறை நீங்கள் "சுடச்சுட" பதிலளிப்பீர்கள்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஆமாம் இன்று இப்போது கணினி ஃப்ரீ. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் கணினி என்கேஜ்ட்!!!

      இப்ப கொஞ்சம் காலையில் வர முடியுது

      கீதா

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். 

    பதிலளிநீக்கு
  9. கீதா கொலாஜ் படங்களோடு விளக்கங்கள் பிரமாதம்! ஆனால் ஒரு சின்ன விஷயம் மிளகுஷ்யம் வேறு, மிளகூட்டல் வேறு. மிகுஷ்யத்திற்கு தேங்காய், பருப்பு கூடவே கூடாது. வெங்கடேஷ் பட் வார்த்தைகளில் சொன்னால் adding thengai and dhal to miagushyam is a crime!நீங்கள், மிளகுஷ்யத்திற்கு அரைத்து விடும்பொழுது தேங்காய் சேர்த்து, பருப்பும் போட்டு விட்டால் அதுவே மிளகூட்டல் ஆகி விடும் என்று சொல்லியிருக்கலாம். இரண்டிற்கும் ஒரே பெயர் கொடுத்தது.. சரியில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா மிளகுஷ்யமும் கொடுத்திருக்கிறேனே அதெ பெட்டியில் கீழே

      பத்தியம் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேனே....இரண்டு முறையும் கொடுத்திருப்பதால்தான் இரு பெயர்களும் கொடுத்தேன்....விருந்தினர் வரும் போது செய்வது மற்றபடி செய்வது என்று

      அக்கா கொஞ்சம் கீழே பாருங்க அப்புறம் வல்லிம்மாக்கும் கொடுத்திருக்கும் கருத்து..

      முன்பே மிளகுஷ்யம் தேங்காய் இல்லாமல் ஒன்றும் கொடுதிருக்கிறேனே எபி திங்க பதிவில் கூடவே ஒவ்வொரு பெயரும் அதற்கு வரும் காம்பினேஷன் என்று கொடுத்திருக்கிறேன் ஒரு திங்க பதிவில்

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. என் கர்ப காலங்களில் எது சாப்பிட்டாலும் வெளியே வந்து விடும். எதுவுமே சாப்பிட பிடிக்காது. அப்போது கை கொடுத்தது இந்த (தேங்காய் பருப்பு சேர்க்காத) மிளகுஷ்யம்தான். இப்போது கூட காய்ச்சல் வந்து, வாய் கசந்து, எதுவும் சாப்பிட பிடிக்கவில்லையென்றால் மிளகுஷ்யம்தான் அமிர்த்தமாக  இருக்கும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பானுக்கா அமிர்தமாக இருக்கும்

      மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
  12. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

    இன்றைய உங்களின் திங்கள் பதிவு நன்றாக உள்ளது. செய்முறை விளக்கம் சின்னதாக வார்த்தைச் சுருக்கங்களுடன், கொலாஜ் தயாரிப்பின் படங்களுடன் பதிவு அருமையாக உள்ளது. (நானெல்லாம் வளவளா..படிப்பவர்களுக்கு போரடித்துப் போகுமோ என்ற பயம் வரும். என் கருத்துரைகளும் அப்படித்தான் என நினைக்கும் போது சில சமயம் எனக்குள்ளே வருத்தம் வரும். அதானால்தான் அனைவரும் எனக்கு ஒரே வார்த்தையில் மறு பதிலளிக்கிறார்களோ என எண்ணும் போது அது ஊர்ஜிதமாகும். ஹா.ஹா. ஆனாலும் மாற்றிக் கொள்ள இயலவில்லை:)

    ஆமாம்..பத்தியத்திற்கு மிளகும், பா.பருப்புந்தான். அந்தக்காலத்தில் குழந்தை பிறந்து இருபது நாட்கள் வரை இதே சமையல்தான். மிளகு பா.பருப்பு சேரச்சேர வயிற்றுப்புண்ணுக்கு நல்லதென்று என்னையும் பாட்டி, அம்மா இப்படித்தான் கவனித்துக் கொண்டார்கள். அதன்பின்தான் தேங்காய், புளி, துவரம்பருப்பு சேர்த்த உணவுகள் தலை காட்டும்.

    நீங்கள் அழகாக இரு முறைகளையும் பிரித்து படங்களுடன் இணைத்து சொல்லியுள்ளீர்கள். அந்த வானவில் கலர் படங்களுக்கு உறுதுணையாக,எடுப்பாக உள்ளது. கணினியில் நீங்கள் தொழிற்நுட்பம் அமர்க்களமாக அறிந்து வைத்திருப்பதற்கு வாழ்த்துகள்.

    கத்திரியுடன் தட்டை அவரை (இது இங்கே கிடைக்கிறதோ ? இங்கு எங்கள் பகுதியில் என் கண்ணில் படமாட்டேன் என்கிறது.) புடலை, முருங்கைகாய் சேர்த்து அம்மா வீட்டில் பா. பருப்புடன் இந்த மிளகூட்டல் செய்வார்கள். நானும் இதே முறையில்தான் இப்போதும் செய்கிறேன். மிளகை இறுதியில் வறுத்துப் போட்டதில்லை.( குழந்தைகள் அதிக காரம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வதென்று பயந்தான். ) இனி இந்த முறையிலும் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக்காலத்தில் குழந்தை பிறந்து இருபது நாட்கள் வரை இதே சமையல்தான். மிளகு பா.பருப்பு சேரச்சேர வயிற்றுப்புண்ணுக்கு நல்லதென்று என்னையும் பாட்டி, அம்மா இப்படித்தான் கவனித்துக் கொண்டார்கள். //

      அதே அதே கமலாக்கா. எனக்கு ஒரு மாசம் வரை பத்தியம் தான்.

      கத்திரியுடன் தட்டை அவரை (இது இங்கே கிடைக்கிறதோ ? இங்கு எங்கள் பகுதியில் என் கண்ணில் படமாட்டேன் என்கிறது.) புடலை, முருங்கைகாய் சேர்த்து அம்மா வீட்டில் பா. பருப்புடன் இந்த மிளகூட்டல் செய்வார்கள்.//

      ஓ அப்படியா. தட்டை அவரை என்று எதைச் சொல்றீங்க கமலாக்கா? இங்கு சின்ன அவரை, கொஞ்சம் பெரியதான அவரை என்று இரண்டும் கிடைக்கிறது. இன்னும் பெரிய அவரை கூட சந்தையில் கிடைக்கும். இப்போது மீண்டும் லாக்டவுன்.. சந்தை இல்லை.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. எங்க அப்பா பிரசவத்துக்கு முன்னாடி இருந்தே பத்தியம் சாப்பிடுனு படுத்தி எடுப்பார். எனக்கா தண்ணீர் குடித்தாலே வெளியே வரும். அதுவும் ரத்தமும் சேர்ந்து வரும்! இந்த அழகிலே முன்னாடியே பத்தியம் எப்படிச் சாப்பிடுவது?

      நீக்கு
  13. @கீதா ரெங்கன் படங்களுடன் கூடிய சமையல் குறிப்பு அருமை ஆனால் என்ன நேரில் வந்து சாப்பிட்டு சுவைக்கத்தான் இன்னும் நேரம்வரவில்லை. படத்தின் பேக்கிரவுண்ட் டிசைனை இன்னும் சற்ற மங்கலாக இருக்கும்படி செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. இப்படி நீங்கள் இடும் பதிவைகளை பிடிஎப் ஃபார்மெட்டில் சேமித்து வைத்தால் கொஞ்சம் சேர்ந்தது மின்னூலாக இடலாம்..


    கொரோனா காலத்தில் மாஸ்க் போடுவது அவசியம் என்றாலும் மிக அவசிய தேவை இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதே நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் வந்து சாப்பிட்டு சுவைக்கத்தான் இன்னும் நேரம்வரவில்லை. //

      ஹா ஹா ஹா வரும் மதுரை அந்த நேரமும் வரும்.

      //படத்தின் பேக்கிரவுண்ட் டிசைனை இன்னும் சற்ற மங்கலாக இருக்கும்படி செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. //

      செய்துவிட்டலாம் மதுரை. இதற்கு அப்புறம் வரும் ரெசிப்பிஸ் பேக்ரவுன்ட் கலர் இதமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நினைவில்லை

      //இப்படி நீங்கள் இடும் பதிவைகளை பிடிஎப் ஃபார்மெட்டில் சேமித்து வைத்தால் கொஞ்சம் சேர்ந்தது மின்னூலாக இடலாம்..//

      வாசிக்க ஆளிருக்காங்களா மதுரை? நிறைய சமையல் புத்தகங்கள் இருக்கின்றனவே. ப்ளாக்ஸும் இருக்கின்றனவே. எனவே சும்மா நானும் கச்சேரிக்குப் போனேன் என்று வேண்டுமானால் போடலாம்...ஆனால் என்னுடையது எல்லாம் வாசிப்பாங்களா என்பது ரொம்பவே டவுட்...

      மிக்க நன்றி மதுரை

      கீதா

      நீக்கு
    2. கீதா ரங்கன் - பாரம்பர்ய செய்முறைகளை (உங்களுடையது) எழுதினால் நிச்சயம் வாசிக்க ஆட்கள் இருக்கும். ஆனால் நீங்க, கடாய் பனீர் என்று எழுதினால், அதில் அவ்வளவு ஆர்வம் இருக்காது (அதுக்கு நிறைய வட இந்திய ரெசிப்பி எக்ஸ்பர்ட்ஸ் இருப்பாங்களே).

      "என் பாரம்பர்ய சமையல்" என்ற தலைப்பில் எழுதுங்க.

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பாரம்பரிய சமையல்கள் என்னும் தலைப்பில் நான் ஏற்கெனவே அமேசானில் முதல் பகுதி வெளியிட்டிருக்கேன். காப்பி ரைட் உண்டாக்கும். :))))))

      நீக்கு
    4. ஹா ஹா நெல்லை சீனியர் மோஸ்ட் குழந்தை கீதாக்கா இருக்கறப்ப நான் எங்கே!!!

      கீதாக்காவே நிறைய வகை வகையா போடறாங்க....நிறைய பேர் இதுவும் எழுதியிருக்காங்க...யுட்யூப், ப்ளாக் என்று கொட்டிக் கிடக்கிறது நெல்லை...

      கீதா

      நீக்கு
  14. வெவ்வேறு செய்முறை பற்றிய விளக்கங்கள் அருமை...

    கொலாஜ் செய்வது பகிர்ந்து கொள்ளும் வகையில் எளிது... நன்றி...

    பதிலளிநீக்கு
  15. மொளகூட்டல் பற்றி நம்ம வலைப்பக்கம் சில ஆண்டுகள் முன்னர் ஓர் அலசல் கச்சேரி நடந்தது. பொதுவாகத் தேங்காய், ஜீரகம், மி.வத்தல் அரைச்சு விட்டுப் பருப்பும்/காய்களும் சேர்ந்ததை மொளகூட்டல் என்பார்கள். இது மிளகே சேர்ந்திருப்பதால் மிளகுஷ்யம்/மிளகூட்டல் என்கிறார்கள் போலும். எங்க வீட்டில் இதை மிளகு பொரிச்ச குழம்பு என்போம். பத்தியத்திற்குத் தேங்காய் சேர்க்காமல். பத்தியம் இல்லைனால் தேங்காய் சேர்த்து. மி.வத்தல், மிளகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், தேங்காய் வறுத்து அரைத்துத் துவரம்பருப்புச் சேர்த்து நேற்றுக் கொத்தவரைக்காயில் பொரிச்ச குழம்பு பண்ணினேன். எங்க வீட்டில் இதெல்லாம் பண்ணினால் அப்பளம் தான் பொரிப்பார்கள். ஆனால் இங்கே அவருக்குக் காயும் வேண்டி இருக்கு என்பதால் அப்பளம் நோ! சேனைக்கிழங்கை வறுத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா ஆமாம் மொளகூட்டல் பற்றி முன்னாடி நான் ஒரு ரெசிப்பி போட்டப்ப சொல்லி அப்பவும் இது மிளகுஷ்யம், கூட்டுபற்றி சொல்லியிருந்த நினைவு.

      நீங்கள் அரைச்சுவிடுவது போலவும் செய்வதுண்டு.

      நேற்றுக் கொத்தவரைக்காயில் பொரிச்ச குழம்பு பண்ணினேன். //

      ஆஹா! கொஞ்ச நாளாகிவிட்டது கொத்தவரை செய்து. எங்கள் பிறந்த வீட்டில் இப்படிச் செய்யும் போது அப்பளம் தான் பொரிப்பாங்க அல்லது சுட்ட அப்பளம்.

      சேனைக்கிழங்கை வறுத்து விட்டேன்.//

      நாவூறுகிறது கீதாக்கா. ரொம்பப் பிடிக்கும். உங்க வீட்டுக்கு வந்துவிடுகிறேன்!!!!

      கீதா

      நீக்கு
    2. மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    3. //உங்க வீட்டுக்கு வந்துவிடுகிறேன்!!!!// - ஐயோ..நீங்கள் பெங்களூர் வாசியாச்சே.. கொரோனா சமயத்தில் ஸ்ரீரங்கம் பக்கமே தலைவைத்துப் படுக்காதீர்கள்..... என்று சொல்லியிருப்பாரோ? தெரியலை..

      நீக்கு
    4. கர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை கீதாக்கா அப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்களாக்கும்!

      கீதா

      நீக்கு
  16. மொளகூட்டல் பாலக்காட்டு பாஷை. பொரிச்சகூட்டு சொல்லி வழக்கம். தேங்காய்த் துருவும போது கலர்மாரிய தேங்காய் மொளகூட்டலுக்கு. மேல் வெளுப்புப் பகுதி அவியலுக்கு என்று பாலக்காட்டுமாமா சொல்லுவார். கூட்டு இருந்தால் ரஸமிருக்கும். கிழக்கத்திக்காரர்கள் தினம் ரஸம் ஒன்று வைத்துவிடுகிறீர்கள்.நாங்கள் செய்யமாட்டோம் என்பார். இதெல்லாம் ஞாபகம் வருகிறது. மொளகூட்டலும், மொளகிஷியமும் ருசியாக சாப்பிட அழைக்கிரது. அருமை படங்களும். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரும் இப்போது இருவராக இருப்பதால் ஏதேனும் ஒன்றே செய்வதாகச் சொல்கின்றனர். ஆனால் எங்க வீட்டில் ரெண்டு பேருக்கும் ரசம் வேண்டும். குழம்பாவது வைக்காமல் இருப்பேன். ரசம் இல்லாமல் முடியாது. குழம்பு/சாம்பார்/மோர்க்குழம்பு/பொரிச்ச குழம்பு/தால் எனப் பண்ணினாலும் ரசம் வேண்டும். வெறும் ரசம் எனில் அன்னிக்குப் பிசைந்த சாதம் ஏதேனும்! எலுமிச்சை, புளியஞ்சாதம், தக்காளி சாதம், வெஜிடபுள் புலவு இப்படி. ஆனால் இதில் எது பண்ணினாலும் பெரும்பாலோர் அதை மட்டும் மொத்தமாகப் பண்ணிடுவாங்க. அதையே சாப்பிட்டுப்பாங்க தயிர்ப் பச்சடியுடன். ஆனால் நம்ம வீட்டில் நோ! எந்த சாதம் பண்ணினாலும் கொஞ்சமாய்ப் பண்ணிட்டு ரசம் கட்டாயம் உண்டு.

      நீக்கு
    2. ஆமாம் காமாட்சி அம்மா...ஆமாம் அங்கு ரசம் தினம் செய்ய மாட்டார்கள். ஆனால் புகுந்த வீட்டில் ரசம் கண்டிப்பா வேணும்.

      மிக்க நன்றி காமாட்சிம்மா

      கீதா

      நீக்கு
  17. சிறப்பான செய்முறை. கத்திரிக்காய் பொதுவாக எனக்குப் பிடிக்காது! :) செய்தால் சாப்பிட்டு விடுவேன் - சாப்பிட மாட்டேன் என்று சொல்வதில்லை! வட இந்திய செய்முறை படி செய்த கத்திரிக்காய் சப்ஜிகள் ஓகே! நானும் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்ஜி எனக்கும் ஒரு காலத்தில் ரொம்ப சின்ன வயதில் கத்தரிக்காய் சாப்பிடாமல் இருந்தேன். என் கசின்ஸ் பிடிக்காது என்று சொன்னால் நானும் சொல்லுவேன் அப்படி. ஆனால் எனக்குப் பிடிக்கும்!

      கத்தரி வட இந்திய முறைப்படி செய்வதும் நல்லாருக்கும்...

      மிக்க நன்றி வெங்கட்ஜி!

      கீதா

      நீக்கு
  18. சிறப்பான ரெசிப்பி நன்றி

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! தொற்று நீங்கி, அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    மிளகூட்டல் ரெசிபி அருமை! நீங்கள் சொல்வது போல கத்திரிக்காய், சௌ சௌ மற்றும் அனைத்து நீர்காய்களுக்கும் இந்த செய்முறை பொருந்தும். எங்கள் பாட்டி பத்தியத்திற்கு இதைப்போலவே செய்து தருவார். செய்முறை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  20. கத்தரிக்காய் மிளகுஷ்யம் படங்களுடன் செய்முறை மிக நன்றாக இருக்கிறது கீதா.
    பத்திய சமையலுக்கு பாசிப்பருப்புதான் சேர்ப்பார்கள்.





    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!