புதன், 12 மே, 2021

எந்த ஆசிரியரைக் கண்டால் பயம்?

 

கீதா ரெங்கன் : 

போற போக்கைப் பார்த்தா வீட்டிற்கு விருந்தினர் யாரேனும் வரேன்னு சொன்னா, 72 மணி நேரத்துக்குள்ள கோவிட் நெகட்டிவ் சர்டிஃபிக்கேட் கொண்டு வரணும் அதுவும் ஆர் டி - பி சி ஆர் மட்டும் போதாது சி டி ஸ்கான் ரிப்போர்ட்டும் வேணும்னு ரொம்ப முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள், ஃபோபியா மக்கள் இனி சொல்லத் தொடங்கிடுவாங்களோ?

$ விருந்தினர் வருகிறேன்(றோம்) என்று சொன்னவுடன் நெகட்டிவ் ரிப்போர்ட்டுடன் வாங்க என்றால் அவர்களும் உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் சான்றிதழுடன், மற்ற வசதிகள் பற்றியும் விசாரிக்கலாம். எனவே   கொரானா போகும் வரை வீடியோ விசிட் மட்டுமே என்றிருங்கள்.

# சொல்வதே நல்லது.

& "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே" - கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது. 

கீதா சாம்பசிவம் : 

1. பள்ளி நாட்களில் நெருங்கிய நட்பாகப் பழகியவர்கள் இப்போதும் தொடர்பில் உள்ளனரா? அதே பழைய நட்புத் தொடருமா? அல்லது தயக்கம்/விலகல் இருக்குமா?

$ தொடரும்... ஆனால் மூப்பு, வாழ்க்கைத் துணைவரின் விருப்பு வெறுப்புகள் இவற்றுடன்..

# இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் இல்லை.

& பள்ளி  நாட்களில் நெருங்கிய நட்பாகப் பழகியவர்கள் இப்போது யாரும் தொடர்பில் இல்லை. 

2. பலரும் முகநூல் மூலம் பழைய நட்பைக் கண்டு பிடிப்பதாகச் சொல்கிறார்கள். உங்களுக்கும் அப்படிக் கிடைச்சிருக்காங்களா?

 # முயற்சி செய்து தோற்றுப் போனேன்.

& நானும் பல முயற்சிகள் செய்து பார்த்தேன். ஊஹூம் - யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

3. முகநூலின் மத்யமர் குழுமத்தின் மூலம் நான் சில மதுரைக்காரங்களையும் ஒரு சில தூரத்து உறவுகளையும் கண்டு பிடிச்சேன். உங்களுக்கு அப்படி நேர்ந்தது உண்டா? அவர்களுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறீர்களா?

& சில தூரத்து உறவுகளை கண்டுபிடிச்சேன். (மத்யமர்  மூலம் இல்லை - வேறு குழுக்கள்.) ஆனால் - அவர்கள் யாரும் ஒன்றும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. 

4. படிக்கும் நாட்களில் ஆசிரியர்/ஆசிரியைக்குப் பிடித்த மாணவராக/மாணவியாக இருந்தது உண்டா? எனில் எந்த ஆசிரியர்?

 $ இருந்திருக்கிறேன். தலைமை ஆசிரியர்.

# 11வது வகுப்பில் மட்டும் அறிவியல் ஆங்கில ஆசிரியரின் அபிமான மாணவன். 7, 8 வகுப்புகளில் எல்லார் மேலும் அன்பும் பரிவும் காட்டிய பெருமக்கள் ஓரிருவர் இருந்தனர்.

& ஆங்கிலம் மற்றும் சமூக பாடம் ஆசிரியர்கள் என்னை வியந்து பாராட்டியது உண்டு. 

5. எந்த ஆசிரியரைக் கண்டால் பயம்? வகுப்பில் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பீர்களா?

$ யாரைக் கண்டும் பயந்தது இல்லை. மூன்று இடங்களுக்குள் - ஆம்

# பயம் இல்லை. ஆங்கிலத்தில் மட்டும் sslc யில் முதல் நிலையைப் பகிர்ந்து கொண்டதுண்டு.

& ஆறாம் வகுப்பில் social studies ஆசிரியரைக் கண்டு பயமோ பயம். மனிதர் கொடுங்கோலர். மிகக்  கடுமையான தண்டனை தருவார். முதல் மூன்று இடங்களுக்குள் - ஆம். 

6. நேற்று முகநூலில் ஏடிஎம்மின் பதிவில் ஒருவர் தான் கேரளா எனவும் அங்கே இருந்தாலும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும் என்று சொன்னதோடு ஹிந்தி மொழி கற்றலும் அங்கே கட்டாயம் என்றும் சொன்னார். அவருக்குத் தெலுங்கும் தெரியுமாம். அதை விடுங்க. இங்கேயும் ஹிந்தி கற்பிப்பது பள்ளிகளில் பாடத்திட்டத்தில் வருமா?

$ மொழித்தேர்ச்சி எவ்வளவு என்பதைப் பொறுத்தது . அலுவலகம்/ பஸ் ஸ்டாண்ட் மாதிரி இடங்களில் 30 நாட்களில் xxxx கற்றுக் கொள்ளுங்கள் போதுமே. இலக்கிய ஆய்வு, மொழிபெயர்ப்புப் பற்றி தம்பியைத்தான் கேட்க வேண்டும்.

# இங்கே இந்தி அசாத்தியம் பண்ணப்பட்டுள்ளது.

& வராது. 

7. எந்த மொழி கற்பதற்கு எளிது?

$ தேவை,ஈடுபாடு இவை இருந்தால் எஸ்கிமோ மொழி கூட.

Halló skilurðu hvaða tungumál ég er að tala? (ஹி - ஹி இது எஸ்கிமோ ஊருக்குப் பக்கத்து ஊரு மொழி )

# ஆர்வம் இருந்தால் எதுவும் எளிது.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

புத்தகங்களில் படித்து விட்டு, அல்லது மற்றவர்கள் சொல்வதை கேட்டு ரொம்ப ஆசையாக ஒரு இடத்திற்கு சென்று ஏமாந்திருக்கிறீர்களா?

$ : - 

Feb 2007 இல் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் சென்று ஏரியில் இருந்த பறவைகள் கூடி மக்களை மகிழ்விக்க வருங்காலத்தில் குடும்ப நண்பர்கள் உடன் வர வேண்டும் என்று முடிச்சு போட்டுக்கொண்டு வரும் முன், திரு பால் பாண்டியனுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு வந்தேன்.

# தாஜ்மஹால்.

காலண்டரில் இருக்கும் பெரும்பான்மையான தேதிகளும் ஏதோ ஒரு தினம் என்கிறார்களே? டாய்லெட் தினம் என்று கூட ஒரு நாள் இருக்கிறது. இவையெல்லாம் எங்கே,யாரால் நிர்ணயம் செய்யப்படுகின்றன?

$ யாரால் நிர்ணயிக்கப் படுகிறது என்பதை விட யாருக்கு அனுகூலம் என்று நோக்கினால், வியாபாரிகளுக்கும், டெலிபோன் கம்பெனிகளுக்கும் என்பது புரியும்.

# நல்ல கேள்வி.  பதில்தான் தெரியவில்லை.

& பொழுது போகாத பொம்முகளால்தான் நிர்ணயம் செய்யப்படுகின்றன என்று நினைக்கிறேன். 

= = = = =

மின்நிலா மலர் வெளியீடு காலவரையின்றி ஒத்திப் போடப்பட்டுள்ளது. 

காரணங்கள் : 

1) மலர் தயாரிப்புப் பணிகளுக்கு நேரம் ஒதுக்கமுடியவில்லை. 

2) கன்னா பின்னா என்றும் - ஆச்சா போச்சா என்றும் ஒரு மலரைத் தயாரித்து வெளியிட மனம் வரவில்லை. 

3) ஊரடங்கு காரணமாக சில சௌகரியங்களை இழக்கவேண்டி வந்துவிட்டது. 

வாசகர்கள் அனுப்பியுள்ள எல்லா படைப்புகளும் நிச்சயம் பயன்படுத்தப்படும். அதுவரை எங்களுடன் சேர்ந்து பொறுமை காக்கவும். நன்றி. 

= = = = 

67 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய நாளாக விளங்க வேண்டும்.
    நோயற்ற வாழ்வு வேண்டும். இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  3. மின் நிலா சிறப்பிதழ் பற்றிக் கவலை வேண்டாம். முடிந்த போது வரட்டும். ஜி

    பதிலளிநீக்கு
  4. கேள்விகள் சுவாரஸ்யம். அதற்கு கவனமாகப் பதில் சொல்வதும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. மொழி கற்க ஆசைப்பட்டு,ஜெர்மன் வகுப்பு சென்ற நினைவு. இப்பொழுது ஸ்விஸ் பேரன்
    சில வார்த்தைகள் சொல்லிக் கொடுக்கிறான்.
    அவர்கள் ஜெர்மன் சுலபமாகப் பேசுகிறார்கள்.
    இங்கே என்னிடமிருந்து பேரன்களுக்குத் தமிழும் அவர்களிடம் இருந்து
    ஸ்பானிஷும் வருகிறது.

    பதிலளிநீக்கு
  6. ஆசிரியர்களைக் கண்டு பயந்ததில்லை.
    ஒரு தமிழ் மாஸ்டர் அறுவை மன்னர்.
    அவரைப் பார்த்து கொஞ்சம் கிலி.:)

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் காக்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மெயில் ஐடி மாறி இருக்கிறதா துரை செல்வராஜூ ஸார்?   என் மெயில்  பார்க்கவில்லையா?

      நீக்கு
  8. தடுப்பூசி போட்டும் ஏஸிம்ப்டமாட்டிக்
    என்று சொல்கிறார்கள், அவர்களை எல்லாம்
    அழைப்பதோ நாம் போவதோ அவ்வளவு அவசியம் இல்லை.
    வீடியோ தான் இருக்கிறதே.
    இப்போதைக்கு அது போதும்.

    பதிலளிநீக்கு
  9. தாமதமாக வந்தால் தப்பில்லை. தரம் இழக்காதிருந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  10. உறவினர் ஒருவரிடம் சாதாரணமாக கேட்டேன் உங்கள் ஏரியாவுல கொரோனா எப்படி இருக்கு ?

    வீட்டுக்கேட்டை பூட்டியாச்சு யாரையும் உள்ளே விடுவது இல்லை.

    என்றார் இதன் காரணமாக கடந்த இரண்டு வருடமாக விஷேச அழைப்புகளைத் தவிர அவசியமின்றி செல்வதில்லை. எனக்காக அவர்கள் பத்து ரூபாய் செலவு செய்தால், நான் பதினொறு ரூபாய் செலவு செய்தே திரும்புவேன். இது என்னுடைய பாலிஸி.

    கொரோனா இரத்த உறவுகளின் பாசத்தின் அளவுகோலை காட்டி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா என்றில்லை, எந்த வியாதியோ இல்லை ஏழ்மையோ இரத்த உறவினர்களின் நெருக்கத்தை அளவிட்டுக் காட்டிவிடும். ஒவ்வொரு மனிதனும் சுயநலமிதான். மனைவிட்டயோ கணவன்டயோ கேட்டுப் பாருங்க, யார் முதலில் போகணும்னு விரும்பறீங்கன்னு.. அதிலும் சுயநலன்தான் அளவீடு

      நீக்கு
    2. சுயநலம் இல்லாது மனிதன் என்றிருந்திருக்கிறான்! அவனுக்கு வசதிப்பட்டது, சகாயமானது, ஆதாயமிக்கது, லாபம் தருவது என்னென்ன என்றே அலைந்து திரிகிறான். வெளியில் குழைந்து,வளைந்து நீதி, நியாயம் பேசிவந்தாலும்.

      என்ன, அந்தக்காலத்தில் சுயநலம் கொஞ்சம் அமுக்கி வாசித்தது. பூடகமாக இருந்தன நடவடிக்கைகள். இப்போது கோரப்பற்களைக் காண்பித்து வில்லன் சிரிப்பு சிரிக்கிறது..வசனம் பேசுகிறது! நடக்கட்டும் காலம்..

      நீக்கு
    3. கொரோனா இரத்த உறவுகளின் பாசத்தின் அளவுகோலை காட்டி விட்டது.//

      கில்லர்ஜி அப்படிச் சொல்லிவிட முடியாது ஜி. எல்லோருக்குமே மரணபயம் என்பது இருக்கத்தான் செய்யும். டக்கென்று போவதற்கும் கொரோனா வந்து மருத்துவமனையில் யாரும் இல்லாமல் தனிமையில் இருந்து போவதற்கும் வித்தியாசம் உண்டு இல்லையா? யாரேனும் அருகில் செல்ல முடியுமா இல்லை மருத்துவமனையில்தான் உள்ளே விடுவாங்களா?

      இந்த இடத்தில் இதை சுயநலம் என்று சொல்ல முடியாது...

      சமீபத்தில் ஸ்ரீராம் சொல்லியிருந்தது வியாழன் பதிவில் சொல்லியிருந்தது..ஒருவர் கொரோனாவுடன் நிகழ்வுக்கு வந்து பலருக்கும் பரப்பியது....அப்போது நாம் என்ன சொன்னோம்? பொறுப்பின்மை!

      போகலைனா சுயநலம்?

      கீதா

      நீக்கு
    4. கொரோனா காலத்து சூத்திரங்கள் வித்தியாசமானவை.. தன் உயிர் காப்பதே பிறர் உயிர் காப்பதுமாகும்.. ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்கள்!

      ஹ்ம்...உயிர் இருந்தால்தானே.. சுயநலம், பொதுநலம், அவர் நலம், இவர் நலம் என்றெல்லாம் வம்படித்துப் பொழுதுபோக்கமுடியும்!

      நீக்கு
    5. என் ஆஸ்தான ஆட்டோக்காரர் வீட்டில் அவர் பெரியப்பபா மரணம்.  பதினாறாவது நாள் காரியத்துக்கு ஒன்று கூடி இருக்கிறார்கள்.  அதன் காரணமாக இப்போது அவர்கள் குழுவில் நான்கைந்து பேர்களுக்கு சளி இருமலாம்.   பயமாய் இருக்கிறது.  இந்த லாக் டவுன் காலத்தில அலுவலகம் சென்றுவர அவரை விட்டால் வழியுமில்லை.  இறைவா...  என்னென்ன சோதனை!

      நீக்கு
    6. ஆஃபீஸ்காரன் இந்த நெருக்கடியில் லீவு தரமாட்டான். புரிகிறது. அங்கே போனதும், தள்ளித் தள்ளித்தானே சீட் போட்டு உட்கார்கிறீர்கள்? பஸ்ஸில் போவதைத் தவிர்க்கவும். இரட்டை மாஸ்க் அல்லது N-95 உபயோகிக்கவும், முக-ஷீல்டிருந்தால், கூடவே சிறிய ஹாண்ட்-ஸானிடைஸர் கைவசம் இருந்தால்.. இன்னும் பலம். இப்படி புத்திமதிகள் சொல்லலாம்தான்..

      ஆனால் வீட்டிலிருப்பதே உத்தமம். உங்கள் அலுவலக வேதனைகளை யார்தான், எப்படித்தான் தீர்ப்பது ?

      நீக்கு
    7. N 95 தான் உபயோகிக்கிறேன்.  கைகளை அடிக்கடி சானிடைசர் வைத்து கழுவிக்கொள்கிறேன்.  ஆனாலும் பதட்டமாய் இருப்பதைத் தவிர்க்க முடியாது!

      நீக்கு
    8. //போகலைனா சுயநலம்?// - இது என்ன புதுக் கதையாக்கீது? சுயநலத்தில்தான் பொதுநலமும் இருக்கு.

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. கேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.

    //"யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே" - கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது. //

    இப்போதைய நிலைமைக்கு இந்த பாடல் சரியானதுதான்.

    பதிலளிநீக்கு
  13. சில உறவினர்களை புரிய வைக்கவே முடிவதில்லை...

    பதிலளிநீக்கு
  14. என் கேள்விக்குப் பதில் சொன்னமைக்கு, ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி

    அதே அதே அவரவர் இடத்தில் இருந்தாலே போதும். கூடியவரை தவிர்ப்பது நல்லது.

    மூன்று பதில்களும் சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  15. பள்ளித்தோழிகள் அனைவரும் வாட்சப் க்ரூப் இருக்கிறது. ஆனால் நான் தான் அதில் இல்லை. ஒரு நெருங்கிய தோழி என்னோடு போனில் பேசுவதுண்டு. அவர்கள் வீட்டு நிகழ்வுகள் சொல்லப்பட்டு எல்லாரும் சென்னையில் நாகர்கோவிலில் சந்திப்பு என்றெல்லாம் இருக்கிறது ஆனால் நான் எங்கும் செல்வதில்லை. ஆசை உண்டு ஆனால் யதார்த்தத்தில் வொர்கவ்டு ஆகலை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பள்ளித்தோழன் ஒரு சிறு பிரிவுக்குப் பின் மீண்டும் இணைந்திருக்கிறான்.  ஏற்கெனவே ஒரு பள்ளிதோழனின் பெண் கல்யாணத்துக்கு மார்ச் மாதம் சென்று வந்ததை சொல்லி இருக்கிறேன்!

      நீக்கு
  16. படிக்கும் நாட்களில் ஆசிரியர்/ஆசிரியைக்குப் பிடித்த மாணவராக/மாணவியாக இருந்தது உண்டா? எனில் எந்த ஆசிரியர்?//

    ஷை ஷையா இருக்கு...யெஸ் பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி ஆசிரியர்களுக்குச் செல்லம் நான்!!! பள்ளி பிரின்சிப்பால் அதுவும் சிஸ்டர்/நண் என் திருமண வரவேற்பிற்கு வந்தார்!!!!! கல்லூரி ஆசிரியையும்....

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹும்...   இதையெல்லாம் படிச்சா பொறாமையாதான் இருக்கு!  நானெல்லாம் பத்தோடு பதினொண்ணு!

      நீக்கு
    2. //கல்லூரியிலும் சரி ஆசிரியர்களுக்குச் செல்லம் நான்!// - உங்க்ள் நல்ல குணமும் அதற்குக் காரணம். பாராட்டுகள் கீதா ரங்கன்(க்கா)

      நீக்கு
  17. மின்னிலா இதழ் வருவது படி வரட்டும்...கௌ அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கைக்குப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  19. மின்சாரமும், இணையமும் மாறி மாறிப் படுத்தல். காலையில் கொஞ்ச நேரமே வந்திருந்தேன். அதுக்குள்ளே பொண்ணு கூப்பிடவே போயிட்டேன். மறுபடி வரலாம்னா படுத்தல் தாங்கலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கு.கு - புது இடம் பிடிபட்டுவிட்டதா? நீங்க ரெகுலராக கு.குவுடன் விளையாடுகிறீர்களா? அங்கு எல்லோரும் நலமா?

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். கு.கு. பிள்ளையோட பெண். இங்கெ சொல்லி இருப்பது பெண்ணோடு பேசியதாக. பிள்ளை நைஜீரியாவில். நமக்குக் காலை ஏழு மணின்னா அவங்களுக்கு இரவு (புதன் காலை) இரண்டரை மணி. அம்பேரிக்காவில் செவ்வாய் இரவு/மாலை! குகுவை அநேகமாகப் பார்ப்போம். இல்லைனா சில நாட்கள் அது பார்க்கணும்னு சொல்லும். அதோட அந்த நேர மூடுக்குத் தகுந்தாற்போல் விளையாடும். கு.குவுக்கு அங்கே நல்ல பாலாகக் கிடைக்கலை. அங்கெல்லாம் evaporated milk என்கிறார் பையர். அது குஞ்சுலுவுக்குப் பிடிக்கலை. ஆகவே முக்கால் பட்டினி. பால் தான் நாலு வேளை குடிக்கும் அம்பேரிக்காவில் இருந்தப்போ. இப்போச் சாப்பாட்டுக்குப் பழக்கினா இன்னும் பழக்கம் வரலை! :( சில உணவு வகைகள் பிடிக்கலை. பெண் வீட்டில் அப்புவைத் தவிர்த்து அனைவரும் வாக்சினேஷன் பண்ணிண்டாச்சு . பிள்ளை/மருமகள் இருவரும் போட்டுக்கொண்டு ஜூரம் வந்து தவித்தார்கள். இப்போப் பரவாயில்லை.

      நீக்கு
    3. ஹிஹிஹி, நெல்லை, நீங்க கேட்காததுக்கும் சேர்த்துச் சொல்லிட்டேன் போல! :)))) பெண்ணுக்கு மறுபடி வயிற்றுத் தொந்திரவு! அதனால் கூப்பிட்டாள். என்ன செய்ய முடியும்!:( உம்மாச்சி தான் காப்பாத்தணும்.

      நீக்கு
    4. இப்போ நைஜீரியாவில் காலை ஏழு, ஏழரைக்குள் இருக்கும்.

      நீக்கு
  20. இணையம் மூலம் சில பள்ளி/கல்லூரி கால நண்பர்களை, அவர்களது நட்பை மீட்டதுண்டு. சிலர் கண்டுபிடித்தாலும், நட்பைத் தொடர்வதில் அதிகமாக ஆர்வம் காண்பிப்பதில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

    கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    மின் நிலா சிறப்பு மலர் - வெளியிடுவதில் இருக்கும் சிக்கல்கள் புரிகிறது. பிளாகில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இணையம் மூலம் சில பள்ளி/கல்லூரி கால நண்பர்களை, அவர்களது நட்பை மீட்டதுண்டு. சிலர் கண்டுபிடித்தாலும், நட்பைத் தொடர்வதில் அதிகமாக ஆர்வம் காண்பிப்பதில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.// ஆம், நன்றி.

      நீக்கு
  21. என் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தமைக்கு நன்றி. நானெல்லாம் பள்ளி நாட்களில் கணக்கு டீச்சரிடம் பயந்திருக்கேன். அது என்னமோ அவங்களுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அதுவும் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு வரை மூன்று வருடங்களுக்கும் ஒரே கணக்கு டீச்சர். எங்க வகுப்பு வேணும்னு கேட்டு வாங்கிப்பாங்களாம். அவங்க படுத்தல் தாங்காமல் எனக்குக் கணக்கில் எஸ்.எஸ்.எல்.சி.யில் 78% மதிப்பெண்கள் தான் வந்தன. மற்ற வகுப்புக்களில் கொட்டம் அடித்த நான் கணக்கு வகுப்பில் இருக்கும் இடம் தெரியாமல் உட்கார்ந்திருப்பேன். :(

    பதிலளிநீக்கு
  22. இப்போ இணையம்போயிருந்ததைச் சரி பார்க்க ஆள் வந்தார். அவரும் உள்ளே வரலை. நாங்களும் வெளியே போகலை. அவரும் மாஸ்க்கோடு தான் வந்தார். நாங்களும் போட்டிருந்தோம். இருந்தாலும் கவலை/பயம்! இருக்கத் தான் செய்கிறது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆனால் பயம் வேண்டாம்.

      நீக்கு
  23. மின் நிலா மலர்த்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட முடியாமைக்கு வருத்தமாக உள்ளது. இந்தப் பேச்சு வரும்போதே என்னால் தயாரிப்புப் பணிகளில் கலந்து கொள்வது இயலாது என்று சொன்னேன். இப்போவும் அதே நிலைமை தான்! ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அதற்கான நேரம் கிடைப்பது தான் அரிதாக இருக்கிறது. நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எப்போ முடியுமோ அப்போ வரட்டும். வெங்கட் ப்ளாகில் போடச் சொல்கிறார். கிழமைகள் பார்த்துப் போடணும். இல்லையா?

    பதிலளிநீக்கு
  24. தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகள் கற்கும் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. ஆந்திராவில்/இப்போது தெலுங்கானா, சிகந்திராபாதில் இருந்தாலும் தமிழ்/ஹிந்தியே அங்கு போதுமானதாக இருந்தது. தெலுங்கு கற்கச் சந்தர்ப்பம் வாய்க்கலை.

    பதிலளிநீக்கு
  25. இன்றைய பதிவு மிகவும் நன்றாக இருந்தது. பின்னூட்டங்கள் மூலம் நம் குடும்பச் செய்திகளும் சேர்ந்து மனதுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இதே உணர்வு. பதிலெழுதாவிட்டாலும் சேர்ந்துஇருக்கிரோம் என்ற உணர்வு. இதுவே போதும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  26. ஜனவரியிலிருந்து இன்று வரை என் வீட்டிற்கு வந்தவர்கள் பானுமதி மேடத்தையும் சேர்த்து ௫ பேர் . டீ கொடுத்தது பானுமதி வெங்கடேஸ்வரன் மேடத்திற்கு மட்டும் தான் . வேறு ஒருவர் என் மகனின் கிளாஸ்மேட் ௧௧ம் வகுப்பிலிருந்து வெந்நீர் மட்டுமே சாப்பிடுவான் அதனால் வெந்நீர் மட்டுமே அவனுக்குத் தந்தேன் . மற்ற மூவருக்கும் எதுவும் தரவில்லை . என்னுடன் ஒரே பெஞ்சில் உட்கார்ந்து படித்த மூவருடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன்
    டாய்லெட் தினம் தெரியாது .ஜப்பானில் டாய்லெட் கடவுள் உண்டு

    பதிலளிநீக்கு
  27. ஜனவரியிலிருந்து இன்று வரை என் வீட்டிற்கு வந்தவர்கள் பானுமதி மேடத்தையும் சேர்த்து ௫ பேர் . டீ கொடுத்தது பானுமதி வெங்கடேஸ்வரன் மேடத்திற்கு மட்டும் தான் . வேறு ஒருவர் என் மகனின் கிளாஸ்மேட் ௧௧ம் வகுப்பிலிருந்து வெந்நீர் மட்டுமே சாப்பிடுவான் அதனால் வெந்நீர் மட்டுமே அவனுக்குத் தந்தேன் . மற்ற மூவருக்கும் எதுவும் தரவில்லை . என்னுடன் ஒரே பெஞ்சில் உட்கார்ந்து படித்த மூவருடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  28. ௫ பேர் 5 பேர்
    ௧௧ம் 10ம் வகுப்பிலிருந்து

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!