ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

அல்லுப்புள்ளி கணக்கு

அலுவலகத்தில் ஏதாவது சில விஷயங்களுக்கு கணக்கு கேட்கும்போது, சரிவர எடுத்துக் கொடுக்க நேரமிருக்காது, அலலது கிடைக்காது.  அப்போது எதையாவது ஒரு கணக்கு கொடுத்து ஒப்பேற்றி விடுவோம்.  நிஜம் போலவே இருக்கும்.  அதற்கு அல்லுப்புள்ளி கணக்கு என்று சொல்வது வழக்கம்..  அதுபோல இன்று வரவேண்டிய படங்கள் வந்து சேராத காரணத்தால் என்னிடம் இருக்கும் சில அல்லுப்புள்ளி படங்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்து ஒப்பேற்றி இருக்கிறேன்!  நண்பர்கள் மன்னிக்க....!  எல்லாம் செல்லில் எடுத்த படங்களே...


அடுத்த பில்டிங்குக்கு நாற்காலிகள் எடுத்துச் சொல்லச் சொன்னால் அதிக பட்சம் என்னால் இரண்டு அல்லது மூன்று எடுத்துச் செல்ல முடியும்!  இதில் எத்தனை உள்ளன?


எத்தனை பேர் சாப்பிடலாம் என்று நினைக்கிறீர்கள்?  ஆறு பேருக்கான உணவு இது!  சில நாட்களுக்கு முன் எடுத்த படம்!

மழைபெய்ய ஆயத்தமான ஒரு மாலைப்பொழுது... காட்சியைப் பார்த்தால் கை பரபரவென செல்லைத்தேடுகிறது - படங்களெடுக்க!

கண்கள் பார்க்கும் ரம்மியத்தை கேமிராவில் கொண்டுவர முடிவதில்லை.  இறைவன் படைப்புக்கு முன் மனிதனின் கண்டுபிடிப்புகள் தூசுதான்!


பெரிய தோப்பு அல்ல...   ஜஸ்ட் பத்து மரங்கள்...


உள்ளே சண்டி செய்த பழைய மோட்டாரை வெளியே எடுத்து 

புது மோட்டாரை அங்கு பொருத்த ஏற்பாடுகள் நடக்கின்றன...  9,400 ரூபாய்!


இந்தமுறை உள்ளே வைக்காமல் மோட்டார் வெளியேயே வைக்கப்பட்டது!


மாலை வேளைகளில் மொட்டை மாடியில் தஞ்சம்.  புத்தகங்கள் கொண்டு சென்று படிக்க ஏதுவான இடம்.  மாலை மயங்கியதும் இறங்க வேண்டியதுதான்!

கொரோனா காலத்தில் வெளியில் சுற்றிய ஒரு துடுக்கான இளைஞனை ஒரு போலீஸ்காரர் ஸ்டேஷனுக்கு "தள்ளிக் கொண்டு" போகும் காட்சி!
 

62 கருத்துகள்:

  1. அன்பு ஸ்ரீராம்,
    அல்லுப்புள்ளிகள்!!!! புதுப் பெயராக இருக்கிறதே!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா...   ஆனால் எங்கள் அலுவலக வட்டாரங்களில் இது சகஜமாய்ப் புழங்கும் வார்த்தை!

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம்.
    ஸ்ரீராம். எல்லோரும் என்னாட்களும் நலமாக
    இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​பிரார்த்திப்போம். வாங்க வல்லிம்மா வணக்கம்.

      நீக்கு
  3. மொத்தம் 38 நாற்காலி இருக்குமா?
    நல்ல வண்ணங்கள்.

    பதிலளிநீக்கு
  4. கௌதமன் ஜி யைக் காணோமே மா.
    நலம் விசாரித்ததாகச் சொல்லவும்.
    செல்லில் எடுத்தால் என்ன.
    வித விதமான படங்கள் சுவையாகத் தான் இருக்கின்றனமா.

    பதிலளிநீக்கு
  5. மேகக் கூட்டங்கள் உறும ரெடியாக இருக்கின்றன. !!!
    இருந்தும் அவை அழகுதான். நீல வண்ணம்
    அபரிமிதமாகத் தெரிகிறது. அருமை.

    மொட்டை மாடியில் நாற்காலிகளைக் காணோமே.
    காலியாக ஆனால் சுத்தமாக இருக்கிறது.
    வெய்யில் நாட்களில் நிறையத் தண்ணீர் தெளித்து
    சுகமாக இரவு சாப்பாடு அங்கே சாப்பிடலாம்.
    நட்சத்திரங்களுக்கு அடியில்!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீல வண்ணம் அபரிமிதமாகத் தெரிகிறது.//.

      நேராக பார்க்கும்போது கருமை நிறமாகத் தெரிந்தது!

      மொட்டை மாடியில் நாற்காலிகள் இருக்காது.  நேராகத் தெரிவதை விட வலது புறம் இன்னும் பெரிதாக இடம் இருக்கும்!

      நன்றி அம்மா.

      நீக்கு
  6. உங்கள் மாடியிலிருந்து எடுத்த அடுத்த புது மாடி கூட அழகாக வந்திருக்கிறது.

    பம்ப் ரிப்பேரா. சாமி. இதெல்லாம் சீக்கிரம் தீர்க்க வேண்டிய
    பிரச்சினைகள் இல்லையாமா??
    நல்ல வேளை வெளியில் வைக்கத் தீர்மானம் செய்ததே நன்மை.
    எங்கள் கிணற்று மோட்டாரை நடுவில் இறக்கியது பெரிய
    தலைவேதனை.

    ஆனால் ஊனால், சிங்கம் நடுவில் இருக்கும்
    கனமான பைப்பில் உட்கார்ந்து
    அதை வெளியில் எடுத்து வைக்கும் வரை என் உயிர் என்னிடம் இருக்காது.
    புது சுகுணா மோட்டாரை வாங்கி
    வீட்டுக்குள்ளயே வைத்ததும் தான்
    நிம்மதியாச்சு.
    ஆளை விடு:((((
    உங்கள் ரிப்பேர்க்காரர் அழகாக உட்கார்ந்து வேலை செய்கிறார்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே நாளில் முடிக்க வேண்டிய அகட்டாயம் அம்மா.   மேலே டேங்க்கில் தண்ணீர் இல்லை.  சீக்கிரம் முடித்து அன்றாடக் அக்கடமைகளை முடிக்கவேண்டும்.  நல்லவேளை அந்த நிகழ்வு ஒரு வார இறுதியில் நடைபெற்றது!

      சிங்கமே சரி செய்ய அமர்ந்து விடுவது ப்ளஸ் அதே சமயம் மைனஸும் கூட.  அவர் திறமை ப்ளஸ்.  அதனால் உங்களுக்கு வரும் கவலைகள் மைனஸ்!

      ஒவ்வொருமுறை உள்ளே வைத்து எடுத்து அவஸ்தைப்படுவதைவிட வெளியே வைத்துவிடுதல் நலம் என்று வெளியே வைத்து விட்டோம்!

      நீக்கு
  7. பச்சை வாழை மரங்களும்,
    போலீஸ்காரர் , தள்ளிக் கொண்டு போவதைப்
    பார்த்ததும் ,
    அக்னி நட்சத்திரம், அமலா, பிரபுவுடன்
    சுரங்கப் பாதையில் நடக்கும்போது,
    ''தள்ளிக்கினு வந்திட்டியான்னு''
    கேட்கும் குறும்பு சிரிக்க வைப்பது நினைவில் வந்தது:)))

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் அனைவருக்கும்.

    வரவேண்டிய வித்துவான் வராமல் போயிட்டால், வானொலி நிலைய வித்துவான் கச்சேரிதான். முதலில் சில விளக்க எழுத்துக்களைப் பார்த்ததும், யார்றா இது புதுசா என்று தோன்றியது

    பதிலளிநீக்கு
  10. அது சரி... கேள்விகள் கேட்டு, புதன் கேஜிஜியை நினைவுபடுத்துகிறீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி என்ன கேட்டிருக்கிறேன் என்று யோசிக்கிறேன்!

      நீக்கு
  11. வாழை மரங்கள் சூப்பர். இலை, காய்கள் அனைவருக்கும் பொதுவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அந்தத் தோட்டக்காரர் குடும்பம் எல்லோருக்கும் பொது! பக்கத்து காம்பௌண்ட்!

      நீக்கு
  12. இந்த அல்லு புள்ளி கணக்கால் தான் பல மாநிலங்களின் கொரானா மரண கணக்கு தவறு என்பது கண்டு பிடிக்கப்பட்டது. 


    //கண்கள் பார்க்கும் ரம்மியத்தை கேமிராவில் கொண்டுவர முடிவதில்லை.//

    சொல்லப்போனால் கேமரா  கண்கள் மனிதக் கண்களுக்கு புலப்படாத பல காட்சிகளை சிறைப்படுத்தும். வெங்கட் அவர்களே சாட்சி.

    இங்கே எனது வீட்டில் பம்ப்பே இல்லாமல் வாட்டர் அதாரிட்டி குடிநீர் 2ஆவது மாடியில் இருக்கும் டேங்க் நிறைக்கிறது. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேமிரா பற்றி நீங்கள் சொல்லி இருப்பதை ஏற்கிறேன். வெங்கட், ராமலஷ்மி போட்டோக்ராபியுடன் - அதுவும் செல்லில் - போட்டியிட முடியாது. அதேசமயம் வெங்கட் போட்டோ எடுத்த இடங்களையே கூட நேரில் பார்த்தால் இன்னும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

      அல்லுபுள்ளி கணக்கு பற்றி நீங்கள் சொல்லியிருப்பது உண்மை.

      உங்கள் வீட்டு பம்ப் இல்லாமல் நிறையும் மோட்டார்... எப்படி?

      நீக்கு
    2. இங்கு திருவனந்தபுரத்தில் 24 மணி நேரமும் வீட்டில் குழாயில் குடிநீர் கிடைக்கும். உபயோகிக்கும் அளவிற்கேற்ப மீட்டர் ரீடிங் பிரகாரம் பில் கட்டவேண்டும். water authority பெரிய பம்புகள் வைத்து நீரை பம்ப் செய்வார்கள். ப்ரெஸ்ஸர் மற்றும் பள்ளம் மேடு காரணம் தண்ணீர் 30 அடி வரை ஏறும்.
      Jayakumar

      நீக்கு
    3. ஓ...   தெரிந்து கொண்டேன்.  நன்றி ஸார்.

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. படங்கள் நன்று
    அல்லுப்புள்ளிகள் இதுவரை கேட்டிடாத வார்த்தை ஜி

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    காலையிலேயே கருத்துரைக்கவும் வந்து விடலாம் என நினைத்தேன். நாம் நினைப்பது நடந்தால்தானே..! கொஞ்சம் கடமைகளை முடித்து வருவதற்குள் "கைபேசி வேலைகள்" இப்போதுதான் அது பிற வேலைகளுக்கு இடம் தந்திருக்கிறது.

    படங்கள் அனைத்தும் அருமை. சாலையில் விரைந்து செல்லும சைக்கிளில் அடுக்கிய நாற்காலிகள் படமும்,மேஜை நாற்காலிக்கு காத்திராமல், தயாராக வந்து தரையிலேயே அமர்ந்திருக்கும் சாப்பாட்டு ஐட்டங்கள் படமும் அருமை.

    இது ஆறு பேருக்கு மட்டுந்தான் என்றால் அது ஒத்துழைக்குமே... எடுத்துச் சாப்பிடும் நம் கைகள்தான் ஒத்துழைக்க வேண்டும்.

    மழைக்கால மேகங்கள் திரண்டிருக்கும் படங்களும் சூப்பர். குட்டி வாழைத்தோப்பு படமும் அருமை.

    கிணற்றுக்கு வெளியே மோட்டார் அமைத்தால் நல்லதுதான். சரி செய்ய வருபவருக்கும் சௌகரியமாக இருக்கும்.

    அந்தி சாயும் பொழுதின் அழகே தனி. விவரிக்க இயலாத ஒரு அழகு.

    ஜோடி போட்டு செல்பவர்களைப் பார்த்தால் நண்பர்களாக இருக்குமோ எனற் சந்தேகம் மட்டுந்தான் வரும். அத்தனைப் படங்களும் ஞாயறை இனிதாக்கியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து பதில் அளித்திருக்கிறீர்கள். நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  17. அல்லுப்புள்ளி.. இப்போதுதான் இந்த வார்த்தையை அறிய வருகிறேன்.

    சுவாரஸ்யமான படங்கள்.. சூழல்கள்..!

    இறைவனின் படைப்புகளுக்கு ஈடில்லை. நேரில் ரசிப்பது தனி இன்பம். ஆனாலும் கூட கண்கள் கண்டு களிக்கும் காட்சிகளில் நாம் தவறவிடும் அம்சங்களையும் துல்லியமாகக் காட்டி ரசிக்க வைப்பதுண்டு கேமராக் காட்சிகள்:).

    பதிலளிநீக்கு
  18. அல்லுப் புள்ளிக்கணக்கு. புதிய வார்த்தை. மொத்தம் 30 நாற்காலிகள் இருக்கின்றன என நினைக்கிறேன். மொட்டை மாடி சுத்தமோ சுத்தம். இரவில் படுக்கையைப் போட்டுப் படுத்துக் கொண்டால் சொர்க்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் இது புதிய வார்த்தைதான் போல்.. மொட்டை மாடியில் நாங்கள் படுப்பதில்லை!

      நீக்கு
  19. அது என்ன ஆறு பேருக்கான சாப்பாடு என்ன கணக்கு? வீட்டு நபர்கள் ஆறே பேரா? வாழை மரங்களுக்கு இடையே அது என்ன மரம்? பப்பாளி? பாக்கு? பாக்கு மாதிரித் தெரியலை. தோட்டங்களைப் பார்த்தே எத்தனையோ வருடங்கள் ஆனாப்போல் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று ஆறுபேர்! பாக்கு, பப்பாளியெல்லாம் இல்லை. ஓரமாக வாதாம் மரம் இருக்கிறது.

      நீக்கு
  20. ஜேகே அண்ணா சொல்லி இருக்காப்போல் தான் அம்பேரிக்காவிலும்னு நினைக்கிறேன். மொத்தமாய் ஒரு பெரிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈய டாங்கிலிருந்து நீர் வரும். எல்லா வீடுகளுக்கும். அவரவர் செலவைப் பொறுத்து பில் வரும். ஆனால் அவரவருக்கெனத் தனித்தனியாக டாங்க் இருப்பதாய்த் தெரியலை.

    பதிலளிநீக்கு
  21. போர் போட்டால் சப் மெர்சிபிள் மோட்டார் போட்டால் பின்னால் பிரச்னை வரும்போது ரொம்பச் செலவு இழுத்து விடுகிறது. மைத்துனன் வீட்டில் பார்த்தோம். நாங்க போர் போட்டிருந்தாலும் மோட்டார் வெளியே தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அனுபவம்தான். ஸம்ப் போட்டாருக்கு ஆட்டோமேடிக் வைத்துள்ளோம்.

      நீக்கு
  22. படங்கள் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  23. @ கமலா ஹரிஹரன்...

    // காலையிலேயே கருத்துரைக்க வந்து விடலாம் என நினைத்தேன். நாம் நினைப்பது போல் நடந்தால் தானே!.. //

    இதையே நானும் சொல்கிறேன்..

    கலகலப்பான பதிவு.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  24. அந்த வண்டியில் 29 நாற்காளி இருக்கிறது. 30 நாற்காலி எடுத்து வந்து இருப்பார் போலும் ஒன்று விற்று இருப்பார் போலும்.
    எங்கள் அம்மா வீட்டில் முன்பு இப்படி எல்லா வற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு தம்பி, தங்கை எல்லோரும் அமர்ந்து இருக்க அம்மா எடுத்து வைக்க சாப்பிட்ட காலங்கள் மனதில் வந்து போகிறது. 10 பேர் , மாமியார் வீட்டிலும் கூட்டமாய் அமர்ந்து மகிழ்ந்து சாப்பிட்ட காலங்கள் மனதில் வந்து போகிறது.

    புது வீட்டில் அதற்குள் மோட்டார் மாற்றமா?

    மழை மேகம் அழகு. மொட்டை மாடி தனிமையில் படிக்க முடிகிறதா? வேறு வீட்டில் குடியிருப்பவர்கள் வர மாட்டார்களா?

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...  அவர் விற்பதற்கு எடுத்துக் போவது போல தெரியவில்லை.  ஏதோ விழாவுக்கு எடுத்துச் செல்லும் வாடகை கடைக்காரர் என்று தோன்றியது எனக்கு!

      ஆமாம்..  புது வீட்டில் காருக்குள் மோட்டார் மாற்றம்!  எலெக்ட்டானிக் பொருட்கள் வாச்சுக்கறதுதான் அமைஞ்சுக்கறதுதான் இல்லையா!!

      மொட்டை மாடியில் பெரும்பாலும் வேறு வீட்டுக்காரர்கள் வருவதில்லை.  துணி காயப்போட்டிருப்பார்கள்.

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
    2. **

      //புது வீட்டில் காருக்குள் மோட்டார் மாற்றம்! //

      புது வீட்டில் அதற்குள்  மோட்டார் மாற்றம்! 

      நீக்கு
  25. அல்லுப்புள்ளி - :) இப்படி சில கணக்குகள் தருவது வழக்கம் தான் என்றாலும் பெயர் புதியது.

    படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!