புதன், 11 ஆகஸ்ட், 2021

எங்கள் நாலாயிர பிரதாபங்கள் !

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பாஸ்தாவில் புளிகாய்ச்சல் கலந்து ஃப்யூஷன் ஃபுட்டாக சாப்பிட்டிருக்கிறீர்களா? எம்.டி.ஆர்.புளியோதரைப் பொடியும் நன்றாக இருக்கும்.

# சாப்பாட்டுப் புரட்சி , போஜனப் புதுமை பழக்கமில்லை.  பாஸ்டா என்றால் என்ன என்பதே அண்மை அறிவு.

& பாஸ்டா சாப்பிட்டால் ஏனோ எனக்கு பசி அடங்குவதில்லை. மேலும் பாஸ்டா எனக்கு பிடிப்பதும் இல்லை. MTR புளியோதரைப் பொடி கைவசம் உள்ளது. அதை வைத்து புளிக்காய்ச்சல் செய்வதும் எளிதாக உள்ளது. சுவையும் மணமும் நன்றாக உள்ளது. ஆனால் அண்மையில்  'அடையார் ஆனந்த பவன்' தயாரிப்பை online மூலம் ஆர்டர் ( https://orderonline.aabsweets.com/menu) செய்து வாங்கிய சிலவற்றில் புளிக்காச்சலும் ஒன்று. இதுவும் நன்றாக உள்ளது. 

= = = = 

சென்ற வாரம் எங்களுக்கு வேறு கேள்விகள் எதுவும் அனுப்பப்படவில்லை. 

உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தோஷமான சமாச்சாரம் இன்று. 

இது எங்களுடைய 4000 ஆவது பதிவு. 

4000 பதிவுகள், 573 followers, 23,30,000 பக்கப் பார்வைகள், 1,58, 200 + கருத்துரைகள் இவற்றோடு எங்கள் பயணம் தொடர்கிறது.  

கடந்த பன்னிரெண்டு வருடங்களில் எங்கள் blog வலைப்பதிவை தொய்வு இல்லாமல் நடத்த உறுதுணையாக இருந்து வரும் ஸ்ரீராமின் பங்களிப்பை மிகவும் பாராட்டவேண்டும். ஸ்ரீராம்தான் எங்கள் blog வலைப்பதிவின் PRO (Public relations officer)  மற்றும் BDO (Blog development officer) அவருக்கு நம் பாராட்டுகளைத் தெரிவிப்போம். 

நான் உற்சாகமிழந்து இருந்த நாட்களில் - என்னிடம், ' நீ கவலைப்படாமல் blog எழுது - தொடர்ந்து எழுது என்று உற்சாகமூட்டி எழுதத் தூண்டியவர்,  அண்ணன் kayjees. 

கேள்வி பதில் பகுதிக்காக எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில்கள் எப்பொழுதும் எங்களுக்கு அனுப்பி, பல விஷயங்களில் ஆலோசனையும் அவ்வப்போது வழங்கி வருபவர் பெரிய அண்ணன் #kgy. 

எங்கள் எல்லோரையும் விட, வாசகர்களாகவும், சக வலைப் பதிவாளர்களாகவும், சமையல் குறிப்புகள், கதைகள், கட்டுரைகள், கருத்துரைகள் எல்லாம் வழங்கி, எங்களோடு இணைப் பயணம் செய்யும் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் போற்றுதற்கு உரியது. 

எங்கள் பதிவுகளுக்கு சுவை கூட்டுவது உங்கள் ஈடுபாடும், ஆதரவும். இதற்கெல்லாம் வார்த்தைகளால் நன்றி சொல்ல இயலாது.  

உங்கள் ஒவ்வொருவருடைய ஆதரவும், பங்களிப்பும்தான் எங்களை உற்சாகமாக பதிவுகள் வெளியிட உதவுகின்றன. 

தொடர்ந்து எங்களுடன் உற்சாகமாக பயணம் செய்யுங்கள். 

நன்றி, வணக்கம். 

= = = = = =

 எங்கள் கேள்விகள் :

1) நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு, குறைந்தபட்சம்  யாராவது இருவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்றால், எந்த இருவருக்கு நன்றி சொல்வீர்கள்? 

2) சமீபத்தில் உங்களை மிகவும் கவர்ந்த, நீங்கள் சந்தோஷப்பட்ட நிகழ்வு எது?

3) உங்களிடம் உள்ள தனிப்பட்ட திறமை எது என்று சொல்லுங்க. 

4) உங்கள் குழந்தை / பேரக் குழந்தை உங்களிடம் கேட்ட கேள்விகளில் உங்களால் மறக்க முடியாதது எது?

5) 'இவரா இதை செய்தார்?' என்று உங்களை வியக்க வைத்தவர் யார்? என்ன செய்தார்? 

= = = = =

நன்றி, மீண்டும் சந்திப்போம். 

= = = = =

சொல்ல மறந்துவிட்டேனே - வாரா வாரம் நிறைய கேள்விகள் கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு விடை தேடும்போது நாங்களும் நிறையக் கற்றுக்கொள்கிறோம், தெரிந்துகொள்கிறோம் - எனவே தயக்கமில்லாமல் என்ன கேட்கவேண்டும் என்றாலும் கேளுங்கள்.  

= = = = =

79 கருத்துகள்:

  1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்னாளும் ஆரோக்கியமாக இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. 4000 ஆவது பதிவுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் எங்கள் ப்ளாகின் அனைத்து ஆசிரியர்களுக்கும்
    வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தது மழை. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமோ அவ்வளவுக்கு அவ்வளவு சந்தோஷம். எங்க வீட்டுல, உறவினர்கள் எல்லாரும் மழை வந்துவிட்டால் குடையைத் தேடுவாங்க. எனக்கு மழையில் நனைவதும் பிடிக்கும்.

      பனி.... அந்த அனுபவம் இல்லை. ஆனால் அனுபவிக்கவும் ஆசை.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    எங்கள் ப்ளாக்கின் 4000 ஆவது பதிவு இன்று என அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எங்கள் ப்ளாக்கிற்கும், உங்களுக்கும், சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கும், அதனை செவ்வனே நடத்திட உதவி வரும் ஆசிரியர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள், மற்றும் எங்கள் ப்ளாக் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. நாலாயிரமாவது பதிவுக்குப் பாராட்டுகள். 4001 ஆக நாளை வெளியாகும் பதிவு, எபியின் மென் மேல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஸ்ரீராமின் பங்களிப்பைச் சொல்லும். கேஜிஜியின் ஆர்வமும் involvementம் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  8. தனிப்பட்ட திறமை - டிஸிப்பிளின், எதிலும் முந்தி இருக்கணும் என்ற ஆர்வம்... ஆமாம் இதெல்லாம் பாஸிடிவ்வா இல்லை நெகடிவ்வா? சில நேரங்களில் (பல) இவையெல்லாம் மற்றவர்களுக்கு உறுத்தலாக இருப்பதைத்தான் நான் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  10. அன்புக் குடும்பம் எங்கள் ப்ளாக்.
    மிக மரியாதை கொண்டாடும் நல்ல குழு. முனைந்து செயல் பட்டு இந்தப்
    பனிரண்டு வருடங்களை வெற்றிகரமாகக் கடந்து வந்திருக்கிறீர்கள். நாங்கள்
    உங்களுடன் அனுபவித்து மகிழ்ந்து வளர்ந்து
    வந்தோம்.
    எத்தனை கதைகள். எத்தனை சவால் போட்டிகள்.
    மிக மிக அற்புதமான எண்ணங்களும்
    முன்னேற்றம் கொண்டுவரும் கொள்கைகளும்.
    சொல்லி முடியாது.அன்பு
    கே ஜி ஜி , அன்பு ஸ்ரீராம். இன்னும் கேஜீஒய் சார். கேஜிஎஸ் சார்
    அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.

    வரும் நாட்களிலும் வருடங்களிலும் இன்னும்
    வளரும் அருமையைப் பார்க்கத்தான் போகிறோம்.

    பதிலளிநீக்கு
  11. நாளாயிரம் பொழுதுகளில்
    நாலாயிரம் பதிவுகள்
    ஓராயிரம் ஈராயிரம்
    ஓங்கிடுக நூறாயிரம்..
    பூவாயிரம் சொரிந்தாற்போல்
    பொன்னாயிரம் பதிவுகள்
    தேனாயிரம் திளைத்தாற்போல்
    தென் தமிழில் தித்திக்க
    தினம் தினமும் தந்தனையே
    திசை கொண்டு புகழ் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  12. மகிழ்ச்சி. மென்மேலும் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. கேள்விகளுக்கு விடை.
    1, என்னுடைய இன்றைய நிலைமைக்குப் பெற்றோரின்
    ஆசியும், கணவரின் அயரா ஒத்துழைப்பும் தான்.
    2,
    சமீபத்தில் கண்டு மகிழ்ந்தது பேரப் பிள்ளைகளின்
    நற்குணமுன், கடவுள் பக்தியும்.
    3,என்னிடம் பொறுமை இருப்பதாக நினைக்கிறேன்.
    அது இருந்ததால் தான் இந்த வயது வரை சமாளிக்க
    முடிகிறது.

    4,பெரிய பேரன் ,சிறிய பேரன் இருவரும்
    கணினி சம்பந்தமாக நான் கேட்கும் சந்தேகங்களைத் தீர்த்து
    வைப்பார்கள். பெரியவன் கேட்டது,
    இந்தியா மாதிரி நாட்டை விட்டு இங்கே
    வர எப்படி எல்லாராலும் முடிகிறது என்பதுதான்.
    அவனைப் பொறுத்தவரை பாரதம் மிக உயர்ந்த நாடு.

    5,எம் எல் வசந்தகுமாரியின் வாழ்க்கை வரலாறு.
    அண்மையில் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
    ஒவ்வொரு நாளும் அவரை நினைக்கும்படி
    பாடல்களை வழங்கி இருக்கிறார்.
    நிறைய திறமை.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் காலை வணக்கம். 4000வது பதிவா?! ரொம்ப சந்தோஷம்!
    மேலும் வளற வாழ்த்துக்கள்! எ.பி.யோடு நாங்களும் வளர்வது கூடுதல் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  15. 4000 பிரதாபங்கள் என்பதை பிரபந்தங்கள் என்று படித்து விட்டு நெல்லை தான் ஏதோ கேட்டிருக்கிறார் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. //'இவரா இதை செய்தார்?' // - இது போல நான் பலரைப் பற்றி நினைத்திருக்கிறேன். நாம் மூன்று கிலோ மீட்டர் தினமும் நடப்பதையே ஏதோ சாதனை போல நினைக்கிறோம். இராமானுஜர், நடந்தே பாரதம் முழுவதும் பிரயாணம் செய்து, கர்நாடகா ஆந்திராவில் வைணவத்தைப் பரப்பி, கோவில்கள் கட்டத் துணை புரிந்து... எப்படிப்பட்ட சாதனை என்று நினைப்பேன். (இதுல திருவரங்கம்-திருக்கோஷ்டியூர் 18 முறை நடை வேறு).

    தற்காலங்களில் ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்னும் பலர்.. சாதாரணமாகப் பிறந்து, கோடிக்கணக்கான followersஐ உருவாக்குவது...ஒரு இன்ஸ்டிடியூஷனை உருவாக்குவது சாதாரணப்பட்டதா?

    பதிலளிநீக்கு
  18. 4000 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்

    எங்கள் blog வலைப்பதிவு ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துக்கள்!
    ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  19. என் பெண் கொஞ்சம் சின்ன வயதில் என்னைக் கேட்ட கேள்விதான்.... வராஹ அவதாரம் எடுத்தார், பூமியை கடலிலிருந்து தூக்கினார் என்று சொல்றீங்களே.. அப்போ கடல் எங்க இருந்தது? பூமியின் கடல் என்னவானது என்று கேட்டாள். உடனே ஙே ஙே தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரபஞ்சம் என்பது நிரைய இந்த உலகத்தைப் போல பல உலகங்களை உள்ளடக்கியது. அதில் ஒரு கடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூமியை வராஹ பெருமான் தூக்கினார் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  20. //இருக்கும் நிலைக்கு, குறைந்தபட்சம் யாராவது இருவருக்கு// - ஒருவருக்கு மனப்பூர்வமான நன்றிகள். ஒருவருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நன்றி சொல்ல நினைப்பது இறைவனுக்கு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 7 1/2 சனியில் என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுக் கவிழ்த்துவிட்ட சனி பகவானுக்கு.. ஹாஹா

    பதிலளிநீக்கு
  21. 4000 ஆவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! தங்களின் வலைத்தளம் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மேலும் மேலும் செழித்து வளர இனிய வாழ்த்துக்கள்!
    இந்த ஆலமர நிழலில் எல்லோருமே குளிர் காய்ந்து கொண்டிருக்கிறோம். மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறோம்! நாங்கள் தான் இதற்கு மனதார நன்றி சொல்ல வேண்டும்!

    பதிலளிநீக்கு
  22. கேள்விகளும் சமையல் குறிப்புகளும் எப்படி அனுப்புவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sri.esi89@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

      நீக்கு
    2. கேள்விகளை, இங்கே கருத்துரையில் கேட்கலாம். அல்லது 9902281582 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம். சமையல் குறிப்புகள் / கதை, கட்டுரைகளை மேற்கூறியுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

      நீக்கு
  23. பாஸ்தா - ஒரே ஒரு முறை ஏர்லைன்ஸில் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு நம் பாரம்பர்ய உணவு தவிர வேறு எதுவும் பிடிக்காது, டேஸ்ட் பண்ணவும் மாட்டேன். இதனால் நான் நிறைய இழந்திருக்கிறேன். bபேல்பூரி சாப்பிட்டுப் பார்க்கவே வெளிநாடு சென்று 20 வருடங்களாகிவிட்டது. என்னா டேஸ்ட். நார்த் இண்டியன் சைட் டிஷ், பாவ்பாஜி, என்று பலவற்றை நான் பலப்பல வருடங்களாக சாப்பிட்டதே இல்லை. அப்படியே நார்த் இண்டியன் சைட் டிஷ் வாங்கினாலும், மட்டர் பனீர், மலாய் கொஃப்தா என்று ஓரிரு வகைதான்.

    //'அடையார் ஆனந்த பவன்' தயாரிப்பை online மூலம் ஆர்டர்// - சமீபத்தில் இனிப்பு, காரம்லாம் 60 சதவிகித ஆஃபரில் ஆன்லைன்ல போட்டிருந்தான். நிறைய வாங்கிக் குவித்து, சாப்பிட்டு, எடையை அதிகரித்துக்கொண்டதுதான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  24. 4000 திவ்விய பிரபந்தம் பற்றி ஏதும் கேள்விகள் என்று நினைத்தேன் அதற்கு ஈடாக உங்கள் 4000 பதிவுகள் போலத் தோன்றியது மிகவும் அருமையான எங்கள் பிளாக் பத்திரிகை ஆசிரியர்கள் யாவருக்கும் மிகவும் நன்றியும் வாழ்த்துகளும் அருமையான கூட்டுக்குடும்ப நிகழ்ச்சிகள் போல் எங்கள் பிளாக் இருக்கிறது காலையில் எழுந்தவுடன் முதலில் பார்ப்பது தரிசிப்பது எங்கள் பிளாக் தான் பங்கு கொள்ளாவிட்டாலும் பார்ப்பதில் படிப்பதில் சுகம் தரும் எங்கள் பிளாகிற்கு வாழ்த்துகள் அன்புடன்

    பதிலளிநீக்கு
  25. 4000 ஆவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  26. ஒரு பதிவு எழுதவே டிங்கி அடிக்குது. 4000 பதிவுகள். உண்மையில் ஸ்ரீராமின் தன்னலமற்ற உழைப்பு மற்றும் ஊக்கமும் தான் இதனை சிறப்புடன் வெளியிட முடிகிறது. பாராட்டுகள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  27. 4000 பதிவுகள்
    பெரும் சாதனை
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  28. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! நாலாயிரம் பதிவுகள் காணும் எங்கள் ப்ளாகிற்கு என்றென்றும் வளர் பிறையாய் வளர்ந்து, வாசகர்களாகிய எங்கள் மனங்களில் ஒளியாய் மிளிர வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  29. தமிழ் வலையுலகில் எங்கள் பிளாக் தனியிடம் வகிக்கிறது. எபி குழுவின் அயரா உழைப்பு வியப்பையும் பிரமிப்பையும் கடந்த ஒன்று. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. பதில்கள்
    1. இவங்க, கமெண்ட் போடுவதற்காகவே UK or USA போய்ட்டு கமெண்ட் போட்டுட்டு இந்தியாவுக்குத் திரும்பியிருப்பாரோ? இருக்கும்..இருக்கும்... இருக்கும் நாட்டிற்கேற்ற மொழியில்தானே கமெண்ட் போடுவார்.

      நீக்கு
    2. ஹா ஹா - அவங்க மொபைலில் இன்னும் தமிழ் type செய்ய அவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. தெரியும் கேஜிஜி சார். குழந்தைங்களுக்குத் தமிழ் தெரியாது. வராது. ஆகவே இப்போ இருக்கும் செட்டப்பை மாத்த முடியாதுனு மாத்தலை. பின்னாடி அவசரமா ஆங்கிலம் தட்டச்சறச்சே பிரச்னை வருது.

      நீக்கு
  31. 4000 அடேங்கப்பா ! வாழ்த்துகள் .வாழ்த்துகள்.

    தொடர்ந்து சிறப்புற நடத்திவரும் அனைவருக்கும் நன்றி.

    கூட்டுக் குடும்பம்போன்று ஒற்றுமையாக பற்பல நிகழ்சிகளையும் பகிர்ந்து ,அலசி, உற்சாக ஊட்டங்கள் இட்டு, படிக்க இனித்திடும் எங்கள் ப்ளாக் வாழ்க பல்லாண்டு.

    பதிலளிநீக்கு
  32. பாஸ்டா எனக்கு பார்க்கவே பிடிப்பதில்லை! அதனால் இது வரை சுவைத்ததும் இல்லை!

    ஒரே ஒரு கேள்வி - ம்ம்ம்ம்... எல்லோரும் பிசி போல!

    4000 பதிவுகள்... ஆஹா. மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பதிவுகள். மனம் நிறைந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  33. நாலாயிரத்துக்கு வாழ்த்துகள். மேன்மேலும் நாற்பதாயிரம் ஆகப் பல்கிப் பெருக வாழ்த்துகள். பாஸ்தாவெல்லாம் பிடிக்கவே பிடிக்காது.

    பதிலளிநீக்கு
  34. நாலாயிரமாவது பதிவுக்கு நல்வாழ்த்துகள். ஆசிரியர் குழுவின் அயராத உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் பாராட்டுகள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!