சனி, 7 ஆகஸ்ட், 2021

ஓடற பாம்பைப் பிடிக்கிற வயசு...

 நண்பர்கள் என்றால் இவர்களல்லவோ நண்பர்கள்....

ஜார்கண்ட் மாநிலத்தில் வீரேந்திர குமார் என்பவர் தனது 29 வயதில் மரணமடைய, அவரது நணபர்கள் நாற்பது பேர் சேர்ந்து அந்தக் குடும்பத்துக்கு வீடு கட்டிக்க கொடுத்திருக்கிறார்கள்.  அது மட்டுமின்றி மரணமடைந்த தங்கள் நண்பரின் குடும்பத்துக்கு நாற்பது பெரும் சேர்ந்து மாதம் 15,000 கொடுத்து வருகிறார்கள்.

==================================================================================================

காட்டில் ஒன்பது கிலோமீட்டர் நடந்தே சென்று மூதாட்டிக்கு உதவிப்பணம் வழங்கும் அஞ்சலகப் பணியாளரை அறிவீர்களா?  இப்பணியைச் செய்வதற்கு ஒருநாள் முழுவதும் அவர் செலவிடுகிறார்.

==================================================================================================


ஓடற பாம்பைப் பிடிக்கிற வயசு என்பார்கள்.  அது சரி என நிரூபித்திருக்கிறார் ஒரு சிறுவன்.  இது பாசிட்டிவ் என்பதைவிட ஆச்ச்ர்யமான செய்தி என்றும் சொல்லலாம்.  அல்லது அந்த சின்னஞ்சிறுவனுக்கு அந்த அறிவு இருந்திருக்கிறது என்பதை நேர்மறைச் செய்தியாகவும் பார்க்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகானாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு.இவரது மகன் தர்ஷித், 7. அதே பகுதி யில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான்

தன்னை ஏதோ கடிப்பது போன்று உணர்ந்த சிறுவன், அதை விரட்டி சென்று அடித்துள்ளான். அடித்த பின், அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என தெரிய வந்துள்ளது. பின், பெற்றோர் உதவியுடன் பாம்பை எடுத்து கொண்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற சிறுவனை டாக்டர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால், பாம்பு கடித்ததால் ஏற்படும் அறிகுறிகள் எதுவும் சிறுவனின் உடலில் தெரியாததால், இரண்டு நாட்கள் விஷமுறிவுக்கான சிகிச்சை அளித்து, சிறுவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மறுநாள், சிறுவனின் கால் வீக்கம் அடைந்து, உடல் நலம் மோசமடைய துவங்கியது. இதனால், மீண்டும் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அங்கிருந்த டாக்டர்கள், சிறுவனை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், டாக்டர் பூவழகி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், தீவிர சிகிச்சை அளித்து சிறுவனுக்கு மறுவாழ்வு அளித்தனர்.

இது குறித்து, குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் சீனிவாசன் கூறியதாவது: சிகிச்சையின் போது ஒருநாள் சிறுவனிடம், 'பாம்பை எதற்கு கொண்டு வந்தாய்' என கேட்டோம்.அதற்கு, 'நான் பாம்பை கையில் கொண்டு வந்தால் தானே, என்னை எது கடித்தது என உங்களுக்கு தெரியும்' என, சிறுவன் பதில் அளித்தது வியப்பை ஏற்படுத்தியது.

=======================================================================================

உலகளாவிய ஒலிம்பிக் மனித நேயம் ! 

ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டி சென்ற வாரம் நடந்தது.  கத்தாரின் பார்ஷிம் என்பவரும்  இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கத்துக்காக கடுமையாக போராடினார்கள்.  இருவரும் 2.37 மீ உயரம் தாண்ட எஞ்சியவர்களால் முடியாமல் போனது. அதன் பின் இருவருக்கும் 2.37 மீ விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்சிக்க மூன்று முறையும் இருவராலும் தாண்ட முடியவில்லை. இறுதியாக ஒரே ஒரு சான்ஸ் கொடுக்க இத்தாலி வீரர் டம்பேரி கால் அடி அதனால் வலி காரணமாக பின் வாங்குவதாக அறிவித்தார்.  

ஆனால் கத்தார் வீரர் அதன்பின் செய்த செயல்தான் சிறப்பான தரமான சம்பவம்.  அவருக்கு தங்கம் உறுதியாக கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும், போட்டியாளர்களிடம் " நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்?  " என்று கேட்டார்.  ஒலிம்பிக் கமிட்டி, " இருவருக்கும் பகிந்தளிப்போம் " என்று கூறினர். உடனே அவரும் பின் வாங்குவதாக அறிவித்தார்.  எதிர் வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் பரிசு பெற தகுதியானவரே என்று இப்படி செய்து  தன் Sportsmanship யை நிருபித்தார் கத்தார் வீரர் பாஷிம். 

இருவருக்கும் தங்க பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது.  ஒலிம்பிக் வரலாற்றில் மிக அற்புதமான தருணங்களில் ஒன்று.



= = = = = =


37 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் பார்க்கலாம். இனிய நாளுக்கான
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. படித்த செய்திகளே. தேர்ந்தெடுத்துப் பகிர்ந்தவிதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. மிக அற்புதமான செய்தி தர்ஷீத் பற்றி தான் என்ன ஒரு முன் யோசனை! என்ன வீரம் இளங்கன்று பயம் அறியாது என்றால் இதுதான். காப்பாற்றிய டாக்டர் பூவழகிக்கு நமஸ்காரம். மனம் நிறைகிறது.

    பதிலளிநீக்கு
  5. ஒலிம்பிக்ஸ் ஆரம்பித்த நட்பும் நல் இதயமும் வாழ்க.மனம் பூக்கிறது

    பதிலளிநீக்கு
  6. வீரேந்திர நாத்தின் நண்பர்கள் பூரண ஆயுசுடன் நல் வாழ்வு பெற வேண்டும் எத்தனை நல்ல செய்தி இது.மிக நன்றி மா ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. ஒன்பது மைல் நடந்து அதுவும் காட்டுப் பாதையில் ,,உதவிப்பணத்தின் முக்கியத்துவம் உணர்ந்த பெருந்தன்மை. போற்றுவோம். அந்த அஞ்சல் அன்பர் வாழ்க எந்நாளும்

    பதிலளிநீக்கு
  8. மிக நல்ல செய்திகளை அளித்து மகிழ வைத்த கௌதமன் அவர்களுக்கும் மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. ஒன்பது கிலோ மீட்டர் நடந்து சென்று அளித்த பணத்தை அந்த மூதாட்டி என்ன செய்வார்?

    நேர்மறைச் செய்திகள் நன்று

    பதிலளிநீக்கு
  11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  12. தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டது நெகிழ வைக்கிறது

    பதிலளிநீக்கு
  13. முதல் செய்தி நெகிழ்வு.நண்பர்கள் வாழ்க!
    அஞ்சலக பணியாளர் சேவை எவ்வளவு கஷ்டமானது!

    "இளங்கன்று பயம் அறியாது' சிறுவன் செய்த செயல் அருமை. மறுவாழ்வு கிடைத்து விட்டது மகிழ்ச்சி.

    //இருவருக்கும் தங்க பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் மிக அற்புதமான தருணங்களில் ஒன்று.//

    அருமை.
    இன்று அனைத்து செய்திகளும் அருமை
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. இன்றைய பதிவின் செய்திகள் அருமை...

    கத்தார் பாஷிம் உண்மையிலேயே வீரர்..
    அவருடைய பெருந்தன்மை ஒலிம்பிக் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது...

    பதிலளிநீக்கு
  15. அனைத்தும் நற்செய்திகள் . நல்லமனங்கள் வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  16. இந்த வாரத்தின் செய்திகள் அனைத்தும் நன்று. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. சிறுவனைப் பற்றித் தொலைக்காட்சியிலும் காட்டினார்கள். நல்ல செய்திகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!