ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

சொந்த பந்தங்கள் அனுப்பிய படங்கள் - தொடர்ச்சி

 

KGY Raman  அனுப்பிய படங்கள் தொடர்கின்றன. வழக்கமாக நடை பயிற்சி செல்லும்போது உட்கார்ந்து சிறிது ஓய்வு எடுக்கின்ற ஆசனத்தில் வேறு ஒருவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்!!  
ரொம்ப நாட்களாக இந்த சாவி இந்த மரத்தில் இப்படித் தொங்கிக்கொண்டுள்ளது. எப்படி வந்தது, யார் தொங்கவிட்டார்கள், ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. 
கீழ் வரும் படம், மும்பை தாஜ் ஹோட்டல் (வேறொருவர்) எடுத்து அனுப்பிய படம்.

= = = =

32 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் எப்போதும் நலமுடன் இருக்க இறைவன்
  அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. வெள்ளையில் ஆரம்பித்து ,இளஞ்சிவப்பு ஆரஞ்ச் என்று வண்ணங்கள் காட்டும் மலர்கள்.

  மிக மிக அழகு.
  ஓய்வெடுக்கும் பூனையார்.
  மாஸ்க் மேல் வைக்கப் பட்ட பூ என்று ரசனையுடன் எடுக்கப்
  பட்ட படங்கள்.

  பதிலளிநீக்கு
 3. கடைசி வண்ணப்படம் காண்டில் ஸ்டிக்கா
  ஹூக்காவா. Candleabra?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேண்டில் ஸ்டிக் என்றுதான் நானும் நினைக்கிறேன்.

   நீக்கு
  2. கான்டில் ஸ்டிக் தான். மெழுகுவர்த்தி ஒளியில் சாப்பிட விரும்புவர்களுக்காக வைத்திருப்பார்கள். சில குறிப்பிட்ட டேபிள்கள் அப்படியானவர்களுக்கு என ரிசர்வ் செய்யப்பட்டிருக்கும்.

   நீக்கு
 4. நிழற்சாலை, மழை மேகம் கூடிய காலை நேரம்.
  சென்னையில் மழை என்று நண்பர் ஒருவரும் ,பேத்தியும்
  சொன்னார்கள்.:)
  எக்சோரா பூக்கள், பேர்ட் ஆஃப் பாரடைஸ்
  என்று மனதை நிறைக்கும் படங்கள்.

  சாவி தொங்கும் மரம் சஸ்பென்ஸ்.!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கென்னவோ, அந்தச் சாவியைப் பிரிக்காமல் எடுத்து தரையில் தேய்ப்பவர்கள் முன்பு பூதம் காட்சி தந்து, என்ன வரம் வேண்டும்னு கேட்கும்னு தோணுது.

   எந்த இடம் என்று சொல்லியிருந்தால் முயன்றிருக்கலாம்.

   நீக்கு
 5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  எங்கெங்கும் நலம் சூழ்வதற்கு வேண்டிக் கொள்வோம்...

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 6. அழகு.. எல்லாம் அழகு..

  பூக்கள் சிந்தும்
  புன்னகை அழகு..
  பூனையின் கண்களில்
  தூக்கமும் அழகு..

  பதிலளிநீக்கு
 7. பூக்களின் வண்ணம் மட்டும் கண்களைக் கவரவில்லை. வளாகத்தின் சுத்தமும் கண்களைக் கவர்ந்தது. இத்தனை சுத்தம் இங்கே பார்க்கவே முடியாது. பூனையார் நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கார். அதிரா அனுப்பி இருப்பாரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிராம்பட்டினம் அதிரடிதான் பதில் சொல்லவேண்டும்!

   நீக்கு
 8. பெரிய வளாகம். நல்ல பராமரிப்பு. அழகான பூச்செடிகள். அந்த பெஞ்ச் காலியாக இருந்தால் நிம்மதியாக உட்கார்ந்து பூக்களையும் அதில் தேன் உண்ண வரும் குருவிகளையும் பார்த்துக் கொண்டும் ரசித்துக் கொண்டும் இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாமா, நாம பெங்களூருக்கே போய் விடலாம்.:)

   நீக்கு
  2. போயிருக்கணும் வல்லி, 2000/2002 ஆம் ஆண்டிலேயே. என்னமோ திடீர்னு மனசு மாறி விட்டது! பத்து லக்ஷத்துக்கு சர் சிவி.ராமன் நகரில் அருமையான வீடு பார்த்து விட்டார். :) வேண்டாம்னு விட்டோம்.

   நீக்கு
 9. மாலைப் பொழுதில் நடக்க அருமையான இடம்.

  பதிலளிநீக்கு
 10. படங்கள் எல்லாம் அருமை. தோட்டத்தில் சாவி தொங்குகிறது துரு பிடித்து இருக்கிறது. தூக்கி ஏறிந்தது அதில் தொங்குகிறதோ!

  கடைசி படமும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. படங்கள் அனைத்தும் அழகு.

  ஆறாவது படம் மிகவும் அழகு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!