புதன், 25 ஆகஸ்ட், 2021

பெங்களூர் என்ன கொம்பா ?

 

அப்பாதுரை : 

இட்லி, வடை அல்லது பொங்கல், பூரி அல்லது தோசை மற்றும் காபியுடன் கூடிய மினி டிபன் சென்னையிலும் 75-100 ரூபாக்குக் கிடைக்கிறது - சுகாதாரமான டிபன் கடைகள் (அன்னபூரணி, சங்கீதா, மயிலாபூர் மாமி). பெங்களூர் என்ன கொம்பா ?

# உணவுப் பண்டங்கள் விலை பல காரணங்களால் மாறுபடும்.  இது லாஜிக்கை மீறிய நிலவரம். மசால் தோசை ஒரே ஊரிலேயே 75 முதல் 175 ௹ வரை இருக்க வாய்ப்புண்டு.  விவாதத்துக்கு அப்பாற்பட்ட சமாசாரம். 

பெங்களூர் கொம்பு இல்லை வாலாகவேதான் இருக்கட்டுமே..!!

கீதா சாம்பசிவம் - பதிவில் சொன்ன பதில் : 

"பெண்"களூர் மட்டுமல்ல ஆந்திராவிலும் ஓட்டல்களில் உணவுப் பண்டங்கள் விலை குறைவே! அதோடு இல்லாமல் இங்கே தமிழகத்தில் 60 ரூபாய்க்குக் குறைந்து தோசை கிடைப்பதில்லை. சாதா தோசை தான்! அதையும் மொறுமொறுவெனக் கொடுப்பதாய்ச் சொல்லிக் கொண்டு தூள் தூளாய்க் கொடுக்கிறாங்க/இல்லைனா உடைச்சு எடுக்கிறாப்போல் கொடுக்கிறாங்க! :(

& சாப்பாட்டு விஷயங்கள் மட்டும் அல்லாது, நகர சுத்தம், மக்கள் மனோ நிலை எல்லாவற்றிலும், சென்னையை விட பெங்களூரு கொம்பாக இருக்கிறது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. 

கேள்விகள் கேட்டவர்(களு)க்கு எங்கள் நன்றி. தொடர்ந்து, நிறைய கேள்விகள் கேளுங்கள். 

= = = = =

மற்றவர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை என்பதால் இதோ எங்கள் கேள்விகள் சில. 

1)  அன்றாட வேலைகளில் நீங்கள் அலுத்துக்கொண்டே செய்யும் வேலை எது?

2) உங்கள் சமையல் அறையிலோ, உங்கள் அறையிலோ அல்லது உங்கள் பீரோவிலோ அதது, அதனதன் இடத்தில் இருக்குமா - அல்லது ஒவ்வொன்றையும் எல்லா இடங்களிலும் தேடித் தேடித்தான் கண்டு பிடிப்பீர்களா? 

3) உங்கள் அன்றாட வேலைகளில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் வேலை எது?

4) " Thank you " என்ற பதத்தை அடிக்கடிப் பயன்படுத்துவீர்களா? ஒரு நாளைக்கு எவ்வளவு தடவைகள்? 

5) உங்களுக்கு யாராவது எதற்காவது நன்றி (Thank you) கூறினால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

a ) ஒரு புன்னகை 

b ) ஒரு கும்பிடு 

c ) " அட - இதுக்கெல்லாம் என்னங்க thanks ?"

d ) நீங்களும் ஒரு "thank you "  சொல்லிவிடுவீர்களா ? 

6) இதுவரையில் நீங்கள் " Thank you " சொல்லி, அதைக் கேட்டவரிடமிருந்து வந்த விசித்திரமான response என்று எதைச் சொல்வீர்கள்?

= = = =

படம் பார்த்து, கருத்து சொல்லுங்க 

1) 

2)  

3) 

4) 

5) 

= = = = 87 கருத்துகள்:

 1. உணவுப்பொருட்களின் விலையையும், சுகாதாரத்தையும் பொறுத்தமட்டில் பெங்களூர், தமிழகத்தைவிட சூப்பர்தான்.

  தனிப்பட்ட முறைல, எனக்கு சென்னை உணவு வகைகள்தான் பிடிக்கும். அதைத்தான் என் நாக்கு விரும்புகிறது.

  இங்கு நான் சாப்பிட்ட முல்பாகல் தோசை பாத் (நெய் ரோஸ்டின் உள், கொஞ்சம் மசாலா, எலுமிச்சை சாதம் வைத்துத் தரப்படுவது, இது தவிர சட்னி சாம்பார்) 75 ரூபாய். நான் சாப்பிட்ட தோசைகளிலேயே அதிக விலை (பெங்களூரில்) இதுதான். மற்றபடி 30-40 ரூபாயில் தோசை, அதைவிடக் குறைவாக இட்லி, காபி 10 ரூபாய் என்றுதான் பெரும்பாலும் விலை.

  பதிலளிநீக்கு
 2. 1. //நீங்கள் அலுத்துக்கொண்டே செய்யும் வேலை// - ஒரே மாதிரியாக தினமும் செய்யக்கூடிய வேலை, நம்மை அலுத்துப்போகச் செய்யும். நாம்தான் அதில் கொஞ்சம் இன்னொவேடிவ் ஆக, ஏதாவது மாறுதலைக் கொண்டு வரணும்.

  2. //அதது, அதனதன் இடத்தில் இருக்குமா // - எனக்கு அந்த அந்த இடங்களில் வைத்துத்தான் பழக்கம் (விதிவிலக்குகள் இருக்கும்). என் கான்சப்ட், வீட்டிற்குள் கண்ணை மூடிக்கொண்டு நுழைந்தாலும் அந்த அந்த இடங்களுக்குச் சென்று, எதை எடுக்க வேண்டுமோ அதை எடுக்க முடியணும். நான் உட்கார்ந்த இடத்திலிருந்தே, இந்த இடத்தில் இந்தப் பகுதியில் அது இருக்கும் என்று சொல்வேன்.... (ஆனா இதனை எங்க வீட்டிலேயே பின்பற்றுவதில்லை. அதனால் கிச்சன் என் கையில் வரும்போது எரிச்சலாக இருக்கும் ஹாஹா)

  பதிலளிநீக்கு
 3. 3. //" Thank you " என்ற பதத்தை அடிக்கடி// - அதிகமாகப் பயன்படுத்துவேன், பிறர் செய்யும் உதவிக்கெல்லாம். அது யார் என்பதற்கு விதிவிலக்குகள் கிடையாது. காய்கறி கடைக்காரர் முதற்கொண்டு.

  4. //நன்றி (Thank you) கூறினால் உங்கள் பதில்// - பெரும்பாலும் welcome.

  பதிலளிநீக்கு
 4. (2) - இந்த கொரோனா காலத்தில், லிவிங் ரூம் பாதி வரை, ஓரங்களில், நாங்கள் வாங்கும் பொருட்கள் (ஆன்லைன் டெலிவரி) பாக்ஸில் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அது கொஞ்சம் வீட்டின் (ஹால் வரை) neatnessஐ பாதிக்கிறது. அதற்கு ஏதாவது செய்யணும் என்று நினைத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. //நகர சுத்தம், மக்கள் மனோ நிலை எல்லாவற்றிலும், சென்னையை விட பெங்களூரு// - நீர்நிலைகளைப் பராமரிப்பது, ஓரளவு மரங்களை maintain பண்ணுவது, மக்களுக்கான பல பூங்காக்கள் (அதில் ஓய்வு ராசாக்கள் எப்போதும் குடித்துவிட்டுத் தூங்காமல் பார்த்துக்கொள்வது), மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுவது (மினிமம் 25 ரூபாய்) என்று பலவிதங்களிலும் பெங்களூரு பெட்டர். இங்கும் சென்னை ஆட்டோவாலாக்கள் மனோபாவம் வர ஆரம்பித்துவிட்டது சோகம்தான் (அவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்)

  பதிலளிநீக்கு
 6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 7. சென்னையை பல காரணங்களால் பிடிக்காது...

  பிறகு அங்கு இட்லி என்ன விலைக்கு விற்றால் என்ன?.. தோசை தவிடு பொடியாய் இருந்தால் என்ன?..

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மன மகிழ்ச்சியும் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 9. சில சமயங்களில் திருச்சியோடு ஒப்பிட்டால் சென்னையில் விலை குறைவோ எனத் தோன்றும், முக்கியமாய்க் காடரிங் சாப்பாடு விஷயத்தில். சென்னையில் பெரம்பூர்ப்பக்கம் நண்பர் வாங்கும் காடரிங்கில் ஞாயிற்றுக்கிழமைச் சிறப்பாக ஒரு இனிப்பு, பாயசம், அப்பளம் கொடுக்கிறாங்க. விலை வழக்கமான நூறு ரூபாய் தான். இங்கே நூறு ரூபாய்க்கு சாம்பார், ரசம், கறி, கூட்டு/எல்லா நாட்களிலும். அதிலும் ஒருத்தர் தான் சாப்பிடலாம். :( தமிழ்நாட்டிலேயே லாபம் எல்லாவற்றிலும் பார்க்கும் மனோபாவம் அதிகம்.

  பதிலளிநீக்கு
 10. நாங்க சிகந்திராபாதில் இருந்த எழுபதுகளின் கடைசியில் லிட்டர் பால் ஒன்றரை ரூபாய். கள்ளிச் சொட்டுப் போல் இருக்கும். காய்கள் எல்லாம் சிரிப்பாய்ச் சிரிக்கும். (ஹிஹிஹினு தான்) கொய்யாப்பழம்/சப்போட்டா எல்லாம் பெரிது பெரிதாகத் தேங்காய் அளவுக்கு இருக்கும். வாசலிலேயே வரும். அங்கேயே வீடு கட்டிக் கொண்டு இருக்க வேண்டியவங்க துரதிர்ஷ்ட வசமாகச் சென்னைக்கு வரும்படி ஆனதோடு இல்லாமல் அங்கேயே வீடும் கட்டினோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா அப்படியா! தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
  2. இந்த கீசா மேடம், மைசூர்ல நாங்க இருந்திருக்கணும், பெங்களூர்ல இருந்திருக்கணும், அம்பத்தூர்லயே இருந்திருக்கணும்.....இப்போ செகந்திராபாத்தில்....

   @ஸ்ரீராம் - இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே - இந்தப் பாட்டை என் விருப்பமாக வெள்ளிக்கிழமை போட்டுவிடுங்கள். நான் இதை கீதா சாம்பசிவம் மேடத்துக்கு டெடிகேட் செய்ய விரும்புகிறேன்..ஹாஹ்ஹா

   நீக்கு
  3. ஆஹா, எப்படிக் கண்டு பிடிச்சீங்க நெல்லை? முன்னர் எழுதி இருந்ததைப் படிச்சீங்களா? :) உண்மைதான். மைசூரிலும் வீடு பார்த்தோம். கிட்டத்தட்ட முடிக்க வேண்டியது, பின்னர் வேண்டாம்னு சொல்லிட்டோம். அதே போல் மேற்குத் தாம்பரத்தில் தோஷி&தோஷி கட்டிய அடுக்கு மாளிகைக் குடியிருப்புக்கு முன் பணம் கொடுத்துவிட்டுப் பின்னர் சென்னை வேண்டாம்னு திரும்பப் பணத்தை வாங்கிட்டோம்.

   நீக்கு
 11. 62--63 ஆம் ஆண்டுகளில் அண்ணா/தம்பி பூணூல் கல்யாணம் திருமலையில் போட்டப்போத் திரும்பி வரச்சே சென்னை சுற்றுப்பயணம். அப்போதே பிடிக்கலை சென்னை என்றாலே வெறுப்பு. ஆனால் அதன் பிறகு தான் அடிக்கடிச் சென்னைப் பயணம். பின்னர் கல்யாணம் ஆகிப் புனே போக வேண்டியவள் அவருக்குச் சென்னை மாற்றலாகியதால் அங்கே குடித்தனம். அதன் பின்னரும் சென்னைக்கு வருவதும் போவதுமாகத் தான் இருந்தோம். கடைசியில் 2000 ஆவது ஆண்டில் "பெண்"களூர் சர்சிவிராமன் நகரில் வீடு பார்த்து வாங்க வேண்டியதும் தட்டிப் போச்சு. அதன் பின்னர் சென்னை தான்/நரக வாழ்க்கை தான் என நினைச்சோம். விதி இங்கே ரெங்கன் காலடியில் கொண்டு விட்டிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னாச்சு இவங்களுக்கு... அம்பத்தூரை ஆஹா ஓஹோன்னு புகழ்வாங்களே... அதிலும் அங்குள்ள மரங்கள் (இவங்களுக்குச் சொந்தமில்லை...வீட்டுக்கு வெளியே இருக்கு ஹாஹா), காம்பவுண்டுக்குள்ள உள்ள சுப்புக் குட்டிகள்... என்ன எல்லாத்தையும் இப்போ வெறுத்தமாதிரி பேசறாங்க?

   நீக்கு
  2. அம்பத்தூரைப் புகழவே இல்லை. தோட்டத்தை மட்டும் அவ்வப்போது நினைவு கூர்வேன். மரங்கள் எல்லாம் குழந்தை போல் வளர்த்தவை. முந்தாநாள் கூடப் பேசிண்டு இருந்தோம். :(

   நீக்கு
  3. என்னோட ஆரம்ப காலப் பதிவுகளில் சென்னை பற்றிய என் கருத்தைப் படிக்கலாம்.

   நீக்கு
  4. அடுத்த வாரக் கேள்வி: சென்னையை ஏன் நிறைய பேர் வெறுக்கிறார்கள்?

   நீக்கு
 12. குழந்தை நிற்க தாய் ஊஞ்சலாடுவது வித்தியாசமான புகைப்படம்தான்.

  பதிலளிநீக்கு
 13. காலை வணக்கம்.

  தில்லியில் தோசை என்ற பெயரில் எதையோ ஒன்று கொண்டு வைக்கிறார்கள்! கூடவே ஜீரகம் தாளித்த சாம்பார்! பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுவதில்லை எனக்கு! ஆனாலும் வட இந்தியர்கள் இதனை போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள். விலையும் அதிகம் தான். இதில் நம் ஊரில் கேள்விப்படாத தோசா வகைகள் வேறு இங்கே உண்டு - பனீர் தோசை உட்பட!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லி தோசை கொடுமை - என்றைக்குமே.. அந்த நாளில் நிருலாஸ் (இன்னும் இருக்கிறதா?) போய் சாப்பிடுவோம்.. சகிக்காது. ஆர்கேபுரம் பக்கம் ஒரு ஆந்திரர் தமிழ் மெஸ் நடத்தி வந்தார்.. ஞாயிறு அன்று மட்டும் அங்கே சாப்பிடுவேன். தில்லியின் இட்லி தோசை சாம்பாருக்கு பயந்து நான் பூரி மசாலாவுக்கு கட்சி மாறினேன் கொஞ்ச நாள்.. அந்த மசாலாவும் ஒரு மாதிரி இருக்கும்.

   நீக்கு
  2. நிரூலாஸ் இப்போது இல்லை அப்பாதுரை. இருக்கும் ஒன்றிரண்டும் முந்தையவர்களின் பெயரை மட்டுமே பயன்படுத்தும் சிறு கடைகள். போலவே மெஸ் போன்றவையும் ஒவ்வொன்றாக மூடப்பட்டுவிட்டன. சமீப வருடங்களில் தமிழர்கள் பணி நிமித்தம் தில்லிக்கு வருவது வெகுவாக குறைந்து விட்டது - இல்லை எனும் அளவுக்கு ஆகிவிட்டது. அதனால் மெஸ் தேவைகளும் குறைய ஆரம்பித்து இன்றைக்கு கரோல் பாக் பகுதியில் தமிழர்களுக்கான மெஸ் இல்லவே இல்லை. ஒரு காலத்தில் அங்கே நிறைய மெஸ் இருந்தது.

   நீக்கு
  3. தகவல்களுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 14. பசி வந்து சாப்பிட்டால் எதுவும் இனிக்கும்...!

  நன்றி...!

  பதிலளிநீக்கு
 15. 1)  அன்றாட வேலைகளில் நீங்கள் அலுத்துக்கொண்டே செய்யும் வேலை எது?

  வயசானதால் தினசரி வேலைகளையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டி உள்ளது (அலுத்துக் கொண்டல்ல). முக்கியமாக காலைக்  கடன்கள். சுஜாதா சொன்னமாதிரி அது தீர்ந்தால் ஒரு ஆசுவாசம்.
   
  2) உங்கள் சமையல் அறையிலோ, உங்கள் அறையிலோ அல்லது உங்கள் பீரோவிலோ அதது, அதனதன் இடத்தில் இருக்குமா - அல்லது ஒவ்வொன்றையும் எல்லா இடங்களிலும் தேடித் தேடித்தான் கண்டு பிடிப்பீர்களா? 

  அது என்னவோ நாளாக நாளாக குப்பைகள் சேர சேர ஒழுங்கு முறைகள் தவறி விடுகின்றன. ஆனால் ஒன்று எப்போதும் தேடும் பொருள் சீக்கிரம் கிடைக்காது. எப்போதோ தேடிய பொருள் திடீரென தென்படும். சமையலறை என்றால் வழக்கமாக உபயோகிக்கும் பொருட்கள் ஒரே இடத்தில இருப்பதால் தேட வேண்டாம். ஸ்டாக் மட்டும் வேறே இடத்தில இருக்கும். அதை தேடி எடுக்க வேண்டி இருக்கும்.

   3) உங்கள் அன்றாட வேலைகளில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் வேலை எது?

  Browsing.

  4) " Thank you " என்ற பதத்தை அடிக்கடிப் பயன்படுத்துவீர்களா? ஒரு நாளைக்கு எவ்வளவு தடவைகள்? 

  பதம் உபயோகிக்க வேண்டிய அவசியம் நேரவில்லை, வெளியில் செல்வதில்லை. யாரும் வருவதில்லை கொரியர் தவிர. 

  5) உங்களுக்கு யாராவது எதற்காவது நன்றி (Thank you) கூறினால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?a ) ஒரு புன்னகை
   b ) ஒரு கும்பிடு
   c ) " அட - இதுக்கெல்லாம் என்னங்க thanks ?"
  d ) நீங்களும் ஒரு "thank you "  சொல்லிவிடுவீர்களா ? 

  புன்னகை. 

  6) இதுவரையில் நீங்கள் " Thank you " சொல்லி, அதைக் கேட்டவரிடமிருந்து வந்த விசித்திரமான response என்று எதைச் சொல்வீர்கள்?

  ஒரு குடடீஸுக்கு தேங்க் யு சொல்ல பதிலுக்கு அது நோ மனுஷன் என்று சொன்ன பதில். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
 16. இந்த தளத்திற்கு நான் புதியவள்.
  இந்த குறியீடுகள் யார் யாரை குறிக்கின்றன?

  ‘இஃகி’ என்றால் என்ன?

  வைஷ்ணவி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது அடுத்த புதனுக்கான கேள்வியா?

   நீக்கு
  2. ஹாஹாஹா, வைஷ்ணவி. இஃகி, இஃகி, என்பது நான் மட்டுமே பிரயோகிக்கும் வார்த்தை. ஒரு முறை ஹிஹிஹினு நண்பர் ஒருவருக்குக் கருத்துரை போட்டப்போ, வடமொழி வார்த்தைகளைத் தமிழில் சேர்க்காதீங்கனு ஒருத்தர் வந்து முறைச்சார். (சில ஆண்டுகள் முன்னர்) அப்போத் தான் சரி, தமிழிலேயே சிரிப்போம்னு "இஃகி, இஃகி, இஃகி" னு போட ஆரம்பிச்சேன், குழுமங்களில். பின்னர் அது தொடர்ந்து விட்டது.

   நீக்கு
  3. கௌதமன் சார் என்ன பதில் சொல்றார்னு அடுத்த வாரம் பார்ப்போம்

   நீக்கு
  4. ஆமாம்… உங்க ப்லாகில் என்னால் நுழைய முடியவில்லை, அதான் இங்க கேக்கறேன்… தப்பா நினைக்காதீங்க..

   வைஷ்ணவி

   நீக்கு
  5. // கௌதமன் சார் என்ன பதில் சொல்றார்னு அடுத்த வாரம் பார்ப்போம்// அதான் நீங்களே சொல்லிட்டீங்களே !!

   நீக்கு
 17. @ வைஷ்ணவி..

  // இஃகி’ என்றால் என்ன?.. //

  இப்படியானால் அதிகப்படியான நகைச்சுவை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. &, $, # போன்ற குறியீடுகள் யார் யாரை குறிக்கின்றன? (இவற்றை வழக்கமாக புதன் கேள்வி பதிலில் பார்த்திருக்கிறேன்).


   நன்றி கௌதமன், துரை செல்வராஜு!

   வைஷ்ணவி

   நீக்கு
  2. & கௌதமன் சார் சொல்லும் பதில்கள், $ கேஜிஎஸ் (ஞாயிற்றுக்கிழமைகளில் படம் போடுபவர், எ.பியின் ஆசிரியர்களில் ஒருத்தர்) சொல்லும் பதில்களைக் குறிக்கும். # என்பதும் எ.பியின் ஆசிரியர்களில் ஒருவரான கே.ஜி.ஒய், ராமன் அவர்களைக் குறிக்கும். * நீல நிறத்தில் இப்படிக் குறியீட்டுடன் பதில் வந்தால் அது ஶ்ரீராம்.

   நீக்கு
  3. இந்த லிச்டில் பெண்மணிகள் யாரும் இல்லையே? :-(

   வைஷ்ணவி

   நீக்கு
  4. ஒருவர் இருக்கிறார். எப்போதாவது பதில் சொல்வார்.

   நீக்கு
  5. அச்சச்சோ நானா? (வைஷு,ரொம்ப தான் ஆசை உனக்கு)!
   வைஷ்ணவி

   நீக்கு
  6. காசு சோபனாவா? என்னிக்கு வந்து என்ன பதில் சொல்லி இருக்கார்? அவர் தான் மறைந்திருந்தே பார்க்கும் மர்மவாதி ஆச்சே! யாருனே தெரியலை. எல்லோரையும் கேட்டுப் பார்த்தாச்சு. சொல்ல மாட்டேங்கிறாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
 18. எனக்கு பொருட்கள் எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும் பெரும்பாலும் ஒழுங்காகவே இருக்கும். வீட்டில் மற்றவர்கள் அப்படி இருக்கமாட்டார்கள் அந்நேரம் கோபம் வரும் திட்டிவிட்டு ஒழுங்கு படுத்துவேன்.

  நன்றி அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை.

  கும்பிடுபோடும் நாய்குட்டிகள் ரசனை.

  பதிலளிநீக்கு
 19. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
  நிறை ஆரோக்கியத்தோடு அனைவரும் வாழ
  இறைவன் அருளவேண்டும்.

  கேள்விகள் பதில்கள் சுவாரஸ்யம்.
  நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 20. முதலில் படங்கள்,
  குரங்கார் ஹேண்ட்பாகை ஆராய்வது ,
  சாப்பிடும் பொருளுக்காக.இல்லாவிட்டால்
  எறிந்து விடுவார் ஆக இருக்கும்.

  இரண்டு குட்டிகளும் தாங்க் யூ சொல்லிக் கொள்கின்றன.

  ஊஞ்சல் அக்காவின் தலைமுடியைச் சின்னத்தங்கை
  இழுக்கிறாள்.
  அக்கா அலறாமல் என்ன செய்வார்:))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊஞ்சல் படத்தை உன்னிப்பாக கவனித்துள்ளீர்கள் ! நன்று, நன்றி.

   நீக்கு
 21. @ வைஷ்ணவி..

  // &, $, # போன்ற குறியீடுகள் யார் யாரை குறிக்கின்றன?.. //

  அதெல்லாம் தங்கமலை ரகசியம்!!..
  :)

  பதிலளிநீக்கு
 22. எஜமானரை இழுத்துச் செல்லும் நாய்க் குட்டி:)
  அவர் ஸ்கேட்போர்டில் விழுந்திருப்பது இன்னும் விசேஷம். உட்கார்ந்திருப்பவர் வேறு சிரிக்கிறார்..:)


  பதிலளிநீக்கு
 23. பூனை நாய் சம்பாஷணை.
  '' என்னய்யா என் ஏரியாவுக்கு வந்துட்ட?
  ''அதுக்கு என்னா செய்ய முடியும்? இருக்கிற
  இடம் உனக்கும் எனக்குமே போதலை. இதுல
  மனுஷங்க குறுக்க நெடுக்க
  போய்க்கிட்டே இருக்காங்க!!!!"

  பதிலளிநீக்கு
 24. இடம் மாறிப் பொருட்கள் வைக்கப் பட்டால்
  சங்கடம் தான். என் அறையில் அது நிகழ வாய்ப்பில்லை.

  சமயலறையில் மாறி இருந்தால் அலுப்புதான் வரும்.
  எங்க வீடு, சென்னை என்றால்
  அங்கூ மாற்றம் செய்வது நான் மட்டுமே:)

  உணவைப் பொறுத்தவரையில் மதுரை மிகப் பிடிக்கும்.
  விலை குறைவோ கூடுதலோ
  தரமான உணவு.

  பதிலளிநீக்கு
 25. நான் எப்போவுமே எந்தப் பொருளையும் இடம் மாற்ற மாட்டேன். இரண்டு மாதங்களாகப் படுத்துக்கொண்டே எது எங்கே இருக்குனு சொல்லுவேன். இப்போக் கொஞ்சம் தலைகீழ் தான். மாற்றிப் பழையபடி கொண்டு வரணும்.

  அலுத்துண்டே செய்யற வேலைனு பார்த்தால் தேய்த்துக் காய வைத்த பாத்திரங்களை அதனதன் இருப்பிடத்தில் கொண்டு வைப்பது தான். இப்போ எனக்குப் பதிலாக நம்ம ரங்க்ஸ் அலுத்துக்கறார். :)))) யாருக்குமே இந்த வேலை பிடிக்காது போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அதுதான்! பாத்திரங்கள் மட்டும் அல்ல; காய்ந்த துணிகளை மடித்து எடுத்து வைப்பதும் அப்படித்தான்.

   நீக்கு
  2. ஆமா, இல்ல! காய்ந்த துணிகளை எடுத்து வைப்பதும் அலுப்பு வர வைக்கும்.

   நீக்கு
 26. உங்கள் அன்றாட வேலைகளில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் வேலை எது?//////

  Net.Internet.

  பதிலளிநீக்கு
 27. வெளி ஆட்கள் தவிர்த்து யாருக்கும் அதிகம் நன்றி சொன்னதில்லை.
  அதிக நேரம் எடுத்துக்கும் வேலை? ம்ஹூம், அப்படி எதுவும் இல்லையே!
  எனக்கு "நன்றி" சொல்பவர்களுக்கு நானும் பதிலுக்கு நன்றி தெரிவிப்பேன்.

  பதிலளிநீக்கு
 28. பொம்மைங்க இரண்டும் விளையாடுதுங்க! எந்தப் பாப்பாவின் கற்பனையோ?
  இழுத்துக் கொண்டு போகும் குட்டிக்கு வலிக்கப் போறதே!
  குரங்கார் கைப்பையை ஆராய்ந்து எதை எடுத்து வீசிப் போடப்போறாரோ!
  அந்தப் பெண்ணின் குழந்தை இல்லை அதுனு நினைக்கிறேன். அம்மாவாக இருந்தால் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்க மாட்டாள். குழந்தையை உட்கார்த்தி வைத்து ஆட்டி விடுவாள்.
  டாம்& ஜெரியை நினைவூட்டும் கடைசிப் படம்.

  பதிலளிநீக்கு
 29. எல்லா வேலைகளுக்கும் குறிப்பிட்ட நேரம்னு வைச்சிருப்பதால் அதிக நேரம்னு எந்த வேலையையும் சொல்ல முடியாது. இணையத்துக்கு வந்தாலும் குறிப்பிட்ட நேரம் கடந்து விட்டால் என்ன செய்து கொண்டிருந்தாலும் கணினியை மூடிடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீசா மேடத்திடம் இந்த குணமும், 'உன் கருத்து உனக்கு என் கருத்து எனக்கு' என்ற குணமும் ரொம்பவே எனக்குப் பிடிக்கும். எனக்கெல்லாம் ஏகப்பட்ட வேலைகள் இருந்தபோதும், சும்மா, சுதர்ஷன் க்ரியா செய்யும்போது ஹாட்ஸ்டாரில் சூப்பர் சிங்கரோ இல்லை குக்கு வித் கோமாளியோ பார்க்க ஆரம்பித்தால், ரொம்ப நேரம் அதில் இருந்துவிடுவேன்.

   நீக்கு
 30. கேள்விகளும் ,பதில்களும் நன்றாக இருக்கிறது.
  ஓட்டலில் எந்த விலை வாசியும் தெரியாது.

  ஓட்டலுக்கு ஓட்டல் விலை வித்தியாசப்படும்தான்.
  நீங்கள் அனுப்பி இருக்கும் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. சிலது சிரிப்பை வரவழைக்கிறது.


  உங்கள் சமையல் அறையிலோ, உங்கள் அறையிலோ அல்லது உங்கள் பீரோவிலோ அதது, அதனதன் இடத்தில் இருக்குமா - அல்லது ஒவ்வொன்றையும் எல்லா இடங்களிலும் தேடித் தேடித்தான் கண்டு பிடிப்பீர்களா?

  எல்லாம் அது அது இடத்தில் இருக்க வேண்டும் எனக்கு .
  இடம் மாற்றினால் கோபம் வரும். எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கவில்லை என்றால் மீண்டும் அதை அங்கே வைக்கும் போது அலுத்துக் கொள்வேன்.
  பிறரிடம் அதை எதிர்ப்பார்ப்பதும் கஷ்டம்.
  அவர் அவர் அவர்களுக்கு தெரிந்த மாதிரி வாழ்கிறார்கள்.
  அதை சுட்டிக் காட்டாமல் இருந்தால் வீடு அமைதியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // எல்லாம் அது அது இடத்தில் இருக்க வேண்டும் எனக்கு .
   இடம் மாற்றினால் கோபம் வரும். எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கவில்லை என்றால் மீண்டும் அதை அங்கே வைக்கும் போது அலுத்துக் கொள்வேன்.
   பிறரிடம் அதை எதிர்ப்பார்ப்பதும் கஷ்டம்.
   அவர் அவர் அவர்களுக்கு தெரிந்த மாதிரி வாழ்கிறார்கள்.
   அதை சுட்டிக் காட்டாமல் இருந்தால் வீடு அமைதியாக இருக்கும்.// ஆம், நீங்கள் சொல்வது சரியே.

   நீக்கு
 31. மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள்,., நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!