திங்கள், 30 ஆகஸ்ட், 2021

'திங்க'க்கிழமை :     திருநெவேலி ஒக்கோரை      - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 எங்க வீடுகள்ல, தீபாவளிக்குத்தான் இந்த ஸ்வீட் செய்வார்கள். அப்புறம் வளர்ந்து வேலை பார்க்கச் சென்ற பிறகு, எங்க ஊர் ஒக்கோரையைச் சாப்பிடும் வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது.  துபாய், பஹ்ரைன்ல, தீபாவளியின்போது இதெல்லாம் மெனெக்கெட்டுப் பண்ணுவதில்லை.

எப்பயாவது ஒரு தீபாவளியின்போதுதான் பண்ணுவோம். சின்ன வயசுல, பல இனிப்பு வகைகள், அந்த அந்தப் பண்டிகையின்போதுதான் பண்ணுவாங்க. அதனால அதன் மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. அப்புறம் எல்லா இனிப்புகளும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் என்ற நிலை வந்துவிட்ட பிறகும், நிறைய அந்த அந்த பாரம்பர்ய இனிப்புக் கடைகள் வந்துவிட்ட பிறகும் (நெல்லைல லாலாக் கடைகள் நான் 4ம் வகுப்பு படிக்கும்போதே உண்டு. ஆனால் அங்கெல்லாம் போய் மைசூர்பாக்கு வாங்கிச் சாப்பிட மாட்டோம். அல்வா, மிக்சர் மட்டும்தான்), இனிப்பின் மீதான ஆர்வம் கொஞ்சம் குறைந்துவிட்டது. எந்தக் கடையில் எது நல்லா இருக்கும் என்று அலசி ஆராய்ந்து அந்தக் கடையில் மட்டும் தேவையானபோது வாங்குவது என்றாகிவிட்டது.


அந்த ஊர்ல இருக்கும்போது என் மனைவியிடம், எதற்கு கஷ்டப்பட்டுக்கொண்டு இத்தனை வகைகளைச் செய்கிறாய் (ஸ்ரீஜெயந்தி, தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது), கடையில் காசைக் கொடுத்தால் எது வேண்டுமோ அதை வாங்கிக்கொள்ளலாமே என்று சொல்லுவேன். நாள் முழுவதும் கஷ்டப்பட்டு எதற்கு இத்தனை இனிப்பு கார வகைகள் என்பது என் எண்ணம். எனக்குமே குழம்பு, சாத்துமது என்றெல்லாம் தினமும் சாப்பிடப் பிடிப்பதில்லை. ஏதாவது ஒன்று மட்டும் பண்ணு என்று சொல்லிவிடுவேன். வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் (போகி அன்று என நினைவு)  எல்லாவற்றையும் பண்ணச் சொல்லி வாழை இலையில் சாப்பிடுவோம்.  சரி.. இன்றைய செய்முறைக்கு வருகிறேன்.


சென்ற நவம்பரில் இங்கு நான் ஒக்கோரை செய்தேன்.  நிறைய மெதட்டில் இதனைச் செய்யலாம். நான் என் அம்மா ஒரு தடவை சொன்ன முறையில் செய்தேன். அதை தி.பதிவாக எழுதுகிறேன்.


தேவையானவை

 

கடலைப்பருப்பு 1 கப்

பொடித்த வெல்லம் 1 கப்

தேங்காய் துண்டுகள் - பல்லுப் பல்லா - 2 மேசைக்கரண்டி

முந்திரி - 2 மேசைக்கரண்டி

ஏலக்காய் பொடி

நெய் 2 மேசைக்கரண்டி (அல்லது 3)

தண்ணீர் தேவைக்கேற்ப


செய்முறை


1. கடலைப்பருப்பை சிவக்க வெறும் வாணலில வறுக்கணும். நல்ல வாசனை வரணும். இதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.


2. தேங்காய் பற்கள், முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.


3. கடலைப்பருப்பை முழுவதும் மூழ்கடித்து, அதற்கு மேலும்  இருக்கும்படியாக, 3 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனைச் சுட வைக்கணும். ரொம்ப அதிகமாகச் சுடவைக்கணும். கொதிக்க வைத்த வெந்நீரை, கடலைப்பருப்பு பாத்திரத்தில் விட்டு, உடனே பாத்திரத்தை நன்றாக மூடி வைக்கவும். 2 மணி நேரம் அது நன்றாக ஊறட்டும் (அதாவது வெந்நீரில் தளிகையாகும்)


4.  பிறகு நீரை முழுவதுமாக வடிக்கவேண்டும். பத்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டாலும், முழு நீரும் வடியவைக்கணும்.  பிறகு பல்சரில் போட்டு (மிக்சியில்) பொடிக்கவும். இது மணல் மணலாக உதிரும்.


5. கடாயில் வெல்லம், கொஞ்சம் தண்ணீர் (அரை கப்) சேர்த்து சூடுபடுத்தி பாகு வைக்கவும்.  பாகு பதம், தக்காளி பதத்திற்கும் சிறிது அதிகமாக. அதாவது தண்ணீரில் விட்டால் உருட்ட வரவேண்டும். 


6. பாகில் பொடித்த கடலைப்பருப்பைச் சேர்த்துக் கிளறணும். சிறிது நேரத்தில் உதிர ஆரம்பிக்கும் (ஆரம்பத்தில் பாகில் சேர்த்ததனால் கொசகொசவென இருக்கும்).  கடலைப்பருப்பைச் சேர்த்துக் கலக்கும்போதே, அடுப்பை அணைத்துவிடலாம். இப்போ நெய்யும் சேர்த்துக் கிளறணும். உதிர ஆரம்பித்த உடன், ஏலப்பொடி, தேங்காய், முந்திரி சேர்த்துக் கலக்கவும்.


7. சூடு ஆற ஆற, ரொம்பவே உதிர்ந்துவிடும்.


8. பச்சைக் கற்பூரம் சேர்த்தால், கோவில் பிரசாத வாசனை வரும் என்பதால்,  நான் எப்போதும் சிறிது சேர்ப்பேன். விருப்பமிருந்தால் சேர்க்கலாம். (ஆனால் இது செய்த அன்று சேர்க்கலை. வீட்டில் மற்றவர்களுக்கு அது பிடிக்காது என்பதால்)











எனக்கு, நானே effort எடுத்துச் செய்த பிறகு, சாப்பிடுவதில் ஆர்வம் குறைந்துவிடுகிறது. மத்தவங்க சாப்பிட்டுட்டு, நல்லா இருக்கு என்று சொன்னாலே நான் சாப்பிட்ட திருப்தி வந்துவிடுகிறது.  என் வசம் கிச்சன் வரும்போதும்,  தளிகை பண்ணினோமா, மற்றவங்களுக்குப் போட்டோமா என்பதில்தான் குறியாக இருப்பேன். பெரும்பாலும் நான் அந்த நாட்களில் சரியாகச் சாப்பிடுவதில்லை.  உங்களுக்கு அப்படித் தோன்றுமா?


ஒக்கோரையை அனைவருடனும் பகிர்ந்துகொண்டேன். மனைவி, ரொம்ப நல்லா வந்திருக்கு என்றாள்.  நீங்களும் செய்துபாருங்கள்.


68 கருத்துகள்:

  1. கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.  உங்கள் தளத்தில் ஒரு அருமையான படைப்பை இப்போது படித்து விட்டு வந்தேன்.  எங்கள் செவ்வாய் அதை இழந்து விட்டதோ என்றும் தோன்றியது!  :))

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் கண்ணன் பிறந்த நன்னாள்
    வாழ்த்துகள். எல்லோர் நலமும் பெருக கண்ணன் துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜென்மாஷ்டமி கொண்டாடி விட்டீர்களா அக்கா? அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில்  நேற்று இரவே ஜென்மாஷ்டமி.

      நீக்கு
  5. அன்பு நெ.த வின் ஒக்கோரை மிகப் பிரமாதமாக வந்திருக்கிறது. இன்றைக்கே தீபாவளி வந்துவிட்ட உணர்வு,

    மனம் நிறை வாழ்த்துகள் முரளிமா.
    நேயர் விருப்பமா பாதுஷா செய்முறை சொல்ல முடியுமா.
    எனக்கு சரியாகவே வருவதில்லை:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... என்றைக்கோ செய்தது... இந்தப் பதிவு எனக்கு செய்த தினத்தை நினைவுபடுத்தியது.

      வல்லிம்மா... என் மாமனாரின் காரியங்களின்போது, (12 நாட்களுக்குள்), ஒரு நாள் பாதுஷா செய்து வைத்திருந்தோம். (நான் பண்ணினது) அது சரியாக வரவில்லை என்று மனைவியின் உறவினர் சொன்னார் (சாஃப்டாக இல்லை என்று). என் பையனுக்குப் பிடித்த என் அம்மாவின் மெதட்டில் செய்து, எபிலயும் வந்திருக்கு. ஆனால் அதை பாதுஷா என்று பலர் ஒப்புக்கொள்ளவில்லை. ஹாஹா. ரியல் பாதுஷா (ன்னு கடையில் விற்பதை) ஒரு நாள் செய்யணும்.

      நீங்கள்லாம் எக்ஸ்பர்ட்.

      நீக்கு
  6. இத்தனை அருமையாக மீனாட்சி அம்மாள் குறிப்புகளில் கூடப் படித்தது இல்லை.
    அதில் படங்கள் இல்லையே!!!!!
    மிக மிகத் திறமைசாலிகளக இருந்தாலும் சொல்லவும்
    ஒரு திறமை வேண்டும்.
    அன்பும் பாராட்டுகளும்.

    படங்களும், தக்காளிப் பதமும் வெல்லப்பாகும்
    மிக இனிமை. நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா..உங்களுக்கு நன்றி, குறைகுடத்தையும் பாராட்டும் மனதிற்காக

      நீக்கு
  7. நெல்லைத்தமிழன் ஸ்விட்டா செய்கிறார் அவர் கிச்சன் பக்கம் போனால் ஸ்வீட் மட்டுதான் செய்வார் போல இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க செங்கோட்டை துரை. கிச்சன் என் வசம் வரும்போது டிஃபன் போன்றவையும் செய்வேன். விரைவில் ஒன்று செய்துவிடுவோம் (பசங்களையும் கஷ்டப்படுத்தாமல் இருந்தால் சரிதான்.

      நீக்கு
  8. திருநெவேலி...?

    இத்தனை (செய்முறை) படங்கள்...! அருமையான ரெஸிப்பி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன். நான், ஒக்கோரை எல்லாம் திருநெல்வேலியில் மட்டும்தான் பண்ணுவது (நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வீட்டிலும் உக்காரை உண்டு என்பது பின்பு தெரியும்) என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். கிருஷ்ண ஜென்மாஷ்டமி வாழ்த்துகள்!. மண்ணையும்,வெண்ணையையும் உண்ட அந்த பாலகன் இந்த மண்ணை காக்கட்டும்! ராதே கிருஷ்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராதே கிருஷ்ணா.. அவன் உண்டுமிழ்ந்த நிலத்தை நாம் பாழ்படுத்தாமல் இருந்தால் சரிதான். கொரோனா போன்றவை நாம் கண்டுபிடித்து சக மனிதர்களைக் கொல்லுவதற்குச் செய்த சதிதானே..

      நீக்கு
  10. ஒக்காரை நன்றாக வந்திருக்கிறது. நான் செய்த ஒக்காரை  சமையல் குறிப்பு முன்பு எ.பி. திங்கற கிழமையில் வந்திருக்கிறது. நான் பயத்தம் பருப்பும் கொஞ்சம் சேர்த்துக் கொள்வேன். சிலர் புழுங்கல் அரிசியும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் புழுங்கல் அரிசி சேர்த்தால் ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்ய முடியாது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா பா.வெ. மேடம். எனக்கு நினைவில்லை. அதையும் தேடிப் படிக்கிறேன்.

      நீக்கு
  11. ஒக்காரை செய்து காட்டிய விதம் மிக அருமை! அதுவும் உங்கள் அம்மாவின் குறிப்பு இது என்பதால் இதற்கு சிறப்பு அதிகம் நெல்லத்த்தமிழன்!
    பொதுவாய் பெண்களுக்கு அடுத்தவருக்கு உணவு செய்து தருவதில் தான் மகிழ்ச்சியும் பெருமையும் அதிகம்! அவர்களை உளமாற பாராட்டி ஒரு வார்த்தை சொன்னாலுமே அந்தப் பாராட்டு அவர்களை மேன்மேலும் சிறப்பாக செய்யத்தூண்டும் சக்தியாக அவர்களை மாற்றி விடுகிறது.
    சமைப்பதை சாப்பிடுவதிலும் அப்படித்தான்! நன்றாகவும் நிறையவும் சமைப்பவர்கள் பொதுவாக தான் அதிகம் சாப்பிடுவதில்லை. ஆனால் யாராவது அன்போடு சமைத்து ஒரு கை உணவு கொடுத்தாலுமே அது தேவாமிர்தமாகத்தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதம் மேடம்.. பாராட்டிற்கு நன்றி.

      எனக்கு இப்போ, யாரேனும் ஒக்கோரை செய்துகொடுத்தால் நல்லாத்தான் இருக்கும் போலிருக்கு. இந்த ஊரில் (பெங்களூரு) காலநிலை சில்லுனு இருக்கு. மழை அவ்வப்போது வருகிறது... உங்களுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்கும்போது மனைவியை ஏதாவது செய்துதரச் சொல்லலாமா (பஜ்ஜி குனுக்கு போன்று) என்று தோன்றுகிறது

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. ஒக்கோரை மிகவும் நன்றாக வந்து இருக்கிறது. உங்கள் மனைவியிடம் பாராட்டு வாங்கி விட்டீர்கள் உங்களுக்கு மகிழ்ச்சிதானே!

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.



    //எனக்கு, நானே effort எடுத்துச் செய்த பிறகு, சாப்பிடுவதில் ஆர்வம் குறைந்துவிடுகிறது. மத்தவங்க சாப்பிட்டுட்டு, நல்லா இருக்கு என்று சொன்னாலே நான் சாப்பிட்ட திருப்தி வந்துவிடுகிறது.//

    சமைப்பவர்களுக்கு அதுதான் ஆனந்தம். அவர்கள் நன்றாக சாப்பிட வேண்டும். நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை அதுவே மனமும், வயிறு நிறைந்த நிறைவை கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.

      நீங்கள் எழுதியிருப்பது உண்மைதான். ஆனால் அதையெல்லாம் நாமே ரியலைஸ் பண்ணணும்னா, நாம் சமைக்கும்போதுதான் தெரியவரும். (எத்தனை தடவை, மனைவி செய்ததைப் பாராட்டாமல் விட்டுவிட்டோமே... குறைகளை மட்டும் சட்னு சொல்லிடறோமே என்று)

      நீக்கு
  14. இப்படி செய்யும் ஒக்காரை பிரிட்ஜ்ல் வைத்திருந்தால் கொஞ்ச நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்று தோன்றுகிறது. விநாயக சதுர்த்திக்கு மோதகத்துக்கு பூரணமாகவும் மைதா போளி பூரணமாகவும் உபயோகிக்கலாம் என்று தோன்றுகிறது. அடுத்து கமர்கட்டு மிட்டாய் செய்யும் முறையை எழுதுங்கள். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் சார்...

      கலாய்ப்பதற்கு அளவில்லையா? ஹா ஹா... நாங்கள்லாம் இனிப்பு செய்தால் கட கடவென காலியாகிடுமாக்கும் (இல்லைனா, பக்கத்துல உள்ள உறவினர்கள் வீட்டிற்குக் கொடுத்தனுப்பியாவது காலி செய்துடுவோம்). தீராத இனிப்பைத்தான் திப்பிசம் என்ற பெயரில் மாற்றவேண்டியிருக்கும்.

      பஹ்ரைனில் இருந்தபோது, அளவிற்கு அதிகமாக பாயசம் பண்ணிடுவேன். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடுவேன் (வெல்லப் பாயசத்திற்கு நான் பால் அதிகமாகச் சேர்ப்பதில்லை). ஒரு தடவை அவியல் ரொம்ப அதிகமாகப் பண்ணிவிட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பார்த்தபோது காய் தனி, தண்ணீர் தனியாக இருப்பதைக் கண்டு, சாப்பிடும் உணவை ஃப்ரிட்ஜில் வைப்பதில்லை (இனிப்பு தவிர)

      நீக்கு
  15. ஒக்காரை சூப்பர்.

    அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் ஶ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள். ஶ்ரீகிருஷ்ணன் நோய், நொடி இல்லாமல், நோய் பரவாமல அனைவரையும் காத்து அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //போகாத கோவிலில்லை...வேண்டாத தெய்வமில்லை// என்று ஆகிவிட்டதே இந்தக் கொரோனா நிலைமை

      நீக்கு
  17. ஒக்காரை/உக்கோரை திருநெல்வேலிக்கு மட்டும் சொந்தம்னு யார் சொன்னது? மதுரைப் பக்கம் தீபாவளிக்கு ஒக்காரை இல்லாமல் பக்ஷணங்கள் நிறக்காது. அம்மா எப்போவும் பண்ணுவார். க.ப+து.ப. இரண்டையும் போட்டுப் பண்ணி இருக்கார். என்னோட ஒக்கோரை சாப்பிட்ட தினங்கள் எல்லாம் மதுரையோடு போச்சு. இங்கே புக்ககத்தில் தீபாவளிக்குப் பண்ண மாட்டார்கள். அங்கிருந்து வந்தால் தான் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழக ஒன்றியத்தில், திருநெவேலிலதான் நிறைய பாரம்பர்ய உணவு வகைகள் உண்டு....... என்று சொன்னால் நீங்க எப்படி ஒத்துக்கொள்ளப் போகிறீர்கள்?

      நிறக்காது - இது நிரக்காது இல்லையோ?

      புக்ககத்தில் எதற்குப் பண்ணணும்? உங்க அம்மா உங்களுக்குக் கத்துத் தரலையா? (ஒருவேளை சொல்லிக்கொடுக்கும்போது அதைக் கவனிக்காமல் ஒக்கோரை பாத்திரத்தில் கவனம் வைத்திருந்தீர்களா?)

      நீக்கு
    2. எங்க பிறந்த வீட்டுப் பழக்கத்தை எல்லாம் புக்ககத்தில் கொண்டு வர முடியாது. அம்மா சொல்லிக் கொடுக்காமலேயே நான் நிறைய தீபாவளிக்கு ஒக்காரை கிளறித்தந்திருக்கேன். அதை வைச்சுப் புக்ககத்தில் பண்ணினால் அதைச் சாப்பிட ஆள் தேடணும். யாரும் தொட மாட்டாங்க! அன்றாட சமையலிலே கூட மாத்திப் பண்ண முடியாது. இப்போத் தான் சில வருஷங்களாக எங்க வீட்டுச் சமையல் முறைகளும் பண்ணிக் கொண்டிருக்கேன்.

      நீக்கு
    3. நான்கூட எங்க வீட்டுல நான் மட்டும்தான் அப்படி இருந்திருக்கேன்னு நினைச்சேன். (அது சரி... ஆண்கள் வீட்டுக்குத்தானே பெண்கள் வர்றாங்க. அப்போ ஆண்கள் வீட்டுல உள்ள முறைகளைத்தானே ஃபாலோ பண்ணணும் ஹாஹா)

      நீக்கு
  18. ஒக்காரையைக் குளிர்சாதனப் பெட்டியிலும் வைக்க வேண்டாம். வேறே எந்தவிதமான பயன்பாட்டிற்கும் செலவழிக்க வேண்டாம். கிளறிய ஒக்காரையை அப்படியே பாத்திரத்தில் வைத்திருந்தால் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது. எங்க வீட்டில் மைசூர்ப்பாகு, அல்வா, ரவாலாடுகள்/மாலாடுகள் எல்லாம் தீர்ந்ததும் கடைசியாச் சாப்பிட ஒக்காரையை வைச்சுப்போம். அது போல் மிக்சரும். என்றாலும் தினம் ஒரு கரண்டி ஒக்காரை சாப்பிடுவது உண்டு. அம்மா பண்ணுவது புட்டுப் போல் அவ்வளவு மிருதுவாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்சணம் பெயர்கள் என்னை ஈர்க்கின்றன (அல்வா தவிர).. இப்போ புதுவித வியாதி பிடித்துக்கொண்டுவிட்டது. இங்க உள்ள கடைகளில், சொஜ்ஜி அப்பம் வாங்குவது. பெங்களூரில் சொஜ்ஜி அப்பம் சூப்பரோ சூப்பர் (சென்னைல இதெல்லாம் கிடைக்கவே கிடைக்காது. தமிழகத்துல, பெண்களுக்கு இது செய்யத் தெரியாது என்பதால், முன்பெல்லாம் பெண் பார்க்க வருபவர்களுக்கு பஜ்ஜி, கேசரி கொடுத்து ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள்.... இப்போ அதற்கும் வழியில்லை. பெண்கள் இருந்தால்தானே..பெண் பார்க்கும் படலமெல்லாம்)

      நீக்கு
  19. புழுங்கலரிசியில் ஒக்காரை பண்ணுவாங்கனு கேட்டதில்லை. ஆனால் தனி அரிசியில் பண்ணுவாங்க என்பது தெரியும். ரிஷிபஞ்சமி விரதம், உமாமகேஸ்வர விரதம் இருப்பவர்கள் அரிசியில் உக்காரை/ஒக்காரை செய்து விநியோகத்துக்கும் சாப்பிடவும் வைச்சுப்பாங்க. அது என்னமோ கொஞ்சம் விறைப்பாகத் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் சாஃப்டாக, நெய் மணத்துடன் இருந்தால்தான் நன்றாக இருக்கும். கடலைப்பருப்பில் சாஃப்டாக இருக்கும். அரிசில எப்படி இருக்கும்னு தெரியலை.

      நீக்கு
    2. பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசியில் கடலைப்பருப்பு, அல்லது துவரம் பருப்பு சேர்த்து கார உக்காரை செய்வார்கள். அதையே இனிப்பாகவும் செய்யலாம்.

      நீக்கு
    3. கார உக்காரை நன்றாக இருக்குமா கோமதி அரசு மேடம்?

      நீக்கு
    4. நன்றாக இருக்கும் ரவை உப்புமா பிடிகாதவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

      நீக்கு
  20. ஒக்காரையோடு வெள்ளையப்பமும் மதுரைச் சிறப்பு. தீபாவளி அன்று காலை எண்ணெய் தேய்த்துக் குளிச்சுட்டு வந்ததும் மருந்தைச் சாப்பிட்டதும் இந்த வெள்ளையப்பத்தைச் சாப்பிட்டுவிட்டுக் கூடவே இட்லி/சட்னி அதிலும் அம்மாவோட சட்னி பிரமாதமா இருக்கும். தேங்காய்ச் சட்னியில் அரைக்கரண்டி தயிர் சேர்ப்பார். அந்த ருசியே அருமை. இங்கே தயிர் சேர்க்க முடியாது. நான் இட்லியில் தயிரை விட்டுக் கொண்டுத் தேங்காய்ச் சட்னியோடு சேர்த்துச் சாப்பிட்டுப்பேன். என்றாலும் நேரடியாகச் சட்னியில் கலக்கும் ருசி வராது தான். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீசா மேடம்..உங்கள் கருத்துகள் அருமை.

      வாழ்க்கையில் வெள்ளையப்பம் சாப்பிட்ட நினைவே இல்லை. 'ஊத்தாப்பம்' வார்த்தைகூட எங்கள் வீடுகளில் உபயோகிப்பதில்லை.

      தேங்காய் சட்னி வித விதமாகச் செய்திருக்கிறேன். ஒன்றையும் கலக்காமல், கர கரவென திருவிய தேங்காய், மிளகாய் சேர்த்து துளி உப்புடன் அரைத்த சட்னி பக்கத்தில் எதுவும் வராதுன்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    2. வெள்ளையப்பம் செய்முறை போட்டிருக்கேன். எ.பியில் இல்லை. என்னோட சாப்பிடலாம் வாங்க வில் போட்டிருக்கேன். மதுரை கோபு ஐயங்கார் கடையில் மத்தியானம் 2 மணிக்கு வெள்ளையப்பம், பச்சைக்கொத்துமல்லி+மிளகாய்ச் சட்னி, 3 மணிக்கு பஜ்ஜி, காரசாரமான தேங்காய்ச் சட்னியோடு, நான்கு மணி அளவில் தவலை வடை/தேங்காய்ச் சட்னி! அதன் பிறகு எதுவும் கிடைக்காது.

      நீக்கு
    3. http://geetha-sambasivam.blogspot.com/2013/07/blog-post_1279.html/வெள்ளையப்பம் செய்முறை, படங்களோடு. !!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    4. வெள்ளை அப்பத்தை காக்கா தூக்கிட்டு போயிடுச். சுட்டியில் "page does not exist"  தான். 
      Jayakumar

      நீக்கு
    5. http://geetha-sambasivam.blogspot.com/2013/07/blog-post_1279.html

      இப்போது பாருங்கள் வரும்.

      நீக்கு
    6. இங்க கொஞ்சம் மழை. குளிர் ஆரம்பித்திருக்கிறது. வெள்ளையப்பம் (ஆனால் போண்டா/வடை மாதிரி இருக்கு) கார சட்னியுடன் சூப்பராக இருக்கும். நிறைய செய்முறைகள் எழுதியிருக்கீங்க கீதா சாம்பசிவம் மேடம் (மற்றும் அபூர்வமா படங்களுடன் இக்கி இக்கி)

      நீக்கு
    7. ருசி வேறே நெல்லை. கோமதி காராவடை மாதிரினு சொல்லி இருக்காங்க. கிட்டத்தட்ட அப்படித்தான் என்றாலும் அதுவும் வேறே ருசி. அதுவும் போட்டிருக்கேன்.

      நீக்கு
  21. @ ஸ்ரீராம்...

    // .. உங்கள் தளத்தில் ஒரு அருமையான படைப்பை இப்போது படித்து விட்டு வந்தேன். எங்கள் செவ்வாய் அதை இழந்து விட்டதோ என்றும் தோன்றியது! :)) ..//

    தங்களது அன்பினுக்கு நன்றி..
    எபிக்கு என்று எழுதி ஏறத்தாழ ஒரு வருடம் ஆகப் போகின்றது...

    எப்படியோ மனதில் குழப்பம் ஒன்று ஏற்பட்டு விட்டது.. என்ன செய்வதென்று தெரிய வில்லை..

    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
  22. அன்பின் நெல்லை அவர்களுக்கு..

    உக்காரை என்று கேள்விப் பட்டிருக்கின்றேன்... இதன் செய்முறையை முப்பது ஆண்டுகளுக்கு (!) முன்பே எழுதி வைத்திருக்கின்றேன்... அதுவும் இதுவும் ஒன்று தானா - தெரிய வில்லை..

    இனி ஊருக்குத் திரும்பியதும் தான் செய்து பார்க்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊருக்கு வந்து நீங்க எங்க செய்துபார்க்கப் போறீங்க? இங்க சாப்பிட விட்டவைகளை சாப்பிட்டு முடிப்பதற்குள் வெகேஷன் முடிஞ்சுடுமே

      நீக்கு
  23. நல்ல குறிப்பு. எங்கள் வீட்டிலும் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
  24. நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்.. ஆவணியில நல்ல நாள் முடிய முந்தி வந்தோணும் என வந்திட்டேன்ன்ன்:).. என்ன இது ஆரையும் காணம்:)).. சரி சரி இப்போ அதுவோ முக்கியம் விசயத்துக்கு வாறேன்ன்...

    //திருநெவேலி ஒக்கோரை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி///
    வந்ததும் வராததுமா என் கண்ணில பட்டது:)).. “ல்” ஐக் காணம்:)).. மீக்கு டமில்ல டி எல்லோ:))..
    ஒக்கோரை.. பெயரே வித்தியாசமாக இருக்கு... எங்கெங்கெல்லாம் தேடித் தேடிப் பெயர் வைப்பினமோ......!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்குத்தான் உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கிறேன் அதிரா. பதிவுகள் எழுதாமல் காணொளிகளுக்குப் போயிட்டீங்க. நாடகத்திலிருந்து ரசனை சினிமாவிற்கு மாறியது போல. திரும்ப பதிவுகள் எழுதுவீங்களா? நீங்க வேற வீட்டு gardenக்குப் போனது, பழங்கள் பறிப்பது என்று எல்லாவற்றையும் காணொளியாக ஆக்கிடறீங்க. ஹாஹா.

      உக்காரை என்பது எங்கள் சமூகத்தில் ஒக்கோரை என்று சொல்றாங்களா என்று தெரியலை.

      நீக்கு
  25. // சரி.. இன்றைய செய்முறைக்கு வருகிறேன்.//

    அதானே.. முதல்ல செய்முறைக்கு வாங்கோ:))..

    //சென்ற நவம்பரில் இங்கு நான் ஒக்கோரை செய்தேன்///

    ஆஆஆஆஆஆஆ அப்போ ரெம்ம்ம்ம்ம்ம்ம்பப் பழசூஊஊஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நவம்பரில் செய்து, ஒரு வழியாக மே மாதம் அனுப்பி... அப்புறம் இங்க வெளியாகி..... ஹாஹா...

      நீக்கு
  26. ///எனக்கு, நானே effort எடுத்துச் செய்த பிறகு, சாப்பிடுவதில் ஆர்வம் குறைந்துவிடுகிறது. மத்தவங்க சாப்பிட்டுட்டு, நல்லா இருக்கு என்று சொன்னாலே நான் சாப்பிட்ட திருப்தி வந்துவிடுகிறது. ///

    அல்லோஓஓஒ இப்போ புரியுதோ எங்களின்(பெண்களின்) நிலைமை:))).. இதேதான்... சமைச்சு முடித்த பின் சாப்பிடும் ஆசை போய் விடுது.. இதனாலதான் பெண்கள் எல்லாம் அடிக்கடி மெலிஞ்ஞ்ஞ்ஞ்சு போயிடுறோம்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அதிரா...செய்தபிறகு செய்தவற்றைச் சாப்பிடும் ஆவல் போய்விடும். அப்புறம் கிச்சன் வேலை என்பது ரொம்ப effort. அதைவிட, இன்று என்ன சமைக்கலாம், எல்லோருக்கும் எது பிடிக்கும் என்பதெல்லாம்தான் ரொம்பவே தலைவலி தரும் விஷயம்.

      ஹல்லோ... அதனால் ஒன்றும் பெண்கள் மெலிந்ததாகத் தெரியவில்லை. செய்தவைகள் மிகுந்து போனால், வீணாக்க மனது வராமல், வேளை கெட்ட வேளையில் சாப்பிடுவதனால் ஹெல்த் கெட்டுப்போகிறது என்று சொன்னால் அது உண்மையல்லவா? நீங்களே சொல்லியிருக்கீங்களே..சிலவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து நீங்கதான் சாப்பிடணும்னு..

      நீக்கு
  27. //ஒக்கோரையை அனைவருடனும் பகிர்ந்துகொண்டேன். மனைவி, ரொம்ப நல்லா வந்திருக்கு என்றாள். ///
    ஆஆஆஆஆஆஆ வசிட்டர் வாயால வாழ்த்துக் கிடைச்சிருக்கே ஹா ஹா ஹா..

    பார்க்க சூப்பராத்தான் இருக்குது, ஆனா இது ரொம்ப சிம்பிள் ரெசிபியை ... ஏதோ பெரீஈஈஈய அல்வாப்போல செய்த மாதிரிக் கிடக்கு ஹா ஹா ஹா.. இதை மாவில தோய்த்துப் பொரித்தால்.. எங்கட நாட்டு சூசியம்:)).. அதுக்கு பருப்பை உடைக்க மாட்டோம், அவித்தெடுப்போம்:))...

    சரி சரி நீண்ட நாளாகிட்டுதே எட்டிப் பார்ப்போம் என வந்தேன், இந்த சுவீட் கண்ணில பட்டுது, களம் குதிச்சிட்டேன்... மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது... இது ரொம்ப சிம்பிள் ரெசிபியா? அப்போ, நெல்லிக்காய் மோர்க்குழம்பு, போண்டா, மோர் மிளகாய், உருளை கறி, ..... இவைகள்லாம் ரொம்ப கஷ்டமான ரெசிப்பியா?

      அதிரா..எனக்கும் ஆர்வம் வேறு வகையில் திரும்பிவிட்டதால், கிச்சனில் நேரம் செலவழித்து எதையும் செய்வதில்லை. மனைவிக்கு உதவுவதோடு சரி. அந்த ஆர்வம் குறைந்ததால், செய்யும் உணவில் நிறைய குறைகள் வருகிறது. பசங்களுக்கு எப்போடா அம்மா வந்து சமைப்பான்னு ஆயிடுது. அதனால அடிப்படை உதவிகளான, சாதம், பருப்பு வைப்பது, காய் கட் பண்ணித் தருவது, சப்பாத்திக்கான மாவைப் பிசைந்து வைப்பது என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

      வருகைக்கு (அப்ப்ப்ப்பூபூர்வ) நன்றி

      நீக்கு
    2. எனக்கு அதே கேள்வி - சுடுநீர் மட்டுமே எளிமையான ரெசிபி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!