மறுபடியும் ஃபோன் வந்தபோது எடுத்து விட்டேன்.
"வேலையாயிருக்கியா? பிஸியா? பேசலாமா? " குரலிலேயே ஒரு கோபமா, குமுறலா, வேகமா.. எதுவோ ஒன்று தெரிந்தது.
"பிசி என்றில்லை.. ஆனால் கொஞ்சம்...."
"கொஞ்சம் பேசணும்.. ரெண்டு நிமிஷம் பேசலாமா?"
பதிலை எதிர்பாராமல் பேச்சு தொடர்ந்தது.
"கட்டின வீட்டைக் குறை சொல்பவர்கள் இங்கு ஏராளம்..."
"சரி..."
"....செய்து முடிக்கப்பட்ட பணியை யார் வேண்டுமானாலும் போஸ்ட்மார்ட்டம் செய்யலாம். 'இப்படி செய்திருக்கலாம்,' 'அப்படி செய்திருக்கலாம்..' 'எனக்கு இப்படி ஒரு அனுபவம் வந்தபோது நான் என்ன செய்தேனென்றால்...' "
"இப்போ யார் உன்னை..."
"...இதில் நம் வேலையைப் பற்றி டயலாக் வேறு இப்படி அமையும்.. 'நான் உங்களைக் குறை சொல்லவில்லை. ஏதோ அப்படி அது அமைந்துவிட்டது..'"
"சரிடா... யார் உன்னை அப்படிக் சொன்னது? யாரைப்பத்திச் சொல்றே..?"
"ஒண்ணா, இரண்டா... குறுக்க பேசாம கேளு... இதே அந்தச் செயலை இத்தனை நாட்கள் யாருமே செய்ய கையிலெடுத்திருக்க மாட்டார்கள். நாம் கையிலெடுக்கும்போது உதவிக்கு கூப்பிட்டாலும் வரமாட்டார்கள். யோசனை கேட்டாலும் அப்போது எதுவும் உருப்படியாய் சொல்ல மாட்டார்கள். தெரிந்தால்தானே சொல்ல...
"சொந்தத்துலயா, ப்ரெண்ட்ஸ் யாராவதா?"
"... யாராயிருந்தா என்ன? நாம் இருக்கும் நிலையில்தான் அவர்களும் இருப்பார்கள்.. ஆனால் செய்து முடித்து விட்டு வந்ததும் அதில் குற்றம் கண்டு பிடிக்க முன்வந்து விடுவார்கள்..."
'அது என்னவோ சரி.. எனக்கும் இப்படி......"
"... குறுக்க பேசாதன்னு சொன்னேன். நான் கொட்டுவதற்காக போன் செய்திருக்கிறேன்... சும்மா கேட்டுக்கோ.... தன்னுடைய குறையை மறைக்க அடுத்தவர்களை குறை சொல்லும் மாக்கள். அடுத்து குறை சொல்லப்படுபவர் அடுத்தவரைக் கைகாட்டும் உலகம். .."
"நாம் உட்பட அது எல்லோருக்கும்தானேடா பொருந்தும்?"
'ஆமாம்.. இந்த இடத்தில் நான் நினைத்தது / செயல்பட்டது தப்பு' என்று சொல்ல இங்கு யாருக்கும் துணிவே இல்லை. எல்லோரும் தான் புத்திசாலியாகவும், சரியாகச் சிந்திப்பவர்களுமாகவே காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். எதிராளிதான் மூடன்."
"ம்ம்ம்ம்...." சாதாரணமாகவே அவன்தான் அதிகம் பேசுவான். இன்று இன்னும் அதிகம். சரி ஏதோ புலம்புகிறான்...
"....அக்கறை என்ற பெயரில் அதிகப்ரசங்கித்தனம் செய்து எதிரிலிருப்பவர்களுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கி விடுகிறார்கள். கழிவிரக்கமும், சுயபரிதாபமும் இருக்கும் அதே இடத்தில்தான் இந்த மாதிரி போலி வழக்கங்களும் இருக்கின்றன"
"நீ ஏதோ தப்பா ..."
"....அவரவருக்கு அவரவர் அபிப்ராயம்தான் சரி. எல்லாம் முடிந்த நேரத்தில் இந்த யோசனைகளை நம்மேல் திணிக்க முற்படுவார்கள். எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்தி படுத்துவது எவ்வகையில் சாத்தியம்?
"அதெப்படி முடியும்?"
"...நல்லபேர் வருவதைவிட கெட்டபேர் அதிகம் வருகிறது. நல்ல பேரே வேண்டாம்.. கெட்டபேர் இல்லாமலிருந்தாலே போதும். முடிகிறதா? ஏண்டா நாம் இதில் இறங்கினோம் என்று நினைக்க வைத்து விடுகிறார்கள். 'எனக்குத் தோன்றுவதை நான் சொல்கிறேன்... இப்படித்தானே செய்ய வேண்டும்? என்பார்கள்.....'"
"ஒண்ணும் புரியலை.. யாரு என்னன்னு சொல்லிட்டு புலம்பேன்..."
"...அட, அதற்குத்தானேய்யா உங்களை முதலிலேயே அழைத்தது? அப்போது ஒளிந்துகொண்டுவிட்டு இப்போது என்ன வியாக்கியானம்?" எல்லோருமே நியாயம் பேசவும் வியாக்கியானம் செய்து கட்சி கட்டவும் தயாராய் இருக்கும் அளவு இறங்கி வேலை பார்க்கத் தயாராயில்லை."
"என்னையே சொல்றியோ... எனக்கு எதுவும் ஞாபகமில்லையே..."
"தனியா அவங்க எதையும் செய்ய மாட்டாங்க.. நாம கூட நின்னா அவங்களும் செய்வாங்க.. நாம் யாரையும் எதிர்பார்க்காம இறங்கி செய்தால் குறையா கொட்டும்... நாமதான் முட்டாள்..."
அதைத்தானே அவங்களும் சொல்றாங்க போல.."
"கடுப்பேத்தாதடா... முன்னெடுத்தவர்களை மறந்துவிட்டு பின்னால் வந்து குறைகூறி பூசி மெழுகுபவர்களைக் கொண்டாடும் உலகம் இது.. அவர்களை நியாயப்படுத்திக் கொள்கிறார்களாம். நம்மை விட அவர்கள் இதுமாதிரி வேலைகளை நன்றாய்ச் செய்வார்களாம்... நமக்கு 'போதாதா'ம்.."
"நமக்குதான் எப்பவுமே போதாதேடா.... ஹிஹிஹி..."
"ஷட் அப்.. குறுக்க குறுக்க பேசி கொல்லாதே... நான் சொல்லி விட்டு வைத்து விடுகிறேன். ஒரு சின்ன வடிகால்.. அவ்வளவுதான்.."
"சரி.. சொல்லு... என்னன்னே புரியாம கேட்டுவைக்க வேண்டியிருக்கு.."
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்தான்... வாசல்தோறும் வேதனை இருக்கும்தான்... அந்த வேதனைகளையே மனதில் நிறுத்தி எல்லாருமே இப்போதும் பழங்கதைகள் பேசிக்கொண்டிருந்தால்? வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி!"
"ரெண்டு பாட்டு.."
"தனக்குன்னு வந்ததும் முன்னம் பேசின நியாயங்களை மறந்து விடுகிறார்கள், மாற்றி விடுகிறார்கள்.. எல்லாம் அடுத்தவங்களுக்குதான்..."
"என்னடா சொல்ல வர்றே?' நான் கேட்டது காற்றில் கரைந்ததது.
போன் வைக்கப்பட்டபோது எனக்கு(ம்) ஒன்றும் புரியவில்லை. நான் என்ன செய்தேன்,என்ன பேசினேன், யாரிடம் பேசினேன் என்று யோசிக்கத் தொடங்கினேன்.
சுமைதாங்கி சாய்ந்தால்.. சுமை என்னாகும்.?
===================================================================================================
இருளில் புரண்டு கொண்டிருந்தது நதி என்று படித்ததும் எனக்குள் தோன்றிய வரிகள் கீழே ! அதே காட்சியில்தான் சிந்திக்க வேண்டுமா என்ன! வெவ்வேறு மாதிரி வந்த சிந்தனைகளை எழுத்தாக்கி இருக்கிறேன்! மையப்பொருள் நதி.
ஆனால் சென்ற வாரம் இந்த வரிக்கு 'சு' அழகாய் ஒரு கவிதை எழுதி இருந்தார். அதுவும் நினைவுக்கு வருகிறது.
எதிர்த்து நிற்பதே
மறந்துபோய்
காய்ந்து போய்க்
காத்திருக்கின்றன
வளையாத நாணல்கள்.
|
நதிப்பெண்ணின்
புரளல்கள் இல்லாமல்
மரத்துப் போயிருக்கின்றன
மணல்வெளிகள்.
|
நதியைத் தழுவ வந்த
தென்றல்
ஏமாந்து
மணலை வாரி
கண்களில் தூவிச்
செல்கிறது.
|
புரண்ட நதியின் மிச்சமாய்
வறண்ட ஆற்றில்
ஓடை.
|
சோர்ந்த கொக்குகள்
சோறுதேடி
வேறிடம் நகர்கின்றன.
|
(வாழ்க்கைப்) படகுக்கு
வேலையில்லை
ஏங்கிப் போகும்
பூங்குழலிகள்.
|
தாயே தள்ளாடினால்
பிள்ளைகள் என்செயும்?
வாழ்க்கைப் பள்ளங்களாய்
ஓடைகளும் குளங்களும்.
|
காவிரி தென்பெண்ணை பாலாறு
அதில் கரைபுரண்டு தண்ணீர்
ஓடியதெல்லாம்
பழைய
வரலாறு!
|
காலை நனைத்த நதி
முழங்காலைத் தீண்டி
இடுப்பை அணைத்து
நெஞ்சுவரை நிறைகிறது.
முடிநனைய
தலைகுனிய வேண்டும்.
அடிபணிய வேண்டும்.
|
நிலவின் ஒளியில்
தழுவியபடி
உடன்
வருகிறது
தென்றல்.
|
புரண்ட நதியின்
வெறுமையால்
வறண்ட மணல்கள்
துவண்டிருக்கின்றன
துகள்களாய்.
|
|
======================================================================================================
பேஸ்புக்கில் எப்போதோ படித்தது.... பாதிதான் கண்ணில் படுகிறது. மீதியைக் காணோம்!
==============================================================================================
இன்னொரு ஆப்டிகல் இல்யூஷன்.. இந்தப் படத்தை நான் உபயோகப்படுத்தி பேஸ்புக்கில் எழுதியிருந்தது..
=====================================================================================================
ச்சே... தப்பான வழக்கம்... !!
சிங்கத்தின் முகத்தில் பாவம்!
ஹோம்லி...!
காலை வணக்கம் அனைவருக்கும்
பதிலளிநீக்குவாங்க நெல்லை.. வணக்கம்
நீக்குஎன் கண் ரொம்ப வீக்காயிடுச்சா இல்லை லேப்டாப்பில் பார்த்தால் சரியாத் தெரியாதான்னு தெரியலை. ஒரு குன்சா ஒரு படம் சில நொடிகள் தெரியுது. கண் ஏன் கலர் போடுதுன்னு தெரியலை
பதிலளிநீக்குஆமாம்.. எனக்கும் அல்லது எல்லோருக்கும் அப்படியே... நிறங்களில் போதுமான போல...
நீக்குதிருத்தம் : ஆமாம்.. எனக்கும் அல்லது எல்லோருக்கும் அப்படியே... நிறங்களில் போதுமான போஷாக்கு இல்லை போல...
நீக்குமிக இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஅனைவரும் என்றும் ஆரோக்கியமாக இருக்க
இறை அருள் தொடரட்டும்.
தொகுப்பு மிகப் பிரமாதம்.
வாங்க வல்லிம்மா... வணக்கமும், நன்றியும்.
நீக்குகாலை வணக்கம் முரளிமா.
பதிலளிநீக்குஎனக்கும் கலங்கலாக ஒரு ஆணின் படம் தெரிந்தது. உடனே மறைந்து விட்டது.
இதுதான் மாயமோ:)
அவர் பெயர் மாயவனோ, மாயக்கண்ணனோ!
நீக்கு😃😃😃😃😃😃😃😃😃😃
நீக்குதிரு சு அவர்களின் கவிதை வரிகள் மிக மிக அருமை.
பதிலளிநீக்குஆசு கவியாக இருப்பார் போலிருக்கிறதே !!!
நினைத்தால் நூறு கவிதை எழுதுபவரோ!!!!!
புரண்டால் ஒரு கவிதை. புரளவில்லையானால்
ஒரு வாட்டம். மிக மிக நேர்த்தி.
மனம் நிறை வாழ்த்துகள்.
'சு' சென்ற வாரம் எழுதியிருந்த கவிதையை நினைவு படுத்தியிருந்தேன். இந்த வார கவிதைகள் நான் எழுதியது. சரியாகச் சொல்லவில்லையோ என்று அந்த இடத்தின் வரிகளை மாற்றி அமைத்திருக்கிறேன்!!!
நீக்குஅந்த 'சு' வை நீங்கள் அறிவீர்கள். வாட்ஸாப் குழுமத்தில் இருக்கிறாரே...!
நீக்குஓஹோ!!!! நம் சு வா. அடடே!!!
நீக்குஎல்லாம் உங்கள் கவிதைகளா.
ஏன்பா இவ்வளவு கட்டம் போட்டு கவிதை எழுதி,
இது என்னோடதுன்னு சொல்லக் கூடாதோ.
கவிதைகள் அமிர்தம். சிந்தை (நதி) ஓட்டமும் இனிது.
வாழ்த்துகள் மா ஸ்ரீராம்.
புரண்டாலும்
கரையேறினாலும் ஓடாது போனாலும் நதி அழகு.
நன்றி அம்மா.
நீக்குவல்லி அம்மா, Thank you. Humbled. :)
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குமதனும் நகைச்சுவையும் மிக மிக சுவை. பிரிக்க முடியாத வகை.
பதிலளிநீக்குகாப்பி கப் ரொம்பப் பெரிசா இருக்கே:)
நன்றி ஸ்ரீராம்.
ஹா.. ஹா.. ஹா... அந்த அம்மாவின் தாராள மனது காரணமாய் பெரிதாக இருக்கிறது போல!
நீக்கு//எல்லோரும் தான் புத்திசாலியாகவும், சரியாகச் சிந்திப்பவர்களுமாகவே காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். எதிராளிதான் மூடன்//
பதிலளிநீக்குஇதுதான் இன்றைய நிலைப்பாடு ஜி
உண்மை ஜி. கருத்துக்கு நன்றி.
நீக்குஅச்சோ பாவம் சிங்கம்:))))))))
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா...
நீக்குசிங்கம் என்றதும் நம் சிங்கம் நினைவுக்கு வருகிறார்.
😍😊😊😊😊😊😊😊😊😊😊 Thank you Sriram.
நீக்குமுக நூலில் பதிந்த வாஸ்து கதை படு பயங்கரமாக இருக்கே.
பதிலளிநீக்குஏழுகடல் தாண்டி ஏழு மலைதாண்டி மரப்பொந்தில் இருக்கும் கிளியின்
உயிர் போல. நல்ல கற்பனை. நடுக்கமாக இருக்கிறது:)
அதேதான்.. என்னவோ கரடி விடுகிறார்கள்!
நீக்குஉங்களை இவ்வளவு குழப்பியது யார். ரொம்பக் கோபக்காரரோ.?
பதிலளிநீக்குபிரம்மாண்ட அலசலாக இருக்கே.
கட்டின வீட்டைக் குறை சொல்வது மிகச் சுலபமாக
செய்யப் படுவதுதானே. நக்கீரர்கள் அதாவது நல்ல கீரர்கள்
இல்லை, நக்கலாகக் கீருபவர்கள் தான் இங்கே அதிகம். நல்ல வேளை நம் கண்ணில், கருத்தில் படாதவரை நிம்மதி.
என்ன கஷ்டமோ அவனுக்கு... என்ன அனுபவமோ... என்னிடம் கொட்டியதும் அவன் மறந்திருப்பான் பிரச்னைகளை!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன், அனைவருக்கும் இந்த நாள் இனிமையான நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா. வணக்கம்.
நீக்குமொத்தம் மூன்று பாட்டு...! Facebook+ல் எழுதியிருந்த வரிகளைப் போல, சிலர் நினைவுக்கு வந்தார்கள்...!
பதிலளிநீக்குசிலர்தானா?!!
நீக்குநன்றி DD.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவியாழன் பதிவு அருமை. இன்றைய முதல் பகுதி ஃபோன் செய்தியால் உங்களை குழப்பியவரால், நீங்களும், நானும் குழம்பி விட்டோம். ஃபோன் செய்து சொன்னவர் கொஞ்சம் தெளிவாகியிருப்பார்.:) எதைப்பற்றி பேச ஆரம்பித்திருப்பார் என்று தெரிவதற்காக இன்னுமொரு முறை படிக்க வேண்டும். ஆனால் அவரால் ஃபோன் மூலம் வந்த மூன்று பாட்டுமே நல்ல அருமையான பாட்டுக்கள்.
நதி கவிதைகள் அழகாக இருக்கிறது. அனைத்துமே திரு சு அவர்கள் எழுதியதா? (ஒரு கவிதை என சொல்லியுள்ளீர்களே.. அதனால்தான் கேட்கிறேன். ) அவருக்கு பாராட்டுக்கள்.
மதன் ஜோக்ஸ் அனைத்தும் அருமை. காப்பி குவளைதான் கண்ணுக்கு தெரிகிறதா என மனைவி கேட்கிறாரோ. ஹா.ஹா.
சிங்கம் பாவந்தான்.. அக்கறையான அவர்கள் பேச்சில் மெய்சிலிர்த்து நிற்கிறது.:)
மஞ்சள் புள்ளியை பார்த்ததும் பக்கத்து வெள்ளைத்தாளில் எனக்கும் ஒரு ஆண் உருவம் தெரிந்து யார் என உணர்வதற்குள் மறைந்து விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம். அவர் தெளிவாகி இருப்பார். இப்போது போன் செய்தால் வேறு பிரச்னைகளை பேசக்கூடும். எதற்கு வம்பு?!!
நீக்குநதி அகவிதைகள் யாவும் நான்... நான்... நான் எழுதியது. சு சென்ற வாரம் பின்னூட்டத்தில் ஒரு கவிதை எழுதி இருந்தார்!!
மதன் ஜோக்ஸுக்கு கேட்கவேண்டுமா?
அந்த ஆணுக்கு என்ன பயமோ? நம்மைக் கண்டதும் மறைந்து விடுகிறார்!
வணக்கம் சகோதரரே
நீக்குகவிதைகள் நீங்கள் எழுதியதா? நானும் நீங்கள் சொன்ன விதத்தில் கொஞ்சம் குழம்பி போய் விட்டேன்.(முதல் பதிவின் தாக்கத்தில்,நீங்கள் கவிதைகள் பற்றி எழுதியதை நானும் சரியாக படிக்கவில்லையா என்னவோ.. ஹா ஹா.) கவிதைகள் மிக அருமையாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குகொட்டி தீர்த்து விட்டார் நண்பர். சிலர் இப்படித்தான் அவர்கள் பேசுவதை மட்டும் நாம் கேட்க வேண்டும். இடையில் பேசக் கூடாது. அவர் விரக்தியில் பேசினாலும் அவர் பகிர்ந்த பாடல்கள் அருமை.
பதிலளிநீக்குநன்பர் நிம்மதி ஆகி இருப்பார். அவர் மனபாரம் குறைந்து இருக்கும். ஆனால் உங்கள் நிம்மதி!எதை பற்றி பேசினார், ஏன் இப்படி பேசினார் என்று சிந்தனை ஆரம்பித்து இருக்கும்.
அவரெங்கே பாடல்கள் பகிர்ந்தார்? பாடல் வரிகளை சொல்லும்போது என் குறுக்கீடு அது. அதை அவர் ரசிக்கவில்லை!!
நீக்குகவிதைகள் நன்றாக இருக்கிறது , புதையல் வேட்டை படிக்கவே பயமாக இருக்கிறது.
பதிலளிநீக்குநகைச்சுவைகள் அருமை.
கதம்பம் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குசிலர் இப்படித்தான்
பதிலளிநீக்குஆம். நன்றி நண்பரே...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபேஸ்புக்கில் வந்த புதையல் எடுக்கும் க(லை)தை பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பூவிலிருந்து தொட்டுத்தொடர்ந்து நாகம் வரை சுவாரஸ்யமான தகவல்கள். இது அதர்வணவேதத்தின் ஒரு வெளிப்பாடோ.? அப்படியும் எடுத்து சொத்து நிலைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
ஜோக்ஸ் அனைத்தும் அருமை. எப்போதும் விரைவில் வந்து விடும் உங்களைத்தான் இதுவரை கருத்துக்களில் காணவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அதை எல்லாம் நம்ப முடியவில்லை கமலா அக்கா... நடக்க முடியாதவை என்று நினைக்கிறேன்.
நீக்குகாலை ஆறரைக்குள் யாராவது வந்திருந்தால் பதில் கொஞ்சமாவது சொல்லி விட்டு ஓடி விடுவேன். அப்புறம் பெரும்பாலும் மதிய உணவு இடைவேளையில்தான் வரமுடியும்.
அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள்! தீநுண்மியின் தாக்கம் குறைந்து, அனைவரும் நல்வாழ்வு வாழ்ந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க வானம்பாடி. வணக்கம். மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்.
நீக்கு//எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்பதி படுத்துவது எவ்வகையில் சாத்தியம்?
பதிலளிநீக்கு"அதெப்படி முடியும்?"//
அதானே அது எப்படி எல்லோரையும் மொட்டை ஒரே சமயத்தில் மொட்டை போடமுடியும்!
// நாமதான் முட்டாள்..//
அதைத்தானே அவங்களும் சொல்றாங்க போல.."//
சூப்பர்
ஒண்ணுமே புரியாமல் எங்களையும் முட்டாளாக்கி விட்டீர்கள்.
கடைசி ஜோக் சரிதான். இப்போ உள்ள எந்த இந்திய ஏர் ஹோஸ்டஸ் அழகாக இருக்கிறார்கள்.
Jayakumar
ஏதோ அவனுக்கு தன் மனத்தாங்கலைக் கொட்டி விட்ட திருப்தி!
நீக்குஅப்படியா? இப்போ ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அழகா இருப்பதில்லையா? வெங்கட் சொல்வாரோ.... அப்பப்போ பறப்பவர் அவர்தான் சமீப காலத்தில்!
நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.
ஸ்ரீராம்... பொதுவெளில சட்னு எழுதிட முடியுமான்னு தெரியலை. ப்ரைவேட் ஏர்லைன்ஸ் (ஜெட் போன்ற) இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்ல அழகான பெண்களை (அதாவது 20 ரேஞ்சுல) வேலைக்கு வைப்பாங்க. இதுல எக்ஸெப்ஷன் நம்ம ஏர் இந்தியாதான். ஹாஹா. ஏர் இந்தியா தவிர, மற்ற ஏர்லைன்ஸ்ல ஏர் ஹோஸ்டஸ் வேலைக்கு அழகு, இளமை ஒரு க்ரைட்டீரியா. ஹிஹி
நீக்குதிருப்தியை திருப்பதி என்று எழுதியதை சுட்டிக் காட்டினேன். நீங்கள் கண்டு கொள்ளவில்லை.
நீக்குஆஹா.. அங்கயும் கவனிக்கவில்லை, இங்கயும் கவனிக்கவில்லை!!
நீக்குஎன்னுடைய ஒரே விமானப் பயணத்தில் அவர்கள் யாவரும் இளமை, அழகாகவே இருந்தனர் நெல்லை!
நீக்குஆஹா நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆப்டிகல் இல்யுஷனில் படம் தெரிகிறது. கலர் சற்று மங்கலாக ஒரு ஆண். கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்!!::)))
பதிலளிநீக்குஅடடே... ஆச்சர்யக்குறி!
நீக்குஎனக்கு கலர் மங்கலாக ஒரு பெண்...ஹிஹி
நீக்குஒவ்வொரு முறை பால், காபி பொடி, பெட்ரோல் போன்றவைகளின் விலை உயரும் பொழுதும் இம்மாதிரி ஜோக்குகள் வருகின்றன. ஆனால் அவைகளின் பயன்பாடு குறைந்ததாக தெரியவில்லை. ஜோக்கிற்கு சிரித்து விட்டு ஒரு நாளைக்கு நாலு காபி குடித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
பதிலளிநீக்குஉண்மைதான். பெட்ரோல், டீஸல் விலை ஏறினாலும் நாலு சக்கர, இரு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது!
நீக்கு*இருக்கிறோம்!
நீக்குஎனக்குத்தான் பேத்தியோடு நேரம் சரியாக இருப்பதால் மற்ற விஷயங்கள் கொஞ்சம் ஆதி வாங்குகின்றன. துரை செல்வராஜூ சாரின் கதை இன்னும் படிக்க முடியவில்லை. நேற்று எழுத நினைத்த சில கமெண்டுகளை போடா முடியவில்லை. கீதா அக்காவுக்கு என்ன ஆச்சு? ஆலைக்கு காணோம்..?
பதிலளிநீக்குபானு அக்கா.. என்னைப்போல தட்டச்சி இருக்கிறீர்களே..!!!
நீக்கு*மன்னிக்கவும், ஆளைக்காணோம் என்றிருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஸ்ரீராம்... நான் இருவேறு புத்தகங்களில் படித்தது... மனைவி நம்மிடம் ஏதாவது டாபிக் பேசுவார் (பிரச்சனைகளையெல்லாம்). உடனே நாம ரியாக்ட் செய்வதையோ இல்லை நம் பங்குக்கு அட்வைஸ் செய்வதையோ அவர்கள் விரும்புவதில்லையாம். பிரச்சனையின் உள் செல்லாமல், வெறும்ன காது கொடுத்துக் கேட்டால் மட்டுமே போதுமாம். அதைத்தான் அவங்க எதிர்பார்க்கிறாங்களாம். (உதாரணமா..நம் அம்மாவைப் பற்றிய குறைகள்.. அவங்க சகோதர சகோதரிகளைப் பற்றிய விஷயங்கள்.. இதில் எதிலும் நம் கருத்தையோ அல்லது விமர்சனங்களையோ அவர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள்.. நம் சிந்தனைத் திறன் மீது அவங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை ஹாஹா)
பதிலளிநீக்குஉங்கள் நண்பரும் அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் உங்களிடம் பேசியிருக்கிறார்.
சுதந்திரமாக உங்களிடம் பேசலாம் என்ற நம்பிக்கை அவருக்கு.
உண்மைதான். அதுதான் என் மைண்ட்வாய்ஸை கடைசியில் கொடுத்திருக்கிறேன். அந்நேரம் அவனுக்கு நானொரு சுமைதாங்கி!!
நீக்குகருவானடி மரம் ..... படிக்க ஆச்சரியம் தருகிறது.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குகடைசியில் தந்திருக்கும் அனைத்து ஜோக்ஸ்-உம் சிறப்பு. ரசித்தேன்.
பதிலளிநீக்குசுமைதாங்கிக் கொண்டீர்கள். அவருக்கு ஒரு வடிகால். போகட்டும்.
பதிலளிநீக்குகவிதை நன்று.
மஞ்சள் புள்ளி மகிமை, இது போல பல வாட்ஸ் அப்பில் வந்துள்ளன. பத்து நொடி கழித்துத் தெரியும் உருவத்தில் தெளிவு சற்று குறைவாக உள்ளது.
சிங்கத்தின் b‘பா’வம் சிறப்பு.