விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
இன்று இரண்டு 'சிந்துநதி'ப் பாடல்கள்!
1979 வெளியான படம்.. இளையராஜா இசை. ஆயினும் படத்தில் எஸ் பி பி குரல் கிடையாது! அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் கண்ணதாசன்.
சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ முக்கிய வேடத்தில் நடித்த படம். சுஜாதா சினி ஆர்ட்ஸ்! பாலாஜி தயாரிப்பு. தெலுங்கிலிருந்து இறக்குமதி. கே விஜயன் இயக்கம்.
கணவனும் மனைவியும் பிரிந்து கடைசியில் சேரும் கதை. இந்தப் படத்தில் இந்தப் பாடல் எனக்கு பிடித்த .பாடல்களில் ஒன்று. பாடலில் இளையராஜாவின் டச் தெரிவதாக எனக்குத் தோன்றும்!
உயர்ந்த மனிதன் ஜோடி! நண்பன் இதில் சம்பந்தி! வாணிஸ்ரீ என்ன பௌடர் பூசி இருக்கிறார் என்று சிவாஜி ஆராய்ச்சி செய்கிறார்.
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவை போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவை போல சூடினாள்
சிந்து நதிக்கரை ஓரம்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள் மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள் கோதை எந்தன் சீர் வரிசை
சொல்லி கொடுத்தேன் அதை அதை
அள்ளி கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா
தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான் கொடுத்தேன்
வானவெளியில் நிதம் இதம்
சோலைவெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா
1979 ல் வெளியாகாத படம்! கவனியுங்கள் வெளியாகாத படம்! 'மலர்களில் அவள் மல்லிகை 'எனும் இந்தப் படம் வெளிவராவிட்டாலும் இதன் பாடல்கள் வெளியாகி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. இலங்கை வானொலி மூலம்தான் இந்தப் பாடல்கள் எனக்கு அறிமுகம்.
இந்தப் படத்துக்கு இசை கங்கை அமரன். அவர் இசையமைத்த முதல் படம்.
இதில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும். ஜெயச்சந்திரன் குரலில் எனக்குப் பிடித்த பாடல்கள் லிஸ்ட்டில் இதுவும் உண்டு.
யார் நடித்தது என்ன என்கிற விவரம் எல்லாம் தெரியாது. படம் என்ன ஆயிற்று தெரியாது. இதில் இடம்பெற்றிருந்த மற்ற பாடல்களை நான் விரும்புவதில்லை. இந்தப் பாடல் அடிக்கடி கேட்கும் பாடல்.
இது முன்னர் ஒருமுறை பகிர்ந்திருக்கிறேனோ என்னவோ..
ஜெயச்சந்திரன் பி சுசீலா குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலை எழுதி இருப்பவர் பூவை செங்குட்டுவன்.
சுசீலா,ஜெயச்சந்திரன் இருவருமே பல்லவிவியிலேயே சற்று உயர்ந்த ஸ்தாயியில் தொடங்கும் பாடல். பல்லவியே கொஞ்சம் மேலே தொடங்கினால் சரணங்கள்? இன்னும் கொஞ்சம் மேலே...
ஜெயச்சந்திரன் குரல் இதில் என்னை மிகவும் கவரும்.
வீணையையும் குழலிசையையும் கச்சிதமாகப் பயன் படுத்தி இருப்பார் கங்கை அமரன்.
சிந்து நதியோரம்.... தென்றல் விளையாடும்...
கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்...
சிந்து நதியோரம்....
தென்றல் விளையாடும்...
கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்..
கன்னி இளமயில் சின்ன மணிக்குயில்
என்னை நெருங்கிடும் போது எண்ணம் போகும் தூது...
கையிரண்டில் அள்ளி காதல் கதைச் சொல்லி
உள்ளம் மகிழ்ந்திடும் போது இன்பம் வேறு ஏது...
நெஞ்சில் எடுத்தேன் கொஞ்சிக் களித்தேன்
வஞ்சி உனக்கென்று வாழ்கிறேன்..
இன்னும் எதெற்கென்ன பார்வையோ
என்ன தேவையோ... என்ன தேவையோ.. ஹோ..
சின்னஞ்சிறு சிட்டு உந்தன் கைகள் பட்டு
தன்னை மறந்திடும் போது தனிமை என்பதேது..
மொட்டவிழ்ந்த முல்லை கட்டழகின் எல்லை
தொட்டுத் தழுவிடும் போது சொர்க்கம் வேறு ஏது...
மங்கை அழகி மலையருவி பொங்கி பெருகிடும் என் மனம்...
கங்கை நதிக்கென்ன தாகமோ என்ன வேகமோ தன்னை மீறுமோ..... ஹோ
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..
பதிலளிநீக்குகுறள் நெறி வாழ்க..
வாழ்க வாழ்கவே...
நீக்குஅனைவருக்கும் அன்பின் இனிய
பதிலளிநீக்குவிநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்..
நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
நீக்குஅனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்/
பதிலளிநீக்குவினாயகன் எல்லோருக்கும் நல் வழி காட்டுவார்.
நற்காரியங்களை எதிர் கொண்டு வாழ்வோம்.
கணேஸ சதுர்த்தி வாழ்த்துகள்.
நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள். வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். இந்தத் தடவையாவது கீதா சாம்பசிவம் மேடம், 20 பிள்ளையார் கொழுக்கட்டைகளாவது படத்தில் வரும்படி ஒரு இடுகை போடவேண்டும். பண்ணினேன், சாப்பிட்டு முடித்த பிறகுதான் பதிவு பற்றி நினைவு வந்தது, அதனால் வெறும் தட்டும் அந்த இராமர் பட்டாபிஷேகப் படமும் என்று பதிவு போடக்கூடாது.
நல்ல ஆரோக்கியத்தோடு நம் கீதாமா நாலு கொழுக்கட்டை செய்தாலும் நன்றாகச் செய்வார்.
நீக்குவலி இல்லாமல் இருக்க வேண்டும்.
வாங்க நெல்லை... கீதா அக்கா பதிவு போடும் முன்னர், அலலது கொழுக்கட்டைகள் தீரும் முன்னர் இதைப் பார்த்து விட்டால் உங்கள் விருப்பம் நிறைவேறக் கூடும்!
நீக்குஅதே அம்மா.
நீக்குஹாஹாஹாஹா, கொழுக்கட்டை பண்ணினேன். சொதப்பல் இந்த வருஷம். ரொம்ப முடியலை. அப்படியே போட்டு விட்டுப் போய்ப் படுத்துட்டேன். பூஜை முடிஞ்சு நிவேதனம் எல்லாம் ஆனப்புறமாத் தான். அதுவரை பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்தேன். :(
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அடடே அன்பு கமலா மா. அன்பு நல்வரவு. உடம்பு தேவலையாமா.
நீக்குபிள்ளையார் சதுர்த்தி நல் வாழ்த்துகள்.
நல் வாழ்வு தொடர எங்கள் பிரார்த்தனைகள்.
வணக்கம் சகோதரி
நீக்குதங்களுக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள். ஒரளவு நலம் பெற்று விட்டேன் சகோதரி. மேலும் உங்கள் அனைவரின் அன்பினாலும். விநாயகரின் அருளாலும், இனி முற்றிலும் நலமடைந்து விடுவேன். உங்கள் அன்பான விசாரிப்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா.. வாங்க கமலா அக்கா... பிள்ளையார் சதுர்த்தி இனிதே ஆரம்பித்திருக்கிறது. உங்கள் வரவைக்க கண்டதில் இப்போதே கொழுக்கட்டை சாப்பிட்ட திருப்தி. வணக்கம்.. வாங்க... விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குநலமா? இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள். பிள்ளையார் என்னை இன்று பிள்ளையார் சுழி போட்டு நல்லபடியாக வர வைத்திருக்கிறார். அவரருள் என்றும் பூரணமாக வேண்டுமென பிரார்த்திக்கிறேன். உங்கள் அன்பான வரவேற்பினை கண்டதும், நானும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம் நலமா?
நீக்குகமலா வந்து விட்டீர்களா? வாழ்க வளமுடன்
நீக்குபோன முறை அழகான மோதகம் பதிவு போட்டு இருந்தீர்கள்.
பிள்ளையாருக்கு மோதகம் வேண்டும் நலத்தை கொடுத்து விட்டார் உங்களுக்கு.அவருக்கு கொண்டாட்டம் அருமையான மோதகம் கிடைக்குமே!
வாங்க கமலா, உடல் நலம் தேவலையா? விரைவில் பூரண குணம் பெறப் பிரார்த்திக்கிறேன்.
நீக்கு:"வாணிஸ்ரீ என்ன பௌடர் பூசி இருக்கிறார் என்று சிவாஜி ஆராய்ச்சி செய்கிறார்." haahhaa.பாடல் பிடித்த அளவில் மிக அருமை.
பதிலளிநீக்குவாணி ஸ்ரீயும் மேக் அப்பும்
ரசிக்காது.
பாடல் மிகப் பிரபலம். சிந்து நதியை நம் பாரதி பாடினாலும் பாடினார்.
நிறையப் படங்களில் ஓடிக் கொண்டே இருந்தது.
என்ன சொல்ல வந்தார்கள்?
காவிரிக்கரையில் இல்லாத காதலா:)))
''கொஞ்சும் குயில் மெல்லிசைகள் கோதை எந்தன் சீர் வரிசை
சொல்லி கொடுத்தேன் அதை அதை
அள்ளி கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா
தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்து கொண்டாள் "
கண்ணதாசன் எழுதியதால் அந்த ஓவியம் கண்ணில்
தெரிகிறது. கண்ணனும் ராதையுமாக .
மிக அருமை ஸ்ரீராம். நன்றி.
'காவிரிக்கரையில் தோட்டத்திலே.. கானம் வந்ததது தோழியரே... கானம் வந்த வழியினிலே கண்ணன் வந்தான் தோழியரே....'
நீக்குசட்டென இந்தப் பாடல் காவிரிக் கரைக்கு நினைவு வரும் பாடல் இது அம்மா.
கண்ணதாசன் வரிகளை படிக்கும்போது சிவாஜி வாணிஸ்ரீ மறைந்து வேறு இளம் ஜோடி மனக்கண்ணில் தெரிகிறது!!!
ஓஹோ! சரிதான் மா.
நீக்குஇரண்டாவது பாடல் மிக மிக ரசிக்கும்படியாக இருக்கிறது.
பதிலளிநீக்குசுசீலா அம்மாவின் குரலும் ஜெயச்சந்திரன் குரலும்
உச்ச இசையில் சிறிது கூடக் கலங்காமல்
மிகச் சிறப்பாக ஒலிக்கின்றன.
ஆமாம் அம்மா. மிக்க நன்றி இந்த கமெண்ட்டுக்கு. எல்லோரும் முதல் பாடல்தான் சூப்பர் என்றே எழுதுவார்கள் என்றே நினைத்தேன். மேலும் இதை ஷெட்யூல் செய்து ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரமும் என் மனதில் ஜெயச்சந்திரனின் இந்தப் பாடல் வரிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன....
நீக்குபுரிகிறது மா. என் மனதில் இன்று ‘. பாட வந்ததோ ராகம் ‘ ஓடிக் கொண்டிருக்கிறது.!
நீக்குஅடடே.. நானும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன் அதைப் பகிர...
நீக்குபதிவு முழுவதும் நிறைந்திருக்கும் பிள்ளையார் படங்கள்
பதிலளிநீக்குஅழகு கூட்டுகின்றன.
அந்தக் குழந்தை அழகும் கருணையும் நமக்கு சகல சௌபாக்கியங்களையும்
கொடுக்கட்டும்.
நன்றி அம்மா அதையும் ரசித்ததற்கு. ஜீவி ஸார் வந்து விநாயகர் சதுர்த்தி நினைவுக்கே வரவில்லையா என்று கேட்கக் கூடும் என்று யோசித்து இதைச் சேர்த்தேன்!!
நீக்கு:):):):):):)
நீக்குஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு..
பதிலளிநீக்குஐங்கரனின் அருளால் அனைத்தும் நலமாகட்டும்..
வணக்கம் சகோதரரே
நீக்குஉங்களுக்கு இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள். அனைத்தும் நல்லவையாகட்டும். தங்களின் அன்பான இனிய வரவேற்பிற்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒப்பனை அலங்கார
பதிலளிநீக்குஒய்யாரத்தினுள்
ஓங்கார ஸ்வரூபனின்
ஒண்முக தரிசனம்!...
__/\__
நீக்குவணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். என்னப்பன் விநாயகர் அனைவருக்கும் உடல்/மன பிணியகற்றி நல்லதோர் வாழ்வை நலங்குன்றாமல் தந்தருள வேண்டுமாய் பிரார்த்தித்து கொள்கிறேன்.
என்னை இத்தனை நாட்கள் அன்புடன் நலம் விசாரித்து, என் நலத்திற்கு பிராத்தனைகள் செய்த அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
🙏. உங்கள் அனைவரின் அன்பான பிரார்த்தனைகளில் இன்று என்னப்பன் பிள்ளையார் அனுக்கிரஹத்துடனும் நலம் பெற்று வலைத்தளத்திற்கு வந்திருக்கிறேன். அனைவருக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றிகள்.🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிகவும் மகிழ்ச்சியூட்டும் செய்தி கமலா அக்கா.. வாங்க...
நீக்குஹை கமலா அக்கா வாங்க வாங்க வாங்க வாங்க!! நல்வரவு!!
நீக்குமகிழ்வான விஷயம் உங்கள் நலம்!
எங்களுக்கும் மகிழ்ச்சி கமலாக்கா உங்களைப் பார்த்ததில்
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான பிள்ளையாரின் படங்களுடன், நல்ல திரைப்பட பாடல்களுடன், அதனின் அருமையான விளக்கங்களுடன், இன்றைய வெள்ளி பதிவு அருமை. பாடல்கள் வரிகளை வைத்து பார்க்கும் போது கேட்டதாக நினைவில்லை. பிறகு கொஞ்ச நேரத்தில் கேட்டு பார்த்து விட்டு மீண்டும் பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா... பிறகு நிதானமாக வந்து கேட்டு விட்டு சொல்லுங்கள்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்! கணேசன் அருளால் எல்லோருடைய வாழ்விலும் நன்மைகள் ஓங்கட்டும்!
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா. வணக்கம். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
நீக்குஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி. வாங்க கோமதி அக்கா... வணக்கம். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
நீக்குஇரண்டும் ஸூப்பர் பாடல்கள் ஜி
பதிலளிநீக்குஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
நன்றி ஜி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
நீக்குசகோ கமலா ஹரிஹரன் அவர்கள் நலமுடன் வலையுலகம் திரும்பியமைக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவிநாயகர் படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.
பதிலளிநீக்குபாடலில் முதல் பாடல் மட்டும் அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.. படமும் பார்த்து இருக்கிறேன், தொலைக்காட்சியில். இரண்டாவது பாடல் கேட்டு இருக்கிறேன் ஆனால் மனதில் பதியவில்லை. நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குவெளியாகாத படம். இப்போதுதான் அறிகிறேன்.
பதிலளிநீக்குபாடல் சிறப்பாக இருக்கும் முனைவர் ஸார். நன்றி.
நீக்குஅருமையான பாடல்கள்...
பதிலளிநீக்குஆம். நன்றி DD.
நீக்குஸ்ரீராம் இன்று பிள்ளையார் ஒரே குஷி போல!!!!
பதிலளிநீக்குஇசையமைத்துப் பாட்டுப் பாடி நடனமாடி!!!!!!! கடைசில ஹப்பாடா என்று ஓய்வு எடுக்கிறார் போல! ஆனா பாவம் பாருங்க 5 நிமிஷம் கூட ரெஸ்ட் கிடைக்குமா தெரியலை. இன்று ஏகப்பட்ட அப்ளிகேஷன் போயிருக்குமே! என்னோடது உட்பட! ம்ம்ம்ம் யாருடையது எல்லாம் கவனிக்கப்படுகிறதோ!
எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்!
பாட்டு கேட்டுவிட்டு வருகிறேன்.
கீதா
பிள்ளையார் படங்கள் அத்தனையும் சூப்பர்! ரசித்தேன்.
பதிலளிநீக்குவாணிஸ்ரீ என்ன பௌடர் பூசி இருக்கிறார் என்று சிவாஜி ஆராய்ச்சி செய்கிறார்.//
ஹாஹாஹாஹாஹா ஹையோ சிரித்து முடியவில்லை! ஸ்ரீராம், நல்ல ஹாஸ்ய விவரிப்பு!!!
இந்தப் பாட்டு நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.பிடிக்கும். வரிகள் அழகு.
பாட்டு சுத்ததன்யாசி போலவும் சில இடங்களில் ஆபேரி போலவும் இருக்கிறது...ஆபேரிதானோ?
கீதா
ஒருவேளை அது சுத்த சன்யாசி ராகமோ? சன்யாசினா, பெண்ணை ஆராய்ச்சி பண்ணணுமே... அது தெரிஞ்சு ஜிவாஜி நடிச்சிருக்காரோ?
நீக்குஹாஹாஹாஹாஹா நெல்லை சிரித்துவிட்டேன்!!!
நீக்குகீதா
வீணையையும் குழலிசையையும் கச்சிதமாகப் பயன் படுத்தி இருப்பார் கங்கை அமரன்.//
பதிலளிநீக்குஅதற்குக் கீழே படம் ரொம்பப் பொருத்தம்!!!!!!!
சிந்து நதி ஓரம் பாட்டும் மிகவும் பிடித்த பாடல். இலங்கை வானொலி உபயம். இது முதல் பாடலைவிடப் பிடித்திருக்கிறது.
கீதா
சிந்துநதிக்கரை ஓரம் பாட்டு கேட்டதும் அதே ராகப் பாடல் ராஜாவின் பாடல் வசந்த கால கோலங்கள் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குகீதா
அனைவருக்கும் கொழுக்கட்டை தின வாழ்த்துகள் தாமதமாக! இங்கே போட்டிருக்கும் பாடல்களை விடப் பதிவை அலங்கரிக்கும் விதம் விதமான பிள்ளையார் தான் மனதையும் கண்களையும் கவர்ந்து இழுக்கிறார். அருமையான பிள்ளையார் படங்கள் பல்வேறு விதமான நிலைகளில். கடைசியில் அப்பாடா னு ஓய்வும் எடுத்துக்கறார்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுதல் பாடல் கேட்டிருக்கிறேன். இரண்டாவது நினைவில் இல்லை.
முதல் பாடல் கேட்டு ரசித்த பாடல். இரண்டாவது பாடல் முதல் முறை கேட்பது போல இருக்கிறது. முன்னர் கேட்டதாகத் தெரியவில்லை.
பதிலளிநீக்கு