திங்கள், 17 ஜனவரி, 2022

திங்கக்கிழமை : ப்ரெட்ஸா - நிவிஅர்விந்த் ரெஸிப்பி

இனிமே பீட்ஸா ​னா​ Domino's போக வேண்டாம். பசி கு பிரெட் இருந்தா ஜாம் தேட வேண்டாம். 

ப்ரெட் இருந்தால் ஜாம் தேடவேண்டாம்.  நாம் ப்ரெட்ஸா செய்துவிடலாம்!

தேவையான பொருட்கள் :

- Bread
- Pizza sauce இருந்தா சூப்பர். இல்லனா ​பரவாயில்லை 
- Oregano
- Chilli flakes.  ​இது இரண்டும் தனியாக பாட்டிலில் கிடைக்கும். ​இல்லை என்றால் Domino's ​ல் கிடைப்பதே போதும்..

​வெங்காயம், தக்காளி - கொஞ்சம் (பொடியாக நறுக்கியது)
​குடைமிளகாய் (பொடியாக நறுக்கியது)

​பிரெட்ல கொஞ்சம் பிசா சாஸ் தேய்த்து வைக்கவும். ​அது கிடைக்கா விட்டால் அல்லது இல்லாவிட்டால் சாதாரண தக்காளி சாஸ் அல்லது வெறும் வெண்ணெய் கூட போதும்.





​மேலே நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி குடைமிளகாய் எல்லாம் தூவவும். சோளம், ஆலிவ் எல்லாம் இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.





​இப்போது அதன்மேல்  பாஸ்தா /பீஸா சீஸனிங் அதாவது ஓரிகானோ அல்லது மிளகாய் Flakes போடவேண்டும்.  உப்பு தேவை இல்லை. ​இதிலேயே நல்ல flavour கிடைக்கும். ஆனாலும் தேவையெனில் கூட கொஞ்சம் போட்டுக்கொள்ளலாம். 



​பிரெட் மேல் சீஸ் போடவும்.   தவாவை அடுப்பில் வைத்து, அதில் கொஞ்சம் வெண்ணெய் இட்டு அதில் இந்த அலங்கரிக்கப்பட்ட ப்ரெட்டை மெல்ல வைக்கவும்.



​ப்ரெட்டை திருப்பக் கூடாது.  ப்ரெட்டின் கீழ்ப்பக்கம் கொஞ்சம் மொறுமொறுவென்று ப்ரௌன் நிறத்துக்கு மாறும்.  அப்போது அதை தீயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



​இரண்டு நிமிடம் அடுப்பை மிதமானசூட்டில் வைத்தது, ப்ரெட்டின் மேல் இருக்கும் சீஸ் உருகியதும் எடுத்து விடலாம்.  அவ்வளவுதான்.

சாப்பிடலாம்!

டிப்ஸ் ;

மேலே போடும் சீஸ் ரொம்ப இறுகி இருக்காமல் அறை வெப்பத்தில் கொஞ்சமாக இளகி இருந்தால் ப்ரெட் ரொம்ப அடிபிடிக்காமல் சீஸ் சட்டென உருகிவிடும்.  உடனே எடுத்து விடலாம்.

​வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் எல்லாம் தனியாகத்தான் வைக்கவேண்டும் என்று இல்லை.  எல்லாவற்றையும் சாலட் மாதிரி கலந்து கூட மேலே தூவலாம். காய்களைக் கலந்து மேலே தூவியபின் அதன்மேல் டாப்பிங்ஸ் போடலாம்.​

====================================================================================================

நிவி என்று நாங்கள் அழைக்கும் நிவேதிதா அரவிந்தகுமார் என் தங்கையின் பெண்.  நிறைய விதம்விதமாக சமைத்து சோதனை செய்பவர்.  ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது இதைப்பற்றி பேச்சு வந்ததும் 'எபியின் திங்கற கிழமைக்கு அனுப்பேன்' என்றேன்.  உடனே இதை அனுப்பி விட்டார்.  இது முதல்.  இன்னும் தொடரக்கூடும். - ஸ்ரீராம் 

73 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு..

      குறள் நெறி வாழ்க..

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. நிவி அரவிந்த் அவர்களுக்கு நல்வரவு...

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான சமையல் குறிப்புகளால் எபி யின் பக்கங்கள் சிறப்பாகட்டும்..

    பதிலளிநீக்கு
  5. எல்லாருக்கும் காலை வணக்கம்.

    அட! பேச்சுலர்ஸ் பிட்ஸா!!!!! சூப்பர்!!!

    ஸ்‌ரீராம்!, நிவி ரொம்ப நல்லா சொல்லிருக்காங்க! வாழ்த்துகள்! பாராட்டுகள் நிறைய எழுத சொல்லுங்க!!! நம்ம கூட்டத்துல கலந்துக்க சொல்லுங்க!! நானும் நிவி வயசுல இப்படித்தானே இருந்தேன்!! அதான் ஹாஹாஹா!!!

    படங்கள் ரொம்ப க்ளியரா ஸ்டெப் பை ஸ்டெப்பா பேச்சுலர்ஸ் கு பயன்படும்படியா அழகா சொல்லிருக்காங்க!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   நன்றி.  அவளும் படிப்பாள்.  பதில் சொல்வாளா, தெரியாது!

      நீக்கு
    2. நன்றி. சொல்கிறோம். (சொல்லிட்டேன்!)

      நீக்கு
    3. பதில் சொல்லாம எப்படி ..மிக்க நன்றி ..

      நீக்கு
  6. நல்ல சுவையாக இருக்கும் இதுவும் கிட்டத்தட்ட அந்த பிட்சா போலவே!!

    சின்ன டிப்ஸ் - ஓடிஜி - OTG இருந்தா அல்லது மைக்ரோ வேவ் கன்வெக்ஷன் மோட் ல போட்டும் செய்யலாம் இதை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓன்று சொல்ல மிஸ் ஆகிவிட்டது. ஓடிஜி என்றாலும் சரி மைக்ரோவேவ் என்றாலும் க்ரில் மோட் ல வைக்கும் போது மேலே மட்டும் சூடாகி சீஸ் உருகும்.

      கீதா

      நீக்கு
  7. அவங்க கொடுத்திருக்கும் டிப்ஸும் சூப்பர். பேச்சுலர்ஸ்கு ரொம்பவே உதவும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  பேச்சுலர்ஸுக்கு இந்த அளவு பொறுமை இருக்கிறதா என்ன!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா தானே சமைத்து ருசித்துச் சாப்பிடும் பேச்சுலர்ஸ்!!!! சமைக்கும் விருப்பமுள்ள ஆண்கள்!!!

      நெல்லை இல்லையா?!!!(நெல்லை ப்ரெட் பிட்சா சாப்பிட விரும்பவில்லை என்றாலும்!!!) ஏன் நீங்க இல்லையா!!!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  8. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அனைவரும் ஆரோக்கியம், அமைதியுடன்
    இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. நிவி அரவிந்த் அவர்களுக்கு நல் வரவும் வாழ்த்துகளும்
    இளஞர்களும் இளஞிகளும்
    துடிப்பாக இயங்கும் நேரம் இது..
    இந்தப் புதுவரவால் நமக்கு மாறுபட்ட செய்முறைகள்
    கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  10. மிகப் பிரமாதமான செய்முறை.

    ப்ரெட் இல்லாத வீடு ஏது!!
    சுலபமாகச் செய்து காட்டி இருக்கிறார்.

    வண்ணக்கலவை யாகக் காட்சி அளிக்கும்
    சிற்றுண்டி உடனே சாப்பிடச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. படமே மிகவும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம்.
    நிவேதிதா அரவிந்த் குமாரை வரவேற்கிறேன்.
    சுலபமான செய்முறை. ப்ரெட் இல்லாத வீடு ஏது? இந்த டாப்பிங்களும் இளைய தலைமுறையினர் வாங்கி விடுகின்றனர். எனவே செய்வது சுலபம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. நிவி அவர்களின் முதல் பதிவு என்ற வகையில் சிறப்பாக உள்ளது. சொல்ல வந்ததையும் படங்களையும் அழகாக தொகுத்துள்ளார். மற்றபடி பேச்சிலர்கள் மெனெக்கெட மாட்டார்கள். sandwich செய்து கொள்வார்கள். 

    குட்டிஸ் செய்வதற்கு ஏற்ற ரெசிபி. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஜெகே அண்ணா, என் மகன், கணவரின் தம்பி மகன் பேச்சுலர்ஸ் போன்றவர்கள் விரும்பி சமைப்பவர்கள்! எங்கள் வீட்டில் விரும்பிச் சமைக்கும் ஆண் பிள்ளைகள் உண்டு. அது போல தனியாக இருக்க நேரும் ஆண்களும்.

      கீதா

      நீக்கு
    3. ஜெ கே சார்.. நான் பேச்சலராக ஆறு வருடங்கள் (13-18) இருந்தபோது, ஒருமுறை பக்கத்துக் கடையில் ப்ரெட் வாங்கப் போனேன். அவர் 350 ஃபில்ஸ் தாங்க என்றார். நானோ 100 ஃபில்ஸ் இல்லையா எனக் கேட்டபோது, நாங்க பல வருடங்களா ப்ரெட் வாங்கினதே இல்லையா எனக் கேட்டார். (எங்க சேப்பர் மார்க்கெட்ல, அவங்க தயார் செய்யும் ப்ரெட் சுடச் சுட 100 ஃபில்ஸ்.. அப்கோ காசுக்கு 12-18 ரூ)

      நான்லாம் வாரம் நாலைந்து முறை சமைப்பேன், சி சமயம் மூன்று முறை). ப்ரெட்ல காலத்தை ஓட்டினதே இல்லை.

      நீக்கு
    4. நானும் நெல்லை சார் போலத்தான். சைவ உணவுகள் சுமாராக சமைப்பேன். என்னுடைய இரு மகன்களும் வெளி ஊரில் வெளி நாட்டில் இருந்தபோது அவர்களே சமைத்து சாப்பிட்டார்கள். அசைவம் சாப்பிடுவார்கள் ஆகையால் முட்டை சாப்பிடுவார்கள். ஆகவே பிரட் என்றால் பிரட் ஆம்லெட் தான். பிஸ்சா பேஸ் வாங்கி பிஸ்சா செய்து கொள்வார்கள். 

      பிரட் என்றால் ஒரு சின்ன அலர்ஜி. காரணம் மலச்சிக்கல்  தான். 

      Jayakumar

      நீக்கு
    5. குட்டிஸ் செய்வதற்கு ஏற்ற ரெசிபி. //

      ஆமாம் அதே...ஜெகே அண்ணா

      நெல்லை உங்களை (பேச்சிலர்னே) மேலே சொல்லிட்டேன் பாருங்க!! ஹாஹாஹாஹா

      கீதா

      கீதா

      நீக்கு
    6. //உங்களை (பேச்சிலர்னே) மேலே சொல்லிட்டேன்// - பின்னே... 18 வயசுப் பையன் பேச்சலரக இல்லாமல் வேறு எப்படி இருப்பாராம்?

      நீக்கு
    7. என் அப்பா வீட்டில் அப்பா, தம்பி நன்றாகச் சமைப்பார்கள். அதிலும் தம்பி சேவை முதற்கொண்டு, கொழுக்கட்டைச் சொப்புச் செய்து பூரணத்தால் நிரப்புவது வரை அனைத்தும் செய்வார். நம்ம ரங்க்ஸும் சமைத்துத் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எங்களுக்கெல்லாமும் சமைத்துப் போடுவார். என்ன, து.ப.தக்காளி சேர்த்து சாம்பார்ப்பொடி போட்டுப் பண்ணும் வஸ்து மேலே ரசம், கிழே சாம்பார். மற்றபடி துணி போட்டெல்லாம் இட்லி வார்த்திருக்கார். தோசை வார்ப்பார். சப்பாத்தி மட்டும் பண்ண வராது. எங்க பையர் அதிலும் நன்றாகவே சமைப்பார். நாங்க எப்போ அம்பேரிக்கா போனாலும் பிட்சா பேஸ் வாங்கி வீட்டிலேயே பிட்சா செய்து கொடுப்பார். பனீரில் விதம் விதமாகப் பண்ணுவார்.

      நீக்கு
    8. சுவையான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. அதுவும் இத்தனை காய்கறியும் கலந்து
    செய்யும்போது கலோரிகளும் குறையும்.

    நாங்கள் இங்கே அவனில் க்ரில் செய்து விடுவோம்.

    நிவி அவர்கள் சொல்லி இருக்கும்
    சாஸ், சில்லி எல்லாம் போட்டால் அமோகம் தான்.
    மிக மிக நன்றி மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நி சார்பில் நன்றி.

      நீக்கு
    2. ஆமாம், அம்பேரிக்காவில் எல்லாம் அவனில் தான் க்ரில் செய்வோம்.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய "திங்க"பதிவில் தங்கள் தங்கை பெண் நிவேதிதா அரவிந்த்குமார் அவர்களின் செய்முறையான ப்ரெட்ஸா பார்க்கவே அழகாக உள்ளது. படிப்படியாக படங்களை அழகாக தொகுத்து அதன் செய்முறைகளையும் விளக்கமாய் அருமையாக தந்துள்ளார். இனி ப்ரெட்டை இப்படியும் செய்து சுவைக்கலாம். அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள். மேலும் பலவித சமையல் குறிப்புகளையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. நிவேதிதா அரவிந்த் அவர்களின் ப்ரெட்ஸா செய்முறை நல்லா வந்திருக்கு.

    செய்வது சுலபம். எங்க வீட்டுல வித விதமா டாப்பிங்க்ஸ் பாட்டில் வாங்கி வச்சிருக்கா என பெண். (Against my interest ஹா ஹா). ப்ரெட் இல்லாத நேரம் குறைவு. ஏதோ... காய்லாம் சேருதே (எதுவும் இந்தியக் காய்கறிகளா இல்லாத போதும்) என்று சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.

    சிவேதிதா ரவிந்தகுமாருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  19. நிவேதிதா அரவிந்த்குமாரின் ப்ரெட்ஸா ரெசிப்பி நன்றாக இருக்கிறது.
    படங்களும், செய்முறை குறிப்புகளும் அருமை.
    வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் அவரின் ரெசிப்பிகள்.

    பதிலளிநீக்கு
  20. தலைப்பைப் பார்த்து, இந்த கேஜிஜி சார் புதுப் புனைபெயர் வச்சுக்க ஆரம்பித்தாச்சா என நினைத்தேன்.

    முதல் பாரா படித்ததும் எழுத்தும் செய்முறையும் ஶ்ரீராம் மாதிரி இருக்கேனு தோன்றியது. பிறகு பாவெ வீட்டிலிருந்து வந்த ரெசிப்பியோன்னு நினைத்தேன்.

    இனி தட்டு, பேக்ரவுண்டை வைத்துக் கண்டுபிடிக்கணும்னு நினைத்தேன்.

    எனக்கு வேலை வைக்காமல் எழுதியவரைப் பற்றிச் சொன்னதற்கு நன்றி

    அது சரி.. நெ.த இதெல்லாம் சாப்பிடுவாரான்னு கேட்டால்.... ஆளைவிடுங்க. எனக்கு இதிலெல்லாம் விருப்பம் இருப்பதில்லை. என் வேலை நேச்சரில், வாரம் இருமுறை பிட்சா எங்கள் அவுட்லெட்டில் ஆபீஸ் விருந்தினர்களுடன் சாப்பிடமுடியும் (அலுவலகப் பணம்தான்). அப்போதும் வருடத்துக்கு ஓரிரு முறை சாப்பிட்டாலே அதிகம். இதெல்லாம் உடலுக்குக் கெடுதல் என்ற எண்ணம் ஸ்ட்ராங்காக மனதில் இருந்ததால், வாரம் ஒரு முறை, எங்க mallக்குப் கோனாலும் இரு மாதங்களுக்கு ஒருமுறைதான், அதுவும் 6" பிட்சாதான் மனைவி, பசங்களுக்கு வாங்கித்தருவேன் (ஒவ்வொருவருக்கும்). பசங்கள்ட இப்போக் கேட்டால்... நாலு மாத்த்துக்கு ஒருமுறைதான் வாங்கித்தந்தீங்க.. அதிலும் மீடியம், லார்ஜ் சைஸ்லாம் கண்ணிலயே காட்டலைம்பாங்க.

    பதிலளிநீக்கு

  21. நிவேதிதா அரவிந்த்குமாரின் ப்ரெட்ஸா ரிசிப்பி நன்றாக வந்து இருக்கிறது. வழக்கமாக இதை நேரம் கிடைத்தால் செய்து பார்க்க வேண்டும் என்று சொல்லுவேன் ஆனால் இதற்கு அப்படி சொல்ல முடியாது காரணம் இது போல நானும் காலை ப்ரெக்பாஸ்ட்டுக்கு செய்வதுண்டு.

    இது போல பதிவுகள் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  22. ஶ்ரீராமின் மருமகள் நிவேதிதா அரவிந்தகுமாருக்குச் சமையலிலும் ஆர்வம் இருப்பது ஆச்சரியமில்லை. தாய் மாமா நள,பீமர்களில் ஒருத்தராச்சே. நன்றாகவே செய்திருக்கார். நானும் ப்ரெட் அதிலும் ப்ரவுன் ப்ரெட் வாங்கினால் இப்படிச் செய்துடுவேன். ஆனால் சீஸைத் தூவுவதோ துருவிச் சேர்ப்பதோ இல்லை. ஸ்லைசாகக் கிடைப்பதை ஒவ்வொன்று வைச்சுடுவேன். மற்றபடி பிட்சா பேஸ் வாங்கி வீட்டிலேயே அவன் இருந்தப்போப் பண்ணியதுண்டு. மாவு பிசைந்தும் தோசைக்கல்லில் போட்டுப் பண்ணியதும் உண்டு. அடுத்ததாக ஶ்ரீராமின் அண்ணா மருமகள்/ஶ்ரீராமுக்கும் தான் அவருடைய சமையல் குறிப்பை எதிர்பார்க்கிறேன். அவரைப் பற்றிப் பின்னர் எழுதப் போவதாக ஶ்ரீராம் சொல்லி இருந்தார். காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  23. இதற்குப் பெயர் பிரட் பிட்சா என்று சொல்லுவார்கள் எங்கள் ஜெனிவாவில் பிட்ஸாஅதிகம் செய்யப்படுகிறது. இதுவும் மிகவும் நன்றாக எழுதப்பட்டு இருக்கிறது இதே முறையில் சற்று பருமனாக ஊத்தப்பம் மாதிரி தோசை மாவில் செய்து அதன் மேலும இப்படி எல்லாம் போட்டு பிட்சா தோசை என்றும் நான் செய்து கொடுப்பேன் அதுவும் நன்றாக இருக்கும் குறிப்பிற்கு மிகவும் நன்றி எல்லோருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் அன்புடன்

    பதிலளிநீக்கு
  24. One more contributor to Monday posts... Welcome to the new contributor. பொதுவாக PIZZA பிடிப்பதில்லை என்றாலும் எப்போதாவது சாப்பிடுவது உண்டு. இப்படி செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. அவசர யுகத்தில் இலகுவான உணவு .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!