வாங்கிபாத்
ஷ்யாமளா வெங்கடராமன்
கத்தரிக்காய்...............1/
காய்ந்த மிளகாய்.......10
கொத்தமல்லி.............2டேபிள்
கடலைப்பருப்பு........2டேபிள்ஸ்
வெந்தயம்................1/2ஸ்
வேர்கடலை............1கைப்பிடி
கருவேப்பிலை........1கொத்து
சன் பிளவர் ஆயில்
கடுகு
தேங்காய்துருவல்
செய்முறை :
கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் மிளகாய் கொத்தமல்லி கடலைப்பருப்பு வெந்தயம்ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை எண்ணை விட்டு, கடுகு நன்கு வெடித்ததும் வதக்கிய காய் வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை போடவும். , தேவையான உப்பு போட வேண்டும். கறிவேப்பிலை தேங்காய் துருவல் சேர்க்கவேண்டும்.
சாதத்தை குக்கரில் வடித்து அகலமான பாத்திரத்தில் போட்டு ஆறவைக்கவும்.
அதில் வதக்கிய கத்தரிக்காயை போட்டு ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் கிளறி, அதில் வேர்கடலையை தூவி, கருவேப்பிலை போட்டு கிளறவும். இப்பொழுது வாங்கி பாத் ரெடி. அதற்கு தேவையான சைட் டிஷ் அப்பளம் அல்லது வடாம் மிக நன்றாக இருக்கும்.
அதில் வதக்கிய கத்தரிக்காயை போட்டு ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் கிளறி, அதில் வேர்கடலையை தூவி, கருவேப்பிலை போட்டு கிளறவும். இப்பொழுது வாங்கி பாத் ரெடி. அதற்கு தேவையான சைட் டிஷ் அப்பளம் அல்லது வடாம் மிக நன்றாக இருக்கும்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎன்றும் ஆரோக்கிய வாழ்வு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
வாங்க அம்மா.. வணக்கம்.
நீக்குஅருமையான வாங்கி பாத் செய்முறையும் படங்களும்
பதிலளிநீக்குஅருமை. திருமதி ஸ்யாமளா வெங்கட் ராமனுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
வாழ்த்துவோம்.
நீக்குஇதை எங்க வூட்ல் கத்தரிக்காய் சாதம் என சொல்லுவோம்
பதிலளிநீக்குநாங்களும்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குநல்ல செய்முறை. ரொம்ப அபூர்வமாக நான் வாங்கிபாத் சாப்பிடுவேன்.
பதிலளிநீக்குவாங்க நெல்லை.. எனக்கும் பிடிக்கும் என்றாலும் நானும் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகின்றன!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கப்பதிவில் திருமதி ஸ்யாமளா வெங்கட்ராமன் அவர்களின் ரெஸிபியான வாங்கி பாத் செய்முறை, மற்றும் படங்கள் நல்ல அழகுடன் தெளிவாக உள்ளது. அவருக்கு மனம் நிறைந்த நன்றி. தங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குவாங்கி பாத் சூப்பர். நல்லா சொல்லிருக்காங்க. நம் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். வீட்டில் செய்வதுண்டு.
பதிலளிநீக்குகீதா
சுருக்கமான அருமையான செய்முறை...
பதிலளிநீக்குசுருக்கமாக அருமை பிரியாணி போலவே தெரிகிறது.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குவாங்கி பாத் அருமை. படங்களோடு செய்முறை விளக்கம் சிறப்பு.
இந்த வாங்கி பாத் என்னும் கத்தரிக்காய் சாதத்திற்கு நான் வெங்காயமும் சேர்ப்பேன்.
தேங்காய் துருவலையும் வறுத்து சிறிது கரம் மசாலாவும் சேர்த்து வெங்காயம் வதக்கிப் போட்டு செய்வேன் சுலபமான முறை எழுதி இருக்கிறார்கள் நன்று
நீக்குஆமாம், நானும் வெங்காயம் சேர்ப்பேன். அதோடு கோடா மசாலா என்னும் மராட்டியர்கள் பயன்படுத்தும் மசாலாப் பொடியும் செய்து சேர்ப்பேன். இது நம்ம ஊர்ப் பொடிக்கத்திரிக்காய்க் கறியோடு சேர்த்துச் செய்யும் முறை. ஆசாரக்காரங்களுக்கு இதுவும் பிடிக்கும்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்.
நீக்குவாங்கிப் பாத் நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குநடுவில கொஞ்சம் படத்தை காணோம்.
பதிலளிநீக்குJayakumar
வாங்கி பாத் செய்முறை குறிப்பு நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குI use Kodak masala. Will make with different masala mix. This is.podi thoovi pannum method. Test!
பதிலளிநீக்குஹிஹிஹி, கோடா மசாலா என்பது கோடக் மசாலானு வந்திருக்கு டோய்! ஆனா எப்படி இருந்தாலும் மொபைல் மூலம் கருத்துச் சொன்னது வந்துடுச்சே!
நீக்குAaththa! Nan pass ayiten!🤣🤣🤣🤣🤣🤣
பதிலளிநீக்கு"வாங்கி பாத்" - முதன் முறையில் அறிமுகமாகி இருக்கின்றது, கத்தரிக்காயில் எது செய்தாலும் பிடிக்கும் எனக்கு. எங்கே கிடைக்கும் என்று சொன்னால் "வாங்கி பாத்துட்டு" டேஸ்ட் எப்படினு சொல்றேன்.
பதிலளிநீக்குசுவையான வாங்கிபாத் செய்முறை நன்று. பல வருடங்களுக்கு முன்னர் சாப்பிட்டது. பொதுவாக கத்திரிக்காய் பிடிப்பதில்லை என்பதால் இந்த வாங்கிபாத் செய்வதும் இல்லை.
பதிலளிநீக்குவாங்கி பாத் செய்முறை எளிமையாக உள்ளது. ரெசிபிக்கு நன்றி!
பதிலளிநீக்கு