வெள்ளி, 1 ஏப்ரல், 2022

அந்தக் காலத்திலேயே ஜாதி சொல்லி கேலி செய்த பாடல்!

 

படம் வெளிவந்த ஆண்டு : 1961. 

பாடலை இயற்றியவர் : கொத்தமங்கலம் சுப்பு 

அறுபத்தொரு வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட பாடலில், ஒரு ஜாதியை சொல்லி கேலி செய்துள்ளார்கள்! 

சே ச் சே !! 


பாடலைக் கண்டு, கேட்டு ரசித்த (?)  உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது. 

இந்தப் பாடலில் எவ்வளவு ஆங்கில வார்த்தைகள் - ஒவ்வொரு ஆங்கில வார்த்தையும் எவ்வளவு முறை வந்துள்ளது என்று எண்ணி - சரியாகச் சொல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு. 

அதன் பிறகு கீழ் வரும் பாடலையும் கண்டு, கேட்டு மகிழுங்கள்!! 


= = = = =

36 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இறைவன் அருளால் எல்லோரும்
    ஆரோக்யமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா..  வணக்கம்.  பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. ஜாதி பெயர் சொல்லி எழுதிய கொத்தமங்கலம் சுப்பு ஐயாவின் பாடல்
    சிந்திக்க வைக்கிறது.

    நாங்கள் நிறைய பாடி இருக்கிறோம்.


    பாடியவர்கள் ஏப்ரில் ஃபூல் ,பாட்டில் ஏப்ரல் ஃபூல்
    ஆகிவிடும்.
    மற்றபடி ரசித்துப் பார்த்த படம்.
    கள்ளம் கபடம் இல்லாதவன்
    காலம் தெரிந்து நடக்காதவன்
    எல்லாம் உண்மை என்றே நம்பி
    ஏமாந்தவன்''

    அருமையான பாடல் வரிகள். மிக நன்றி கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது வந்த நிறைய படங்கள், வெளியான பாடல்கள் இப்போது வெளிவந்தால் அடிதடிதான்!

      நீக்கு
  3. நானும் ஒரு பெண்
    படத்தில் அறிமுகமாகி மணம் புரிந்து
    கொண்டவர்கள் ராஜனும் புஷ்பலதாவும்.
    இப்போது இருவருமே மனம் (மதம்) மாறிப் போகிறார்கள்:)

    அப்போது ரசித்த பாடல்.
    இலக்கியப் பாடல் ஒன்றும் காணோமே ஜி.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது மா.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க...  

      வாங்கி துரை செல்வராஜூ ஸார்...  வணக்கம்.  பிரார்த்திப்போம்.

      நீக்கு
  6. முதல் பாடலில் ஆங்கில வார்த்தையை கணக்கு பண்ண சொல்வது...

    ஒரு கை ஆற்று மணலை எண்ணச் சொல்வது போலிருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  7. //இந்தப் பாடலில் எவ்வளவு ஆங்கில வார்த்தைகள் - ஒவ்வொரு ஆங்கில வார்த்தையும் எவ்வளவு முறை வந்துள்ளது என்று எண்ணி - சரியாகச் சொல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு. //

    ஓ இன்னைக்கு ஏப்ரல் 1.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல்தான்.

    அப்போது எல்லாம் வானொலியில் ஏப்ரல் 1 என்றால் இந்த பாடல் ஒலிக்கும்.
    பள்ளி பருவத்தில் ஏப்ரல் மாதம் ஏமாற்றி விளையாடிய நாட்கள் நினைவுக்கு வரும்.
    பக்கத்து வீட்டுக்கு அம்மா கொடுத்ததாக டிபன் பாக்ஸ் கொடுத்து ஏமாற்றி இருக்கிறோம். பள்ளியில் தோழிகளை ஏமாற்றி களிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாவிடம் இப்படி பெரியவர்களை ஏமாற்ற கூடாது என்று திட்டு வாங்கியது தனிக்கதை.

      நீக்கு
    2. :))) கருத்துரைக்கு அன்றி.

      நீக்கு
  10. எத்தனை ஏப்ரல்களைக் கண்டிருக்கின்றோம்!..

    பதிலளிநீக்கு
  11. பாடல்களை பிறகு தான் கேட்க வேண்டும். ஏப்ரல் ஃபூல் பாடல் கேட்ட நினைவில்லை! 1000 ரூபாய் பரிசு - :)

    பதிலளிநீக்கு
  12. இரண்டாவது பாடல் பலமுறை கேட்டிருக்கிறேன். நல்ல பாடல்.

    முதல் பாடல் இப்போதுதான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  13. அதானே பார்த்தேன் இந்த பரிசுன்னு சொல்லி ஏப்ரல் ஃபூல் செய்வதெல்லாம் இந்த கௌ அண்ணாவின் வேலைதான்!!!!

    முதல் பாடல் கேட்டதில்லை இப்போதுதான் கேட்கிறேன்.

    இரண்டாவது பாடல் பல முறை கேட்டு ரசித்த பாடல்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிரம் ரூபாய் பரிசு என்றதும் ஆயிரம் பொற்காசுகள் திருவிளையாடல் தருமி காட்சி நினைவுக்கு வருகிறது. தருமி புலம்பியது போல (அவர் புலம்பிய தினமும் ஏப்ரல் 1 ஆயிருக்குமோ!!!!) ஆயிரம் ரூபாய் ஆயிரம் ரூபாய் சொக்கா இப்படி ஃபூல் பண்ணிட்டியே!

      கீதா

      நீக்கு
  14. இருபாடல்களுமே கேட்ட பாடல்கள். முதல் பாடல் பல வருடங்களுக்குப் பிறகு இப்போது கேட்கிறேன்.

    ஓ இன்று ஏப்ரல் 1 இல்லையா. அதான் இந்த விளையாட்டா. ஏப்ரல் 1 ஏப்ரல் ஃபூல் என்பதெல்லாம் இதைப் பார்த்ததும் தான் நினைவுக்கு வருகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!