திங்கள், 18 ஏப்ரல், 2022

"திங்க"க்கிழமை : இந்திய வகாஷி - அபயா அருணா ரெஸிப்பி

 இந்திய வகாஷி

அபயா அருணா

-------------------------------------------------

ஜப்பானிய வகாஷி என்பது பொதுவாக தாவர அடிப்படையிலான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

நான் அதையே இந்திய தாவரங்களைக் கொண்டு தயாரித்துள்ளேன்.

இதற்குத் தேவை அரிசி மாவு.  அது கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் இதில் சர்க்கரை பாகு சேர்க்க வேண்டும்.  சர்க்கரை பாகு சூடாக இருக்கும் பொழுதே சேர்க்க வேண்டும்.

நான் இன்று இதில் கலர் சேர்க்க வேண்டும் என்பதற்காக நான் பீட்ரூட்டை லேசாகத் துருவி அதில் சாறு எடுத்து அந்தச் சாறை தனியாக முதலில் அரிசி மாவுடன் சூடாக 
இருக்கும்போதே கொஞ்சமாகச் சேர்த்திருக்கிறேன்.


பிறகு தனியாக நான் சர்க்கரை பாகு கொஞ்சம் கெட்டியாக வைத்தேன் .
கம்பிப் பதம் என்று எல்லாம் கவலைப்பட வேண்டாம்.

ஒரு கொதி வந்த உடனே நான் சேர்த்தேன் .  பிறகு இதில் பீட்ரூட் சாறு கலந்த அரிசி மாவுடன் இதைச் சேர்த்து பிறகு எண்ணைக்கு பதிலாக நான் நெய் 
சிறிதளவு சேர்த்தேன் .


ஏனெனில் நன்றாக ஒன்று திரண்டு வர வேண்டும் என்பதற்காக.  பிறகு இந்த மாவில் இரண்டு பங்காக பிரித்துக்கொண்டேன்.

ஒன்று எதற்கு என்றால் லேசாக ஆரஞ்சு கலர் வேண்டும் என்று.  இன்னொன்று எதற்கு என்றால் நல்ல சிகப்பு நிறம் வேண்டும்
என்று.

மிகவும் லேசான பிங்க் நிறம் வர வேண்டும் என்று நினைப்பவர்கள் மிக மிகக் குறைந்த அளவே பீட்ரூட் சாறு சேர்த்தால் போதும்.  இதேபோல் பச்சை கலர் வேண்டும் என்றால் பாலக்கீரை அல்லது பீன்ஸ் போன்ற ஏதாவது ஒரு காயை நன்றாக அரைத்து அந்த சாறு எடுத்துக் கொண்டால் கொஞ்சமாக சேர்த்தால் போதும்.

சர்க்கரைப்பாகு சேர்ப்பதனால் கொஞ்சம் டேஸ்ட் ஒரு மாதிரி இருக்கலாம் ஆனால் நன்றாக இருக்கும்.  நான் இப்பொழுது வீட்டில் ஒருவராக இருப்பதால் நிறைய செய்யவில்லை.

எனவே இரண்டு கலர் மட்டுமே நான் தேர்ந்தெடுத்தேன்.  இதே
போல் மஞ்சள் கலர் வேண்டுமென்றாலும் நீங்கள் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்தால் அது மஞ்சள் கலருக்கு வந்துவிடும் .

பிறகு இதில் பூ போன்ற வடிவங்கள் வரவேண்டும் என்றால் இதற்காக இயர் பட் நன்றாக கழுவிவிட்டு பிறகு நெய்யில் லேசாக நனைத்து வைத்துக் கொள்ளலாம் பிறகு டூத் பிக் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றை வைத்தே நாம் விதவிதமான வடிவங்களில் இந்த அரிசி இனிப்பு கொழுக்கட்டை செய்ய முடியும்.

நான் எப்படிச் செய்தேன் என்பதை வரிசைக் கிரமமாக 
போட்டோ எடுத்து அனுப்பி உள்ளேன்.

இவை எல்லாம் தயாரானவுடன் கொழுக்கட்டை போலவே இதை ஆவியில் வேகவைத்து எடுத்து விடலாம்.  







40 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம். புதுமையான, இனிப்பு.

    பதிலளிநீக்கு
  2. அட... புதுமையாக இருக்கே.... தமிழகத்தின் இதற்கு ஈக்வலன்ட், பூரணம் நழுவிவிட்ட பிள்ளையார் கொழுக்கட்டைனு சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  3. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்ய வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா அக்கா.. வாங்க... டெல்லியை மனதில் வைப்போம்.

      நீக்கு
    2. ஆமாம், டெல்லியை நினைத்தால் கலக்கமாகவே இருக்கு. :(

      நீக்கு
  5. புது விதமான பெயருடன் கூடிய செய்முறை. சாப்பிட்டால் எப்படி இருக்குமோ தெரியலை. கொஞ்சம் பொறுமையாகச் செய்யணும் போலவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்யறவங்க பொறுமையாய் செய்தாலும் சாப்பிடுபவர்களுக்கு பொறுமை வேண்டாம்.  சிறிதாய் இருப்பதால் லபக்கென்று உள்ளே போய்விடும்!

      நீக்கு
  6. அரிசி மாவில் வண்ணம் சேர்த்த
    பூரணம் சேர்க்காத கொழுக்கட்டைகள்.
    சிறப்பான சிற்றுண்டி.

    பூக்கள் வடிவில் செய்வதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    அதுவும் காய்கறிச் சாறு சேர்க்கும் போது
    சத்தும் கிடைக்கிறது.
    அபயா அருணாவுக்கு நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. அழகாகவும் இருக்கிறது கொழுக்கட்டையாகவும் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  9. காலையிலேயே முதல் ஆளாகப் படித்து விட்டேன்.. மறுபடி தூங்கி இப்போது தான் எழுந்தேன்..

    இரண்டு நாட்களாக உடல் நலம் சரியில்லை.. இப்போதும் அப்படித்தான் இருக்கின்றது..

    புதிய சமையல் குறிப்பு..
    வாழ்க.. வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா என்னாச்சு? உடல்நலம் பார்த்துக்கோங்க. விரைவில் நலம் பெறுவீர்கள்!

      கீதா

      நீக்கு
    2. அதிக அலைச்சல் காரணமாக உடல் நைந்திருக்கும். ஓய்வு நிறைய எடுத்துக்கொண்டு தூங்குங்கள். விரைவில் குணமாகப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. அன்று தீர்த்தவாரிக்கு விடியற்காலையில் குளித்து விட்டுச் சென்றேன் .. மீண்டும் ஆற்றில் ஒரு குளியல்.. ஈர வேட்டி சட்டையுடன் ஸ்வாமி ஊர்வலத்தில் வந்தது எல்லாம் சேர்த்து நேற்று காய்ச்சல் ஜலதோஷம் .. இப்போது தான் இன்றைய குளியல்.. சாப்பாடு... நரசிங்கப் பெருமாள் கோயிலில் இன்று தீர்த்தவாரி.. துவஜாவரோகணம்.. செல்வதற்கு முடியவில்லை.. ப்ந்ருமாள் பிரசாதம் கொடுத்து அனுப்பி இருக்கின்றார்..

      இப்போது பரவாயில்லை..

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். தொடர் பயணம், அலைச்சல்...

      நீக்கு
    5. உடல் நலத்தில் கவனமாக இருங்கள். ஸ்ரீராம் சொல்வது போல தொடர் பயணம், அலைச்சல். ஓய்வெடுத்தால் விரைவில் சரியாகி விடும்.

      நீக்கு
  10. எளிதாகவும் புதுமையாகவும் இருக்கிறது😃

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஹரிணி... நன்றி. புதுவரவு! தொடர்ந்து வருக..

      நீக்கு
  11. அருணா சூப்பாரா இருக்கு. புது ரெசிப்பி. சிவப்புக் கலருக்கு, நானும் பீட் ரூட் ஜூஸ் ஆரஞ்சுக்கு கேரட் ஜூஸ் நு சேர்ப்பதுண்டு...ஆனால் இந்தச் செய்முறை செய்ததில்லை. ஸ்டீம்ட் கலர்ஃபுல் அதிரசம்னு சொல்லலாமோ!!

    காலேஜ் படித்த போது ரோஸ் மில்க் வீட்டுல பெரியவர்கள் யாரும் இல்லாதப்ப செஞ்சப்ப பீட் ரூட் ஜூஸ் தான் சேர்த்து சிரப்..அதை ஒரு பதிவு கூடப் போட்ட நினைவு.

    அதுவும் நீங்கள் செய்திருக்கும் டிசைன்ஸ் ரொம்ப நல்லாருக்கு. சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஸ்மில்க் பண்ணக் கடைகளில் விற்கும் ஸ்ட்ராபெரி ரோஸ்(சிவப்பு கிட்டத்தட்ட)நிற சிரப் ஊத்திப் பண்ணி இருக்கேன். நம்ம ரங்க்ஸுக்கு ரொம்பப் பிடிக்கும். பாவம்! இப்போல்லாம் குடிக்க முடியறதில்லை! :(

      நீக்கு
    2. வாங்க கீதா... வண்ணம் நாம் விரும்பிய வண்ணம்!

      நீக்கு
  12. மிகவும் அழகாக செய்து உள்ளார்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
  13. நீ.....ண்....ட...... இடைவெளியின் பின் இப்பொழுது மருந்துகள் எடுத்து நலமாகி விட்டது . சளி உடல் சோர்வு வேலைஎன்பவற்றால் படிக்க வர முடியவில்லை மன்னித்துக்கொள்ளுங்கள்.

    புதிய கலரான கொழுக்கட்டை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் நலமாகி வருவது அறிந்து மகிழ்ச்சி.
      உடல்சோர்வு குணமாகி பழைய மாதேவியாக வலம் வர பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.

      நீக்கு
    2. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும். இலங்கை நிலைமை சொல்லிக்கிறாப்போல் இல்லை. விரைவில் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து நல்லபடியாக அமைதியான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. மாதேவி உடல் நலம் பார்த்துக்கோங்க. இப்போது நலமாகி வருவது மகிழ்ச்சி. என்றாலும் கவனமாக இருங்கள்.

      கீதா

      நீக்கு
    4. அன்புடன் நலம் விசாரித்து அறிவுரைகள்தந்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள்.

      நீக்கு
  14. இந்திய வகாஷி நன்றாக இருக்கிறது.
    சர்க்கரை மிட்டாய் அச்சு வைத்து தயார் செய்த வண்ணங்கள் சேர்த்த கொழுக்கட்டைகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வெறும் சர்க்கரைப் பாகை வண்ணம் சேர்த்து அச்சில் ஊற்றுவார்கள் இல்லையோ? இதில் அரிசி மாவு சேர்க்கிறார்கள். வித்தியாசமாகவும் இருக்கு.

      நீக்கு
    2. அது வெறும் சர்க்கரைப் பாகை வண்ணம் சேர்த்து அச்சில் ஊற்றுவார்கள் இல்லையோ?//

      ஆமாம், அரிசி கொழுகட்டைக்கு சர்க்கரை மிட்டாய் அச்சு பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றேன்.

      நீக்கு
  15. பதிவிற்கு வந்து கருத்து கூறிய அனைவருக்கும் என் நன்றி

    பதிலளிநீக்கு
  16. புதுமையான குறிப்பு. செய்து பார்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை. வீட்டில் செய்து பார்க்க சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!