நெல்லைத்தமிழன்:
அரசியல், மதம், மொழி போன்றவற்றில் நம் கருத்தையும் மாற்றுக்கருத்தின்மீதான வெறுப்பையும் தெரிவிக்கத்தான் விவாதம் பயன்பெறும். விவாதத்தின்மூலம் அடுத்தவர் கருத்தையோ நம்பிக்கையையோ மாற்ற முடியாது. அபூர்வத்திலும் அபூர்வம்.
அது சரி... மொழி என்ற உணர்வினால் பாரதப் பிரதமரை (இராஜீவ்) வெறுத்தால், மதம் என்ற காரணத்துக்காக எதிரி நாட்டை நேசிப்பவர்களை எவ்வாறு குற்றம் சொல்வது?
# விமர்சனம் சொல்வதானாலும் குற்றம் சொல்வதானாலும் இதெல்லாம் ஒரு தரப்பு செயல்பாடுகள். தாராளமாக சொல்லிக் கொள்ளலாம் பலன் பூஜ்யம் அவ்வளவே.
1. ஊறுகாய்க்குச் சிறந்த மாங்காய்கள் என்ன என்ன?
# செய்பவர் செய்தால் எந்த மாங்காயிலும் நல்ல ஊறுகாய் வரும்.
& ஓ சி யில் கிடைக்கும் எல்லா மாங்காய்களும்.
கீதா சாம்பசிவம் : (சென்ற புதன் பதிவில்) :
ஊறுகாய்க்குச் சிறந்தது கொஞ்சம் புளிப்பான உருண்டை மாங்காய்/அல்லது ருமானி மாங்காய். ருமானி மாங்காயில் ஆவக்காய் போட்டால் நாலைந்து வருஷங்கள் ஆனாலும் கெடாது.
2. கிளிமூக்கு மாம்பழம்தான் மாம்பழங்களிலேயே சுமார் என்பது என் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
# வாசனை இருக்காதே தவிர கிளிமூக்கு மாம்பழம் புளிக்காது, இனிப்பு இருக்கும் நார் இராது .
கீதா சாம்பசிவம் : (சென்ற புதன் பதிவில்) :
கிளி மூக்கு மாங்காய்/மாம்பழம் வேறு வழியில்லாமல் வாங்கிச் சாப்பிட்டிருக்கேன். விலை மலிவு என்பதால். கிளி மூக்கு மாவடு நன்றாக இருக்கும். கிளி மூக்கு மாங்காயில் தொக்கு நன்றாக இருக்கும்.
3. மோர் சாதத்திற்கு மாம்பழமா என அசூயைப்படுவேன். அதற்கும் ரசிகர் கூட்டம் எப்படி அமைகிறது?
# எங்க வீட்டிலேயே ரசிகர் கூட்டம் உண்டு. அவரவர் விருப்பம் - அவ்வளவுதான்.
கீதா சாம்பசிவம் : (சென்ற புதன் பதிவில்) :
மோர் சாதம் என்ன குழம்பு சாதத்தில் இருந்தே என் மாமனார்/மைத்துனர்கள்/நாத்தனார்கள் மாம்பழம் தொட்டுப்பாங்க. நம்மவர் தான் இந்த விஷயத்திலே அலாதி. நானெல்லாம் மாம்பழமே முழுசாய்ப் பார்த்தது/.சாப்பிட்டது பதினைந்து வயதுக்குப் பின்னரே!
& மோர் சாதத்திற்கு தொட்டுக்க மாம்பழம் என்பது எனக்கும் பிடிக்காது.
4. அடைமாங்காய், அதாவது மாங்காயின் இருபுறக் கதுப்பையும் ஓரளவு வெட்டி பொடி அடைத்து, முழு மாங்காயாக ஊறவைக்கும் முறை யாருக்காவது தெரியுமா?
# எனக்குத் தெரியாது.
கீதா சாம்பசிவம் : (சென்ற புதன் பதிவில்) :
அடை மாங்காய் கேள்வி தானே தவிர்த்துப் போட்டதில்லை.
& யாரோ எப்பொழுதோ அடை மாங்காய் என்று சொல்ல, கேள்விப்பட்ட ஞாபகம். ஆனால் அடையும் அதற்குத் தொட்டுக்க மாங்காயும் என்று நினைத்தேன். அடை அவியல் போன்ற சமாச்சாரம் என்று நினைத்தேன்!
கு கு அட்ராசிடி :
ஆமாம் - நெல்லை மாங்காய் , மாம்பழம் பற்றி இவ்வளவு கேள்வி கேட்டிருக்கிறாரே - ஏதேனும் சாக்கு வைத்து 'த' படம் போடவில்லையா?
& ஓ - பேஷாக போடலாம் ! இதோ :
அடிக்கடி வாட்சப், செய்திச் சேனல்கள், செய்தி இணையதளம் பார்ப்பதே ஒரு வியாதியா?
$ ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை. தான் பார்ப்பது என்று செய்து பாருங்களேன்.
# விலகி இருக்க முடியவில்லை என்றால் வியாதி மாதிரிதான். நான் WhatsApp பார்ப்பேன். செய்தி வாரம் ஒரு முறை.
& வியாதி என்று சொல்லிவிட முடியாது. வயதானவர்களுக்கும், ஓய்வு பெற்று வாழ்பவர்களுக்கும் + டி வி ரிமோட் கையில் கிடைக்காதவர்களுக்கும் மொபைலே கதி!
60 வயசு தாத்தா 20 வயசுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி தராத அதிர்ச்சி 60 வயதுப் பெண் 20 வயசுப் பையனைத் திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி தருவதேன்?
# இரண்டுமே அதிர்ச்சி தர வேண்டும் . அதுதான் சரி . பெண்களை உடமையாகக் கருதும் மனநிலை ஒரு காரணமாக இருக்கலாம்.
& எனக்கும் அப்படித் தோன்றியது, அந்த செய்தியைப் படித்ததும். ஆனால் கூடவே உள்ளிருந்து ஒரு குரல் ' இது ஆணாதிக்க மனோபாவம் ' என்று கூவியது. இந்த வகை திருமணங்களில் ஆணோ / பெண்ணோ - யார் வயதானவரோ அவர் செல்வந்தராக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
அப்பாவி தாக்கப்படும் போதோ இல்லை அநியாயம் நடக்கும்போதோ நம்மால் தாங்கமுடியாததன் காரணம் என்ன?
# நம் போன்ற அப்பாவிகளின் நிலை என்ன ஆகுமோ என்கிற கவலை தான் காரணம்.
மனசாட்சி என்பது என்ன?
$ நம்மைப் பற்றிய விவரங்கள், நமக்கு மட்டுமே தெரிந்தவை, நியாயத்தின் பக்கம் நின்று நம்மைப் பந்தாடுவது. என்ன நீ மட்டும் ஒழுங்காய் நடக்கறியா என்ன என்று உள்ளிருந்து கூவும் குரல்.
# நாம் தவறு செய்யும் பொழுது "இது தவறு " என்று ஒரு மெல்லிய குரல் கேட்கிறதே அதுதான் மனசாட்சி.
இன்றைய நிலையில் மற்ற செலவுகள் இல்லாம உயிர் வாழத் தேவையான உணவுக்கு ஒரு மாதத்துக்கு ஒருத்தருக்கு எவ்வளவு பணம் வேணும்? எந்த உணவை மனசுல வச்சு இதைச் சொல்றீங்க?
$ நாள் கணக்கில் உயிர் வாழவா, இல்லை ஆயுளுக்குமா?
# ஆடம்பரம் இல்லாத சைவ உணவு என்று வைத்துக்கொண்டால், ஒருவருக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் போதும் என்று நான் சொல்வேன்.
& ஒரு மாதத்திற்கு, உயிர் வாழத் தேவையான உணவுக்கு வேண்டிய பணம், இன்றைய விலை நிலவரப்படி 1000 ரூபாய். ( புழுங்கல் அரிசி 5 kg - 300 ரூபாய், பால் 15 லிட்டர் - 600 ரூபாய். மீதி உள்ள 100 ரூபாயில் உப்பு / பூண்டு / வெங்காயம் )
மொபைலில் படங்களும் செல்ஃபிக்களும் எடுப்பதில் தவறு சொல்ல முடியாது. ஆனால் கடவுளுடனும் செல்ஃபி எடுத்துக்கொள்வதைப்பற்றி (கோவிலில்) என்ன நினைக்கறீங்க?
# இது குறித்து இருவேறு கருத்துக்கள் உண்டு. அது பக்தியின் வெளிப்பாடு என்று ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. கோவில் நிர்வாகம் படம் எடுக்கக்கூடாது என அறிவிப்பு இருந்தாலும் "உற்சவர்" படம் பிடிக்கப் படுவது தடை செய்யப் படவில்லையே.
எத்தனை பேர், செல்ஃபோனில் எடுத்த படங்களையும் வீடியோக்களையும் திரும்பப்பார்ப்பார்கள்?
# படங்கள் வீடியோ பகிரப்பட்டவுடன் மறக்கப்படுபவைதான்.
& நான் எடுக்கும் படங்களையும் வீடியோக்களையும் நான் திரும்பப் பார்ப்பது உண்டு. சில சமயங்களில் நான் எடுத்த சில படங்களை மாதிரியாக வைத்து, சித்திரம் வரைய உபயோகப்படுத்திக்கொண்டது உண்டு.
கீதா சாம்பசிவம் :
இந்தக் கலியுகம் முடிந்து பிரளயம் வந்து அடுத்த சதுர்யுகம் ஆரம்பிக்கையில் ஆரம்பகாலத்து சத்ய யுகத்தில் வரலாம்.அப்போவும் நாமெல்லாம் இப்படியே பிறப்பு எடுப்போமா? இப்போ நடந்ததெல்லாம் அப்போவும் நினைவில் இருக்குமா? ஏனெனில் ஒவ்வொரு யுகத்திலும் ஒரு ராமன் பிறப்பான் என்பார்கள்! அப்போ மீண்டும் இதே சுற்றா?
# நமக்கு எது பிடிக்கிறதோ அதை தாராளமாக. நம்ப வேண்டியதுதனே. எல்லாமே சுழன்று பின் மீண்டும் வரும் என்பது ஒரு கோட்பாடு. ஆனால் அப்படியே அச்சாக மறு ஒளிபரப்பு ஆகுமா தெரியவில்லை.
$ நாளை என்ன நடக்கும் என்று அறிந்திராத நாம் அடுத்த யுகம் பற்றி கற்பனை கூட செய்ய முடியாது. இதென்ன கராத்தே கிட்ஸ் கூட 1, 2 இரண்டுக்கும் நிறைய வேற்றுமை.
எங்கள் கேள்விகள் :
1) ஆண்டாண்டுகாலமாக உங்கள் நினைவில் இருக்கும் தமிழ்ப்பாடல் எது ? ( சினிமாப்பாடல் அல்ல. புறநாநூறு ராமாயணம் மாதிரி செய்யுள்)
2) உங்களுக்கு மிகவும் பிடித்த பழமொழி எது ?
3) உங்களைத் திகைக்க வைத்த சிறுவர் பேச்சு அல்லது கேள்வி எது ?
4) அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் யாராகப் பிறக்க ஆசைப்படுவீர்கள் ?
5) நீங்கள் விரும்பி அளிக்கும் நன்கொடை யாருக்கு ?
6) குழந்தைகள் என்ன கேட்டாலும் வாங்கித் தருவது, அவர்களுக்கு விலை மதிப்பு மிக்க பொருட்களை வாங்கித் தருவது இது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன ?
== = = =
விந்தை மனிதர்கள் !
ஜப்பானில் டோகோ ( Toko ) என்று ஒருவர். நாலு கால் பிராணிகள் மீது அளவற்ற பாசம் கொண்டவராம்.
அவர், 20 லட்சம் யென் (இந்திய மதிப்பில் 12 லட்சம் ரூபாய்) செலவழித்து நாய் வேடம் போட்டு, அந்தப் படங்களை + காணொளியை சமூக தளத்தில் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு..
பதிலளிநீக்குகுறள் நெறி வாழ்க..
வாழ்க..
நீக்குஇங்கு எத்தனைபேர் ஆற்றில் ஊத்து அமைத்து தண்ணீர் எடுத்திருக்கிறீர்கள்?
நீக்குஆத்துக்குள்ளே ஊத்து வெட்டீ
நீக்குஆழமாகத் தண்ணீர் மொண்டு
என்று ஒரு பழைய (சினிமா) பாடல் உண்டு.
சிறிய வயதில் அத்தை பெண்களுடன் (எல்லோருக்குமே என்னை விட 20 வயது அதிகம்) ஆற்றுக்குச் சென்று, ஊற்று நீரை அவர்கள் மொண்டுவருவதைப் பார்த்தது உண்டு.
எங்கள் அத்தையின் பெரிய பிள்ளை என் அப்பாவை விடப் பெரியவர்! :)))))))
நீக்குஇங்கு எத்தனைபேர் ஆற்றில் ஊத்து அமைத்து தண்ணீர் எடுத்திருக்கிறீர்கள்?//
நீக்குநான் எடுத்திருக்கிறேன்.
கடற்கரையிலும். அந்தத் தண்ணீர் உப்புக் கரிக்கவில்லை.
கீதா
அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாங்க துரை செல்வராஜூ ஸார். வணக்கம்.
நீக்குவாங்கோ, வணக்கம்.
நீக்கு@ கீதா அக்கா..
பதிலளிநீக்கு// ஒவ்வொரு யுகத்திலும் ஒரு ராமன் பிறப்பான் என்பார்கள்! அப்போ மீண்டும் இதே சுற்றா?.. //
அதே.. அதே!..
இராமாயண நாயகன் காவிய ராமன் இந்த யுக ராமனா? சென்ற யுக ராமனா?
நீக்குராமன் & ராமன்!
நீக்குஇதற்கு மிக நீண்ட பதில் தரணும். காகபுஜண்டர் கூறியது நினைவில் வருது. பின்னர்!
நீக்குசொல்லுங்க !
நீக்குஒவ்வொரு யுகத்திலும் ஒரு ராமன் பிறப்பான் என்பார்கள்! அப்போ மீண்டும் இதே சுற்றா?..
பதிலளிநீக்குஆண்டாள் இதற்குப் பதில் சொல்லி இருக்கின்றாள்..
எடுத்துச் சொல்லிடுங்களேன்... My Tamil is not doing well!
நீக்குஎன்னுடையதும் !!
நீக்கும்ம்ம்ம்ம்ம்? அப்படியா? யோசிக்கிறேன்.
நீக்குமனச்சுரங்கத்தின் ஆழத்தில் இருக்கு! தோண்டிப் பார்க்கிறேன். :(
நீக்குவிடாது கருப்பு என்றது இதற்குத்தான்...
பதிலளிநீக்குஅப்பளக் குழவி என்றாலும் அடுத்த ஜென்மத்திலும் அதே தான்..
என்ன !..
பூரிக் கட்டையும் குழவியும் கொஞ்சம் புதுசாக இருக்கும்..
அடடா.. அப்பளக்குழவி கூட ஒரு ஜென்மமா?
நீக்குஹா ஹா !!
நீக்கு// பூரிக் கட்டையும் குழவியும் கொஞ்சம் புதுசாக இருக்கும்..//
பதிலளிநீக்குகவனமாக வாசித்துக் கொள்ளவும்..
கிழவி என்று படிக்காமல் இருந்தால் சரி!
நீக்கு:))))
நீக்கு) ஆண்டாண்டுகாலமாக உங்கள் நினைவில் இருக்கும் தமிழ்ப்பாடல் எது? ( சினிமாப்பாடல் அல்ல. புறநாநூறு ராமாயணம் மாதிரி செய்யுள்)
பதிலளிநீக்கு1) உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே
2) அப்புறம் குற்றாலக் குறவஞ்சிப் பாடல்! நினைவிலிருந்து பாதியும் தேடி எடுத்த மீதியும்!
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே
[இந்தப் பாடல் இப்போது சொல்லும்போது ராஜராஜசோழன் பாடல் "தென்றலோடு உடன்பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்" என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது. குறிப்பாக சிவாஜி குரலில் வருவது...]
இன்னொன்று சரியாக நினைவுக்கு வரவில்லை... அது 'கையில் ஊமன் கண்ணில் காக்கும்' என்று வரும். முன்னர் நானே பகிர்ந்திருந்தேன். இணையத்தில் தேடினால் முழுவதும் கிடைக்கும்.
ஆஹா ! நல்ல பதில்கள்!!
நீக்குஅப்புறம்
பதிலளிநீக்குநிலை நிறுத்தலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
எனும் ஈற்றடி நினைவிருக்கும் இன்னொரு பாடல்.
ஶ்ரீராம் சொல்வதைப் பார்த்தால் என் வயதுதான் இருக்கும் போலிருக்கிறது. அப்படியென்றால்,
நீக்குவாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத எஆதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்வரினும் வித்தைவக் கோட்டம்மா
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே
நினைவுக்கு வந்திருக்கணுமே. இது தவார, நாராய் நாராய் செங்கால் நாராய் பனைபடு, மற்றும் சில நாலடியார் பாடல்கள்.
கருத்துப் பெட்டியை முழுமையாக்க் காண முடியாத்தும் எழுத்துப் பிழைகளின் காரணம்.
நீக்குநல்ல நினைவுகள். கருத்துப் பெட்டி மாற்றங்கள் எங்கள் கைங்கரியம் இல்லை.
நீக்குஉலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையான் அன்னவர்க்கே சரண் நாங்களே
நீக்குஆமாம் அம்மா. நினைவு வந்து விட்டது. மனப்பாடப்பகுதி!
நீக்குஎன் பசங்களும் என்னை நினைவுகூறும்படியாக நான் அவர்கள் சின்ன வயதிலிருந்தே உபயோகித்த பழமொழி
பதிலளிநீக்குகூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவேன் என்றானாம்.
என் பையனுக்கான என் அட்வைஸ், தோல்வியுறுவோம் என்று தெரியும் எந்த battleலிலும் இறங்காதே. Especially in office.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு// கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவேன் என்றானாம்.//
நீக்குபாரதவிலாஸ் படப் பாட்டுல சிவாஜி கூட டி எம் எஸ் குரல்ல சொல்வார்! ஹிஹிஹி..
விரும்பி அளிக்கும் நன்கொடை - பெரும்பாலும் கிடையாது. மனதைத் தொடும்போதோ இல்லை பசித்த வயிறைக் காணும்போதோ பணம் உணவு அளிப்பேன்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஜென்மம் என்று ஒன்று இருந்தால் -- நம் செயல்களுக்கேற்றபடிதான் கர்மவினை. யாராகப் பிறந்தாலும் தன்னளவில் எல்லாவித கஷ்டங்களையும் அனுபவித்துத்தானாகவேண்டும், அது காந்தியாக இருந்தாலும், அம்பானி அதானியாக இருந்தாலும் இல்லை பேர்ரசன், உலக அழகியாக இருந்தாலும்.
பதிலளிநீக்குஅந்த உலக அழகி யார்? மீதி எல்லோருக்கும் காந்தி, அம்பானி, அதானி என்று பெயர் சொல்லிவிட்டு உ அ பெயரை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே !
நீக்குதிகைக்க வைத்த கேள்வி - என் பெண் நான் செய்வது, நடந்து கொள்வது... போன்ற பலவற்றைச் சின்ன வயதிலிருந்தே கேள்வி கேட்பாள். அப்போ அப்கோ தவறிழைக்கும்கோது அட்வைஸ் செய்வாள். கையன் வாயைத் திறக்க மாட்டான், possibly எல்லாத்தையும் என்னைப்போல மனசில் வைத்துக்கொள்வானாயிருக்கும். என் பெண்ணின் ஆட்டிடியூட், நேர்மை, வெளிப்படைத்தன்மை எனக்குப் பிடிக்கும், கசப்பு கேப்ஸ்யூலாக இருந்தபோதும்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குஆச்சர்யம், சிறு வயதிலிருந்தே இப்படி அமைந்து விடுவதும், அதைத் தொடர்வதும்.
நீக்குகுழந்தைகள் எதைக் கேட்டாலும் -- ஹா ஹா ஹா... வாங்கித் தந்ததே இல்லை. அது பிட்சாவாகட்டும்.. வேறு ஏதேனுமாகட்டும்... இன்னொரு குணம் பசங்களை நானே புகழ மாட்டேன். இது தவறு என்பது என் பெண்ணின் வாதம்.. இப்படித்தான் இருக்கணும் என்பது அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டது. பெண்ணின் திறமைகள் பளிச் என தெரியும். நல்லாருக்கு என்பதோடு கடந்துவிடுவேன்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குதமன்னா Bபாட்டியா மாம்பழம் - நல்ல வேளை அவள் பல் தேய்க்கும் காணொளி போட்டு மாத்த்தின் முதல் நாள் என்னை பயமுறுத்தாமல் விட்டீர்களே
பதிலளிநீக்கு:))) தேடிப் பார்க்கிறேன் - பாட்டி(யா) பல் செட்டைக் கழற்றி பல் தேய்ப்பாரோ என்றும் ஒரு சந்தேகம்!
நீக்குசமீபத்தில் வந்து கொண்டிருக்கும் க்ளோஸ் அப் பற்பசை விளம்பரப் பெரியவர் எனக்கும் நம்மவருக்கும் திரு கௌதமனை நினைவூட்டுவார்கள். :) தமன்னா பஞ்சாபிப் பெண்ணா? ஆந்திரா என்றே நினைச்சிருந்தேன். !!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஅது என்ன விளம்பரம்? தேடிப் பார்க்கிறேன்!
நீக்குபேப்பர் படிக்கும் பெரியவரா?
நீக்குஇல்லை. நீங்க வேறே ஏதோ விளம்பரத்தைப் பார்த்திருக்கீங்கனு நினைக்கிறேன். இதிலே அந்தப் பெரியவர் அந்த இளைஞனிடம் சிரித்துக் கொண்டே பேசுவார். அவர் அச்சு அசல் உங்களைப் போலவே! நேற்றுக் கூடப் பார்த்தோமே!
நீக்குமனசாட்சி குறித்த பதிலை. மிகவும் ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் சாவகாசமாக வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். காலையிலிருந்தே நம்ம ரங்க்ஸ் தயவில் ராமநாமமாகக் கேட்டுக் கொண்டிருக்கேன். ஆகவே எனக்கு நினைவிருக்கும் கம்பராமாயணப் பாடல்
பதிலளிநீக்குஅருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்?’ என்று அழுங்கும்;
‘விருந்து கண்டபோது என் உறுமோ?’ என்று விம்மும்;
‘மருந்தும் உண்டுகொல் யான் கொண்ட நோய்க்கு?’ என்று மயங்கும்-
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள். இதுவும் சூர்ப்பனகை பற்றிய கம்பரின் வர்ணனையும்.
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
ஆஹா! அற்புதம்.
நீக்குஅது சரி, நான் எப்போ எ.பி. ஆசிரியர் குழாமில் எனக்கே தெரீயாமல் சேர்ந்தேன்? எல்லாக் கேள்விகளுக்கான பதிலிலும் என்னோட பதில்களும் இடம் பெற்றிருக்கின்றன. கௌரவப் படுத்திய திரு கௌதமன் அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅங்கே பதிந்த பதில்களை, இங்கே எடுத்துப் போட்டால் அதிகம் பேர் படிப்பார்கள் + மின்நிலா வாசகர்களுக்கும் அவற்றைப் படிக்க ஒரு சந்தர்ப்பம்.
நீக்குமிக்க நன்றி._/\_
நீக்குஶ்ரீராம் சொல்லி இருக்கும் குற்றாலக் குறவஞ்சிப் பாடலும் பிடிக்கும். நாராய், நாராய், ஆறாம் வகுப்பில் படித்தது. இன்னமும் நினைவில்!
பதிலளிநீக்குஎனக்கும்.
நீக்குசெல்ஃபோனில் எடுக்கும் படங்களை அவ்வப்போது காலரிக்குச் சென்று எடிட் செய்து தேவையற்றவற்றை நீக்கி விடுவேன். தேவையான படங்கள் மட்டுமே இருக்கும். மனசாட்சி தான் எல்லாச் சமயங்களிலும் கூடவே இருக்கே!
பதிலளிநீக்குஎங்க குழந்தைகளுக்கு நாங்க அவங்க கேட்கும்/கேட்ட/எதையும் வாங்கித் தந்ததில்லை. படிப்புக்குத் தேவையானவை தவிர்த்து. அவங்களும் அப்படி எல்லாம் தகுதிக்கு மீறியவற்றைக் கேட்டதில்லை. ஆனால் பேத்திகள் விஷயத்தில் நேர்மாறாகப் பெண்ணும் சரி/பையரும் சரி வாங்கிக் குவிப்பார்கள். இந்த விஷயத்தில் கட்டுப்பாடு வேணும்னு தோணினாலும் நாங்க தலையிட்டதில்லை. எங்களுக்கு அங்கெல்லாம் போனால் கண்/வாய்./காது ஆகியவை தேவையான நேரங்களில் மட்டுமே இயங்கும்.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குபிடிச்ச பழமொழினு எதுவும் நினைவில் வரலை. திகைக்க வைத்த குழந்தைப் பேச்சு எனில் எங்க அப்பு அவளோட நாலு வயசில் சொன்னது தான். "தாத்தா/பாட்டி தனியாக இருக்காங்க. அவங்களுக்குத் துணையாக நான் இருக்க நினைக்கிறேன். ஆனால் இந்தியப் பள்ளிகளில் மட்டும் படிக்க மாட்டேன்!" என்று அப்போவே சொல்லுவாள். அதன் பின்னரும் பல முறை சொல்லி இருக்காள். கு.கு.வுக்கு இன்னமும் அந்த அளவுக்கு விபரம் தெரியாது/தெரியலை. அநேகமாக தினம் எங்களைப் பார்ப்பதாலோ! ஆனால் கூகிள் மாப்பில் அவ அப்பாவிடம் நாங்க இருக்குமிடம்/மாடி என்பதையும் எங்கே இருக்கோம் என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும்.. மாப்பில் அடையாளமும் காட்டும்.
பதிலளிநீக்குகு கு வுக்கு வாழ்த்துகள். கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅடுத்த ஜென்மத்திலும் நானாகவே பிறந்து இப்பிறவியின் தவறுகளைச் சரி செய்யணும். ஆனால் எனக்குப் பலரும் அடுத்த பிறவி என்பது இல்லை என ஜோசியம் சொல்லி இருக்காங்க! :)
பதிலளிநீக்குநன்கொடை அளிப்பது அநேகமாக வேத பாடசாலைகளுக்கு. சமஷ்டி உபநயனங்கள் ஆகியவற்றுக்கு. கோயில்களின் திருப்பணி போன்றவற்றிற்கு.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குமறுபிறப்பு தத்துவத்தில் மறுபடி அவர்களாகவே பிறப்பதற்கு வாய்ப்பு உண்டா? மறுபடி அதே வாழ்க்கை வாழவேண்டும் என்றால் பாரல்லல் உலகம் பற்றி படித்தது நினைவுக்கு வருகிறது!
நீக்குதெரியலை ஶ்ரீராம். ஆனால் பல ஆண்டுகளாக இந்தச் சந்தேகம் உண்டு.
நீக்குv1) ஆண்டாண்டுகாலமாக உங்கள் நினைவில் இருக்கும் தமிழ்ப்பாடல் எது ? ( சினிமாப்பாடல் அல்ல. புறநாநூறு ராமாயணம் மாதிரி செய்யுள்
பதிலளிநீக்குமுக்காலைக் கொட்டினுள் மூடித்தீ கொண் டெழுவர்
செத்தாரை சாவார் சுமந்து.
2) உங்களுக்கு மிகவும் பிடித்த பழமொழி எது ?
அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்
3) உங்களைத் திகைக்க வைத்த சிறுவர் பேச்சு அல்லது கேள்வி எது
கர்ப்பிணி பெண்ணை பார்த்தவுடன் 5 வயது சிறுவன் "அந்த ஆண்ட்டி சோத்தை பானையோடு முழிங்கிட்டாங்களா?" என்ன பதில் சொல்வது?
4) அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் யாராகப் பிறக்க ஆசைப்படுவீர்கள் ?
தெரியாது.
5) நீங்கள் விரும்பி அளிக்கும் நன்கொடை யாருக்கு ?
நன்கொடை என்றாலே விரும்பி அளிப்பது தானே!
6) குழந்தைகள் என்ன கேட்டாலும் வாங்கித் தருவது, அவர்களுக்கு விலை மதிப்பு மிக்க பொருட்களை வாங்கித் தருவது இது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன ?
பல சமயம் தந்தது உண்டு. சில சமயம் நிராகரிக்கப்ப்பட்டது உண்டு. சுஜாதா சிறு வயதில் அப்பாவிடம் சைக்கிள் வாங்க பணம் கேட்டு நிராகரிக்கப்பட்ட கதையை சொல்வாரே, அது போன்று நானும் என் பையனுக்கு சைக்கிள் நிராகரித்திருக்கிறேன். வளர்ந்தவுடன் மோட்டார் சைக்கிள் வாங்கியும் கொடுத்திருக்கிறேன்.
Jayakumar
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குவணக்கம் வாழ்க வளமுடன்.
நீக்குகேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபச்சரிசி மாங்காய் என்று உருண்டையாக ஒரு மாங்காய் கிடைக்கும் அது ஊறுகாய்க்கு நன்றாக இருக்கும்.
கிளிமூக்கு மாங்காய் சிறு சிறு பற்களாக வெட்டி பச்சையாக, உப்பு கரம் போட்டு பெருகாயம், கடுகு போட்டு தாளித்து கொட்டினால் என் கணவருக்கு, குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
பதிலளிநீக்குசெம்பொருள் காண்பது அறிவு
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகிளி மூக்கு மாங்காய் இங்கும் உண்டு உப்பு மிளகாய்பொடியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குமாம்பழம் என்றால் கறுத்த கொழும்பு, அம்பலவி, செம்பாடு , விலாட் இனிப்பாக இருக்கும் சாதத்துக்கு சாப்பிட மாட்டோம் புட்டுடன் சாப்பிடுவார்கள்.
குழந்தைகள் கேட்பதெல்லாம் வாங்கி கொடுப்பதில்லை. அவர்களுக்கு அது தேவையானதுதானா என பார்த்து வாங்கி கொடுப்போம்.
// கறுத்த கொழும்பு, அம்பலவி, செம்பாடு , விலாட் // இந்தப் பெயர்களில் எதுவுமே இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. தமிழ்நாட்டில் அவைகளுக்கு வேறு பெயர்கள் இருக்கலாம்.
நீக்குமுழு மாங்காயாக ஊறவைக்கும் முறை யாருக்காவது தெரியுமா?//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த நெல்லை கேட்பார். கீதா முறையைச் சொன்னாலும் போட மாட்டார். அவருக்குக் கீதாவின் செய்முறையில் நம்பிக்கை கிடையாது!!!!!!!! (ஹப்பா மாட்டிவிட்டாச்சு. ரெண்டாவது அவர் இன்று போட்ட மாங்காய் ஊறுகாயை நாளை சாப்பிட மாட்டார் அப்படியிருக்க அது எப்படி "ஊறு" காய்?????
திரும்பத் திரும்பக் கேட்பார்!!! ஹாஹாஹாஹாஹா
எங்கள் பிறந்த வீட்டில் அடைமாங்காய் வருடா வருடம் போடுவாங்க வீட்டில் மாமரமும் இருந்ததால்.
கீதா
கருத்துரைக்கு நன்றி. அடை மாங்காய் செய்முறை எழுதி அனுப்புங்கள்.
நீக்குஅடை மாங்காய் என்பது ஒண்ணும் புதுசெல்லாம் இல்லை. நல்ல கதுப்பு மாங்காயின் இரு பக்கங்களிலும் கீறிக் கொண்டு, முழுதாக நறுக்கக் கூடாது, அதனுள் உப்பு, மஞ்சள் பொடி அடைத்து 3 நாட்கள் ஊற வைத்துவிட்டுப் பின்னர் வெயிலில் காய வைத்து எடுத்து வைச்சுக்கணும். வெயிலில் காய்ந்ததும் அதை அப்படியே இரண்டாக எடுத்து வைச்சுக்கலாம். உள் கொட்டை/பருப்பு தனியாக வரும். பருப்பை அரைத்துக் கொண்டு மிளகு குழம்பு வைக்கலாம். எனக்கென்னமோ இந்த அடை மாங்காய் பிடிக்கலை. ரங்க்ஸ் ரொம்பத் தொந்திரவு செய்யவே போன வருஷம் போட்டு வைச்சிருக்கேன். அதுவே இன்னும் செலவாகவில்லை. காய வைக்கையில் நல்லவேளையாக மழை வரலை! :))))))
நீக்குவிளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குநான் எடுக்கும் படங்களையும் காணொளிகளையும் திரும்பப் பார்ப்பதுண்டு. என்னை உற்சாகப்படுத்திக் கொள்ள உதவுகிறது.
பதிலளிநீக்குகீதா
ஆம், அதே!
நீக்கு2,3, 6 கேள்விகளுக்கு நான் சொன்ன பதில் இங்கே வரலை. மெயில் பாக்ஸில் இருக்கானு போய்த் தேடிப் பார்க்கணும். :(
பதிலளிநீக்குspam பகுதியில் அடிக்கடி சில கருத்துகள் போய் அமர்ந்துகொள்கின்றன. அவ்வப்போது அவற்றை - வகுப்பிற்கு கட் அடித்துவிட்டு மரத்தடியில் சென்று அமர்ந்து அரட்டை அடிக்கும் மாணவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து அடித்து வகுப்பிற்கு அனுப்பும் ஆசிரியர் போல - நானும் ஸ்ரீராமும் அடிக்கடி செய்துவருகிறோம்!
நீக்குபானுமதி வெங்கடேஸ்வரன் : (வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய பதில்கள் )
பதிலளிநீக்குபுதன்கிழமை நீங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில்:
1. பல்லாண்டுகளாக நினைவில் இருக்கும் பாடல்கள்
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டு
போனதிசை எல்லோர்க்கும் கள்வனாய்
ஏழு பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு
ஆற்றங்கரையின் மரமும்
அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே
ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு
வேறோர் பணிக்கு.
விற்பெரும் தடந்தோள் வீர வீங்குவீர்
நற்பெறும் தவத்தளாய
நங்கையைக் கண்டேன் அல்லேன்
இற்பிறப்பென்பதொன்றும்
இரும்பொறை என்பதொன்றும்
கற்பென்னும் பெயரதொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்
என்னும் கம்ப ராமாயணப் பாடல்
"தேரா மன்னா செப்புவதுடையேன்... என்று தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்.
தம்மின் மெலியாரை நோக்கி தமதுடைமை
அம்மா பெரிதென்றகமகிழ்க
தம்மிலும் கற்றாரை நோக்கி கருத்தழிக
கற்றதெல்லாம் எற்றே
இவர்க்கு நாம் என்று
என்னும் நீதி நெறி விளக்கம் பாடலும் நினைவில் இருக்கிறது.
2. நிறைய இருக்கிறது
3. இது குறித்து ஒரு பதிவே போட்டிருக்கிறேன்
4. மீண்டும் நானாக பிறக்கத்தான் ஆசை.
5. ஏழை குழந்தைகள் படிப்பிற்கு உதவி.
6. குழந்தைகள் கேட்பதை யெல்லாம் வாங்கித் தருவது, விலையுயர்ந்த பொருள்களை குழந்தைகளுக்கு வாங்கித் தருவது இரண்டும் தவறு என்று கருதுகிறேன்.
கருத்துரைக்கு நன்றி!!
பதிலளிநீக்கு