வெள்ளி, 1 ஜூலை, 2022

வெள்ளி வீடியோ : கோவில் சிற்பங்கள் எல்லாம் நேரில் நின்றாடக் கண்டேன்

 எடுத்த எடுப்பிலேயே சற்றே உயர்ந்த ஸ்தாயியில் டி எம் எஸ் "முருகா நீ வரவேண்டும்..  நான் நினைத்தபோது நீ வரவேண்டும்.."  என்று கட்டளையாக வேண்டுகோள் வைக்கும்போதே பாடல் களைகட்டி விடுகிறது.

N S சிதம்பரம் எழுதிய பாடலுக்கு தானே இசை அமைத்து சுத்தசாவேரி ராகத்தில் பாடி இருக்கிறார் டி எம் எஸ்.  

நினைத்தபோதெல்லாம் வருவானா முருகன்?  மனதிலேயே  உறைபவன் நேரில் வரவும் வேண்டுமா என்ன!

முருகா நீ வரவேண்டும்!

முருகா நான் நினைத்த போது
நீ வரவேண்டும்!
முருகா நீ வரவேண்டும்!

நினைத்த போது நீ வரவேண்டும்!
நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!

உனையே நினைந்து
உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார்
உளம் உறைவோனே!

​​
நினைத்த போது நீ வரவேண்டும்!

கலியுக தெய்வம் கந்தா நீயே!
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே!
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா என்றே

நினைத்த போது நீ வரவேண்டும்!
 


1977 ல் வந்த படம் 'ஒளிமயமான எதிர்காலம்'.  விஜயகுமார் - சுமித்ரா நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இசை விஜயபாஸ்கர்.  இயக்கம் கிருஷ்ணமூர்த்தி.  படம் பற்றி வெறெந்தத் தகவலும் கிடைக்கவில்லை.  அந்தப் படத்திலிருந்து ஒரு பாடல்.

எஸ் பி பி -வாணி ஜெயராம் குரலில் இனிமையான பாடல்.  எழுதியவர் யார்?  தெரியாது.

மாமதுரை நாட்டினில் வைகைக்கரைக் காட்டினில் 
காதல் பாட்டொன்று கேட்டேன் 
கண்கள் கூடுவதைப் பார்த்தேன் ஆ...
கண்கள் கூடுவதைப் பார்த்தேன் 

தோற்றம் பொன்னூஞ்சலாட்டம் தோகை கொண்டாடும் தோட்டம் 
ஆடை மேல்நாட்டு ஜாடை ஆசை தீராத போதை 

மாந்தளிர் மஞ்சள் பல்லாக்கு மயக்குது நெஞ்சில் என்னோடு 
மைவிழி தான் சொல்லும் தூது...மைவிழி தான் சொல்லும் தூது 

கோவில் சிற்பங்கள் எல்லாம் நேரில் நின்றாடக் கண்டேன் 
பாடும் பண்பாடு கண்டேன் நானும் பண்பாடு என்றேன் 

பொன்னியின் வெள்ளம் கண்டாயோ பூவையின் உள்ளம்  கண்டாயோ 
யாருக்கு யார் சொல்லவேண்டும் 
யாருக்கு யார் சொல்ல வேண்டும்..

ஏதோ நான் சொல்ல வந்தேன் எண்ணம் முள்ளாக நின்றேன் 
நானும் ஓடோடி வந்தேன் நாணம் தள்ளாட நின்றேன் 

பச்சைக்கிளி வார்த்தை வராது ஆயினும் ஆசை விடாது 
நாம் இனி நமக்காக வாழ்வோம் 
நாம் இனி நமக்காக வாழ்வோம் 

35 கருத்துகள்:

  1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. வானமும் வையகமும் வாழ்க.. வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. நீல மயில் மீது
    ஞாலம் வலம் வந்த நீதான் எனக்கருள வேண்டும்.. முருகா..

    பதிலளிநீக்கு
  4. எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் முருகா நீ வரவேண்டும். மனது கொஞ்சம் டிப்ரெஷனா எண்ணும்போது தனிமையில் இந்தப் பாடலை சப்தத்துடன் பாடுவேன். இதோடு அரைகுறையாக, நீல மயில்மீது ஞாலம் வலம் வந்த பாடல் வரிகளும் சேர்ந்துகொள்ளும்.

    சில பக்திப் பாடல்களாலே மட்டும்தான் மனதைத் தொட்டுவிட முடிகிறது. நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  6. முதல் பாடல் பல்லாயிரம் முறை கேட்டது, இரண்டாவது பாடல் கேட்டு இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  7. நினைத்த போது நீ வர வேண்டும் ! பாடல் பிடித்த பாடல். பள்ளியில் டீச்சர் பாட சொன்னால் இந்த பாடல்தான் பாடுவேன்.
    பகிர்வுக்கு நன்றி.
    அடுத்த பாடல் வானொலியில் கேட்டது . தொலைக்காட்சியில் பழைய பாடல் நிகழ்ச்சியில் கூட வைப்பதே இல்லை. இன்று கேட்டேன் பல வருடத்திற்கு பின்.

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. முதல் பாடல் பலமுறை கேட்ட இனிமையான பாடல். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேட்க வைத்ததற்கு நன்றி.
    இரண்டாவது பாடலை கேட்ட நினைவு இல்லை. தவிர முதல் பாடலை கேட்ட பிறகு இதை ரசிக்க முடியவில்லை.

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு
  10. முதல் பாட்டு மிக மிகப் பிடித்த பாடல். எத்தனை முறை கேட்டிருப்பேன். ஊர்க்கோயிலில் போடும் போது பெரும்பாலும் இது முதல் பாடலாக இருக்கும். ரசித்த ரசிக்கும் பாடல். அருமையான பக்திப்பாடல். பாடல்கள் கேட்பதே அரிதாகி வரும் இந்நாட்களில் இப்படி உங்கள் பகிர்வின் மூலம் கேட்டுவிடுகிறேன். மிக்க நன்றி ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இரண்டாவது பாட்டு கேட்டதில்லை ஸ்ரீராம். இப்போதுதான் கேட்கிறேன். எஸ்பிபி குரல் அதுதான் இந்தப் பாட்டை முன்னிறுத்துகிறது. வழக்கம் போல் அவர் குரலில் செய்யும் ஜாலம்...இதுவும் நன்றாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். எனக்கு மிகவும் பிடித்த எஸ் பி பி பாடல்களில் ஒன்று.

      நீக்கு
  12. முதல் பாடல் பலமுறை கேட்டதுண்டு... இரண்டாவது அவ்வப்போது கோடை பண்பலையில் வரும்...

    // பூவையின் எண்ணம் கண்டாயோ //

    (பொருள் ஒன்று தான் என்றாலும், எண்ணம் அல்ல)

    பூவையின் உள்ளம் கண்டாயோ...?

    பதிலளிநீக்கு
  13. வெள்ளிகிழமை முருகன் பாடல் பகிர்வு சிறப்பு பிரபலமானது பல தடவை கேட்டிருக்கிறேன்.
    இரண்டாவது சில தடவை கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் அருமை. பக்தி பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். நினைத்த போதெல்லாம் அவன் வந்து ஆறுதல் அளிக்க வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த பாக்கியம் பெறுவதற்கு எத்தனைப் பிறவிகளில் எவ்வளவு தவங்கள், யோகங்கள் செய்திருக்க வேண்டும். ஒரு பிறவியில் கிடைக்க கூடியதா அது. முருகா.. நல்ல பாடலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    இரண்டாவது பாடலை இதுவரை கேள்விப்பட்டதில்லை. இப்போது அதையும் கேட்டுப் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இரண்டாவது பாடலும் இப்போது முதன் முறையாக கேட்டு ரசித்தேன்.

      திரு. எஸ். பி. பியின் இனிமையான குரலுடன் வாணிஜெயராம் அவர்களின் அற்புதமான குரலினிமையும் சேர்த்து பாடலை வெகுவாக இனிமையாக்குகிறது. நல்ல பாடல். கேட்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      முதல் பக்தி பாடலை கேட்கும் போது சீர்காழி அவர்களின் "நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த" என்ற பாடலும் நினைவுக்கு வந்தது. அதை இப்போது வாய் விட்டு பாடி ஆனந்தமும் அடைந்து விட்டேன். அதுபோல் "உள்ளம் உருகுதய்யா முருகா" என்ற டி. எம். எஸ் அவர்களின் பாடலும் மிகவும் பக்தி மயமாக இருக்கும். முதலில் சொல்ல விடுபட்டு விட்டது. அதையும் பகிர நேரம் வாய்க்கும் போது பகிருங்கள். இது போன்ற பக்தி பாடல்கள் என்றுமே மனதிற்கு நிம்மதியை தருபவை. இப்படி வெள்ளிதோறும் பக்தியினால் எங்களை ரசிக்க வைத்து ஆனந்தப்படும் தங்கள் ரசனைக்கு மிக்க வணக்கங்களுடன் நன்றிகளும். .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நன்றி கமலா அக்கா.. இரண்டு பாடல்களையும் கேட்டு விட்டு தனித்தனியாக கருத்து சொல்லி இருப்பதற்கு நன்றி. உங்கள் விருப்பத்தையும் பார்க்கிறேன் அக்கா.

      நீக்கு
    4. நன்றி சகோதரரே.

      நினைத்த போது வரும் முருகனை காணும் போதெல்லாம் உள்ளம் உருகத்தானே செய்யும். அதுதான் அந்த பாடலும் தானாக வந்து விட்டது. நன்றி.

      நீக்கு
  15. முதல் பாடல் பலமுறை கேட்டு ரசித்த பாடல்...... இரண்டாம் பாடல் இதுவரை கேட்டதில்லை..... இந்தப் பதிவு வழி கேட்டு ரசித்தேன். பாடல் பகிர்வுகள் நன்று....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!