செவ்வாய், 20 செப்டம்பர், 2022

சிறுகதை : மொழியாக்கம் - வரருஷி 2 - ஜெயக்குமார் சந்திரசேகரன் 

 

 

கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய

ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை

***** பெற்ற பன்னிரண்டு குலம்.

(வரருக்ஷி கதை)

பகுதி-2/2.

*******************

மொழியாக்கம்ஜெயக்குமார் சந்திரசேகரன்

 

முன்னுரை:

 

பதஞ்சலி முனிவர் வ்யாகரணத்திற்கு ஒரு மகா பாஷ்யம் உருவாக்கி தன்னுடைய சீடர்களுக்கு போதிக்கும் போது, ஒரு சீடன் செய்த தவறால் அவருடைய ஆயிரம் சீடர்கள் கோபாக்கினியில் வெந்து சாம்பலானதையும், மறைந்திருந்து கேட்ட ஒரு கந்தர்வன் மூலம் அந்த பாஷ்யம் கோவிந்தசாமி என்ற பிராமணனுக்கு போதிக்கப்பட்டதும், அப்பிராமணன் அவருடைய உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக, ஒரு சூத்ர பெண்மணியை விவாகம் செய்ய வேண்டி, நான்கு வர்ணத்திலும் ஓரோர் கன்னிகையை மணந்ததையும், பிராமண மனைவி மூலம் வரருக்ஷி, க்ஷத்ரிய மனைவி மூலம் விக்ரமாதித்தன், வைஸ்ய மனைவி மூலம் பட்டி, சூத்திர மனைவி மூலம் பத்ருஹரி என்ற நான்கு புதல்வர்களைப் பெற்றார் என்றும்  மகா பாஷ்யம்-1 மகா பாஷ்யம்-2  ஐதீகத்தில் கண்டோம். 

கொட்டாரத்தில் சங்குண்ணி அவர்கள் அதன் தொடராக வரருக்ஷி கதையையும், பர்த்ருஹரி கதையையும் எழுதியுள்ளார். அதில் வரருக்ஷி மூலம் பன்னிரண்டு குலத்தவர்கள் தோன்றியதை இந்தப் ***** பெற்ற பன்னிரண்டு குலம்  கதையில் எழுதியுள்ளார்.

வரருக்ஷி விக்ரமாதித்தனுடைய சபையில் பணி புரிந்து கொண்டிருக்கும் வேளையில் ராஜ கட்டளை பிரகாரம் ராமாயணத்தில் முக்கியமான ஸ்லோகம் மற்றும் முக்கியமான வாக்கியம் எது என்று அறிய வேண்டி அலைந்து திரிந்து கடைசியில் வனதேவதைகள் மூலம் விடை அறிந்ததையும், அதை ராஜாவிற்கு விளக்கியதும், தனக்கு ஒரு ***** பெற்ற பெண் குழந்தை மூலம் அதப்பதனம் (கேடு) சம்பவிக்கப் போகிறது என்று அறிந்ததையும், அக்கேட்டைத் தவிர்க்க குழந்தையைக் கொல்ல எண்ணி வாழைத் தெப்பத்தில் கிடத்தி ஆற்றில் விட ராஜா சேவகர்களைப் பணித்ததையும், சேவகர்கள் அவ்வாறே செய்தனர் என்பதையும் பகுதி-1 இல் கண்டோம்.

வரருக்ஷி-1

இனி

அவ்வாறு ராஜா விக்ரமாதித்தன்  விருப்பப் பிரகாரம் வரருக்ஷி அரண்மனையிலேயே வசித்துக் கொண்டிருந்தார். வருடங்கள் பல உருண்டோடின.

வரருக்ஷி ஒரு யாத்திரை சென்றார். வழியில் ஒரு பிராமணனுடைய வீட்டில் உண்ணலாம் என்று நினைத்து அங்கு சென்றார். பிராமணனும் சந்தோசத்துடன்சீக்கிரம் குளித்து வாருங்கள். சமயம் ஆகிவிட்டது. சாப்பாடு இப்போது தயாராகி விடும்.” என்று கூறினார். அதற்கு வரருக்ஷி அப்பிராமணனைக் கொஞ்சம் பரீட்சிக்க எண்ணினார்.

வரருக்ஷி : “நான் உண்பதற்கு  சில நியமங்கள் உண்டு. அதை எல்லாம் செய்ய முடியுமா என்று தெரிந்த பின்னரே குளிக்கப் போக வேண்டும்.”

பிராமணன் : “நியமங்கள் என்னவோ? சாதிக்க முடியும் என்றால் சரியாக்கலாம்.“

வரருக்ஷி : “அதிகம் ஒன்றுமில்லை.  குளித்த பின் உடுக்க விராலிப்பட்டு வேண்டும். நூறு பேருக்கு ஆகாரம் கொடுக்க வேண்டும். சாப்பாட்டில் நூற்றியெட்டு கறிகள் தொட்டுக்கொள்ள வேண்டும். சாப்பாடு சாப்பிட்ட பின்னர் மூன்று பேரைத் தின்ன வேண்டும். நாலு பேர் என்னைச் சுமக்க வேண்டும். அவ்வளவு தான்”. இதைக் கேட்ட பிராமணனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன பதில் சொல்வது என்றும் தெரியாமல் சும்மா இருந்தார்.

அப்போது உள்ளிருந்து ஒரு கன்னிகைஅச்சன் ஒன்றும் பிரமிக்க வேண்டாம், எல்லாவற்றிற்கும் மார்க்கம் இங்கு உண்டு, அவரைக் குளித்து வரச் சொல்லுங்கள்.” என்று கூறினாள். வரருக்ஷி குளிக்கச் சென்றவுடன் பிராமணன் மகளிடம்இவர் கேட்ட எல்லாம் சாதிக்க முடியுமா? என்று கேட்டார்.

மகள்எல்லாம் சாதிக்கலாம். கேட்டது எதுவும் கஷ்டமானது இல்லை. விராலிப்பட்டு என்பது கோவணம் என்பதாகும். நூறு பேர்க்கு பட்சணம் என்றது பூஜை செய்யவேண்டும் என்பதாகும். அவிஸ் கொண்டு நூறு தேவர்கள் திருப்தி அடைவர். 108 கறிகள் வேண்டும் என்றால் இஞ்சிக்கறி வேண்டும் என்று அர்த்தம். இஞ்சிக்கறி 108 கறிகளுக்கு சமம் என்பதாகும். மூன்று பேரைத் தின்னனும் என்றது தாம்பூலம் வேண்டும் என்பதே. நாலு பேர் சுமக்கணும் என்றது படுக்க ஒரு கட்டில் வேண்டும் என்பதாகும். இதெல்லாம் இங்கில்லையா? ஏன் கவலைப்பட வேண்டும்?”

இதைக்கேட்ட பிராமணன் மகளின் சாதுர்யத்தை வியந்துசரி எல்லாம் தயார் செய்என்று கூறினார்.

வரருக்ஷி குளித்து வந்தபோது கோவணம், பூஜைக்கு வேண்டிய அவிஸ், சந்தனம், பூ முதலியவை தயாராக வைக்கப்பட்டிருந்தன.

வரருஷி பூஜையை முடித்து, சாப்பிட்டு விட்டு திண்ணையில் இருந்து தாம்பூலம் தரித்து கட்டிலில் படுத்தார். அவரது எண்ணங்கள் அவர் கூறியதை எல்லாம் சரியாக புரிந்துகொன்டு ஏற்பாடுகள் செய்த கன்னிகையின் பால் சென்றது. “அவள் நல்ல புத்திசாலிப் பெண்தான். அவளை விவாஹம் செய்தால் என்னஎன்று அவருக்குத் தோன்றியது.

அவர் தன்னுடைய விருப்பத்தை பிராமணனிடம் தெரிவித்தார். பிராமணனும் கன்னிகையை தானம் செய்ய சம்மதித்தார். அதிகம் நாட்கள் காத்திராமல் சுப சீக்கிரம் ஒரு சுப முகூர்த்தத்தில் விவாகம் நடந்தது. வரருக்ஷி பத்தினியுடன் தனது வீட்டை அடைந்தார்.

(மற்று சில பதிவுகளில் வரருக்ஷியின் மனைவி பெயர் பஞ்சமி என்று காணப்படுகிறது. அதையே நாமும் இங்கு அவருடைய மனைவி பெயராகக் கொள்ளலாம்)

அப்படியாகக் குடித்தனம் நடத்தி வரும் போது வரருஷி ஒரு நாள் தர்ம பத்தினியின் தலை முடியைச் சீவும் போது, தலையில் தீயினால் உண்டான வடுவைக் கண்டார். அதைப்பற்றி அவர் அவளிடம் விசாரித்தார். அதற்கு அவள் அவ்வடு ஒரு பந்தம் ஏற்படுத்தியது என்று அவளுடைய அம்மை கூறியதாகச் சொன்னாள். அம்மா ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு வாழைத் தெப்பத்தில் நான் குழந்தையாக மிதந்து வந்ததைக் கண்டு, என்னை  எடுத்ததாகவும், தலைப் பக்கத்தில் ஒரு பந்தம் இருந்தது என்றும் என்னிடம் சொல்லியிருக்கிறார். “நான் அச்சன் பெற்ற குழந்தை அல்ல. ஆற்றில் கண்டு எடுத்து வளர்த்தப்பட்ட  குழந்தை தான்என்று சொன்னாள்.

இதைக் கேட்ட வரருக்ஷிக்கு தன்னுடைய தர்ம பத்தினி, தான் கொல்ல  முயற்சி செய்த, ****னின் புத்திரிதான் என்பது புரிந்தது. கொஞ்சம் விஷமம் தோன்றியது. “லிகிதமபிலாலாடே பிராஜ்தித்ததும் க: சமர்த்த:” (தலைவிதியை மாற்றுவது கடினம்?) என்று சமாதானப்பட்டார். பழைய கதைகளையும் பஞ்சமிக்குச் சொன்னார். “இனி நாம் இங்கு இருக்க வேண்டாம், பாக்கி உள்ள ஆயுளை தேசாடனத்தில் கழிக்கலாம்.” என்று கூறினார். இருவரும் தேசாடனம் புறப்பட்டனர்.

இதுவரை கூறிய கதை சம்பவித்தது எல்லாம் மலையாள தேசத்திற்கு அப்பால் எனவும், தேசாடனம் மலையாள தேசத்தில்தான் என்றும் அறிந்து கொள்வீர்களாக.

அவ்வாறு அவர்கள் ஓரோர் திசையிலே சஞ்சரிக்கும்போது பஞ்சமி கருவுற்றாள். பிரசவிக்கும் நாளும் வந்தது. காட்டின் உள்ளே சென்று  பிரசவித்து  கொள்ளுமாறு கூறி வெளியில் நின்றார் வரருக்ஷி. மருத்துவச்சி யாரும் இல்லை என்றாலும், “யாரும் இல்லை என்பவருக்குத்  தெய்வம் துணை உண்டுஎன்றபடி பிரசவம் சுகமாய் முடிந்தது. பிரசவம் தீர்ந்தவுடன் வரருக்ஷிகுழந்தைக்கு வாய் உண்டோ?” என்று கேட்டார். அதற்குஉண்டுஎன்று பஞ்சமி பதில் கூறினாள்.

வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும், ஆகவே குழந்தையை அங்கேயே விட்டு விட்டு நீ வாஎன்று பஞ்சமியை விளித்தார். பஞ்சமிக்கு பிரசவித்த அசதி, மற்றும் பிரசவ மருந்துகள் ஏதும் இல்லை. காட்டுப் பழங்கள், மூலிகைகள் போதுமானதாக இருந்தது.

இவ்வாறு பதினோரு குழந்தைகள் காலா காலத்தில் பிறந்தன. காட்டில் சென்று பிரசவித்துப் பெற்றக் குழந்தைகளை எல்லாம் பிரசவித்த இடத்திலேயே விட்டுவிட்டு அவர்கள் சென்றனர். இக்குழந்தைகளை பிராமணர் முதல் பல்வேறு பதினொன்று ஜாதிக்காரர்கள் எடுத்து வளர்த்தனர்.

பஞ்சமி பன்னிரண்டாம் தடவை கர்ப்பம் தரித்தாள். ‘பெற்ற பதினோரு குழந்தைகளில் ஒன்று கூட என்னிடம் இல்லை. எல்லாம் காட்டில் விடப்பட்டன. இந்தக் குழந்தையாவது நான் வளர்க்க வேண்டும். ஆதலால் இத்தடவை பெற்றவுடன்வாயுண்டோ?” என்று கேட்டால்இல்லைஎன்று பதில் கூறலாம். அப்போது அவர் குழந்தையை எடுத்து வர சம்மதிப்பார். மெல்ல மெல்ல அவருடைய மனதை மாற்றி குழந்தையை வளர்த்தலாம்என்று கருதினாள்.

பிரசவ சமயம் வந்தது. வழக்கம் போல காட்டினுள் சென்று பஞ்சமி பிரசவித்தாள். “குழந்தைக்கு வாயுண்டோஎன்ற வழக்கமான கேள்வியை வரருக்ஷி கேட்டார். பஞ்சமிஇல்லைஎன்று சொன்னாள். “குழந்தையை எடுத்து வாஎன்று வரருக்ஷி அனுமதி தந்தார். இருவரும் அவ்விடம் விட்டுப் புறப்பட்டனர். சிறிது தூரம் சென்று நோக்கிய போது குழந்தைக்கு உண்மையாலுமே வாய் இல்லாமல் போனது. வரருக்ஷி அக்குழந்தையை ஒரு குன்றின் மேல் பிரதிஷ்டை செய்தார். அதுதான்வாயில்லா குன்றில் அப்பன்” என்று அறியப்படுகிறது. இந்தக் குழந்தையையும் மற்ற பதினொன்று குழந்தைகளையும் சேர்த்து “***** பெற்ற பன்னிரண்டு குலம்என்று சொல்லப்படுகிறது. இப்பன்னிரண்டு பேர்களடங்கிய ஒரு ஸ்லோகம் உள்ளது. 

மேஷத்தோளக்னி ஹோத்ரி ரஜகனுமுளியன்னூர்

தச்சனும் பின்னே வள்ளோன்

வாயில்லாக் குன்னிலப்பன் வடுதல மருவும்

நாயர் காரைக்கால் மாதா

செம்மே கேளுப்புகுட்டன் பெரிய

திருவரங்கத்தெழும் பாணனாரும்

நேரே நாரணத்து பிராந்தனமுடனாவூர்

சாத்தனும் பாக்கனாரும்

மேஷத்தோள் அக்னி ஹோத்ரி, ரஜகன்,  உளியன்னூர்

தச்சனும், பின்னே வள்ளோன்

வாயில்லா குன்னில் அப்பன், வடுதல மருவும்

நாயர், காரைக்கால் மாதா

செம்மே கேள் உப்புக்குட்டன், பெரிய

திருவரங்கத்தெழும் பாணனாரும் ,

நேரே நாரணத்து பிராந்தன், அகவூர்

சாத்தனும், பாக்கனாரும்

மேஷத்தோள் அக்னி ஹோத்ரி (நம்பூதிரி), ரஜகன் (வண்ணான்), தச்சன்  (Architect), வள்ளோன் (புலையன்), வாயில்லா குன்றில் அப்பன், வடுதல நாயர் (படை வீரர்), காரைக்கால் மாதா (பெண் தெய்வம்), உப்புக்குட்டன் (முஸ்லீம் வியாபாரி), பாணான் (பாணர்), நாரணத்து பிராந்தன் (சித்த பிரமை பிடித்தவர். சித்தர்), அகவூர் சாத்தன் (விவசாயி), பாக்கனார் (ப***ன்) என்று இப்பன்னிரண்டு பேரும் அறியப்படுவர்.

இவர்கள் யாவரும் ஒரோர் திக்கில் தனித்தனியாக வசித்தனர். ஆனாலும் விவரம் புரிந்து கொள்ளக் கூடிய வயது வந்தபோது தங்கள் யாவரும் சகோதரர்களே என்று அறிந்தனர். தொடர்பில் இருந்தனர்.

இவர்களுடைய தாய் தந்தை சிராத்தத்திற்கு வாயில்லா குன்றில் அப்பன் நீங்கலாக மற்ற பத்து பேரும் அக்னி ஹோத்ரி  இல்லத்தில் கூடி பலி தர்ப்பணம் செய்வது வழக்கம். அக்னி ஹோத்ரி பிராமணன் ஆனதால் சிராத்தம் உண்பதற்குப் பிராமணர் தான் வழக்கம் போல் விளிக்கப்படுவர். ஆனால் ப***ன் உட்பட நான்வகை வர்ணத்தில் பட்டவர் சிராத்தம் செய்வதால் உண்பதற்கு விளித்தால் வருவதற்குப் பிராமணர்கள் தயங்கினர். அக்னிஹோத்ரியுடைய அந்தர்ஜனத்திற்கும் இவர்களுக்கு பணிவிடை செய்வது வெறுப்பாக இருந்தது. அதை அவர் அக்னி ஹோத்ரியிடமும் தெரிவித்தார்.

அவ்வருட சிராத்தத்திற்கு முதல் நாள் சாயந்திரம் சகோதரர்கள் யாவரும் அக்னி ஹோத்ரி இல்லத்தில் வந்து கூடினர். அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பத்து வெளி அறைகளில் அவர்கள் யாவரும் தங்கினர். இரவு உறங்கினர். எல்லோரும் உறங்கிய பின்பு அக்னி ஹோத்ரி அந்தர்ஜனத்தையும், பிராமணரையும் கூட்டிக்கொண்டு விளக்கெடுத்துக் கொண்டு போய்என்னை தொட்டுக் கொண்டு பாருங்கள்என்று காட்டினார். பத்து பேரும் ஒரேபோல் சங்கு சக்ர தாரியான விஷ்ணு அனந்த சயனத்தில் உறங்குவது போல் கண்டனர். ஆகவே எல்லோரும் விஷ்ணுவின் அவதாரம் என்று அவர்களுக்குப் புரிய வந்தது.

பின்னுரை.

இதன் தொடராக இதே கதையில் பன்னிரண்டு  பேரில் நால்வர் கதையை சங்குண்ணி எழுதியிருக்கிறார். நாரணத்து பிராந்தன், பெரும் தச்சன், அகவூர் சாத்தன், பாக்கனார் என்பவரது கதைகளைத் தொடர்கிறார். வாசகர் விருப்பம், வரவேற்பு இருந்தால் மற்றக் கதைகளைத் தொடரலாம் என்பது உத்தேசம். இல்லையேல் மற்ற கதைகளுக்குச் செல்லலாம்.

= = = =

24 கருத்துகள்:

  1. தெரியாத ஐதீக்க் கதைப் பகிர்வுக்கு நன்றி.

    புராண, ஐதீக்க் கதைகள் மனதை ஒன்ற வைப்பதில்லை. செவ்வாய், கே வா போ கதைப்பகுதி. புதிய கதை அல்லது, கேள்விப்படாத ஆனால் ரசித்த கதையை, புதிய கதை வராத பட்சத்தில் வெளியிடுவது நன்றாக இருக்கும். அமானுஷ்ய அல்லது வேறு வகையில் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் மலையாளக் கதைகளை அல்லது வேற்றுமொழிக் கதைகளை மொழிபெயர்த்துப் போட்டாலும் நன்றாக இருக்கும்.

    இது என் அபிப்ராயம். ஜெயக்குமார் சாரின் ஆர்வம் உழைப்பைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொன்ன மாதிரி சொந்த படைப்புகளுக்குள்ள தினம் செவ்வாய். இந்த மலையாள மொழிபெயர்ப்புகள் முதலில் "நான் படிச்ச கதை' பகுதியில் வெளியிடவே அனுப்பப்பட்டன. ஆனால் இக்கதைகள் ஐதீகம் என்ற பெயரில் விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டதாகி விட்டமையால் செவ்வாய்க்கு சென்று விட்டன. இக்கதை அனுப்பி ஏறக்குறைய 2 மாதம் ஆகிறது.

    இனி இது போன்ற சர்ச்சைக்கு உரிய கருத்துக்கள் உள்ள ஐதீகக் கதைகளை தவிர்க்கிறேன்.

    //புதிய கதை அல்லது, கேள்விப்படாத ஆனால் ரசித்த கதையை, புதிய கதை வராத பட்சத்தில் வெளியிடுவது நன்றாக இருக்கும்.//

    இந்த கதையை நீங்கள் முன்பே படித்திருக்க வாய்ப்பில்லை. என்பது என் ஊகம்.

    கருத்துரைகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயக்குமார் சார்.... ஸ்ரீமஹா பக்த விஜயம் புத்தகத்தை எடுத்துக்கொண்டால், ஐதீகமல்ல, நடந்த வரலாற்றைக் கதைகளாக எழுதியிருக்கிறார்கள். அது முற்றிலும் ஆன்மீகம் பக்கம் போயிடும். 'சர்ச்சைக்குரிய கருத்துக்கள்' என்ற பகுதிக்க நான் வரவில்லை. பொதுவா லாஜிக்கலா ஏற்றுக்கொள்ளக்கூடிய, நம் நம்பிக்கையின்பாற்பட்ட கதைகள் நிகழ்வுகள் தவிர மற்றவை படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டாது என்பது என் எண்ணம். ஆனால் எதை வெளியிடுவது என்பது எபி ஆசிரியர்களின் வேலை. என் வேலை கருத்துச் சொல்வது மட்டும்தான். ஹா ஹா ஹா

      நீக்கு
  3. //இல்லையேல் மற்ற கதைகளுக்குச் செல்லலாம்.//

    ஜெ கே சி அண்ணா இதை ஆதரிக்கிறேன். வேறு கதைகள் முடிந்தால் நீங்கள் செய்யலாம் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபுரி. கதைகள் செய்யலாமா?

      நீக்கு
    2. // கதைகள் செய்யலாமா?..//

      அது ஒரு சொல் வழக்கு..

      காஃபி உறிஞ்சுங்கள் / அருந்துங்கள் - என்றில்லாமல் சாப்பிடுங்கள் என்பது போல!..

      இப்போதெல்லாம் Enjoy this Coffee!..

      நீக்கு
    3. படம் பண்ணலாம் தான் என் நினைவுக்கு வந்தது. கதை எழுதும் படைப்பாளிகளே சொன்னால் சரி தான்
      :))

      நீக்கு
    4. ஜீவி அண்ணா அது காலையில் அவசர அவசரமாக அடித்ததில் இடையில் வரும் வார்த்தை மொழிபெயர்ப்பு என்பது விடுபட்டுள்ளது.

      கீதா

      நீக்கு
  4. அன்பின் வணக்கங்களுடன்

    வாழ்க நலம் எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  5. // இக்கதை அனுப்பி ஏறக்குறைய 2 மாதம் ஆகிறது.//

    கொடுத்து வைத்தவர் தாங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டு புட்டு என்று பிரசுரம் ஆகியிருக்கின்றதே!..

      எனக்கும் இப்படி அதிர்ஷ்டம் அடித்திருக்கின்றது..

      கதை ஒன்றின் பிரதிபலிப்பாகத் தோன்றியதை இம்மை, மறுமை என்று நிலைகளில் எழுதி அனுப்பி வைக்க உடனே (அதே வாரத்தில்) பதிப்பித்து சிறப்பு செய்திருக்கின்றார் அன்பின் ஸ்ரீராம் அவர்கள்..

      அந்தக் கதை
      அம்மா காத்திருக்கின்றாள் - 1, 2..

      நீக்கு
  6. பதினோரு குழந்தைகளையும் பெற்றவுடன் விட்டு விடுவது ஐதீக கதைகளில்தான் சாத்தியம்.

    பதிலளிநீக்கு
  7. ஐதீகக் கதை படித்தோம். இப்படியான கதைகளை இப்பொழுது தான் படிக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  8. ஒரு சொல்ல மறந்த பின்னுரையாகச் சேர்த்துக்கொள்ளவும். 

    இக்கதைகள் வெளிவந்த ஆண்டு 1907க்கு முன். ஜாதிவெறி தலைவிரித்து ஆடிய காலம். விவேகானந்தர் கேரளத்தை "Lunatic asylum" என்று விவரித்த காலம். முலை மறைக்கக்கூடாது, தெரு வழி போக கூடாது, முலை வரி போன்றவை இருந்த காலம். அக்கால கட்டத்தில் ஜாதிபேதத்தை மறைக்க 12 குலமும் ஒரு கீழ்சாதி பெண்ணின் மக்களே என்று  கற்பனையாக ஐதீகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது இந்தக் கதை என்று எனக்குத் தோன்றுகிறது. 

    இன்றைய இந்தப் பதிவுக்கு ஏற்றாற்போல் https://thillaiakathuchronicles.blogspot.com/ துளசி அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் சில ஜாதி வெறி சம்பவங்களையும் கூறி இருக்கிறார்.

    எத்தனை அவ்வையார் வந்தாலும் எத்தனை பாரதி  வந்தாலும்  உயர், தாழ்ந்த ஜாதிகள் மாறாமல் நிற்கும் என்று  தோன்றுகிறது.  

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எத்தனை ஔவையார் வந்தாலும் எத்தனை பாரதி  வந்தாலும்  உயர்ந்த, தாழ்ந்த ஜாதிகள் மாறாமல் நிற்கும் என்றே  தோன்றுகிறது...//

      நியாயம் தான்.. சாதி என்பது ஆதி மனிதன் கற்று கைக் கொண்ட தொழிலின் அடிப்படையல்
      அமைந்திருந்தது..

      அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்காகவே தன் மனைவிக்கும் மகனுக்கும் மகளுக்கும் கற்றுக் கொடுத்தான்..

      நல்வாழ்வினை அனுசரித்தே அந்த வேலை தெரிந்திருந்த பெண்ணை தனது மருமகளாக எடுத்துக் கொண்டு தொழில் தெரிந்திருந்திருந்த குடும்பத்துக்குத் தன் மகளை மாற்றுப் பெண்ணாகக் கொடுத்தான்..

      அன்றைக்கு தேவைகள் அதிகமில்லை.. நிம்மதியாகச் சென்று கொண்டிருந்தது பொழுது..

      மாறிப் போன கல்வியால் எல்லாம் சீர்குலைந்தது.. இல்லாத பேதங்கள் எல்லாம் பிரித்தாளும் சூழ்ச்சிக் காரர்களால் புகுத்தப்பட்டன..

      அவன் சொன்னால் எல்லாம் சரியாய் இருக்கும் என்று நம்பியவர்கள் நிலை குலைந்து வீழ்ந்தார்கள்..

      இன்றுவரை எழ முடியவில்லை..

      நீக்கு
    2. விதை ஒன்று. அது வளர மண் ஒன்று. இவைகளை மாத்திரமே இறைவன் படைத்து அது மெதுவாக வளர்ந்து கிளை பரப்பியிருக்கும். அல்லது சில விதைகள், சில மண்கள் (ஆண், பெண்) தோன்றியிருக்கலாம். இதை திறந்த மனத்துடன் அணுகினால்தான் பிடிபடும். ஒரு சாதியையே எடுத்துக்கொண்டாலும், அவர்கள் செய்யும் அல்லது செய்யத் தீர்மானித்த தொழிலுக்கு ஏற்றபடி பலப்பல கிளை ஜாதிகளாகப் பிரிவுபட்டிருக்கின்றன.

      எப்போது, செய்யும் தொழிலை வைத்து ஒருவரை அளவிட ஆரம்பித்தோமோ, பேதம் பார்க்க ஆரம்பித்தோமோ அப்போதே நாம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்ப ஆரம்பித்துவிட்டோம்.

      திறந்த மனத்துடன் இதை அணுகினால்தான் ஒத்துக்கொள்ளும் தைரியம் வரும். இன்றைக்கும் பலர் வீட்டில், வேலைக்காரிக்கு சிறிது அதிக சம்பளம் கொடுத்து பாத்ரூம் (கம்மோடு முதற்கொண்டு) க்ளீன் செய்யச் சொல்கிறார்கள். எத்தனை பேர், வேலைக்கு வைப்பவர்களின் குறைந்த பட்ச ஜாதியை மனதில் கொள்கிறார்கள் என்பதையும் யோசியுங்கள்.

      சாலையின் சாக்கடைகளைச் சுத்தம் செய்கிறவர்களும், எதையும் சுத்தம் செய்யும் தொழில்களைச் செய்கிறவர்களும் ஜாதி பேதத்தை நினைத்து, நாங்கள் அந்தத் தொழிலைச் செய்யப்போவதில்லை என்று சொன்னால் என்ன நடக்கும் என்று யோசியுங்கள்.

      நமக்கு சுலபமானது, நம் தவறுகளுக்கெல்லாம் அடுத்தவன் மீது பழி போடுவது. திருக்குறளுக்கு உரை சொல்ல ஆரம்பித்தவனாலேயே கள் உண்பதையும் பலதார மணத்தையும், இல்லீகல் குழந்தை பெற்றுக்கொள்வதையும் விட முடியவில்லை என்பது திருக்குறளின் தவறா அல்லது மனிதனின் தவறா?

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. எப்போது, செய்யும் தொழிலை வைத்து ஒருவரை அளவிட ஆரம்பித்தோமோ, பேதம் பார்க்க ஆரம்பித்தோமோ அப்போதே நாம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்ப ஆரம்பித்துவிட்டோம்.

      திறந்த மனத்துடன் இதை அணுகினால்தான் ஒத்துக்கொள்ளும் தைரியம் வரும். இன்றைக்கும் பலர் வீட்டில், வேலைக்காரிக்கு சிறிது அதிக சம்பளம் கொடுத்து பாத்ரூம் (கம்மோடு முதற்கொண்டு) க்ளீன் செய்யச் சொல்கிறார்கள். //

      டிட்டோ நெல்லை!! அதே.

      ஆனால் இங்கு வேறு ஒன்றும் சொல்லணும். பல இடங்களில் தண்ணீர் ஹார்ட் தண்ணீர் உப்புத் தண்ணீர் இவை கம்மோடுகளை ரொம்பவே கறை படிய வைக்கிறது. அது ஒரு சில உபகரணங்கள் அல்லது ஸ்பெஷல் கெமிக்கல்கள் போட்டுத்தான் சுத்தப்படுத்த முடிகிறது. அதற்கு சில ஆட்களை, ஏஜன்சிகளை அணுக வேண்டியுள்ளது என்பதை சென்னையில் சில இடங்களில் உள்ள வீடுகளில் கோயம்புத்தூரிலும்.

      கீதா

      நீக்கு
    5. ஜெகெசி அண்ணா மிக்க நன்றி சொல்லச் சொன்னார், துளசி.

      //அக்கால கட்டத்தில் ஜாதிபேதத்தை மறைக்க 12 குலமும் ஒரு கீழ்சாதி பெண்ணின் மக்களே என்று கற்பனையாக ஐதீகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது இந்தக் கதை என்று எனக்குத் தோன்றுகிறது. //

      வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கீங்க அண்ணா.

      கீதா

      நீக்கு
  9. வரருஷி முந்தைய பாகமும் வாசித்தேன். கிட்டத்தட்ட இன்று எங்கள் தளத்தில் வெளியான பதிவு- சமீபத்திய திரைப்படம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சொல்லப்பட்டதையும் அதன் முன்னான வரலாறும் கலந்து எழுதியிருப்பது நான் எடுத்த குறும்படம் செயின்ட் த கிரேட் - விவேகானந்தர் பற்றி எடுத்த போது அதில் சொல்லியதும் நினைவுக்கு வருகிறது. கேரளத்துக்கு வந்த போது அவரையே கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை அவர் மூன்று நாட்கள் தொடர்ந்து வந்தும். அவர் கேரளத்தை லுனாட்டிக் அசைலம் என்று சொல்லியது பிரபலமான ஒன்று. அவ்வளவு ஏற்றத் தாழ்வுகள் நிலவியிருந்த காலம்.

    மொழிபெயர்ப்புக் கதை. அதுவும் மலையாளம் மட்டுமில்லாமல் சம்ஸ்கிருத வாக்குகள் அதிகம் கலந்திருக்கும் என்று நினைக்கிறேன். கடினமாக இருந்திருக்கும். மொழிபெயர்த்த ஜெயகுமார் சந்திரசேகரன் சார் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!