ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

லால் பாக் உலா :: நெல்லைத்தமிழன்

 இன்றைய பதிவில் நெல்லைத்தமிழன் அனுப்பியுள்ள லால் பாக் சம்பந்தப்பட்ட படங்களும் விவரங்களும் இடம்பெறுகின்றன. 



யோகா செய்பவர் ஒருவர், தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தார் (ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதப்பார் போலிருக்கிறது.) அது சரி.. இந்த யோகாவினால் என்ன பிரயோசனம் என்பது எனக்குப் புரியவில்லை.

எங்கள் comment : ' தமிழ்நாட்டு மதுப்பிரியர்கள் எப்பொழுதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் கொடுமையைவிட இது பரவாயில்லை !!

பட்டுப்போன மரத்தின் உச்சியில், பறவை எச்சத்தினால் அரசமரம் வளர்கிறது என்றே நினைக்கிறேன். பட்டுப்போன மரம் அரசமரமாக இருக்க வாய்ப்பில்லை. 

எங்கள் comment : 'மரத்தில் மரம் பார்க்கலாம் ! 

மிகப் பெரிய அடிபாகத்தைக் கொண்ட மரம். சில்க் காட்டன் மரம் என்று போட்டிருந்தது. 200 வருடங்கள் பழமையானதாம்.  இதன் கட்டை மிக மெலியதாம். தீக்குச்சி,  அட்டைப் பெட்டிகள் செய்ய உகந்ததாம்.

எங்கள் comment : நன்றாகப் பார்த்தீர்களா? சில்க் ஸ்மிதா மரம் இல்லைதானே! shape அப்படி இருக்கு!! 


இன்னொரு மரத்தின் ஒரு பெரிய கிளை உடைந்து பூமியைத் தொட்டுக்கொண்டு சென்றது. அதன் மீது பலர் ஏறி படங்கள் எடுத்துக்கொண்டனர். அவர்கள் இறங்கியவுடன் எடுத்த படம் இது.  

ஒரு காலத்தில், எங்கள் பெருங்களத்தூர் வீட்டில் இருந்த மிகப் பெரிய பங்கனப்பள்ளி மாமரத்தில் ஏறி ஓரளவு உச்சிக் கிளை வரை சென்று மாங்காய்கள் பறிப்பேன். 36 வயதாகிய பிறகு, முதல் கிளை வரை ஏற ஏணியில் ஏறியபோதே பயம் வந்திருந்தது. அதற்கு மேல் ஏற தைரியம் இல்லை. இப்போது இந்த மரத்தின் கிளை மீது ஏறி அமர்ந்து படம் எடுத்துக்கொள்ள ஆசைதான். ஏறுவதற்கான தைரியம்தான் இல்லை.

எங்கள் comment : ' எங்க அம்பத்தூர் வீட்டில் கூட ..  (ஹி ஹி - வேறு ஒருவர் சொல்லவேண்டிய கமெண்ட் !!) 


அங்கிருந்த வாழை மரங்களின் தொகுப்பைக் காண்பித்து என் மனைவி, செவ்வாழைப்பழமோ என்றாள். மரம் ஆரோக்கியமாகவும், அழகான செவ்வாழைப்பழத் தோல் நிறத்துடன் இருந்தது. தெரிந்தவர்கள் சொல்லலாமே. 

சொல்லலாமே ! 

லால் பாக் மரச் சிற்பங்கள் : 









= = = = = 

57 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆம்! அதே!! வணக்கம் வாங்கோ!!

      நீக்கு
    2. அனுப்பிய படங்கள் வந்து விட்டனவே! இதான் சரி நெல்லை! ஆனால் எல்லோருமே சில பத்திரிகைகள் உள்பட வந்து விட்டதே என்றே எழுதுகிறார்கள்/சொல்கிறார்கள். :(

      நீக்கு
    3. உண்மைதான் கீசா மேடம். பேச்சை எழுத்தில் கொண்டுவர விரும்பினேன்

      நீக்கு
  2. எனக்கென்னவோ அந்த அம்பத்தூர் ஓனர் ஒவ்வொரு தடவை எழுதும்போது அவங்க வீட்டு மரங்களின் எண்ணிக்கை அதிகமாக ஆகிறதோன்னு டவுட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்வது வம்பத்தூர்க்காரர்!!

      நீக்கு
    2. ஸ்ரீ ராம்... ஹாஹாஹா. கீதான்னு பெயர் ஆரம்பித்தாலே என் விரல் பரபரங்குது

      நீக்கு
    3. //எங்கள் comment : ' எங்க அம்பத்தூர் வீட்டில் கூட .. (ஹி ஹி - வேறு ஒருவர் சொல்லவேண்டிய கமெண்ட் !!) // க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது கௌதமன் சாரோட வம்பு தானே?

      நீக்கு
    4. //அவங்க வீட்டு மரங்களின் எண்ணிக்கை அதிகமாக ஆகிறதோன்னு டவுட்// அதெல்லாம் இல்லை. நாங்க வீடு கட்டினதும் தென்னை மரங்கள் மட்டும் நாலு வைச்சோம். மேற்குப் பக்கத்துச் சுற்றுச்சுவரை ஒட்டி. கிணற்றடியில் நான்கு பாக்குகள் நட்டதில் இரண்டு மட்டும் நன்றாக வந்தது. அதோடு ஒரு மாதுளையும் மாமரமும் வந்து கொண்டிருந்தது. தென் மேற்கு மூலையில் ஓர் பொன்னரளிச் செடி மரமாட்டம் ஆகிவிட்டது. அத்தி மரம் ஒன்று அங்கே தானாக வந்தது. அது இருக்கவேண்டாம்னு ஒரு தோட்டக்காரர் வெட்டிட்டார். வட கிழக்கே வாழை போட்டிருந்தோம். சுண்டைக்காய் ஒன்று தப்புமுதல் அதோடு வளர்ந்தது. கிழக்குப் பக்கத்துச் சுற்றுச் சுவரில் பூச்செடிகள் நிறைய இருந்தன. செம்பருத்தி, அரளி, விருட்சி என. பக்கத்து வீட்டில் இருந்து இந்தக் குப்பை அங்கே போய் விழுவதாகப் புகார்கள் வந்ததும் அவற்றை வெட்டிட்டுச் சுற்றுச்சுவரையும் உயரமாக எழுப்பி சிமென்ட் போட்டோம். ஆனால் பக்கத்து வீட்டுத் தென்னை ஓலைகள், பாளைகள், உலர்ந்த மட்டைகள் எங்க வீட்டில் தான் விழும். நாங்க சொன்னால் "பின்னே மரத்தை வெட்டச் சொல்றீங்களா?" என்று சண்டைக்கு வருவாங்க.

      நீக்கு
    5. வாசல் பக்கம் வடக்கே உள்ள சுற்றுச்சுவரின் இரு பக்கங்களிலும் பூச்செடிகள். ஒரே ஒரு முருங்கை மரம். அதையும் புகார் வந்ததால் வெட்டினோம். காயும், இலையும் தித்திக்கும். பவளமல்லி மரம் மாடிப்படி அருகே வடமேற்கு மூலையில் இருந்தது. சுற்றுச்சுவரின் கதவுகளின் இருபக்கமும் முல்லை/ நித்தியமல்லி/ சந்தனமுல்லைக் கொடிகள். கொல்லையிலும் ஒரு சந்தனமுல்லைக்கொடி இருந்தது. எங்க படுக்கையறை ஜன்னலுக்கு வெளியே கொஞ்சம் பள்ளமாகச் செடிகள் போடும்படி விட்டிருந்தோம். அங்கே அடுக்கு மல்லி, செடி ரோஜா (நாக்பூரில் இருந்து கொண்டு வந்த பதியன்) போட்டிருந்தோம். வேறு சில குண்டு மல்லிச் செடிகளும் இருந்தன. நாங்க இல்லாதப்போ (சுமார் எட்டு/பத்து வருஷங்கள்) குடித்தனக்காரங்க சுமார் 3/4 முழம் பூத் தொடுத்து வைச்சுப்பாங்க. லீவுக்கு வரச்சே பார்ப்பேன். இதைத்தவிர ஒரு எலுமிச்சைச் செடியை நாங்க 1980 ஆம் ஆண்டு அம்பத்தூர்/ராம்நகரில் இருந்தே வளர்த்துக் கடைசியில் இங்கே கொண்டு வந்து வைச்சோம். அது நாங்க ஒரு சுத்துப் போயிட்டு வந்தப்புறமாக் கூடக் காய்த்துத் தள்ளியது. ஆனால் எல்லோரும் சாத்துக்குடி அளவு எலுமிச்சம்பழத்தை எட்டணாவுக்குக் கேட்பாங்க. சும்மாக் கொடுத்தால் சந்தோஷம் தான்.

      நீக்கு
    6. அந்த எலுமிச்சை மரம் பட்டுப்போனதும் இரண்டு ஜாதி நாரத்தங்காய் மரங்கள் வந்துச்சு பாருங்க. தெருவுக்கே நாரத்தங்காய் சப்ளை நாங்க தான். அப்போத் தான் வீட்டை விட்டு வெளியேறினோம். குடி இருந்தவங்க மரத்தால் தொந்திரவுனு சொல்ல (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) மனசே இல்லாமல் மரத்தை வெட்டினோம்.. இதிலே வாசல்லே வந்திருந்த வேப்பமரமும், அசோகா மரமும் சேர்க்கலை. அது வடகிழக்குச் சுற்றுச்சுவர்ப் பக்கம் வளர்ந்து வந்தது. அங்கே தான் நம்ம குயில்கள், செம்போத்துக்கள், மைனாக்கள் எல்லாம் ஜாலியாச் சண்டை போட்டுக்கும் வேப்பம்பழத்துக்காக! :(

      நீக்கு
    7. //சுமார் 3/4 முழம் பூத் தொடுத்து// மூன்று நான்கு முழங்கள் என்பது முக்கால் முழம் என்னும் பொருளில் வந்து விட்டது. இதைத் தவிரவும் ஓர் சிவப்பு நிற விருட்சி மரமாக வளர்ந்திருந்தது. தேன்சிட்டுக்கள் அந்த மரத்துக்குத் தான் அடிக்கடி வரும். படம் கூட எடுத்துப் போட்ட நினைவு.

      நீக்கு
    8. கீதாக்கா உங்கள் வீட்டு மரங்களையும் பூச்செடிகளையும் வெட்டச்சொன்னவங்க படுபாவிகள். இயற்கையின் அருமை பெருமை தெரியாத ஜென்மங்கள். நீங்க ஏன் வெட்டினீங்க கீதாக்கா....சொல்லிருக்க வேண்டியதுதானே...உங்க வீட்டிலிருந்தும்னு....

      கீதா

      நீக்கு
    9. I can understand the emotional attachment you have in Ambattur house. It has impacted in your life. பரவாயில்லை இப்போ பூலோக வைகுந்தத்தில்.

      நீக்கு
    10. மரம் செடி கொடிகளை அநாவசியமா வெட்டச்சொல்றவனை என்ன சொல்ல?

      நீக்கு
    11. //I can understand the emotional attachment you have in Ambattur house. It has impacted in your life. பரவாயில்லை இப்போ பூலோக வைகுந்தத்தில்.// எங்க பையர் உபநயனம், மாமியார்/மாமனார் கனகாபிஷேஹம், கல்யாணமே ஆகாமல் அப்போவே 27 வயது ஆகிவிட்ட நாத்தனார் பெண்ணின் கல்யாணம், வளைகாப்பு, சீமந்தம், எங்க பெண்ணின் கல்யாணம், பையரின் கல்யாணம், எங்க சஷ்டி அப்தபூர்த்தி என முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் அந்த வீட்டில் நடந்தவை தானே! எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட மனவருத்தங்களைத் தவிர்த்து வந்தவர்கள் அனைவரையும் மகிழ வைத்த வீடு அது!

      நீக்கு
    12. // இது கௌதமன் சாரோட வம்பு தானே?// :)))))))))))

      நீக்கு
  3. ஹி..ஹி.. என்ன மாதிரி பின்னூட்டம் யாரிடமிருந்து வரும் என்று.... ஹி.ஹி.. எங்கள் அம்பத்தூர் பழைய வீட்டில் கூட.. என்று இருந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. இனிய காலைப் பொழுது எல்லாருக்கும் ஆகட்டும்..

    அன்பின் வணக்கங்களுடன்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  இனிய காலைப் பொழுதுதான்.  வாங்க துரை செல்வராஜூ ஸார்..   வணக்கம்.

      நீக்கு
  5. பருத்தி புடவையாய்க் காய்த்தது போல அழகழகாய் கருத்துரைகளோடு இன்றைய பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே.. அதே.. கீதா ரெங்கனும் அழகாகத் தொகுத்திருந்தார்.

      நீக்கு
  6. கலையாய்த் திகழ்வன -
    காய்த்த மரங்களா!..
    கனிந்த
    மரங்களா!..

    பதிலளிநீக்கு
  7. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  8. மரச்சிற்பங்களை படைத்தவர் பெயரை அங்கு கண்டீர்களா? இருந்திருந்தால் பெயரையும் வெளியிட்டிருக்கலாம். சிற்பங்கள் இயக்கையாக உள்ளன. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லால்பாக்கில் மரங்கள் பட்டுப்போனால் சிற்பமாகிறது. பெயர் தெரியாத கலைஞருக்கும் பாராட்டுகள்

      நீக்கு
    2. கலைஞர் பெயர் தெரியாதா உங்களுக்கு?

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய படங்கள், விபரங்கள், அதற்கான கமெண்ட்ஸ்கள் அனைத்தும் அருமை. படங்கள் ஒவ்வொன்றும் வியந்து ரசிக்கும் வகையில் இருக்கின்றன.

    மரத்தில் இந்த மாதிரி சிற்பங்கள் செய்தவரை புகழ வார்த்தைகளே இல்லை. இறுதி படம் அப்படியே இயற்கையாக உள்ளது. கல்லிலே கலை வண்ணம் கண்டு பழகிய நம் கண்களுக்கு விருந்தாக இன்று மரத்திலும் கலை வண்ணம் காண வைத்த சகோதரர் நெல்லைத் தமிழருக்கு மனமார்ந்த நன்றி. பகிர்வுக்கு உங்களுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரத்தில் கலைவண்ணம்.. எபிக்கு நான் சென்ற கோவிலின் சிற்பங்களின் படங்கள் என்ற தலைப்பில் ஞாயிறை ஆக்கிரமிக்கும் எண்ணம் உண்டு, கௌதமன் சார் சுதாரிச்சுக்கலைனா. ஹாஹாஹா

      நீக்கு
    2. காத்திருக்கிறோம். வாசகர்கள் பங்களிப்பிற்கே முதல் இடம்.

      நீக்கு
  11. சில்க் ஸ்மிதா ஷேப்பா? பாட்டில் ஷேப் மரம்னு நெனச்சுட்டாரா இல்லை ரொம்ப அப்பாவியா?

    பதிலளிநீக்கு
  12. நல்ல படங்கள் மனதை கவர்கின்றன. மரச்சிற்பங்கள் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  13. படங்களுடன் கருத்துக்களும் சேர்ந்து அழகாக இருக்கிறது அன்புடன்

    பதிலளிநீக்கு
  14. படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் கருத்துரைகள் நெல்லையோடதா? ஜந்தேகமா இருக்கே!

    பதிலளிநீக்கு
  15. நெல்லை செம படங்கள். ரொம்ப நல்லா வந்திருக்கு. பாராட்டுகள்.

    கூடவே உங்கள் கமென்ட்ஸ் உம் செம

    கீதா

    பதிலளிநீக்கு
  16. லால்பாக் முழுசும் அன்று போகலை மழை என்பதால் அதனால் பல இடங்கள் எடுக்க முடியாமல் போச்சு. ...உங்கள் ரசனையும் எடுத்த இடங்களும் சூப்பர். மரத்தின் மேலே வளரும் மரம்!!! செம

    கீதா

    பதிலளிநீக்கு
  17. சில்க் காட்டன் மரங்கள் அந்த உடைஞ்ச கிளைல ஏற என்ன பயம் தழைவாத்தானே இருக்கு...

    நெல்லை நானும் சில்க் காட்டன் மரங்கள் எடுத்திருக்கிறேன். படங்கள் எல்லாமே

    சிவப்பு வாழைதான் அது

    வடிவங்கள் எல்லாம் செம க்ளிக்ஸ்

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அனைத்து படங்களும் அருமை.
    சிங்கம் மரச்சிற்பத்தில் பறவை, அல்லது அணில் கூடு கட்டி இருக்கிறதே!
    சில்க் காட்டன் மரம் அருமை. .
    பட்ட மரத்தில் ஆலமரம் அனைத்தையும் ரசித்தேன்.
    சிவப்பு வாழை இப்போதுதான் பார்க்கிறேன்.
    நன்றாக படம் எடுத்து இருக்கிறார் நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  19. அனைத்துப் படங்களும், பகிர்வும் அருமை. எங்கள் ப்ளாக் கமெண்ட்ஸ் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!