வீரமணி சோமு எழுதி, வீரமணி ராஜு இசை அமைத்த இந்தப் பாடல்தான் இன்றைய தனிப்பாடல்..
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா
பொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் ஐயப்பா
கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா
வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா
இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா
பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4)
எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா
ஏழை பங்காளனே சரணம் பொன்னய்யப்பா
அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை
பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
======================================================================================================
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படம் வெளியானதா என்று தெரியாது. வருடம் 1978. விஜயகுமார், ராதா சலுஜா நடித்தார்கள் என்கிறது இணையம். வெளியாகாத படம் என்றுதான் நினைவு.
இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்தன. இலங்கை வானொலி உபயத்தில் எல்லாப் பாடல்களையும் ரசித்திருக்கிறேன். வாலியின் பாடல்களுக்கு இசை இளையராஜா.
இன்றைய பாடல் எஸ் பி பாலசுப்ரமணியமும் வாணி ஜெயராமும் பாடி இருக்கும் பாடல்..
இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்தன. இலங்கை வானொலி உபயத்தில் எல்லாப் பாடல்களையும் ரசித்திருக்கிறேன். வாலியின் பாடல்களுக்கு இசை இளையராஜா.
இன்றைய பாடல் எஸ் பி பாலசுப்ரமணியமும் வாணி ஜெயராமும் பாடி இருக்கும் பாடல்..
மருத மஞ்சக் கெழங்கு
என் மேலதான் வாசம் உன் மேலதான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோடுதான் வச்சாள் இந்த பச்சக் கிளி..
மருத மஞ்சக் கெழங்கு
என் மேலதான் வாசம் உன் மேலதான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோடுதான் வச்சாள் இந்த பச்சக் கிளி..
மருத மஞ்சக் கெழங்கே
ஏ..ஏ.ஏ
தானா நானா நானா நானா நானா
தானானா நானா தானா நானா நானா
கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க
கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க
மூடாதே முந்தானைய போட்டு முத்தாடும் வித்தைகளைக் காட்டு
முடியாதய்யா இது படியாதய்யா
ஒரு பூமாலை நீ போட காலநேரம் பாரு
தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க
தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க
தானாக தள்ளாடுது தேகம் தாளத்த விட்டோடுமா ராகம்
விலகாதடி விட்டு பிரியாதடி
இது நேற்றல்ல இன்றல்ல நாளும் வாழும் சொந்தம்
மருத மஞ்சக் கெழங்கு
என் மேலதான் வாசம்
உன் மேலதான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோடுதான்
வச்சாள் இந்த பச்சக் கிளி
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி சார் வாங்க..
நீக்குஅறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை
பதிலளிநீக்குபொறுத்தருள்வாய் உன் பாதக் கமலம் சரணம் ஐயப்பா.
சரணம் ஐயப்பா
நீக்கு
பதிலளிநீக்குபெண்ணைக் கிளியாக உருவகப் படுத்தினாலும் அந்தக் கிளியின் தன்மைகள் பொருந்து கிற மாதிரி வரிகள் இருக்க வேண்டாமா?..
கிளிக்கு இதழ் உண்டா?
வாலிக்குத் தான் வெளிச்சம்.
ஹிஹி...
நீக்குவரிகளை மாற்றிப் பார்க்கலாமா?
கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு மூக்குண்டு
முகம் வருட...
கிளிகள் கொஞ்சிப் பார்த்ததில்லையா? முகத்தை கிளியின் மூக்கு கொண்டு வருடினால்..... அப்புறம் அந்தப் பெண்ணின் முகம் என்னத்துக்காறது? இதையெல்லாம் ஜீவிசார் யோசிப்பதில்லையா?
நீக்குஹலோ பெண்ணை கிளின்னும் வர்ணிப்பதுண்டே!!!! சொடியா கிளி போல பொண்ணு இருக்கான்னு சொல்லுவாங்களே பொண்ணு பார்க்கறப்ப!!!!!
நீக்குகீதா
நெல்லை, யோசிச்சா கவிதை வராது. வார்த்தைகள் தான் வரும். கவிதைங்கறது வெட்டி விட்டுப் போகும் மின்னல். அதுக்குனு ஒரு flow இருக்கு!!
நீக்குபழந்தமிழ் இலக்கியங்களில்
நகக்குறி என்று வரும். முதல் நாளிரவு
காதலன் உடலில் பதித்த நகக்குறியை அடுத்த நாள் காதலி வருடிப் பார்த்து முதல் நாள் நடந்த நிகழ்வெல்லாம் நிவைவுக்கு வர வெட்கம் கொள்வாளாம். கிளிக் கீறலை அப்படி நினைத்துக் கொண்டால் போயிற்று!
அதுவும் தவிர கிளிக் கொத்தல் வேறே. வருடல் வேறே.
நீக்குசெல்லங்கள் நம் மேல் விழுந்து பல் நகம் படாமல் கவ்வி விளையாடிப் பார்த்ததில்லையா, நீங்கள்?
அன்பின் வனக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவாழிய நலம்
வையகம் எங்கும்..
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க..
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை/மதியம் வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். சென்னையைப் புயல் தாக்கலாம் எனச் செய்திகள் சொல்லுகின்றன. மஹாபலிபுரம் அருகே கடக்கும் எனவும் செய்திகள். மக்கள் அனைவரும் பத்திரமாக வீடுகளில் இருந்து புயல், மழையால் அவதிப்படாமல் இருக்க எல்லாம் வல்ல வருண பகவானைப் பிரார்த்திக்கிறேன். வாயுவும் தன் பங்கிற்கு வேகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஇன்று இரவு புறப்பட்டு அடுத்த மூன்று நாட்கள் சென்னையில் திருமண நிகழ்வுக்குச் செல்கிறோம். இடையில் கோவில்கள் தரிசனத் திட்டம் வேறு.. பார்க்கலாம் எப்படிச் செல்கின்றதென்று
நீக்குநெல்லை பார்த்து போய்ட்டு வாங்க...
நீக்குகீதா
கீதாக்கா நீங்க கல்யாணத்துக்கு போய் தங்கின இடத்தில் கரன்ட்இல்லாம முழங்கால் மேல் தண்ணில மேற்கு மாம்பலத்துலருந்து போனீங்களே !! அது நினைவுக்கு வருது
நீக்குகீதா
நல்ல நேரம் பார்த்தீங்க சென்னைப் பயணத்திற்கு. இன்றிரவு புயல் கரையைக் கடக்கப் போகிறது. இங்கே குளிரோ குளிர். காற்று விர் விர்ர்ரென. இங்கேயே இப்படி என்றால் சென்னையில் கேட்கவே வேண்டாம். தரையில் கால் வைக்கவே முடியலை. எப்படியோ நல்லபடியாப் போயிட்டு வாங்க.
நீக்குஆமாம் தி/கீதா! தம்பி பையர் கல்யாணத்துக்குப் போனப்போ 21 நவம்பரில். போதும் போதும்னு ஆயிடுத்தே! இந்த வருஷ நவம்பரில் கல்யாணம்நடந்த சத்திரத்திலேயே தண்ணீர் தேங்கி விட்டது.
நீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம்.
நீக்குபத்திரமாக சென்னை வந்து திரும்புங்கள் நெல்லை.
நீக்குஇன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன் ஐயப்பா
பதிலளிநீக்குபந்தளனின் செல்வனே சரணம் பொன்
ஐயப்பா!..
சாமியே சரணம்..
சாமியே சரணம்..
நீக்குமுதல் பாடல் கேட்காதவங்க இருப்பது அபூர்வம். இரண்டாவது படமும்தெரியாது. பாடலும் தெரியாது. ஆனாலும் வாணி ஜெயராமின் ஆரம்பம் அட்டகாசம். அமுக்கப்படலைனா ரொம்பவே பிரபலமாக ஆகி இருப்பார்.
பதிலளிநீக்குஎஸ் பி பி யும் நன்றாக பாடி இருப்பார்.
நீக்குஇன்னைக்கு புயல் கரையை கடக்கப் போகுதாம்...
பதிலளிநீக்குஎல்லாரையும் காப்பாத்துங்க சாமி!..
சென்னை... விட்டு விட்டு கனமழை
நீக்குசாமியே சரணம் ஐயப்பா
பதிலளிநீக்குமற்ற பாடலும் கேட்டு இருக்கிறேன்...
நன்றி ஜி.
நீக்குமுதல் பாடல் கேட்காதவர்கள் அபூர்வம். இரண்டாவது பாடல் கேட்ட நினைவே இல்லை. இன்னமும் நேற்று துரை செல்வராஜு சார் தளத்தில் கண்ட காணொளி நினைவில் நிழலாடுது.
பதிலளிநீக்குஅந்தக் காணொளி எனக்குக் கிடைத்து ஓராண்டு ஆகின்றது..
நீக்குமுதல் தடவையாக அந்தக் காணொளியை முதல் முறையாக பார்த்தபோது நிலை குலைந்து அழுது விட்டேன்..
அந்த பக்தரின் மன உறுதிக்கு முன் நாமெல்லாம் எம்மாத்திரம்!..
சாமியே சரணம் ஐயப்பா..
கடவுள் பக்தில மிக மிக முக்கியமானது மனது. எவ்வளவு தூரம் ஒன்றுகிறோமோ அவ்வளவு பலன். நானும் போய்விட்டு வந்தேன் என்றெல்லாம் பல கோயில்களுக்கு நான் சென்றதைவிட மனமொன்றிச் சென்ற பயணங்கள்தாம் பலனைத் தரும்.
நீக்குநன்றாக சொன்னீர்கள் நெல்லை.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில், முதல் பாடல் நிறைய தடவை கேட்டுள்ளேன். இரண்டாவதாக இடம் பெற்ற திரைப்படபாடல் இப்போதுதான் கேட்கிறேன். நன்றாக உள்ளது. படத்தின் பெயரும் , இந்தப் பாடலும் இது வரை கேட்டதில்லை. இன்றைய திரைப்படம் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.
இன்றுதான் எழுந்தவுடன் காலையிலேயே பதிவை வாசித்துப் பார்த்தேன். உடனே வந்து "என் பாடலை" பாட தயக்கமாக இருந்ததால், இப்போது சற்று தாமதித்து வந்துள்ளேன். எனக்கு இன்று கொஞ்சம் வலி தாங்கி கொள்ளும்படியாக பரவாயில்லை. ஒரு வாரமாக மிகவும் திண்டாட்டந்தான். இன்று எழுந்து மெள்ள நடமாட முடிந்தது. என்னை காணாமல், என் உடல்நிலைப் பற்றி நீங்கள் அனைவரும் பதிவின் கருத்துரைகளில் கவலைப்பட்டதையும் படித்துப் பார்த்தேன். மிகவும் வருத்தமாக இருந்ததில், அதுதான் இன்று வந்து விட்டேன். என் மீது அக்கறையாகவும் அன்பாகவும் இருக்கும் உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி கூறப் போகிறேன் எனத் தெரியவில்லை.
"கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தையாக இருக்குமென" தன் பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் அந்த ஹரிஹரசுதன் என் உபாதைகளை முழுமையாக குணப்படுத்தி முன்பு போல் இயல்பாக நடக்க விட வேண்டுமென அவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இதுவரை படிக்காமல் விட்டுப் போன எல்லோர் பதிவுகளுக்கும் மெள்ள மெள்ள வருகிறேன். (ஏனென்றால் என்னால் இப்போதுள்ள பிரச்சனையில் மெள்ளத்தான் வலிகளை கடந்து நடந்து வர இயலுகிறது.... :))))) இதுவரை வெளியிட்ட உங்களனைவரின் பதிவுகளை நான் படிக்காமல் தவற விட்டமைக்கு சகோதர, சகோதரிகள் அனைவரும் மன்னிக்கவும். 🙏. அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு..
நீக்குதங்களை இங்கே பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது..
வாழிய நலம்..
கமலாக்கா மெதுவா வாங்க....உங்க உடல் நலனைப் பார்த்துக்கோங்க.....
நீக்குகீதா
//கமலாக்கா மெதுவா வாங்க...// - அவங்களே கால் வலியினால மெதுவாத்தான் நடக்கிறேன் என்று சொல்றாங்க.
நீக்குவிரைவில் எல்லாம் சரியாகி, சிறுகதை போன்ற பின்னூட்டங்களும், நாவல் போன்ற சிறுகதைகளை வெளியிடுவதும் நடக்கணும் கமலா ஹரிஹரன் மேடம். எப்படியெல்லாம் சட் சட்னு உடலுக்கு ஏதேனும் உபாதை வந்துவிடுகிறது. திருக்கார்த்திகை ஆச்சா?
தங்களின் ஆறுதலான கருத்துக்கு நன்றி துரை செல்வராஜ் சகோதரரே
நீக்குஉங்களின் அன்பான கருத்துக்கு நன்றி கீதாரெங்கன் சகோதரி.
நீக்கு/சிறுகதை போன்ற பின்னூட்டங்களும், நாவல் போன்ற சிறுகதைகளை வெளியிடுவதும் நடக்கணும்/
நீக்குஹா ஹா ஹா. உங்களின் இந்த நகைச்சுவை பேச்சுக்கள், என்னை மருந்துகளை விட வேகமாக குணப்படுத்தி விடும் நெல்லைத் தமிழர் சகோதரரே. விரைவில் ஒரு நாவலை (சிறுகதை) உங்களுக்காகவே எழுதி தர இறைவன் என்னை தயார் ஆக்கட்டும்:)))) .
அனேக வலிகளுடன் இறைவனை பணிந்து எழுந்து கூட நமஸ்கரிக்க இயலாது திருக்கார்த்திகை நன்றாக நடந்தேறியது.
நல்வரவு கமலா. உடல் நலனைப் பார்த்துக்கோங்க! அதான் முக்கியம். பதிவுகளுக்கு மெதுவா வந்தால் போதும்.
நீக்குதங்களது அன்புக்கு மிக்க நன்றி கீதா சாம்பசிவம் சகோதரி. வலியும் வேதனையுமாக உடல் ஒத்துழையாமையினால்தான் நான்கைந்து நாட்களாக தொடர்ந்து வலைப்பக்கம் எந்த பதிவுக்கும் வர இயலவில்லை. இன்று சற்று எழுந்து அமர்ந்திருக்க முடிகிறது. தங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி சகோதரி.
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குஇதற்கு போட்ட கருத்துரையை காணவில்லையே..?
வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.
நீக்குமறுபடியும் எழுதியதை நினைவுபடுத்தி போடுகிறேன்.
வலியும் வேதனைகளினால்தான் நான்கைந்து நாட்களாக தொடர்ந்து வலப்பக்கம் அனைவருடைய பதிவுகளுக்கு வர இயலவில்லை. இன்று சற்று வலி குறைந்துள்ளது. எழுந்து அமர்ந்திருக்க முடிகிறது. தங்களது, அன்பிற்கும், ஆறுதலான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... சீக்கிரம் நல்லபடியாக குணமாகட்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.எ உங்களைக் காணோம் என்று தேடினால் கஷ்டமாக இருந்தாலும் வந்து பதில் அழிப்பேர்கள் என்று தெரியும். எனவேதான் குறிப்பிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். அப்படி காலில் என்ன கோளாறு என்று தெரியவில்லை எனினும் சீக்கிரம் சரியாக பிரார்த்தனைகள்.
நீக்குவணக்கம் ஸ்ரீராம் சகோதரரே
நீக்குதங்களது பிரார்த்தனைகளுக்கு என் மனமார்ந்த நன்றி. எனக்கு தீடிரென சுளுக்கு மாதிரி வலியுடன் இடது காலோடு சேர்த்து இடுப்பு பகுதியில் பிடித்துக் கொண்டு கடந்த ஒரு வாரமாக படுக்கைதான் நன்றாக இருந்தது. வீட்டிலேயே நடமாடக் கூட இயலவில்லை. எங்கிருந்து மருத்துவர், மருத்துவமனைக்கெல்லாம் செல்வது? சென்ற ஞாயிறு பதிவிலேயே இதைப்பற்றி குறிப்பிட்டு நடமாட முடியாமல் படுத்திருப்பது கஸ்டமாக உள்ளது எனக் கூறியிருந்தேன். சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் சுளுக்கு குணமாக சில வழிமுறைகளைக் செய்யச் சொன்னார்கள். அதுபடியும் செய்து வந்தேன்.
இதில் மன்னிக்க என்ன இருக்கிறது? தாங்கள் வியாழனன்று கருத்தில் என்னைகுறிப்பட்டு"நான் நலமா.." எனக்கேட்ட உடனே வராததற்கு நான்தான் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். இன்றுதான் காலை வலி சிறிது குறைந்திருந்ததால் பதிவுகளைப் பார்த்தேன். உடனே வந்தேன். உங்களது அன்பான பிரார்த்தனைகள் எனக்கு நல்லபடியாக முழுதும் குணமாக்கட்டும். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை..
பதிலளிநீக்குஇதுதான் வாழ்வின் தத்துவம்..
சாமியே சரணம் ஐயப்பா..
சாமியே சரணம் ஐயப்பா..
நீக்குமுதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் ரசித்த/ரசிக்கும் பாடல்
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் கேட்ட நினைவே இல்லை ஸ்ரீராம்....இல்லை மறந்துவிட்டேனோ?!
கீதா
மறந்திருப்பீர்கள் கீதா... நன்றாயிருக்கும். கேட்டுப்பாருங்கள்.
நீக்குஇன்றைய பாடல்கள் இரண்டுமே நான் கேட்டதில்லை ஏனோ தெரியவில்லை. இப்பொழுதுதான் கேட்டேன்.
பதிலளிநீக்குசரணம் ஐயப்பா பக்தி. இரண்டாவது இனிமை.
நன்றி மாதேவி.
நீக்குஇரண்டவது பாடலை கேட்ட போது, கிராமத்து வயல் பக்கம் நடந்து போவது போல இதமாக இருந்தது...!
பதிலளிநீக்குதங்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள் சகோதரரே. தாங்கள் இருவரும் என்றும் மனநிறைவுடன் ஒன்று போல் பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்
நீக்குஆமாம். அழகான கிராமப்புறப் பாடல் DD. நானும் உங்களுக்கு இங்கும் திருமணநாள் வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன்.
நீக்குநன்றி... நன்றி...
நீக்கு