செவ்வாய், 20 டிசம்பர், 2022

சிறுகதை : கண்ணாத்தா - துரை செல்வராஜூ

                                                                  கண்ணாத்தா

துரை செல்வராஜூ

*** *** *** *** ***
ஒளிமயமான சர விளக்குகள்.. அவற்றில் இருந்து எங்கும் பிரகாசம்..  புற்று முகத்தில் பூ முகம் காட்டி மஞ்சள் குங்குமத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அம்பாள்..

இப்போது தான் சின்னதாக முன் மண்டபமும் நீளமான ஆள் நடையும்.. அதற்கு முன்பு கீற்றுக் கொட்டகை தான்.. அதற்கும் முன் அதுவும் இல்லை.. புன்னை மரம்.. 

அதன் கீழாக புற்று..  அவ்வளவு தான் கோயில்..

மாடு மேய்ச்ச பையன் தான் முதல்ல பார்த்தது..  சின்னப் பொண்ணு ஒண்ணு பூ மாலை எல்லாம் போட்டுக்கிட்டு இந்தப் புற்றுக்குள்ள எறங்கிப் போனதை..

போடா.. கிறுக்குப் பயலே.. ன்னு, ஜனங்க யாரும் இதை நம்பவே இல்லை..

ஆத்தாள் சும்மா இருப்பாளா!..

கண் தெரியாத பையன் மேல வந்து இறங்கினா.. பத்து பேரை அழைச்சுக்கிட்டு வந்து புற்றடியக் காட்டுனா!..  அந்தப் பையனும் கண் திறந்து பூலோகத்தைப் பார்த்து சிரிச்சான்...

பூரிச்சுப் போன ஜனங்க - ராசாவுக்கு சேதி சொல்லி விட்டாங்க.. அவுரு யானை மேல வந்து பார்த்துட்டு சீர் வைச்சு கொடுத்ததும்  நாடு முழுக்க பரவிடுச்சு..

அதற்கு அப்புறம் ஜனங்கள் வர போக..ன்னு ஆகி மூட்டை மூட்டையா நெல்லும் அரிசியும் அம்பாரம் அம்பாரமா இளநியும் தேங்காயும் ..  காணிக்கைன்னு ஜனங்க கொண்டாந்து சேர்த்துட்டாங்க..  பெரிய சந்நியாசி ஒருத்தர் வந்து புற்று மண்ணக் குழைச்சு அம்பாள் ரூபமா செஞ்சு வெச்சார்.


இத்தோட தங்கக் கிரீடம் , நெத்திப் பட்டம், நேத்திரம், செவிப்பூ, முத்து புல்லாக்குன்னு செஞ்சு வைச்சு அம்பாளோட முகத்தை எடுத்துக் காட்டுனதும் ஜனங்க மத்தியில 'அம்மா.. அம்மா..' ன்னு  ஆனந்த கோஷம்... அந்த அம்பாளும் குழந்தை மாதிரி ஓடி வந்து இந்த ஜனங்களோட ஒட்டிக்கிட்டா..

அதுக்கு அப்புறம் ஊர்ப் பெரியவங்க ஒண்ணா கூடி அம்பாள் பேர்ல கோயில் கட்றதுக்கு உத்தரவு கேட்டாங்க..

ராசாவும் ரெண்டு கிராமத்தை மானியமாக் கொடுத்தாரு .. எல்லாருமா சேர்ந்து கோயிலைக் கட்டி கண் கொடுத்த நாச்சியாள்.. ன்னு பேர் வைச்சாங்க..  ஆனாலும் சனங்களுக்கு கண்ணாத்தா தான்!..

அதெல்லாம் ரொம்ப  வருசத்துக்கு முன்னே.. இப்போ நாடு வெள்ளக் காரன் கையில இருக்கு.. கோயிலுக்கு உள்ளே நுழையற வாசல்ல கோட்டும் சூட்டுமா கால் மேல கால் போட்டுக்கிட்டு உக்கார்ந்திருக்கான் துரை.. நாலடி தள்ளி ஜமக்காளம் விரிச்சு கோயில் மணியக்காரரும் கணக்கரும்.. கூடவே நாலு தடியனுங்க.. அம்பாள்கிட்ட இருக்கிற காணிக்கை குடம் நெறைஞ்சதும் தூக்கிக்கிட்டு வந்து துரைக்கிட்ட ஒப்படைக்கிறதுக்குன்னு..  இதனால இவனுங்களோட பேரு குடந்தூக்கி .. ஆனா ஜனங்க சொல்றதோ சொம்பு தூக்கி - அப்படி.. ன்னு..

அன்னைக்கு வெள்ளிக் கிழமை.. ஏராளமான ஜனங்க..  பால்குடம், கரகம், மாவிளக்கு.. ன்னு ஒரே ஆரவாரம்..

கோயிலுக்கு உள்ளே போன சனங்க திரும்பி வந்தபாடு இல்லை.. அம்பாளப் பார்த்த மனசுக்கு வேற என்ன வேணும்?.. பசி மயக்கம் இல்லாம - கிறங்கிக் கெடக்குது சனம்..

இருந்தாலும் கோயிலுக்கு வர்ற சனங்க.. அவங்களும் உள்ளே போய்த் தரிசனம் செய்யத் தானே வேணும்..  முடியலை.. நெரிசல்.. ஆ.. ஊ.. ன்னு சத்தம்.. தொரை கடுப்பாகிட்டான்.. என்னமோ கத்தி விட்டு - " கோ மேன்..  போய்ப் பார்!.. " - என்று குடந்தூக்கி ஒருவனைப் பார்த்து சத்தம் போட்டான்..

அப்போது பிடித்தது அவனுக்கு ஏழரை..

கைப்பிரம்பால் தட்டிக் கொண்டே வந்தவன் காரை மண்டபத்தின் வாசலில் புற்று முகத்தின் முன் நின்று கொண்டு பெரிதாக சத்தம் போட்டான்.. 

" ஐயரே... எதுக்கு இவுங்கள இங்கே நிறுத்தி வெச்சிருக்கீங்க.. விறுவிறு.. ன்னு வெளியே அனுப்புங்க.. அங்கே தொரை கத்துறார் இல்லே!.. "

" இதோ.. ஆச்சு.. இவாள்.. எல்லாம் வெகு தூரத்துல இருந்து வண்டி கட்டிண்டு வந்திருக்கா... கண் குளிர நின்னு பார்த்துட்டுப் போகட்டுமே... அவாள போ.. போ.. ன்னு விரட்டுறது பாவம் இல்லையா?.. "

" ஐயரே.. இங்கே பாவ புண்ணியம் எல்லாம் பார்க்காதீங்க.. காணிக்கை..ய மட்டும் பாருங்க..  உமக்கு நேரம் சரி இல்லே.. ன்னு... நெனைக்கிறேன்.. இல்லேன்னா தொர வார்த்தைக்கு மறு வார்த்தைப் பேசுவீரா?... " 

- என்றபடி காணிக்கைக் குடத்தைக் கையால் அசைத்துப் பார்த்தான்.. அது இன்னும் நெறைய வில்லை..

" சிவ சிவா!.. நா ஒன்னும் தப்பா பேசலையே!.. "

" தெரியும் ஐயரே... நீர் பொம்பளைப் புள்ளைகள ஈரத் துணியோட வரச் சொல்றதும்.. கையில எலுமிச்சம் பழம் தர்றதும்.. நெத்தியில குங்குமம் வச்சி விடறதும்!.. " 

" அபச்சாரம்... அபச்சாரம்... இதுவரைக்கும் அம்பாள் சந்நதி..ல எந்தக் குத்தமும் செஞ்சதில்லயே.. சந்நதி.. ல ஆவேசம் வந்து குழந்தைகள்  ஆடறச்சே விபூதி போடாம வேற என்ன தான் செய்றது?.."

இதற்குள் கூட்டத்திலிருந்து ஒரு குரல்.. 

" யோவ்.. சொம்பு தூக்கி.. இதனால ஒனக்கு என்னா பிரச்னை?.. போவியா அங்கிட்டு!.. "

ஜனங்களிடையே பரபரப்பு..

" யார் என்னா சொல்றது?.. நீங்க அம்பாள வேண்டிக்கிட்டு எம் மகளுக்கு திருநீறு போட்டு விடுங்க சாமீ!.. "

நடுத்தர வயதுடைய பெண் தன் மகளுடன்  முன்னே வந்தாள்..

" ஆட்டு மந்தை சனங்களுக்கு இவ்வளவு ஆங்காரமாப் போச்சா!.. " - என்று கொக்கரித்த குடந்தூக்கி,

" இந்த மாதிரி குளிச்ச ஈரத்தோட நனைஞ்ச சேலயோட பொண்ணுங்க வந்தா ஐயரு ஏன் நிறுத்தி வைக்க மாட்டார்!?.. "  - வக்கரித்தான்...

" டேய்.. என்னடா சொன்னே!.. "

முன்னால் நின்றிருந்த இளம் பெண் ஆவேசமானாள்..  விழிகளில் தீப்பொறி பறந்தது...  நீதி கேட்க அம்பாள் வந்து விட்டாள் என்று எல்லாரும் பரவசமான நேரத்தில் தாம்பாளத்தில் இருந்த தேங்காயை எடுத்து அந்த முரடனின் மண்டையில் அடித்தாள்.. உடைத்தாள்.. மலையேறி விட்டாள்...
முன் மண்டபம் எங்கும்  சிவப்பாகி விட்டது..

நடந்ததைப் பார்த்த  துரைக்கு கடுங்கோபம்.. பெரிய கோர்ட் வரைக்கும் போனான்... ஆனால் உள்ளூர் பஞ்சாயத்தார்களும் கண்ணால் கண்ட சாட்சிகளும் பலமாக இருந்ததால் தள்ளுபடியாகி விட்டது பிராது..

அது நடந்த வருசம் 1800..  
-------   -------    ------- 
இன்றைக்கு 1950..

அன்றைக்கு தாத்தாவின் தாத்தாவுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவம் இன்றைக்கு  மீண்டும் நடந்திருப்பதை நினைத்துக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தார் சுப்பு குருக்கள்..

அதே மாதிரி அச்சு அசலா இன்றைக்கு காலையில் நடந்ததுதான் அவருக்கு ஆச்சர்யம்..

சந்நிதி மத்தியில கம்பித் தடுப்பு.. அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆணும் பெண்ணும்.. நடுவால பத்தடி தூரத்துக்கு நடந்து நடந்து கற்பூரம் கொடுப்பார்..

புதுச் சேலை, எலுமிச்ச மாலை, ரோஜா மாலை, கதம்ப சரம்.. ன்னு யார் கொடுத்தாலும் அவங்க கண்ணு முன்னாலயே அம்பாளுக்கு சாத்தி கற்பூர தரிசனம் காட்டி கையில திருநீறு கொடுப்பார்..

கற்பூரத் தட்டுல நாலணா போட்டாலும் சரி.. ஒரு ரூபா துட்டு வைச்சாலும் சரி.. எல்லாருக்கும் அன்பு தான்.. எல்லாருக்கும் மரியாதை தான் .. அந்த குணம் வாழையடி வாழையா  வர்றது..

இதுக்கு சோதனையா வந்து சேர்ந்தான் கங்காணி.. தர்மகர்த்தாவோட ஆளு.. எல்லாம் சரியா நடக்குதா..ன்னு கண்காணிக்கிறதுதான் அவன் வேலை.. பெரிய எடத்து சிபாரிசு.. அதனால சத்தமும் ஜாஸ்தி..

" குருக்களே.. ஒவ்வொரு மாலைக்கும் பூவுக்கும் நடையா நடந்து நேரத்தை வீணாக்காதீங்க... ஒரு எடத்துல நின்னு மாலை எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டு விபூதி கொடுத்து ஜனங்கள வெளியே அனுப்புங்க.. கூட்டம் கூட்டாதீங்க.. மாலை எல்லாம் அப்புறமா போட்டுக்கலாம்.."

" ஐயா.. கொண்டு வர்ற மாலைய அம்பாளுக்கு சாத்துறத கண்ணால பார்த்தா தானுங்களே மனசுக்கு நிம்மதி.. " - கூட்டத்தினுள் இருந்து ஒரு குரல்..
" உங்க மாலையத் தூக்கிக்கிட்டு ஓடிட மாட்டோம்... அவ்வளவு வக்கணை.. ன்னா கூட்டம் இல்லாத கோயிலுக்குப் போயிருக்கணும்!.. " 

கங்காணியிடம் எகத்தாளம்..

" குருக்களே.. கறாரா சொல்லிட்டேன்.. இன்னும் ஒரு நாழி.. ல கூட்டம் கலையணும்.. இல்லேன்னா தர்மகர்த்தா ஐயாக்கிட்ட சொல்லி உங்க சீட்டைக் கிழிச்சிடுவேன்.."

கடூரமாக இருந்தது அவன் குரல்..

அம்பாளைத் தேடி வர்றவங்களை என்ன சொல்லி நிறுத்துறது?..

உச்சிக் காலம் முடிந்து நடை அடைப்பதற்கு நேரமாகி விட்டது.. சொன்னபடிக்கு எதுவும் நடக்காததால் அங்கே உறுமிக் கொண்டிருந்தான் கங்காணி..

சாயங்காலப் பொழுது எப்படி போகப் போகின்றதோ என்ற நினைப்புடன் வீட்டுக்கு வந்து பேருக்கு ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு  திண்ணையில் உட்கார்ந்தவர் தான்..

மனசு இன்னும் ஆறாத நிலையில் பசுபதியைக் கண்டதும் சுதாரித்துக் கொண்டார்.. சந்நிதியில் சுப்பு குருக்களுக்கு ஒத்தாசையாக இருப்பவன் பசுபதி..

" அண்ணா..  சேதி தெரியுமோ!.. "

" என்னடா அது?.."

" காலைல உங்ககிட்டே வந்து கரைச்சல் பண்ணினானே கங்காணி..  அவன போலீஸ் காரங்க வந்து பிடிச்சுக்கிட்டுப் போய்ட்டாங்க!... "

" ஏண்டா?.. " - சுப்பு குருக்களுக்கு ஆச்சர்யம்..

" அவன் ரொம்பவும் மோசமான பேர்வழியாம்.. ஆசை காட்டி மோசம் பண்ணியிருக்கான்..ஊர் பஞ்சாயத்தார் சாட்சியோட முன்சீப் கோர்ட்டுக்குப் போய் எல்லாத்தையும் எழுதிக் கொடுத்துட்டாளாம்.. போலீஸ் ஜீப்புல வந்து அவன அள்ளிக்கிட்டுப் போய்ட்டா.. இன்னும் பத்து வருசத்துக்கு ஜெயில் சாப்பாடு தானாம்!.. "

" மகமாயி!.. "

" பிறத்தியார் பேச்சைக் கேட்டு அவனுக்கு வேலை போட்டுக் கொடுத்ததால என் பேர் கெட்டுப் போய்ட்டதே.. ன்னு தர்மகர்த்தா தலையில அடிச்சுக்கறார்.. "

"  கௌரீ.. அந்தத் திறவு கோலை எடுத்துண்டு வா!.. "

" ஏன்னா.. சாயரட்சைக்குத் தான் இன்னும் நாழி இருக்கறதே!.. "

" தெப்பக்குளத்துல மூழ்கிட்டு அப்படியே ஈரத்தோட அம்பாள தரிசனம் செய்யணும்..டி!.. "

" அண்ணா பார்த்தேளா.. உங்க சீட்டைக் கிழிச்சிடுவேன்.. னான்!. அவன் சீட்டே  டர்.. ன்னு கிழிஞ்சு போய்டுத்து!.. "

பசுபதி சிரித்துக் கொண்டே சொன்னான்..

"  அம்பா கண்ணத் தொறந்துட்டாள் அண்ணா!.."

" அம்பாள் என்னைக்கு.. டா கண்ணை மூடிண்டு இருந்தாள்?.. "

***

58 கருத்துகள்:

  1. கதை வரலாற்றை உள்ளடக்கி அழகாக அமைந்துள்ளது. நெல்லை நெருங்கப்போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை நோக்கிப் பயணமா நெல்லை?

      நீக்கு
    2. நெல்லை சகோதரர் எந்த நாளில் எங்கிருக்கிறார் என அறிந்து கொள்ள முடியாத ஒரு புதிராக உள்ளாரே...! உ. சு. வா மாதிரி. ஹா ஹா ஹா

      நீக்கு
    3. மனைவியும் நானும், முன்னோர் கிராமத்துக்கும், நான் வளர்ந்த கிராமத்துக்கும், கோவில் தரிசனங்களுக்கான பிரயாணம். 2 1/2 நாட்கள் திருநெல்வேலியில்

      நீக்கு
    4. ஆஹா.. நல்ல பிரயாணம். நெல்லையப்பரையும், அன்னை காந்திமதியையும் நன்கு தரிசித்து வாருங்கள். எங்களுக்காகவும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். 🙏.

      நீக்கு
    5. நெல்லைக்கே நெல்லையா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  2. இப்போது அனேகமா எல்லாக் கோவில்களிலும் நெருக்கடிதான்

    பணவரவு மாத்திரமே பிரதானம்

    பதிலளிநீக்கு
  3. திருநள்ளாறு நன்றாக நிர்வகிக்கப்படுவது போலத் தோன்றியது

    பதிலளிநீக்கு
  4. கீதா சாம்பசிவம் மேடம் சில நாட்களாகக் காணவில்லையே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே..   நேற்று கூட வந்திருந்தாரே...

      நீக்கு
    2. அவர் எப்போ வருவார்னு தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா ... வரமாட்டார் ஹிஹி

      நீக்கு
    3. உங்களுக்குத் தான் செய்தி அனுப்பி இருந்தேனே நெல்லை! அதுக்குள்ளே தி/கீதாவை வேறே பயமுறுத்தி இருக்கீங்க. அவங்க வேறே வந்து என்ன ஆச்சுனு புலம்பல்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோடது வழக்கமான புலம்பல். வேலை செய்யும் பெண்மணி மொத்தமாகச் சொல்லிக்காமல் நின்னுட்டார். ஐந்து நாட்களாகக் காலை வேளையில் உட்கார நேரமில்லை. முன்னெல்லாம் நானே செய்து கொண்டு இருந்தப்போக் கூட இவ்வளவு மோசமா இல்லை. நடுவில் ஐந்து வருஷம் வேலைக்கு ஆளை வைச்சதில் உடம்பு சொகுசு கண்டு போச்சுப் போல! :))))

      நீக்கு
    4. உங்களுக்குத் தான் செய்தி அனுப்பி இருந்தேனே நெல்லை! அதுக்குள்ளே தி/கீதாவை வேறே பயமுறுத்தி இருக்கீங்க. அவங்க வேறே வந்து என்ன ஆச்சுனு புலம்பல்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோடது வழக்கமான புலம்பல். வேலை செய்யும் பெண்மணி மொத்தமாகச் சொல்லிக்காமல் நின்னுட்டார். ஐந்து நாட்களாகக் காலை வேளையில் உட்கார நேரமில்லை. முன்னெல்லாம் நானே செய்து கொண்டு இருந்தப்போக் கூட இவ்வளவு மோசமா இல்லை. நடுவில் ஐந்து வருஷம் வேலைக்கு ஆளை வைச்சதில் உடம்பு சொகுசு கண்டு போச்சுப் போல! :))))

      நீக்கு
    5. ஆமாம் கீதாக்கா உங்க மெசேஜ் பார்த்ததுக்கப்புறம்தான் மனம் சமாதானம்....முதலில் நிஜமாவே பயந்துவிட்டேன்

      கீதா

      நீக்கு
    6. அக்கா இந்த நெல்லை என்னிக்குத்தான் மெசேஜ் எல்லாம் ஒழுங்கா வாசிச்சிருக்கார்?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    7. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

      வேலை செய்யும் பெண் வரவில்லை என்றால் சிரமம்தான். எல்லா வேலைகளையும் ஒரு நாளைப்போல நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய கஸ்டமாக இருக்கும். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். வேறே யாரையாவது அக்கம்பக்கம் இருப்பவர்களை கேட்டு அவர்கள் வீட்டில் உதவுவர்களை நீங்களும் உதவிக்கு அழைத்து கொள்ளலாமே ..!

      அப்போ வரும் திங்கள் உங்கள் வாய்தாதானா..?

      சகோதரர் நெல்லைத்தமிழர் வரும் வருடம் முதல் வாரத்தில் ஒன்றும், இரண்டும், அவருக்கே உரித்தானது என்றல்லவா அவரின் பட்சி ஜோதிடம் கூறியுள்ளது. :)))

      என் பதிவுக்கு நீங்கள் வந்து கருத்துரை கூறியிருப்பதற்கு மிக்க நன்றி.நான்தான் இன்னமும் யாருக்கும் பதில் தர இயலவில்லை. அதற்காக அனைவரும் மன்னிக்கவும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. இன்று
    மறுபடியும் ஒரு வாய்ப்பாக
    எனது ஆக்கத்தினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    சித்திரங்களால்
    அழகுக்கு அழகு சேர்த்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கதை. இன்றளவும் கோயில்களில் நடப்பது இது தானே! உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லி இருக்கீங்க! உண்மையில் அம்பிகை என்னிக்குக் கண்ணை மூடினாள்? அதுவும் சரிதான். கௌதமன் அவர்களின் படமும் நன்றாக உள்ளது. பொருத்தமான படம்.

      நீக்கு
    2. // அருமையான கதை. இன்றளவும் கோயில்களில் நடப்பது இது தானே! உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லி இருக்கீங்க!.. //

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றியக்கா..

      நீக்கு
  6. இன்று கதைக்களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  7. அன்பின் நெல்லை அவர்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. 2023 ன் முதல் சிறுகதை யாருடையதோ..

    யாருக்கு என்று அமையவிருக்கின்றதோ முதல் செவ்வாய்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாயிறும் திங்களும் (1,2) நெல்லைக் தமிழனுக்கு என்று பட்சி சொல்லுது..ஹாஹாஹா (எப்படீல்லாம் துண்டு போடறாங்க ப்பா)

      நீக்கு
    2. உண்மை விளம்பிக்கு வணக்கங்கள். :)))

      நீக்கு
    3. என்னாது? 26 டிசம்பர்த் திங்கள் நெல்லைக்கா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம், இணையக் கோர்ட்டுக்குப் போவேனாக்கும்.

      நீக்கு
    4. டிசம்பரையா நெல்லை சொல்கிறார்?

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலக்கங்களும்.. வார்த்தைக்கு அக்கப்போர் ஆரம்பிக்கலாமான்னு பார்த்தேன்.. இப்படியே போயிட்டிருந்தால், அனைவருக்கும் என்ற வார்த்தையோடு நிறுத்திவிடுவாரேன்னு யோசிக்கிறேன்

      நீக்கு
    2. ஹா ஹா ஹா. கலக்கங்கள் பிறந்ததே ஒரு கலக்கத்தினால்தான்.
      அடுத்து பிரார்த்திப்பது என்ற வார்த்தை குறித்த விவாதமாக இருக்குமென நினைக்கிறேன். :))

      நீக்கு
  11. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    கதை அருமையாக உள்ளது. அந்த காலத்து அடக்கு முறைகளையும், இந்த காலத்தையும் ஒப்பிட்டு காட்டியது சிறப்பு. காலங்கள் மாறினாலும் உண்மை, நியாயத்திற்கு என்றுமே மதிப்பு உள்ளது... அதை சமயம் வரும் போது நிரூபிக்காமல் விடமாட்டேன் என்பதை அன்னை அனைவருக்கும் உணர வைத்து விட்டாள்.

    /அம்பா கண்ணத் தொறந்துட்டாள் அண்ணா!.."

    " அம்பாள் என்னைக்கு.. டா கண்ணை மூடிண்டு இருந்தாள்?.. "/

    இறுதி வரிகள் மெய்சிலிர்த்து விட்டேன். ஆம்.. அவள் நம் தாய் அல்லவா? தாய் தன் குழந்தைகளின் வேதனையை எத்தனை நாட்கள் பார்த்துக் கொண்டிருப்பாள்? . கதை மனதுக்கு நிறைவாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சமயம் வரும் போது நிரூபிக்காமல் விடமாட்டேன் என்பதை அன்னை அனைவருக்கும் உணர வைத்து விட்டாள்.. //

      அதுதான் உண்மை..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  12. வணக்கம் கௌதமன் சகோதரரே

    கதைக்கு பொருத்தமாக தாங்கள் வரைந்த ஓவியம் மிக அழகாகவும், தத்ரூபமாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. இப்போது தான் மின்னஞ்சலைக் கவனித்தேன்.. இந்தக் கதையை அனுப்பி வைத்த நாள் 19 ஏப்ரல் 2022..

    தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் வெளியாக வேண்டும் என்று விரும்பியதால் இந்தக் கதைக்கு 2023 ஏப்ரல் 11 தேதியைத் தாருங்களேன் என்று ஸ்ரீராம் அவர்களிடம் கேட்க அவரும் சம்மதித்து அந்தத் தேதியை வழங்கியிருந்தார்..

    இப்போது இந்தக் கதை எப்படி வெளியாயிற்று?..

    அப்படியானால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் - மாதங்களுக்கான கதைகள்?..

    ஷெட்யூல் குழம்பி விட்டது..

    பதிலளிநீக்கு
  14. இன்றைய அர்ச்சகர்களின் நிலைப்பாடும் இதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  15. கதை அருமையாக செல்கிறது.
    'அம்பாள் என்னக்கடா கண்ணை மூடிட்டு இருந்தா'... இறுதி வரிகள் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் தங்கள் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  16. கதை நல்லாருக்கு துரை அண்ணா.

    பழைய காலகட்டம், 1950 என்று இரு கட்டம் சொன்னாலும் இப்போதைய காலகட்டத்துக்கும் பொருந்தும். கோயில் வியாபாரம் ஆன விஷயம்.

    ஆனா இப்பல்லாம் இப்படித் தண்டனை கிடைக்குதா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்பல்லாம் இப்படித் தண்டனை கிடைக்குதா?..//

      கிடைக்கின்றதே..
      யாரும் வெளியே சொல்லிக் கொள்வதில்லை..

      அன்பின் வருகையும் தங்கள் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
  17. இந்த அம்பாள் எந்த ஊர்ல இருக்கா.. ன்னு யாருமே கேட்கலையே!..

    பதிலளிநீக்கு
  18. இந்த அம்பாள் எந்த ஊர்ல இருக்கா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். விபரம் தெரிவியுங்கள் துரைசெல்வராஜ் சகோதரரே.

      நீக்கு
  19. உங்கள் சிறுகதைகளை
    இன்னும் விரிவாக எழுத ஏனோ நீங்கள் முயற்சிப்பதில்லை. சட்டு புட்டுனு கதையை முடித்துக் கொள்வதிலும் அவசரப்படுதல் தெரிகிறது. வரும் ஆண்டிலாவது சற்று நீண்ட கதைகளை படைப்பதில் முயற்சி கொள்ள வேண்டுகிறேன், தம்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சிக்கின்றேன் அண்ணா...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..

      நீக்கு
  20. //பெரிய சந்நியாசி ஒருத்தர் வந்து புற்று மண்ணக் குழைச்சு அம்பாள் ரூபமா செஞ்சு வெச்சார்..//

    இந்த வரியிலாவது உஷார் ஆகியிருக்கலாம்..

    // புன்னை மரம்.. 
    அதன் கீழாக புற்று..  அவ்வளவு தான் கோயில்.. //

    புன்னை மரத்தின் கீழாக புற்று..

    ஆகா!.. என்று இந்த வரியையாவது பிடித்திருக்கலாம்..

    புன்னை மரத்தின் கீழாக புற்று!..

    புற்று மண்ணைக் குழைத்து வடிவமைத்த சந்நியாசி - மகான் சதாசிவ ப்ரம்மேந்திரர்..

    வேறு யார்?..
    நம்ம அம்மா -

    புன்னைநல்லூர் மகமாயி தான்!..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!