ஞாயிறு, 3 மார்ச், 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 09 : நெல்லைத்தமிழன்

 

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 09

மூலத் துவாரகையிலிருந்து புறப்பட்டு 9 மணி வாக்கில் சுதாமாபுரியை அடைந்தோம். அங்கு குசேலருக்கான கோவில் இருக்கிறது. இதுதான் குசேலர் பிறந்த/வாழ்ந்த இடம் என்று சொல்கின்றனர். அங்கு பெரிய வளாகம் இருக்கிறது. மூலத் துவாரகையை 5 ½ மணிக்குள்ளேயே அடைந்துவிட்டால், சுதாமாபுரியில் 8 ½ மணிக்கு பாலபோகம் கொடுப்பார்கள். மூலத்துவாரகையை அடைவதற்கே 7 ½ மணி ஆகிவிட்டால், அங்கேயே தரிசனத்திற்குப் பிறகு பாலபோகம் சாப்பிட்டுவிடுவோம். கோமதி துவாரகையிலிருந்து புறப்படுவது சில நேரங்களில் தாமதமாகிவிடும் (பால் கிடைக்க நேரமாவது போன்று).

குசேலர் (சுதாமா), சுதாமாபுரி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட போர்பந்தரில் வாழ்ந்தவர். ஸ்ரீகிருஷ்ணரின் பால்ய நண்பர். 12-13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய கோவில் இருந்த இடத்தில், அவருக்காக 1900களில் கட்டப்பட்ட பெரிய கோவில்தான் இது.   

குசேலர் கோவில் அமைந்திருக்கும் வளாகத்தின் நுழைவாயில். 

அழகிய குசேலர் கோவில். 

அழகிய தூண்களுடன் கூடிய மண்டபம். கிருஷ்ணர், குசேலருக்கு பாதபூஜை செய்ததை நினைவுபடுத்தும் ஓவியம். 

குசேலர் வாழ்ந்த இடத்தில் அவரது சன்னிதி 




மரங்களுடன் கூடிய அழகிய வளாகம்


போர்பந்தருக்கு வந்துவிட்டு தேசப்பிதா மஹாத்மா காந்தி பிறந்த வீட்டிற்குச் செல்லாமல் இருப்பதா? சுதாமா வளாகத்திலிருந்து கிளம்பி, மிக அருகில் இருந்த காந்தியின் வீட்டிற்கு ஷேர் ஆட்டோவில் சென்றோம். சாதாரண, வியாபாரக் குடும்பத்தில் குஜராத்தில் பிறந்த காந்தி, இந்திய தேசத்தின் விடுதலையில் முக்கியப் பங்காற்றி பிற்காலத்தில் தேசப்பிதா என்ற பெயர் பெறுவார் என்பது யாருக்குத் தெரிந்திருக்கும்?


கோட்டையைப் போன்ற தோற்றமுள்ள இந்த இடத்தில்தான் ஆட்டோ எங்களை இறக்கிவிட்ட து. அங்கிருந்து பொடி நடையாக காந்தி பிறந்த இட த்திற்குச் சென்றோம். இந்தக் கோட்டை போன்ற இட த்தின் முக்கியத்துவம் தெரியவில்லை.

காந்தி பிறந்த வீடு இருக்கும் தெரு. 

காந்தி பிறந்த வீட்டின் அருகில் இருந்த இட த்தையும் அரசு வாங்கி அங்கு கீர்த்தி மந்திர் என்ற பெயரில் காந்தியைப் பற்றிய நினைவுப் படங்கள், ஓவியங்களை வைத்திருக்கிறார்கள். வளாகத்தின் இடது பக்கத்தில்தான் காந்தி பிறந்த வீட்டின் நுழைவாயில் இருக்கிறது.


இந்த அறையில்தான் 1869ல் காந்தியை புத்தலிபாய் பெற்றார் என்று எழுதியிருந்தது. நினைவுக்காக அங்கு நான் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.


ஸ்வஸ்திகா வரைந்திருக்கும் இடத்தில்தான் காந்தியைப் பெற்றெடுத்தாராம்.

காந்தியின் வீடு ஓரளவு வசதியானவருடைய வீடுபோல் காட்சியளித்தது. பழங்கால வீடு போல, சிறிய ஒடுங்கிய மாடிப்படிகள், மாடியில் ஓரிரண்டு அறைகள் என்று ஒரு கிராமத்து வீட்டை, ஆனால் அழகிய வீட்டை நினைவுபடுத்தியது.

மாடிக்குச் செல்லும் படிகள். மாடியில் உள்ள அறை.

அறையில் இருந்த அழகிய சன்னல்கள். 

முதல் மாடியிலிருந்து கீர்த்தி மந்திரின் வளாகம். 



காந்தி, கஸ்தூரி பாய் இருவருக்குமான நினைவு மண்டபம். அந்தக் காலகட்டத்தில் இருந்த வீட்டுப் பொருட்கள். 

காந்தியின் வீட்டையும் வளாகத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.  பிறகு அங்கிருந்து கிளம்பி, மீண்டும் ஷேர் ஆட்டோவில் பயணித்து பேருந்து இருந்த இட த்திற்கு வந்து சேர்ந்தோம்.  சுமார் 2 ½  மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு சோம்நாத் வந்து சேர்ந்தோம்.

அங்கு என்ன என்ன இடங்களைப் பார்த்தோம் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

( தொடரும்) 

45 கருத்துகள்:

  1. ஓ.. போர்பந்தர் தான் சுதாமபுரியா?

    குசேலர் கோயிலும் அதன் தொடர்பான படங்களும் காணக்கிடைக்காத காட்சி. சிறு வயதிலிருந்தே குசேலர் மீது எனக்கு அளப்பரிய ப்ரேமை உண்டு. அது இப்பொழுது பக்தியாகக் கனிந்திருக்கிறது.

    வளாகத்தின் நுழைவாயில் தாண்டி.. அழகான சோலைக்குள் நுழைவது போல இருக்கிறது. மற்ற படங்களும் நேரில் பார்த்த உணர்வைத் தோற்றுவித்தன. உங்களுக்கு மிக்க நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுதாமாபுரி தான் போர்பந்தர். போர்பந்தரில்தான் ச்யமந்தகமணிக்காக கிருஷ்ணர் போரிட்ட இடம் தரைமட்டத்துக்குக் கீழே குகை வடிவில் இருக்கிறது. நாங்கள் அங்கு செல்லவில்லை. பாரதம் முழுதுமே வரலாற்றுச் சிறப்புடைய (இதிகாச புராணங்கள்) இடங்கள் நிறைய இருக்கின்றன

      நீக்கு
  2. யாருக்கெல்லாமோ ஜி போடுகிறோம். காந்திஜி, மஹாத்மா என்று சொல்லியே பழகிய உச்சரிப்பு உன்மத்தம்.
    வாசிக்கும் பொழுது தன்னாலே அனிச்சையாகத் தொடர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயல்பாகவே நம் மனதில் காந்திஜி, நேருஜி, நேதாஜி என்றே தோன்றும்.

      நீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. காந்திஜி வீட்டை இது வரை யாரும் படம் எடுத்துப் போட்டு நான் பார்த்ததில்லை. அந்தப் புண்ணியம் உங்களால் கிடைத்தது. நெஞ்சு கனிந்த நன்றி,.நெல்லை.
    அந்த வீட்டில் நீங்களும் வேஷ்டி-- சட்டையுடம் நிற்கும் புகைப்படம் மனத்திற்கு மிகவும் நெருக்கமாயிற்று. அந்த வீட்டின் சுற்றுப்புரம், குறுகிய சந்துகள் எல்லாமே தத்ரூபம்.

    குசேலர் கோயிலை, காந்திஜி பிறந்த வீட்டை என்று அரிய புகைப்படங்களை வீட்டில் எல்லோரும் பார்த்து மகிழ்ந்தார்கள்.

    இதெல்லாம் நெடு நாட்கள் நினைவில் நிற்கும். நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பாக இங்கு அமெரிக்காவில் என் பேத்திக்கு காட்டி மகிழ்ந்தேன். அவளானால் சிறு வயதில் தான் வாசித்த குசேலர் கதையை தமிழில் எனக்கு சொல்கிறாள்.
      அழகான கலர்க்கலர் படங்கள் போட்ட Krishna Leela என்ற புத்தகத்தையும் தன் சேமிப்பு அலமாரியிலிருந்து எடுத்துக் காட்டினாள்.
      நம் புராணக்கதைகளும்,
      கடவுள் பக்தியும்
      தொடர்ந்து நம் குடும்பங்களில் வாழ்ந்து கொண்டே
      தான் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

      நீக்கு
    2. //  சிறு வயதில் தான் வாசித்த குசேலர் கதையை தமிழில் எனக்கு சொல்கிறாள்.அழகான கலர்க்கலர் படங்கள் போட்ட Krishna Leela என்ற புத்தகத்தையும் தன் சேமிப்பு அலமாரியிலிருந்து எடுத்துக் காட்டினாள். //

      படிக்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது,.

      நீக்கு
    3. ஜீவி சார்... காந்திஜி பிறந்த வீட்டை நான் மூன்றுமுறை பார்த்திருக்கிறேன். பலருக்கு ஆர்வம் இருக்காதோ, மாற்று அரசியல் கருத்துகள் வந்துவிடுமோ என்ற தயக்கத்தில் நிறைய படங்களையும் விவரங்களையும் விட்டுவிட்டேன். இதுபோல நேருவின் பரம்பரை வீடான ஆனந்தபவனுக்கைம் சென்றிருக்கிறேன் (அலஹாபாத்) அது இன்னொரு யாத்திரைத் தொடரில் வரும். நான் நேசித்த இந்திராகாந்தி வீட்டிற்கும் போய் படங்கள் எடுத்திருக்கிறேன்.

      நீக்கு
    4. வீட்டில், இந்தப் படங்களைப் பார்த்தார்கள் என்பதும், பேத்தி அவற்றை நினைவுகூர்ந்து புத்தகத்தைக் காட்டினாள் என்பதும் மனதை நெகிழ்த்திற்று. நம் இதிஹாச புராண வரலாறுகள் நம்மைச் செம்மைப்படுத்தும், அடுத்த தலைமுறைக்கு அதனைக் கடத்துவது நம் கடமை என்பதும் புரிந்தது ஜீவி சார்

      நீக்கு
  5. காந்தி பிறந்த வீட்டிற்கு சென்று வந்த அனுபவமும் படங்களும் நன்றாக உள்ளன. பராமரிப்பு தேவை என்றாலும் பழையவற்றை மாற்றாமல் போற்றி பாதுகாப்பது பாராட்டுக்குரியது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். மிக நன்றாகப் பராமரிக்கிறார்கள். அந்த இடங்களுக்குச் செல்லும்போது, இவ்வளவு பெரிய தலைவர் வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததே என்று தோன்றும். காந்தியாக நான் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். பதிவிடுகிறேன்.

      நீக்கு
  6. சுதாமாபுரி கண்டு வணங்கினோம்.

    காந்திஜி வீடு பல படங்களுடன் கண்டோம். பராமரிப்பது அறிந்து மகிழ்கிறோம்.
    நினைவு மண்டபம் அழகாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி.... இந்த உலகில் பணத்தினால் (அளவுக்கு மீறிய) உபயோகம் இல்லை என்பதையும் குசேலரின் வாழ்வு நமக்குச் சொல்லும். பஞ்சப் பராரியாக bபேட் துவாரகையில் அரசனாக இருக்கும் நண்பன் கிருஷ்ணரைச் சந்தித்த அவர், வீட்டுக்குத் திரும்பியதும் தன் மாளிகையே தங்கமயமாகியிருப்பதையும் அளவற்ற செல்வம் குவிந்திருப்பதையும் கண்டார்.

      நீக்கு
  7. குசேலர் கோவிலுடன் காந்தி பிறந்த வீட்டையும் இடத்தையும் படங்களோடும் விளக்கங்களோடும் பகிர்ந்து கொண்டது மிக அருமை.

    எங்களுக்கும் பார்க்கக் கிடைத்தது. மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. குசேலருக்கு கோயில் இப்போதுதான் கேள்விப்படுகிறேன் நெல்லை. சுதாமாபுரிதான் போர்பந்தர் என்பதும் தகவல்.

    குசேலர் கோயில் மிக அழகு. குறிப்பாகக் அந்தத் தூண்களுடன் மண்டபம் நீங்க எடுத்திருக்கும் கோணமும் சூப்பர்.

    வளாகமே மிக அழகாக இருக்கு. மண்டபத் தூண்களின் கலை வடிவம் மிக அழகு. கவர்கின்றது,

    ஒரு விளையாட்டுப் பகுதி maze puzzle போன்று இருக்கிறதே! அதன் அருகில் இருப்பது தங்கும் விடுதியா இல்லை கல்யாணமண்டபமா? நல்ல பெரிசா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வளாகமே நூற்றாண்டுகளுக்குள்தான் கட்டப்பட்ட து. பழைய சுதாமாபுரியின் எந்த இடத்தில் குசேலர் வசித்தார் என்பது காலவோட்டத்தில் மறக்கப்பட்டிருக்கும், அல்லது மிகச் சிறிய கோவிலாக இருந்திருக்கலாம் (திருவண்பரிசாரம் நம்மாழ்வார் அன்னை இல்லம் போன்று)

      நீக்கு
  9. கோட்டை போன்ற அந்த இடம் படம் செம. அருகில் ஒரு பாதையோர வியாபாரி! என்ன விற்கிறார்? தானியங்கள், தோ உலர்பழம் போன்று அல்லது புளியா?

    காந்தி பிறந்த வீடு இருக்கும் தெருவில் ஒரு பண்ணை-பிரபுக்கள் வீடு போல இருக்கிறதே. அதுவுமே ரொம்ப அழகாக இருக்கிறது. அப்பகுதியே கோவில் போன்ற தோற்றங்களுடன் வீடுகளா இல்லை கோயில்களேவா அல்லது பணக்கார வீடுகளா?! அழகா இருக்கு எல்லாமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்வேறு விதமான பொருட்கள் விற்பனை... பெருங்காயம் உட்பட.

      காந்தியின் நாட்களில் அவை வியாபாரிகளின் வீடுகளாக இருந்திருக்கும். காந்தியின் புகழுக்குப் பிறகு வீடுகள் புதுப் பொலிவு பெற்றிருக்கும் கீதா ரங்கன் (க்கா)

      நீக்கு
  10. ஓ அது கீர்த்தி மந்திரா!!!

    நுழைவு வாயில் முன் நீங்க!!!

    அந்த கீர்த்தி மந்திரின் முற்றம் ஆஹா!!! எனக்கு உடனே அங்க எதை காயப் போடலாம்? ஊறுகாய துணி கட்டி வெயில்ல வைக்கலாம் வற்றல் வடாம் போடலாமே, வெயில் போனதும் ஓடிப் பிடிச்சு விளையாடலாமே னுதான் மனசு போகுது!!! வீட்டில் இப்படி ஒரு முற்றம் இருந்தா எம்புட்டு நல்லது!!!! மழை பெஞ்சா நனையாலாம்...ஊ லலலா பாடலாம்!!! ஹாஹாஹாஹா

    நீங்க முக்கியமான அறைகளில் நின்று படம் எடுத்துக் கொண்டது ரொம்ப நல்ல விஷ்யம் பகிரவும் நமக்கு நினைவிலும் இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த இட த்திற்குச் சென்றாலும், அங்கு சென்றதன் நினைவாக ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வேன். (சில சமயம், அங்கிருக்கும் யாரையாவது என்னைப் புகைப்படம் எடுக்கக் கேட்டுக்கொள்வேன். இதுக்கெல்லாம் நான் தயங்கமாட்டேன். அதுபோல செல்ஃபி எடுத்துக் கஷ்டப்படும் ஜோடிகளிடம் நான் மொபைல் வாங்கி இருவரையும் சேர்த்துப் படங்கள் எடுத்துத் தரவும் தயங்குவதில்லை).

      இவ்வளவு பெரிய முற்றம்/திறந்தவெளியைப் பார்த்ததும் உங்களுக்கு வற்றல் வடாம் காயப்போடும் நினைவு வந்ததா? அழகிய மழையில் நனைந்து மகிழாமல், ஐயோ.. காயப்போட்ட துணியை எடுத்து உள்ள வைக்கணுமே என்று நினைக்கும் குடும்ப இஸ்திரி நீங்க. ஹா ஹா

      நீக்கு
  11. கிராமத்து வீடு ஆனால் நல்ல வசதியான வீடுதான். அழகாக இருக்கிறது பழம் பெருமை பேசியபடி!

    இப்படியான வீடுகளில் நமக்குத் தேவையான முக்கிய வசதிகளை மட்டும் செஞ்சுக்கிட்டு இருக்க ரொம்பப் பிடிக்கும். Aesthetic sense!

    அடுத்தடுத்த படங்கள் அப்படியே அப்பகுதியில் உள்ள அந்தக்காலத்து வீடுகள்!! அந்த ஜன்னல்கள் எல்லாம்....ஆனா பராமரிக்கணுமே இப்படியான ஜன்னல்களை!

    அந்தக்காலத்து வீட்டுப்பொருட்கள் எல்லாம் செமையா இருக்கு. அது சமையலறையா இருந்திருக்குமோ ஹிஹிஹிஹி!! (கீதா உன் புத்தி போற போக்கப் பாரு!!!! ம்ஹூக்கும் உள்ளதுதானே வெளிய வரும்!)

    ரொம்ப நல்லாருக்கு, நெல்லை!!! எல்லாப்படங்களும் ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு இன்டர்நெட், நல்ல குளிர்ந்த இடம் (காந்தி அவர்கள் வீடு குளிர்ச்சி), தண்ணீர் வசதி, சிலிண்டர்... கரன்ட், வேறென்ன வேணும்?

      நீக்கு
  12. சுதாமாபுரி, குசேலர் கோயில் மிக அழகாய் இருக்கிறது.
    மஹாத்மாகாந்தி பிறந்த வீடு படங்கள் அருமை. அவர் பிறந்த அறையில் நின்று படம் எடுத்து கொண்டது எல்லாம் மிக அருமை.
    கீர்த்தி மந்திர் , நினைவு மண்டபம் , பழைய பொருட்கள் உள்ள படங்கள் எல்லாம் நேரில் பார்த்த உணர்வை கொடுத்தது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... இந்த இடங்களுக்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா?

      நீக்கு
    2. //வாங்க கோமதி அரசு மேடம்... இந்த இடங்களுக்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா?//
      இந்த இடங்களுக்கு போகவில்லை. உங்கள் பதிவு வழியே தரிசனம் செய்து கொண்டேன். போய் இருந்தால் சொல்லி இருப்பேன்.

      நீக்கு
  13. குசேலருக்கு கோயில் என்பதை இப்போது தான் கேள்விப்படுகிறேன்..

    போர்பந்தர்  - புராதன பெயரையும் அறியத் தந்தது சிறப்பு..

    சுதாமாபுரி என்றே அழைத்தால் என்ன!..

    நெல்லை அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்... அதை குசேலர் கோவில் என்பதற்குப் பதிலாக, அவர் வாழ்ந்த ஊரில் அவருக்கு ஒரு நினைவிடம் என்ற அளவில்தான் பார்க்கணும்.

      போர்பந்தரை சுதாமாபுரி....... அலஹாபாத்தை பிரயாக்ராஜ் என்று பழைய பெயர் வைத்ததுமாதிரி, ஏகப்பட்ட இடங்களின் பெயர்களை மாற்றவேண்டியிருக்கும். அது செய்துகொண்டிருக்கும்போதே, மைலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற ஊர்களின் பெயரும் மாறாமல் இருக்கப் பார்த்துக்கொள்ளவேண்டுமே...

      நீக்கு
  14. @ ஜீவி அண்ணா..

    /// காந்திஜி வீட்டை இது வரை யாரும் படம் எடுத்துப் போட்டு நான் பார்த்ததில்லை.///


    இதுதான் கான் கிராஸ் சாதனை..

    காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்று காந்திஜி விரும்பினார்..

    வாழ்க காந்திஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சாருக்காகவே, அடுத்த வாரம் (சாத்தியமா என்று தெரியவில்லை. கௌதமன் சாரை தொந்தரவு படுத்தக் கூடாது) நெல்லை காந்திஜி படத்தைப் போடலாம் என்று நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
    2. திருத்தம்:

      காந்திஜியில் நெல்லை

      நன்றி.

      நீக்கு
    3. ஜீவி சார்... காந்திஜியின் உயர்ந்த குணங்கள் என்று எவற்றைக் காண்கிறீர்கள்? நீங்கள் பெண்ணாக இருந்திருந்தால் காந்தியைப் போன்றவரைத் திருமணம் செய்திருப்பீர்களா? உங்களுக்கு காந்தி போல அப்பா இருக்கணும்னு ஆசைப்படுவீங்களா?

      நீக்கு
  15. /// ஸ்வஸ்திகா வரைந்திருக்கும் இடத்தில்தான் காந்தியைப் பெற்றெடுத்தாராம்..///

    ஒரு கணம் புல்லரித்தது..

    இத்தனை காலத்தில் இதனை புனிதத் தலம் ஆக்கியிருக்க வேண்டாமோ..

    இந்த அளவுக்காவது விட்டு வைத்திருக்கின்றனரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் அது புனிதத் தலம்தாம். காந்திஜி தொடர்பான இன்னொரு இடத்தையும் (அது அவரை காந்திஜி என்று ஆக்கிய இடம்) இந்தப் பதிவில் சில வாரங்களில் காண்பீர்கள். சரித்திரப் பிரசித்தி பெற்ற இடத்தில் கால் வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

      நீக்கு
  16. சில கருத்துகள் மாயமாகிவிட்டன... கேஜிஜி சார்தான் அவற்றைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  17. இன்று எபியில் ஞாயிறு உதயமானதே காலை 6-- மணிக்குத் தான். அது இரண்டு பேருக்கு மட்டுமே தெரியும்.

    பதிலளிநீக்கு
  18. தகவல்கள் நன்று. இரண்டு முறை போர்பந்தர் சென்றிருக்கிறேன் - அங்கே எடுத்த படங்கள் எனது வலைப்பூவிலும் பகிர்ந்து இருக்கிறேன். போர்பந்தரில் இன்னும் சில பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்ஜி... ஒரு ஊரில் பார்க்கவேண்டிய எல்லா இடங்களையும் பார்த்துவிட முடிவதில்லை (இந்த மாதிரி குழுவாக யாத்திரை சென்றால்). போர்பந்தரில் ஜாம்பவான் குகை, பத்ரியில் வியாசர் குகை/மனா கிராமம் என்று பல விட்டுப்போய்விடுகிறது.

      நீக்கு
  19. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    இன்றைய பயண யாத்திரை பதிவும் அருமையாக உள்ளது. குசேலர் பிறந்த சுதாமாபுரியை பற்றிய தகவல்கள் சிறப்பு. இன்றுதான் நானும் சுதாமாபுரியும், போர்பந்தரும் ஒரே இடங்கள் என அறிந்து கொண்டேன்.

    குசேலர் பிறந்து வாழ்ந்த பூமியையும், அவர் கோயிலையும் தரிசித்துக் கொண்டேன். ஸ்ரீ கிருஷ்ணர் அவருக்கு பாத பூஜை செய்யும் படம் மனதை நெகிழ்த்தியது . அவர்களிடையே எத்தனை சிறந்த அன்பு. கோவில் தூண்கள், அதன் அழகு கோவிலின் பராமரிப்பு சுத்தம், என அனைத்தும் அழகாக இருக்கிறது. நீங்கள் எடுத்திருக்கும் படங்களின் கோணங்களும் அழகாக இருக்கிறது.

    காந்திஜி பிறந்த இடம். வாழ்ந்த வீடு என அந்த தகவல்களும் சிறப்பு. அவர் பிறந்த வாழ்ந்த இடங்களை பற்றிய புகைப்படங்களும் விபரங்களும் பார்த்துப் படித்து தெரிந்து கொண்டேன்.

    சில புண்ய பூமிகளுக்கு நேரிலேயே சென்று தரிசிக்கும் வாய்ப்பு அனைவருக்குமே கிட்டுவதில்லை. தங்களுக்கு தங்களின் அதிர்ஷ்டவசமாக கிட்டியிருக்கிறது. அதன் மூலமாக எங்களுக்கும் அங்குள்ள விபரங்கள், அதிசயங்கள் என எங்களுக்கு தெரிந்து கொள்ள முடிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே. வரும் ஞாயறில் சோம்நாந் குறித்த அடுத்தப் பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    நேற்று பதிவுலகிற்கு வர இயலவில்லை. அதனால் இந்தப் பதிவுக்கு வர தாமதம் ஏற்பட்டுள்ளது. மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... நீங்கள் ஞாயிறு பிஸியாக இருந்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.

      எனக்கும், 106 திவ்யதேசங்களைத் தரிசனம் செய்யணும் என்ற எண்ணத்தினால்தான் பல யாத்திரைகள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் பல இடங்களையும் பார்க்க முடிந்தது.

      Bபேட் துவாரகையில் கிருஷ்ணர் கோவிலுக்கு இடது புறம் ஒரு அறையில், குசேலர் கிருஷ்ணரை சந்தித்ததன் நினைவாக ஒரு சன்னிதி இருக்கிறது. அங்கு அவல் கொடுத்தார்கள். எப்படியோ... குசேலர் சம்பந்தமான இரு இடங்களுக்குச் சென்றுவந்துவிட்டேன்.

      உங்கள் கருத்திற்கு நன்றி

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!