வியாழன், 14 மார்ச், 2024

வயசாகாமலேயே இருந்திருக்கலாம்..

 "பிரிஞ்சிருந்துட்டு மறுபடி அப்போ சேரும்போது அவ்வளோ உணர்ச்சியோடு பாட்டெல்லாம் பாடி சேர்ந்தீங்களே... 

இப்ப மறுபடி பிரிஞ்சிதான இருக்கீங்க...  அதே பாட்டை மறுபடி பாடறதுதானே...."

எரிச்சலுடன் பேசும் மகனை வெறுமையாக நோக்கினார் விஜய்.  

"அந்த வயசு வேறடா...   இதோ உன் மகன்கள் வயசுல நாங்க பிரிஞ்சோம்...  யார் எங்கன்னே தெரியாது..  எங்கப்பாம்மா எபபவும் பாடிக்கிட்டிருக்கும் இந்தப் பாட்டு வாலிபத்துல  எங்களை சேர்த்து வச்சுது...  கொஞ்ச வருஷங்கள்...    அப்புறம் கல்யாணம்..  காட்சி...  அப்புறம் நிதர்சனம்னு ஒண்ணு இருக்கு இல்லே..."

"தர்மேந்தர் பெரியப்பா ஏதோ தான் மட்டும்தான் அந்த பூர்வீக இடத்தைப் பாதுகாத்தது போல அவரே வச்சுக்கிட்டார்.  யாரும் பெரியவர்னு அவர்ட்ட ஒண்ணும் கேக்கலை..  இன்னிக்கி விலைக்கு அது எவ்ளோ போகும் தெரியுமா?   இப்போ நாம கஷ்டப்படறோம் இல்லே...  உன்னை எடுத்து வளர்த்தவரும் பெரிசா பணம் சேர்த்து வைக்கலை..."

சுனிதா குறுக்கே புகுந்தாள்.." நான் கொண்டு வந்த பணத்தையும் அலங்காரங்கள்னும் பார்ட்டின்னும் காலி பண்ணியாச்சு.. "

'இத்தனைநாள் முறைச்சுக்கிட்டு நின்னுட்டு இப்போ ஏன் திடீர்னு இவங்களுக்கு அவங்க ஞாபகம் வருது?'  ஸஃபாவில் சாய்ந்திருந்த விஜய் மனதுக்குள் புன்னகைத்தார்.

"மேடையில பாடிக்கிட்டிருந்த கடைசி சித்தப்பா, அவர் பாட்டுக்க வெளிநாட்டுல செட்டில் ஆயிட்டார்...  நாமெல்லாம் இருக்கோமா, இல்லையான்னு கூட கேக்கறது இல்லே...  பெரியப்பாவுக்கோ பிள்ளையே இல்ல..  ஆனாலும் அவர் பேராசையோட நம்மளை கண்டுக்கறது இல்லே..."

"மக்கோ பிள்ளை இல்லை..  உங்க ரெண்டு தம்பிகளுக்கும் அது தெரியும்..   ஆனாலும் நாம் இருக்கோமா, செத்தோமான்னு கூட கவலைப்படறது இல்லே...  அனாதை மாதிரி கிடக்கோம்..  யார் நம்மை பார்த்துக்கறா?"  தர்மேந்தரின் மனைவி ஆற்றாமையுடன் புலம்பினாள்.  நடுத்தர வசதியுள்ள அந்த வீட்டின் தனிமை அவளை வாட்டி இருக்க வேண்டும்.  இயலாமை வரும்போதுதான் உறவின் அருமைகள் தெரிகின்றன.  ரத்தத்தில் சூடு இருக்கும்வரை பேச்சிலும் அனல் பறக்கிறது.


தர்மேந்தர் இயலாமையுடன் புன்னகைத்தார்.  "நீதான் கொஞ்ச வருஷங்கள் முன் அவர்களை அண்டவிடாமல் செஞ்சே...   உன் தேள்கொடுக்கு வார்த்தைகளைக் கேட்டு போனவங்கதான்...  இப்போ ஒதுங்கியே நிற்கறாங்க...  உனக்கு வேணும்னா வேணும்...  வேண்டாம்ங்கும்போது வேண்டாம்...  என்ன நியாயமோ..."  வெளியில் சொல்லவில்லை.  மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.  தம்பி மகன்கள் மேலும், அவர்கள் பிள்ளைகள் மேலும் பாசம் உண்டு இவருக்கு.  ஆனால் விஜய் ஒருமுறை பணம் காசை சம்பந்த்ப்படுத்தி பேசிய பேச்சில் எல்லாமே கசந்து போயிருந்தது.

சுபம் போட்ட உடன் கொஞ்ச நாள் சேர்ந்திருந்திருப்பார்களா?  அப்புறம் மெல்ல மெல்ல விரிசல்கள் உண்டாயின.  சிரிக்காத இவர் முசுட்டு தனத்தால் இவர் மேல்தான் முதல் அபிப்ராய பேதம் உருவானது.

"நாம இந்தியா போனா என்ன?"


கிடாரை இடது கையால் வருடிக் கொண்டிருந்த தாரிக் மனைவியை வாஞ்சையுடன் நோக்கினார். 

"யார் இருக்கா அங்கே?"

"ஏன்..   உங்க ரெண்டு அண்ணன்ங்க ..   யாதோங்கி பாராத்துனு பாட்டு பாடி சேர்ந்தீங்களே..  உலகமெல்லாம் உங்க பாசம் பத்திதான பேசுது...?"


"ஓ...   பத்லேனா..  அப்னாயே...  ஆலம் கபி...."  தாரிக்கின் மனச்செவியில் சட்டென இணைந்த அந்த விஜயின் குரல் கேட்டது.  ஆம்..  அது ஒரு பொன்நிகழ்வு..  அப்புறம் காலம்தான் எப்படி சூழ்நிலையையும், ஆட்களையும், மனங்களையும் மாற்றிப் போட்டு விடுகிறது!  தொலைவில் இருக்கும்போது தெரியாத முரண்பாடுகள் அருகில் இருக்கும்போது பெரிதாகத் தெரிகின்றன.

படுக்கையில் இருக்கிறார் அண்ணன் தர்மேந்தர் என்று கேள்வி.  இரண்டு தம்பிகளும் அவரைப் போய் பார்க்கவேயில்லை.  இவர்கள் இருவருக்குள்ளுமே கூட அப்படி ஒன்றும் நல்ல உறவு இல்லை.  மனைவிகள் மூலம், அவரவர்கள் பிள்ளைகள் மூலமும் நெருப்பு ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது...

"வருஷத்துக்கு ஒருவாட்டி கூட வந்து பார்க்கறது இல்லே..  மூத்தவன்னு ஒரு மரியாதை இல்லை..  நான்தானே உங்களை எல்லாம் காப்பாற்றினேன்?  எனக்குன்னு நிரந்தர வருமானம் இல்லைன்னு தெரியும்தானே?  இந்த பழைய பூர்வீக வீடு மட்டும்தான் என் சொத்து...   என்ன பயிர் செய்து, என்ன வாடகைக்கு விட்டு நான் எப்படி உயிர் வாழறேன்னு கண்டுக்க நாதி இல்லே...  என் மூஞ்சியிலேயே முழிக்காதீங்கடா இனிமே...   "  தர்மேந்தரின் குரல் மனச்செவியில் மறுபடி ஒலித்தது.

"நம்ம ஒரே பொண்ணு இங்கே வெளிநாட்டுக்காரன் ஒருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டான்னு உங்க சின்ன அண்ணன் கழுவி கழுவி ஊத்தினார்..    அவர் பையன் அங்கே ஒரு மாத்து ஜாதி பொண்ண கல்யாணம் செய்துக்கிட்டதை மறைச்சுட்டார்...  ஆனாலும் அவங்களை எல்லாம் பார்க்கணும் போலதான் இருக்கு"

"சண்டைபோட்டு சண்டைபோட்டு என்ன சாதிச்சோம்...   சேர்ந்திருந்தா நாலுநாள் நல்லதா சந்தோஷமா இருந்திருக்கலாம்..  பாசம் பெருசுன்னு நினைக்கற வயசு ஒண்ணு..  பணம் காசு பெருசுன்னு நினைக்கற வயசு ஒண்ணு...நம்ம பசங்களுக்கு நாமே இல்லாததும் பொல்லாததும் சொல்லி உறவைக் கெடுத்து வைக்கறோம்...   நேராக்கவே முடியறதில்லே..."

சுனிதா கண்கள் கலங்கி இருந்தன. அவள் பேரன்கள் இருவரும் தொலைக்காட்சியில் அந்தப் பாட்டை மறுபடி வைத்தனர்.


"வயசாகாமலேயே இருந்திருக்கலாம்..."

==============================================================================================================

நியூஸ்ரூம் 



  



=========================================================================================================

ஏகாந்தமாய் 



மொகதிஷு இந்திய வட்டத்தில் ஒரு புது வருகை

மதியம்வாக்கில் அன்று வேலைப்பளு குறைந்திருந்தது. அதாவது தலையைப் பிய்த்துவிடும் அவசரம் என்பதாக என் சீட்டில் ஏதுமில்லை. அன்று சோமாலிகளுக்குக் கொடுக்கவேண்டிய இந்திய விசாக்களை (பெரும்பாலும் டூரிஸ்ட், சில ‘பிஸினெஸ்’(!)) காலையிலேயே கையெழுத்திட்டு டெலிவரி கௌண்டருக்குக் கொடுத்தாயிற்று. வேறு சில கொசுறு வேலைகளில் ஈடுபட்டிருக்கையில் ஹுசைன் என்னிடம் வந்து, ”உங்களை இந்தியர் ஒருவர் பார்க்க விரும்புகிறார். லைப்ரரியில் உட்கார்ந்திருக்கிறார்” என்றான்.

”பெயரென்ன?”  என்றதும் முழித்தான். சொறிந்தான் தன் தூக்கணாங்குருவிக்கூட்டுத் தலையை!

அவன் வேலை செய்யும் விதம் அப்படி. சராசரி சோமாலி!  கோபித்துக் கொண்டால் எனக்குத்தான் இரத்த அழுத்தம் எகிறும். மெடிக்கல் வசதி சரிவர இல்லாத தேசமது!

என் சீட்டிற்கு அவரை அழைக்காமல் (கொஞ்சம் ’நாஸுக்கான’ காகிதங்கள் புழங்கும் இடமுமாகையால் இந்த ஏற்பாடு), நான் லைப்ரரி பக்கம் போனேன் அவரைப் பார்க்க.  துஸாரா. ஒரு ஓர பெஞ்சில் அமர்ந்து குஜராத்தி நாளிதழ் ‘சந்தேஷ்’-ஐப் புரட்டிக்கொண்டிருந்தார். பார்த்தவுடன் வணக்கம் சொல்லி நலம் விஜாரித்தார். தொடர்கையில் இடையே அவரது குடும்பவட்டத்தில் யாருடைய பாஸ்போர்ட்டோ ரினியூவலுக்கு வந்திருந்தது எனப் பேச்சுவாக்கில் சொன்னார் துஸாரா. ‘கொஞ்சம் கவனிச்சீங்கன்னா நல்லா இருக்கும்..’னு அர்த்தம்.

ஹுசைனிடம் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் பெயரைக் குறித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ”நாளை மறுநாள் மதியம் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்” என்றேன், வேறெந்த சிக்கலும் அதில் இருக்காது என நம்பியவாறே. சந்தோஷம் அவர் முகத்தில்.

ஆரம்ப விண்ணப்பத்தின்போது, ஐந்து வருட உபயோகத்துக்கு மட்டும்தான் பாஸ்ப்போர்ட் வழங்கப்பட்ட காலமது. கையினால் எழுதி, வாலிடிட்டி தேதியை நீட்டித்து, ரப்பர் ஸ்டாம்ப் அடித்து பாஸ்போர்ட் ஆஃபீஸர் கையொப்பத்துடன், எம்பஸியின் அரசு முத்திரைப் பதிக்கப்பட்ட எம்பாஸிங் ஸ்டாம்ப்பினால் ஒரு அழுத்து அழுத்தி, மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டு, விண்ணப்பித்தவருக்குத் திருப்பிக் கொடுக்கப்படும். முதல் ஐந்து வருடத்துக்குப் பின் பாஸ்ப்போர்ட்டை மேலும் 5 வருடத்துக்கு நீட்டிக்க மீண்டும் விண்ணப்பிக்கவேண்டும். ஏகப்பட்ட சிக்கல்கள் நிறைந்த பாஸ்போர்ட் ப்ராஸஸிங் முறை அப்போதெல்லாம். நான் இந்த சப்ஜெக்ட்டை முதன்முதலாக கவனிப்பதால், அதி ஜாக்ரதையாக இருந்தேன்.

யார் எப்படியோ, என்ன மாதிரியான பின்புலமோ..

அங்கு வசித்த மூன்று வருட காலத்தில் புதிதாக இந்தியாவிலிருந்து வந்து நமது நட்புவட்டத்தில் இணைந்தவர் சங்கரநாராயணன். ராஜஸ்தான் அரசின் ஓய்வு பெற்ற அதிகாரி. குடும்பத்தை இந்தியாவில் விட்டுவிட்டுத் தனியாகத்தான் வந்திருந்தார். ஐ.நா. ப்ராஜெக்ட் ஒன்றிற்காக மொகதிஷுவுக்கு அனுப்பப்பட்டிருந்தார். சோமாலிய நிலவெளியில் பெரிதும் உயர்ந்து பரவிக்கிடந்த மணற்குன்றுகள் (Sand dunes), நிலப்பரப்புகளை பயிரிடுதலுக்கோ, வனப் பகுதிகளாக உருவாக்குவதற்கோ கூட விடாமல், பெரும்பிரச்னைகளாய் ஆங்காங்கே எழுந்து நின்று சவால் விட்டுக்கொண்டிருந்தன. சுற்றுச்சூழல் சவால். அவற்றை ஒருவழியாக ‘சரி’ செய்து நிலப்பரப்பை சீர்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க என ஐ.நா. ஒரு குழுவை சோமாலியாவுக்கு அனுப்பியிருந்தது. அதில் இடம்பெற்றிருந்தார் நம்ம நிபுணர் சங்கரநாராயணன். ராஜஸ்தானின் பாலைப்பகுதிகளில் இதே மாதிரிப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் அரசு திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம், அவருக்கு இந்த ஐ.நா. பதவியை வாங்கித் தந்திருந்தது. வயதானவர்.  மெலிதானவர். சாதாரண பழக்க வழக்கங்களைக் கொண்ட சாதாரணர் போன்றவர்.

இந்திய நண்பர்களின் சந்திப்புகள், அரட்டைக்கச்சேரிகளின்போது, கொஞ்சம் பழகிவிட்டபின்னரும்கூட, யோசித்துத்தான் வாயைத் திறப்பார். அயல்நாட்டு அனுபவ ஆரம்பமே அயர்ச்சி தரும் ஆஃபிரிக்காவாகி விட்டதால், குழப்பம் மேலிட ஒருவித ஜாக்ரதை உணர்வோடு எல்லோரிடமும் தயங்கித் தயங்கிப் பழகினாரோ?  இல்லை, சுபாவமே அப்படித்தானா..

சில மாதங்களுக்குப் பின் ஒரு மாலையில், எங்கள் குழாமில் ஒரு தகவல்
ஊர்ந்தது. (அப்போதெல்லாம்தான் கையில் மொபைல், வீட்டில் லேண்ட் ஃபோன் என்றெல்லாம் வசதிகள் இல்லாத கடுங்காலம். வாய்வழிச் செய்திகளே மந்தகதியில் வலம்வந்தன.) ராஜஸ்தானிலிருந்து சங்கரநாராயணன் சாரின் மகள் மொகதிஷு வந்திருக்கிறாள் என்பது அது. அட! புது வருகை. சரி, ஏதாவதொரு லஞ்ச், டின்னரில் விரைவில் சந்திக்க நேரலாம் என நினைத்தேன். இன்னொரு ஐ.நா. நண்பரான சிதம்பரம் சார் வீட்டில் என்று நினைவு- அந்த வாரஇறுதி டின்னர் என ஏற்பாடாயிருந்தது. போயிருந்தபோது அங்கே சங்கரநாராயணன் சாரும் தன் மகளுடன் வந்திருந்தார். பெயர் நினைவிலில்லை. பெண்கள் குழாமில் சரளமாகப் பேசிப் பழகிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். அப்பாவைக் கொள்ளவில்லை.. தன் அம்மாவைக் கொண்டிருப்பாளோ.. எனத் தோன்றியது. ஜெய்ப்பூரில் எம்.பி.பி.எஸ் படித்துக்கொண்டிருந்த, வயது இருபதுகளிலிருந்த மாணவி. அவரது ஒரே மகள் என்பதாகச் சொன்னார்கள். 

அப்பாவைப் பார்க்க வந்திருந்த பெண், சில நாட்கள் கூடஇருந்து மொகதிஷு வாழ்க்கையை ’அனுபவித்துவிட்டு’ இந்தியா திரும்பிப்போனாள். வகுப்புகள் இந்தியாவில் ஆரம்பித்திருக்கும்..

**
============================================================================================================

தொடர வழியின்றி 
நின்று போயிருக்கிறது ஒரு சாலை 
போகும்பாதை தடுக்கப்பட்டிருக்கிறது 
மறுசாலை  
காற்றை எதிர்த்து வந்த பாதையைத் 
திருப்பி 
காற்றோடு பயணிக்கிறேன் திரும்பி 
இல்லாமல் போகுமா எனக்கொரு பாதை?
காட்டாமல்தான் போகுமா காற்று?
பாதையெங்கும் நின்றிருந்த மரங்கள் 
இரேன்...
ஏன் கடக்கிறாய் 
என்றன.

===============================================================================================

ரவி சாரங்கன்

மணவாழ்க்கை - விரிசல் வர காரணம்
2 ஜோதிடர் பொருத்தம்னு சொன்னதால் பண்ணிட்டோம், இப்ப இருவருக்கும் பிரச்சனை, ஒரு ஜோதிடர் இது பொருத்தமே இல்லையே இது பிரிவை தரும் என சொல்லிட்டார். அப்பதான் உங்க நம்பர் ஃப்ரெண்ட் கொடுத்தார் என்ன வழின்னு ஏதாவது பரிகாரம் சொல்ல முடியுமா என்றார் அவர்.
அம்மா திருமணம் முடிந்தபின் பொருத்தமில்லை அது இது என்பதெல்லாம் வேஸ்ட். இரண்டாவது இறைவன் தான் நிர்ணயம் பண்றான் ஜோதிடர்கள் இல்லை இத முதல்ல புரிஞ்சுக்கோங்க.
ஈகோ எல்லோருக்கும் இரண்டு பக்கமும்
ஆனால் யார்மேல குற்றம் சொல்லலாம் என்ற கோணத்திலேயே நாம் அனைவரும் சிந்திக்கிறோம். சின்ன வயதிலிருந்து குழந்தைக்கு அனுசரித்து விட்டுக்கொடுத்து போ என சொல்வதில்லை பலரும் ஒரே பெண் / ஒரே பிள்ளை என செல்லம் கொடுத்துவிட்டு அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்துவிட்டு திருமணத்தின் பின் அவர்களின் ஈகோவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கின்ற பெற்றோர் ஏராளம்.
மாமா நான் எவ்வளவோ அட்ஜஸ்ட் பண்ணி போறேன் ஆனா அவள் என் அப்பா அம்மாவை விட்டுடனும் என்பது போல நடந்துக்கறா அவளோட அம்மா சொல்றபடி தான் கேக்கறா. நீங்க சொன்ன ஒருவிஷயம் கரெக்ட் மாமா குழந்தையை கல்யாணம் பண்ணி கொண்டிருக்கிறேன்னு சொன்னீங்க ஆமாம் அவ குழந்தை மாதிரிதான் பிகேவ் பண்றா.
கண்ணா நீ உன் பக்கம் மட்டுமே சொல்றே, அவளும் சொல்லனுமோல்யோ.
இந்த பிரச்சனையை சால்வ் பண்றது ரொம்ப சிம்பிள் சட்டுன்னு அவ காலில் விழுந்துடு. ஈசியா உன் வழிக்கு வந்துடுவா.
அடியேன் உட்பட இப்படி பலரும் காலில் விழுவதால் குடும்பம் நிலைச்சு இருக்கு. பொண்ண பெத்தவாளுக்கு பொசசிவ்நெஸ் இருக்கத்தான் செய்யும் பிள்ளையோட அம்மாவுக்கும் கூட இது தவிர்க்க முடியாது ஆனா நீங்க ரெண்டுபேரும் பிரிஞ்சா என்ன ஆகும் யோசி
இவளை டைவர்ஸ் பண்ணிடறே சரி இன்னொரு கல்யணம் பண்றே அது மேக்ஸிமம் ஏற்கனவே டைவர்ஸ் ஆனவாள தான் பண்ண முடியும் அவளும் இப்படி இருந்தா என்ன பண்ணுவே - ஆணுக்கோ பெண்ணுக்கோ ஒரு தடவை வாழ்க்கையை தொலைத்து விட்டால் பின் வாழ்வது கடினம்
யார் வீட்டில் சண்டை இல்லை சொல்லு, போனமாசம் அகத்துக்காரி உன்னோட வாழ முடியாது பிள்ளை அகத்துக்கு போறேன்னுட்டாள். பெண் ஏம்பா வாய வெச்சுண்டு சும்மா இருக்க மாட்டியான்னாள், காலம்பற காஃபி டம்ப்ளரோட நிக்கறா. ஊருக்கு போலியா (நாக்குல சனி) போயிருப்பேன் சாப்பாட்டுக்கு அல்லாடுவியே பசி தாங்க மாட்டியேன்னு தங்கிட்டேன் என்றாள் இதான் வாழ்க்கை
சில யோசனைகளை சொல்லி கொடுத்து விட்டுக்கொடுத்து போ அவர் அம்மாவிடமும் உங்க பொண் கொழந்தையா நினைச்சுக்கோங்க என்றேன்.
டைவர்ஸ் பண்றது ரொம்ப ஈஸி ஆனா சேர்த்து வாழறது, ஜாலியா வாழ்வை ரசிப்பது ரொம்ப கஷ்டம் பெற்றோர் கையில் தான் அது இருக்கு. எங்களுக்கு எல்லாம் தெரியும் என சொல்லும் குழந்தைகள் வாழ்க்கையை தொலைத்து விடுகிறது என்பது நிதர்ஸனம்

================================================================================

நன்றி : Devakottai Dolphin AR Ramanathan 

சிவாஜி கணேசன் மோகன்லால்

நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் உணர்ச்சிப் பேட்டி
🌺🌺🌺 🙏🙏🙏நன்றிகள் கட்டுரையாளர் [இது மய்யம் இணைய தளத்தில் 2007 ஆம் ஆண்டு திரு Murali Srinivas அவர்களால் பதிவு செய்யப் பட்டது]🌺🌺🌺 🙏🙏🙏படத்தில் நடிகர் திலகம் பிரணவ் மோகன்லால் மற்றும் பாலச்சந்தர மேனன்
(அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால் குறிப்பிட்டதன் தமிழாக்கம்)

சிவாஜி சார் ஓவ்வொரு அறைக்கும் என் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனார் . தொங்கிக் கொண்டிருந்த நட்சத்திர விளக்கு ,சுவரில் மாட்டியிருந்த பெரிய புகைப்படங்கள் ,அறையை அலங்கரித்த கலைப்பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் இவற்றையெல்லாம் ஒரு சின்னக்குழந்தையின் மனோபாவத்தோடு பார்த்துக்கொண்டு நடந்து போனேன்.

சிவாஜி சாரின் மிகப்பெரிய பங்களா அது . அந்த நேரம் என் மனைவி சுசி (நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ரா) அங்கே இல்லை .எங்கோ வேறு ஒரு அறையில் இருந்தாள் என நினைக்கிறேன். நான் சொன்னவையெல்லாம் அவள் பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. சிவாஜி சாரின் கைவிரல் குளிர்ச்சி மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது .வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அந்த விரல்களும் அந்த ஸ்பரிசமும்.

சிவாஜி சார் ஸ்டுடியோவுக்கு வருவதை பார்த்திருக்கிறேன் .அவர் வரும் போது எல்லா படப்பிடிப்பும் ஒரு நிமிடம் நின்று போகும் .அவர் போகும் வழியில் அனைவரும் எழுந்து நின்று அவரை கை கூப்பி வணங்குவார்கள் . அவர் வந்து போவதே ஒரு ராஜா வருவது போல இருக்கும் . அவர் சிரித்துக்கொண்டே கடந்து போகும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஒளி வட்டம் நமது மனதில் வெளிச்சம் வீசி விட்டு செல்லும்.

சிவாஜி சாரைப் போல மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுகிறேன். தமிழில் மன்னனாக கோலோச்சிய அவர் மலையாளத்தில் நடிக்க வந்த போது ஒரு சாதாரண நடிகராக பழகினார் . இயக்குநருக்கும் மற்ற நடிகர்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்தார் .

குறையோ குற்றங்களோ எதுவுமே சொன்னதில்லை . தவிர்க்க முடியாத காரணங்களால் நடுவில் படப்பிடிப்பு தடை பட்ட போதும் சிறிதளவு கூட கோபமோ வருத்தமோ இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்று சென்றார் . மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போதும் மகிழ்ச்சியோடு வந்து நடித்துக் கொடுத்தார் .
அவர் படப்பிடிப்புக்காக கேரளத்துக்கு வந்த போது என்னுடன் தான் தங்கியிருந்தார் . ஒரு குழந்தை எப்படி சாக்லெட்டை விரும்பி கேட்குமோ ,அது போல வாத்து இறைச்சியும் மற்ற அசைவ உணவு வகைகளையும் விரும்பிக் கேட்பார் . அவர் கேட்டவையெல்லாம் தயார் செய்து அவர் சாப்பிட அமரும் மேசையில் வைக்கும் போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே ,தான் கேட்டது கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்குமே குழந்தை ,அது போல மாறி விடுவார் . ஒவ்வொரு அயிட்டம் பற்றியும் அதன் ருசி பற்றியும் அவர் அடிக்கும் கமெண்ட் இருக்கிறதே ,அழகோ அழகு . அதே சமயம் தான் என்ன சாப்பிடுகிறோமோ அது தன்னுடைய பணியாட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவர் தனக்கு பிடித்த சில பொருட்களை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தார் . சொந்த மகனோ அல்லது மகளோ கேட்டால் கூட கொடுக்க மாட்டாராம் . சிவாஜி கொடுத்த பரிசு: அங்கிருந்த சிவாஜியின் புகைப்படங்கள் அவர் வாங்கிய விருதுகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நடந்தபோது ஒரு அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தது போல மோகன்லாலுக்கு இருந்ததாம். சுற்றிப் சிவாஜி கையில் ஒரு வாட்ச் இருந்தது. அதை நீண்ட நேரம் மோகன்லால் பார்த்துக் கொண்டிருந்தார். அதை கவனித்த சிவாஜி அந்த வாட்சை கலட்டி மோகன்லாலின் கையில் கட்டி விடுகிறார். இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகள் கழித்து எதேச்சையாக பிரபுவை மோகன்லால் சந்தித்திருக்கிறார். சிவாஜி குறித்து பிரபு சொன்னது: அப்போது சிவாஜி வாட்ச் பரிசளித்தது குறித்து பிரபுவிடம் கூறியிருக்கிறார். அதற்கு பிரபு, அந்த வாட்ஸ் அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்த வாட்ச். பொதுவாக அவருக்கு பிடித்தது யாருக்கும் கொடுக்க மாட்டார். உங்களுக்கு கொடுத்து இருக்கிறார் என்றால் உங்களையும் அவருக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று அர்த்தம் என்று கூறியிருந்தார். அதைக் கேட்கும்போது மோகன்லாலுக்கு ரொம்ப பெருமையாகவும் இருந்தது. இதை அனைத்துமே மோகன்லால் தான் எழுதிய புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
ஒரு முறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடும் ( மலையாள எழுத்தாளர்) அவரது நண்பர்களும் சிவாஜி சாரைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்றிருந்தனர் .அவர்கள் விருப்பத்திற்காக சிவாஜி சார் ஒரு கையில் வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு ,நெஞ்சை விரித்து ,கண்களில் தீப்பொறி பறக்க ,வீர பாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசிக் காண்பித்தார் (இங்கே 'வரி வட்டி' வசனத்தை மோகன்லால் குறிப்பிடுகிறார் )

இந்த வசனத்தை தமிழ்நாட்டுக்காரன் பேசச் சொல்லி கேட்டால் பேசுவாரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது .அயல் மாநிலத்திலிருந்து வந்திருக்கக் கூடிய விருந்தினர்களுக்காக அவர்கள் விருப்பப்படும் எதையும் செய்யத் தயாராக இருந்தார் சிவாஜி சார் .தமிழகத்தின் தலை வணங்காத ராஜாவாக வாழ்ந்த அவர் , விருந்தினர் முன்னிலையில் பூமி போல பணிவாக நடந்து கொண்டார் . விருந்தினர் கடவுளுக்கு நிகர் என்று அவர் உறுதியாக நினைத்து அது போல நடந்தார் . விருந்தினர்க்கு முன்னிலையில் ஒரு மலையாளியும் அது போல பணிவாக நடப்பதை நான் பார்த்ததே இல்லை .

வாயில் படியிறங்கி வந்து அவர் விருந்தினரை கார் கதவு திறந்து உள்ளே உட்கார வைத்து வழி அனுப்புவார் .அவர் அருகில் அவர் மனைவியும் சிரித்த முகத்துடன் நிற்பார் . நாம் வந்து விட்டு செல்வது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்பது போல அந்த முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படும் . தான் சந்திப்பவர்கள் எல்லாம் தன்னை விட பெரியவர்கள் என்றே அவர் நினைத்தார் . ஒருவரை அறிமுகப்படுத்தும் போது கூட இவர் பெரிய மனிதன் என்றே
அறிமுகம் செய்வார் . அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை . ஆனால் நடிப்பு உலகம் அவருக்கு சொல்லிக் கொடுத்த பழக்க வழக்கங்கள் யாராலும் காப்பி அடிக்க முடியாதவை .
நான் எப்போதாவது தலை குனிந்து வணங்க நேரிட்டால் என் உள்ளத்தில் இருக்கும் மலையாளி குணம் என்னிடம் " இந்த அளவுக்கு தலை குனிந்து வணங்க வேண்டுமா ?" என்று கேள்வி எழுப்பும் . அப்போது என்னை அறியாமலே சிவாஜி சார் நினைவு வரும் .தானே தலை குனிந்து போகும் .

தமிழாக்கம் : முரளி ஸ்ரீனிவாஸ்
நன்றி : மலையாள மனோரமா
====================================================================================================

பொக்கிஷம் :-





97 கருத்துகள்:

  1. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்.  

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. /// சேர்ந்திருந்தா நாலுநாள் நல்லதா சந்தோஷமா இருந்திருக்கலாம்.. ///

    இதைச் சொல்லி கதை எழுதினால் - சமுதாயத்தைக் கெடுத்த மாதிரியும்
    பிறத்தியார் சந்தோஷத்தை கெடுத்த மாதிரியும் இருபால்
    கருத்து இதே தளத்தில்...

    பதிலளிநீக்கு
  4. /// இல்லாமல் போகுமா எனக்கொரு பாதை?... ///

    ஆகா!..

    குரங்காயினும் அதை ஏற்றுக் கொள்ளாத கொம்பும் உண்டோ!?...

    ஆனால் இந்தக் குரங்கிற்கு சொந்தமாகத் தோட்டம் உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  தோட்டத்தில் சில மரங்களுண்டு..  மரங்களில் பல கனிகளுண்டு...  கனிதரும் சுவை பெரிதா, மரம் தரும் ,மண்வளம் , நிழல் பெரிதா?  

      நீக்கு

    2. @ ஸ்ரீராம்..

      /// ஆஹா.. தோட்டத்தில் சில மரங்களுண்டு.. மரங்களில் பல கனிகளுண்டு... கனிதரும் சுவை பெரிதா, மரம் தரும் ,மண்வளம் , நிழல் பெரிதா? .. ///

      பாகற்காய் நல்லது தான்.. ஆனால்
      மூலிகை மருந்தின் விளைவினால் எனக்கு பாகல் பகையாகி விட்டது.. இதற்கு விதியன்றி வேறென்ன காரணம்?..

      இதைத்தான் கணக்கு எனும் சிறுகதையில் காடு காத்த ஐயனாரின் முன்பாக சொல்லியிருந்தேன்...

      அதற்கான பழியை எங்கள் பிளாக் ஏற்றுக் கொண்டிருக்கின்றது..

      கருத்து வளம் மிக்க கதைகளால் சுத்தப்படுத்தியாக வேண்டும்!..

      இல்லையேல் கங்கையின் நீர் கொண்டு வர வேண்டியிருக்குமோ?..

      நீக்கு
    3. இதையே நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியிருக்கிறது, பாருங்கள்!

      சுத்தப் படுத்துவதற்கு முன் மண்டியிருக்கிற அழுக்கை விலாவாரியாக கதாபாத்திரங்களின் மூலம் விவரித்து விட்டு சுத்தப்படுத்த வேண்டும். இல்லையென்றால் எதற்காக எது வந்தது என்ற பிடிப்பு இல்லாமலேயே வாசிக்கிற உலகம் இன்றையது.

      நீக்கு
    4. பண்படுத்துவது யார், புண் படுத்துவது யார் என்றே தெரிவதில்லை.    எல்லாம் ஈசன் செயல்.

      நீக்கு
    5. சமையலறையில் காராமணி வடை தயாராகிக் கொண்டிருக்கிறது. பசங்க பேசாமல் 'நன்னா இருக்கே"ன்னு சாப்பிட்டுப் போயிடுவாங்க. இன்று காரடையான் நோன்பு. அது என்ன என்று தெரிய சத்தியவான்-- சாவித்திரி கதை சொல்லியாகணும்.
      இது மாதிரி தான் கதை எழுதுவதும்.
      ஒழுக்கம் தவறிய ஆண்கள் நலத்திற்காகவே வாழ்கிற பெண்கள் என்ற பாத்திரப்படைப்பு அவசியமாகிறது.

      நீக்கு
    6. ஒழுக்கம் தவறிய -- என்ற வார்த்தைகளை நீக்கி படிக்க வேண்டும். கைபேசியில் தட்டச்சு செய்வதால் ஏற்பட்ட அசெளகரியங்கள்.

      நீக்கு
    7. காராமணி வடை- தவறான பிரயோகம். கொழுக்கட்டை என்பது சரி. வடை-பொரிப்பது, அடை-வேகவைப்பது, கொழுக்கட்டு தீர் ஆவியில் வேகவைப்பது.

      நானும் சமையலறையில் தயாராயிருப்பதைப் பார்த்துவிட்டேன். இன்று காலைக்கு சேமியா உப்புமா சொல்லலாமோ என்று நினைத்திருந்தேன்.

      நீக்கு
    8. அடை தான். வடையாகிருக்கிறது.

      நீக்கு
    9. நெல்லை! உங்களுக்காக எபி வாட்ஸாப் குரூப்பில் ஒன்று காத்திருக்கிறது. தவறாமல் போய்ப் பார்க்கவும்.

      நீக்கு
  5. பத்மஸ்ரீ சிவாஜி என்றுமே மாமனிதர் தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்று சொன்னீர்கள், தம்பீ!

      நேன்றைய பதிவு பின்னூட்டம் ஒன்றில் 'ஜிவாஜி, ஜிவாஜி' என்று கலாய்த்ததைப் படித்து நொந்த மனத்திற்கு மருந்து தடவியது மாதிரி இருந்தது.

      நீக்கு
    2. ஒவ்வொருவருக்கு  ஒவ்வொரு அபிப்ராயம்.  இதில் பாதிக்கப்பட ஒன்றுமில்லை.

      நீக்கு
  6. /// கையில் மொபைல், வீட்டில் லேண்ட் ஃபோன் என்றெல்லாம் வசதிகள் இல்லாத கடுங்காலம்.. ///

    உண்மை தான்.. என்றாலும் கடுங்காலம் என்று கொள்வதற்கு இல்லை..

    பதிலளிநீக்கு
  7. "வயசாகமலேயே இருந்திருக்கலாம்" வியாழன் கட்டுரையா, அல்லது செவ்வாய் சிறுகதையா, அல்லது வெள்ளி விடியோவா என்று ஒன்றுமே புரியலை. ஒரே குழப்பம்.

    அடுத்த குழப்பம் கவிதை. குழப்பம். ஒண்ணுமே புரியலை. போகும் வழி தெரியாமல் போவது சரியா?

    "ஒரு யாத்ரா மொழி" மலையாளத்தில் சிவாஜி மலையாள சினிமாக்களுக்கு ஏற்ப இயல்பான நடிப்பில் அசத்துவார்.
    மோகன்லால் சிவாஜி இருவரும் போட்டி போட்டு நடிப்பர்.

    ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் கூறும் ஜோக் நினைவில் நிற்கிறது.

    மொத்தத்தில் இந்த வாரம் வாரம் கன்பூசன் வாரம். .
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // செவ்வாய் சிறுகதையா, அல்லது வெள்ளி விடியோவா என்று ஒன்றுமே புரியலை. ஒரே குழப்பம். //

      ஆஹா...  பல்சுவையும் பெருகி ஓடுகிறதே....!!!  ஒரே நாளில் மூன்று நாட்கள்!

      எல்லோருமே போகும் வழி தெரிந்துதான் போகிறார்களா JKC ஸார்?!!!   ஹிஹிஹி...   பயங்கரமா கேட்டுட்டேன்னு நினைச்சுக்காதீங்க...  சமாளிப்ஸ் ஆ கூட இருக்கலாம்!

      சிவாஜி பற்றி சொல்லவேண்டுமா?

      //மொத்தத்தில் இந்த வாரம் வாரம் கன்பூசன் வாரம். .//

      மாசி மாசம் மசமசன்னு ஆரம்பிச்சிருக்கோ!

      நீக்கு
    2. இன்று பங்குனி அல்லவா? ஏப்ரல் 14 சித்திரை வந்துவிடுமே

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  8. முதல் பகுதி யார் யாரிடம் சொல்கிறார்கள், விஜய் யார் என்பதெல்லாம் புரியவில்லை, ஸ்ரீராம் ஆனா சாராம்சம் புரிந்தது அது போதுமே!!! அண்ணன் தம்பிகளுக்குள் பிரிவு.

    யதார்த்தம். // "நீதான் கொஞ்ச வருஷங்கள் முன் அவர்களை அண்டவிடாமல் செஞ்சே... உன் தேள்கொடுக்கு வார்த்தைகளைக் கேட்டு போனவங்கதான்... இப்போ ஒதுங்கியே நிற்கறாங்க... உனக்கு வேணும்னா வேணும்... வேண்டாம்ங்கும்போது வேண்டாம்... என்ன நியாயமோ..." //

    படம் யாதோங்கி பாரத்? அப்ப எடுத்த படம் இப்பவும் பொருந்திப் போகிறதோ! உறவுகள் விரிசல்கள், வார்த்தைகள் எத்தனை காலம் மாறினாலும், மனிதம் மனங்கள் பக்குவம் அடையலைனா இதெல்லாம் தொடர்கதைதான் போல.

    ஆனா இப்பல்லாம் எதுவும் இல்லாமலேயே ஆரம்பத்துலயே பிரிஞ்சுதான் நிற்கிறாங்க. ஒரு எல்லைக் கோடு போட்டுக்கொண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய முதல் பகுதியை, ஶ்ரீராம் எழுத்து, நான் ரசிக்கவில்லை. ஹிந்திப் படம் என்று மனதில் தோன்றிவிட்டதால் என நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ஸ்ரீராம், புரிநுவிட்டது இப்ப. நீங்கள் சொல்ல வருவது...

      யாதோங்கி பாரத் படம் பெயர் தெரியும், பாடல் தெரியும் இன்னொரு பாட்டும் ஃபேமஸ்...சுராலியா...??? நினைவில்லை வார்த்தைகள்.

      தர்மேந்திரா இப்ப உடல்நிலை சரியா இல்லையோ...

      கீதா

      நீக்கு
    3. நெல்லை அது ஹிந்திப்படமோடு இணைத்து என்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கு.

      ஆனால் ரொம்ப யதார்த்தம். நடப்பதுதானே....

      கீதா

      நீக்கு
    4. சினிமாவில் சுபம் என்று போட்டு நிறுத்துமிடத்தில் இருப்பது சுபம்தானா என்கிற கேள்விக்கு விடை காண முயற்சி!

      நீக்கு
  9. மணவாழ்க்கையில் விரிசல் வரக் காரணம், unreasonable expectations மற்றும் எந்த எதிர்பார்ப்பையும் (வழக்கத்திற்கு மாறானது) நிச்சயத்துக்கு முன்னாலேயே பேசி, தெளிவுக்கு வந்து, எழுத்தில் பகிர்ந்துகொள்ளாத்துதான். அரபு நாடுகளில், சுலபமாக தலாக் என இருந்தாலும், நிச்சயத்தின்போதே இரு தரப்பும், மதப் பெரியவர்கள் முன்னிலையில் எழுதி வைத்திருக்கும் கான்டிராக்டைப் படித்து (இரு சைடிலும் வெவ்வேறு பேப்பர். கான்டிராக்ட் என்பதைப் புரிதலுக்காக உபயோகித்திருக்கிறேன்) எல்லொரும் கையெழுத்திடுவார்கள்.

    அம்மாப்பாவை, பெண்ணே பார்த,துக்கொள்ளணும், பெண் சம்பாத்தியத்தில் பாதி அவள் பெற்றோருக்குப் கோகும்... போன்ற அன்நூஷுவல் நடைமுறைகளைத் தெளிவுபடுத்திக்கணும். கிரிவு என்பது ஒரு ஆப்ஷன் இல்லை என்பதை (விதிவிலக்குகள் தவிர) நல்லா புரிஞ்சுக்கணும். அப்படி வளர்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "மணவாழ்க்கை அமைவதற்கோ மனைவி வாய்க்க வேண்டும்...   குலமகளாய் கிடைப்ப்பதற்கோ கொடுத்து வைக்க வேண்டும்...   அருமைகளும் பெருமைகளும் நிறைந்ததுதான் இன்பம்.."

      நீக்கு
  10. பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது என்பதே, தாரை வார்த்துக் கொடுப்பது என்றே அர்த்தம். பிறகு அவளிடம் எதிர்பார்ப்பது என்பது, அடுத்தவரிடம் கடன் வாங்குவது போலத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரளவுக்கு உண்மை.  பழங்காலத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியது.  நிகழ்காலத்தில் நிதர்சனங்கள் வேறு.  

      நீக்கு
  11. கடுங்காலம் என்ற பிரயோகம், தற்போதைய மனநிலை வைத்து எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். இப்போதான் தேவையில்லாத விஷயங்கள், செய்திகள் எல்லாம் மிக முக்கியம் என்ற எண்ணம் இருக்கிறது. அப்போ அந்த மாதிரி இல்லாத்தால், எதையுமே மிக அவசியம் இருந்தாலொழிய வாங்கியதில்லை, நுகர்ந்ததில்லை.

    பதிலளிநீக்கு
  12. கிளைக்கு கிளை - கதைக்குள் கதை எல்லாம் அந்த காலத்து ராஜா ராணி கதை மாதிரிப் போய் விடுமே... விளக்கம் எல்லாம் தேவைப்படுகின்ற நிலையிலா எனது கதைகள்?..

    இதுவரை எந்த ஒரு அமங்கலச் சொல்லையும் செயலையும் எனது கதைகளில் காட்டியதில்லையே..

    பிரம்ம முகூர்த்த நேரத்தில் மரணம் தாங்கிய கதைகளைப் படிப்பதற்கு மனம் ஒப்புவதில்லை..

    எங்கள் பிளாக் எல்லாருக்கும் ஆனது.. எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும்..

    வாக்கு தேவதைகள் ததாஸ்து சொல்லியபடி நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கின்றனர்...

    விமான நிலைய பாதுகாப்பு வளையங்களை மீறி துப்பாக்கியைக் கொண்டு வந்து ஒருத்தரை டுப் என்று சுட்டதாக சென்ற வருடம் இங்கே ஒரு கதை..

    அதுவும் அதிகம் பேர் படித்ததாக சிலநாட்கள் பட்டியலில் இருந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இதையே நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியிருக்கிறது, பாருங்கள்!///

      எனும் ஜீவி அண்ணா அவர்களது கருத்திற்கான விளக்கமே மேலுள்ள எனது கருத்து..

      நீக்கு
    2. கதைகள் எல்லா விதத்திலும் இருக்கும் செல்வாண்ணா...  கதைகள் என்று சொல்வதைவிட படைப்புகள்.  எல்லாவற்றிலும் சுகம், சுபம் பார்த்தால் இயல்புகள் கிடைக்காமல் போகும்.  எல்லாமே ஒரு செயற்கையாய் இருக்கும்.  எல்லாம் நல்லாயிருந்தால் நல்லதுதான்.  ஆனால் மனதை  ஏமாற்றி ஒரு பொய்யான வாழ்வில் இருக்கணும்.  எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  விமர்சனங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  பெர்சனலாக பார்க்க வேண்டாம்.   அப்படிப் பார்த்தால் நாம் ஒரு கட்டுக்குள் சுருங்கி விடுவோம்.

      நீக்கு
    3. அதே அதே ஸ்ரீராம். அபப்டியே வழிமொழிகிறேன், ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் இந்த நாளை நன்றாக நகர்த்துமாறு இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    காலையில் எப்போதும் போல் முதல் பகுதியை படித்து விட்டேன். ஆனால், என் அப்போதைய புரிதல்களுக்கு கதை புரியவில்லை. ஹிந்தி திரைப்படம், அதையே தமிழில் எடுத்த "நாளை நமதே" யின் கதையை வைத்து புதிதாக ஏதேனும் திரைப்படம் வந்திருக்கிறதோ எனவும் நினைத்து விட்டேன். (அப்போது வீட்டில் எந்த குழாயிலும் வழக்கமாக கொஞ்சமாக வேனும் வரும் தண்ணீரும் கதையின் பிரிவினைப் போல ஒரு சொட்டேனும் காணவில்லை.:)) அந்த குழப்பத்தில் மேலும் ஒரு தடவை தாங்கள் எழுதியதை ஆழ்ந்து படிக்கவில்லை மன்னிக்கவும்.) ஆனால் இப்போது ஆற அமர உட்கார்ந்து படித்தேன்.

    மிக அருமையாக அண்ணன் தம்பிகளின் மனதை அப்படியே எழுதிருக்கிறீர்கள். ஒவ்வொரு வரியையும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

    /இவர்கள் இருவருக்குள்ளுமே கூட அப்படி ஒன்றும் நல்ல உறவு இல்லை. மனைவிகள் மூலம், அவரவர்கள் பிள்ளைகள் மூலமும் நெருப்பு ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.../

    வார்த்தைகளில் உருவான வன்மங்கள் என்றுமே பெரிதாகித்தான் போகிறது. "யாகாவராயினும் நா காக்க" "நாவினால் சுட்ட வடு என்ற பெரியோர் வார்த்தைகள் இன்றளவும் உண்மைதானே...!

    /"சண்டைபோட்டு சண்டைபோட்டு என்ன சாதிச்சோம்... சேர்ந்திருந்தா நாலுநாள் நல்லதா சந்தோஷமா இருந்திருக்கலாம்.. பாசம் பெருசுன்னு நினைக்கற வயசு ஒண்ணு.. பணம் காசு பெருசுன்னு நினைக்கற வயசு ஒண்ணு...நம்ம பசங்களுக்கு நாமே இல்லாததும் பொல்லாததும் சொல்லி உறவைக் கெடுத்து வைக்கறோம்... நேராக்கவே முடியறதில்லே..."/

    ரசித்த வரிகள். நாக்கில் நரம்பில்லாமல் இறைவன் மனிதனை படைத்தது, அவர்களின் மனங்கள் கோணலாகிப் போவதற்குத்தானோ? என நினைக்க வைக்கிறது.

    மிகுதியையும் படித்து விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரைப்படத்தில் பிரிந்திருந்த சகோதரர்கள் இணைவதோடு கதை சுபம் என்று முடிகிறது.  நான் அங்கிருந்து அப்புறம் வரும் காலத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தேன்.  நான் அனுபவித்து எழுதிய வரிகளை எடுத்துக் காட்டி ரசித்த்தற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் உங்க கற்பனை ரசித்தேன். அதுதான் யதார்த்தம்னும் தோன்றியது....

      திரும்பவும் யாதோங்கி பாரத் பாட வேண்டிய அவசியம் வந்திருக்குமா வந்திருக்காதா!!!

      கீதா

      நீக்கு
  15. ஸ்ரீராம் இன்றைய செய்திகளில் - பாசாக்கிடுங்க இல்லைனா கட்டி வைச்சுடுவாங்க - மனதை என்னவோ செய்த செய்தி இதுதான். மற்றதெல்லாம் ம்ம்ம்ம்ம் நடக்கறதுதானேன்னு கடந்து போய்டலாம் ஆனால் இது ரொம்ப கஷ்டப்படுத்தியது.

    இதற்கு மேல் எனக்குப் பல சொல்லத் தோன்றினாலும் சொல்லாமல் போகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :(( இதை வைத்தே கதை கூட எழுதலாம்..  என்ன..   எழுதி அப்படியே பாதியில் நின்று விடும்!!!!

      நீக்கு
    2. ஹையோ ஹைஃபைவ்!!!! ஹைஃபைவ் ஸ்ரீராம்....உண்மை அதே தான்...என்னவோ மனசு ரொம்ப ஸ்லோவாகிக்கிடக்கு. ஒரு வேளை ஆமை முயல் கதையில் முயல் போல நானும் இருந்திருக்கிறேனோன்னு தோணும்....

      கீதா

      நீக்கு
  16. ஏகாந்தன் அண்ணாவின் அனுபவங்கள் குறிப்பாக பாஸ்போர்ட் issue செய்யும் பகுதி சரி பார்த்து கையெழுத்து போடுவது...அதுவும் லைப்ரரியில் காத்திருந்தவர் சொல்வது பாஸ்போர்ட் renewal.....என் அப்பாவின் அனுபவங்கள் சில நினைவுக்கு வந்தது. ஆனால் இங்கு பொதுவெளியில் சொல்ல முடியாது.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. (அப்போதெல்லாம்தான் கையில் மொபைல், வீட்டில் லேண்ட் ஃபோன் என்றெல்லாம் வசதிகள் இல்லாத கடுங்காலம். வாய்வழிச் செய்திகளே மந்தகதியில் வலம்வந்தன.//

    பல முக்கியமான செய்திகள் பரிமாற்றத்தில் .....இப்போது பல முக்கியமானச் செய்திகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் உதவியாகத்தான் இருக்கிறது. அந்தக்காலத்திலும் சில கஷ்டங்கள் இன்பங்கள் இருந்தன என்பது போல் இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியிலும் கெட்டதும் உண்டு நல்லதும் உண்டு. ஆனால் நம் பொதுவான மன நிலை நல்லதைப் பார்க்காமல் கெட்டதை மட்டுமே மனம் எடுக்கும். அது எக்காலமாக இருந்தாலும்! இதுதான் மாஸ் சைக்காலஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம் உங்க கவிதை சூப்பர். அலைபாயும் மனது. அலைபாயும் மனதிற்கு நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்ற புரிதல் இல்லாமல் அங்கும் இங்கும் அலை பாயும். உள் மனம் கேட்கும் ஏன் அலை பாய்கிறாய் நின்று யோசி எது முட்டுக்கட்டை என்று....ஆனால் புற மனம் போவோம் ஒரு ஃப்ளோல....வாழ்க்கைக் காற்று இழுத்துச் செல்லும் திசையில்னு!!

    உங்கள் கவிதையை வாசித்ததும் எனக்கு இப்படித் தோன்றியது ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ரவி சாரங்கன் அவர்களின் முதல் இரு பாரா - திருமணம் ஆனதும் இப்படிச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். நான் அடிக்கடி சொல்வது. படிக்கற காலத்துல இருந்தே என் அனுபவமும் கூட என்பதால். ஜோசியருக்கும் மேலே ஒரு சக்தி இருக்க அதை மிஞ்சிட முடியுமா என்ன?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் போட்ட முடிச்சுன்னு சொல்லி உட்டாலக்கடி செய்து சேர்த்து வைக்க முயல்கிறோம்.  அதெல்லாம் உட்டாலக்கடிதான்.  அவரவர் கையில் இருக்கிறது அவரவர் வாழ்க்கை.  தேவைப்பட்டால் பதம் பணிவதில் கூட தவறில்லை என்பதே என் கருத்தும்.  குடும்பம் ஒரு கதம்பம்.

      நீக்கு
  20. சிவாஜி - மோகன்லால் பகுதி ரொம்ப ரசித்து வாசித்தேன் சுவாரஸியமான விஷயங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. நாடகத்துள் நாடகம் - சஹஸ்ரநாமம் அவருடையது செம timing sense!! ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கதையைப் படித்த ஆசிரியர் சொன்னது - ஏழை பணக்காரன் -புன்னகை.
    மற்றது ஓகே!! அட்மிஷன் பிரச்சனை அப்பலருந்தேவா...

    கீதா

    பதிலளிநீக்கு
  23. யாதோங்கி பாரத் பாட்டு நினைவுக்கு வந்து 70 களுக்குக் கொண்டு சென்றது. அந்தப் பாடலைக் கேட்ட போது, எம்ஜி ஆரும் சந்திரமோகனும் படத்தில் பாடிய நாளை நமதே பாடலும் ஒலித்தது என் காதில்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நீங்கள் இரண்டையும் ரசித்திருக்கிறீர்கள் துளஸிஜி.  நன்றி.

      நீக்கு
  24. இறைநம்பிக்கை உள்ளவர்கள் ஒரு போதும் திருமணத்திற்குப் பிறகு சோதிடரை நாடிச் செல்ல மாட்டார்கள். இறைவனிடம் எல்லாத்தையும் ஒப்படைத்துவிட்டு "இறைவா நீதான் வழிகாட்ட வேண்டும்" என்று இருப்பார்கள். இறை நம்பிக்கையை விட சோதிடத்தில் நம்பிக்கை என்பது எங்கோ உதைக்கிறது. இது எனது தனிப்பட்டக் கருத்து.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​இல்லை. இறை நம்பிக்கை வேறு, சோதிடத்தை நாடுவது வேறு. இறைவனை நம்பி வேறெதுவும் செய்யாதிருப்பது ஒரு உயர்நிலை மனிதர்களுக்கே சாத்தியம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் சூப்பர்....துளசி இப்படிச் சொல்லும் போது நானும் உடன்பட மாட்டேன் வாதிடுவேன்....அப்படிச் சொல்லும் போது நிறைய கேள்விகள் எனக்கு வரும்.

      கீதா

      நீக்கு
  25. சிவாஜியைப் பற்றி மோகன்லாலின் அனுபவக் கருத்துகள் அருமையாக இருந்தது வாசிக்க. அப்படியான பெரிய மனிதர்களை நாம் இழந்துவிட்டோம். காலம் நகர்ந்து கடந்து கொண்டேதானே இருக்கும் அப்படித்தானே!. அவர்கள் இருந்த போது நாமும் கொஞ்சம் காலமேனும் இருந்திருக்கிறோம் என்பது மகிழ்வான விஷயமே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். சிறந்த சாதனையாளர்களை நாம் இழந்து வருகிறோம்.

      நீக்கு
  26. ஏகாந்தன் ஸாரின் அனுபவங்கள் வழக்கம் போல் நன்று. நிறைய விஷயங்கள் தெரிய வருகிறது.

    பொக்கிஷப் பகுதி ரசித்தேன்.

    நாடகத்தில் நாடகம் முடிந்த பிறகு அதில் சமாளித்த விஷயங்கள் என்று இப்படி வருபவற்றை பின்னர் வாசிக்கும் போது மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். லைவாக அல்லவா நடக்கும். அப்படி இன்றைய பகிர்வும் ஆச்சரியப் படுத்திய சுவாரசியம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  27. யாதோன் கீ பாராத் தொடர்ச்சியாகப் படம் வந்திருக்கா என்ன?

    பதிலளிநீக்கு
  28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராம் எழுதியிருப்பதை வைத்து யாதோன் கி பாராத் 2 எடுத்து விடலாம்.
    சென்ற வாரம், இந்த வாரம் இரண்டிலுமே ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் பற்றிய ஜோக்குகள்.. ம
    கவிதை ஸோ ஸோ!
    சரமாரியாகத் வசிப்பது கடினமாக இருந்திருக்கலாம், ஆனால் அதைப் பற்றி ஏகாந்தன் சார் கட்டுரை வெகு சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு
  30. *சோமாலியாவில் வசிப்பது என்று திருத்திக் கொள்ளவும். ஆட்டோ ஸ்பெல் செக் செய்யும் அட்டூழியம்!

    பதிலளிநீக்கு
  31. தேவிகாவை பேட்டி எடுக்கச் செல்பவர்களுக்கு நிறைய பொறுமை வேண்டும், குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் காக்க வைப்பார் என்று படித்திருக்கிறேன், நாடகத்தில் நடிக்கும் பொழுதே அப்படித்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை.  இருக்கலாம்.  வயதான நம் க்ரூப் மெம்பர்களைக் கேட்டால் அவர்கள் சொல்லக்கூடும்.

      நீக்கு
  32. என்றும் குழந்தையாக இருந்தால் நல்லதுதான்.
    சகோதர, சகோதரிகள் இளமையில் இருந்தது போல இருக்க முடிவது இல்லைதான்.
    ஸ்ரீராம் நீங்கள் பகிர்ந்த பாடல் முன்பு அடிக்கடி கேட்ட பாடல். அந்த இந்தி படம் பார்த்தது இல்லை. தமிழ் படம் "நாளை நமதே" பார்த்து இருக்கிறேன். நீங்கள் பகிர்ந்த கதை "யாதோங்கி பாரத்" படத்தின் தொடர்ச்சியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை நமதே படம் யாதோங்கி பாராத் படத்தின் தமிழ்த் தழுவல்.  சுகமாக,சேர்ந்து சுபம் என்று போட்ட பின் ஒரு கூட்டுக்குடும்பத்தில் என்னென்ன நடக்கும் என்று சிறிய கற்பனை செய்திருக்கிறேன்.  சிறுவயது முதல் சேர்ந்தே வாழும் அண்ணன் தம்பிகளே அப்புறம் அடித்துக் கொள்கிறார்கள்.  அறியா வயதில் பிரிந்து வாலிப வயதில் ஒன்று சேரும் சகோதரர்கள்?  அன்பு சகோதரர்களுக்கும் ஆனானப்பட்ட ரங்காராவே என்ன பாடு பட்டார் என்று உங்களுக்கே தெரியும்!!!

      நீக்கு
  33. நியூஸ் ரூமில் சொன்னது போல படிக்க ஆசை படும் பெண் குழந்தைகளை கல்யாணம் செய்து வைப்பது அந்தக் காலம் என்று நினைத்தால் இப்போதும் அது நடக்கிறது.

    நாடகத்திலும் (விளம்பரத்தில் பார்த்தேன்) அப்படித்தான் படிக்க ஆசை படும் பெண்ணுக்கு நல்ல இடம் வருகிறது என்று கல்யாணம் செய்ய போவதாய் காட்டுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  34. @ துளசிதரன்

    ///அப்படியான பெரிய மனிதர்களை நாம் இழந்து விட்டோம்.///

    திரையுலகமே ஒரு கட்டத்தில் அவரை வி&&& போன்ற கோமாளித் தனங்களால் புண்படுத்தியது..

    ஏன் இதே கேரளத்து இயக்குனர் ஒருவர் சிவாஜி அவர்களை நடத்திய விதம் அறிந்ததே... இதை வேறொரு படத்தில் மனோபாலாவும் விவேக்கும் செய்து காட்டி சிறுதமிழரை மகிழ்வித்தனர்..

    இந்த ஆள் நடிப்பை எப்படி இத்தனை நாள் சகித்துக் கொண்டீர்கள் என்று
    இங்கே வந்து வயிறு வளர்த்த ஒருவன் கேட்கவில்லையா?..
    மனோரமா மட்டும் தான் அப்போது கோபப்பட்டார்..

    பதிலளிநீக்கு
  35. //சினிமாவில் சுபம் என்று போட்டு நிறுத்துமிடத்தில் இருப்பது சுபம்தானா என்கிற கேள்விக்கு விடை காண முயற்சி!//

    நீங்கள் எழுதிய கதையா ஸ்ரீராம்.
    "யாதோங்கி பாரத்" படத்தின் தொடர்ச்சி இப்போது வந்து இருக்கிறது போலும் அதனை விமர்சனம் செய்து இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.

    வேலைக்கு போய் சம்பாதிக்காதவன் காதலித்து திருமணம் செய்து கொண்டான் என்று சுபம் போட்டு கதையை நிறைவு செய்து விடுவார்கள்.

    பின்னால் அவர்கள் எப்படி எல்லாம் வாழ்க்கை நடத்த கஷ்டப்பட்டார்கள் என்பதை சொன்னால் வருத்தம் தான்.

    அது போல தான் ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் , தம்பிகள் , அக்காள், தங்கைகள் அவர்களுக்கு என்று குடும்பம் , குழந்தைகள் என்று வந்த பின் பழைய மாதிரி இருக்க முடிவது இல்லை.

    ஆலமரம் மாதிரி பெரியவர்கள் இருக்கும் வரை தொடர்பு அறுந்து போகாமல் அன்பு பாலம் அமைத்து காப்பார்கள். அவர்களுக்கு அப்புறம் சில குடும்பங்கள் ஒற்றுமையாக இருக்கும், சில குடும்பங்கள் அவர் அவர் வேலையை பார்த்து கொண்டு இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அக்கா. அதைப்பற்றி சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தோம். சில நிகழ்வுகள்.. சில சம்பவங்கள்... இந்த வியாழனுக்கு அதை வைத்தே ஒன்றைப் புனைந்து விட்டேன்!

      இணைக்கும் பாலம் போன்ற அந்தப் பெரியவர்கள் மறையும் முன் அந்த பாலத்தை தொடர அப்போது வீட்டிலிருக்கும் மூத்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துச் செல்லவே வேண்டும் என்று தோன்றும்.  அது இயல்பாக நிகழவேண்டும்.  மனித மனங்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்!

      நீக்கு
    2. // நீங்கள் எழுதிய கதையா ஸ்ரீராம். //

      ஆம்.  ஒரு கற்பனை.  அப்போதும் கூட அவர்கள் பிரிவதாக எழுத தோன்றவில்லை.  பிரிந்து மறுபடி சேர்வதாகத்தான் எழுத வந்ததது!

      நீக்கு
  36. மற்ற எல்லா பகுதிகளும் படித்தேன்.
    உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
    இரேன் என்றால் நிற்க நேரம் தான் இல்லை.
    இன்று கே.வி மகாதேவன் அவர்கள் பிறந்த நாள் தொலைக்காட்சியில் அவர் இசை அமைத்த பாடல்கள் வைத்தார்கள். "ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே" பாடலை வைத்தார்கள் முதலாளி படத்தில் நடித்த போது தேவிகாவின் பெயர் பிரமிளா என்று சொன்னார்கள். முன்பே படித்த செய்திதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். பேஸ்புக்கிலும் கேவிஎம் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

      நீக்கு
  37. //... சோமாலியாவில் வசிப்பது கடினமாக இருந்திருக்கலாம், ஆனால் அதைப் பற்றி ஏகாந்தன் சார் கட்டுரை ..//

    கடினமாக இருந்திருக்க..லாமா ! பொதுவாகவே, ஆஃபிரிக்கக் கண்டத்து நாடுகளில் வாழ்வதில் பல இன்னல்கள், நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டியிருக்கும். வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்...என்று ஸ்ரீனிவாஸ்மாதிரி பாடிக் கடந்துவிடமுடியாது! தினப்படி வாழ்க்கையையைக் கடத்துவதேகூட (எந்நேரமும் வெடித்துவிடக்கூடும் என்கிற செக்யூரிட்டி பிரச்னை காரணமாக) சில சமயங்களில் மிரளவைக்கும்படி அமைந்துவிடும். ஆஃபிரிக்க அளவிலேயும்கூட, சோமாலியா வாழ்வதற்கு மிகவும் கடினமான நாடாகத்தான் அப்போதும் இருந்தது. இப்போது கேட்கவே வேண்டாம்...

    நான் ‘கடுங்காலம்’ என ஓரிடத்தில் குறிப்பிட்டதும், சோமாலிய வாழ்க்கையின் முரட்டு நெருக்கடிகள் பலவற்றையும் மனதில் நினைவுக்கொண்டுவந்துதான்.


    அன்பர்களின் கருத்துகளுக்கு நன்றி, நன்றி.

    பதிலளிநீக்கு
  38. நமது காலத்தின் சூப்பர் ஹிட் ‘யாதோன் கி பாரத்’ படத்தின் இரண்டாம் பாகம் அருமை! ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

    சிவாஜி பற்றி மோகன்லால் பகிர்ந்த தகவல்கள் சுவாரஸ்யம்.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
  39. இந்த வாரத்தின் அரட்டை - சிறப்பு. சிவாஜி குறித்த தகவல்கள், ஏகாந்தன் அவர்களின் நினைவுகள், யாதோன் கி பராத் எண்ணங்கள் அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!