புதன், 13 மார்ச், 2024

கோடை கால புன்சிரிப்பு !

 

நெல்லைத்தமிழன்: 

ஒரு பின்னூட்டத்தில் ஸ்ரீராம், 'ஹெல்மெட் போட்டுக் கொண்டால் உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளலாம் என்பது ஒரு சட்டம் என்பதை விட நல்ல யோசனை.  உன் உயிருக்கு ஆபத்து என்று அரசு அராஜகம் செய்யக்கூடாது. ' என்று சொல்லியிருந்தார். இது எப்படி சரியாக இருக்கும்?  இப்படியெல்லாம் சிந்தித்தால், பொதுவெளியில் சிகரெட் பிடிக்கக்கூடாது, குட்கா உபயோகிக்கக்கூடாது, போதை மருந்து விநியோகம் 'அறமல்ல', போதை மருந்து உபயோகிப்பது உங்களுக்கு நல்லதல்ல என்று அரசாங்கம் எதற்குமே சட்டம் போடாமல், 'ஆலோசனை' சொல்பவர்களாகிவிடலாமே.  (உடனே அரசாங்கம், மதுக்கடை என்று விவாதிக்கக்கூடாது)

# விபத்தில் மரணம் இறந்தவரின் குடும்பத்துக்கு மட்டும் துயரம் - பிரச்னை அல்ல. படுகாயம் அடைந்த ஒருவருக்கு மருத்துவ உதவி அளிக்க  - ஆதரவற்ற குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்க என்று பொதுப் பணம் விரயம் ஆகும் சாத்தியம் அதிகம். எனவேதான் தலைக் கவசப் பயன்பாடு ஒரு சட்டமாக அமுல் செய்ய வேண்டி இருக்கிறது. சட்டமாக இருக்கும்போதே மதிக்காத மக்கள் அரசின்  ஆலோசனைகளைக் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டார்கள்.

= = = = = = = =

எங்கள் கேள்விகள் : 

1) கோடை காலத்திற்கேற்ற காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்னென்ன? உங்களின் அனுபவத்தைக் கொண்டு கருத்து சொல்லவும். 

2) கோடை காலத்தில்  - பகல் பயணங்களில் நீங்கள் விரும்பி வாங்குவதில்  கீழ்க்கண்டவற்றுள் எது முதலிடம்?

வெள்ளரிப் பிஞ்சு / தர்ப்பூசணி / நுங்கு / மோர் / வேறு ஏதாவது .. 

3) புன்னகை / புன்சிரிப்பு சம்பந்தப்பட்ட சினிமா பாடல்களில் உங்கள் நினைவுக்கு உடனே வரும் பாடல்கள் என்னென்ன? 

= = = = = = = =

KGG பக்கம் : 

சென்ற வாரம் நான் எழுதியிருந்த என்னுடைய சேமிப்புப் பணம் பற்றி வாசகர்கள் சில கேள்விகள் கேட்டிருந்தார்கள். 

நான் சேமித்தது எதையும் வாங்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இல்லை. கையில் ஏதாவது பணம் இருந்தால் அது எப்பவுமே மனதை உற்சாகமாக வைத்திருக்கும். 

அந்த நாட்களில் நான் மிக மிக கருமித் தனமாக இருப்பேன். ( இப்போ மட்டும் என்ன! ) ரொம்ப நேரம் யோசனை செய்து, கையில் பத்து பைசாவை எடுத்துக்கொண்டு நாகை கடைவீதி கமலா ஸ்டோர்ஸ் வரை நடந்து செல்வேன். அப்படிச் செல்லும்போது பத்து பைசாவிற்கு என்னென்ன மிட்டாய்கள் கிடைக்கும் என்று சந்தோஷமாக எண்ணமிட்டபடி வீதியை வேடிக்கை பார்த்தபடி நடந்து செல்வேன். அந்த நினைவுகளே அப்பொழுது அவ்வளவு சந்தோஷமாக  இருக்கும். 

கடை அருகே சென்றவுடன் kgg யில் இருக்கும் karumi gunam என்னிடம் சில கேள்விகள் கேட்கும். 

" இந்தப் பத்துப் பைசாவை செலவழித்துவிட்டால் உன்னுடைய சேமிப்பில் பத்து பைசா குறைந்து போய்விடும் - தெரியுமா? " - 

" இதை இப்பொழுது செலவு செய்தே ஆகவேண்டுமா? " - 

" இப்போது என்ன அவசரம்? " - 

" மிட்டாய் சாப்பிடும் அந்த நேரம் மட்டும்தான் சந்தோஷம் - ஆனால் சேர்த்து வைத்தால் இன்னும் அதிக நேரம் சந்தோஷம் - அதை யோசி. " 

இப்படி பல கேள்விகள் எழுந்தவுடன், மிட்டாய் எதுவும் வாங்காமல் திரும்பி வந்துவிடுவேன்! அப்போதைக்கு கடைக்குப் போகும்போது வந்த இனிய சந்தோஷமான கற்பனைகளே போதும் என்று தோன்றியது உண்டு. 

என்னுடைய கருமி குணத்திற்கு நேர் எதிர் குணம் கொண்டவர் என்னுடைய சின்ன அண்ணன் விசு(வேஸ்வரன்) நான் JTS படித்த காலத்தில் அவர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரிட்சை பாஸ் செய்து விவசாய இலாக்காவில் கிளார்க் வேலையில் சேர்ந்துவிட்டார். 

வேலை கிடைத்துவிட்டது என்றவுடன் அவர் என்னிடம் " டேய் கௌதமா - சம்பாதிப்பது என்றால் என்ன? - எனக்கு மனசுல என்ன தோணுது என்றால் - ஒரு பெரிய கிடங்கில் நாணயங்கள் நிறைய கொட்டி வைத்திருப்பார்கள். நான் போய் அந்த காசுக் குவியலில் நீச்சல் அடிப்பது போல கைகளை வீசி - கையில் கிடைக்கின்ற பைசாக்களை அள்ளி அள்ளிப் பையில் போட்டுக்கொள்வது என்று தோன்றும் " என்பார். என்ன ஒரு கற்பனை பாருங்கள்! 

அவர் வேலை பார்க்க ஆரம்பித்ததும், ஒரு பெரிய திட்டம் வகுத்தார். அதாவது 'சேமிக்காமல் மாதா மாதம் வருகின்ற பணத்தை செலவு செய்வது தவறு. அதனால் ஒரு பாலிதீன் பையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ரூபாய் என்று சேமித்து வைக்கப் போகிறேன்' என்று சொன்னார். 

ஒவ்வொரு மாதமும் வரும்போது என் கண்ணுக்கு முன்னால் அந்தப் பையை எடுத்துக் காட்டி - " இதோ பார்த்தாயா - இப்போ இரண்டு ரூபாய் ஆயிற்று - இதோ மூன்று ரூபாய் " என்றெல்லாம் பெருமையாக சொல்லிவந்தார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு பார்த்தால் - 'அந்த சேமிப்பு ஐந்து ரூபாயை செலவு செய்து விட்டேன்' என்று சொன்னார்! 

வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில், அவர் வேலையில் சேர்ந்த திருவீழிமிழலை ஊரிலிருந்து நாகைக்கு வந்துவிடுவார். அப்படி வரும் சமயங்களில் நண்பர்களோடு அரட்டை, ஊர் சுற்றுதல் என்று சந்தோஷமாக பொழுதைக் கழிப்பார். நாகையில் புதிய சினிமா ஏதாவது ரிலீஸ் ஆகியிருந்தால் என்னையும் கூப்பிட்டுக்கொண்டு சினிமா பாக்கக் கிளம்பிவிடுவார். சிவாஜி படங்கள் என்றால், ஏற்கெனவே பார்த்த படமாக இருந்தாலும் இன்னொருமுறை பார்க்க என்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு சென்றுவிடுவார். 

நான் சென்னை வருவதற்கு முன்பு அண்ணனுடன் சேர்ந்து பார்த்த சினிமா குறைந்த பட்சம் இருபதாவது இருக்கும். 

= = = = = = = =

வால் : என்னுடைய சமீபகால facebook பதிவு : (சிரிக்க மட்டும்) 


= = = = = = =

62 கருத்துகள்:

  1. செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. தர்மம் வேறு..
    சட்டம் வேறு என்பது ஆன்றோர் வகுத்தது என்பார் கவியரசர்..

    சட்டத்தால் ஆகாதது தர்மத்தால் ஆகும்!..

    பதிலளிநீக்கு
  5. ஆனால் நடைமுறையில் தர்மம் இல்லையே...

    ( தர்மம் ன்றதே நடைமுறை
    தாங்காணும்!..)

    பழைய தஞ்சாவூர் பேச்சு வழக்கில் சொல்லிக் கொள்ளவும்..

    பதிலளிநீக்கு
  6. /// கையில் ஏதாவது பணம் இருந்தால் அது எப்பவுமே மனதை உற்சாகமாக வைத்திருக்கும். ///

    கோவணத்தில் ஒரு காசு இருந்தால் கோழி கூப்பிட பாட்டுவரும்!..

    பழந்தமிழ் சொல் வழக்கு..

    பதிலளிநீக்கு
  7. கோவணத்தில் ஒரு காசு இருந்தால் கோழி கூப்பிட பாட்டு வரும்!..

    இந்த வரிகளுடன் திரைப்படப் பாடல் ஒன்றும் வந்திருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை. நான் கேட்டது இல்லை!

      நீக்கு
    2. Sபாடல் வரிகளில் தவறில்லை. விவசாயிகள், எளியோரின் ஒரே உடை அது. அதில்தான் சில்லரையை முடிந்துவைத்துக்கொள்வார்கள். கோழி கூப்பிட- வெள்ளென, வயலுக்குச் செல்லும்போது கையில் காசு இருக்கும் தெம்பில் பாட்டு தானாக வாயில் வரும். எப்போதுமே நம்மிடம் காசு இருந்தால் கவலை குறைவு

      நீக்கு
    3. விளக்கம் கூறியதற்கு நன்றி.

      நீக்கு
  8. கௌதம் ஜி அவர்களது தொகுப்பு அருமை..

    எனது இளமைக் காலம் நினைவுக்கு வந்தது..

    நானும் இப்படித்தான் இருந்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கனம் என்று இருந்தாலும் சேமித்து வைக்கின்ற பழக்கம் இருந்ததில்லை ...
      இப்போது யோசிக்கின்றேன்..

      நீக்கு
  9. அன்றைக்கு தஞ்சை பேருந்து நிலையத்திலிருந்து சரபோஜி கல்லூரி வரை பத்து பைசா தான் டிக்கெட்..

    பதிலளிநீக்கு
  10. அதைக் கொடுக்க சிரமப்பட்ட நாட்களும் உண்டு..

    அப்படியிருந்தும் இன்றுவரை நல்ல புத்தி இல்லை.. சேமித்து வைக்கும் குணம் இல்லாமல் போயிற்று..

    பதிலளிநீக்கு
  11. எதிர்காலத்தை நினைத்து, தேவையில்லாமல் எதுக்கு செலவழிக்கணும்? சேமித்து வைத்தால் பிறகு பயன்படும் என்றெல்லாம் நினைத்து, பல வழிகளிலும் சிக்கனமாக (கருமியாக அல்ல) இருந்தால், அதனை பசங்க புரிந்துகொள்ள மாட்டாங்க. வாழ்க்கை வாழ்வதற்கேன்னு நினைப்பாங்க. இதுனால உங்களுக்குச் சிக்கல்களோ, பசங்களோட இயல்பான, வெறுப்புன்னு சொல்ல மாட்டேன், டிஸ்ப்ளெஷர் ஏற்பட்டிருக்கா?

    பதிலளிநீக்கு
  12. எனக்கு, ஒரு டிவிஷனின் முழு அதிகாரம் கொடுக்கப்பட்டபோது, என் பாஸ், we are custidion of funds. இதை நினைவில் வைத்துத்தான் எல்லாம் செய்யணும் என்றார். என் பெரியப்பாவிடம் சிறிய வயதில், ஏன் நீங்க செலவழிப்பதில்ஙை, (ஊர்ல அவரை விட பாதியளவு பணம்கூட இல்லாதவர்கள் பண்டிகைகளுக்கு மற்றும் பலவற்றிர்க்கு நிறைய செலவழித்து என் மனதை ஏக்கமுறச் செய்வார்கள்) என்று கேட்டதற்கு அவர் அப்கோதும் இதையே சொன்னார். We are custodian of funds. இது என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது

    பதிலளிநீக்கு
  13. எதிர்காலத்தில் ஒரு மிட்டாய் தருவேன். அது வரை மானமிழந்து மதிகெட்டு அடிமையாயிரு என்றால் அதைப் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  14. கோவணம் ன்னதும்
    " ஆ" - ன்றார்.. கௌதம் ஜி..

    கோவணம் ன்றது சப்பாணியான் கட்டிண்டு வந்து கலவரப் படுத்துனது இல்லைய்..

    முழங்கால் வரையிலான அரையாடை..

    தேவாரத்தில் இது சொல்லப்பட்டு இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய புதன் பதிலில் ஒற்றை கேள்வியாயினும் நல்ல கேள்வி பதில்.

    தங்கள் பக்கம் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதைக்குறித்து வந்த கருத்துரைகளும் அருமை.

    மனம் சம்பந்தப்பட்டதுதானே பணம்.முன்னதில் இரண்டு சுழியென்றால் பின்னதில் மூன்று சுழி. மொத்தத்தில் நம் சுழி இந்தப்பிறவியில் நன்றாக அமைந்தால், பணம் நம் பின்னாடி அடிமையாக வரும். பணத்தை முன்னே விட்டு நாம் அதை தேடிச் செல்ல வேண்டாம். ஆனால், வாழ்வே ஒரு மாயைதானே..! கமல் பாடல் நன்றாக உள்ளது.

    கோடைக்கு என்றல்ல..! எப்போதுமே எளிதில் ஜீரணமாகும் உணவு இட்லி, மோர் சாதம். தொட்டுக்கொள்ள ஏதாவது காய்கறிகளை வைத்து தயாரிக்கும் கறி. அல்லது கூட்டுக்கள். அவ்வளவாக எண்ணெய்யின் தயவில் இல்லாத இந்த உணவுகள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காதவை. (ஆனால் இந்த நாக்கு இருக்கிறதே அது நம் நலனை என்றுமே நினைத்துப் பார்க்காத ஜென்மம். அதை மட்டும் அடக்க தெரிந்து விட்டால், நலம் நம் கையில்.:)) )

    வெயில் கால பயணங்களில், இளநீர் பருகலாம். நுங்கு, வெள்ளரி போன்றவை இப்போது சமயங்களில் உடல் நலத்தை பாதிக்கிறது. ஆசைக்கு ஒன்று என எடுத்துக் கொண்டால் பாதகமில்லை. இந்த இடத்தில் நாக்குடன் சேர்ந்து ஆசையையும் அடக்க தெரிந்திருக்க வேண்டும்.

    "புன்னகை மன்னன் பூ விழி கண்ணன்" "சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ" என்ற பாடல்கள் சட்டென நினைவுக்கு வருகிறது. நிறைய பாடல்கள் உள்ளது. யோசிக்க வேண்டும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. Kgg பக்கம் சிறுவயதிலேயே மிட்டாய் வாங்காமல் வந்தது அவருக்கு அப்பொழுதே மனக்கட்டுப்பாடு இருந்திருக்கிறது.நாம் எல்லாம் ஹி...ஹி. அதுதான் எங்கள் வீட்டில் கடைக்குச் சென்று மிட்டாய் வாங்க 'தடா' போட்டிருந்தார்கள்.


    காலை உணவு கஞ்சி.
    மதியம் தயிர்சாதம் அல்லது சாம்பார்சாதம்.

    இரவு ஆவியில் அவித்த உணவு.

    "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்"தான் ஞாபகத்தில் வந்தது.

    பதிலளிநீக்கு
  17. ஆமாம் ஹெல்மெட் இடுவது இடுபவருக்கு மட்டுமல்ல அவரது கவனக்குறைவால் நேரும் எல்லாவிதமான பிரச்சனைகளை இல்லாமல் செய்யும் ஒன்று என்பதால் கட்டாயப்படுத்த வேண்டியது அவசியம். ஆனால் சில நேரம் கோபத்தால் நிறுத்தாமல் போகும் ஹெல்மெட் இடாத ஒருவரை லத்தி எறிந்து விழ வைத்து அவர் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது கொடுமை. பொது மக்கள் மனதில் சட்டங்களை மீறுவது அநாகரீகம், ஆபத்து விபத்து எனும் எண்ணம் வளர்ந்தால் நல்லது. அது நம் சமூகத்தில் சிரமம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. கேஜிஜி ஸாரின் அனுபவங்கள் சுவாரசியம். 10 பைசா - எல்லோராலும் அப்படிச் செல்வழிக்காமல் இருக்க முடியாது அதுவும் மிட்டாய் பார்த்துவிட்டால் வாங்காமல் திரும்புவது என்பது.

    நானும் அப்போதெல்லாம் கண்டிப்பாகச் சினிமா பார்த்துவிடுவேன். சம்பாதிக்கத் தொடங்கிய போதும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலைக்காட்சி எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் சினிமா என்பது மூன்று மணி நேர சொர்க்க உலகம்.

      நீக்கு
  19. சென்னையில் இருந்தப்ப வண்டி ஓட்டும் போது ஹெல்மெட் போட்டுக் கொண்டு ஓட்டியதுண்டு. ரொம்பவே சங்கடமாகத்தான் இருக்கும். என் ஹெல்மெட் சரியாகத் தலையில் பொருந்தியும் இருக்காது. கரெக்ட்டாக இருக்காது லூசாகத்தான் இருக்கும். அதன் கனம் வேறு. சட்டிப்பானை போன்றது வாங்க நினைத்து அதுவும் வொர்க்கவுட் ஆகலை. . வியர்க்கும். கூடவே ஹியரிங்க் எய்ட் வேறாச்சா....ரொம்ப சிரமமா இருக்கும். ஆனாலும் நம் பாதுகாப்பிற்காக இல்லையா? அதை நினைத்து போட்டுக் கொண்டாலும், ஒரு வேளை நான் கீழே விழ நேர்ந்திருந்தாலும் நான் சரியும் போதே ஹெல்மெட் கீழே விழுந்து உருண்டு ஓடியிருக்கும்!!! அப்படி என் தலையில் பொருந்தாத தலைக்கவசம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. கோடைகால உணவு - காரமில்லாம எண்ணை இல்லாத, பொரிக்கும் உணவு இல்லாத சமையல்தான். புளியும் கம்மி

    ராகி/சோள/கம்பு மாவு ஏதாவது ஒன்று - one dish law - எங்க வீட்டுல சில சமயம். எல்லா காய்களும் போட்டு கஞ்சி போல செய்வதுண்டு. நல்ல ஃபில்லிங்க். படம் எடுத்திருக்கிறேன் திங்கவுக்கு அனுப்ப.

    ராத்திரி பெரும்பாலும் ஓட்ஸ் + கெட்டி மோர் கலந்ததுதான்.

    நான் சுண்டல், தயிர்ப்பச்சடி இப்படியே ஓட்டிடுவேன்!!!

    பொதுவா கோடைகாலத்தில் ஜில் என்று தண்ணி, ஜூச் குடிக்கத் தோன்றும் ஆனால் குடிக்கக் கூடாது!

    கீதா
    கீதா

    பதிலளிநீக்கு
  21. கோடைகாலத்தில் வெளியில் நுங்கு பார்த்தா வாங்கிவிடுவேன். பிஞ்சு வெள்ளரியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கௌ அண்ணா, நானும் அப்படித்தான் வாங்கணுமா வேண்டாமான்னு யோசிச்சே காலத்தை ஓட்டிடுவேன். ஹாஹாஹா அப்ப. ஆனாலும் சிலதை விட மாட்டேன்.

    ஆனா முக்கியமானதுனா உபயோகமா இருக்கும்னா கண்டிப்பா வாங்கிவிடுவேன். சிக்கனம் உண்டு. ஆனால் கஞ்சூஸ் இல்லை .

    இப்ப தண்ணி செலவழிப்பதில் படு சிக்கனம். சென்னைல டம்ப்ளர் முதற்கொண்டு தண்ணீர் சேமித்து வைத்த அனுபவம் உண்டு! இங்கு பயன்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். சென்னை அனுபவங்கள் இப்போ நமக்கு வழிகாட்டி.

      நீக்கு
    2. ஆம். சென்னை அனுபவங்கள் இப்போ நமக்கு வழிகாட்டி.

      நீக்கு
    3. எனக்கு சென்னை மட்டுமல்ல..! மதுரை திருமங்கலத்திலும் வருடந்தோறும் இதே பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். இங்கு வந்து பத்து வருடங்கள் நிம்மதியாக இருந்தது. இதோ மறுபடியும் தண்ணீருக்காக தவம். ஆண்டவா..! எப்போது இந்நிலை முடியுமென்றிருக்கிறது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. கமலாக்கா இங்க ஊர் மக்களுக்குத் தண்ணிய எப்படி செலவழிக்கணும்னு தெரியலை.

      மழை பெய்தால்தான் தீர்வு வரும். மார்ச்சுல வழக்கமா பெய்யும் இந்த முறை பெய்யாதாம். மே மாசம்தான் பெய்யுமாம்...என்னவோ போங்க...ஹூம் என்ன சொல்ல?

      கீதா

      நீக்கு
  23. அப்பா பஸ்ஸுக்குக் கொடுக்கும் காசைச் சேமித்து வைத்துக் கொண்டு சாயங்காலமா பழைய கீழ்ப்பாலத்தோடு வீட்டுக்கு நடந்து வரும்போது ஐந்து பைசாவுக்குப் பக்கோடா வாங்கிச் சாப்பிடுவேன். மீதிப் பைசா சேமிப்பு. அம்மாவிடம் கொடுப்பேன். பின்னால் அப்பாவுக்குத் தெரிய வந்ததும் பஸ்ஸுக்குக் காசு கொடுக்காமல் பாஸ் வாங்கிக் கொடுத்துட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :}

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க அப்பா படு சமர்த்து!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      நலமா? எப்படி இருக்கிறீர்கள்? உங்களை இன்று இங்கு கண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து தங்களால் முடியும் நேரத்தில் வாருங்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  24. புழுங்கலரிசியை வறுத்து விட்டுக் காய்கள், வெந்தயம், பாசிப்பருப்போடு சேர்த்துக் கஞ்சி போட்டு விட்டு மோர் விட்டுச் சாப்பிடலாம். தொட்டுக்க மாங்காய் ஊறுகாய். துண்டம் மாங்காய். அதிலேயே தக்காளியையும் சேர்த்து உப்பு, மிளகு, ஜீரகம் போட்டு நீர்க்க வைத்து மிளகு அப்பளம் வாட்டி நெய்யை அப்பளத்தில் விட்டுக் கொண்டும் சாப்பிடலாம். வீட்டில் யாரும் இல்லைனால் எனக்கு மட்டும் தான் சாப்பாடு எனில் இதான் என் பிடித்த உணவு.

    பதிலளிநீக்கு
  25. என் சித்தப்பா ஒருத்தர் ஜிவாஜி ரசிகர். சின்னமனூரில் மருத்துவராக இருந்தார். அவர் அப்படித்தான் ஜிவாஜி படம் வந்தால் உடனே கூட்டிப் போயிடுவார். பார்த்தாச்சுனு சொன்னாலும் விட மாட்டார். இப்படித்தான் உயர்ந்த மனிதன் படத்தை ஒரு பத்துத் தரமாவது பார்த்துத் தொலைச்சிருப்பேன், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  26. சேமிப்பின் ருசியால் மிட்டாய் ருசி அடங்கி போய் விட்டது சாருக்கு. செலவு செய்யாமல் கற்பனையில் மிட்டாய் ருசியை அனுபவித்து விட்டது பெரிய விஷயம் சிறு வயதில்.

    அண்ணன் சேமிப்பை பின் மகிழ்ச்சியாக செலவு செய்யபட்டது. உங்கள் சேமிப்பை என்ன செய்தீர்கள் என்று சொல்லவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் சேமிப்பு அம்மாவால் செலவழிக்கப்பட்டது

      நீக்கு
  27. 3) புன்னகை / புன்சிரிப்பு சம்பந்தப்பட்ட சினிமா பாடல்களில் உங்கள் நினைவுக்கு உடனே வரும் பாடல்கள் என்னென்ன?

    சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ! பாடல் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  28. சேமிப்பு குறித்த சிந்தனைகள் நன்று. சிறு வயதில் எங்களிடம் காசு புழக்கம் இருந்ததே இல்லை - விருந்தினர் தரும் காசு கூட அம்மாவிடம் சென்றுவிடும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!