செவ்வாய், 19 மார்ச், 2024

சிறுகதை  -  கொத்தமல்லி  -  துரை செல்வராஜூ 

 கொத்தமல்லி

துரை செல்வராஜூ 

*** *** ** *** *** 
" வித்யா!.."  காமாட்சியம்மாளின் அழைப்பு..

" இதோ வந்துட்டேன் அத்தை.. " - என்றபடி சமையற்கட்டுக்குள் வந்தாள் கூடத்தில் இருந்த வித்யா..

அன்பின் மருமகள்.. நல்ல அழகு.. அறிவு..

" ரசம் இறக்கிட்டேன்.. வாழக்காய் கூட்டு உங்க மூனு பேருக்கும் வச்சிக்க.. என்னய கணக்கு ல சேர்த்துக்க வேணாம்.. ரெண்டு நாளா முழங்கால் வலிக்குது.. "

" அப்ப உங்களுக்கு பீன்ஸ் பொரியல் பண்ணித் தரவா?.. "

" பீன்ஸ் கொஞ்சம்.. கேரட் கொஞ்சம்  இருக்கு.. வாழக்காயும் இருக்கே.. நாளைக்கு ஏதாவது செஞ்சுக்கலாம்.. இன்னிக்கு எல்லாருக்குமா அப்பளம் பொரிச்சிடு.. அருண் வந்ததும் உங்க ரெண்டு பேருக்கும் தயிர் பச்சடி பண்ணிக்க.. மாமாவுக்கு தயிர் பச்சடி வேண்டாம்.. நாலு நாளா நெஞ்சு சளி.. அவருக்கு.."

" சரிங்க அத்தை.. "

" நா கொஞ்ச நேரம் படுக்கறேன்.. அவருக்கு இன்னமும் ஊர் கதை பாக்கியிருக்கு போல.. புள்ளயார் கோயில் கும்பாபிஷேகம் முடிஞ்சதும் போதும். மனுசனுக்கு அங்கேயே பொழுது போகுது.. "

வித்யா புன்னகைத்துக் கொண்டாள்..

காய்கறி எல்லாம் காலையிலேயே மார்க்கெட்டுக்குப் போய் வாங்கி வந்து விடுவார் சுந்தரம்.. காய்கள் பார்த்து வாங்குவதில் நல்ல சாமர்த்தியம்.. அதுவுமின்றி   விட்டல் முதற்கொண்டு  மாமாவுக்கு ஏகப்பட்ட தோழர்கள் மார்க்கெட்டில்..

திருவையாறு திருக்காட்டுப்பள்ளி ஏவாரிகளும் நல்ல பழக்கம்.. அந்தக் காலத்து சிநேகிதர்கள்..

" ஆ.. ஊ.. " என்று சத்தம் போட்டு ஐந்து பத்து குறைத்து விடுவார்.. 

" இவன் இப்படித்தாம்மா... ஆயிரம் ரூபா யானைய அஞ்சு ரூவாய்க்கி வாங்கிடுவான்.. ஆனா அங்குசத்தோட யான வர்றது தெரியாம   அங்குசத்துக்குத் தனியா வெலை கொடுத்து  வாங்குவான்.. " என்று சிரிப்பார்கள்..

மாமாவுடன் மார்க்கெட்டுக்குப் போனாலும் அத்தையுடன் போனாலும் தனி மதிப்பு..

' வாத்தியார் மருமக.. ' என்று தனி மரியாதை..

இருந்தாலும் வீட்டுக்குள் அத்தை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்..

" விட்டல் ஒருத்தன் தான் னு இல்லை.. இவரோட கூட்டாளிங்க எல்லாமே இப்படித் தான்.. எப்படா புன்னகை அரசர்  வந்து மாட்டுவார்.. ன்னு  இவருக்காகவே வாடி வதங்குனதை  எல்லாம் சேர்த்து வெச்சிருப்பாங்க.. "

- என்று சிரிப்பார் காமாட்சியம்மாள்..

இதெல்லாம் சும்மா நாடகம் என்பது வீட்டில் எல்லாருக்கும் தெரியும்..

கல்யாணம் ஆன இரண்டாவது மாதம் அருணும் வித்யாவும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போன போது அங்கே  மண்டபத்துக் கடையில் சதுரமாக பெரிய தோசைக்கல் வாங்கி வந்ததில் இருந்து தோசை வார்க்கும் போதெல்லாம் மாமாவுக்கு என்று  முறைகளுக்கு  நெய் மணக்க மணக்க ஒரு தோசை கிடைத்து விடும்..

ருசிக்கும் இசைக்கும் அடிமைகள் ஆயிற்றே இந்த ஊர்க்காரர்கள்.. சுந்தரம் மட்டும் விதி விலக்கா என்ன!.. 

முறுக முறுக முதல் தோசைக்கு அப்புறம் - இன்னொன்று!.. - என்று கேட்கும் போது காமாட்சியம்மாள் கண்களில் பத்ரகாளி என கனல் பறக்கும்...

இன்றைக்கும் அப்படித்தான்..

முதல் நெய்த் தோசைக்கு அப்புறமும் சுந்தரம் மலர்ந்த விழிகளுடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும்  " நெய்த் தோசை போதும் எழுந்திருங்க!.. " - என்றார் காமாட்சியம்மாள்..

" நெய்யா!..  தோசையா?.. நான் பார்க்கவே இல்லையே.. ஏம்மா வித்யா.. நீ பார்த்தே?.. "

" இல்லீங்களே மாமா!.. " குறும்புடன் புன்னகைத்தாள் அவள்..

" ரெண்டு பேரும் பார்க்காமத் தான் பாட்டில்ல நெய் குறையுதாக்கும்... "

" அதானே.. எப்டிக் குறையும்?.. "

" என்னயக் கேக்கறீங்களா?.. "

" அது.. வந்து.. நான் தான் சொன்னேன்..  முருங்கக் கீரையும் பூவும் நெய்யில பொரிச்சு அவனுக்குக் கொடும்மா.. கொழுக் மொழுக் ன்னு கிருஷ்ணன் வந்து பொறப்பான் னு.. அதனால நெய் குறைஞ்சு இருக்குமோ.. "

புன்னகைத்தார் சுந்தரம்

வித்யாவுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை..

" ஓஹோ.. அப்பிடிப் போகுதா கதை.. "  - காமாட்சியம்மாளிடமும் குறுநகை..

" வெண்ணெயும் நெய்யும் ஓரளவுக்குத் தான் சேர்த்துக்கணும்.. ரொம்பவும் தின்னா பக்கத்துல வீட்டு சௌதாமினி இருக்காளே.. அவ மாதிரி பெரிய இடுப்பு தான்.. " 

சௌதாமினி பக்கத்தில் குடியிருக்கும் சேட்டு வீட்டுப் பெண்.. சின்ன வயது தான்..  உருண்டு திரண்டு குதிர் மாதிரி இருப்பாள்..

" ஏன்.. கொடியிடைக் குமரிகள் அவங்கள் லயும் இருக்காங்க தானே!.. "

" அது யாரு கொடியிடைக் குமரி?.. "

காமாட்சியம்மாளிடம் கேள்வி..

" அது இருக்கட்டும்.. மாசம் அஞ்சு கிலோ ஊத்துக்குளி வெண்ணெய் வாங்கி உருக்குறது எதுக்காகவாம்?.. "

" வெண்ணெய் வாங்கி உருக்குறது எல்லாம்  சரிதான்.. உங்களத் தான் நெய்யெல்லாம் ஜாஸ்தியா சேத்துக்க வேணாம்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார் ல.."

" அவருக்கென்ன அவர் அப்படித்தான் சொல்லுவார்.. "

மீண்டும் தோசைக்கல்லில் நெய் வாசம் கமழ்வதை உணர்ந்த  காமாட்சியம்மாள் -  " மாமனாரும் மருமகளும் அடிக்கிற கூத்தா இது!?.. " செல்லமாகக் கடிந்து கொண்டார்..

இப்படியாகப் போகின்ற பொழுதுகளில் -  இன்று மதியத்துக்காக சோறு வடித்து முருங்கைக்காய் கேரட் சின்ன வெங்காயம் போட்டு சாம்பாரும் தக்காளி ரசமும் வைத்து இறக்குவதற்குள் காமாட்சியம்மாள் களைத்து விட்டார்.. 

கூடத்தில் தலை சாய்த்த நேரம்... சுந்தரம் வந்து விட்டார்..

" என்ன காமாட்சி.. சாப்பிடலையா.. மணி பன்னண்டு ஆகுதே.. "

" ஊர் நியாயம் எல்லாம் இப்ப தான் முடிஞ்சதா உங்களுக்கு.. வித்யா கிட்ட சொல்லி இருக்கேன்.. " 

" ஏன் என்ன செய்யுது உனக்கு?.. " - சுந்தரத்தின் குரலில் பரிவு...

" அது பங்குனி வெயில் வர்ற வரைக்கும் இப்படித் தான்.. தை மாசக் குளிரு ஒத்துக்கலை.. "

" ஒன்ன யாரு சூரியனுக்கு முன்னால எழுந்திரிக்கச் சொன்னது?.. இன்னும் பதினெட்டு வயசு ன்னு ஒனக்கு நெனப்பா?.. "

" மாமா.. வாங்க சாப்பிடலாம்.. "

" சரிம்மா.. இதோ வர்றேன்..."

பத்து நிமிடங்கள் ஊர்ந்த நிலையில் களுக்.. களுக்.. என்ற விக்கலுடன் நாற்காலி  சாய்ந்த பெருஞ்சத்தம்..

" மாமா.. ' - வித்யாவின் வீறல்..

வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த காமாட்சியம்மாள் அடுக்களைக்கு ஓடினார்..

அங்கே தரையில் மல்லாக்க விழுந்து கிடந்தார் சுந்தரம்.. அவரை இழுத்துத் தன் மீது சாய்த்துக் கொண்டு மலங்க மலங்க விழித்த வித்யாவின் கண்களில் கண்ணீர்...

மூச்சு விட முடியாமல் திணறலுடன் சுந்தரம்.. விழிகள் சிவந்திருக்க கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..

" மகமாயி.. மகமாயி... " ஒன்றும் புரியவில்லை காமாட்சியம்மாளுக்கு..

" ரசஞ்சோறு பிசைஞ்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க..  திடீர்ன்னு விக்கல்.. பக்கத்துல தண்ணி எடுத்துக் குடிக்கிறதுக்குள்ள கீழ சாஞ்சுட்டாங்க.. "

" தண்ணியக் குடிங்க.. மாமா தண்ணியக் குடிங்க.. . " -  என்று ரெண்டு பாட்டில் தண்ணீரைக் கொடுத்த வித்யா ஏதோ நினைவுடன்  " மாமா.. வாய்ல விரல விட்டு வாந்தி எடுக்கப் பாருங்க... "  என்றாள்..

சுந்தரத்தின் காதுகளில் எதும் விழவில்லை..

" ஏம்மா?.. "  காமாட்சியம்மாளுக்கு பதில் சொல்லாமல் - மேசையில் இருந்த தூள் உப்பை எடுத்து சுந்தரத்தின் வாயைத் திறந்து நெல்லளவு இட்டாள்..

அடுத்த விநாடியில் குபீரென வித்யாவின் மேலாடை  பாழாகியது.. மறுபடியும் ஒருதரம் பாழாகியது..

விழித்து நோக்கிய சுந்தரம் மருண்ட விழிகளுடன் தொண்டைக் குழியில் கை வைத்துக் காட்டினார்..

" ஒன்னும் புரியலயே.. " - காமாட்சியம்மாளிடம் பதற்றம்.. 

" ஆம்புலன்சுக்கு சொல்லுவமா?.. "

சற்றே பயந்து விட்டாள் வித்யா..  மெல்ல சுந்தரத்தின் வாயைத் திறந்து உற்று நோக்கியவள் மின்னலென வலக்கை சுட்டு விரலுடன் பெரு விரலையும் சேர்த்து வாயினுள் விட்டாள்..

மறு நொடியில் சுந்தரத்தின் தொண்டைக்குள் சிக்கியிருந்த கொத்தமல்லித் தழை வெளியே வந்தது..

நிமிர்ந்து உட்கார்ந்து புன்னகைத்த சுந்தரம் கண்களைத் துடைத்துக் கொண்டார்..

" அதான் அன்னைக்கே திருச்செந்தூர் ல முருகன் தல எழுத்த மாத்தி எழுதிட்டானே.. " 

அவரது கண்களில் பரவசம்..  வித்யாவின் முகத்தில் நிம்மதி..

" கொத்த மல்லித் தழ எல்லாத்தையும் கிள்ளிப் போட்ட நான்.. இத மட்டும் கவனிக்காமப்  போட்டுட்டனே.. " - காமாட்சியம்மாள் பதறினார்..

 "தப்பு என்னுது தான் காமாச்சி.. சாப்புடுறப்ப ஓரமா எடுத்து வைச்சிடுவோம் ந்னு நெனச்சேன்.. மறந்துட்டேன்.. குழையப் பிசைஞ்சதுல சரியா கவனிக்கலை.. பயந்துட்டியா?.. "

 " பின்னே.. பயப்படாம.. " - கண்களில் ஆனந்த நீர்த் திரளுடன் வித்யாவின் மேல் சாய்ந்திருந்த கணவனை வாங்கித் தன் மார்பில் சாய்த்துக் கொண்டார் காமாட்சியம்மாள்..

" நூறு வருசம் சுமங்கலியா இருப்பாய் நீ !.. " 

சுந்தரம் புன்னகைத்தபோது -

" மா ஜீ!.. க்யா  லப்டா.. க்யா முஷ்கில்?.. "

பக்கத்து வீட்டு சௌதாமினி வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தாள்..

***

41 கருத்துகள்:

  1. ஆஹா அருமைமான குடும்பக் கதை.

    நெய்முறுகல் தோசைபோல மணக்குது. இன்று கும்பகோணம் மங்களாம்பிகாவில் கிடைக்குமா இல்லை நாளை காலையிலா தெரியவில்லை

    பதிவர் ஒருவர் நினைவுக்கு வந்து சோக முடிவோ எனப் பதறினேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை மண்ணின் பாரம்பர்யங்களின் ஒன்றான நெய் சுருள் தோசையை குடந்தை மங்களாம்பிகாவில் இருந்து நினைவு செய்தமைக்கு நெல்லை அவர்களுக்கு நல்வரவு..

      தங்களுக்கு - இத்தளத்தின் வாயிலாக என்றைக்குமே பதற்றம் நேராது..

      பொங்கல் பானைக்குள் இருந்து ஒரு நாளும் பூரி மசாலா வராது!..

      தங்களது அன்பின் கருத்துக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. நல்ல சந்தேகம், நல்ல தீர்ப்பு. நன்றி.

      நீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் சித்திரத்துடன் அழகு தந்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. /// பக்கத்து வீட்டு சௌதாமினி வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தாள்.. ///

    சௌதாமினிக்கான வர்ணிப்பு -

    /// சௌதாமினி பக்கத்தில் குடியிருக்கும் சேட்டு வீட்டுப் பெண்.. சின்ன வயது தான்..  உருண்டு திரண்டு குதிர் மாதிரி இருப்பாள்.. ///

    கதையை தட்டிக் கொண்டிருந்த போது சட்டென்று வந்த பெயர் - சௌதாமினி...

    இதற்கு என்னடா அர்த்தம்?.. என்று தேடியபோது மின்னல் போன்றவள் என்றார் காடு காத்த ஐயனார்..

    இது மாதிரி ஒரு சில - எனது உருவாக்கத்திற்குள்...

    இனிமேல் அவ்வப்போது அதுவும் பகிர்வில்!..

    பதிலளிநீக்கு
  6. தொண்டையில் கொத்தமல்லி சிக்கிக் கொண்டாலும் மணக்கிறது!

    நன்றாக இருக்கிறது துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா .. தங்களுக்கு நல்வரவு..

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. கொத்தமல்லித் தழையைக் கிள்ளிப் போடுவதிலும் கறிவேப்பிலையை உருவிப் போடுவதிலும் சற்றே கவனக்குறைவு எப்படியோ நேர்ந்து விடுகின்றது..

      நீக்கு
  7. நீதான் மர மண்டை ஆயிற்றே... உனக்கு எப்படி இம்பூட்டு அறிவு என்று?...

    அன்பர்களுக்கு ஐயம் வரலாம்!..

    இதெல்லாம் நான் தட்டுவதே இல்லை..

    பிறகு!?..

    வேறொரு சமயத்தில் பேசுவோம்!..

    பதிலளிநீக்கு
  8. ..பொங்கல் பானைக்குள் இருந்து ஒரு நாளும் பூரி மசாலா வராது!//

    ஆஹா..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன் தங்களுக்கு நன்றி..

      மகிழ்ச்சி..

      நீக்கு
    2. எனக்குப் பொங்கலும் பிடிக்கும்; பூரி மசாலாவும் பிடிக்கும்!

      நீக்கு
    3. KGG sir..சிலது காம்பினேஷன் அல்ல, நமக்குப் பிடிக்கும்னாலும். உதாரணம் இட்லி மெதுவடை. பொங்கல் வடை. அதாவது இரண்டு ஆயில் ஐட்டங்கள் காம்பினேஷனாகாது பூரிமசால் பொங்கல், நெய்ரொஸ்ட் வடை

      நீக்கு
  9. அதனாலதான் சாப்பிடும் போது பேசக் கூடாது என்றும், சாப்பாட்டில் கவனமாக இருக்கணும் என்பதும் எல்லாவற்றையும் மென்று சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தான் இந்தக் கதையின் உள்ளே ஊடாடிக் கொண்டிருக்கும் உயிர் இழை...

      வாழ்க
      அன்பும் அறமும்!..

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.///

      தங்களுக்கு நல்வரவு..

      நீக்கு
  11. கௌ அண்ணா, சொதாமினி நன்றாக இருக்கிறாள்! வீட்டுக்குள் நுழைவது போன்று படம் இருப்பதால் சௌதாமினிதான்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சௌதாமினியா!?..

      இவள் மாமனாரை மடியில் தாங்கிய அன்பு மருமகள்..

      சித்திரச் செல்வர் தான் விளக்கம் தர வேண்டும்..

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    கதை ஒரு மகிழ்வான, மன நிறைவானதொரு குடும்பத்தின் நிகழ்வுகளை, கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. படிக்கும் போதே அக்குடும்பத்தில் நாமும் ஒரு அங்கமாக கலந்திருப்பது போன்ற நிறைவான மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

    ஒரு சிறு கொத்தமல்லி தழைகள் ஒரு கதைக்கு கருவாக துணையாகி போனது தங்கள் எழுத்து திறமையை பறைசாற்றுகிறது. தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    கதையில் வரும் இந் நிகழ்வு சமயங்களில் எல்லா குடும்பங்களிலும் ஏற்படுவதுதான். இதற்காகத்தான் நானும் கவனமாக சமையலில் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைகளை பெரும்பாலும் அரைத்து சேர்த்து விடுவதுண்டு. நல்ல கதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// ஒரு சிறு கொத்தமல்லி தழைகள் ஒரு கதைக்கு கருவாக துணையாகி விட்டது ///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் பாராட்டும் மகிழ்ச்சி..

      நன்றி...

      நீக்கு
  13. கொத்தமல்லி நல்லது என்றாலும் இப்படி மாட்டிக்கொண்டு விட்டதே! நல்லவேளை கதை சுபமாகவே முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் பாராட்டும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்...

      நீக்கு
  14. பூரி மசாலில் அளவுக்கதிகமான கொத்தமல்லித் தழை, நெல்லையில் ஒரு நாள் முழுவதும் செரிக்காமல் வாயிலெடுத்து அன்று மற்ற இரு வேளையும் சாப்பிட முடியாமல் ஆக்கிவிட்டது நிழலாடியது. கதைக்கான படம் நன்று. நல்ல மாந்தர்கள் அன்றைய தினத்தை உற்சாகப்படுத்துகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ,/// நல்ல மாந்தர்கள் அன்றைய தினத்தை உற்சாகப்படுத்துகிறார்கள்.. ///

      நெல்லை அவர்களின் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நெஞ்சார்ந்த நன்றி..

      நீக்கு
  15. சின்னஞ்சிறு கதைக்கேற்ற, சின்னஞ்சிறு முடிச்சு, அவிழ்த்த விதமும் சிறப்பு! இப்படிக் கூட நடக்குமா? என்றும் தோன்றுகிறது.
    திருக்காட்டுப்பள்ளி... எங்க ஏரியாவாச்சே.. ! கூடுதல் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... ஆமாம்...
      நம்ம ஊர் தான்..

      இதுதான் மகிழ்ச்சி..
      நன்றி.. நன்றி.

      நீக்கு
  16. வயதாகும்போது நமக்கும் உடனிருப்பவர்களுக்கும் சுதாரிப்பு தேவை. சிறிய இழையை வைத்து அழகாக பின்னப்பட்ட கதை. 👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      வயதாகும்போது உடனிருப்பவர்களுக்கு தனிக் கவனம் தேவை.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. மதுரை வாசத்துடன் கதை. இப்படி ஓர் அன்பான மருமகள் .

    படிக்கும்போது '"களுக் களுக் விக்கலுடன் நாற்காலி சாய்ந்த சத்தம்" மனது திக் என்றது. மருமகளின் புத்தி சாதுரியம் செயல்கள் கதைக்கு வலுவூட்டுகிறது.

    படமும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை மல்லி வாசத்துடன் கதை. இப்படி ஓர் அன்பான மருமகள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  18. அருமையான நல்ல முடிவை தந்த கதை.
    இப்படி கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்
    நல்ல முடிவுகள் சிலருக்கு தோன்றும், அந்த முடிவால் குடும்பம் மகிழ்ச்சி திரும்பியது அருமை, நிறைவு .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!