வெள்ளி, 1 மார்ச், 2024

வெள்ளி வீடியோ   :  ஈ நாடே ஏதோ அய்யிந்தீ... ஏ நாடு நாலோ ஜரகந்தீ 

இன்றைய தனிப்பாடல்

நெஞ்சுக்கு நீதியும் என்னும் பாரதியார் பாடல்.  மனதுக்குள் புகுந்து இடம் பிடித்து அமர்ந்து விடும் பாடல். சக்தி ஓம் சக்தி ஓம் சொல்லும்போதும் சக்திவேல் சக்திவேல் சொல்லும்போதும் உணர்ச்சி பொங்கும்.  சிலிர்க்கும்.  பாரதியார் வரிகளா, ராகமா, எம் எஸ் அம்மா குரலா...  எல்லாம் சேர்ந்து செய்யும் மாயம்.


நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
     நிறைந்த சுடர்மணிப்பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாம் இவள்
     பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
     வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே யுரைப் பீர் அவள் பேர் 
     சக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

[2.நல்லதும் தீயதுஞ் செய்திடும் சக்தி
      நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றேயுல கேழும்
      அறைந்திடு வாய்முரசே
சொல்லத்தகுந்த பொருளன்று காண் இங்குச்
      சொல்லு மவர்தமையே
அல்லல் கெடுத்தம ரர்க்கினை யாக்கிடும்
     ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.]

3.நம்புவதேவழி என்ற மறைதன்னை
       நாமின்று நம்பிவிட்டோம்
   கும்பி ட்ட நேரமும் சக்தி யென்றாலுனைக்
        கும்பிடுவேன் மனமே .
    அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
         அச்சமில்லாதபடி .
    உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்
          ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

5. வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
           ளாக விளங்கிடுவாய்!
     தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
            விண்ணப்பம் செய்திடுவேன் .
     எள்ளத் தனைபபொழு தும் பய னின்றி
             யிராதென்றன் நாவினிலே
      வெள்ள மெனப்பொழி வாய் 
சக்திவேல் சக்திவேல்  சக்திவேல்  சக்தி வேல்!



======================================================================================================

ஒரு பாடல்..  மூன்று மொழி.   முதலில் பிரேமா என்று தெலுங்குப் படத்தில்.  அதுதான் முதல்.  அடுத்து தமிழில் அதே படம் டப் செய்யப்பட்டு அன்பு சின்னம் என்கிற பெயரில்..  அப்புறம் அது ஹிந்தியில் Love என்ற பெயரில்.  தெலுங்கு தமிழில் வெங்கடேஷ், ரேவதி.  இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அது முதல் தெலுங்குப் படம்.  1989 ல் வெளிவந்த படம்.  90 ல் தமிழிலும், 91 ல் ஹிந்தியிலும் வெளியாகி வெற்றி பெற்ற படம்.  ஹிந்தியில் ரேவதியுடன் சல்மான்கான்.  இந்த படவரிசையின் வெற்றிக்கு முக்கிய காரணம் இளையராஜா.  



தெலுங்கிலும், ஹிந்தியிலும் எஸ் பி பாலசுப்ரமணியம் - சித்ரா குரலில் பாட, தமிழில் மனோ சித்ரா 


எங்கள் SPB ஒரே பாடலை தெலுங்கில் பாடும்போது எப்படி குழைகிறார், ஹிந்தியில் எப்படி மேஜிக் காட்டுகிறார் என்று கேளுங்கள்.  எல்லாம் இளையராஜாவின் மாயம்.  வயலினிலும், புல்லாங்குழலிலும்  விளையாடுகிறார். 

63 கருத்துகள்:

  1. பாரதியாரை நினைத்தாலே சக்தி நாடி நரம்புகளில் புடைக்கும். அவரது 'சக்தி' பாடல்கள்
    பிரசித்திப் பெற்றவை
    அல்லவா?...

    ஒம் சக்தி ஓம் சக்தி ஓம்
    பராசக்தி ஓம் சக்தி ஓம்
    கணபதிராயன் அவனிரு
    காலைப் பிடித்திடுவோம்.

    பாடல் ஒலிக்காத இடமில்லை. எதைப் பாடினாலும் தேச விடுதலையில் கொண்டு போய் இணைத்தவர் அவர்.

    எம்.எஸ். பாடிய இந்தப் பாடலை ஏற்கனவே கேட்டிருந்தாலும் இப்பொழுது கேட்கும் பொழுது வேறு மாதிரியான உணர்வு. அமைதியாக குரல் உயர்த்தாமல் இதே பாடலை வேறு யாரேனும் குரலில் கேட்க வேண்டும் போலிருக்கிறது. யூட்யூபில் தேடிப் பார்க்கிறேன்.

    பாரதியாரை வெள்ளிக்கிழமை எபியில் காணக்கிடைத்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருபுவனம் குரு ஆத்மநாதன் என்பவர்
      குரலுயர்த்தாமல் உணர்வு பூர்வமாக
      அழகாகப் பாடியிருக்கிறார். கேட்டு ரசித்தேன்.

      நீக்கு
    2. எனக்கு எம் எஸ் தவிர வேறு யாருக்கு பாடிக் கேட்க இஷ்டமில்லை.  எனினும் நானும் கொஞ்சம் இதேபோல அன்றே தேடிப்பார்த்தேன்.  டி எம் கிருஷ்ணா வெறுப்பேற்றினார்!  நான் தட்டியது சஞ்சய் சுப்பிரமணியம் மற்றும் அபிஷேக் ரகுராம்.

      நீக்கு
    3. சஞ்சயையும் கேட்டேன்.

      டி.எம்.கே. ஹி..ஹி
      ...
      அதே வரிசையில் தான் இவரையும் பார்த்தேன். முதல் தடவையாகக் கேட்டு ரசித்தேன்.

      நீக்கு
    4. அபிஷேக் ரகுராம் கண்ணில் பட்டாரா?  நான் அவர் ரசிகன்.  அவர் என் கண்ணில் சிக்கவில்லை!  சில நாட்களுக்குமுன் பாலமுரளியின் ஹுசேனி ராக பாடல் ஒன்று நினைவுக்கு வர அதைக் கேட்க விரைந்தேன்.  இவர் பாடலும் சிக்கியது ரசித்தேன்.  பாடல் :  ரகுவீரா ரணதீரா றாரா ராஜகுமாரா 

      நீக்கு
  2. அட! இத்தனை நாள்
    நினைவில் உறுத்தாமல் இருந்திருக்கிறதே, இது?

    'நெஞ்சுக்கு நீதி' -- வார்த்தை இங்கிருந்து பெற்றது தானா?..

    பதிலளிநீக்கு
  3. புதுமை என்றாலே அதற்கான கைத்தட்டல் இயல்பு தான்.

    தெலுங்கு
    ஹிந்தி
    தமிழ்

    --- என்று மூன்று வெர்ஷன்
    பாடல்களையும் கொடுத்து தூள் கிளப்பியிருக்கிறீர்களே!

    அ.மா.அ___மலிருந்தால் அதற்கென்று ஒரு தனி களை கிடைத்து விடுகிறது தான்!
    வாழ்த்துக்கள்.

    அப்பப்போ இப்படி ஏதானும் 'குமுதம்' மாதிரி
    செய்யுங்கள்.

    நடந்த பாதையிலேயே நடக்காமல் மாற்றி நடந்தால் அந்தப் புதுமையே தனி தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ..  நன்றி ஜீவி ஸார்..  ஆனாலும் இது போல சில முயற்சிகள் முன்னரும் செய்ததுண்டு...  

      நீக்கு
    2. அதிருக்கட்டும்...  மூன்று வெர்ஷன்களையும் கேட்டீர்களா?  SPB குரல் குழைவை ரசித்தீர்களா?  எது பிடித்திருந்தது?

      நீக்கு

  4. த்ரீ வெர்ஷாஸ். ஆஹா..
    அத்தனையும் அத்தை மகள் ..... (இட்டு நிரப்புக: பட்டணம் பொடி அல்ல)

    பார்த்தேன்.
    கேட்டேன்.
    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரத்தினங்கள் சரி.. எது முதல் ரத்தினம்? எனக்கு தெலுங்கு.

      நீக்கு
    2. என்ன கேட்டீங்க?.. எது முதல் ரத்... அட, என்னங்க, ரோஸ் சட்டை, பச்சை சட்டை,
      நீல ச்ட்டை, சிவப்பு சட்டைன்னு.. அத்தானும் அத்தை மகளும் மாத்தி மாத்தி போட்டுகிட்டாங்களா?
      இந்த போடு போடறாங்க?..
      இளமை இதோ இதோன்னு swig ஆடுதுங்க...
      பாட்டுன்னா தெலுகு.
      ஆட்டம்ன்னா தமிழ்.
      இல்லே, ரெண்டு படிப்பிடிப்புகளும் ஒணணு தானா?

      நீக்கு
    3. ரெண்டும் ஒண்ணுதான். படப்பிடிப்பு ஒண்ணுதான். ஆனா தலைவர் குரல்....

      நீக்கு
  5. உங்களுக்கு SPB என்றால்
    40க்கு 40 ஸீட் வெற்றி என்பீர்கள்.

    புதிதில்லையே, இது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம்?  அப்படி சொல்ல முடியாது.  எனக்கு இதே அளவு ஜெயச்சந்திரனைப் பிடிக்கும்.

      நீக்கு
    2. மேலும் SPB யில் நான் ரசிக்காத பாடல்கள் நிறையவே உண்டு.

      நீக்கு
    3. Friday Jayachandran
      rare, இல்லையா?
      ஏன் அது?..
      எதனால் அப்படி வாய்த்தது?..

      நீக்கு
    4. மிக எதிர்பாராத விதமாக - முன்னரே முடிவு செய்தது  - அடுத்த வாரம் அவர்தான்!

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பகிர்வில் முதல் தனிப்பாடலை இப்போதுதான் கேட்கிறேன். எம். எஸ் அவர்களின் இனிமையான குரலில் அருமையாக உள்ளது. கேட்டு ரசித்தேன். மற்றொரு பிறகு கேட்பேன்.

    திரைப்படபாடல் தமிழில் வெளி வந்தது கேட்டதாக நினைவு. ஆனால் இது மூன்று மொழிகளிலும் வந்துள்ளது இப்போதுதான் தெரியும். மூன்றையும் இணைத்து தந்த விதம் அருமை. மூன்று மொழி பாடல்களையும் இப்போது கேட்டு ரசித்தேன். இதில் எஸ். பி. பி பாடிய தெலுங்கு பாடல் என்னையும் கவர்ந்தது. அவர்தான் சகலகலா வல்லவர் ஆயிற்றே.

    மூன்று மொழிகளிலும் பாடலில் சித்ரா அவர்களும், நடிப்பில் ரேவதி அவர்களும் கலக்கி உள்ளார்கள். இன்றைய தொகுப்பு நன்றாக உள்ளது. மிகவும் ரசித்து பாடல்களை கேட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பி. தி. மற்றொரு முறை என வந்திருக்க வேண்டும்.

      நீக்கு
    2. ஆ... அக்கா... நெஞ்சுக்கு நீதியும் பாடலை இப்போதுதான் முதல் முறை கேட்கிறீர்களா? இரண்டாவது பாடல் மூன்றையுமே பார்த்து / கேட்டு ரசித்து பதில் அளித்ததற்கு நன்றி அக்கா.

      நீக்கு
    3. // பி. தி. மற்றொரு முறை என வந்திருக்க வேண்டும். //

      புரிந்தது.

      நீக்கு

  8. இந்த ரேட்லே போச்சுன்னா, ஹி..ஹி..

    60 பின்னூட்டங்கள் லட்சியம்.
    40 பின்னூட்டங்கள் நிச்சயம்.

    பதிலளிநீக்கு
  9. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. ஓம் சக்தி
    ஓம் சக்தி ஓம்...

    மகாகவியின் பாடல் சிறப்பு என்று சொல்லவும் வேண்டுமோ..

    ஓம் சக்தி
    ஓம் சக்தி ஓம்...

    பதிலளிநீக்கு
  11. தஞ்சமென்றே உரைப்பீர்
    அவள் பேர்
    சக்தி ஓம்
    சக்தி ஓம்
    சக்தி ஓம்...

    பதிலளிநீக்கு
  12. மகாகவியின் பாடலில் மகிழ்ச்சி..
    மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. முதல் பாடல் அடிக்கடி கேட்ட பாடல், பிடித்த பாடல்.

    அடுத்த பாடல்கள் மூன்றையும் முதன் முறையாக இன்று தான் கேட்டேன்.

    தெலுங்கு, இந்தி பாடல்கள் கேட்க இனிமை, நன்றாக இருக்கிறது.
    தமிழ் பாடலும் நன்றாக இருக்கிறது. ரேவதியின் இளமை துள்ளல் நடிப்பு நன்றாக இருக்கிறது. அவர் நடிக்க வந்த புதுசில் சுட்டியாக நடிக்க அழைத்த படங்கள் போலூம். முதன் முதலாக நடித்த மண்வாசனையில் கிராமத்து பெண்ணாய் சுட்டித்தனம் காட்டி இருப்பார். சோகமும், வீரமும் இருக்கும் அந்த படத்தில்.

    பாடல் பகிர்வுகள் அருமை.

    பதிலளிநீக்கு
  15. முதல் பாடல் - ஆஹா மஹாகவியின் பாடல்! ரசித்தேன்.

    மற்ற பாடல்கள் இனிமேல் தான் கேட்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டுப்பாருங்கள். ரசிப்பீர்கள். நன்றி வெங்கட்.

      நீக்கு
  16. முதல் பாடல் ரசனை.

    இரண்டாவது தெலுங்கு , ஹிந்தி இப்பொழுதுதான் கேட்கிறேன். சூப்பர்.

    பதிலளிநீக்கு
  17. முதல் பாடல் ரசனை.

    இரண்டாவது தெலுங்கு , ஹிந்தி இப்பொழுதுதான் கேட்கிறேன். சூப்பர்.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை புரிந்த எனக்கு , நான் மிக விரும்பி கேட்கின்ற பாரதியாரின் பாடல்! இப்பாடல் கேட்டும் வெகு நாள் ஆகிவிட்டது..புது சக்தி கிடைத்தது போல ஒரு மெய்சிலிர்க்கும் உணர்வு! பாடலுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை.  வருக..  வருக...  நன்றி.  கதை, சமையல் பகுதிக்கு அனுப்ப முயற்சியுங்களேன்...

      நீக்கு
  19. ஸ்ரீராம், முதல் பாடலுக்கு மிக்க மிக்க நன்றி எனக்கு மிக மிக மிக மிக எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக்கோங்க.....ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். அப்படியே நம் மன நிலையை மாற்றிவிடும் பாடல்! பாடல் வரிகளும் ராகமும், பாடல் இசையும் எம் எஸ் அம்மாவின் குரலும் எல்லாமும் சேர்த்து அதுவும் கடைசி ஓம் சக்தி ஓம் சக்தி ஆஹா அப்படியே மனதுள் புகுந்துவிடும்....அதுவும் படிப்படியாக குரல் சென்று...உச்சஸ்தாயிக்குச் சென்று மெய் சிலிர்க்கும் பாடல்.

    வார்த்தைகள் கிடையாது இதைச் சொல்ல....அனுபவித்துப் பார்க்க வேண்டும். மனம் வீர முழக்கம் செய்யும். தன்னம்பிக்கை ஒரு படி உயர்ந்தது போல் தோன்றும்!

    நான் இதைக் கேட்கத் தொடங்கினால் ரிப்பீட்டு போட்டுக் கேட்டுக் கொண்டே இருப்பேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  உண்மை கீதா.  சென்ற வாரம் ஷெட்யூல் செய்தேன்.  இன்று வரை மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் நானும்.

      நீக்கு
  20. இப்பவும் ஆட்டோ ப்ளே போட்டுவிட்டேன்...மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டே இருக்கும் நான் இதை விட்டு வெளியில் வரும் வரை!!!!

    எம் எஸ் போன்று இதை இப்படி வேறு யாராலும் பாட முடியுமா என்று தெரியவில்லை இல்லை, நமக்கு இது முதன் முதலில் கேட்டு மனதில் பழகிவிட்டதால் இருக்குமோ என்னவோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
    அச்சமில்லாதபடி .
    உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.//

    என்ன அருமையான வரிகள். அருமையான பாடல் அதுவும் நம் பாரதியின் வரிகளை எம் எஸ் அம்மா அவர்கள் குரலில் கேட்கும் போது நமக்கும் சக்தி தருகிறது!

    ரசித்துக் கேட்டேன், ஸ்ரீராம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. தெலுங்கு, ஹிந்தி, தமிழ் - மூன்றிலும் கொடுத்திருக்கீங்க சூப்பர், ஸ்ரீராம். தெலுங்கில், ஹிந்தியில் எஸ் பி பி குரல் வித்தியாசப்படுத்தி வேறுபடுத்தி ஆஹா....அவர் குரல் மாயம்....ராஜாவின் இசை மாயம்....இரண்டும் கலந்து செம.

    ஹம்ஸத்வனி த்வனிதான்!!!

    தமிழும் சூப்பர்.

    ஹிந்தில சித்ராவா? குரல் சித்ரா போல இல்லையே....

    கீதா

    பதிலளிநீக்கு
  23. எங்கள் SPB ஒரே பாடலை தெலுங்கில் பாடும்போது எப்படி குழைகிறார், ஹிந்தியில் எப்படி மேஜிக் காட்டுகிறார் என்று கேளுங்கள். //

    அதே அதே....

    மூன்றிலுமே சித்ரா தான் ஒரே போலதான் இருக்கு அப்போதைய குரல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. திரை இசைப்பாடல் கேட்டதில்லை. இப்போதுதான் கேட்கிறேன். தெலுங்கில் முதலில் வந்து பிறகு தமிழ், ஹிந்தி என்று டப் ஆகியிருக்கிறது தெரிகிறது.

    மூன்று மொழியிலுமே பாடல் அருமை. அருமையான இசை, எஸ்பிபி குரல், சித்ரா குரல், மனோவின் குரல் எல்லாமே ரசித்துக் கேட்டேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பாடல்.  கேட்டு ரசித்திருப்பீர்கள்.  நன்றி துளஸிஜி.

      நீக்கு
  25. இதுவா..
    இந்தப் பாடலா!..

    இந்தப் பாடலைத் தான் எனது தொகுப்பில் வைத்திருக்கின்றேனே..

    இங்கு வந்த பின் பல பிரச்னைகளால் திரைத் தொகுப்பின் பாடல்களைக் கேட்பது குறைந்தே போயிற்று...

    எப்போதும் (90%) ஸ்ரீ வெங்கடேஸ்வராஒளிபரப்பு தான்...

    SPB அவர்களது தெலுங்கு, ஹிந்திப் பாடல் பதிவுகளை இன்று தான் கேட்கின்றேன்..

    காட்சிகளை ஒதுக்கி விடுங்கள்..

    இசையும் குரலும் முப்பரிமாணமாக அற்புதம்..

    மகா கலைஞர்கள்..

    பதிலளிநீக்கு
  26. நான்கு பாடல்களும் கேட்டேன் அருமை ஜி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!