சனி, 11 மே, 2024

நல்ல சில செய்திகளுடன் 'நான் படிச்ச கதை'

 

பெற்றோரை கடைசி காலத்தில் பார்த்துக்கொள்வது மட்டுமின்றி அவர்களின் ஓய்வு காலத்தில் நினைவு கூர்ந்து பார்ப்பதற்கும், பேசுவதற்கும் அழகான நினைவுகளை கொடுப்பதும் நம் கடமை என 60 நாள்களில் 18 மாநிலங்களை தாயுடன் காரில் சென்று பயணித்தார் கிரோகன் ஸ்பாட்.


அவர் அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார்

என் இயற்பெயர் ராஜ்மோகன். சொந்த ஊர் கும்பகோணம். அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து பின்னர் டிப்ளமோ முடித்து சென்னையில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்தேன். வேலை செய்து கொண்டே 2019ல் இன்ஜினியரிங் முடித்தேன். பத்து ஆண்டுகளாக பணி செய்த நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறியது. அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற யோசனை வரவில்லை.

அப்பா நெசவுத்தொழில் செய்கிறார். எனக்கு திருமணமாகவில்லை. சொந்த வீடு, தேவையான பணம் கையிருப்பு என குடும்ப சூழ்நிலையை கொண்டு வந்ததால் வேலை இழப்பு பற்றி கவலை ஏற்படவில்லை. வேலை நாள்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த விடுமுறை வாய்ப்பு அடுத்து கிடைக்காது.

வீட்டை விட்டு பெரிதாக வெளியே செல்லாத எனது தாய் கஸ்துாரிக்கு அழகான நினைவுகளை கொடுக்க இது தான் சமயம் என நினைத்தேன். பஸ், ரயிலில் பயணம் மேற்கொண்டால் உடல் அசதி ஏற்பட்டு விடும். அதனால் காரில் பயணம் செய்ய திட்டமிட்டேன். காரை படுக்கை வசதி கொண்ட வீடாக மாற்றினேன்.

அம்மாவும் என்னுடன் காரில் பயணம் செய்ய சம்மதித்தார். எங்களுடன் வீட்டில் வளர்க்கும் பூனையையும் அழைத்து கொண்டு பயணத்தை துவங்கினோம். பயணத்திற்கு முன்பு வடமாநிலங்களில் கிடைக்காத மளிகைப்பொருட்கள், சமையல் செய்ய அடுப்பு, பாத்திரங்கள், குளிரை தாங்க ஆடைகள் அனைத்தையும் காரில் சேமித்து வைத்துக்கொண்டோம்.

மாலை 6:00 மணிக்கு மேல் பயணம் செய்யக்கூடாது. நாளை பயணத்தில் எங்கெல்லாம் நிறுத்த வேண்டும் என்பதை முந்தைய நாள் திட்டமிடல், எங்கு தங்க வேண்டும், சி.சி.டி.வி., கேமரா உள்ள இடத்தில் மட்டுமே காரை பார்க்கிங் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளை எனக்கு நானே வகுத்து கொண்டேன்.

இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தினால் அவர்களும் தங்களின் பெற்றோருக்கு அழகான நினைவுகளை கொடுப்பதற்கு வழிவகை செய்யும் என்பதற்காக யூடியூப் சேனலில் பதிவிடத்துவங்கினேன். சென்னையில் இருந்து துவங்கி கர்நாடகா, கோவா, மும்பை, குஜராத், ராஜஸ்தான் வழியாக சண்டிகர், ஜம்மு காஷ்மீர் உள்பட 18 மாநிலங்களில் பயணத்தை மேற்கொண்டோம்.

மும்பையில் அம்மாவை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று மும்பை நகரத்தின் அழகை பார்க்க வைத்தது சந்தோஷமாக இருந்தது. பயணத்தில் நிறைய அழகான விஷயங்கள் அவருக்கு நினைவுகளாக கிடைத்தது.

இந்த பதிவுகளை யூடியூப் சேனில் பார்த்த பலரும் பெற்றோரை அழைத்து கொண்டு பயணம் செய்யத்துவங்கி விட்டோம் என கூற துவங்கியது சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

வட கிழக்கு மாநிலங்களையும் சுற்றி பார்க்க எண்ணம் உள்ளது. தாய் கஸ்துாரிக்கு 64 வயது. மூட்டு வலிக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சிகிச்சை முடிந்த பிறகு சூரியன் மறையாத நார்வே நாட்டிற்கும், தனித்துவமான இடங்கள் உள்ள நாடுகளுக்கும் அழைத்து செல்லும் திட்டம் உள்ளது. விரைவில் பயணம் துவங்கும் என்றார்.

=============================================================================================



..........  இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பாலச்சந்திரன் தனக்கு உள்ள தமிழ் ஆர்வத்தை ஊட்டிய தமிழாசிரியர் ராமசாமி இறந்த பிறகும் குடும்பத்தின் தேவைகளை அறிந்து இன்று வரை நிறைவேற்றி வருகிறார்.

================================================================================

MGR மாதிரி செயல்படுவேன்---  நடிகர் லாரன்ஸ்.


==========================================================================================

சென்னை: தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், உதவித்தொகை பெற்று படித்த பீடித் தொழிலாளி மகள் இன்பா, மத்திய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.


===============================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார்

 கதையாசிரியர்: எஸ்.ஷங்கரநாராயணன்

 

எஸ் . சங்கரநாராயணன் (எஸ். ஷங்கரநாராயணன்; ஞானவள்ளல்; பிரம்மன்) (பிறப்பு: ஜூலை 28, 1959) தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ  வைகுண்டத்தில் பிறந்தவர். இளங்கலைப் பட்டம் முடித்தபின் தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். ‘சங்கரநாராயணன்’ என்ற பெயரில் மற்றொரு எழுத்தாளரும் எழுதிக் கொண்டிருந்ததால், இவர், ‘ஷங்கரநாராயணன்’ என்ற பெயரில் எழுதினார். தற்போது ‘சங்கரநாராயணன்’ என்ற பெயரிலேயே எழுதி வருகிறார். இரு மகன்கள். வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

ஆனந்த விகடன்சாவிதினமணி கதிர்கணையாழி தொடங்கித் தமிழின் முன்னணி இதழ்கள் பலவற்றில் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை சங்கரநாராயணன் எழுதியிருக்கிறார். உலகச் சிறுகதைகள் பலவற்றையும் மொழிபெயர்த்துப் பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கவிதை நூல்கள் என்று 95-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார், சங்கரநாராயணன்.

சங்கரநாராயணன் ‘நிஜம் என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார். சென்னை புத்தக்காட்சியை ஒட்டி ஆண்டுதோறும் ‘இருவாட்சி’ பொங்கல் மலரை வெளியிட்டு வருகிறார்.

இவரது தளம் https://gnanakomali.blogspot.com/

****************************

மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார்

முன்னுரை

ஹிரண்யகசிபு பிரஹலாதன் கதை போன்றது தான் இக்கதை. ஆனால் இக்கதையில் மகன் நீலகண்டன்  நாத்திகன். தந்தை குளத்து அய்யர் பரம ஆத்திகர். கிராமத்தில் உள்ள கோயிலின் பரம்பரை பூஜை உரிமையை விடாமல் தொடரும் குருக்கள். மனைவி இல்லை. ஒரே மகன், நகரத்தில் உயர் பதவியில் இருக்கிறார். மருமகள் டாக்டர். அவர்களுக்கு சேர்ந்தாற்போல் விடுமுறை கிடைப்பது என்பது அரிது. மகனுக்கு ஒரு குழந்தை பள்ளியில் படிக்கிறான்.

நீலகண்டன் சிறு வயதிலிருந்தே கடவுளை பற்றி பல சந்தேகங்களும் எழுப்புவான். குளத்து அய்யர் எப்படியெல்லாம் விளக்கினாலும் அவனுக்கு திருப்திப்படாது. இதெல்லாம் ஒரு பிரமை அப்பா என்று ஒதுக்கி விடுவான்.

இப்படிப்பட்ட சிந்தனையில் எழுந்ததே “மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்.” ஆம் மனிதன் தான் கடவுளை உருவாக்கினான். இது நாத்திகர்களின் கொள்கை.

ஆனால் ஆத்திகர்கள் “ஓம் தத் சத்” என்று அது ஆதியில் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அதற்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. அந்த  அதுவிற்கு பெயர் இல்லை, ஆனாலும் ஆயிரம் பெயர்கள் உண்டு. நாத்திகர் சொல்லும் “கடவுள்” என்பதும் பெயரே.  என்று வாதித்தனர்.

நீலகண்டன் குழந்தையின் விடுமுறையில் கிராமத்திற்கு குடுமபத்துடன் வந்திருக்கிறார். தந்தையும் மகனும் மனம் விட்டு பேச வாய்ப்பும் நேரமும் கிடைக்கிறது.

“மனிதன் தான் கடவுளைக் கண்டுணர்ந்தான்.” இது அய்யரின் திருத்தம். பூஜ்யம் என்பதை உலகுக்கு கொடுத்ததே பாரதம் தான். பூஜ்யம் என்றால் என்ன? ஒன்றுமில்லை என்பது தான். சூன்யம். ஆம் ஆதியில் ஒன்றும் இல்லாதிருந்தது. வெறும் சூன்யம்.

இந்த பூஜ்யம் ஏதாவது ஒன்றுடன் சேரும் போதுதான் அதன் மதிப்பை, இருப்பை உணர முடிகிறது. இந்த பூஜ்யம் ஆகிய கடவுள் ஒவ்வொரு மனிதனுள்ளும் இருப்பதால் தான் மனிதன் கடவுளை உணர முடிகிறது. கடவுளை இல்லை என்று கூறும் நாத்திகர்களிலும் அவன் இருக்கிறான்.

அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

இப்படி பல தத்துவார்த்த தர்க்கங்கள்.

கடைசியில் குருக்கள் சாயந்திரம் கோயிலுக்கு குடும்பத்துடன் வா என்று அழைக்கிறார். நீலகண்டனும் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்கிறார். அதன் பின்னர்…கதையின் கடைசி பகுதியில் பாருங்கள்.

கதை sirukathaigal.com லிருந்து எடுக்கப்பட்டது. கதை முழுதும் தரப்பட்டுள்ளது. தத்துவம் பிடிக்காதவர்கள் விலகிக் கொள்ளலாம். 

மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார் 

இராத்திரி உறக்கங் கொள்ள இயலாமல் போனது. நீலகண்டன் கடிதம் போட்டிருந்தான். குழந்தைக்கு அரையாண்டு விடுமுறை. கிளம்பி வருகிறோம், தன் பிள்ளைக்காக, அவனைப் பார்க்க அவரே விடுமுறை நாளுக்குக் காத்திருத்தல் என்றாச்சு. நகரத்தில் அவன் ஒரு நடமாடும் காந்தம். உயர்ந்த கட்டிடத்தில் உயர்ந்த உத்தியோகம். சட்டை காணாத தன் வாழ்க்கை போல இல்லை இது. நேரமின்றித் தவிக்கிற அவனது கணங்கள். பொற்கணங்கள். கார் வைத்திருக்கிறான். தொலைபேசி எப்போதும் கூடவே. குரைக்கிற நாயைக் கூடக் கூட்டிப் போகிறாப்போல. கிராப் எடுப்பும் உடைகளும், எல்லாமே மாறிவிட்டன. அழுத மூக்கை அவர்தான் சிந்திவிட வேண்டும் என்றிருந்த பிள்ளை. டென்னிஸ் விளையாடுகிறதைப் போல, முன்மடிந்த வாக்கில் ஓடியோடி பந்தடிப்பது போலக் காசு வேட்டையாடுகிறான். சொந்த ஜாகை, வீட்டில் வேலையாட்கள் என அவன் உலகம் விரிந்து விட்டது. சிறகு எனப் பொன்னாடை போர்த்தி அலைகிற மனிதன்.

குளத்து ஐயருக்கு பிள்ளையையிட்டு எப்பவுமே மயக்கம் சார்ந்த பெருமை உண்டு.

பார்த்து எத்தனை நாளாச்சி. அவனும் வரக் கூடாது என்றில்லை. வருகிறதைப் பற்றி நினைக்கவே நேரமில்லை அவனுக்கு. அவளாவது! அவன் மனைவியாவது அவனை ஊக்கி வெளியிடம் நாலு இடம் போக வர என்றிருக்கலாம். அவள் டாக்டர். நகரத்தில் அவளை நம்பி ஆயிரம் ஜனங்கள். தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல் மாற்றினாற் போல, பாதிப் பேச்சிலேயே அவளுக்கு அழைப்பு வந்து விடும். அந்தப் பொழுதின் முகமே மாறிப்போகும். வேலை அப்படி. அது வேறுலகம் அல்லவா?

தனிமைச் சிறு கணங்கள் என்னுடையவை. உலகின் ஒரு பகுதி என தன்னைப் பாராட்டாமல் வாழ்கிற கணங்கள். அவன் வேறு மாதிரி. தன் முனைப்பானவன் – புறப்பட்ட அம்பு. அனுபவங்கள் சிக்காது. தேடிப் போக வேண்டும். கணவனும் மனைவியும் பேசும்போதே திடீரென்று தங்களை அறியாமல் பேச்சு ஆங்கில பாஷையில் மாறிப் போகிறது. அவருக்குப் புரியும் என்றாலும் பேச இந்த வேகம் கிடையாது அவரிடம். அவர்கள் அவருடன் ஆங்கிலத்தில் பேச அவர் தமிழில் பதில் சொல்கிற கணங்கள் அநேகம்!

மடப்பள்ளியில் சிறு வெண்கலப்பானைச் சாதம். பிரசாதம் என சந்நிதியில் பிரசாதம் காட்டி எடுத்துக் கொண்டு வருவார். சாம்பார் அல்லது ரசம் அல்லது கொத்துமல்லிச் சட்னி, தேங்காய்த் துவையல் ஏதோ ஒன்று சேர்த்துக் கொள்ள அவர் வயிற்றுப்பாடு தீர்ந்தது. கத்திரிக்காய் அல்லது வெண்டைக்காய் வதக்கல் அல்லது அப்பளம் பொறித்தால் கூடத் தொட்டுக் கொண்டு சாப்பிடத் தாராளம் அல்லவா.

மனைவி இல்லாத கணங்களைப் பிரச்சனையாக உணராமல், மனம் அடுத்த சுற்றுக்குப் பழகிக் கொண்டது. கோவில் கைங்கர்யம் பரம்பரை பாத்யதை என்றாச்சி. வம்சாவளியாய் ஊரும் ஊர்மண்ணும் இரத்தத்தில் இருக்கிறது. மண்தாண்டி எல்லை கடக்க மனம் வரமாட்டேனென்கிறது.

”இதெல்லாம் நம்ம பிரமைப்பா” என்கிறான் நீலு.

”உலகமே பிரம்மாண்டமான பிரமைதாண்டா” என்று குளத்து பதில் சொல்லிச் சிரிக்கிறார்.

”நாம வாழறதா நினைச்சிக்கறதே ஒரு பாவனைதான்றேன்! நம்மால என்ன முடியுஞ் சொல்லு. அவன் ஆட்டுவிக்கிறான். நாம வெறும் பொம்மை”.

”இன்னும் எத்தனை தலைமுறைக்குச் சபரிமலை இருமுடி போல இப்படித் தூக்கி வெச்சிண்டு திரியப் போறீங்களோ தெரியல” என்று சிரித்தான் நீலு. அவருக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அப்போது அவன் ஃபோர்த் ஃபார்ம், ஒன்பதாங் கிளாஸ். தனது மூளையைப் பொக்கிஷ அறையாய் அவன் சட்டெனப் பிடித்துக் கொண்டதும், அதில் விளைச்சல் எடுத்த, அறுவடைகண்டு தானியங்களை அவருக்குப் படையல் செய்ததுமான கணங்கள். ”கடவுள் இல்லை” – என்பது அவன் நம்பிக்கை. அவன் வாதம். அந்த-வயதின் வாதம் அது அல்லவா?

அந்தந்த வயதுக்கேற்ற எடுப்புகள் வேண்டிதான் இருக்கிறது. சிறு பாலகனாய் அவர் கைப்பிடித்துக் கூட வந்தவன். “அப்பா தூக்கிக்கோ” என்று அழுதவன்தான். இப்போது ரொம்ப தூரம் அவன்கூட அவர் நடந்து வருகையில் அவரைக் கேட்டான் அவன் ”கால் வலிக்கிறதாப்பா?”… அவர் புன்னகைத்துக் கொள்கிறார். 

“அவன் இருக்க முடியாது. ஆதியில் உலகில் என்ன இருந்தது. எதுவுமேயில்லை”

”ஆமாம், எதுவுமே இல்லை என்று நமக்குப் படுவதில் ஏதோ எப்படியோ மறைந்திருக்கிறது. ஒளிந்திருக்கிறது. என்னவோ மிகப் பெரும் பலத்துடன், என்னமோ மிகப் பெரும் ஆளுமை சக்தி, மிகத் தீர்மானமான சக்தி, அது நம்மை இயக்குகிறது. அதற்கு இறைநம்பிக்கை எனப் பெயர் சூட்டுகிறோம். அவனை நம்மால் நம் சிற்றறிவால் புரிந்து கொள்ள இயலாது என நாம் கட்டாயம் புரிந்து உணர வேண்டும். புரிந்து கொள்ள முயல்கிறோம் மதத்தின் மூலமாக” என்று புன்னகைத்தார் குருக்கள்.

“இந்தியா ஆன்மிக நாடப்பா” என்றார் மகனைப் பார்த்து. ”இவர்கள் மத நம்பிக்கை மிகப் பெரிய அளவில் கொண்டவர்கள். அதன் சிந்தனையில் திளைத்தவர்கள். ஆகவேதான் அவர்கள் பூஜ்யத்தைக் கண்டு பிடித்தார்கள். வேறு யாராலும் பூஜ்யம் என்ற எண்ணைக் கண்டு பிடித்திருக்கவே முடியாதுதான். விளங்குகிறதா நீலு? பூஜ்யம் எத்தனை புதிர்களைக் கிடுகிடுவென்று முடிச்சு-அவிழ்த்து எறிந்தது இல்லையா? இன்றைய கம்ப்யூட்டர் வரை பூஜ்யம் அற்புதமாய்க் கூட உதவிக்கொண்டே வரவில்லையா நீலு?”

அவருக்கே ஆச்சரியம் தான் இவ்வளவு பேசியது – எல்லாம் கடவுள் சித்தம் போலும்.

”அப்படியானால் நமது இப்பிறப்பின அர்த்தம் ஊடுபொருள் – சரி… தாத்பர்யம் என்ன?”

”தெரியாது! சந்ததிகளைக் கடந்து மானுடம் மேலும் மேலும் முன்னேறிச் செல்கிறது. இயற்கையை சுவீகரித்துக் கொண்டு தன் அறிவுப்பரப்பை விஸ்தரித்துக் கொண்டு செல்கிறது அல்லவா?”

”ம் – ஓர் எல்லையில் மார்க்சியமும் மதமும் சந்திக்கவே செய்யும். அது முரண் அல்ல” என்றான் நீலு சர்வ அலட்சியமாய்.

அவர் திகைத்தார். அப்படியா? முரண்களால் அதனிடை ஒற்றுமை. சாத்தியமா இது?

கடவுளை அலட்சிக்கிற ஒவ்வொருவனிடமும் கடவுள் இருக்கிறார்.

அவன் சுயபலனை எதிர்பாராதவன் அல்லவா? அம்மட்டில் பிறரை எதிர்பாராத நேயக்காரன் அல்லவா?

”உலகின் பெரும் புதிரை நோக்கி நாம் நகர்கிறோம் என்று உனக்குப் படாதது வியப்புதான்”

”சரி, அதை வெறும் கடவுளை வணங்குகிற எளிய நிலையில் நாம் வீணடிக்கலாமா? நமக்கு அதற்கு உரிமை உண்டா அப்பா?”

”வளர்ந்த பின் பெற்ற தந்தையைப் பற்றி மறந்து விடுவது போல நீ பேசுகிறாய்” என்று சிரித்தார் குளத்து.

ஆனால் குழந்தையின் மழலைத் தத்துவங்கள் அவரை பிரமிப்பில் ஆழ்த்தின. என்னை மறந்து தன் போக்கில் சிறகு விரிக்க அவனுக்குச் சுதந்திரம் தந்தவனே நான்தான். கடவுளும் அத்தகைய ஒரு நிலை எடுத்திருக்க வேண்டும். எதோ ஒரு எதிர்பார்ப்பு அவருக்கு இல்லாமல் எதற்கு நம்மை இந்தப் பூமியில் பிறப்பித்திருக்கக் கூடும்.

அடேடே இந்தச் சிந்தனையிலேயே முதல் கட்டத்திலும் இரண்டாவது கட்டத்திலும் எத்தனை முரண், சிக்கல்?

”மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார். அவனது பயம் சார்ந்த பிரதிபிம்பம். பிரமை. பீதியின் நிழல். அவனது மரணத்தின் நிழல்-பிரம்மாண்டம்! அதன் பெயர் கடவுள்”

”மரணம், காலம், கணக்குகள் வாழ்க்கையில் எத்தனை நூல்சிக்கல்கள்!” என்று அவர் பேசுவதை அவன் கைமறித்துத் தடுத்தான். ”மொழியலங்காரச் சிந்தனைகள் வேண்டாம் அப்பா, தயவுசெய்து” என்றான் உடனடியாக.

நுணுக்கமான சூட்டிகையான பிள்ளைதான்!

அவர் கைப்பிடிக்குள் அவன் இல்லை என விரைவில் அவன் நிரூபித்தான். மண் எல்லை கடந்தான் அவன், அவருக்கு அது வருத்தமாகவும் சந்தோசமாகவும் இருந்தது. கடமைசெய்! பலனை எதிர்பாராதே! கீதை!

தனிப்பெரும் தத்துவம் அல்ல அது. இயற்கையின் வாழ்வம்சமே. மிருகங்கள் அப்படியே வாழ்கின்றன அல்லவா? பெத்ததோடு அவை குஞ்சுகளின் இறக்கை முளைக்கும் வரை காத்திருந்து வழியனுப்பி வைத்து விடுகின்றன. இது என் குஞ்சு என வளர்த்த – பெற்ற தாய் பிறிது கண்டு கொள்ளுதல் இயலுமோ?

கடவுள் ஊனிலும் உயிரிலும் இருக்கிறான்.

ஆனால் ஊனில் இல்லை. உயிரில் இல்லை, இரண்டின் கலவையாக இரண்டின் பேரிணைப்பாக நடுவே படைப்பிலக்கிய இரகசியமாய் அவன், உள்க்குறிக்கோள், அம்பின் திசையாய் வேகமாய் அவன், அருவ உருவம் அவன்.

கடவுளுக்கு உருவம் உண்டா?

”ஏன் இல்லை?” என்றான் நீலகண்டன். ”புராணங்கள் இதிகாசங்கள் மாற்றி மாற்றிச் சொல்கின்றனவே! படைப்பின் உச்சகட்டமான மனிதன்… அவன்தான் கடவுள். அதுவே அவன் உருவம். இறுதி அவதாரம் என விளங்கவில்லையா அப்பா”

அவர் அவனைப் பார்த்தார்,

”நீங்கள் தினந்தோறும் கற்பூரம் காட்டும் மூல விக்கிரகர், அதில் மனித முக வடிவம் எதற்கு அப்பா?” என்கிறான் அவன் தொடர்ந்து.

முரண்களின் சங்கமத்தில் கடவுள் ஒளிந்திருக்கிறார். பிடி கொடுக்காமல். ஆனால் உணர வைக்கிறார்.

எளிய பரபரப்பில்லாத மனிதன் நான். எனது உயிரை சர்வவியாபியான கடவுளின் துகளாக நான் காண்கிறேன்.

நீலகண்டன் நியதிகளில் சவாரி செய்தபடி தன்னை பிரபஞ்சத்தின் சாரதி என உணர்கிறான்.

இரு நிலைகளிலும் கடவுள் இருக்கிறார்.

முரண்களின் சங்கமமாக!

நீலகண்டன் வந்த தினங்களில் மீண்டும் விவாதங்கள் இவ்விதமே வளைய வந்தன. அவற்றின் உச்சபட்ச உக்கிரத்துடன்.

நாம் சந்திக்கவே முடியாது என்ற கட்டத்தில் சட்டென்று தத்துவங்கள் சந்தித்து விடுகின்றன – ஆச்சர்யம்.

”கோவில் எப்படி இருக்குப்பா” என்கிறான் நீலகண்டன்.

”அப்டீன்னா?”

”நீங்க இன்னமும் மாறவே இல்லையே”

”நீயும்” என்று சிரித்தார் குளத்து.

”சாயந்தரம் கோவிலுக்கு வாடா! எல்லாருமா வாங்கோ” என்றார் மருமகளைப் பார்த்து.

அவன் வந்ததுகூட இல்லை. கூட அவள் அவரைப்பார்க்க வந்தது ஆச்சரியம். ஒரே நாளில் அவள் திரும்பிப் போய்விடுவாள். அவள்வேலை அப்படி,. இம்முறை அவளும் கூட ரெண்டுநாள் தங்கிப் போவதாகச் சொன்னாள். நியதிகளில் அலுத்துப் போய் அவர்கள் வந்திருந்தார்கள் என யூகித்தார்.

அதைத்தான் அவன் கேட்கிறான் போலும் – அப்பா உங்களுக்கு உங்கள் காலாந்தர நியதிகள் இன்னும் அலுக்கவில்லையா?

சுயம் சார்ந்த பிரமைகள் நியதிகளை அலுப்பாய் உணர வைக்கின்றன. சகலத்திலும் தன்னை உணர்ந்ததற்குப் பின் நியதிகளைப் பற்றிய கணிப்புகள் பின்னடைவு கொண்டு நித்தமும் பிரபஞ்ச வாசனை நுகர்ச்சி ஒரு மானுடனுக்கு அலுக்குமோ?

அவர் புன்னகை செய்து கொள்கிறார் –

அன்று மாலை நீலகண்டன் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தான்.

கர்ப்பக்கிரகத்துள் நின்று கற்பூரங் காட்டுகிறார் குருக்கள். நீலகண்டன் கைகட்டி நிற்கிறான் உற்றுக் கடவுளை அவதானித்தபடி! என்ன ஒரு சவால் அந்த நிற்றலில். கடவுள் சந்நிதியில் அவர்முன், இது சாத்தியமா? என்ன அழகான சக்தியாளுமை கொண்ட விக்கிரகம் இது என்கிறார்கள். இவனுக்கான அனுபவம் என எதுவும் இராதா?

கற்பூரத்தட்டை நீலகண்டன் முன் நீட்டிக் காட்டினார் குருக்கள். குனிந்து நெற்றியில் கற்பூரத்தட்டின் திருநீற்றை எடுத்து அவன் பூசிக் கொண்ட கணம் அவர் முதுகுசிலிர்ப்புடன் – யாரோ பார்க்கிற பிரமையில், திரும்பிப் பார்த்தார், சந்நிதியில் உள்ளே மனிதன். ம் மனிதன். கடவுள் விக்கிரகமல்ல. அவன்! மனிதன். நீலகண்டனைப் பார்த்து அந்த கற்பூர ஆராதனைக்குக் கும்பிட்டாற்போல இருந்தது.

– ஜூலை 2007

 


48 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. இன்று ஒரு வித்தியாசமான கதைப் பகிர்வு. படிக்க வாய்ப்பில்லாத கதைகளைப் பகிர்வது பாராட்டிற்குரியது.

    இன்றைய கதையை ரசித்துப் படித்தேன். இரண்டு முரண்பட்ட சிந்தனைகளும் ஓரிடத்தில் சந்திக்க நேரிடுமா? அப்படிச் சந்திக்க நேர்ந்தால் அது ஒரு த்த்துவத்தின் மேல் ஒருவருக்கு இருக்கும் அதீத நம்பிக்கை தளர்ந்த சமயமாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      தங்கள் வீட்டில் நடைபெற்ற சுபச் செய்தி நேற்று படித்து அறிந்தேன். மணக்களுக்கு என் அன்பார்ந்த நல் வாழ்த்துகள். வாழ்க வளமுடன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். அடக்கி வாசிக்க வேண்டும் என்றே என் மனது எப்போதும் நினைப்பதால் பலருக்கும் தெரியப்படுத்த தடையுண்டாகிவிடுகிறது.

      நீக்கு
    3. உங்களுடைய சந்தேகத்திற்கு (இரு மாறு பட்ட சிந்தனைகளும்) பதில் கதையில் உள்ளது

      //”ம் – ஓர் எல்லையில் மார்க்சியமும் மதமும் சந்திக்கவே செய்யும். அது முரண் அல்ல” என்றான் நீலு சர்வ அலட்சியமாய்.//
      இங்கு கேரளத்தில் மார்க்சியமும் மதமும் சந்தித்து விட்டது. அது அது அதன் இடத்தில இருந்து விட்டால் எல்லாம் சௌக்யமே.

      நீக்கு
    4. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

      அதனாலென்ன.. தங்களின் கருத்தும் முற்றிலும் சரியே..! தெரிந்த ஒருவரின் வீட்டின் ஒரு நல்ல விஷயங்கள் கேள்விபட்டவுடன் எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. / இருக்கிறது. அதனால்தான் என் மகிழ்வை உடனே தெரியப்படுத்தினேன். சகோதரி கீதாரெங்கன் அவர்கள் வீட்டிலும் நடைபெற்ற நல்ல விஷயத்திற்கும் என் மகிழ்வான நல்வாழ்த்துகள். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. கதைக்கான படத் தேர்வு தவறு.

    குளத்து ஐயர் என்ற பெயர் கல்லிடைக்குறிச்சியையோ இல்லை இன்னொரு நெல்லைக் கிராமத்தையோ நினைவுபடுத்தியது. ஆனந்த விகடனில் அவரைப்பற்றிய நீண்ட செய்தி இடம்பெற்றிருந்தது. அதீதக் எஓபத்தால் மகன்களின் அன்பை இழந்து, கடைசி காலத்தில், திருமணம் செய்துகொள்ளாத மகளின் பாதுகாப்பில் கிராமத்தில் வாழ்பவரைப் பற்றிய நிகழ்வு அது. அதீதக் எஓபம் என்பது எதிர் காலத்மை அறியாத்தால் ஏற்படும் அதீதப் பயத்தினால் ஏற்படுவதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தேர்வு தவறு என்று சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. முதலில் விபூதி பட்டை பூசிய ஐயர் படத்தைத் தான் தேர்ந்தெடுத்தேன். அது அதிகம் தெளிவில்லாமல் இருட்டாக இருந்தது. அய்யர் ஆனால் என்ன அய்யங்கார் ஆனால் என்ன என்று பரமு தேவர் சொன்னபடி (பானு அக்கா கதை) இந்த படத்தை போட்டேன்.

      Jayakumar

      நீக்கு
    2. நெல்லை இங்கு கதையின் மூலக் கரு - இறைவன் இருக்கிறான் இல்லை என்ற இரு வேறுகருத்துகள்தானே. அதுதான் பிரதானம் என்று எனக்குத் தோன்றியது.

      கீதா

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அப்ப முதலில் படிக்கும் போதிருந்த தலைப்பை இப்போது மாற்றியமைத்து விட்டீர்கள் போல...!

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.முதல் செய்தியும் தாயின் மீது மகன் வைத்திருக்கும் அன்பை படித்ததும் மனம் உருகியது.

    இது போல் நாமும் இல்லை. அப்படியிருக்கும் போது நாம் இப்படியான அன்பை எதிர்ப்பார்ப்பதும் தவறென என் உள் மனது குற்றம் சொல்கிறது.

    இரண்டாவது செய்தி படிக்கும் போது முழுமை பெறவில்லையோ என நினைத்தேன். ஆனால், தனக்கு தமிழார்வத்தை ஊட்டிய ஆசிரியரின் குடும்பத்தை இப்போதும் நல்ல நிலையில் கவனித்துக் கொள்ளும் ஐ. ஏ. எஸ் அதிகாரியான திரு. பாலசந்திரன் அவர்களை போற்றுவோம்.

    நடிகர் திரு. லாரன்ஸ் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    தமிழக திட்ட உதவி தொகைப் பெற்று நன்கு படித்து நல்ல வேலையில் அமர்ந்த இன்பா அவர்களுக்கும் வாழ்த்துகள். இன்று அனைத்தும் நல்ல செய்திகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதுபோல் நாமும் இல்லை... குற்றம் சொல்கிறது// உண்மைதான் கமலா ஹரிஹரன் மேடம். நாம் அப்படி இருந்தாலே, பதிலுக்கு நம் மக்கள் அப்படி இருப்பார்கள் என நினைக்க முடியாத, அதற்கான சூழல் இல்லாத காலம் இது. நமக்குமே, நம் விருப்பம் இல்லாமல், அதற்கான சந்தர்ப்பமும் சூழலும் அமையாதுபோய்விடுகிறது.

      இங்குமே அவருக்கு வேலை போகும் சந்தர்ப்பம் அமையாமல் தொடர்ந்து கடுமையாக உழைக்கும் நிலை, பின் திருமணம் போன்றவை நடைபெற்றிருந்தால், மனதில் அதே அன்பு இருந்திருக்கும், அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அமையாது போயிருந்திருக்கும். தாய்க்கான கடனை ஓரளவு இந்தப் பிறவியில் அடைக்கும் சந்தர்ப்பம் அவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றே நினைத்துக்கொள்கிறேன்.

      நீக்கு
    2. /இங்குமே அவருக்கு வேலை போகும் சந்தர்ப்பம் அமையாமல் தொடர்ந்து கடுமையாக உழைக்கும் நிலை, பின் திருமணம் போன்றவை நடைபெற்றிருந்தால், மனதில் அதே அன்பு இருந்திருக்கும், அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அமையாது போயிருந்திருக்கும். தாய்க்கான கடனை ஓரளவு இந்தப் பிறவியில் அடைக்கும் சந்தர்ப்பம் அவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றே நினைத்துக்கொள்கிறேன். /

      .உண்மை. அன்பு என்றும் நிலை மாறாதது. ஆனால், சந்தர்ப்பம் நிலையை மாற்றக் கூடியது . நாம் அந்த சந்தர்ப்பங்களில் சிக்கி தாய் தந்தையரின் மேலுள்ள நம் அன்பை வெளிக்காட்ட முடியாமல் இருந்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு வருகிறது. இந்தச் செய்தியை படித்ததும் அது மேலும் வலுக்கிறது.

      எல்லாம் விதியின் பயன் என விதியின் மேல் பாரத்தை ஏற்றுவதை தவிர வேறு என்ன செய்வது? நன்றி.

      நீக்கு
  5. மூலக்கதைக்குப் போய்
    எப்படி எழுத்தில் கற்பனை கதையாய் உருக்கொண்டிருக்கிறது என்று படித்துப் பார்த்து எழுதியவரின்
    எழுத்தாற்றலை தீர்மானிப்பது தான் என் வழக்கம்.

    இந்த வாரம் மூலக்கதையின் சுட்டியைக் காணாததால் இந்தக் கதையை வாசித்து மனதில் தோன்றுவதைச் சொல்ல முடியாது போயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை அப்படியே கொடுத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாரே

      நீக்கு
    2. கதை sirukathaigal.com லிருந்து எடுக்கப்பட்டது. கதை முழுதும் தரப்பட்டுள்ளது.

      நன்றி அய்யா.
      Jayakumar

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதைப்பகிர்வும் அருமையாக உள்ளது பொதுவாக தத்துவங்களை யோசிக்க யோசிக்க மனது ஒரு நிலையில் இருக்காது. தத்துவங்களுடன் இணைந்து, அதன் சாராம்சத்தை நுகரவோ, ருசிக்கவோ கண்களுக்குத் தெரியாத அந்த இறையருளும் வேண்டும்.

    கடவுள் இல்லை என்பவர் எதைப்பற்றியும் கவலையுறாது இருந்து விடலாம். எல்லாமே, எல்லா செயல்களுக்கும் கடவுள்தான் காரணம் என ஆணித்தரமாக நம்புபவர்களும் கவலையில்லாது ஒரளவு வாழ்க்கையை கழி(ளி)த்து விட்டுப் போய் விடலாம்.

    இந்த ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் வைப்பவர்கள் பாடுதான் திண்டாட்டம். சேற்றில் வைத்த காலை எடுத்து கழுவுவதற்குள், ஆற்றில் சுத்தமாக இருந்த காலும், சேறாகி விடும்.

    /ஆமாம், எதுவுமே இல்லை என்று நமக்குப் படுவதில் ஏதோ எப்படியோ மறைந்திருக்கிறது. ஒளிந்திருக்கிறது. என்னவோ மிகப் பெரும் பலத்துடன், என்னமோ மிகப் பெரும் ஆளுமை சக்தி, மிகத் தீர்மானமான சக்தி, அது நம்மை இயக்குகிறது. அதற்கு இறைநம்பிக்கை எனப் பெயர் சூட்டுகிறோம். அவனை நம்மால் நம் சிற்றறிவால் புரிந்து கொள்ள இயலாது என நாம் கட்டாயம் புரிந்து உணர வேண்டும். புரிந்து கொள்ள முயல்கிறோம் மதத்தின் மூலமாக” என்று புன்னகைத்தார் குருக்கள்./

    /கடவுளை அலட்சிக்கிற ஒவ்வொருவனிடமும் கடவுள் இருக்கிறார்./ கதையில் இது போன்ற வரிகளை ரசித்தேன்.

    இரு மாறுபட்ட எண்ணங்களின் முடிவில் கதையில் கடவுள் மனிதனாக காட்சி தந்து விட்டான். (இறை சம்பந்தப்பட்ட தத்துவங்களே ஒரு குழப்ப நிலைதானே ! புரிந்து விட்டால், இந்த "நான்" என்பதும் ஒரு மாயை.. கூடவேயிருக்கும் இறைசக்தியும் ஒரு மாயையின் பிரதிபிம்பம் என்பதும் தெளிவாகி விடும்..!)

    வித்தியாசமான இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து தரும் தங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை ஆழ்ந்து வாசித்து விரிவாக சிந்தை சிந்தனை செய்து கருத்துக்களை விவரமாக தந்திருக்கிறீர்கள். இப்படி சிந்திக்க வைத்ததே இக்கதையின் வெற்றி. முடிவில்

      ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
      அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....என்பதே.
      பாராட்டிற்கு நன்றி.

      நீக்கு
    2. கமலாக்கா முதல் பாரா டிட்டோ செய்கிறேன். முழு நம்பிக்கை அல்லது நம்பிக்கை இன்மை...கவலை இல்லை.

      எஎன் சிற்றறிவு.... இந்த உலகம் இறைவன் என்று சொல்லப்படும் சக்தி, இந்த உலகம் சொல்லும் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட சக்தி.

      அன்பே சிவம்!

      ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
      அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....என்பதே.//

      ஜெ கே அண்ணாவும் சொல்லியிருக்கிறார் அதுதான்!!!

      கீதா

      நீக்கு
  7. திரு. ராஜ்மோகன் அவர்கள் பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
  8. அன்னையை ஊர்ஊராக அழைத்துச் செல்லும் மகன், லாரன்ஸ், தமிழ் ஆசிரியரின் குடும்பத்தை பார்க்கும் பாலச்சந்திரன் இவர்கள் அனைவரும் போற்றுதற்கு உரியவர்கள்.

    இருவேறு முரணான கருத்துக்கள் கதையாகி முடிவில் ஓரிடம் நின்று இறைவன் மனிதனாக மனிதனை வணங்குவதாக கதாசிரியர் வேறுபட்ட பார்வையை காட்டுகிறார். வித்தியாசமான சிந்தனை.

    பதிலளிநீக்கு
  9. நல்ல செய்திகள் இன்று. அம்மாவை அழைத்துச் சென்ற மகன் பற்றிய செய்தியும், மறைந்த ஆசிரியரின் குடும்பத்துக்கு உதவும் மனம் படைத்த அதிகாரி, திரைக் கலைஞர்கள் முன்னெடுத்துச் செய்யும் உதவிகளும், விளிம்பு நிலையில் உள்ள குடும்பத்துப் பெண் மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று நல்ல நிலைக்கு உயர்வது எல்லாமே அருமையான செய்திகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஜெ கே அண்ணாவின் முன்னுரை வாசித்ததுமே கதையை வாசிக்கும் ஆர்வம் வந்துவிட்டது காரணம் இன்றைய கதையின் கரு என்னை எப்பவுமே ஈர்க்கும் கரு.
    நானுமே இதைச் சார்ந்த ஒரு கதை எழுதி வைத்திருந்தேன் எபிக்கு அனுப்பாமல் தயக்கத்தில். அது இப்போது எடுக்க முடியாத இடத்தில். என் கதையிலும் பூஜ்யம் இடம் பெற்றிருந்தது.

    கதை பிடித்திருந்தது. ஆசிரியர் இன்னும் இதை விரிவாக குளத்து ஐயருக்கும் மகனுக்குமான உரையாடல்களை விளக்கங்களுடன் சொல்லியிருக்கலாமோ என்று இப்படியானவற்றை இரு வேறுகருத்துகளையும் அறிய என் ஆர்வ மிகுதியான மனம் எதிர்பார்த்தது.

    அது போன்று இறுதியில் நீலகண்டனுக்கு டக்கென்று மனம் மாறுவதாக முடிந்துள்ளது. எப்படி இத்தனை வருடத்து சித்தாந்தம் மாறியது என்ப்தைச் சொல்லியிருக்கலாமோ என்றும் தோன்றியது. இல்லை அதுதான் கதையின் எதிர்பாரா முடிவு என்பதாக முடித்திருக்கிறாரோ என்றும் தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கடவுள் மறுப்புடையரை கெட்டவர்களாகப் பார்க்கும் எண்ணம் நம்மில் பலரில் உள்ளது. ஏன் அப்படி என்ப்து விநோதம். அவர்களில் மிக நல்ல ஒழுக்க சீலர்கள் மனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள். கோயிலுக்குச் செல்வோரில், நெற்றியில் குறியீடுகள் இடுவோரில் ஒழுக்கமற்றவர்களும் இருக்கிறார்கள்.

    ஆனால் நாம், கடவுள் மறுப்புடையவர்களின் சிந்தனையை மாற்ற முயற்சிப்பதும் நடக்கும் அது போல மறுப்புடையவர்கள் நம்பிக்கை உடையவர்களைக் கேலி செய்து விவாதித்து மாற்ற முயற்சிப்பதும் உண்டு. சமூகத்தில் பார்க்கிறோமே.

    அவரவர் சித்தாந்தம் அவரவர்க்கு என்று விட்டால் எல்லாம் சௌக்கியமே.... நல்லதை மட்டும் பார்த்துவிட்டால் பிரச்சனைகள் இல்லை.

    வீட்டில் குழந்தைகள் பெற்றோர் செய்யும் பிரார்த்தனையோ இல்லை ரிச்சுவலோ செய்யவில்லை என்றால் குழந்தைகளை ஒதுக்கும் பெற்றோரைப் பார்க்கும் வேளையில்....

    கதையில் எனக்கு மிகப் பிடித்த விஷயமே அப்பாவகிய குளத்து ஐயர் தன் மகனை அவனின் சுய சிந்தனைக்கு விட்டதும் அவன் மீது அபரிதமான பாசம் வைத்திருப்பதாக ஆசிரியர் எழுதியிருப்பதும் என்னை மிகவும் ஈர்த்தது. இருபக்கத்து சிந்தனைகளையும் மிக அழகாக எடுத்துரைக்கிறார். இப்படியான அருமையான கதையை சட்டென்று முழுமை இல்லாமல் முடித்துவிட்டாரோ என்று கொஞ்சம் சங்கடம் தோன்றியது. என்றாலும் கதை மிகவும் பிடித்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கதை சரியாக எழுதப் படவில்லை. அல்லது எதைச் சொல்வதற்காக
    இந்தக் கதையை எழுத வேண்டும் என்று கதாசிரியர் நினைத்தாரோ அது சரியாகச் சொல்லப் படவில்லை.

    கதை வாசிப்பில் ஒரே குழப்பம். தந்தை, மகன் உரையாடலில் தெளிவில்லை. போதாக்குறைக்கு மார்க்சியத்தை வம்புக்கிழுத்தல் வேறே!
    குடும்ப உறவுகளின் விவரணைக்குக் கொடுத்த முக்கியத்துவம் கூட கடவுள் - மனிதன் மூலாதார தத்துவ விளக்கத்திற்குக் கொடுக்கப்படவில்லை.
    மொத்தத்தில் குழந்தை விளையாட்டாய் ஒரு கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதனால்தான் முழுமையாக இல்லை என்று தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன் என் கருத்தில்...

      கீதா

      நீக்கு
    2. ஜீவி அண்ணா, எனக்கும் முழுமையாக இல்லை என்றே தோன்றியது.

      இன்னும் அழகாக விளக்கமாகச் சொல்லியிருக்கலாம்

      கீதா

      நீக்கு
    3. நான் சொன்னது எழுத்தாளர் எழுதிய கோணத்தில். ஒட்டு மொத்த கதையை ஓரிரு வரிகளில் அடைக்கும் வழக்கமான் வாசக
      வெளிப்பாடு இல்லை.

      நீக்கு
    4. நான் சொன்னது எழுத்தாளர் எழுதிய கோணத்தில். ஒட்டு மொத்த கதையை ஓரிரு வரிகளில் அடைக்கும் வழக்கமான் வாசக
      வெளிப்பாடு இல்லை.

      நீக்கு
    5. ஜீவி அய்யா கூறுவதை ஆமோதிக்கிறேன். ஆசிரியர் கதையை கோர்வையாக சொல்லாமல் நிகழ்ச்சிகளையும், உரையாடல்களையும் குழப்பி தெளிவில்லாமல் செய்துவிட்டார். திருத்தி நேராக்கலாம் என்று நினைத்தேன், அதன் பின்னர் நல்ல முன்னுரை போதும் என்று விட்டு விட்டேன். முன்னுரை 2 நாட்களாக ஆலோசித்து எழுதப்பட்டது.
      Jayakumar

      நீக்கு
    6. கதை ஆசிரியர் bsnl இல் பணியாற்றியவர் என்பதால் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.

      நீக்கு
    7. தெரிந்தவர் தான்
      ஜெஸி ஸார்.

      அந்நாட்களில் மார்க்ஸீயமும் அத்வைதமும் ஏறத்தாழ ஒன்று போலவேயான
      சாயை கொண்டிருப்பவை என்ற பிரமை எனக்குமிருந்தது.
      ஜெயகாந்தன் கூட இது பற்றிப் பேசியிருக்கிறார்.

      நீக்கு
    8. காரல் மார்க்ஸ் காலத்தில் பர்க்லி
      என்ற பாதரியார்
      மாயை பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கள் செல்வாக்கு பெற்றிருந்தன.

      முந்தா நாள் தொலைக்காட்சியில்
      'நான் என்பது மாயையா' என்பது பற்றி வேளுக்குடியார்
      ஆற்றிய உரை விவரமாக இருந்தது.

      நீக்கு
  13. எதுவுமே இல்லை என்று நமக்குப் படுவதில் ஏதோ எப்படியோ மறைந்திருக்கிறது. ஒளிந்திருக்கிறது. என்னவோ மிகப் பெரும் பலத்துடன், என்னமோ மிகப் பெரும் ஆளுமை சக்தி, மிகத் தீர்மானமான சக்தி, அது நம்மை இயக்குகிறது. அதற்கு இறைநம்பிக்கை எனப் பெயர் சூட்டுகிறோம். அவனை நம்மால் நம் சிற்றறிவால் புரிந்து கொள்ள இயலாது என நாம் கட்டாயம் புரிந்து உணர வேண்டும். புரிந்து கொள்ள முயல்கிறோம் மதத்தின் மூலமாக”//

    மிகவும் ரசித்த ஒன்று. அது போல பூஜ்ஜியம் பற்றியதும்.

    என் சிந்தனைகள் இதை ஒட்டியிருப்பதால்....

    கடவுள் எல்லாரிலும் இருக்கிறார் என்பதைத்தான் கடைசியில் ஆசிரியர் சொல்லியிருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. //சந்நிதியில் உள்ளே மனிதன். ம் மனிதன். கடவுள் விக்கிரகமல்ல. அவன்! மனிதன். நீலகண்டனைப் பார்த்து அந்த கற்பூர ஆராதனைக்குக் கும்பிட்டாற்போல இருந்தது. //

    கொஞ்சம் ஓவராக இல்லை?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் அந்த வரி என்னையும் உறுத்தியது. ஆனால் நான் மனிதரில் உள்ளத்தில் இறைவன் இருக்கிறான். எடுத்துக் கொண்டேன். ஒரு பாட்டு கூட உண்டே...சரியான வரி நினைவுக்கு வரலை

      எனக்கு கதை இன்னும் முழுமையாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. என்னவோ மிஸ்ஸிங்க்....சில வரிகள் இடங்கள் நன்றாக இருந்தாலும் கதை முழுமையாக இல்லை என்பது என் எண்ணம்.

      கீதா

      நீக்கு
  15. மனதுக்குள் தோன்றிய வாதங்களை சரியாக கோர்க்கவில்லை என்று தோன்றிஅயது எனக்கு!  அதனால் முடிவும் சரியாக அமையவில்லை.

    பதிலளிநீக்கு
  16. ஜார்கன் என்று சொல்லலாமா, சட்டென விளங்கி கொள்ள முடியாத சொல் அலங்காரங்களால் நிரம்பிய வார்த்தைகள். அதை வைத்து சிந்தனைகளை சிக்கலாக அமைத்து விட்டு ஏறிக்கொண்டே இருக்கும் ஏணியிலிருந்து சட்டென சறுக்கி விழுந்தது போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  17. வார்த்தைகளும் ரொம்ப சிம்பிளாக இல்லாமல் இருக்கின்றன பல இடங்களில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. எனக்கு ஏற்படும் மற்றொரு சந்தேகம், சிறுகதைகள்.காமில் வெளியாகும் கதைகள் எல்லாமே யாரேனும் டைப் செய்தோ இல்லை, ஸ்கான் செய்து எடுக்கப்பட்டோ போடப்படுகிறது. அப்படிச் செய்யும் போது கதைகளில் ஏதேனும் மிஸ் ஆக வாய்ப்புண்டோ என்றும் சில கதைகளை வாசிக்கும் போது தோன்றும்.

    ஒரிஜினலாக ஆசிரியரின் வெளியீடுகளை வாசித்தால் தெரியுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  19. கடவுள் -- மனிதன் என்று
    பரமாத்மா -- ஜீவாத்மா விஷயம் பேசப்படுகிறது. இது பற்றிய அத்வைத -- விசிஷ்டாத்வைத கருத்து
    வேறுபாடுகளில் கதாசிரியர் அத்வைத கருத்துப்படி கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைத்து சரி வர சொல்லாமல் விட்டதுமில்லாதது அத்வைத தத்துவ விசாரணையையும் குழப்பி விட்டார்.

    பதிலளிநீக்கு
  20. நமக்கு உதாரணங்களாக விளங்கும் நல்ல மனிதர்கள் பற்றிய செய்திகள் அனைத்தும் நல்ல செய்திகள். இந்தச் செய்திகளில் பல நமக்கும் ஒரு ஊக்கத்தையும், இப்படி கூடச் செய்யலாமோ (அம்மாவை பல ஊர்களுக்கும் அழைத்துச் சென்ற செய்தி) என்று யோசிக்க வைக்கும் செய்திகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. இந்த பூஜ்யம் ஏதாவது ஒன்றுடன் சேரும் போதுதான் அதன் மதிப்பை, இருப்பை உணர முடிகிறது. இந்த பூஜ்யம் ஆகிய கடவுள் ஒவ்வொரு மனிதனுள்ளும் இருப்பதால் தான் மனிதன் கடவுளை உணர முடிகிறது. கடவுளை இல்லை என்று கூறும் நாத்திகர்களிலும் அவன் இருக்கிறான். //

    இதுதானே சத்சித் ஆனந்தம். புழுவாய் பிறப்பினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும் என நம் முன்னோர் சொல்லியிருக்கிறார்கள்.

    கதை தத்துவங்கள் அடங்கிய ஒன்று. இருப்பும் மறுப்பும் பற்றிய ஒன்று என்பதால் தத்துவங்கள் இல்லாமல் எழுத முடியாதுதான்.

    கதையின் முடிவு விளங்கவில்லை. என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்கவில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. விரிவான கருத்துரைக்கு நன்றி துளசி சார்.
      Jayakumar

      நீக்கு
  22. கதையை விட கதையை அறிமுகப் படுத்திய ஜெயகுமார் சந்திரசேகரன் சார் அருமையாகச் சொல்லி இருக்கிறார் என்று என் எண்ணம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  23. கதை நன்றாக இருக்கிறது.
    //இரு நிலைகளிலும் கடவுள் இருக்கிறார்.

    முரண்களின் சங்கமமாக!//

    ஆமாம், இரு நிலைகளிலும் கடவுள் இருக்கிறார்.

    அவனில் அணு, அணுவில் அவன்
    உன்னில் எல்லாம், நீ அறி உன்னை

    வேதாத்திரி மகரிஷியின் கவிதை நினைவுக்கு வருகிறது.




    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!