செவ்வாய், 24 செப்டம்பர், 2024

ரீட்டா & மீட்டா 10.

 

முந்தைய பதிவு சுட்டி <<< 

..  அ : " ரீட்டாவைப் பிரிந்தபிறகு, அவளை மீண்டும் சந்திக்க நீங்கள் முயற்சி செய்யவில்லையா? "  .. 

அருண் கேட்ட கேள்விக்கு ஆனந்த் பதில் .. 

ஆ : " ரீட்டா என்னை உதாசீனம் செய்ய ஆரம்பித்தவுடன், அவளைத் தொடர்பு கொள்ளவோ, பார்க்கவோ  முயற்சி செய்யாமல் இருந்தேன். சென்னை ரீத்திகா ஆட்டோ ஆன்சிலரீஸ் கம்பெனியில் வேலை கிடைத்தபோது கூட, அவளைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யவில்லை. ரீஜனல் மேனேஜராக பதவி உயர்வு பெற்றபின் ரீட்டாவின் மொபைல் எண் மூலம் அவளை அழைக்க முயற்சி செய்தேன். ஆனால் ' நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை ' என்ற செய்திதான் கிடைத்தது. "

அ : " அப்புறம் ?" 

ஆ : " மேலும் பதவி உயர்வு பெற்று, நிரந்தரமாக ஹைதராபாத் வரவேண்டிய சூழ்நிலையில், எப்படியாவது ரீட்டாவைப் பார்த்து என்னுடைய வேலை, பதவி உயர்வு பற்றி சொல்ல நினைத்தேன். அவள் தங்கியிருந்த ஹாஸ்டல் அலுவலகத்திற்குச் சென்று அவளைப் பற்றி விசாரித்தேன். அவர்கள், இறுதியாண்டு பரிட்சை எழுதி முடித்தபின் ரீட்டா ஹாஸ்டல் அறையைக் காலி செய்து விட்டு சென்றுவிட்டதாகவும், ஒரு விலாசம் கொடுத்துள்ளதாகவும் சொல்லி, அண்ணா நகர் விலாசம் ஒன்று தந்தார்கள். அங்கு சென்று தேடும்போது, அந்த விலாசத்தில் ரீட்டாவும் அவளுடைய சித்தியும் இரண்டு மூன்று மாதங்கள் மட்டும் இருந்துவிட்டு, பிறகு காலி செய்து சென்றுவிட்டதாக கூறினார்கள். மொபைல் எண்ணும் இல்லை; விலாசமும் கிடைக்கவில்லை என்பதால், ரீட்டாவைத் தேடுவதை அன்றோடு நிறுத்திவிட்டேன். 

அ : "ரீத்திகாவைக் கல்யாணம் செய்துகொள்வது என்று எப்போது தீர்மானம் செய்தீர்கள்?"

ஆ : " ரீத்திகா இண்டஸ்ட்ரீஸ் வேலையில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை எனக்கு ரீத்திகா யார் என்றே தெரியாது. அவளுடைய அப்பா திடீரென்று ஒரு போர்ட் மீட்டிங் சமயத்தில், எங்கள் எல்லோருக்கும் ரீத்திகாவை அறிமுகம் செய்து, விரைவில் அவருடைய ஒரே வாரிசான ரீத்திகா கம்பெனியின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள இருக்கிறாள் என்று கூறினார். அதிலிருந்து அடிக்கடி, அலுவல் சம்பந்தமாக ரீத்திகா எங்களை அழைக்கும்போதெல்லாம் சென்று அவளுக்கு கம்பெனி நிலைமை பற்றியும் கம்பெனி முன்னேற்றத்திற்காக நாங்கள்  எடுத்து வரும்  முயற்சிகள் பற்றியும் கூறுவோம். போர்ட் உறுப்பினர்களில் மிகவும் இளையவனாகவும், கல்யாணம் ஆகாதவனாகவும் இருந்தவன் நான் ஒருவன்தான்." 

அ : " அதனால் உங்களுக்குள் காதல் மலர்ந்ததா? "

ஆ : " காதல், கத்தரிக்காய் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. என்னைப் பொருத்தவரை, ரீத்திகா முதலாளியின் மகள்; நான் அவர்களிடம் சம்பளம் வாங்கும் ஒரு மேனேஜர். " 

அ : " அப்புறம் எப்படித்தான் ரீத்திகா உங்களைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டி வந்தது?"

ஆ : " இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள், பிசினஸ் ப்ராக்ரஸ் பற்றி ரீத்திகாவிடம் ஒரு மணி நேரம் விவரமாக எடுத்துக்கூறி பிறகு கிளம்பும்போது ரீத்திகா என்னிடம், 'மிஸ்டர் ஆனந்த் - ரீத்திகா இண்டஸ்ட்ரீஸில் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குள், இந்த ஸ்தாபனத்தை அதிக லாபம் ஈட்டும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாராட்டுகள். உங்களிடம் ஒரு பெர்சனல் கேள்வி - கேட்கலாமா?' என்று கேட்டாள்." 

அ : " அப்புறம்?"

ஆ : " அப்போது ரீத்திகா என்னிடம் கேட்டது, ' உங்கள் வாழ்க்கையில் இது வரை எந்தப் பெண்ணையாவது காதலித்திருக்கிறீர்களா ?' என்று."

அ : "நீங்கள் என்ன சொன்னீர்கள்?" 

ஆ : " ஒரு வினாடி ரீட்டா என மனதில் வந்து போனாலும் - ரீட்டா பற்றி இனி நினைத்துப் பயன் இல்லை என்ற உண்மை மனதில் பட, ரீத்திகாவிடம் ' இல்லை இதுவரை அப்படி எந்தப் பெண்ணும் இல்லை. குறிப்பாக இங்கு வேலையில்  சேர்ந்ததிலிருந்து, எனக்கு 24 மணி நேரமும், இந்த நிறுவனத்தை எப்படி எல்லாம் முன்னேற்றுவது என்கிற ஒரே சிந்தனைதான்'  என்றேன். "

அ : " பிறகு ? " 

ஆ : " சற்றும் எதிர்பாராத விதமாக ரீத்திகா, ' என்னை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதமா? ' என்று கேட்டாள். "


அ: " நீங்கள் என்ன சொன்னீர்கள்? " 

ஆ : " அந்த நேரத்தில் ஒரு வினாடி தயக்கம் காட்டியிருந்தால் கூட ஒரு நல்ல எதிர்காலம் எனக்கு வாய்க்காமல் போய்விடும் என்று எனக்குத் தோன்றியதால், உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன்."

அ : " உங்களுடைய திருமண நிச்சயதார்த்தம், ரீத்திகாவின் பேட்டி, உங்கள் பேட்டி எல்லாம் பிசினஸ் இந்தியா பத்திரிக்கையில், கவர் ஸ்டோரியாக வந்திருந்ததை நானும் படித்தேன். "

ஆ : " ஆமாம். அந்தக் கட்டுரையில், ரீத்திகா சொன்ன ஒரு தகவலை, 'பெட்டிச் செய்தி'யாக வெளியிட்டிருந்தார்கள். ' ஆனந்தின் வாழ்க்கையில், இதுவரை அவர் யாரையும் காதலித்தது இல்லை என்று அவர் சொன்னதும், இவர்தான் என் எதிர்காலக் கணவர். எனக்காகவே கடவுள் படைத்த ஜீவன் என்று நினைத்தேன். ரீத்திகா இண்டஸ்ட்ரீஸின் எதிர்காலம் மட்டும் அல்ல, இந்த ரீத்திகாவின் எதிர்காலத்தையும்  இவரிடம் ஒப்படைப்பது என்று தீர்மானம் செய்தேன்' 

அ : " அதையும் படித்தேன். அந்தப் பெட்டிச் செய்தியை, தன்னுடைய லைப்ரரி அறையில் உள்ள பிசினஸ் இந்தியா பத்திரிக்கையில், சிவப்புக் கட்டம் போட்டு அடையாளம் செய்து வைத்திருந்தாள் - இறந்துபோன ரீட்டா "   

( தொடரும்) 

23 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. போட்டோவுல நல்ல புள்ளயா தெரியறாளே யா!
    இவளுக்கா இந்த கதி!..

    ஓய்.. நெய்யெல்லாம் நெய்யில்லை ன்ற மாதிரி தான் இதுவும்...

    பேசாம படிச்சுட்டு வாரும்!...

    பதிலளிநீக்கு
  3. போட்டோவுல நல்ல புள்ளயா தெரியறாளே யா!
    இவளுக்கா இந்த கதி!..

    ஓய்.. நெய்யெல்லாம் நெய்யில்லை ன்ற மாதிரி தான் இதுவும்...

    பேசாம படிச்சுட்டு வாரும்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபோட்டோவில் இருப்பவர் ரீத்திகா. ( ரீட்டா அல்ல!)

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதையமைப்பும் சுவாரஸ்யமாகவே தொடர்கிறது. ஒரளவு உண்மைகளையே ஆனந்த் கூறி வருகிறார். அவர் கூறி வருவதும் அருணுக்கு ஏற்கனவே தெரிந்த விபரங்களோடு ஒத்துப் போகிறது. எந்த நேரத்தில், சந்தேகத்தின் தீப்பொறிகள் வெடித்து சிதறுமோ .? பார்க்கலாம்..! ரீத்திகாவின் படம் நன்றாக உள்ளது. அடுத்தப்பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி. பொறுத்திருந்து பார்ப்போம்.

      நீக்கு
  6. கதை சுவாரசியமாக செல்கிறது. அடுத்து .....வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
  7. ஏதோ ட்விஸ்ட் இருக்கப் போகிறது என்று தெரிகிறது. இப்ப சொல்லலை. கௌ அண்ணா கதையை முடித்ததும் அப்ப கருத்தில் சொல்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ட்விஸ்ட் இல்லாவிட்டால் இது கதையே இல்லை. ட்விஸ்ட் நிச்சயம். ஆனால் ..

      நீக்கு
  8. ரீத்திகா படம் நன்றாக இருக்கிறது.
    அருண் கேட்ட கேள்விகளுக்கு ஆனந்த் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்கிறது.
    பார்ப்போம் கதையில் திருப்பம் வரும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் காத்திருக்கிறேன். கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  9. ''ரீட்டாவைப் பிரிந்த பிறகு அவளை மீண்டும் சந்திக்க நீங்கள் முயற்சி செய்ய வில்லையா?" -- அருண்

    "ரீஜனல் மேனேஜராக பதவி உயர்வு பெற்றவுடன் மொபைலில் அவளை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன்" -- ஆனந்த்

    எனக்கென்னவோ அப்பொழுது ரீட்டா கிடைத்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.. கிடைந்திருந்தால்?... அடடா! வேறு டிராக்கில் என்ன ஒரு சுகமான கற்பனை!

    பதிலளிநீக்கு
  10. தொடர்கிறேன். இன்னும் என்ன நடக்கப் போகிறதோ பார்த்து விடுவோம்! 🙂

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!