திங்கள், 28 அக்டோபர், 2024

"திங்க"க்கிழமை  :  வரகரிசிக் கஞ்சி  - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 வரகரிசிக் கஞ்சி வைப்பதற்குத் தேவையான பொருட்கள் :




வரகரிசி  200 கி
பாசிப்பருப்பு 25 கிராம்.
சீரகம் ஒரு tsp
மிளகுத்தூள் ஒரு  tsp
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
வெந்தயம் ஒரு tsp
வீட்டுத் தயிர் 1 கப் 
பசு வெண்ணெய் ஒரு tbsp
கல் உப்பு ,
வீட்டுத் தயிர் தேவைக்கு ..


செய்முறை :

 வரகரிசியை வெறும் வாணலியில்  இளஞ் சிவப்பாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக  உடைத்துக் கொள்ளவும்.

 பாசிப் பருப்பையும் இதே போல வறுத்து, ஒன்றிரண்டாக  உடைத்துக் கொள்ளவும்.

இரண்டையும் ஒன்று சேர்த்து, ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் நீர் விட்டு, வேக வைக்கவும்..

அரை வேக்காட்டில் மஞ்சள்தூள், உப்பு, மிளகுத் தூள், சீரகம் வெந்தயம் மற்றும் நறுக்கிய வெங்காயம் இவற்றை ச் சேர்க்கவும்..

நன்றாகக் குழைந்து வருகின்றபோது அடுப்பில் இருந்து இறக்கி  வெண்ணெய் சேர்த்து மல்லித் தழை தூவி சற்று ஆறியதும் தயிர் கலந்து பரிமாறவும்.

வரகரிசிக்குப் பதிலாக பச்சரிசி குறுநொய் சேர்த்தும் இதே பக்குவத்தில் செய்யலாம்..

நம்முடைய நலன் நம்முடைய கையில்..

***

29 கருத்துகள்:

  1. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  2. இன்று பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  3. துரை அண்ணா சூப்பர் செய்முறை.

    வரகரசி நம் வீட்டில் அடிக்கடி இடம் பெறும் ஒன்று. பொங்கல் செய்வதுண்டு.

    கஞ்சியில் பாசிப்பருப்பு சேர்த்ததில்லை. மற்றபடி நீங்க சொன்னது போல் செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. தங்களது அன்பின் வருகையும் பாராட்டும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  5. வரகரிசி கஞ்சி செய்முறை நன்று. எனக்கு வெல்லம் ஜீனி சேர்க்காத கஞ்சி வாழ்க்கையில் சாப்பிட்டதில்லை.

    ஒன்பதாம் வகுப்பு படித்தபோது உடல்நிலை சரியில்லை. பெரியம்மா ஜவ்வரிசி கஞ்சி ஜீனி போட்டுப் பண்ணித்தந்தார். நான் சாப்பிடாமல் படுத்தினேன். பிறகு கல்லூரியிலிருந்து பெரியப்பா வந்தார்.உடம்பு சரியில்லைனா ஜீனியா.க்ஷ கூடாது. உப்பு இஞ்சி போட்டு அரிசிக் கஞ்சியை வலிந்து கொடுத்தது நினைவுக்கு வருது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களது வருகையும் கருத்தும்
      மேல் விவரங்களும் மகிழ்ச்சி..

      நன்றி

      நீக்கு
  6. வணக்கம் JKC ஸார்...   இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. ஜெ கே அண்ணா உங்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியைம் இறைவன்அருளிட பிரார்த்தனைகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அன்பின் JKC அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    நலமுடன் வாழ்க பல்லாண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.J.k .c அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  9. வரகரசி கஞ்சி - நல்ல குறிப்பு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வரகரிசிக் கஞ்சி உடல் நலத்துக்கு சூப்பர் சமையல்.

    அரிசியில் கஞ்சி செய்வதுண்டு. வரகரிசியில் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் பாராட்டும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு
  11. ஐயா JKC அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. இவர் பாட்டுக்கு பசு வெண்ணெய்னு சொல்லிடறாரு. பசு வெண்ணெய்க்கு இந்த பாக்கெட் பால் யுகத்துல எங்க போறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது சூழ்நிலையில் வீட்டில் வெண்ணெய் தயாரித்துக் கொள்ள இயல வில்லை எனில் வெளியில் வாங்கிக் கொள்ள வேண்டியது தான்...

      கர்நாடக பால் வளத் துறையில் வெண்ணெய் கிடைக்காதா?

      நீக்கு
  13. வரகரிசி கஞ்சி குடித்ததில்லை, வரகரிசி இங்கு கிடைப்பதில்லை. சாதாரண கேரள இரவு உணவு சிவப்பு சம்பா கஞ்சி, பயறு சுண்டல், பப்படம் தான். கர்கிடக (ஆடி) மாதம் ஆயுர்வேத சிகிச்சையும் (பஞ்ச கர்மா போன்றவை) மருந்து கஞ்சியும் பிரபலமானவை.

    இங்கு எ பி யில் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்திருப்பதை பார்த்து வியப்புற்றேன். வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 75 முடிந்து விட்டது. இயலாமை கூடுகிறது. நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், பிறந்த நாள் வாழ்த்துகள், வாழ்க வளமுடன் . உடல் நலத்தோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. . 75 முடிந்தால் என்ன,?..
      இன்னும் இளமைதான்.

      நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு பிரார்த்தனைகள்..

      வணக்கம்.

      நீக்கு
  14. வரகு அரிசி கஞ்சி செய்முறையும் படங்களும் அருமை.
    நான் வரகு அரிசி கஞ்சி செய்வேன்.

    பதிலளிநீக்கு
  15. வரகு அரிசி பொங்கலும் செய்வேன்.

    பதிலளிநீக்கு
  16. நான் கஞ்சியை சூடாய் குடிப்பதால் தயிர் சேர்ப்பது இல்லை.
    மதுரையில் கஞ்சி (கூழ் ) விற்பவர்கள் முதல் நாள் இரவு செய்து மறு நாள் அதில் மோர் கடைந்து சேர்த்து கலந்து கொண்டு வருவார்கள்
    சிறிய தட்டுகளில் கூழ் வற்றல், மோர் மிளகாய், மற்றும் ஊறுகாய், கெட்டி குழம்பு தருவார்கள். கூட்டமாக இருக்கும் காலை நேரம்.

    பதிலளிநீக்கு
  17. சித்த வைத்திய ஆயுர் வேத முறைப்படி சூடான எந்த உணவுடனும் தயிர் மோர் சேர்க்கக் கூடாது..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையாக வரகரிசி கஞ்சி செய்முறை நன்றாக உள்ளது. அதனுடன் பாசிப் பருப்பும் தயிரும் சிறிதளவு சேரும் போது சுவையாக இருக்கும். நான் வெறும் ரவை, கோதுமை ரவை ராகி மாவு போன்றவற்றில் கஞ்சி செய்து மோர் விட்டு குடிப்போம். இதுபோல் இனி செய்கிறேன். வரகு உடம்புக்கு மிக நல்லது. நல்ல பகிர்விற்கு நன்றி.

    காலையிலிருந்தே வீட்டில் ஏதேதோ வேலைகள். மாலையில் வரலாம் என நினைத்தேன். பிறகு மாலையில் எங்கள் பிறந்த வீட்டு வகை உறவில் ஒருவர் தவறி விட்டதாக செய்தி வந்தமையால் மனது வருத்தமடைந்ததில் உடனே என்னால் பதிவுலகிற்கு வர இயலவில்லை. அதனால் தாமதமான வருகை. மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!