அரேபிய முத்தபல் [ MOUTABEL ]சாலட்
மத்திய கிழக்கு நாடுகளில் அதுவும் பாலஸ்தீன், லெபனான், துருக்கி, சிரியா, அரேபிய நாடுகளில் மிகவும் புகழ் பெற்றது இந்த முத்தபல் சாலட். ரொட்டியில் தடவும் ஒரு க்ரீமாகவும் பல ஸாலட் வகைகளில் ஒரு பக்கத்துணையாகவும் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. பெரும்பாலும் இங்கேயுள்ள அனைத்து ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் ஸாலட் வகைகளில் இது இடம் பெற்றிருக்கும். இங்கு பல வருடங்களுக்கு முன் ஒரு மலையாள உணவகத்தில் இதை ருசித்தேன். அந்த ருசி வேறு எந்த ஐந்து நட்சத்திர விடுதியில் கூட எனக்கு கிடைத்ததில்லை. இப்போது கூட ஷார்ஜா சென்றால் அந்த உணவகம் சென்று இந்த சாலட் வாங்கி வருவது வழக்கம். அப்புறம் இந்த பக்குவத்தை தெளிவாகக் கற்ற பின் அடிக்கடி வீட்டில் செய்வேன். சுட்ட கத்தரிக்காய் விழுதுடன் முக்கியமாக எள்ளை உபயோகித்து செய்யும் ‘ ‘ TAHINI SAUCE ‘ என்ற பேஸ்ட் கலந்து இது செய்யப்படுகிறது. இந்த சாஸ் இங்கு எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும். நாமே வீட்டிலும் செய்து வைத்துக்கொள்ளலாம். இங்குள்ள குறிப்பில் நானே அதை செய்து பின் முத்தபல் சாலட் செய்துள்ளேன். இனி குறிப்பிற்கு செல்லலாம்!
தேவை:
ஒரு பெரிய கத்தரிக்காய் [ 500 கிராம்]-1
வெள்ளை எள்- 3 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய்- 4 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம்-1
பூண்டு பல்[ நடுத்தரமானது ]-3 [மிகவும் பொடியாக நறுக்கியது]
உப்பு- கால் ஸ்பூன்
தஹிணி சாஸ் செய்யும் முறை:
எள்ளை வெறும் வாணலியில் குறைந்த தீயில் இலேசான பொன்னிறமாக
வறுத்து ஆற விடவும்.
ஆறிய எள்ளை ஒரு மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் அரைக்கவும்.
முக்கால் பதம் வந்ததும் 3 மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெயை ஊற்றி விழுதாக அரைக்கவும். இதுவே தஹிணி சாஸ்.
முத்தபல் செய்யும் விதம்:
கத்தரிக்காயை அனலில் சுட்டெடுத்து ஆறியதும் அதன் சதையை எடுத்து வைக்கவும்.
ஒரு மிக்ஸியில் இந்த தஹிணி சாஸ் ஊற்றி பூண்டு, எலுமிச்சை சாறு, உப்பு, சுட்ட கத்தரிக்காய் விழுது, உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். அரைத்தெடுத்த முத்தபல் சாலடை ஒரு கிண்ணத்தில் போட்டு பாக்கியுள்ள ஆலிவ் எண்ணெயை ஊற்றி கலக்கவும்.
இதில் முக்கியமான விஷயம் எலுமிச்சை சாறும் உப்பும் சரியான அளவில் இருந்தால் மட்டுமே இதன் சுவை அதிகமாக இருக்கும். நான் சொல்லியுள்ள அளவுகளில் எலுமிச்சை சாறு, உப்பு தேவைக்கேற்ப சற்று அதிகமாகவும் தேவைப்படலாம்.
##############################################################################################################################################################################
ஆஹா மனோ அக்கா இன்று முத்தபல் சாலட்!
பதிலளிநீக்குநல்லாருக்கு அக்கா ரெசிப்பி மற்றும் செய்திருப்பது.
நம் வீட்டில் செய்வதுண்டு. தாஹினி சாஸ் செய்து வைத்திருக்கிறேன்.
ஆனால் ஒன்றே ஒன்று ஆலிவ் எண்ணை பயன்படுத்தாமல் நம்ம ஊர் சமையல் எண்ணைதான் பயன்படுத்தியிருக்கிறேன். ஆலிவ் எண்ணை விலை அதிகமாக இருப்பதால் இப்படியான செய்முறைகளுக்கு மட்டுமேனும் பயன்படுத்த வாங்கி வைக்கலாமோ என்ற எண்ணம் இருக்கிறது. மகன் அங்கு ஆலிவ் எண்ணைதான் பயன்படுத்துகிறான்.
ஆமாம் எலுமிச்சை, உப்பு சரியாக இருப்பதுதான் இதன் சுவை. எள்ளின் சுவையும்.
தாஹினி சாஸ், நிலக்கடலை வெண்ணை (Pea nut butter) இவை செய்து வைத்திருக்கிறேன்.
நானும் எபிக்கு அனுப்ப செய்தப்ப படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன்.
ஆனால் இப்ப சமையலில் எக்ஸ்பர்ட் மனோ அக்கா கொடுத்த பிறாகு ஹாஹாஹாஹா!
உங்கள் செய்முறை சூப்பர். உங்கள் அளவுகளைக் குறித்துக் கொண்டிருக்கிறேன் அக்கா.
கீதா
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கீதா!
நீக்குமுத்தபல் சாலட்டில் ஆலிவ் எண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும். வேறு எண்ணெயை கலந்தால் அதன் ஒரிஜினாலாட்டி குறைந்து விடும்.
நீங்கள் சொல்வது போல எலுமிச்சம்பழங்களிலேயே ஒவ்வொன்றின் சுவை, சாறின் அளவு விகிதம் வேறுபடுகிறது. அதனால் தான் எலுமிச்சை சாறும் உப்பும் சரியான அளவில் கலந்தால் தான் இதன் சுவை அதிகமாக தெரியும்.
இன்னொன்று. நம் ஊர் கத்த்தரிக்காயிலும் செய்து பார்க்கலாம். சுவை வேறுபடாது என்று தான் நினைக்கிறேன். சில கத்தரிக்காய்களில் சற்று கசப்பிருக்கும். சில சமயம் அது சாம்பாரையே கெடுத்து விடும். அதனால் கத்தரிக்காயையும் பார்த்துத்தான் உபயோகிக்க வேண்டும்!!
ஆமாம் மனோ அக்கா ஆலிவ் எண்ணைதான் ஒரிஜினல் சுவை தரும். அதனால்தான் அதுக்கு மட்டுமேனும் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்துள்ளேன்.
நீக்குகத்தரிக்காய் இந்த குண்டு கத்தரியில் செய்வதுதான் நன்றாக இருக்கு, மனோ அக்கா... விதை இல்லாமல் வருவது நம்ம ஊர் கத்தரிக்காய் கொஞ்சம் சுவை மாறுபடுகிறது என்று வீட்டில் சொல்கிறார்கள்
கீதா
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎங்கள் ஊர் எலுமிச்சையில் ஜூஸ் கம்மியாகத்தான் இருக்கிறது பெரும்பாலும். இல்லை இப்போதெல்லாம் இப்படித்தான் வருதான்னும் தெரியலை.
நீக்குபெரிய கத்தரிக்காய் என்றாலும் 500 கிராம் என்றால் இங்கு சில சமயம் ரெண்டு வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் சொல்லியிருப்பது போல் இங்கு 1 எலுமிச்சை போதியதாக இருப்பதில்லை.
கீதா
முத்தபல் அவகேடோ விழுது போல் தோற்றமளிக்கிறது. படங்கள் நன்றாக உள்ளன
பதிலளிநீக்குகருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகரன்!!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இரண்டு தினங்களாக குடும்பத்துடன் வெளியே சென்று விட்டோம். அதனால்தான் அனைவரின் இரண்டு தின பதிவுகளுக்கு வர இயலவில்லை. பிறகு அனைத்துப் பதிவுகளையும் படித்து விட்டு வருகிறேன். நன்றி.
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்களில் தங்களது செய்முறையான முத்தபல் சால்ட் அழகான படங்களுடனும் செய்முறை விளக்கங்களுடனும் நன்றாக உள்ளது.
குறிப்புக்களை கவனித்துக் கொண்டேன். எள் சேர்த்த எந்த பதார்த்தமும் சுவைதான். அதிலும் நீங்கள் 500 கிராம் எடையுள்ள ஒரு கத்திரிக்கு மூன்று மேஜைகரண்டி எள் சேர்த்துள்ளீர்கள். நன்றாக வாசமுடன் இருக்கும். ஆனால் காரத்திற்கு இதில் எதுவும் சேர்க்கவில்லையே ..?
இது எத்தனை நாள் வேண்டுமானாலும், வைத்து (குளிர் சாதன பெட்டியில்) சாப்பிடவும் வசதியாக இருக்குமா? அவ்வப்போது சப்பாத்தி, பூரி போன்றவைக்கு தொட்டுக் கொள்ள சௌகரியமாக இருக்குமே..!! அதனால்தான் கேட்கிறேன். நானும் ஒரு தடவை இது போல் செய்து பார்க்கிறேன்.
நானும் ஆலிவ் எண்ணெய் இது வரை உணவில் சேர்த்ததில்லை. மருமகள்கள் அது தேவையான உணவுகளுக்கு மட்டும் சேர்ப்பார்கள் என நினைக்கிறேன். தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் அன்பு நன்றி கமலா ஹரிஹரன்!!
நீக்குஇதில் காரம் எதுவுமே கிடையாது. சாலட் மாதிரி தான் உபயோகிக்க வேண்டும். பொதுவாய் உலகப்புகழ் பெற்ற சாலட்கள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் சேர்ப்பார்கள். அதை அடுப்பிலிட்டு சூடு செய்தால் அதன் தரம் மாறி விடும் என்று ஒரு வாதம் உள்ளது. நானுமே சூடு செய்து சமையலில் உபயோகிப்பதில்லை.
வெளி உணவகத்திலிருந்து வாங்கி வந்தால் இரண்டு நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைத்து உபயோகித்திருக்கிறேன். இதை கால உணவோடு ஒரு கப்பில் போட்டு சுவைப்பது தான் என் வழக்கம். செய்த அன்றே காலியாகி விடும். சும்மாவே சுவைத்து சாப்பிடலாம். அதனால் இதன் shelf life பற்றி எனக்கு சொல்லத்தெரியவில்லை!!
வணக்கம் சகோதரி
நீக்குதங்களால் இவ்வுணவை பற்றிய நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். பின்னூட்டங்களில், இந்த உணவை பற்றி சகோதரர் துரை செல்வராஜ் அவர்களும் நிறைய தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கும், உங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குஇன்றைக்கு எனது சமையல் குறிப்பை வெளியிட்டுள்ளதற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!!
பதிலளிநீக்குமுத்தபல் - அரேபிய உணவு களில் சிறப்பான ஒன்று...
பதிலளிநீக்குகுவைத்தில் வாழ்ந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன..
/// இதை காலை உணவோடு ஒரு கப்பில் போட்டு சுவைப்பது தான் என் வழக்கம்///
பதிலளிநீக்குஅருமை...
இதுதான் வழக்கம்..
கொதிநிலை சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் உகந்ததே அல்ல..
பதிலளிநீக்குஅதிலும் இப்பொழுது தரமற்ற வகைகளும் வருகின்றனவாம்...
அடுக்கடுக்காக விளக்கப் படங்கள்.
பதிலளிநீக்குஅழகு..
அருமையான கருத்துக்களுக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!
நீக்குநீங்களும் என் கட்சி தானா? [ கப்பில் போட்டு சாப்பிடுவது]
shelf life பற்றி சொன்னதற்கு அன்பு நன்றி!
ஃபலாஃபல் சாண்ட்விச்சில் இந்த தஹிணி சாஸ் தடவி தருவார்கள்!!
இதன் shelf life பற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை!!
பதிலளிநீக்குஆலிவ் எண்ணெயுடன் மூன்று நாட்களுக்கு சில்லரில் கெடாமல் இருக்கும்..
/// இதன் shelf life பற்றி எனக்கு சொல்லத் தெரிய வில்லை!!///
பதிலளிநீக்குஆலிவ் எண்ணெயுடன் மூன்று நாட்களுக்கு சில்லரில் கெடாமல் இருக்கும்..
முத்தபல் - இதற்கான கத்தரிக் காய்களில் மரபணு மாற்றப் பட்டு பல வருடங்கள் ஆகின்றன..
பதிலளிநீக்குதஹிணியில் தோய்த்து குபூஸ் ரொட்டி சாப்பிட்ட நினைவுகள் நெஞ்சில் வருகின்றன..
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
பதிலளிநீக்குமுத்தபல் சாலட்…. கேள்விப்பட்டு இருக்கிறேன் என்றாலும் சுவைத்ததில்லை. குறிப்புக்களை படித்துக் கொண்டேன். முடிந்தால் செய்து பார்க்கலாம்!
வாருங்கள் வெங்கட்!!
பதிலளிநீக்குகருத்துரைக்கு அன்பு நன்றி! இந்த சாலடை செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்!
Catering company ல் supervisor store keeper நிலைகளில் பணி செய்தவன்., அரபு சமையல் பலவும் தெரியும்,
பதிலளிநீக்குபுலால் பற்றி ஆர்வம் இல்லை
அங்கே சொந்தமாக சமைத்துக் கொள்வேன்..
பதிலளிநீக்குஇட்லி தோசை தவிர..
பதிலளிநீக்குஒருமுறை இட்லி மாவு வாங்கி கெட்டு விட்டது..
வடக்கன், மலையாளி, வங்கதேசி களுக்கு கைப்பக்குவம் வராது..
முத்தப்பல் சுவைக்கிறது.
பதிலளிநீக்குபடங்களும் விளக்கங்களும் அருமை.
பாராட்டிற்கு அன்பு நன்றி மாதேவி!!
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடித்தமானது
பதிலளிநீக்குமுத்துப்பல் செய்முறையும் படங்களும் அருமை.
பதிலளிநீக்குமுத்தபல் சாலட் பார்க்க அருமை. செய்து பார்த்து பயனடைகிறேன். படங்களும் செய்முறை விளக்கமும் மிக அருமை.
பதிலளிநீக்குஆலிவ் ஆயில் சுவை கூட்டும். மிக நன்றி. துபாய் நாட்கள் நினைவில் வருகின்றன. நன்றி அன்பு மனோ.
முத்தபல் சாலட் பார்க்க அருமை. செய்து பார்த்து பயனடைகிறேன். படங்களும் செய்முறை விளக்கமும் மிக அருமை.
பதிலளிநீக்குஆலிவ் ஆயில் சுவை கூட்டும். மிக நன்றி. துபாய் நாட்கள் நினைவில் வருகின்றன. நன்றி அன்பு மனோ.