முன்னறிவிப்பு :
அப்பப்போ படிச்சுடுங்க. முடிந்தபிறகு மொத்தமாகப் படிச்சுக்கலாம் என்று நினைத்தால் ரொம்பக் கஷ்டப்படுவீங்க.
முடிவு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளவர்களுக்கு கதையின் கடைசி வரி : " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்"
= = = = = = = = = =
அன்று இரவு தூங்குவதற்கு முன்பு, சாந்திக்கு ஃபோன் செய்தான் ராஜா.
சாந்தி கோபமாக இருந்ததால் போனை எடுக்கவில்லை.
மீண்டும் ஃபோன்.
மீண்டும் எடுக்கப்படவில்லை.
செய்தி அனுப்பினான் ராஜா “ சாந்தி! உனக்கு என் மேலே கோபம் இருப்பது
நியாயம்தான். ‘கடைக்கு வருகிறேன்’ என்று ஒரு வரி செய்தி அனுப்பியிருந்தால், நான்
ஆடிட் மீட்டிங் பற்றி சொல்லி, நாளை வா என்று சொல்லியிருப்பேன். போனை எடுத்து பேசு
சாந்தி”
செய்தியைப் பார்த்ததும் கொஞ்சம் மனசு மாறியது.
ராஜாவிடமிருந்து வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாள் சாந்தி.
“ தாங்க்ஸ் சாந்தி. உனக்கு முன்பே செய்தி அனுப்பியிருக்கவேண்டும் நான்.
என்னுடைய தவறுதான். மன்னித்து விடு. நாளைக்கி சாயந்திரம் கடை மாடிக்கு வா. உனக்கு
எல்லாத்தையும் விவரமாக சொல்கிறேன். “
மஞ்சு பற்றி கேட்க நினைத்திருந்த சாந்தி, ‘சரி, நாளைக்கு என்ன சொல்கிறான்
என்று பார்த்து அப்புறம் ராஜாவை மடக்கலாம்’ என்று நினைத்து, “ சரி வர்றேன் – அப்போ
பேசிக்கலாம்” என்று சொல்லி போனை வைத்தாள்.
= = = = = = = = = =
மறுநாள் மாலை
ஆட்டோவில் வந்து இறங்கிய சாந்தியின் கண்கள் கடையைத்தான் கவனித்தன. கண்ணாடித் தடுப்புக்கு உள்ளே ராஜா வாட்சைப் பார்த்துவிட்டு சாலையைப் பார்த்தபடி நிலைகொள்ளாமல் நின்றிருந்தான். எப்போதும் இவள் வரும் எதிர் திசையில் நிலைத்திருந்தன அவன் கண்கள்.
ஜிபே இல்லை என்று சொன்ன ஆட்டோக்காரரிடம் ஐநூறு ரூபாயைக் காட்டினாள் சாந்தி.
"சில்லறை இல்லையேம்மா"
"என்னிடமும்தான்.. அதனால்தான் Gpay செய்யலாம்னு பார்த்தா அதுவும் உங்க கிட்ட இல்லங்கறீங்களேண்ணா.."
அவள் கையிலிருந்து ஐநூறு ரூபாயை வாங்கி கொண்டு சில்லறை மாற்றப்போனார் ஆட்டோக்காரர்.
டார்க் ப்ளூ டீ ஷர்ட்டில் தெரிந்த ராஜாவின் சிவந்த முகத்தையும், திரண்ட தோள்களையும் ரசித்தபடி காத்துக் கொண்டிருந்தாள். ஓடிச்சென்று உடனே அவன் பக்கத்தில் நிற்கவேண்டும் போல இருந்தது.
"இந்தாங்கம்மா சில்லறை"
வாங்கிக்கொண்டு சாந்தி ராஜா மேல் வைத்த பார்வையை எடுக்காமல் தள்ளுக்கதவைத் திறந்து கொண்டு கடை உள்ளே நுழைந்தாள்.
ராஜாவின் கண்கள் மலர்ந்தன. வேகமாக அருகில் வந்து கைகளை பற்றிக் கொண்டான்.
“ வா சாந்தி. ஐ ஆம் சாரி ஃபார் வாட் ஹேப்பண்ட் எஸ்டர்டே”
“ அதைத்தான் நேற்றே சொல்லிட்டீங்களே! ஆடிட் மீட்டிங்தானே காரணம்? “
ராஜாவுடன் கடை மாடி அறைக்கு சென்றாள் சாந்தி.
“ ஆமாம் “
“ சாதாரணமா ஊர்களில் உள்ள உங்க கடைகளில் யார் ஆடிட் செய்வார்கள்?”
“ நாங்க எங்க கடைகளில் ஆடிட் செய்ய கோபாலன் என்ற ஒருவரை வேலைக்கு
வைத்துள்ளோம். அவர் எல்லா ஊர்களிலும் உள்ள கிளைகளுக்கு சென்று ஆடிட் செய்துவிட்டு
வந்து, எங்களிடம் ஆடிட் ரிப்போர்ட் கொடுப்பார். ஆடிட் பாயிண்ட்ஸ் எல்லாவற்றையும்
விவரமாகக் கூறி, எங்கெங்கு எந்தெந்த நடவடிக்கைகள் தேவை என்பதைத் தெரிவிப்பார். “
“ ஆடிட் செய்வது அவர் ஒருவர் மட்டுமா – அல்லது பல பேர் உண்டா? “
“ நீ ஏன் இப்போ என்னை ஆடிட் செய்துகொண்டு இருக்கிறாய் என்று எனக்குத்
தெரியவில்லை. ஆனாலும் பதில் சொல்கிறேன். ஆம், அவருக்கு இரண்டொரு உதவியாளர்கள்
உண்டு.”
“ ஓஹோ. அவருக்கு மஞ்சு என்று ஒரு உதவியாளர் உண்டா? “
ராஜா நிலைகுலைந்து போனான்.
“ மஞ்சுவா? யார் சொன்னது?“
“ கோபி நேற்றைக்கு மஞ்சுவுக்கு ஃபோன் செய்து, போனை உங்களிடம் கொடுக்கச்
சொன்னபோது, நான் அவன் பேசியதைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். “
எங்கோ ஏதோ சதி நடந்திருக்கிறது என்று தெரிந்துகொண்டான் ராஜா. ஒப்பந்த
மீட்டிங் ஆரம்பிக்கும் முன்பே மஞ்சு சொன்னது, எல்லோரும் அவரவர்களின் போனை ஆஃப்
செய்து வைக்கவேண்டும் என்பதுதான். அப்படி இருக்கும்போது மஞ்சுவுக்கு ஃபோன் –
அதிலும் அந்த அழைப்பை தன்னிடம் கொடுக்கச் சொன்னது என்பதெல்லாம் பச்சைப் பொய். ஓஹோ
இது எல்லாம் கோபியின் திருவிளையாடல்களா! இதை எப்படி சமாளிப்பது?
“ சாந்தி, நான் சொல்வதை கவனமாக் கேட்டுக்கோ. நான் கல்யாணம்
செய்துகொள்ளப்போகும் பெண் என்னுடைய டார்லிங் சாந்திதான். இதில் எந்த மாற்றமும்
கிடையாது. கோபி ஏதோ சதி செய்கிறான் என்று எனக்குத் தெரிகிறது. நேற்று கோபியின்
தங்கை மஞ்சு, என் அப்பாவையும், என்னையும், ஒரு குழுவினருடன் வந்து சந்தித்துப்
பேசியது உண்மை. ஆனால், அது செல்வ மீனா வியாபார சம்பந்தமானது. அப்படி அந்தக்
குழுவினர் பேசிக்கொண்டிருந்தபோது எல்லோருடைய மொபைல் போனும் ஸ்விட்ச் ஆஃப்
செய்திருந்தோம். அவளுக்கு எந்த ஃபோன் அழைப்பும் வரவில்லை.”
“ அப்போ ஏன் ஆடிட் மீட்டிங் என்று பொய் சொன்னீர்கள்?”
“ அது மாப்பிள்ளை சாருக்காக நான் சொன்ன பொய். நேற்றைய மீட்டிங் ஏன்,
எதற்காக என்ற விவரங்கள், இன்னும் பத்து நாட்களில் உனக்கு மட்டும் சொல்கிறேன்.
அதுவரை, கோபி என்ன சொன்னாலும், காதில் போட்டுக்காதே. இனிமேல் அவன் கால் செய்தால்
நான் கண்டிப்பாக எடுக்கப்போவதில்லை. என் கிட்ட பேசறாப்போல் ஏதேனும் ஸீன் போட்டான்
என்றால், எனக்கு உடனே செய்தி அனுப்பு. கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஊரில் இல்லை
என்பதால், கடை வேலைகள் செய்யவேண்டியது நிறைய இருக்கு. சப்ளையர்ஸ் ஒப்பந்தம், வரி
கட்டுவது, பெரிய வாடிக்கையாளர்களிடம் வரவேண்டிய தொகை பற்றி நினைவூட்டல் என்று பல
விஷயங்களும் டீல் செய்யவேண்டும். மாடி
மீட்டிங் எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ஒத்திப் போட்டுடுவோம்.“
சாந்தி இதற்கு ஒப்புக்கொண்டாள்.
“ பை ராஜா. உன்னை நம்பறேன். “ என்று சொல்லி,
வீட்டுக்குப் புறப்பட்டாள் சாந்தி.
= = = = = = = = = = =
ஞாயிற்றுக் கிழமை காலை, மாடிப்படியில் நின்றவாறு
கோபி மஞ்சுவிடமும் ராஜாவிடமும் பேசுவது போல ஸீன் போட்டான். சாந்தி உடனே ராஜாவுக்கு
அவசர செய்தி அனுப்பினாள். “ கோபி உன்னோடு மஞ்சுவின் போனில் பேசிக்கொண்டு
இருக்கிறானா?”
உடனே சாந்திக்கு ஃபோன் செய்தான் ராஜா. “ சாந்தி இப்போ நான் சொல்லப் போவது
எல்லாத்தையும் அப்படியே நீயும் சத்தமாகச் சொல்லணும். ரெடியா ? “
“ ரெடி”
“ ஏண்டா – அறிவிருக்குதா உனக்கு? நான்தான் உன்னை நம்பத் தயார் இல்லைனு
சொல்லிட்டேன்ல?”
சாந்தி அப்படியே சொன்னாள்.
கோபி திடுக்கிட்டான்.
“ இன்னொரு தடவை என் கிட்ட ஜொள்ளு விட்டேனா செருப்படி படுவே. ஜாக்கிரதையா
இருந்துக்கோ.”
சாந்தி இதையும் அப்படியே சொன்னாள்.
கோபி அவசரம் அவசரமாக மாடியில் தன்னுடைய அறைக்குச் சென்றான்.
அடுத்து என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது கோபிக்கு.
கோபியின் ரியாக்ஷன் என்ன என்று சாந்தியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டான்
ராஜா.
‘கோபிக்கு இந்த சூடு போதும்’ என்று நினைத்தான் ராஜா.
= = = = = = = = = = =
ஒரு வாரம் கழித்து சாந்திக்கு ஃபோன் செய்தான், ராஜா.
“ சாந்தி, வருகிற வெள்ளிக்கிழமை சாயந்திரம் கடை மாடிக்கு வந்துவிடு.
உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு. “
வெள்ளிக்கிழமை அன்று, மஞ்சு தயாரித்த விளம்பரப் படத்தின் பிரிவியூ.
மஞ்சுவும், அவர்கள் கம்பெனி ப்ரொடக்ஷன் மேலாளரும் விற்பனைப்
பிரிவு ஆளும் வந்திருந்தனர்.
ராஜா முன்னதாகவே வந்து காத்திருந்தான்.
மஞ்சு, தன்னுடைய கம்ப்யூட்டரில் விளம்பரப் படத்தை தயாராக வைத்து, வால்
புரொஜெக்டரை தயார் செய்துகொண்டிருந்தாள்.
“ மஞ்சு – என்னுடைய அப்பாவும், அம்மாவும் வருவதற்கு அரைமணி நேரம் ஆகும்.
வெள்ளிக்கிழமை என்பதால், கோவிலுக்குப் போய்விட்டு நேரே இங்கே வருவார்கள். என்னுடைய
ஸ்பெஷல் இன்வைட்டீ ஃபேஷன் டெக்னாலஜி படித்தவர்.
இப்போது வந்துவிடுவாள் “ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உள்ளே வந்தாள்
சாந்தி.
ராஜா : “ வெல்கம் சாந்தி. மீட் மிஸ் மஞ்சு. உங்க வீட்டு மாடியில்
குடியிருக்கும் கோபியின் தங்கை”
மஞ்சு: " வாவ் பியூட்டிஃபுல்! சார்மிங்! ராஜா ஈஸ் ஷி யுவர் ஃப்ரெண்ட்?"
" எஸ் "
" சார்மிங் சாந்தி! வில் யூ ஆக்ட் ஆஸ் எ மாடல் இன் அவர் ஆட் கம்பெனி?"
" இஃப் மை ஹப்பி அலோஸ்"
" ஓ யு ஆர் மேரீட்? "
" கோயிங் டு பி"
" ஹூ ஈஸ் தட் லக்கி மேன்?"
" மீ " என்றான் ராஜா.
“ ஓ ! சூபெர்ப்! மார்வலெஸ் ஜோடி. சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடணும்” என்றாள் மஞ்சு.
“நிச்சயம்! தாங்க் யு” என்றனர் சாந்தியும் ராஜாவும்.
= = = = = = = = = = =
ராஜாவின் அம்மாவும், அப்பாவும் வந்தார்கள். மாப்பிள்ளை சாரையும் மேலே
மாடிக்கு வரச் சொன்னார்கள்.
விளம்பரப்படம், மாடி அறையின் சுவற்றில் பெரிய அளவில் காட்டப்பட்டது.
“ நல்லா இருக்கு “ என்றார் ராஜாவின் அம்மா.
“ இன்னும் கொஞ்சம் சிறப்பாக மாற்றலாம்” என்றார், செல்வம்.
“ சாந்தி – நீ என்ன சொல்றே? “ என்று கேட்டான் ராஜா.
கொஞ்ச நேரம் யோசித்த சாந்தி, “ மஞ்சு, விளம்பரப் படத்தை, திரும்பத்
திரும்ப போட்டுக்கொண்டே இரு. நான் சொல்லுகின்ற இடங்களில், அப்படியே நிறுத்து. “
என்றாள்.
அமைதியாக நான்கைந்து முறை படம் ஓடியது.
சாந்தி கண்களை மூடியபடி ஒரு தடவையும், உன்னிப்பாக கவனித்து மூன்று
முறையும் படத்தைப் பார்த்தாள். பிறகு timeline அடிப்படையில்
சில மாற்றங்கள் சொன்னாள்.
‘இந்த இடத்தில்
பேக் கிரவுண்ட் மியூசிக் வால்யூம் மிகவும் அதிகம். குறைக்க வேண்டும்.’
இன்னொரு
இடத்தில், ‘மாடல் பெண்மணி அணிந்து வரும் உடை நிறங்கள் பொருந்தவில்லை. அதை நான்
சொல்லும் வகையில் மாற்றினால் நன்றாக இருக்கும்.’
‘ ஆண் மாடல்
எக்ஸ்பிரஷன் இங்கே சரியாக இல்லை. முகத்தில் ஆனந்தத்தைக் காட்டும்போது ஒரு ஃப்ளூட்
பிட் – அதுவும் மோகன ராகத்தில் போட்டால் சூப்பர் ஆக இருக்கும். ‘
இந்த வகையில்
சில மாற்றங்களை சொன்னாள் சாந்தி.
மஞ்சுவும்
அவளுடன் வந்திருந்தவர்களும், ‘வாடிக்கையாளருடன் ஒப்பந்த சரிபார்ப்பு’ ( Customer
Contract Review) படிவங்களில், சாந்தி சொன்ன ஆலோசனைகளை விவரமாக
எழுதி, கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.
“ அடுத்த
வெள்ளிக்கிழமை, மாற்றி எடுக்கப்பட்ட விளம்பரப் படத்துடன் வந்து சந்திக்கிறோம்”
என்று சொல்லிப் புறப்பட்டனர்.
“ தாங்க் யு
சாந்தி. நீ சொன்னபடி மாற்றி அமைத்தால் விளம்பரம் சூப்பர் ஆக இருக்கும் என்று
எனக்கும் தோன்றுகிறது “ என்றான் ராஜா.
========
கோபி, முதலில் செய்வதறியாது திகைத்தாலும், ‘சாந்தி வேறு யாருக்கோ போனில்
சொன்னதை நினைத்து, தான் ஏன் கவலைப்பட வேண்டும்? இப்போதும் எதுவும் கைமீறி
போய்விடவில்லை. ஊருக்கு சென்று, மஞ்சுவைப் பார்த்து அவளுக்கு ராஜாவைப்
பிடித்திருக்கிறதா என்று கேட்போம்’ என்று நினைத்தான்.
கீழ் வீட்டிற்கு சென்றான் கோபி. அழகர் மட்டுமே வீட்டில் இருந்தார்.
சாந்தியும், சாந்தியின் அம்மாவும் கோவிலுக்குப் போயிருந்தனர்.
அழகரிடம், கோபி, தான் ஒருவாரம் தன்னுடைய ஊருக்குப் போய்விட்டு பிறகு
வருவதாகக் கூறிப் புறப்பட்டான்.
= = = = = = = = =
“ அடேடே ! என்ன அண்ணா ஆச்சர்யமா இருக்கு! எங்கே இவ்வளவு தூரம்! “ என்று
கேட்டாள் மஞ்சு.
“ எல்லாம் உன்னைப் பார்க்கத்தான்”
“ என்ன விஷயம்? “
“ உங்க கம்பெனி பிசினஸ் எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு?”
“ எல்லாம் சூப்பரா போய்க்கிட்டு இருக்கு”
“ மஞ்சு, சுற்றி வளைக்காமல் நேராவே கேட்டுடறேன். உனக்கு ராஜாவைப்
பிடித்திருக்கிறதா”
" ஏன் கேட்கிறாய்?"
" நீ சரி என்று சொன்னால் அவனை உனக்கு கல்யாணம் செய்து வைத்துவிடுவேன்"
“ இரண்டாம் தாரமாகவா? “
“ இரண்டாம் தாரமா? ராஜாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. “
“ அண்ணா – உனக்கு தெரியாதோ அல்லது தெரியாதது போல் நடிக்கிறாயோ – ராஜா உன்
ஹவுஸ் ஓனரின் பெண் சாந்தியை கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார்.
“
“ அப்படி யார் உனக்கு சொன்னார்கள்?”
“ சாந்தியும் ராஜாவும். போன வாரம் விளம்பரப் படம் முதல் மேக் ரிலீஸ்
செய்யப் போயிருந்தபோது அவர்கள் இருவரையும் பார்த்துப் பேசினேன். “
“ அப்படியா? ” தன்னுடைய திட்டம் பலிக்கவில்லை என்பது தெரிந்ததும்
கோபிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
" அண்ணா என்னைப் பொருத்தவரை ராஜா ஒரு பிராஸ்பெக்டிவ் பிசினஸ் கிளையண்ட்.
அவ்வளவுதான். பார்க்கின்ற க்ளையண்ட் எல்லோரையும் கல்யாணம் செஞ்சிக்கறதுன்னு
ஆரம்பிச்சா நான் ஒரு நவீன திரௌபதி ஆக வேண்டியதுதான்! அதெல்லாம் சரிப்படாது. ராஜா
அவருடைய கடையிலிருந்து அப்பப்போ எங்கள் விளம்பரப் படங்களுக்கு காஸ்டியூம்ஸ்
தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். சாந்தியின் பேஷன் டிசைன் மற்றும் ஆலோசனைகள்
கூட எங்கள் விளம்பரக் கம்பெனிக்கு உதவியாக இருக்கும்.”
= = = = = = = = =
= =
ஊருக்குத் திரும்பி
வந்த கோபி, அழகரிடம் பேசினான்.
“ சார், எனக்கு
ரீஜனல் மேனேஜர் ப்ரமோஷன் கெடச்சிருக்கு. அதனால் நான் அடுத்த வாரம் மாடி போர்ஷனை
காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போகிறேன்.” என்றான்.
“ நல்லது தம்பி.
அப்படியே செய்யுங்க. எங்களுக்கும் மாடி போர்ஷன் முழுவதும் வேண்டியிருக்கு”
என்றார்.
= = = = = = = = =
சாந்தியின்
ஆலோசனைப்படி மாற்றங்கள் செய்து, மஞ்சு அந்த விளம்பரப் படத்தின் டிஜிட்டல் நகல்
ஒன்றை, ராஜாவுக்கும் சாந்திக்கும் மொபைல் வழியாக அனுப்பி வைத்தாள்.
சாந்தி, ராஜா
இருவருக்கும் அந்த விளம்பரப்படம் மிகவும் பிடித்திருந்தது.
உடனடியாக அந்த
விளம்பரப்படம் செல்வ மீனா கடைகள் உள்ள ஊர்களிலும் அக்கம்பக்க ஊர்களிலும் உள்ள
தியேட்டர்களில் விளம்பர இடைவேளையில் போடப்பட்டது.
செல்வ மீனா
டெக்ஸ்டைல்ஸ் கடை அந்தப் பகுதிகளில் பிரபலம் ஆகி, அவர்களின் வியாபாரம் கொடி
கட்டிப் பறந்தது.
= = = = = = = =
=
மஞ்சுவின்
விளம்பரக் கம்பெனி தயாரிக்கும் விளம்பரங்களில் மாடல்களாக நடிப்பவர்கள் அணிய
ஆடைக்கு வேண்டிய துணிகளை செல்வ மீனா கடையும், ஆடைகளின் தேர்வு மற்றும் வடிவமைப்பு
போன்றவற்றை சாந்தியும் பார்த்துக்கொள்ள
ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது.
= = = = = = = =
=
(தொடரும்)
பகுதி சட் சட்டென்று வேகமாகப் போவது போல் இருக்கிறது. சட் சட்டென்று காட்சிகள் மாறுகின்றன. கதாபாத்திரங்கள் ரொம்பவே வேகமாகச் சிந்திப்பது போன்று ஹிஹிஹிஹி!!!
பதிலளிநீக்குஒரு சிறு பகுதி மட்டும் ஒரு சின்ன ப்ரேக் போட்டு வண்டி மெதுவாகப் போவது போல் நிதானமாக அழகாக நடை போடுகிறது. அடுத்து மீண்டும் ஸ்பீட். வண்டி ஹைவேயை பிடித்துவிட்டது போல்.
கீதா
வாங்க கீதா... வேகமாகவா போகிறது கதை நிகழ்வுகள்?
நீக்குஇருங்க, ஸ்ரீராம் இதோ சொல்கிறேன். வேகம் என்று நான் எதைச் சொன்னேன் என்று.
நீக்கு//மறுநாள் மாலை ........
இங்கு தொடங்கி,
//ராஜாவின் கண்கள் மலர்ந்தன. வேகமாக அருகில் வந்து கைகளை பற்றிக் கொண்டான்.//
இது வரை செல்லும் நடை. ஓகே காதல் அழகியல் என்று எடுத்துக் கொண்டாலும்,
இந்த details நுணுக்கங்கள் மற்ற பகுதியிலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
தொடர்கதைக்கு நுணுக்கங்கள் தேவை இல்லையோ?
நான் கோட் செய்திருக்கும் பகுதி ஸ்ரீராம் பகுதியோ?
அப்ப ஸ்கைக்குள் ஸ்ரீராம், கேஜிஜி இருக்கிறார்கள் என்று எனக்கு சம்சயம்!!!
கீதா
நல்ல கற்பனை கீதா..
நீக்குஉதாரணத்திற்கு....
நீக்கு//கீழ் வீட்டிற்கு சென்றான் கோபி. அழகர் மட்டுமே வீட்டில் இருந்தார். சாந்தியும், சாந்தியின் அம்மாவும் கோவிலுக்குப் போயிருந்தனர்.
அழகரிடம், கோபி, தான் ஒருவாரம் தன்னுடைய ஊருக்குப் போய்விட்டு பிறகு வருவதாகக் கூறிப் புறப்பட்டான்.//
இந்த இடத்தில் - கீழ் வீட்டிற்குச் சென்றான் கோபி. அழைப்பு மணியை அழுத்தினான் அல்லது திறந்திருந்த கதவை லேசாகத் தட்டினான் அல்லது ....தொண்டையை செருமிக் கொண்டு, "ஸார்"
அழகர் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார் இல்லைனா டிவி பார்த்துக் கொண்டிருந்தார். கவனிக்கவில்லை,
கோபி மீண்டும் அழைத்தான்.
திரும்பியவர், வாங்க கோபி, என்றார்.
"என்ன சார் மேடம் சாந்தி எல்லாம் இல்லை?"
"அவங்க கோவிலுக்குப் போயிருக்காங்கப்பா....என்ன விஷய்ம்பா"
இப்படிச் சென்றால் நன்றாக இருக்குமோ என்று தோன்றியது. தொடர்கதை, நாவல் இல்லையா? அதனால்
கீதா
அதே போன்று அடுத்த பகுதியில், கோபியும் மஞ்சுவும் - அப்படியேவா பேசிட்டிருப்பாங்க? தங்கை அண்ணனுக்கு ஒரு காஃபி டீ அலல்து சாப்பாடு அல்லது அந்த நேரம் பொருத்து ஏதேனும் ஒரு பின்னணி கொடுத்து, கோபி சற்று யோசித்துப் பேசுவதாகச் சொன்னால் நிதானமாக இருந்திருக்குமோ என்று தோன்றியது.
நீக்குஆ! ஸ்கைக்குக் கோபம் வந்திடாம இருக்கணும். அவர்/அவங்க இல்லையா எழுதறாங்க!!!!!! நான் இல்லையே!
கீதா
நல்ல கற்பனை கீதா..//
நீக்குசிரிச்சுப்புட்டேன் ஸ்ரீராம்!!!!
கீதா
எனக்கு இப்போ இந்தக் கதையை எழுதுறது நீங்களாக இருக்குமோ ங்கிற சந்தேகம் லேசாக வருகிறது சகோதரி. ஒரு வேளை எழுத நினைத்ததை, விட்டுப் போனதை இப்படி எழுதி அங்கலாய்த்துக் கொள்கிறீர்களோ என்ற டவுட்தான். வேறு ஒன்றுமில்லை. ஹா ஹா ஹா.
நீக்குகதை நகர்ந்து ஒரு முடிவு வரும் வரை இப்படி "ஸ்கை" ஒளிந்திருப்பாரோ? இங்கு வேறு எப்போதும் மேக மூட்டங்கள்தான்.
மஞ்சுவின் விளம்பரக் கம்பெனி தயாரிக்கும் விளம்பரங்களில் மாடல்களாக நடிப்பவர்கள் அணிய ஆடைக்கு வேண்டிய துணிகளை செல்வ மீனா கடையும், ஆடைகளின் தேர்வு மற்றும் வடிவமைப்பு போன்றவற்றை சாந்தியும் பார்த்துக்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது.//
நீக்குஇப்பகுதியிலும் கொஞ்சம் உரையாடல்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏன்னா அப்படி டக்கு டக்குனு ஒப்பந்தம் கையெழுத்து நடக்காது இல்லையா?
கீதா
எனக்கும் அதே மாதிரி தோன்றியது கமலா அக்கா... சொல்லாமல் இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம் என்று நினைத்தேன்.
நீக்குகமலாக்கா சிரித்துவிட்டேன் உங்க கருத்து பார்த்து.
நீக்குஓ! Sky இதில் நடுவில் வரும் எழுத்து என் பெயரோ என்று நினைச்சுட்டீங்களா!!!! ஹிஹிஹி.
நோ சான்ஸ் கமலாக்கா.
நான் எழுதுபவை அப்படி டக்கென்று எல்லாம் வந்துவிடாது. மனதிற்கு ஓரளவேனும் ஓகே என்று தெரிந்தால் மட்டும் அதுவும் எனக்குச் சரியான பரிந்துரைகள் கொடுக்கும் இருவரிடம் காட்டிக் கேட்டுவிட்டுத்தான் வெளியில் வரும்.
இல்லைனா அவை தூங்கும். இப்ப கூட மூன்று பெரிய கதைகள் தூங்கிக் கொண்டு இருக்கின்றன. (நான் எழுதும் சிறு கதைகளே பெரிசுதானே இதுல என்ன பெரிய கதைன்னு கேட்கலாம்!!!!!! நான் சொல்வது நெடுங்கதை - நாவலாகும் அளவு என்று சொன்னாலும் எனக்கு அவ்வளவு எழுத கொஞ்சம் அயற்சியாக இருக்கு இப்ப) மனதுள் ஒவ்வொன்றிற்கும் ஏதாச்சும் வந்து கொண்டே இருந்தாலும் அதை மட்டும் சேர்த்து, இன்னும் அப்படியே இருக்கின்றன. அது போலவே மற்ற சிறுகதைகள் என்று சொல்லப்படும் கீதாவின் பெரிய சிறு கதைகளும். முழுவடிவமும் மனதில் இருந்தாலும் கூட செயல்படுத்த முடியாமல். திருப்தி ஏற்படாததால்.
எனவே, கமலாக்கா, யுவர் ஆனர், கனம் கோர்ட்டார் அவர்களே இது நான் எழுதும் கதை அல்ல என்று தகுந்த ஆதாரங்களுடன் நானே எனக்கு வக்கீலாக சொல்லியிருக்கிறேன். ஹிஹிஹிஹி...
கீதா
Case dismissed
நீக்குஹாஹாஹாஹா கௌ அண்ணா, இப்படி உங்க தங்கைய கைவிடலாமா!!!
நீக்குகீதா
கௌ அண்ணா, ஸ்கை கிட்ட சொல்லுங்க, அடுத்த பகுதியில் கொஞ்சம் தட்டிக் கொட்டி!!! போடச் சொல்லுங்க.
நீக்குகீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகா சரணம்
நீக்குவாங்க கமலா அக்கா, வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதைப் பகுதி அருமை. சாந்தியின் சந்தேக திரைகள் அகற்றப்பட்டு எல்லாமே சுபமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. ராஜாவும், சாந்தியும் அவரவர் வேலைகளில் அக்கறைக் கொண்டபடி நிம்மதியாக வானில் (ஸ்கையுடன்) வலம் வருகின்றனர். நம் மனதிற்கும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. ஆனால், அந்த வானில் தீடீரென அரசியல் குழப்பம்( கார் மேகங்கள்) எப்போது புகுமோ என்ற கவலை நம் மனதிற்குள் எழுகின்றன. பார்க்கலாம். அடுத்த வாரம் வரை இந்த சந்தோஷத்தோடு நாமும் வானில் மிதக்கலாம். (அரசியல் மேகங்கள் வந்து தாக்கும் வரை.) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கார்மேகம் பற்றிய உங்கள் கவலை நியாயமானதுதான் கமலா அக்கா.. நம்மூர் அரசியல்வியாதிகளில் நல்லவர் யார் இருக்கிறார்கள்!
நீக்குஇன்றைக்கு வெளியிட்டிருக்கும் படங்களுக்கும் இதற்கு முந்தைய படங்களுக்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்கள் இருக்கும் போலிருக்கே
பதிலளிநீக்குவாங்க நெல்லை... ஆறுதான் கண்டுபிடிக்க முடிந்ததா?!!
நீக்குநெல்லை, ஏ ஐக்குத் தெரிய மாட்டேங்குது, சாந்தி, மஞ்சு எல்லாம் எல்லாப் பகுதிகளிலும் அவங்கதான்னு. அது இஷ்டத்துக்குக் கொடுக்கும். எடுக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்.
நீக்குகதையில் மஞ்சு வியக்கும் அளவுக்கு சாந்தி இருக்காங்களான்னு பாருங்க!!!!?
ஏ ஐ க்கு அம்புட்டுத்தான் தெரியும்.
கீதா
கௌ அண்ணா சிரமப்பட்டு இவ்வளவு படங்கள் சேர்ப்பதே பாவம் அவர் மெனக்கெட்டிருப்பது.
நீக்குபரவால்ல ஸ்கை எழுத்து மட்டும் எழுதி அனுப்புகிறார். கௌ அண்ணா படங்கள் சேர்க்கிறார் என்ற அர்த்தத்தில் தான் சொல்றேன்!!!!!! அஹாஹாஹாஹா
ஓகே வா கௌ அண்ணா?
கீதா
ஓ கே
நீக்குகதை நகர்வு அழகு..
பதிலளிநீக்குதொடரட்டும்..
நன்றி செல்வாண்ணா..
நீக்குகதை நன்றாகப் போகிறது தொடர்வோம்.
பதிலளிநீக்குகதை நன்றாக போகிறது, இந்த பகுதி வேகமாக விறு விரு என்று போனவுடன் சுபம் போட்டு விடுவீர்களோ என நினைத்தேன், இன்னும் தொடரும் என போட்டு விட்டீர்கள்.
பதிலளிநீக்குகதாசிரியருக்கு ஏதாஅது வெளியூர் செல்ல வேணிடியிருக்கிறதோ? சட் சட்டென்று விஷயங்கள் பைசல் ஆகின்றனவே?
பதிலளிநீக்குகதாசிரியர் சேரநாட்டோடு தொடர்பு உடைய தங்கையோ?